<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="20/04/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,343,493,1028" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="4"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Mon Apr 20 2026 03:44:41 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260420T000000+5.30" edition.name="CHN" edition.area="CHN" position.section="20042026-CHN-13" position.sequence="13" ex-ref="20042026-CHN-13.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="22">தமிழ்நாட்டின் உரிமைகளைப் பறிக்க நினைக்கும் </lang>
	<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="22"> </lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="32">பா.ஜ.க.வின் அரசியல் நாடகத்தை மக்கள் புரிந்து கொள்வார்கள்! </lang>
	</hl2>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup584503_13_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="2" source="Ragupathy2_13_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="9.8">புதுக்­கோட்டை - ஏப்.20–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="9.8">நாடா­ளு­மன்­றத்­தில் கொண்­டு­வந்த தொகுதி மறு­வ­ரை­யறை சட்ட மசோதா உள்­ளிட்ட மூன்று சட்ட மசோதா தோல்­வி­ய­டைந்­தது குறித்து புதுக்­கோட்டை கீழ இரண்­டாம் வீதி­யில் உள்ள தமிழ்­நாடு இயற்கை வளங்­கள் துறை அமைச்­ச­ரும் திரு ­ம­யம் தொகுதி திமுக வேட்­பா­ள­ரு­மான எஸ். ரகு­பதி செய்­தி­யா­ளர்­களை சந்­தித்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="9.8">அப்­போது அவர் கூறு­கை­யில்:</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="9.8">முதல் வெற்­றி­யா­கப் நாடா­ளு­மன்­றத்­திலே வெற்றி கிடைத்­தி­ருக்­கி­றது. தொகுதி மறு­சீ­ர­மைப்பு என்­கின்ற பெய­ரிலே தமிழ்­நாட்­டின் உரி­மை­களை நசுக்க நினைத்த பா.ஜ.க. கொண்டு வந்த தொகுதி மறு­சீ­ர­மைப்பு சட்ட மசோதா நாடா­ளு­மன்­றத்­தில் தோற்­க­டிக்­கப்­பட்­டி­ருக்­கி­றது. அவர்­க­ளுக்கு 352 வாக்­கு­கள் இல்லை என்று தெரிந்­தும் வேண்­டு­மென்றே பா.ஜ.க. இந்த சட்ட மசோ­தா­வைக் கொண்டு வந்­தது. மூன்­றில் இரண்டு பங்கு மெஜா­ரிட்டி அவர்­க­ளுக்கு வேண்­டும். ஆனால் அவர்­க­ளுக்கு இருப்­பது சிங்­கிள் மெஜா­ரிட்டி தான். அது­வும் நிதிஷ் குமா­ரும், சந்­தி­ர­பாபு நாயு­டு­வும் ஆத­ரிக்­கி­ற­தால்­தான். அந்த சிங்­கிள் மெஜா­ரிட்டி, இல்­லா­விட்­டால் ஆட்­சியே கிடை­யாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="9.8">எனவே மூன்­றில் இரண்டு பங்கு மெஜா­ரிட்டி தேவை­யான ஒரு சட்­டத் தி­ருத்த மசோ­தா­வைக் கொண்டு வந்து அதன் மூல­மாக ஏதா­வது ஆதா­யம் தேட­லாமா என்றுஅவர்­கள் பார்க்­கி­றார்­கள். ஒன்று மட்­டும் நிச்­ச­யம், தமிழ்­நாடு மக்­கள் மட்­டு­மல்ல, இந்­தி­யா­வில் உள்ள மக்­க­ளும் பா.ஜ.­க.­வின் கபட நாட­கத்தை நன்­றா­கப் புரிந்து கொள்­வார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="9.8">தொகுதி மறு­வ­ரை­யறை என்­பது வேறு, மக­ளிர் இட­ஒ­துக்­கீடு என்­பது வேறு, இரண்­டை­யும் சேர்த்து குழப்பி மக்­க­ளைக் குழப்­பு­வ­தற்­கா­கப் பார்த்­தார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="9.8">நாம் குடும்­பக் கட்­டுப்­பாட்­டுத் திட்­டத்­தைச் சரி­யாக அமல்­ப­டுத்தி இருக்­கி­றோம். அதா­வது அர­சாங்­கத்­தி­னு­டைய ஒரு சட்­டத்தை அமல்­ப­டுத்­தி­ ய­தற்­கா­கத் தென் மாநி­லங்­க­ளுக்­குத் தண்­டனை தரு­கின்ற செயலை இன்­றைக்கு ஒன்­றிய அரசு செய்து வரு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="9.8">1952-லே நம்­மு­டைய நாடா­ளு­மன்ற இடங்­கள் 42. இப்­பொ­ழுது நம்­மு­டைய இடங்­கள் 39. மக்­கள் தொகை கட்­டுப்­பாட்­டைக் குறைத்­த ­தால் நமக்­குக் கிடைத்­தி­ருக்­கிற பரிசு, ஒன்­றிய அரசு தந்­தி­ருக்­கிற பரிசு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="9.8">இனி­மேல் சட்­டங்­கள் போட்­டால் அதைக் கடை­பி­டிக்­கக்­கூ­டாது என்று ஒன்­றிய அரசு புத்தி சொல்­லி­யி­ருக்­கி­றது. எனவே எங்­க­ளைப் பொறுத்­த­ வ­ரைக்­கும் நாங்­கள் சரி­யான பாதை­யில் போய்க்­கொண்­டி­ருக்­கின்­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="9.8">தொகுதி மறு வரை­யறை வர­வேண்­டும், தொகுதி மறு­வரை வர­வேண்­டும் என்­பது எப்­பொ­ழு­துமே 20 ஆண்­டு­க­ளுக்கு ஒரு முறை செய்­யப்­பட வேண்­டும். மக்­கள் தொகை கணக்­கெ­டுப்பை எடுத்­து­விட்டு நீங்­கள் செய்­யுங்­கள் என்­று­தான் சொல்­லு­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="9.8">பல்­வேறு கட்­சி­கள் மக்­கள் தொகை கணக்­கெ­டுப்பு எடுக்க வேண்­டும், அது­வும் சாதி­வாரி கணக்­கெ­டுப்பு எடுக்க வேண்­டும் என்­கின்ற கோரிக்­கை­யெல்­லாம் வைத்­தி­ருக்­கின்­றன. எனவே நாங்­கள் சாதி­வாரி கணக் 
கெ­டுப்பை மக்­கள் தொகை கணக் 
கெ­டுப்­போடு சேர்த்து எடுக்க இந்­திய அர­சால்­தான் முடி­யும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="9.8">ஏனென்­றால் இங்கே இருக்­கக் கூ­டிய யாத­வர்­கள் பீகா­ரி­லும் இருக்­கி­றார்­கள், மற்ற மாநி­லங்­க­ளி­லும் இருக்­கி­றார்­கள். அதே­போல இங்கே சேர்த்து இருக்­கக்­கூ­டிய நாயுடு போன்­ற­வர்­கள், ரெட்­டி­யார் போன்­ற­வர்­கள், இவர்­கள் எல்­லாம் பிற மாநி­லங்­க­ளி­லும் இருக்­கக்­கூ­டி­ய­வர்­க­ளாக இருக்­கி­றார்­கள். அதே­போல 24 மனை தெலுங்­குச் செட்­டி­யார்­களை எடுத்­துக்­கொண்­டால் பல ஜாதி­யி­னர் ஒரு இரண்டு மூன்று மாநி­லங்­க­ளில் இருக்­கக்­கூ­டி­ய­வர்­க­ளாக இருக்­கி­றார்­கள். அதே­போல பல மாநி­லங்­க­ளில் இருக்­கக்­கூ­டி­ய­வர்­க­ளும் இருக்­கி­றார்­கள். எனவே சாதி­வாரி கணக்­கெ­டுப்பு என்­பது ஒன்­றிய அரசு எடுத்­தால்­தான் சரி­யாக இருக்­கும் என்­பது எங்­க­ளு­டைய நிலைப்­பாடு. அதை நாங்­கள் வலி­யு­றுத்­தி­னா­லும் கூட, இன்­றைக்கு மக்­கள் தொகை கணக்­கெ­டுப்பை எடுக்­கப் போகி­றோம் என்று சொல்­கி­றார்­களே தவிர அதற்­கான நட­வ­டிக்­கை­களை எடுக்­கா­மல் தொகுதி மறு­வரை, தொகுதி சீர­மைப்பு என்­கின்ற பெய­ரிலே மக­ளிர் மசோ­தாவை இடை­யிலே புகுத்தி அதன் மூல­மாக எதிர்க்­கட்­சி­க­ளுக்கு ஏதா­வது கெட்ட பெயரை வாங்­கித் 
தந்­து­விட முடி­யுமா என்று ஒரு தப்பு கணக்கை இன்­றைக்கு பா.ஜ.க. போட்­டி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="9.8">நிச்­ச­ய­மாக நாங்­கள் மக­ளிர் இட­ ஒ­துக்­கீட்­டுக்கு எதி­ரி­கள் அல்ல. ஆனால் மூன்­றில் ஒரு பங்கு மக­ளி­ருக்­குக் கொடுப்­ப­திலே திமுக உள்­ளிட்ட எந்­தக் கட்­சிக்­கும் எந்­த­வி­த­மான ஆட்­சே­ப­னை­யும் இல்லை. அதை ஒழுங்­கா­கக் கணக்­கெ­டுப்பு நடத்­திக் கொடுங்­கள் என்­று­தான் கேட்­கி­றோம். அதே நேரத்­தில் மக்­கள் தொகைக் 
கட்­டுப்­பாட்டை அதா­வது குடும்­பக் கட்­டுப்­பாட்டை அமல்­ப­டுத்­தி­ய­தற்­காக எங்­க­ளுக்­குத் தண்­டனை தரக்­கூ­டாது. அன்­றைக்கு இருந்த நில­வ­ரப்­ப­டி­தான் தர­வேண்­டும். இல்­லை­யென்­றால் இனி எதிர்­கா­லத்­திலே ஒன்­றிய அரசு கொண்டு வரும் எந்­தச் சட்­டத்­தை­யும் யாருமே மதிக்க மாட்­டார்­கள். நம்ம 
சட்­டத்தை மதித்­தால் பாதிப்பு நமக்­குத்­தான் என்­கின்ற உணர்வு அவர் க­ளுக்கு வந்­து­வி­டும். என­வே­தான் இதை எதிர்த்து இன்­றைக்கு வாக்­க­ளித்து அதன் மூல­மாக அந்த சட்ட மசோ­தாவை நியா­யப்­படி முறி­ய­டித்­தி­ருக்­கி­றோம். இந்­திய மக்­க­ளு­டைய நல­னிலே அக்­கறை கொண்டு எங்­க­ளு­டைய தலை­வர் தமிழ்­நாடு முத­ல­மைச்­சர் மு.க. ஸ்டாலின் இந்த நட­வ­டிக்­கையை முன்­னெ­டுத்­தி­ருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="9.8">எடப்­பா­டிக்கு இப்ப என்ன பேசு­றது, எது பேசு­ற­துன்னே ஒன்­னும் தெரி­யல. எப்ப பாரு தூங்­கா­மலே பேசிக்­கொண்டே போறாரு. பஸ்ல போகும்­போது கூட தூங்­காம இருக்­கா­ருன்னு நினைக்­கி­றேன். அத­னால அவர் வந்து என்ன சொன்­னா­லும் அது உள­றல். எடப்­பா­டி­யி­னு­டைய உள­றல்­க­ளுக்­கெல்­லாம் நம்ம பதி­ல­ளிக்க வேண்­டி­ய­தில்லை. பெண்­க­ளுக்கு இட ஒதுக்­கீட்டை கொண்டு வந்­தது தி.மு.க. எனவே நாங்­கள் வந்து என்­றைக்­குமே பெண்­க­ளுக்கு துரோ­கம் செய்­யவே மாட்­டோம். ஏன்னா பெண் வாக்­கா­ளர்­கள் தான் எங்­க­ளு­டைய இன்­றைக்கு வாக்கு வங்கி. அந்த வாக்கு வங்­கி­யில் கைய ­வைப்­ப­தற்­காக இப்­படி ஒரு சதிச்­செ­யலை அவர்­கள் செய்­தா­லும் கூட தமிழ்­நாட்டு மக்­கள் நிச்­ச­ய­மாக, பெண்­கள் அதை ஏற்­றுக்­கொள்ள மாட்­டார்­கள், நம்ப மாட்­டார்­கள். இந்த சட்­டத்தை அவ­ச­ர­மாக கொண்டு வந்­த­தின் நோக்­கமே தேர்­தல் நடக்­கிற நேரத்­திலே இந்த சட்­டத்தை கொண்டு வர­வேண்­டிய அவ­சி­யமே கிடை­யாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="9.8">ஆனால் அவ­ச­ர­மாக கொண்டு வந்­ததே இந்த தேர்­தல் நடக்­கிற மாநி­லங்­க­ளில் இருக்­கக்­கூ­டிய கட்­சி­கள், அது கேர­ளாவா இருந்தா… அது கேரளா முடிஞ்சு போச்சு. தமிழ்­நாட்­டுக்கு ஏதா­வது ஒரு பிரச்­ச­னையை கிளப்பி விட­லாமா என்­கின்ற கண்­ணோட்­டத்­திலே அவர்­கள் கொண்டு வந்­தி­ருக்­கி­றார்­கள். எந்த பிரச்­ச­னை­யும் அவர்­கள் கிளப்ப முடி­யாது. ஏனென்­றால் நாங்­கள் ஆரம்­பத்­தி­லேயே எதிர்த்து குரல் கொடுத்து, கருப்­புக்­கொடி ஏந்தி எல்­லா­ரும் அதை எதிர்க்க வேண்­டும், தமிழ்­நாட்டு மக்­கள் ஒட்­டு­மொத்­த­மாக எதிர்க்க வேண்­டும், இது தமிழ்­நாட்­டுக்கு பாதிப்பு என்று குரல் எழுப்­பி­ருக்­கி­றோம். எனவே எங்­களை வந்து தமிழ்­நாட்டு மக்­க­ளி­ட­மி­ருந்து எங்­களை பிரிக்க முடி­யாது, எங்­கள் தலை­வரை பிரிக்க முடி­யாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="9.8">59 தொகு­தி­கள் என்று அதை எழுத்­துப்­பூர்­வ­மாக எழு­தியே தர­லையே. சொல்­றது வாயால… அமித் ஷா வாயால சொல்­றது என்றைக்காவது செஞ்­சி­ருக்­காரா? வாயால வடை சுட்­டுட்டு போய்­டு­வாரு, ஏமாத்­தி­டு­வாரு. அவர் வந்து இட ஒதுக்­கீடு மசோ­தா­வால் தென் மாநி­லங்­க­ளுக்கு பாதிப்பு வராது என்று இங்க வந்து சொல்­லு­வார். உத்­த­ரப்­பி­ர­தே­சத்­துல போயி அல்­லது பீகார்ல போயி இட ஒதுக்­கீடு வந்து உங்­க­ளுக்கு சாத­கமா இருக்­குன்னு சொல்­லு­வார். அத­னால் அவர் இடத்­துக்கு தகுந்­தாற்­போல் பேசு­கின்­ற­வர்­கள் நாங்­கள் அல்ல. அது ஒரு பச்­சோந்­தித்­த­னம். அங்­கங்க நிறம் மாறு­றது. நாங்­கள் நிறம் மாறு­கின்­ற­வர்­கள் அல்ல. நாங்­கள் எப்­போ­துமே ஒரே நிறத்­தில், ஒரே கருத்­தில், ஒரே நிலைப்­பாடு கொண்­ட­வர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="9.8">அமித்­ஷா­வின் பேச்­சைக் கேட்டு எடப்­பாடி பழ­னிச்­சாமி சொல்­வது என்­பது தான் கொத்­த­டிமை, எழுதி கொடுத்­தாச்சு சாச­னம். அவ­ரைப் பத்தி பிரச்­சனை இல்லை. அ.தி.­மு.க. இன்­றைக்கு தங்­க­ளு­டைய டெபா­சிட்டை காப்­பாற்­றிக் கொள்­வ­தற்கு வேண்­டிய முயற்­சி­களை அவர்­கள் செய்து கொண்­டி­ருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="9.8">59 தொகு­தி­கள் என்று எழுதி தரட்­டும் அப்­பு­றம் பார்ப்­போம். அத்­தைக்கு மீசை முளைக்­கட்­டும், அப்­பு­றம் சித்­தப்­பான்னு கூப்­பி­ட­லாம் என்று அமைச்சர் தெரி­வித்­தார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>