<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="18/04/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,71,958,1366" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Sat Apr 18 2026 04:07:25 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260418T000000+5.30" edition.name="TRY" edition.area="TRY" position.section="18042026-TRY-09" position.sequence="09" ex-ref="18042026-TRY-09.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="59">அடிமைகளின் துணையோடு தமிழ்நாட்டில் நுழைய நினைப்பவர்களை எல்லையிலேயே தடுத்திட வேண்டும்!</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="41">பெரம்பலூரில் – முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை...   </lang>
	<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular"  size="41">8 –ஆம் பக்கத் தொடர்ச்சி!</lang>
	</hl3>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup331329_09_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="2" source="3_09_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">10 ஆயி­ரத்­தில் இருந்து 12 ஆயி­ர­ம் கொடுத்­தால், அது நியா­யமா? அநி­யா­யமா? இதற்­குப் பெயர் அயோக்­கி­யத்­த­னமா? இல்­லையா? நீங்­களே சொல்­லுங்­கள். நமக்­குத்­தான் 2 ஆயி­ரம் கூடு­த­லாக வரு­கி­றதே என்று யாரா­வது நினைப்­போமா? மாட்­டோம்! அங்கே வேலையே செய்­யா­த­வ­னுக்கு மேலும் மேலும் வாரி வழங்­கி­விட்டு, அவ­னு­டைய சுமை­யை­யும் நம் மீது ஏற்றி வைத்­தால் கேள்வி கேட்­போமா, மாட்­டோமா? நமக்கு புர­மோ­ஷன் கொடுக்­க­வில்லை என்­றால் கூடப் பர­வா­யில்லை, இருப்­ப­தைப் பறித்­தால் என்ன செய்­வது? இது­தான் தொகுதி மறு­வ­ரை­யறை!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இதை எதிர்த்­து­தான் நாம் போரா­டு­கி­றோம்! ஒட்­டு­மொத்த தென் மாநி­லங்­க­ளும் போரா­டு­கின்­றன! நம்­மு­டைய உரி­மைக்­கா­கப் போரா­டிக் கொண்டு இருக்­கி­றோம். பிர­த­ம­ரி­டம் இது தொடர்­பாக விளக்­கத்­தை­யும், வாக்­கு­று­தி­யை­யும் கேட்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">நாம் கேட்­கும் கேள்­விக்கு</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">பிர­த­ம­ரி­ட­மி­ருந்து பதில் இல்லை!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ஆனால், இப்­ப­டிப்­பட்ட நேரத்­தில் நேற்று கொஞ்­சம் கூடக் கூச்­சமே இல்­லா­மல் அவர் நாகர்­கோ­வில் வந்து சும்மா ஷோ காட்­டி­விட்­டுச் சென்­றி­ருக்­கி­றார். கிண்­ட­லா­கச் சொல்­ல­வில்லை, உண்­மை­யா­கவே ரோடு–ஷோ மட்­டும்­தான் நடத்­தி­விட்­டுச் சென்­றி­ருக்­கி­றார். நாம் கேட்ட கேள்­விக்­கும் பதில் இல்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">மோடி வரும்­போது அவ­ருக்­குப் பூ தூவச் சென்­றி­ருக்­கி­றார். யார் தெரி­யுமா? நம்­மு­டைய பழ­னி­சாமி. பிர­த­மர்­கூட, “நம்­மி­டம் பழ­னி­சாமி இதைப்­பற்றி ஏதா­வது கேட்­பாரா? என்று அவர் யோசித்து இருப்­பார்.  ஆனால், பழ­னி­சாமி அவ­ரு­டைய ஜி கூட ஜீப்­பில் நின்று கொண்டு ஊர்­வ­லம் சென்­ற­தோடு சரி, ஒன்­றும் பேச­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">பிர­த­ம­ரைப் பார்த்­துப் பழ­னி­சாமி சிரித்த சிரிப்­பி­லேயே அவ­ருக்­குப் புரிந்­தி­ருக்­கும், இந்த அடிமை குரல் கொடுக்க மாட்­டார், இவரை வைத்­துக் கொண்டு என்ன வேண்­டு­மா­னா­லும் செய்­ய­லாம் என்று பிர­த­மர் மோடி நினைத்­தி­ருப்­பார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அவர் நினைத்­த­தற்­கும் மேலா­கச் சிறந்த அடிமை என காட்­டு­வ­து­போன்று இன்­றைக்கு அவர் பேசி­யி­ருக்­கி­றார். தொகுதி மறு­வ­ரை­ய­றையை பா.ஜ.க. அரசு மிக அரு­மை­யா­கச் செய்­வார்­க­ளாம்! பழ­னி­சாமி அவர்­களே… எவ்­வ­ளவு பெரிய காமெடி இது…  இந்­தி­யா­வில் இருக்­கும் பல முத­ல­மைச்­சர்­க­ளும், பல எதிர்க்­கட்­சித் தலை­வர்­க­ளும் இந்த ஆபத்தை தெரி­யா­மலா கண்­டிக்­கி­றார்­கள். பா.ஜ.க. பழ­னி­சா­மியை குனி­யச் சொன்­னால், படுத்தே விட்­டார் என்­பது போன்று பேசி­யி­ருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">பா.ஜ.க.வுக்கு முட்­டுக்­கொ­டுக்­கும் பழ­னி­சாமி!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அந்­தச் சட்­டத்­தின் முன்­வ­ரைவே வெளி­வந்­து­விட்­டது. தமிழ்­நாடு உள்­ளிட்ட தென்­மா­நி­லங்­க­ளுக்­குப் பேரா­பத்து வரப் போகி­றது என்று அதில் தெளி­வாக இருக்­கி­றது. இத­னைக் கொண்டு வரும் முறையே பாசி­சத் தனம் இது. தமிழ்­நாட்­டில் இருக்­கும் பா.ஜ.க. தலை­வர்­கள்­கூட இது என்ன, இதை எப்­படி நியா­யப்­ப­டுத்­து­வது எனத் தெரி­யா­மல் முழித்­துக் கொண்­டி­ருக்­கி­றார்­கள். ஆனால் பழ­னி­சாமி, அவர்­களை எல்­லாம் முந்­தி­ரிக் கொட்டை மாதிரி முந்­திக் கொண்டு முட்டு கொடுத்­துக் கொண்டு இருக்­கி­றார். இப்­ப­டிப்­பட்ட அடி­மை­க­ளின் துணை­யோடு தமிழ்­நாட்­டிற்­குள் நுழைய நினைப்­ப­வர்­களை எல்­லை­யி­லேயே நாம் தடுத்து நிறுத்த வேண்­டும்! பத்து தோல்வி பழ­னி­சா­மிக்­குப் பதி­னோ­ரா­வது தோல்­வி­யை­யும் நாம் வழங்க வேண்­டும்! அது­வும் இந்­தத் பதி­னோ­ரா­வது தோல்வி மறக்க முடி­யாத தோல்­வி­யாக இருக்க வேண்­டும்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">பொது­வாக, 18 வரு­டம் சப­ரி­மலை செல்­ப­வர்­களை குரு­சாமி என்று ஆன்­மீக அன்­பர்­கள் சொல்­லு­வார்­கள். ஆனால், பழ­னி­சாமி அ.தி.மு.க.வின் தலை­மைப் பொறுப்­பில் தொடர்ந்­தால், 18 முறை தொடர்ந்து தோற்று, தோல்­வி­யில் குரு­சாமி பழ­னி­சாமி என்று மாறி­வி­டு­வார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">தி.மு.க.வின் வெற்­றியை</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">கருத்­துக்­க­ணிப்­பு­கள் சொல்­கின்­றன!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தமிழ்­நாட்­டிற்கு முதற்­கட்­டத்­தில் தேர்­தல் வைக்­கா­மல் கொஞ்­சம் தள்ளி வைத்­தால், தி.மு.க. வெற்றி பெறும் எண்­ணிக்­கை­யா­வது குறை­யுமா என பா.ஜ.க. ஒரு கணக்கு போட்­டார்­கள். ஆனால், அது­வும் இப்­போது தப்­புக் கணக்­கா­கப் போய்­விட்­டது. ஒவ்­வொரு நாளும் ஊட­கங்­க­ளில் வரும் கருத்­துக்­க­ணிப்­பு­க­ளைப் பார்த்­தாலே தெரி­கி­றது. முத­லில் நமக்கு 180 என்று போட்­டார்­கள். இப்­போது 190, 200 எனப் போட ஆரம்­பித்­து­விட்­டார்­கள். தேர்­த­லுக்­குள் இரு­நூ­றைக் கிராஸ் செய்­து­வி­டும். அது­வும் தொகுதி மறு­வ­ரை­யறை எனும் ஆபத்­தைக்­கூட எதிர்த்­துப் பேசாத அ.தி.மு.க. கூட்­டணி 234 தொகு­தி­க­ளி­லும் தோல்­வி­ய­டைந்­தா­லும் ஆச்­ச­ரி­யப்­பட எது­வும் இல்லை. ஏனென்­றால், தமிழ்­நாடு மக்­கள் அந்த அள­வுக்­குக் கொதித்­துப் போயி­ருக்­கி­றார்­கள். இதற்­குக் கூடப் பேச­வில்லை என்­றால் வேறு எதற்­குத்­தான் பழ­னி­சாமி வாயைத் திறப்­பார் என்று கேட்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">வளர்த்­து­விட்ட செங்­கோட்­டை­ய­னுக்­குத் துரோ­கம்; பதவி கொடுத்த அம்­மை­யார் சசி­கலா மற்­றும் தின­க­ர­னுக்­குத் துரோ­கம்; நம்­மு­டைய சகோ­த­ரர் ஓ.பி.எஸ். அவர்­க­ளுக்­குத் துரோ­கம்; அவைத்­த­லை­வ­ராக இவர்­க­ளு­டைய ஆட்­சி­யைப் காப்­பாற்­றிய தன­பால் அவர்­க­ளுக்­குத் துரோ­கம்; C.A.A. மற்­றும் F.C.R.A. போன்ற சட்­டங்­க­ளுக்கு முட்டு கொடுத்­துச் சிறு­பான்­மை­யின மக்­க­ளுக்­குத் துரோ­கம்; மூன்று வேளாண் சட்­டங்­க­ளுக்கு முட்­டுக் கொடுத்து விவ­சா­யி­க­ளுக்­குத் துரோ­கம்; அம்­மை­யார் ஜெய­ல­லிதா அவர்­கள் எதிர்த்த பா.ஜ.க. கூடக் கூட்­டணி சேர்ந்து அவ­ருக்­கும் துரோ­கம்; இன்­றைக்­குத் தொகுதி மறு­வ­ரை­ய­றைக்கு ஆத­ரவு தெரி­வித்து ஒட்­டு­மொத்த தமிழ்­நாட்­டிற்­கும் துரோ­கம். இது­தான் எவல்­யூ­ஷன் ஆஃப் எடப்­பாடி!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">பழ­னி­சா­மியை தலை­வ­ராக</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ஏற்க மறுக்­கும் தொண்­டர்­கள்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">உண்­மை­யான அ.தி.மு.க. தொண்­டர்­க­ளும் –நிர்­வா­கி­க­ளும் இவ­ரைத் தலை­வ­ராக ஏற்­றுக் கொள்­வ­தற்கே தயா­ராக இல்லை. அ.தி.மு.க.வுக்கு நான்­தான் தலைமை என இவர் அனை­வ­ரை­யும் கன்­வின்ஸ் செய்­யவே நேரம் சரி­யாக இருக்­கி­றது. எம்.எல்.ஏ.க்களை ஏலம் எடுத்து முத­ல­மைச்­சர் ஆன­வர் அல்­லவா அவர்… கூவத்­தூ­ரில்….</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">பழ­னி­சாமி முத­ல­மைச்­ச­ராக இருந்த 4 ஆண்­டு­க­ளில் தமிழ்­நாட்­டையே டெல்லி பா.ஜ.க.வின் வேட்­டைக்­கா­டாக ஏலம் விட்­டார்! அந்­தச் சீர­ழி­வில் இருந்து தமிழ்­நாட்டை மீட்டு, நாம் இன்­றைக்கு சாத­னைத் திட்­டங்­க­ளால் இந்­தி­யா­வி­லேயே தமிழ்­நாடு நம்­பர் ஒன் மாநி­ல­மாக ஆக்­கி­யி­ருக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அதன் அடுத்த கட்­டம்­தான், தி.மு.க. தேர்­தல் அறிக்கை! இது சாதா­ரண அறிக்கை இல்லை, இது சூப்­பர்ஸ்­டார் அறிக்கை!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">நம்­மு­டைய சூப்­பர்­ஹிட்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">அறி­விப்­பு­க­ளைப் பாருங்­கள்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இப்­போது நம்­மு­டைய சூப்­பர்ஸ்­டா­ரின் சூப்­பர் ஹிட் அறி­விப்­பு­க­ளைச் சொல்­லவா? 2006–இல் கலர் டிவி கலை­ஞர் கொடுத்­தார்; 2021–இல் மக­ளிர் உரி­மைத்­தொகை நாம் கொடுத்­தோம். இப்­போது, 2026–இல் இல்­லத்­த­ரசி திட்­டம்! இந்த ஒரு அறி­விப்­பி­லேயே நம்­மு­டைய எதி­ரி­கள் எல்­லாம் க்ளோஸ் ஆகி­விட்­டார்­கள். இல்­லத்­த­ரசி திட்­டத்­தில் எவ்­வ­ளவு ரூபாய்க்கு கூப்­பன் தரப் போகி­றோம்? எட்­டா­யி­ரம் ரூபாய்க்கு கூப்­பன்! இந்­தக் கூப்­பனை வைத்து உங்­க­ளுக்­குத் தேவைப்­ப­டும் வீட்டு உப­யோ­கப் பொரு­ளைப் புதி­ய­தா­க­வும் வாங்­கிக் கொள்­ள­லாம் அல்­லது பழைய பொருளை எக்ஸ்­சேஞ்ச் பண்­ணி­யும் வாங்­கிக் கொள்­ள­லாம்! உங்­க­ளுக்­குப் பிடித்த கடை­யில் உங்­க­ளுக்­குப் பிடித்த கம்­பெ­னி­யில் வாங்­கிக் கொள்­ள­லாம்! வாஷிங் மெஷின், ஃபிரிட்ஜ், டி.வி., கிரைண்­டர், மிக்சி, மைக்­ரோ–­வேவ் அவன், இண்­ட­க்ஷன் ஸ்டவ் என இதில் எதை வாங்­க­லாம் என்று இப்­போதே பெண்­கள் எல்­லாம் டிஸ்­கஸ் செய்ய ஆரம்­பித்­து­விட்­டார்­கள். வீட்­டுக்­கா­ர­ரி­டம் எல்­லாம் கேட்­கா­தீர்­கள். இது முழுக்க முழுக்க உங்­க­ளுக்­காக நான் கொண்டு வந்­தி­ருக்­கும் திட்­டம்! பெண்­கள்­தான் டிசைட் பண்ண வேண்­டும்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அடுத்த வாக்­கு­றுதி, உரி­மைத்­தொகை. ரெஸ்ட்டே இல்­லா­மல் உழைக்­கும் என் சகோ­த­ரி­க­ளுக்கு – தாய்­மார்­க­ளுக்கு, நான் ரெஸ்­பெக்ட் கொடுக்க வேண்­டும் என்­ப­தற்­காக கொண்டு வரப்­பட்ட திட்­டம்­தான் கலை­ஞர் மக­ளிர் உரி­மைத்­தொகை, திரா­விட மாடல் 2.0 ஆட்­சி­யில் இனி மாதம் ஆயி­ரம் அல்ல, 2 ஆயி­ரம் ரூபா­யாக உயர்த்தி வழங்­கப்­ப­டும்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">நமது அறி­விப்­பி­னால்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">சகோ­த­ரி­கள் மகிழ்­கின்­ற­னர்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இப்­போதே பெண்­கள் எல்­லா­ரும் கணக்­குப் போட ஆரம்­பித்­து­விட்­டார்­கள். என்ன கணக்கு தெரி­யுமா? பொங்­க­லுக்கு முன்­னாடி சொல்­லி­விட்டு 3 ஆயி­ரம்! பிப்­ர­வ­ரி­யில் சொல்­லா­ம­லேயே 5 ஆயி­ரம்! ஆக மொத்­தம் 8 ஆயி­ரம்! அடுத்து, இல்­லத்­த­ரசி கூப்­பன் 
வழி­யி­லும் ஸ்டாலின் அண்­ணன் 8 ஆயி­ரம் கொடுக்­கி­றார். ஆக ‘எட்டு+எட்டு, உத­ய­சூ­ரி­ய­னுக்­கு­தான் நம் ஓட்டு’ என முடி­வெ­டுத்­து­விட்­டார்­கள். “கொடுத்­த­தெல்­லாம் கொடுத்­தார், ஸ்டாலின் அண்ணா யாருக்­கா­கக் கொடுத்­தார்? உங்­க­ளுக்­கா­கத்­தான் கொடுத்­தார். ஒட்­டு­மொத்த தமிழ்­நாடு பெண்­க­ளுக்­கும் கொடுத்­தார்!” என என் சகோ­த­ரி­கள் அனை­வ­ருமே மகிழ்ச்­சி­யில் இருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இது­மட்­டு­மல்ல, கல்­லூ­ரிக்­குச் செல்­லும் மாண­வர்­க­ளுக்கு மாதம் ஆயி­ரம் ரூபாய் வழங்­கும் புது­மைப்­பெண் மற்­றும் தமிழ்ப் புதல்­வன் உத­வித்­தொ­கை­யும், ஆயி­ரம் ரூபா­யி­லி­ருந்து, இனி ஆயி­ரத்து 500 ரூபா­யாக உயர்த்தி வழங்­கப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">மேலும், முதி­யோர், மாற்­றுத்­தி­ற­னா­ளி­கள், ஆத­ர­வற்ற பெண்­கள் என அனைத்து உத­வித்­தொ­கை­க­ளும் இனி இரண்டு மடங்­காக வழங்­கப் போகி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">நெல் கொள்­மு­தல் விலை குவிண்­டால் ஒன்­றுக்கு 3 ஆயி­ரத்து 500 ரூபா­யாக உயர்த்தி வழங்­கப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">கரும்பு கொள்­மு­தல் விலை டன் ஒன்­றுக்கு 4 ஆயி­ரத்து 500 ரூபா­யாக உயர்த்தி வழங்­கப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">பால் கொள்­மு­தல் விலை லிட்­டர் ஒன்­றுக்கு 5 ரூபாய் உயர்த்தி வழங்­கப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அடுத்த 5 ஆண்­டு­க­ளில் 10 ஆயி­ரம் புதிய பேருந்­து­கள் தமிழ்­நாடு முழு­வ­தும் இயக்­கப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">காலை உண­வுத்­திட்­டம் எட்­டாம் வகுப்பு வரை விரி­வாக்­கப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அனைத்து வகுப்­ப­றை­க­ளும் ஸ்மார்ட் வகுப்­ப­றை­கள் ஆக்­கப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அடுத்த 5 ஆண்­டு­க­ளில் 35 லட்­சம் கல்­லூரி மாண­வர்­க­ளுக்கு லேப்­டாப் வழங்­கப் போகி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">கலை­ஞர் கனவு இல்­லம் உள்­ளிட்ட திட்­டங்­கள் மூல­மாக 10 லட்­சம் ஏழை­க­ளுக்கு வீடு­கள் கட்­டித்­த­ரப் போகி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தொழிற்­சா­லை­கள் அதி­க­முள்ள நக­ரங்­க­ளில், பெண்­கள் வேலைக்­குச் செல்­வதை எளி­தாக்க ஆயி­ரம் குழந்­தை­கள் காப்­ப­கங்­களை உரு­வாக்­கப் போகி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">பெண்­கள் தொழில் தொடங்க</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">புதிய திட்­டம் அறி­விப்பு!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">மக­ளிர் சுய உத­விக் குழு பெண்­கள் ஷேர் ஆட்டோ வாங்க மானி­யத்­து­டன் கூடிய வங்கி கடன் பெற்­றுத் தரப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">பிசி­னஸ்–­மேன் போன்று, பிசி­னஸ்–­வு­மன்­களை உரு­வாக்­கு­வ­தற்­காக, சுய உத­விக்­குழு பெண்­கள் தொழில் தொடங்க எந்­தச் சூரிட்­டி­யும் இல்­லா­மல் 5 லட்­சம் ரூபாய் வரை மானி­யத்­து­டன் கூடிய கடன் வழங்­கப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">பி.சி., எம்.பி.சி., சீர்­ம­ர­பி­னர் மற்­றும் சிறு­பான்­மை­யி­னர் ஆகி­யோ­ருக்­கும் தொழில் தொடங்­கக் கடன் பெறும் உச்­ச­வ­ரம்பு 30 லட்­சம் ரூபா­யாக உயர்த்­தப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அரி­ய­லூர் மற்­றும் பெரம்­ப­லூர் மாவட்ட இளை­ஞர்­கள் ஒரு லட்­சம் பேருக்கு, நான் முதல்­வன் திட்­டத்­தின் கீழ் கட்­டு­மா­னத் துறை­யில் திறன் பயிற்­சி­கள் வழங்­கப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அரி­ய­லூர் – தஞ்­சா­வூர் ரயில் திட்­டம் கொண்டு வர ஒன்­றிய அர­சுக்கு வலி­யு­றுத்­தப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இந்த வாக்­கு­று­தி­கள் எல்­லாம் நிறை­வே­றக் கழ­கம்­தான் மீண்­டும் ஆட்சி அமைக்க வேண்­டும்! நாம் 200 தொகு­தி­க­ளுக்­கும் மேலாக வெற்றி பெற்­றால்­தான் பாசிச பா.ஜ.க.வை எதிர்த்து வலி­மை­யா­கப் போராட முடி­யும்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அதற்கு, குன்­னம் தொகு­தி­யில் எஸ்.எஸ். சிவ­சங்­க­ருக்­கும், பெரம்­ப­லூர் தொகு­தி­யில் டாக்­டர் ஜெய­லட்­சு­மிக்­கும், அரி­ய­லூர் தொகு­தி­யில் லதா பாலு­வுக்­கும், ஜெயங்­கொண்­டம் தொகு­தி­யில் க.சொ.க. கண்­ண­னுக்­கும் உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­தில் உங்­க­ளு­டைய வாக்­கு­களை அளிக்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தமிழ்­நாடா? டெல்­லியா? என்ற இந்த ஜன­நா­ய­கப் போரில் தமிழ்­நா­டு­தான் வெல்ல வேண்­டும்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">கருப்­புச் சட்­டத்தை திரும்­பப்­பெற</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">குரல் கொடுக்­கும் நம் எம்.பி.க்கள்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இன்­றைக்கு நாடா­ளு­மன்­றம் கூடி­யது. அதில் விடு­த­லைச் சிறுத்­தை­கள் கட்­சி­யின் தலை­வர் என் அன்­புச் சகோ­த­ரர் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் தொல். திரு­மா­வ­ள­வன் அவர்­கள், நம்­மு­டைய கழ­கத்­தின் துணைப் பொதுச்­செ­ய­லா­ளர் ஆ. இராசா அவர்­க­ளும், இந்த நிகழ்ச்சி இருக்­கி­றதே... எப்­படி செல்­வது என்­று­தான் யோசித்­தார்­கள். ஆனால், இதை­விட அது­தான் முக்­கி­யம். நம்­மு­டைய உணர்­வு­தான், நம்­மு­டைய உரி­மை­தான் முக்­கி­யம். எனவே, அதற்கு செல்ல வேண்­டு­மென்று நான் கேட்­டுக்­கொண்­ட­தன் கார­ண­மாக இன்­றைக்கு அவர்­கள் டெல்­லிக்கு சென்­றி­ருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">எனவே, நம்­மு­டைய எம்.பி.–க்களின் குர­லாக, அந்­தக் கறுப்­புச் சட்­டத்­தைத் திரும்­பப் பெறு­வ­தற்கு அவர்­கள் குரல் கொடுக்க இருக்­கி­றார்­கள். அங்கு நாளைய தினம் வாக்­கெ­டுப்பு நடை­பெற இருக்­கி­றது. எனவே அவர்­க­ளின் சார்­பி­லும் உங்­க­ளி­டத்­தில் நான் கேட்­டுக் கொள்ள விரும்­பு­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">நன்­றா­கப் புரிந்து கொள்­ளுங்­கள், ஏதோ நான் முத­ல­மைச்­சரோ, 30 பேர் அமைச்­சரோ, நம்­மு­டைய கூட்­ட­ணி­யில் 200 பேர் எம்.எல்.ஏ.–வோ ஆக வேண்­டும் என்­பது மட்­டு­மல்ல; நம்­மு­டைய தமிழ்­நாட்­டைக் காக்க, கழ­கம்­தான் மீண்­டும் ஆட்சி அமைக்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தொகுதி மறு­வ­ரை­ய­றையை அடுத்து இவர்­கள் இன்­னும் மோச­மான திட்­டங்­களை வைத்­தி­ருக்­கி­றார்­கள். பா.ஜ.க.விடம் தமிழ்­நாடு சிக்­கி­னால், ஜம்மு காஷ்­மீரை உடைத்­தது போன்று தமிழ்­நாட்­டை­யும் மூன்று யூனி­யன் பிர­தே­ச­மா­கத் துண்டு துண்­டாக ஆக்­கி­வி­டு­வார்­கள். துணை­நிலை ஆளு­நரை வைத்­துப் புதுச்­சே­ரி­யில் எப்­படி அரா­ஜ­கம் செய்­கி­றார்­களோ, அதே அரா­ஜ­கம் நம்­மு­டைய ஊரில் நடக்­கும்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">அ.தி.மு.க. அடி­மை­களை</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">நிச்­ச­யம் அனு­ம­திக்­கக் கூடாது!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அத­னால்­தான் சொன்­னேன்... அ.தி.மு.க. அடி­மை­கள் மீண்­டும் வந்­தால் தமிழ்­நாடு என்ற ஒன்றே இல்­லா­மல் போய்­வி­டும்! நாம் செலுத்­தும் வாக்­குக்கு எந்த மதிப்­பும் இல்­லா­மல் போய்­வி­டும்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அத­னால்,அர­சி­யல் விருப்பு வெறுப்­பு­க­ளுக்கு அப்­பாற்­பட்டு, 2026 தேர்­த­லில் நம்­மு­டைய மதச்­சார்­பற்ற முற்­போக்­குக் கூட்­ட­ணிக்குபெரம்­ப­லூர் மற்­றும் அரி­ய­லூர் மக்­கள் மாபெ­ரும் வெற்­றி­யைத் தர வேண்­டும்! NDA எனும் New Delhi Alliance–ஐ ஓட ஓட விரட்­டி­ய­டிக்க வேண்­டும்! ஏழா­வது முறை­யும் கழக அர­சு­தான்! முத­ல­மைச்­ச­ராக இரண்­டா­வது முறை­யும் இந்த அடி­யேன் ஸ்டாலின்­தான். இனி எப்­போ­துமே கழக அர­சு­தான் என்ற நிலையை உரு­வாக்­கு­வோம்! அமைய இருக்­கும் திரா­விட மாடல் 2.0 ஆட்­சி­யில் எங்­க­ளு­டைய சாத­னை­களை நாங்­களே முறி­ய­டிக்­கும் வகை­யி­லான ஆட்­சியை நாங்­கள் வழங்­கு­வோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">நாடு வளம் பெற, நல்­லாட்சி தொடர்ந்­திட, ஆத­ரிப்­பீர் மதச்­சார்­பற்ற முற்­போக்­குக் கூட்­டணி வேட்­பா­ளர்­களை!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">வெல்­வோம் ஒன்­றாக! வெல்­வோம் ஒன்­றாக! வெல்­வோம் ஒன்­றாக!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இவ்­வாறு தலை­வர், முதல்­வர் மு.க.ஸ்டாலின் அவர்­கள் உரை­யாற்­றி­னார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>