<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="20/04/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,285,958,1495" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Sun Apr 19 2026 12:41:47 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260420T000000+5.30" edition.name="CBE" edition.area="CBE" position.section="20042026-CBE-09" position.sequence="09" ex-ref="20042026-CBE-09.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="28">காங்­கே­யத்­தில் அமைச்­சர் மு.பெ.சாமி­நா­தன் அவர்­களை ஆத­ரித்து</lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="28">துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம்!</lang>
	</hl2>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="Udayasir184_09_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="2" source="Udayasir1841_09_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10.5">திருப்­பூர்,ஏப். 20 –</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10.5">திருப்­பூர் மாவட்­டம், காங்­கே­யத்­தில் கழக இளை­ஞர் அணிச் செய­லா­ள­ரும் துணை முத­ல­மைச்­ச­ரு­மான உத­ய­நிதி ஸ்டாலின் காங்­கே­யம் சட்­ட­மன்­றத் தொகுதி வேட்­பா­ளர் மு.பெ.சாமி­நா­தன், தாரா­பு­ரம் சட்­ட­மன்­றத் தொகுதி வேட்­பா­ளர் டாக்­டர் டி.இந்­தி­ராணி ஆகி­யோ­ருக்கு உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­தில் வாக்கு சேக­ரித்து பிரச்­சா­ரம் மேற்­கொண்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10.5">அப்­போது அவர், ``தொகுதி மறு­வ­ரை­ய­றை­யைச் சரி­யாக அமல்­ப­டுத்­த­வில்லை என்­றால், தமிழ்­நாட்­டின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் எண்­ணிக்கை வெகு­வா­கக் குறை­யும். 59 வர வேண்­டி­ய­தற்கு பதில் 47 தான் கொடுப்­போம் என்று ஒன்­றிய பா.ஜ.க அரசு அடம் பிடிக்­கி­றது. இப்­பொ­ழுது நிதி, திட்­டம் என நம் உரி­மை­கள் எல்­லா­வற்­றை­யும் பறித்­துக்­கொண்டு இருக்­கி­றார்­கள். அத­னால்­தான் நம் தமிழ்­நாடு முத­ல­மைச்­சர் நம் தலை­வர் சொல்­கிற மாதிரி, இந்­தத் தேர்­தல் டெல்­லிக்­கும் தமிழ்­நாட்­டுக்­கு­மான தேர்­தல். டெல்லி அணியை ஓட ஓட விரட்ட வேண்­டும். தமிழ்­நாடு அணி நாம் வென்று காட்ட வேண்­டும்’’ என்று உங்­க­ளை­யெல்­லாம் அன்­போடு கேட்­கி­றேன்’’  என்று குறிப்­பிட்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10.5">கழக இளை­ஞர் அணிச் செய­லா­ள­ரும் துணை முத­ல­மைச்­ச­ரு­மான உத­ய­நிதி ஸ்டாலின் ஆற்­றிய உரை­ வரு­மாறு:
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10.5">முத­லில் இவ்­வ­ளவு சிறப்­பான, அன்­பான, எழுச்­சி­யான வர­வேற்­பைக் கொடுத்­தி­ருக்­கக்­கூ­டிய உங்­கள் அனை­வ­ருக்­கும் என் நன்­றி­யைத் தெரி­வித்­துக் கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">உத­ய­சூ­ரி­யன் சின்­னம்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10.5">இந்த வர­வேற்­பைப் பார்க்­கும்­போது ஒன்று மட்­டும் நிச்­ச­ய­மா­கத் தெரி­கி­றது. காங்­கே­யம் தொகு­தி­யி­லும், தாரா­பு­ரம் தொகு­தி­யி­லும் நம் வெற்றி உறுதி செய்­யப்­பட்­டி­ருக்­கி­றது. நான் உங்­க­ளை­யெல்­லாம் நம் காங்­கே­யத்­தில் நம் வெற்றி வேட்­பா­ளர், நம் அமைச்­சர் அண்­ணன் மு.பெ.சாமி­நா­தன் அவர்­க­ளுக்­கும், தாரா­பு­ரம் வெற்றி வேட்­பா­ளர் சகோ­தரி மருத்­து­வர் இந்­தி­ராணி அவர்­க­ளுக்­கும் உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­தில் நீங்­கள் அனை­வ­ரும் வாக்­க­ளித்து மிகப்­பெ­ரிய வெற்­றி­யைத் தேடித் தர வேண்­டும் என்று உங்­களை எல்­லாம் வேண்டி விரும்பி கேட்­டுக்­கொள்­வ­தற்­கா­கத்­தான் வந்­தேன்.  ஆனால், இங்கே வந்து பார்த்த பிற­கு­தான் தெரி­கி­றது, நீங்­கள் எல்­லாம் ஏற்­க­னவே முடி­வெ­டுத்­து­விட்­டீர்­கள் என்று. உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­தில் வாக்­க­ளித்து, தாரா­பு­ரம் மற்­றும் காங்­கே­யத்­தில் சென்ற முறை வாங்­கி­யதை விட அதி­க­மான வாக்கு வித்­தி­யா­சத்­தில் வெற்றி பெற வைக்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10.5">நேற்று மதுரை, தேனி, திண்­டுக்­கல் மாவட்­டங்­க­ளில் எல்லா தொகு­தி­க­ளி­லும் பிரச்­சா­ரம் செய்து விட்டு இன்று காலை­யில்­தான் திருப்­பூர் மாவட்­டத்­துக்­குள் நுழை­கி­றேன். திருப்­பூர் மாவட்­டத்­தில் முதல் நிகழ்ச்சி. உங்­க­ளின் எழுச்­சி­யை­யும் உற்­சா­கத்­தை­யும் பார்க்­கும்­பொ­ழுது, இந்­தத் திருப்­பூர் மீண்­டும் தி.மு.க–வின் கோட்டை என்­பதை நிரூ­பிக்­கப் போகி­றீர்­கள் என்று தெரி­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10.5"> </lang>
<lang  class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">உழைப்­புக்கு எடுத்­துக்­காட்டு</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10.5">இந்­தத் திருப்­பூர் மாவட்­டம் எப்­பொ­ழு­துமே தொழி­லா­ளர்­கள் நிறைந்த மாவட்­டம். தொழில் நிறு­வ­னங்­கள் அதி­க­மாக இருக்­கக்­கூ­டிய மாவட்­டம். உழைப்­புக்­கும் தொழில் வளர்ச்­சிக்­கும் எடுத்­துக்­காட்­டாக இருக்­கக்­கூ­டிய மாவட்­டம் இந்­தத் திருப்­பூர் மாவட்­டம். இந்­தத் திருப்­பூர் மாவட்­டத்­தின் வளர்ச்சி அடுத்த கட்­டத்­துக்­குச் செல்ல வேண்­டும் என்­றால், மீண்­டும் நம் திரா­விட மாடல் ஆட்சி அமைய வேண்­டும். சங்­கிக் கூட்­டத்தை உள்ளே விட்­டோம் என்­றால், இந்த மாவட்­டத்­தின் வளர்ச்­சி­யைக் கெடுத்­து­வி­டு­வார்­கள், அடி­யோடு நிறுத்­தி­வி­டு­வார்­கள். தொழில் வளர்ச்சி அதி­க­ரிக்க வேண்­டும் என்­றால், தொழி­லா­ளர்­க­ளின் நலன் பாது­காக்­கப்­பட வேண்­டும் என்­றால், அது நம் திரா­விட முன்­னேற்­றக் கழக ஆட்­சி­யால் மட்­டும்­தான் முடி­யும் என்­பதை நாம் அடிக்­கடி உணர்த்­திக் காட்­டி­யி­ருக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10.5">இதை உணர்ந்து திருப்­பூர் மாவட்ட மக்­கள் கழ­கத்­துக்கு, உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­துக்கு, காங்­கே­யத்­தில் அண்­ணன் மு.பெ.சாமி­நா­தன் அவர்­க­ளுக்கு உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­தி­லும், தாரா­பு­ரத்­தில் சகோ­தரி மருத்­து­வர் இந்­தி­ராணி அவர்­க­ளுக்கு உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­தி­லும் வாக்­க­ளித்து இந்த இரண்டு தொகு­தி­யின் வெற்­றியை நீங்­கள் உறுதி செய்ய வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">சிறப்­பா­கப் பணி­யாற்­றி­ய­வர்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10.5">அண்­ணன் சாமி­நா­தன் அவர்­க­ளைப் பற்றி நான் உங்­க­ளி­டம் அதி­க­மா­கச் சொல்­லத் தேவை­யில்லை. அவரை அறி­மு­கப்­ப­டுத்த வேண்­டிய அவ­சி­ய­மில்லை. உங்­கள் அனை­வ­ருக்­கும் தெரிந்­த­வர்­தான் அண்­ணன்  சாமி­நா­தன் அவர்­கள். அமைச்­ச­ராக இரண்டு முறை மிகச் சிறப்­பா­கப் பணி­யாற்­றி­ய­வர். இந்த காங்­கே­யம் தொகு­தி­யின் வளர்ச்­சிக்­குப் பல்­வேறு திட்­டங்­களை இந்­தப் பகு­திக்­குக் கொண்டு வந்­த­வர். 40 ஆண்டு காலம் கழ­கத்­தில் இளை­ஞர் அணி­யில் இணைந்து படிப்­ப­டி­யாக முன்­னேறி இன்று மாவட்­டக் கழ­கச் செய­லா­ள­ராக, இப்­பொ­ழுது கழ­கத்­தின் துணைப் பொதுச்­செ­ய­லா­ள­ரா­கத் தன் பணி மூலம் ஒவ்­வொரு படி­யாக முன்­னேறி வரு­ப­வர். கழ­கப் பணி, மக்­கள் பணி இரண்­டி­லும் சிறப்­பா­கச் செயல்­ப­டக் கூடி­ய­வர்­தான் அண்­ணன் வெள்­ளக்­கோ­வில் சாமி­நா­தன் அவர்­கள். எப்­பொ­ழு­தும் சிரித்த முகத்­தோடு, மகிழ்ச்­சி­யோடு யாரைப் பார்த்­தா­லும் பேசு­ப­வர். வெறும் தேர்­த­லுக்­குத் தேர்­தல் வந்து உங்­க­ளைப் பார்க்­கக்­கூ­டி­ய­வர்­கள் கிடை­யாது இவர்­கள் இரண்டு பேரும். என்­றைக்­கும் உங்­க­ளோடு இருக்­கக்­கூ­டி­ய­வர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10.5">வரு­டம் முழு­வ­தும் உங்­க­ளோடு, உங்­க­ளின் சுக துக்க நிகழ்ச்சி அனைத்­தி­லும் பங்­கேற்று உங்­கள் குடும்­பத்­தில் ஒரு­வ­ராக இருக்­கக்­கூ­டி­ய­வர்­கள்­தான் அண்­ணன் சாமி­நா­தன் அவர்­க­ளும், சகோ­தரி இந்­தி­ராணி அவர்­க­ளும். இவர்­களை இந்த முறை சட்­ட­மன்­றத்­துக்கு அனுப்பி வையுங்­கள். அதைத் தவ­ற­விட்­டு­வி­டா­தீர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">காங்­கே­யம் திட்­டங்­கள்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10.5">அண்­ணன் சாமி­நா­தன் அவர்­களை வெற்றி பெற வைத்­தீர்­கள் என்­றால் இந்த காங்­கே­யத்­தின் வளர்ச்­சியை நிச்­ச­யம் அடுத்த கட்­டத்­துக்கு எடுத்­துச் செல்­வார். இந்த காங்­கே­யத்­துக்­குப் பல்­வேறு திட்­டங்­களை, சாத­னை­களை நாம் செய்­தி­ருக்­கி­றோம். எடுத்­துக்­காட்­டிற்­குச் சில­வற்றை மட்­டும் குறிப்­பிட விரும்­பு­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10.5">20 கோடி ரூபாய் மதிப்­பீட்­டில் மாவட்­டத் தலைமை மருத்­து­வ­ம­னையை, தரம் உயர்த்­திக் கொடுத்­தி­ருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10.5">வட்­ட­ம­லைக்­கரை ஓடை அணைக்­குச் சுமார் 22 ஆண்­டு­க­ளுக்­குப் பிறகு பி.ஏ.பி (PAP) திட்­டத்­தின் கீழ் 15 கோடி ரூபாய் மதிப்­பீட்­டில் தண்­ணீர் கொண்டு வரப்­பட்­டி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10.5">காவேரி ஆற்று நீரை வள்­ளி­யி­றைச்­சல் மற்­றும் மேட்­டுப்­பா­ளை­யம் பகு­தி­க­ளுக்­குப் புதிய கூட்­டுக் குடி­நீர்த் திட்­டத்­தைக் கொண்டு வந்­தி­ருக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10.5">சென்­னி­மலை ஒன்­றி­யத்­துக்­குள் 434 ஊர­கக் குடி­யி­ருப்­பு­க­ளுக்கு 18 கோடி ரூபாய் மதிப்­பீட்­டில் காவிரி கூட்­டுக் குடி­நீர்த் திட்­டம் கொண்டு வந்­தி­ருக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10.5">திருப்­பூர் மாவட்­டத்­தில் இனாம் நிலங்­க­ளில் ஏற்­பட்­டுள்ள பூஜ்­ஜிய மதிப்­புக் குறை­க­ளைச் சரி செய்­யச் சிறப்பு மாவட்ட அலு­வ­லர் நிய­ம­னம் செய்­யப்­பட்­டி­ருக்­கி­றார்.  கோயில் நிலங்­க­ளில் உள்ள பிரச்­சி­னை­க­ளும் நிச்­ச­யம் தீர்க்­கப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10.5">வெள்­ளக்­கோ­வில் நக­ரப் பகு­தி­யில் 6 கோடி ரூபாய் மதிப்­பீட்­டில் கழிவு நீர் சுத்­தி­க­ரிப்பு மற்­றும் மறு­சு­ழற்சி நிலை­யம்.  வாரச் சந்­தையை மேம்­ப­டுத்த 4 கோடி ரூபாய் ஒதுக்­கீடு செய்­யப்­பட்டு இன்று புன­ர­மைப்­புப் பணி­கள் நடை­பெற்று வரு­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10.5">சிவன்­ம­லை­யில் மலைக்­கோ­யி­லுக்­குச் செல்­லப் புதிய தார் சாலை அமைத்­துக் கொடுத்­தி­ருக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10.5">அம­ரா­வதி ஆற்­றுக்கு அருகே 3 கோடி ரூபாய் மதிப்­பீட்­டில் புதிய அணை கட்­டிக் கொடுத்­தி­ருக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10.5">50 லட்­சம் ரூபாய் மதிப்­பீட்­டில் பிரம்­மாண்­ட­மான காங்­கே­யம் காளை சிலை வைத்­துக்­கொ­டுத்­தி­ருக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10.5">தாச­வ­நா­யக்­கன்­பட்­டி­யில் புதிய துணைச் சுகா­தார நிலை­யம் கட்­டிக் கொடுத்­தி­ருக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">வெற்றி பெறச் செய்­யுங்­கள்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10.5">இப்­ப­டிப் பல்­வேறு திட்­டங்­களை இந்­தப் பகு­திக்­குச் செய்து கொடுத்­தி­ருக்­கி­றோம். அந்த உரி­மை­யில் உங்­க­ளி­டம் மீண்­டும் காங்­கே­யத்­தில் உத­ய­சூ­ரி­யன் உதிக்க வேண்­டும். அதற்கு அண்­ணன் வெள்­ளக்­கோ­வில் சாமி­நா­தன் அவர்­க­ளுக்கு உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­தில் வாக்­க­ளித்து மிகப்­பெ­ரிய வெற்­றி­யைத் தேடித் தர வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10.5">நம் தாரா­பு­ரம் வேட்­பா­ளர் மருத்­து­வர் இந்­தி­ராணி அவர்­கள். கடந்த முறை இங்கே நம் அமைச்­சர் கயல்­விழி செல்­வ­ராஜ் அவர்­கள் வெற்றி பெற்­றார்­கள். அதை விட அதி­க­மான வாக்கு வித்­தி­யா­சத்­தில் நம் வெற்றி வேட்­பா­ளர் இந்­தி­ராணி அவர்­களை, ஒரு மருத்­து­வர், கழ­கக் குடும்­பத்­தைச் சேர்ந்­த­வர், படித்­த­வர். இவ­ரின் சொந்த சகோ­தரி அக்கா சாந்­த­கு­மாரி இந்­தத் தொகு­தி­யின் சட்­ட­மன்ற உறுப்­பி­ன­ராக ஏற்­க­னவே மக்­கள் பணி­யாற்­றி­யி­ருக்­கி­றார். இந்­தி­ராணி அவர்­கள் மாவட்ட மருத்­து­வர் அணி அமைப்­பா­ள­ரா­கச் சிறப்­பா­கச் செயல்­பட்­ட­தால் இன்று நம் தலை­வர் அவர்­கள் இந்த வாய்ப்பை அவர்­க­ளுக்­குக் கொடுத்­தி­ருக்­கி­றார்­கள். நீங்­கள் கூப்­பிட்ட குர­லுக்கு ஓடோடி வந்து உங்­க­ளுக்­குப் பணி செய்­யக் காத்­தி­ருக்­கி­றார்­கள் இந்த இரண்டு பேரும். இவர்­கள் இரண்டு பேரை­யும் வெற்றி பெற ச் செய்­யுங்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10.5">இப்­பொ­ழுது இந்­தத் தொகு­திக்கு என்­னென்ன செய்­தி­ருக்­கி­றோம் என்று கூறி­விட்­டேன். இந்த ஐந்து வரு­டம் தமிழ்­நாட்­டுக்கு நம் திரா­விட மாடல் அரசு என்­னென்ன திட்­டங்­கள் கொண்டு வந்­தி­ருக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">கட்­ட­ண­மில்லா பேருந்து திட்­டம்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10.5">ஆட்சி அமைந்த உடனே நம் முத­ல­மைச்­சர் போட்ட முதல் கையெ­ழுத்து, மக­ளி­ருக்­குக் கட்­ட­ண­மில்லா பேருந்து திட்­டம். ஒவ்­வொரு மக­ளி­ரும் மாதம் 900 வரை சேமித்­தி­ருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10.5">அர­சுப் பள்­ளிக்­குச் சென்­றால், முத­ல­மைச்­சர் காலை உண­வுத் திட்­டம். கல்­லூ­ரிக்­குப் படிக்­கச் சென்­றால் கல்வி ஊக்­கத்­தொகை மாதம் 1,000 ரூபாய். இப்­பொ­ழுது சமீ­பத்­தில் மூன்று மாதங்­க­ளுக்கு முன்பு 10 லட்­சம் கல்­லூரி மாணவ மாண­வி­க­ளுக்கு இல­வச மடிக்­க­ணி­னித் திட்­டத்தை அறி­வித்து, முத­ல­மைச்­சர் கொடுத்­தி­ருக்­கி­றார்­கள். இப்­ப­டிப் பல்­வேறு திட்­டங்­களை நிறை­வேற்­றி­யி­ருக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10.5">கலை­ஞர் மக­ளிர் உரி­மைத் தொகைத் திட்­டம். இன்று ஒவ்­வொரு மாத­மும் ஒரு கோடியே 31 லட்­சம் மக­ளிர், மக­ளிர் உரி­மைத் தொகை மூலம் பயன்­பெற்று வரு­கி­றார்­கள். இந்த மக­ளிர் உரி­மைத் தொகைத் திட்­டத்தை நிறுத்­து­வ­தற்கு அ.தி.மு.க–வும் பா.ஜ.க–வும் முயற்சி செய்­தார்­கள். தேர்­தலை கார­ணங்­காட்டி நீதி­மன்­றத்­துக்­குச் சென்று உரி­மைத் தொகையை நிறுத்­து­வ­தற்கு முயற்சி எடுத்­தார்­கள். ஆனால் நம் தலை­வர் முத­ல­மைச்­சர் என்ன செய்­தார், 1,000 ரூபாய் கொடுப்­பதை நிறுத்த முயற்சி செய்­கி­றாயா, நான் 5,000 ரூபாய் கொடுப்­பேன் என்ன செய்­வாய் பார்ப்­போம் என்று கொடுத்­தார்.  பிப்­ர­வரி, மார்ச், ஏப்­ரல் என மூன்று மாதங்­க­ளுக்­குச் சேர்த்து 3,000, கோடை­கால சிறப்பு நிதி 2,000 என்று 5,000 ரூபாய் நம் முத­ல­மைச்­சர் அவர்­கள் கொடுத்­தார்­கள். முத­ல­மைச்­சர் காலை­யில் 6 மணிக்கு மக­ளி­ரு­டைய வங்­கிக் கணக்­கில் பணத்­தைப் போட்­டு­விட்­டார்­கள். மக­ளிர் என்ன செய்­தீர்­கள், 9 மணிக்கு வங்கி திறப்­ப­தற்கு முன்­னா­டியே சென்று பணத்தை எடுத்­து­விட்­டீர்­கள். ஏனென்­றால் மோடி அரசு உரி­மைத் தொகை­யில் கை வைத்­து­வி­டப் போகி­றார்­கள், வங்­கிக் கணக்­கில் குறைந்­த­பட்ச இருப்பு இல்லை என்று சொல்லி மோடி அரசு அந்­தப் பணத்தை எடுத்­து­வி­டு­வார்­கள் என்று கவ­ன­மா­கச் சென்று அன்­றைக்­குக் காலை­யி­லேயே 9 மணிக்­கெல்­லாம் பணத்தை எடுத்­து­விட்­டீர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">புதிய வாக்­கு­று­தி­கள்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10.5">சில வாக்­கு­று­தி­களை இந்த முறை நம் முத­ல­மைச்­சர் கொடுத்­தி­ருக்­கி­றார். மக­ளிர் உரி­மைத் தொகை திட்­டம் 1,000 ரூபாய் கிடை­யாது அதை உயர்த்தி 2,000 ரூபாய் தரு­வோம் என்று முத­ல­மைச்­சர் வாக்­கு­றுதி கொடுத்­தி­ருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10.5">முத­ல­மைச்­சர் காலை உண­வுத் திட்­டம் ஐந்­தாம் வகுப்பு வரை கிடை­யாது, எட்­டாம் வகுப்பு வரை விரி­வு­ப­டுத்­தப்­ப­டும் என்று சொல்­லி­யி­ருக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10.5">கல்வி ஊக்­கத் தொகை 1,000 ரூபாய் கிடை­யாது, 1,500–ஆக உயர்த்­தப்­ப­டும் என்று சொல்­லி­யி­ருக்­கி­றோம். முதி­யோர் உத­வித்­தொகை 1,200–லிருந்து 2,000 ரூபா­யாக உயர்த்­திக் கொடுப்­போம் என்று வாக்­கு­றுதி கொடுத்­தி­ருக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10.5">அடுத்த 5 வரு­டத்­தில் 10 லட்­சம் கலை­ஞர் கனவு இல்­லம் கட்­டப்­பட்டு யாருக்­கெல்­லாம் வீடு இல்­லையோ அவர்­க­ளுக்கு வீடு கட்­டித் தரு­வோம் என்று சொல்­லி­யி­ருக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10.5">எல்­லா­வற்­றை­யும் விட முக்­கி­ய­மாக ஒரு வாக்­கு­றுதி கொடுத்­தி­ருக்­கி­றோம் உங்­க­ளுக்­குத் தெரி­யும். ஆட்சி அமைந்த உடனே முத­ல­மைச்­சர் அவர்­கள் அனைத்து மக­ளிர் கைக­ளி­லும் 8,000 ரூபாய் முத­ல­மைச்­சர் ஒப்­ப­டைத்­து­வி­டு­வார்­கள். மக­ளிர் அவர்­கள் வீட்­டுக்கு என்ன மின்­சா­த­னப் பொருட்­கள் தேவை என்­பதை அவர்­களே முடிவு செய்­யட்­டும் என்று நம் முத­ல­மைச்­சர் அவர்­கள் அந்­தப் பொறுப்பை உங்­க­ளி­டம் ஒப்­ப­டைத்­து­விட்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10.5">நம் திரா­விட மாடல் ஆட்சி அமை­யப்­போ­வது உறுதி. அதற்கு மேலும் வலு சேர்க்­கிற வித­மாக அண்­ணன் சாமி­நா­தன் அவர்­க­ளை­யும் சகோ­தரி இந்­தி­ராணி அவர்­க­ளை­யும் அதி­க­மான வாக்கு வித்­தி­யா­சத்­தில் வெற்­றி­பெற வைத்­துச் சட்­ட­மன்­றத்­துக்கு அனுப்ப வேண்­டும் என்று கேட்­டுக் கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10.5">முதல் இடத்­துக்கு வர வேண்­டும்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10.5">23–ஆம் தேதி வாக்­குச்­சா­வ­டிக்­குச் சென்­றீர்­கள் என்­றால் வாக்­குப் பெட்­டி­யில் ஒரே பெட்­டி­தான், காங்­கே­யத்­தில் ஒரே பெட்டி அதில் இரண்­டா­வது இடம் அண்­ணன் மு.பெ.சாமி­நா­த­னின் பெயர் இருக்­கும். அதற்­குப் பக்­கத்­தில் உத­ய­சூ­ரி­யன் சின்­னம் இருக்­கும். அதில் வாக்­க­ளித்து வாக்கு எண்­ணிக்­கை­யில் முதல் இடத்­துக்கு வர வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10.5">அதே மாதிரி தாரா­பு­ரத்­தில் சகோ­தரி இந்­தி­ராணி அவர்­க­ளுக்கு வாக்­க­ளித்து அவர்­கள் வாக்­குப் பெட்­டி­யி­லேயே முதல் எண்­தான். இன்­னும் சுல­பம். தாரா­பு­ரத்­தில் வாக்­குப் பெட்­டி­யில் முதல் பெயர் சகோ­தரி இந்­தி­ரா­ணி­யின் பெயர். அதற்­குப் பக்­கத்­தில் உத­ய­சூ­ரி­யன் சின்­னம் அதில் வாக்­க­ளித்து, இந்த இரண்டு பேரை­யும் அதி­க­மான வாக்கு வித்­தி­யா­சத்­தில் நீங்­கள் வெற்­றி­பெற வைக்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">உல­கப் புகழ்­பெற்ற புகைப்­ப­டம்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10.5">நீங்­கள் அர­சி­ய­லில் ஒரு முரட்டு பக்­த­ரைப் பார்த்­தி­ருப்­பீர்­கள், முரட்­டுத் தொண்­டர் கேள்­விப்­பட்­டி­ருப்­பீர்­கள், ஆனால் ஒரு முரட்டு அடி­மை­யைப் பார்த்­தி­ருக்­கி­றீர்­களா.இவ்­வ­ள­வு­தான் விஷ­யம் முடிந்­தது. இதைத்­தான் சொன்­னேன். இதைச் சொன்­ன­தற்­குத்­தான் எடப்­பாடி பழ­னி­சாமி அவர்­கள் என்ன சொல்­லி­விட்­டார் என்­றால் உத­ய­நி­திக்கு எந்த அனு­ப­வ­மும் கிடை­யாது அவ­ருக்கு என்ன அனு­ப­வம் இருக்­கி­றது என்று கேட்­டார். நான் சொன்­னேன் ஆமாம் எனக்கு அனு­ப­வம் கிடை­யாது தான். இதோ இந்த அனு­ப­வம் எனக்­குக் கிடை­யாது என்று சொன்­னேன். இந்­தப் புகைப்­ப­டத்­தைப் பார்க்­கத்­தான் அவ்­வ­ளவு ஆசைப்­பட்­டீர்­களா. இது பெரிய உல­கப் புகழ்­பெற்ற புகைப்­ப­டம் ஆகி­விட்­டது இப்­பொ­ழுது. நான் காட்­ட­வில்லை நீங்­கள் கேட்­ட­த­னால் காண்­பித்­தேன். அவர் என்னை இப்­பொ­ழுது கன்­னா­பின்­னா­வென்று திட்­டு­கி­றார். செத்­துப் போயி­ருக்­க­லாம் என்­கி­றார் என்னை. என் உயிரை வாங்­கு­கி­றான் என்­கி­றார்.  இது எனக்­குத் தேவையா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">மாநில உரி­மை­கள் பறிப்பு</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10.5">நம் தலை­வர் சொல்­கிற மாதிரி இதை மட்­டும் ஞாப­கம் வைத்­துக்­கொள்­ளுங்­கள் வரும் சட்­ட­மன்­றத் தேர்­தல் தமிழ்­நாடு வெர்­சஸ் டெல்­லிக்­கும் நடப்­பது. டெல்­லியை இந்த முறை வீழ்த்­தி­யாக வேண்­டும். நான் இன்று இவ்­வ­ளவு திட்­டங்­கள் சொன்­னேன் அல்­லவா, யோசித்­துப்­பா­ருங்­கள் இதற்­கெல்­லாம் ஒன்­றிய பா.ஜ.க அரசு எந்த விதத்­தி­லா­வது நமக்கு உதவி இருக்­கி­றதா. தமிழ்­நாட்­டுக்­கான திட்­டங்­கள் கொடுக்­கி­றார்­களா. நாம் கேட்­கிற நிதி­யைக் கொடுக்­கி­றார்­களா எது­வுமே கொடுப்­பது இல்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10.5">தமிழ்­நாட்­டைத் தொடர்ந்து டெல்லி புறக்­க­ணித்­துக்­கொண்­டி­ருக்­கி­றது. ஒன்­றிய பா.ஜ.க அரசு தமிழ்­நாட்­டைத் தொடர்ந்து புறக்­க­ணிக்­கி­றது. கல்வி நிதி கொடுப்­பது இல்லை. தமிழ்­நாட்­டின் உரி­மையை ஒவ்­வொரு மாநில உரி­மை­க­ளா­கப் பறித்­துக்­கொண்டு இருக்­கி­றார்­கள். இப்­பொ­ழுது பார்த்­தீர்­கள் என்­றால் நேற்று தொகுதி மறு­வ­ரை­ய­றையை கொண்டு வரு­வோம் என்­கி­றார்­கள். இந்­தத் தொகுதி மறு­வ­ரை­ய­றை­யைச் சரி­யாக அமல்­ப­டுத்­த­வில்லை என்­றால், தமிழ்­நாட்­டின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் எண்­ணிக்கை வெகு­வா­கக் குறை­யும். 59 வர வேண்­டி­ய­தற்கு பதில் 47 தான் கொடுப்­போம் என்று ஒன்­றிய பா.ஜ.க அரசு அடம் பிடிக்­கி­றது. இப்­பொ­ழுது நிதி, திட்­டம் என நம் உரி­மை­கள் எல்­லா­வற்­றை­யும் பறித்­துக்­கொண்டு இருக்­கி­றார்­கள். அத­னால்­தான் நம் தமிழ்­நாடு முத­ல­மைச்­சர் நம் தலை­வர் சொல்­கிற மாதிரி, இந்­தத் தேர்­தல் டெல்­லிக்­கும் தமிழ்­நாட்­டு­கு­மான தேர்­தல். டெல்லி அணியை ஓட ஓட விரட்ட வேண்­டும். தமிழ்­நாடு அணி நாம் வென்று காட்ட வேண்­டும் என்று உங்­க­ளை­யெல்­லாம் அன்­போடு கேட்­கி­றேன். பண்­போடு கேட்­கி­றேன், பாசத்­தோடு கேட்­கி­றேன், உரி­மை­யோடு கேட்­கி­றேன், உங்­கள் வீட்­டுப் பிள்­ளை­யாக இருந்து கேட்­கி­றேன், இன்­னும் பெரு­மை­யா­கச் சொல்ல வேண்­டும் என்­றால் தலை­வ­ரின் மக­னாக இருந்து கேட்­கி­றேன், இன்­னும் பெரு­மை­யா­கப் பூரிப்­பா­கச் சொல்ல வேண்­டும் என்­றால் முத்­த­மி­ழ­றி­ஞர் டாக்­டர் கலை­ஞ­ரின் பேர­னாக இருந்து கேட்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10.5">அண்­ணன் சாமி­நா­தன் அவர்­க­ளுக்கு காங்­கே­யம் தொகு­தி­யி­லும், தாரா­பு­ரம் தொகு­தி­யில் சகோ­தரி இந்­தி­ராணி அவர்­க­ளுக்­கும் உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­தில் வாக்­க­ளித்து அதி­க­மான வாக்கு வித்­தி­யா­சத்­தில் வெற்­றி­பெற வைத்­துச் சட்­ட­மன்­றத்­துக்கு அனுப்­புங்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10.5">உங்­க­ளின் வர­வேற்­புக்கு நன்றி நன்றி நன்றி.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10.5">இவ்­வாறு கழக இளை­ஞர் அணிச் செய­லா­ள­ரும் துணைமுத­ல­மைச்­ச­ரு­மான உத­ய­நிதி ஸ்டாலின் உரை­யாற்­றி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">பங்­கேற்­ற­வர்­கள்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10.5">அமைச்­சர் மு.பெ.சாமி­நா­தன், தாரா­பு­ரம் வேட்­பா­ளர் மருத்­து­வர் இந்­தி­ராணி, மண்­ட­லப் பொறுப்­பா­ளர் சக்­க­ர­பாணி, மாவட்­டக் கழ­கச் செய­லா­ளர் பத்­ம­நா­பன், அமைச்­சர் கயல்­விழி செல்­வ­ராஜ், வடக்கு மாவட்­டத் தொண்­டர் அணி அமைப்­பா­ளர் கணேஷ், காங்­கே­யம் தொகு­திப் பார்­வை­யா­ளர் கண்­ணப்­பன்,  முத்­துக்­கு­மார், பிர­பா­வதி பெரி­ய­சாமி, கே.எஸ்.தன­சே­கர், பொதுக்­குழு உறுப்­பி­னர்­கள் கரு­ணா­க­ரன், சிவ­கு­மார், கார்த்­தி­கே­யன், மெய்­யப்­பன், ஒன்­றிய நக­ரப் பகு­திப் பேரூர்க் கழ­கச் செய­லா­ளர்­கள் பிரபு, செல்­வம் (எ) தமிழ்­செல்­வன், கரு­ணைப் பிர­காஷ், சிவா­னந்­தம், சந்­தி­ர­சே­க­ரன், சிவப்­பி­ர­காஷ், செந்­தில்­கு­மார், துரை­சாமி, தமி­ழ­ரசு, பழ­னி­சாமி, மலை­யப்­பன், முரு­கா­னந்­தம், ராம­சாமி, குப்­பு­சாமி, அன்­ப­ரசு, பன்­னீர்­செல்­வம், தண்­ட­பாணி, சுரேஷ்,  மாவட்ட இளை­ஞர் அணித் துணை அமைப்­பா­ளர்­கள்  யுவ­ராஜ், செல்­வ­ராஜ், வீர­காளி வெங்­க­டேஷ், ரவிச்­சந்­தி­ரன், இளை­ஞர் அணி உள்­ளிட்ட அனைத்­துச் சார்பு அணி­க­ளைச் சேர்ந்த நிர்­வா­கி­கள், மதச்­சார்­பற்ற முற்­போக்­குக் கூட்­ட­ணிக் கட்­சி­யைச் சேர்ந்த நிர்­வா­கி­கள் உள்­பட பல­ரும் கலந்­து­கொண்­ட­னர்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>