<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="19/04/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,285,958,1495" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Sat Apr 18 2026 22:47:38 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260419T000000+5.30" edition.name="CBE" edition.area="CBE" position.section="19042026-CBE-09" position.sequence="09" ex-ref="19042026-CBE-09.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="28">போடி­நா­யக்­க­னூர் தொகு­தி­யில் – ஓ.பன்­னீர்­செல்­வத்தை ஆத­ரித்து </lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="28">துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம்!</lang>
	</hl2>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="Mdspeech174_09_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="2" source="Mdspeech1741_09_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="11">தேனி,ஏப்.19–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="11">தேனி மாவட்­டம், போடி­நா­யக்­க­னூ­ரில், கழக இளை­ஞர் அணிச் செய­லா­ள­ரும் துணைமுத­ல­மைச்­ச­ரு­மான உத­ய­நிதி ஸ்டாலின் அவர்கள்போடி­நா­யக்­க­னூர் சட்­ட­மன்­றத் தொகு­திக்­கான தி.மு.கழக வேட்­பா­ளர் ஓ.பன்­னீர்­செல்­வம் அவர்­க­ளுக்கு உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­தில் வாக்கு சேக­ரித்து பிரச்­சா­ரம் மேற்­கொண்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="11">அப்­போது அவர்,   ``ஒன்­றிய பா.ஜ.க. அரசு ஏற்­க­னவே நமக்­கான நிதி­யைக் கொடுப்­ப­தில்லை. நமக்­கான திட்­டங்­க­ளை­யும் நிறுத்தி வைக்­கி­றார்­கள். எந்­தத் திட்­டத்­தை­யும் தமிழ்­நாட்­டுக்கு வழங்­கி­ய­தில்லை. டெல்லி அணியை வீழ்த்தி தமிழ்நாடு அணியை வென்று காட்டுவோம்! -  தமிழ்­நாட்டு மக்­கள், மிகுந்த எச்­ச­ரி­கை­யு­டன் வாக்­க­ளிக்க வேண்­டிய தேர்­தல் இது’’ என்று குறிப்­பிட்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="11">கழக இளை­ஞர் அணிச் செய­லா­ள­ரும் துணை முத­ல­மைச்­ச­ரு­மான உத­ய­நிதி ஸ்டாலின்  அவர்கள் ஆற்­றிய உரை­ வரு­மாறு:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">இவ்­வ­ளவு சிறப்­பான, அன்­பான, எழுச்­சி­யான வர­வேற்பு கொடுத்­தி­ருக்­கக்­கூ­டிய உங்­கள் அனை­வ­ருக்­கும் முத­லில் என் நன்­றி­யைத் தெரி­வித்­துக்­கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">கடந்த 16 நாட்­க­ளாக கிட்­டத்­தட்ட 100 சட்­ட­மன்­றத் தொகு­தி­க­ளுக்­குச் சென்று, நம் வெற்றி வேட்­பா­ளர்­க­ளுக்கு, நம் முத­ல­மைச்­ச­ருக்கு, நம் திரா­விட மாடல் 2.0 ஆட்சி அமைய வேண்­டும் என்று, நம் உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­தி­லும்,  கூட்­ட­ணி சின்­னங்­க­ளி­லும் வாக்கு கேட்டு இன்று இந்த போடி­நா­யக்­க­னூர் வந்­தி­ருக்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">வெற்றி தேடித் தர வேண்­டும்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">அண்­ணன் ஓ.பன்­னீர்­செல்­வம் அவர்­க­ளுக்கு உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­தில் நீங்­கள் வாக்­க­ளித்து மிகப்­பெ­ரிய வெற்­றி­யைத் தேடித் தர வேண்­டும்.  சென்ற முறை அண்­ணனை 10,000 வாக்கு வித்­தி­யா­சத்­தில் நாம்­தான் அண்­ண­னி­டம் தோற்­றோம். இந்த முறை அதற்­கும் சேர்த்து நாம் அண்­ணனை குறைந்­த­பட்­சம் 50,000 வாக்­கு­கள் வித்­தி­யா­சத்­தில் வெற்றி பெற வைத்து, சட்­ட­மன்­றத்­துக்கு நம் உத­ய­சூ­ரி­யன் சார்­பாக, தி.மு.க சார்­பாக ஒரு சிறப்­பு­டன் சட்­ட­மன்­றத்­துக்கு அனுப்ப வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">இதே உணர்வு, இதே எழுச்சி இன்­னும் ஒரு வாரத்­துக்கு இருக்க வேண்­டும். ஏதோ உத­ய­நிதி வந்­தார், சென்று பார்த்­தோம், பேசி­னார், கூடி கலைந்து சென்­று­விட்­டோம், கோஷம் போட்­டோம் என்று சென்­று­வி­டக்­கூ­டாது. அடுத்த ஒரு வாரம் மிக­வும் முக்­கி­யம். அதை மன­தில் வைத்­துக்­கொண்டு நம் பிரச்­சா­ரப் பணி­களை நாம் செய்ய வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">காலை­யில் மதுரை மாவட்­டத்­தில் வாக்­குச் சேக­ரிப்­பில் ஈடு­பட்­டி­ருந்­தேன். அதற்­குப் பிறகு ஆண்­டி­பட்டி முடித்­து­விட்டு, இப்­போ­து­தான் உங்­க­ளைப் பார்ப்­ப­தற்­காக போடிக்கு வந்­தி­ருக்­கி­றேன். எந்த மாவட்­டத்­துக்­குச் சென்­றா­லும், தேனி மாவட்­டத்­துக்­குச் சென்­றால், அது தனி கௌர­வம்­தான், தனி மகிழ்ச்சி, தனி பெருமை. உங்­க­ளின் எழுச்­சி­யைப் பார்க்­கும்­போது இப்­போதே தெரி­கி­றது கழ­கத்­தின் வெற்றி இந்த மாவட்­டம் முழு­வ­தும் உறுதி செய்­யப்­பட்ட ஒன்று. நான் உங்­க­ளி­டம் கேட்­ப­தெல்­லாம் அண்­ணன் ஓ.பன்­னீர்­செல்­வம் அவர்­களை இந்த மாவட்­டத்­தி­லேயே அதி­க­மான வாக்குவித்­தி­யா­சத்­தில் வெற்றி பெற வைக்க வேண்­டும்.
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">வாழ்­நா­ளில் மறக்க மாட்­டேன்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">எனக்­கும் தேனி மாவட்­டத்­துக்­கும் ஒரு நெருங்­கிய தொடர்பு உண்டு. பொது வாழ்க்­கைக்கு வந்த உடனே 2019–ஆம் ஆண்டு நாடா­ளு­மன்­றத் தேர்­த­லுக்கு தமிழ்­நாடு முழு­வ­தும் சென்­றேன். ஆனால், அதற்கு முன்பு 2018–ஆம் ஆண்டு, அப்­போது நான் இளை­ஞர் அணி செய­லா­ளர் கூட கிடை­யாது. அப்­போது தலை­வர் அவர்­கள்  தமிழ்­நாடு முழு­வ­தும் கிராம சபைக் கூட்­டம் நடத்­தி­னார்­கள். அப்­போது நான் முதன்­மு­த­லில் வந்­தது, இந்த தேனி மாவட்­டத்­துக்­குத்­தான். என் அர­சி­யல் வாழ்க்­கைக்கு அஸ்­தி­வா­ரம் போட்­டதே, இந்த தேனி மாவட்­டம்­தான். அத­னால் தேனி மாவட்­டத்தை நான் என்­றைக்­குமே வாழ்­நா­ளில் மறக்க மாட்­டேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">தேனீ மாதிரி உழைக்­கக்­கூ­டிய மக்­கள்­தான், இந்த தேனி மாவட்ட மக்­கள். அத­னால்­தான் அந்த உரி­மை­யோடு, அந்­தப் பெரு­மை­யோடு உங்­க­ளை­யெல்­லாம் சந்­திப்­ப­தற்கு வந்­தி­ருக்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">அண்­ணன் ஓ.பி.எஸ் அவர்­களை, நான் வந்து உங்­க­ளி­டம் அறி­மு­கப்­ப­டுத்த வேண்­டுமா? தமிழ்­நாடு முழு­வ­தும் தெரிந்­த­வர், இந்­தியா முழு­வ­தும் அறி­யப்­பட்­ட­வர். அண்­ணன் ஓ.பி.எஸ். அவர்­க­ளுக்கு வாக்கு கேட்க வந்­ததை எனக்­குக் கிடைத்த மிகப்­பெ­ரிய ஒரு பெரு­மை­யாக நான் கரு­து­கி­றேன். நீண்ட நெடிய அர­சி­யல் அனு­ப­வத்­துக்­குச் சொந்­தக்­கா­ரர். எளிய பின்­பு­லத்­தி­லி­ருந்து வந்து வாழ்க்­கை­யைத் தொடங்கி இன்று அர­சி­ய­லில் பல உய­ரங்­களை அவ­ரின் உழைப்பு மூல­மா­கத் தொட்­ட­வர். எந்த நேர­மும் சிரித்த முகத்­தோடு, அது எவ்­வ­ளவு பிரச்­சினை வந்­தா­லும் சரி, சிரித்­துக்­கொண்­டு­தான் இருப்­பார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">பாடம் கற்­றுத் தர வேண்­டும்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">குறிப்­பாக இந்­தப் போடி தொகுதி மக்­க­ளின் ஒவ்­வொரு தேவை­யை­யும் உணர்ந்­த­வர். இந்­தத் தொகு­தி­யைப் பற்­றியே சிந்­தித்­துக் கொண்­டி­ருக்­கக்­கூ­டி­ய­வர். மாற்றி மாற்றி காலைப் பிடித்து, மாற்றி மாற்­றித் துரோ­கம் செய்­து­கொண்­டி­ருக்­கக்­கூ­டிய எடப்­பாடி பழ­னிச்­சா­மிக்­குச் சரி­யான பாடத்­தைக் கற்­றுத் தர வேண்­டும் என்று இன்று நம் கழ­கத்­தில் நம் தலை­வ­ரைத், தலை­வ­ராக ஏற்று, நம் கழ­கத்­துக்கு அவர் வந்­தி­ருக்­கி­றார். இன்று அ.தி.மு.க–வை அமித்­ஷா­வி­டம் மொத்­த­மாக விற்­று­விட்ட எடப்­பாடி பழ­னிச்­சா­மிக்கு, இந்­தத் தேர்­த­லில் நாம் ஒரு சரி­யான பாடத்­தைக் கற்­றுக்­கொ­டுக்­க­வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">நிச்­ச­யம் நம் தலை­வர்­தான் மீண்­டும் முத­ல­மைச்­ச­ராக வரப்­போ­கி­றார். மீண்­டும் தி.மு.க.தான் ஆட்சி அமைக்­கப்­போ­கி­றது. நான் உங்­க­ளி­டம் கேட்­டுக்­கொள்­வ­தெல்­லாம் அண்­ணன் ஓ.பி.எஸ். அவர்­களை இந்­தத் தொகு­தி­யில் அதி­க­மான வாக்கு வித்­தி­யா­சத்­தில் வெற்­றி­பெற வைக்க வேண்­டும். எதிர்த்­துப் போட்­டி­யி­டும் அ.தி.மு.க வேட்­பா­ள­ருக்­குத் டெபா­சிட் போகும் அள­வுக்கு, நம் வெற்றி இருக்­க­வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">நான் இன்று அவரை அழைத்து வந்­தி­ருக்­கி­றேன். மீண்­டும் உத­ய­சூ­ரி­ய­னுக்கு ஒரு வாய்ப்­புக் கொடுங்­கள் என்று கேட்டு வந்­தி­ருக்­கி­றேன். இந்­தத் தொகு­திக்கு நாம் அவ்­வ­ளவு திட்­டங்­களை செய்து கொடுத்­தி­ருக்­கி­றோம். உதா­ர­ணத்­துக்­குச் சில திட்­டங்­களை மட்­டும் உங்­க­ளுக்கு ஞாப­கப்­ப­டுத்த விரும்­பு­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">போடி­நா­யக்­க­னூர் திட்­டங்­கள்</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">சுமார் 76 கோடி ரூபாய் மதிப்­பீட்­டில் கழி­வு­நீர்ச் சுத்­தி­க­ரிப்பு நிலை­யத்தை உங்­க­ளின் வேட்­பா­ளர் அண்­ணன் ஓ.பி.எஸ் அவர்­கள் கொண்­டு­வந்­துள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">உப்­பார்­பட்டி மற்­றும் தப்­புக்­குண்டு கிரா­மப்­ப­கு­தி­களை உள்­ள­டக்கி, மெகா உண­வுப் பூங்கா 70 கோடி ரூபாய் மதிப்­பீட்­டில் கொண்டு வந்­தி­ருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">அணைக்­க­ரைப்­பட்டி விளக்கு முதல் போடி­நா­யக்­க­னூர் வரைக்­கும் 36 கோடி ரூபாய் மதிப்­பீட்­டில், புதிய புற­வ­ழிச் சாலை போடப்­பட்­டுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">கோட்­டூர் பகு­தி­யில் 11 கோடி ரூபாய் ஒதுக்­கீடு செய்­யப்­பட்டு, ஒரு விடுதி கட்­டிக் கொடுத்­தி­ருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">தொகுதி முழு­வ­தும் 103 கிலோ­மீட்­டர் நீளத்­துக்­குத் தர­மான சாலை­கள் போடப்­பட்­டி­ருக்­கின்­றன, அவை­யெல்­லாம் அவ­ரின் முயற்­சி­யில் இந்­தத் தொகு­திக்கு வந்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">பழ­னி­செட்­டி­பட்டி பேரூ­ராட்­சி­யில், 2 கோடி ரூபாய் மதிப்­பீட்­டில் ஒரு அறிவு மையம், 5 கோடி ரூபாய் மதிப்­பீட்­டில் தோழி மக­ளிர் விடுதி.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">மஞ்­சி­நா­யக்­கன்­பட்டி ஊராட்­சி­யில் கொட்­டக்­குடி ஆற்­றின் அருகே புதிய தடுப்­பணை – இதெல்­லாம் நாம் செய்து கொடுத்­தி­ருக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">இப்­போது மீண்­டும் உங்­க­ளி­டம் நான் கேட்­டுக்­கொள்­வ­தெல்­லாம், அவ­ரைச் சட்­ட­மன்ற உறுப்­பி­ன­ராக நீங்­கள் அனுப்பி வைத்­தீர்­கள் என்­றால், நிச்­ச­யம் இந்­தத் தொகு­திக்கு மேலும் என்­னென்ன தேவையோ அனைத்­தை­யும் அண்­ணன் ஓ.பி.எஸ். அவர்­கள் உங்­க­ளுக்­காக நிச்­ச­யம் செய்து கொடுப்­பார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">முதல் கையெ­ழுத்து</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">ஆட்­சிக்கு வந்த உடனே நம் முத­ல­மைச்­சர் போட்ட முதல் கையெ­ழுத்து மக­ளி­ருக்­குக் கட்­ட­ண­மில்­லாப் பேருந்து திட்­டத்­தின் மூலம் ஒவ்­வொரு மக­ளி­ரும் மாதந்­தோ­றும் 900 வரை சேமித்­தி­ருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">முத­ல­மைச்­சர் காலை உண­வுத் திட்­டம், காலை­யில் பிள்­ளை­கள் பள்­ளிக்­கூ­டத்­துக்கு வந்­தார்­கள் என்­றால், அவர்­க­ளுக்­குத் தர­மான காலை உணவு கொடுத்­தி­ருக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">கல்­லூ­ரிக்­குப் படிக்­கச் சென்­றால் அவர்­க­ளுக்­குக் கல்வி ஊக்­கத்­தொகை மாதம் 1,000 ரூபாய் கொடுத்­தி­ருக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">கடந்த மூன்று மாதங்­க­ளுக்கு முன்பு கல்­லூரி மாண­வர்­கள் 10 லட்­சம் பேருக்கு இல­வச மடிக்­க­ணினி கொடுத்­தி­ருக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">கலை­ஞர் மக­ளிர் உரி­மைத் தொகை திட்­டம். சென்ற சட்­ட­மன்­றத் தேர்­த­லின் போது நாம் சொன்ன வாக்­கு­றுதி. இன்று மாதந்­தோ­றும் ஒரு கோடியே 31 லட்­சம் மக­ளி­ருக்கு உரி­மைத் தொகையை நம் முத­ல­மைச்­சர் அவர்­கள் கொடுத்­துக் கொண்­டி­ருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">அதை நிறுத்­து­வ­தற்கு இன்று அ.தி.மு.க–வும் பா.ஜ.க–வும் முயற்சி செய்­தார்­கள். தேர்­த­லைக் கார­ணம் காட்டி மூன்று மாதத்­துக்கு உரி­மைத் தொகை திட்­டத்தை நிறுத்­து­வ­தற்கு நீதி­மன்­றத்­துக்­குச் சென்­றார்­கள். ஆனால் நம் முத­ல­மைச்­சர் என்ன செய்­தார்?``நான் 1,000 ரூபாய் கொடுக்­கி­றதை நிறுத்த முயற்சி செய்­கி­றாயா? நான் கொடுக்­கி­றேன் 5,000 ரூபாய், தடுத்­துப் பார்’’ என்று கொடுத்­தார். பிப்­ர­வரி, மார்ச், ஏப்­ரல் என மூன்று மாதத்­துக்­குச் சேர்த்து 3,000 ரூபாய், கோடை­கால சிறப்பு நிதி 2,000 என்று 5,000 ரூபாய் நம் தலை­வர் ஒரு கோடியே 31 லட்­சம் மக­ளி­ருக்­குக் கொடுத்­தார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">நம் தலை­வர் காலை 6 மணிக்கு மக­ளி­ரின் வங்­கிக் கணக்­கில் பணத்­தைப் போட்­டார். மக­ளிர் என்ன செய்­தார்­கள்? 9 மணிக்­கெல்­லாம் சென்று பணத்தை எடுத்­து­விட்­டார்­கள். அவ்­வ­ளவு விழிப்­பு­ணர்வு. ஏன் எடுத்­தீர்­கள்? மோடி அரசு வங்­கி­யில் குறைந்­த­பட்ச இருப்பு இல்லை என்று சொல்லி, இந்த உரி­மைத் தொகையை எடுத்­து­வி­டு­வார்­கள் என்ற பயத்­தில் சென்று எடுத்­தீர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">அந்த அள­வுக்கு விழிப்­பு­ணர்­வோடு இருக்­கி­றீர்­களே! 23–ஆம் தேதி இதே மாதிரி விழிப்­பு­ணர்­வோடு காலை­யில் வாக்­குச்­சா­வ­டிக்­குச் சென்று வாக்­குப்­பெட்­டி­யில் அண்­ணன் ஓ.பி.எஸ் அவர்­க­ளுக்கு உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­தில் நீங்­கள் வாக்­க­ளிக்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">சில வாக்­கு­று­தி­கள்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">சில வாக்­கு­று­தி­யும் நம் தலை­வர் கொடுத்­தி­ருக்­கி­றார். மக­ளிர் உரி­மைத் தொகை இது­வ­ரைக்­கும் 1,000 ரூபாய் கொடுத்­துக்­கொண்­டி­ருந்­தோம். ஆட்சி அமைந்­த­வு­டனே அதை 2,000–ஆக உயர்த்தி வழங்­கு­வேன் என்று நம் தலை­வர் வாக்­கு­றுதி கொடுத்­தி­ருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">காலை உண­வுத் திட்­டம் ஐந்­தாம் வகுப்பு வரை கொடுத்­துக்­கொண்­டி­ருக்­கி­றோம். அதை எட்­டாம் வகுப்பு வரை விரி­வாக்­கப்­ப­டும் என்று வாக்­கு­றுதி.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">கல்வி ஊக்­கத் தொகை 1,000 ரூபாய் கொடுத்­துக்­கொண்­டி­ருக்­கி­றோம். அதை உயர்த்தி 1,500–ஆக வழங்­கப்­ப­டும் என்று சொல்­லி­யி­ருக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">முதி­யோர் உத­வித் தொகை 1,200 ரூபாய் கொடுத்­துக்­கொண்­டி­ருக்­கி­றோம். அதை உயர்த்தி 2,000 ரூபாய் தரு­கி­றேன் என்று நம் முத­ல­மைச்­சர் வாக்­கு­றுதி கொடுத்­தி­ருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">அடுத்த ஐந்து வரு­டத்­தில் 10 லட்­சம் கலை­ஞர் கனவு இல்­லம் கட்­டப்­பட்டு, யார் யாருக்­கெல்­லாம் வீடு இல்­லையோ, அவர்­க­ளுக்­கெல்­லாம் கலை­ஞர் கனவு இல்­லம் வழங்­கப்­ப­டும் என்று வாக்­கு­றுதி கொடுத்­தி­ருக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">அடுத்த ஐந்து வரு­டத்­தில் 35 லட்­சம் கல்­லூரி மாணவ மாண­வி­க­ளுக்கு மடிக்­க­ணினி கொடுப்­போம் என்று வாக்­கு­றுதி கொடுத்­தி­ருக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">எல்­லா­வற்­றை­யும் விட முக்­கி­ய­மான வாக்­கு­றுதி உங்­க­ளுக்­குத் தெரி­யும். ஏற்­க­னவே மக­ளிர் எல்­லாம் தயா­ரா­கி­விட்­டார்­கள். வீட்­டில் இதைத்­தான் அமர்ந்து விவா­தித்­துக் கொண்­டி­ருக்­கி­றார்­கள். ஆட்சி அமைந்­த­வு­டனே, நம் முத­ல­மைச்­சர் அவர்­கள் ஒவ்­வொரு மக­ளிர் கைக­ளி­லும் 8,000 ரூபாய் ஒப்­ப­டைத்­து­வி­டு­வார். மக­ளிர் நீங்­கள் முடிவு எடுத்­துக்­கொள்­ளுங்­கள். வீட்­டில் அமர்ந்து பேசி, நீங்­களே ஒரு முடிவு எடுத்­துக்­கொள்­ளுங்­கள். அந்­தச் சண்­டைக்கு, அந்­தப் பஞ்­சா­யத்­துக்கு நாங்­கள் வர­வில்லை என்று கூறி­விட்­டார் முத­ல­மைச்­சர். வீட்­டிற்கு என்ன தேவையோ ஃப்ரிட்ஜ், மிக்ஸி, கிரைண்­டர், தொலைக்­காட்சி என எது­வாக இருந்­தா­லும் மின்­சா­த­னப் பொருட்­கள் நீங்­களே முடிவு எடுத்து, நீங்­களே வாங்­கிக்­கொள்­ள­லாம் என்று முத­ல­மைச்­சர் சொல்­லி­யி­ருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">மீண்­டும் நம் திரா­விட மாடல் 2.0 ஆட்சி</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10"> 
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">இதெல்­லாம் நடக்க வேண்­டும் என்­றால் மீண்­டும் நம் திரா­விட மாடல் 2.0 ஆட்சி அமைய வேண்­டும். அமை­யப் போவது உறுதி. அதற்கு அதிக வலு­சேர்க்­கும் வித­மாக இந்­தப் போடி தொகு­தி­யில் அண்­ணன் ஓ.பி.எஸ் அவர்­களை அதி­க­மான வாக்கு வித்­தி­யா­சத்­தில் வெற்­றி­பெற வைத்து நீங்­கள் அனுப்ப வேண்­டும். உங்­க­ளின் எழுச்­சி­யைப் பார்க்­கும்­போது நிச்­ச­ய­மாக வெற்றி பெற வைத்து விடு­வீர்­கள் என்று எனக்­குத் தெரி­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">கூட்­டத்­தி­னர் – போட்டோ, போட்டோ</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">புகைப்­ப­டமா? என்ன புகைப்­ப­டம்? என்­னி­டம் அந்­தப் புகைப்­ப­டம் இல்லை. திட்­டு­கி­றார். சரி, புகைப்­ப­டம்­தானே? அது பெரிய உல­கப் புகழ்­பெற்ற புகைப்­ப­டம். அதற்கு இப்­போது ஒரு நேயர் விருப்­பம் மாதிரி, எல்லா இடத்­தி­லும் கேட்­கி­றீர்­கள். இப்­போ­து­தான் தெரி­கி­றது ஏன் அவ்­வ­ளவு கோபப்­ப­டு­கி­றார் என்று. சரி, நான் காண்­பிக்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">நான் என்ன சொன்­னேன்? நான் ஒரே ஒரு வார்த்­தை­தான் சொன்­னேன். நாம் முரட்­டு­பக்­தர்­கள் பார்த்­தி­ருப்­போம், முரட்டு தொண்­டர்­கள் கேள்­விப்­பட்­டி­ருப்­போம். ஆனால், ஒரு நம்­பர் ஒன் முரட்டு அடி­மை­யைப் பார்த்­தி­ருக்­கி­றீர்­களா என்று நான் கேட்­டேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">ஏன் அப்­படி கேட்­டேன்? அதற்கு ஒரு உதா­ர­ணம், இப்­போது சொல்­லட்­டுமா? இன்று ஒன்­றிய பா.ஜ.க. அரசு நாடா­ளு­மன்­றத்­தைக் கூட்டி, நாடா­ளு­மன்­றத் தொகுதி மறு­வ­ரை­யறை, ‘டி–லி­மிட்­டே­ஷன்’ என்­கிற மசோ­தாவை நிறை­வேற்ற இருக்­கி­றார்­கள். நாம் எதிர்ப்பு தெரி­வித்து இருக்­கி­றோம். கடந்த வரு­டமே இதற்­காக முத­லில் குரல் கொடுத்­தது, நம் தலை­வர்­தான். தென் மாநி­லங்­க­ளி­லி­ருந்து அனைத்து முத­ல­மைச்­சர்­க­ளை­யும் வர­வ­ழைத்து, டி–லி­மிட்­டே­ஷன் கொண்டு வரப்­போ­கி­றார்­கள், இதை எதிர்க்க வேண்­டும் என்று சொன்ன முதல் தலை­வர் நம் தலை­வர். இன்று கொண்டு வந்­தி­ருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">இந்த டி–லி­மிட்­டே­ஷன் என்­றால் என்ன? அதா­வது மக்­கள் தொகை­யைக் கணக்­கெ­டுத்து, ஒவ்­வொரு மாநி­லத்­தி­லும் எம்.பி.க்கள் ஒதுக்­கு­கி­றார்­கள் அல்­லவா, அதை மறு­வ­ரை­யறை செய்­வ­து­தான், நிர்­ண­யிப்­ப­து­தான் இந்த டி–லி­மிட்­டே­ஷன். இப்­போது நம் இந்­தி­யா­வில் மொத்­தம் 543 நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள். இந்த தொகுதி மறு­வ­ரை­யறை மூல­மாக அதை 815–ஆக, மக்­கள் தொகை­யைப் பார்த்து உயர்த்­தப் போகி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">எந்­தத் திட்­ட­மும் வழங்­கி­ய­தில்லை</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">நம் தமிழ்­நாட்­டில் இப்­போது 39 எம்­பிக்­கள் இருக்­கி­றார்­கள். நமக்கு நியா­யப்­படி 59 எம்­பிக்­கள் வர வேண்­டும், கொடுக்க வேண்­டும். ஆனால் ஒன்­றிய பா.ஜ.க. அரசு என்ன செய்­கி­றார்­கள்? 59 கொடுக்க முடி­யாது, 47 எம்.பிக்­கள்­தான் தமிழ்­நாட்­டுக்­குக் கொடுக்க முடி­யும் என்று தமிழ்­நாட்டை மீண்­டும் பழி­வாங்­கு­கி­றார்­கள். அதா­வது தமிழ்­நாட்­டுக்கு 12 எம்.பி. இடங்­களை ஒன்­றிய பா.ஜ.க. அரசு இன்று குறைக்­கி­றது. அப்­ப­டிச் செய்­யும்­போது நாடா­ளு­மன்­றத்­தில் நம் முக்­கி­யத்­து­வம் குறை­யும்.  ஒன்­றிய பா.ஜ.க. அரசு ஏற்­க­னவே நமக்­கான நிதி­யைக் கொடுப்­ப­தில்லை. நமக்­கான திட்­டங்­க­ளை­யும் நிறுத்தி வைக்­கி­றார்­கள். எந்­தத் திட்­டத்­தை­யும் தமிழ்­நாட்­டுக்கு வழங்­கி­ய­தில்லை. இப்­போது எம்.பி.க்களு­டைய எண்­ணிக்­கை­யை­யும் குறைக்­கப் பார்க்­கி­றார்­கள். தமிழ்­நாட்டு மக்­கள், மிகுந்த எச்­ச­ரி­கை­யு­டன் வாக்­க­ளிக்க வேண்­டிய தேர்­தல் இது. அதா­வது முறை­யாக மக்­கள்­தொ­கை­யைக் கட்­டுப்­ப­டுத்­திய தமிழ்­நாட்­டுக்கு இன்று ஒரு தண்­ட­னை­யைக் கொடுக்­கி­றார்­கள். மக்­கள் தொகை­யைக் கட்­டுப்­ப­டுத்­தாத வட மாநி­லங்­க­ளுக்கு, அதி­க­மான நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களை ஒன்­றிய பா.ஜ.க அரசு கொடுக்­கி­றது. அத­னால்­தான் இதை எதிர்த்து நாம் போரா­டிக் கொண்­டி­ருக்­கி­றோம், கருப்­புக்­கொடி காட்­டிக் கொண்­டி­ருக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">தமிழ்­நாட்­டுக்­குத் துரோ­கம்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">இன்று காலை நம் தலை­வர் அவர்­க­ளும் நானும் தொகுதி மறு­வ­ரை­ய­றை­யின் சட்­ட­ந­கலை தமிழ்­நாடு முழு­வ­தும் எரித்­தி­ருக்­கி­றோம். நம் எதிர்ப்­பைக் காட்­டி­யி­ருக்­கி­றோம். டி–லி­மிட்­டே­ஷன் கொண்டு வரு­வது நம் மாநில உரி­மை­யைப் பறிக்­கின்ற வேலை. நாம் இவ்­வ­ளவு எதிர்ப்பு காட்­டி­யி­ருக்­கி­றோம்,  நாம் எதிர்த்து அறிக்கை வெளி­யிட்­டி­ருக்­கி­றோம். ஆனால் எதிர்க்­கட்­சித் தலை­வர் எடப்­பாடி பழ­னி­சாமி இன்று என்ன சொல்­கி­றார்? ``தமிழ்­நாட்­டுக்கு எந்­தப் பாதிப்­பும்வராது’’. யார்? எடப்­பாடி பழ­னி­சாமி அவர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">ஏனென்­றால் பாதிப்பு வரும் என்று சொன்­னால், அவ­ருக்­குப் பாதிப்புவந்­து­வி­டும். பி.ஜே.பி. தண்­டிக்­கும். அத­னால்­தான் மீண்­டும் தமிழ்­நாட்­டுக்­குத் துரோ­கத்­தைப் செய்­கி­றார். அத­னால்­தான் நான் மீண்­டும் மீண்­டும் சொல்­கி­றேன், மோடி­யின் நம்­பர் ஒன்முரட்டு அடிமை எடப்­பாடி பழ­னி­சாமி அவர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">இதைச் சொன்­ன­தற்­குத்­தான் கோபித்­துக்­கொண்­டார். ``எந்த அனு­ப­வத்தை வைத்து உத­ய­நிதி பேசு­கி­றார்’’ என்று கேட்­டார். நான் சொன்­னேன் ``எனக்கு எந்த அனு­ப­வ­மும் கிடை­யாது, முக்­கி­ய­மாக இந்த மாதிரி அனு­ப­வம் எல்­லாம் எனக்கு கிடை­யா­து’’­என்று.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">(போட்­டோவை காட்­டு­கின்­றார்)</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">யார் காலை­யும் பிடித்து முத­ல­மைச்­ச­ரான அனு­ப­வம் எனக்­குக் கிடை­யாது. சங்­கிக் கூட்­டத்­தி­டம் பயப்­ப­டும் அனு­ப­வம் எனக்­குக் கிடை­யாது. இதைத்­தான் சொன்­னேன். இதில் என்ன தவறு இருக்­கி­றதா? இங்கே கீழே படுத்­தி­ருக்­கி­றார் அல்­லவா தெரி­கி­றதா? இந்­தப் புகைப்­ப­டத்­தைக் காட்­டி­ய­தற்­குத்­தான் இப்­போது கோபித்­துக்­கொண்­டார். இப்­போது என்ன சொல்­கி­றார்? ``ஆமாம் என்னை முத­ல­மைச்­சர் ஆக்­கி­னார்­கள், அத­னால் மரி­யாதை நிமித்­த­மா­கச் சென்று காலில் விழுந்­தேன்’’ என்று கூறி­விட்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">நான் காலில் விழுந்­த­தைத் தவறு சொல்­லவே இல்லை. காலில் விழுந்து அந்த அம்­மா­வைப் பார்த்து ‘நீயா என்னை முத­ல­மைச்­சர் ஆக்­கி­னாய்?’ என்று சொல்லி, அந்த அம்மா காலை­யும் வாரி­விட்­டார்.  அதை­தான் தவறு என்று சொல்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">இந்­தப் பிரச்­சி­னையை நாம் ஆரம்­பித்து வைத்­து­விட்­டோம். இப்­போது சசி­கலா அம்மா வந்­து­விட்­டார்­கள். இப்­போது அவர்­கள் கேட்­கி­றார்­கள், ‘அந்த தம்பி உத­ய­நிதி சொல்­கி­றது சரி­தானே, நீ பதில் சொல்’ என்று அவர்­கள் கேட்க ஆரம்­பித்­து­விட்­டார்­கள்.  இப்­போது நாம் இதி­லி­ருந்து வெளியே வந்­து­வி­டு­வோம். நாம் வெறும் வேடிக்கை மட்­டும் பார்ப்­போம்.. நீங்­கள் கேட்­ட­தற்­கா­கவே நான் காட்­டு­கி­றேன், ஆனால் என்­னைத் திட்­டு­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">நான் உங்­க­ளி­டம் கேட்­டுக்­கொள்­வ­தெல்­லாம், நம் தலை­வரை மீண்­டும் மீண்­டும் சொல்­வது மாதிரி, இந்­தச் சட்­ட­மன்­றத் தேர்­தல் டெல்லி அணியா? தமிழ்­நாடு அணியா? டெல்லி அணி vs தமிழ்­நாடு அணி. டெல்லி அணியை நாம் வீழ்த்­தியே ஆக வேண்­டும். தமிழ்­நாடு அணி நாம் வென்று காட்ட வேண்­டும். அது மிகப்­பெ­ரிய வெற்­றி­யாக இருக்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">திட்­டங்­க­ளைச் சொல்­லுங்­கள்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">நான் உங்­க­ளி­டம் கேட்­டுக்­கொள்­வ­தெல்­லாம் இன்று தேதி 16, தேர்­தல் நாள் 23, இன்­னும் ஒரு வாரம் இருக்­கி­றது. உத­ய­நிதி வந்­தார், வாக்கு கேட்­டார், திட்­டங்­க­ளைப் பற்­றிச் சொன்­னார், வாக்­கு­றுதி கொடுத்­தி­ருக்­கி­றார், கலைந்து சென்­று­விட்­டோம் என்று கலைந்து சென்­று­வி­டக்­கூ­டாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">நான் உங்­க­ளி­டம் கேட்­டுக்­கொள்­வ­தெல்­லாம் அடுத்த ஒரு வாரம், அடுத்த ஆறு நாட்­கள் நீங்­கள் ஒவ்­வொ­ரு­வ­ரும் ஒவ்­வொரு வீடா­கப் சென்று, ஒவ்­வொரு தெரு­வா­கப் சென்று, ஒவ்­வொரு வாக்­கா­ள­ரைச் சந்­தித்து நம் திட்­டங்­க­ளைச் சொல்­லுங்­கள். என்­னென்ன செய்­தி­ருக்­கி­றோம், இந்த ஐந்து வரு­டம் என்ன செய்­தோம்? அடுத்த ஆட்­சிக்கு வந்­தால் என்­னென்ன வாக்­கு­றுதி கொடுத்­தி­ருக்­கி­றோம், என்­னென்ன செய்­வோம்? என்று சொல்­லுங்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">எல்­லா­வற்­றை­யும் விட முக்­கி­யம், மீண்­டும் சங்­கிக் கூட்­டத்­தை­யும் அடி­மைக் கூட்­டத்­தை­யும் தமிழ்­நாட்­டுக்­குள் நுழைய விட்­டு­வி­டக்­கூ­டாது. அப்­படிவிட்­டோம் என்­றால் தமிழ்­நாட்டை மீண்­டும் பின்­னோக்கி இழுத்­துச் சென்­று­வி­டு­வார்­கள் என்­கிற பிரச்­சா­ரத்தை அடுத்த ஒரு வாரம் நீங்­கள் ஒவ்­வொ­ரு­வ­ரை­யும் சந்­தித்­துச் செய்ய வேண்­டும். அப்­ப­டிச் செய்­தீர்­கள் என்­றால், நீங்­கள் சொன்­னது மாதிரி குறைந்­தது ஒரு லட்­சம் வாக்கு வித்­தி­யா­சத்­தில் அண்­ணன் ஓ.பி.எஸ் அவர்­கள் மிகப்­பெ­ரிய வெற்­றி­யைப் பெறு­வார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">உங்­க­ளை­யெல்­லாம் அன்­போடு கேட்­கி­றேன், பண்­போடு கேட்­கி­றேன், பாசத்­தோடு கேட்­கி­றேன், உரி­மை­யோடு கேட்­கி­றேன், உங்­கள் வீட்­டுப் பிள்­ளை­யாக இருந்து கேட்­கி­றேன், தலை­வ­ரின் மக­னாக இருந்து கேட்­கி­றேன், இன்­னும் பெரு­மை­யா­கப்பூரிப்­பா­கச் சொல்ல வேண்­டும் என்­றால்முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞ­ரின் பேர­னாக இருந்து கேட்­கி­றேன். இந்­தப் போடி தொகு­தி­யில் அண்­ணன் பன்­னீர்­செல்­வம் அவர்­க­ளுக்கு உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­தில் வாக்­க­ளித்து மிகப்­பெ­ரிய வெற்­றி­யைத் தேடித் தாருங்­கள். உங்­க­ளின் சட்­ட­மன்ற உறுப்­பி­ன­ராக உங்­க­ளுக்­குத் என்­னென்னதேவையோ அனைத்­தை­யும் நம் முத­ல­மைச்­ச­ரி­டம் சொல்லி இந்­தத் தொகு­திக்கு நிச்­ச­யம் செய்­வார் என்ற வாக்­கு­று­தி­யைக் கொடுக்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">உங்­க­ளின் அன்­புக்­கும் வர­வேற்­புக்­கும் நன்றி.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">கழக இளை­ஞர் அணிச் செய­லா­ள­ரும் துணை முத­ல­மைச்­ச­ரு­மான உத­ய­நிதி ஸ்டாலின் உரை­யாற்­றி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">பங்­கேற்­ற­வர்­கள்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">முன்­னாள் முத­ல­மைச்­சர் ஓ.பன்­னீர்­செல்­வம், மாவட்­டக் கழ­கச் செய­லா­ளர் தங்க தமிழ்ச்­செல்­வன், முன்­னாள் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் ஓ.பி.ரவீந்­தி­ர­நாத், தொகுதிமாவட்ட நிர்­வா­கி­கள் செந்­தில்­மு­ரு­கன், திருக்­கண்­ணன், சுரேஷ், சங்­கர், தேவேந்­தி­ரன், ராஜா­ர­மேஷ், முன்­னாள் சட்­ட­மன்ற உறுப்­பி­னர் போடி லட்­சு­ம­ணன், தொகு­திப் பார்­வை­யா­ளர் குழந்­தை­வேலு, ஒன்­றி­ய–­ந­க­ர–­பே­ரூர் கழ­கச் செய­லா­ளர்­கள்  செல்­வ­ராஜ், ரத்­தி­ன­ச­பா­பதி, ஐயப்­பன், சக்­க­ர­வர்த்தி, முரு­கே­சன், புரு­ஷோத்­த­மன், ராஜேந்­தி­ரன், செல்­வம், திலீப்­கு­மார், ஓ.ஏ.முரு­கன், கவி­ய­ரசு, செல்­வ­ராஜ், பேரூர் மன்­றத் தலை­வர் மிதுன் சக்­க­ர­வர்த்தி, மாவட்ட இளை­ஞர் அணி அமைப்­பா­ளர் ஆஜீப்­கான், இளை­ஞர் அணி துணை அமைப்­பா­ளர்­கள் ஜெயக்­கு­மார், விஜ­யக்­கு­மார், இளை­ஞர் அணி உள்­ளிட்ட அனைத்­துச் சார்பு அணி­க­ளைச் சேர்ந்த நிர்­வா­கி­கள், மதச்­சார்­பற்ற முற்­போக்­குக் கூட்­டணி கட்­சி­யைச் சேர்ந்த நிர்­வா­கி­கள்  உள்­பட பல­ரும் கலந்­து­கொண்­ட­னர்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>