<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="20/04/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,34,958,1384" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Mon Apr 20 2026 04:00:30 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260420T000000+5.30" edition.name="TRY" edition.area="TRY" position.section="20042026-TRY-06" position.sequence="06" ex-ref="20042026-TRY-06.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="20"> திருச்சி </lang>
	<lang class="3" style="Headline2"  font="Arial" fontStyle="Bold"  size="20">20.04.2026</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="64">வெகுமானத்திற்காகத் தன்மானத்தை இழந்து இனமானத்திற்குத் துரோகம் செய்யும் கூட்டம்!</lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="41">திருப்பூர் – முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை...   </lang>
	<lang class="3" style="Headline4"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular"  size="41">5–ஆம் பக்கத் தொடர்ச்சி!</lang>
	</hl4>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup575327_06_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup194334_06_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup458817_06_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="4" source="3_06_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">முத­லில், பண­ம­திப்­பி­ழப்பு நட­வ­டிக்கை. இங்கு இருக்­கும் கம்­பெ­னி­க­ளும் – தொழி­லா­ளர்­க­ளும், அந்­தக் கறுப்பு நாளை இன்­றைக்­கும் மறந்­தி­ருக்க மாட்­டீர்­கள். அனை­வ­ரை­யும் நடுத்­தெ­ரு­வில் நிறுத்தி – தொழில்­களை நலி­வ­டைய வைத்து, திருப்­பூ­ரின் வளர்ச்­சிக்கு முதல் முட்­டுக்­கட்­டை­யைப் போட்­டார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அடுத்து, நடு­ராத்­தி­ரி­யில் ஜி.எஸ்.டி.யைக் கொண்­டு­வந்து, தொழில்­கள் சிறந்து விளங்­கும் மொத்த மேற்கு மண்­ட­லத்­தையே சூறை­யா­டி­னார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அடுத்து, கொரோனா கால­கட்­டத்­தில் நம்­மை­யெல்­லாம் மணி அடிக்­கச் சொல்­லி­விட்­டுத் தொழி­லா­ளர்­களை நடுத்­தெ­ரு­வில் தவிக்க விட்­டார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">பா.ஜ.க.வின் கொள்­கை­யி­னால்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">திருப்­பூர் அடைந்த இழப்­பு­கள்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஒன்­றிய பா.ஜ.க. அரசு தவ­றான கொள்­கை­க­ளால் இந்த திருப்­பூர் தன்­னு­டைய அடை­யா­ளத்தை எப்­ப­டி­யெல்­லாம் இழந்து கொண்டு இருக்­கி­றது என்று உங்­க­ளுக்கே தெரி­யும். இதைப் பற்­றி­யெல்­லாம் அவர்­க­ளுக்கு துளி­ய­ள­வு­கூட கவலை இருக்­கி­றதா? கிடை­யாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தொழில் முனை­வோர்­க­ளை­யும் – தொழி­லா­ளர்­க­ளை­யும் மீளாத் துய­ரத்­தில் ஆழ்த்தி, இந்த மண்­ட­லத்­தி­னு­டைய தொழில் வளர்ச்­சிக்­குக் கேடு விளை­வித்­து­விட்டு எந்த முகத்­து­டன் இன்­றைக்கு வாக்கு கேட்டு வரு­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஒட்­டு­மொத்த தொழில் வளர்ச்­சிக்கு மட்­டு­மல்ல, தொழில் வளர்ச்­சிக்­கா­கப் பாடு­ப­டு­ப­வர்­க­ளை­யும் மிரட்டி ஒடுக்­கு­கி­றார்­களா? இல்­லையா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">எடுத்­துக்­காட்­டிற்­குச் சொல்ல வேண்­டும் என்­றால், இதே மேற்கு மண்­ட­லத்­தில் பிர­ப­ல­மாக இருக்­கும் ஒரு உணவு நிறு­வன அதி­பர், நிதி­ய­மைச்­ச­ரி­டம் ஜி.எஸ்.டி.யில் இருக்­கும் பிரச்­சி­னை­யைச் சுட்­டிக் காட்­டி­ய­தற்­காக, என்­ன­வெல்­லாம் பாடு­ப­டுத்­தி­னார்­கள். மன்­னிப்பு கேட்க வைத்­தார்­கள். இப்­ப­டி­யெல்­லாம் செய்­த­வர்­கள்­தான் இன்­றைக்கு டிசைன் டிசை­னா­கப் பொய் சொல்­லி­விட்டு வாக்கு கேட்க வரு­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஆனால், நாங்­கள் செய்­தி­ருக்­கும் சாத­னை­க­ளை­யும், செய்­யப் போகும் திட்­டங்­க­ளை­யும் சொல்லி உங்­க­ளி­டத்­தில் வாக்கு கேட்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நம்­மு­டைய அர­சின் சாத­னை­களை சொல்­வ­தற்கு முன்பு, வாக்கு கேட்­டுப் போகும் இடங்­க­ளில் எல்­லாம் மக்­கள் பட்­டி­ய­லிட்டு அவர்­களே சொல்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">நம்­மு­டைய சாத­னை­கள்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">நாடெங்­கும் பர­வி­யுள்­ளது!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நேற்­று­கூட, கன்­னி­யா­கு­ம­ரி­யில் ஒரு முதி­ய­வர், நம்­மு­டைய சாத­னை­க­ளை­யெல்­லாம் சொல்­லும் வீடியோ சமூக வலைத்­த­ளங்­க­ளில் வைரல் ஆனது. நம்­மு­டைய திரா­விட மாடல் அரசு செய்­தி­ருக்­கும் சாத­னை­க­ளைப் பற்றி நிறைய செய்­தி­க­ளில் பார்த்­தி­ருப்­பீர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தி.மு.க. ஒரு திட்­டத்­தைச் செயல்­ப­டுத்­தி­னால், அது சாத­னைத் திட்­ட­மா­கத்­தான் இருக்­கும். அத­னால்­தான் மக்­களே பெரு­மை­யோடு சொல்­கி­றார்­கள். நம்­மு­டைய திட்­டங்­க­ளைப் பார்த்­துத்­தான் இன்­றைக்­குப் பல்­வேறு மாநி­லங்­க­ளில் காப்பி அடித்­துக் கொண்டு இருக்­கி­றார்­கள். ஏன் ஒன்­றிய அரசே இன்­றைக்கு காப்பி அடித்­துக் கொண்டு இருக்­கி­றது. மக்­க­ளுக்­கான முன்­னோ­டித் திட்­டங்­க­ளைச் செயல்­ப­டுத்­து­வ­தில் தி.மு.க.தான் O.G. (ஒரி­ஜி­னல்).</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இந்த ஸ்டாலி­னு­டைய அப்­ப­டிப்­பட்ட திட்­டங்­க­ளைச் சொல்­லட்­டுமா...</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இங்கு மக­ளிர் நிரம்ப வந்­தி­ருக்­கி­றீர்­கள். இங்கு இருக்­கும் என் சகோ­த­ரி­க­ளி­டம் நான் பணி­வோடு கேட்­கி­றேன். உரி­மை­யோடு கேட்­கி­றேன்…</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">மாதந்­தோ­றும் பதி­னைந்­தாம் தேதி உங்­கள் அக்­க­வுண்ட்­டுக்கு இந்த அண்­ணன் கொடுக்­கும் ஆயி­ரம் ரூபாய் உரி­மைத்­தொகை வரு­கி­றதா? அந்த ஆயி­ரம் ரூபாய் உரி­மைத்­தொ­கையை, வரும் திரா­விட மாடல் 2.0–வில், எவ்­வ­ள­வாக உயர்த்­தப் போகி­றோம்? டபுள் ஆக்­கப் போகி­றோம். இரண்­டா­யி­ரம் ரூபா­யாக உயர்த்­தப் போகி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இல்­லத்­த­ர­சி­க­ளாக இருக்­கும் பெண்­கள் தங்­க­ளு­டைய அன்­றா­டச் செல­வு­க­ளுக்­குக்­கூட மற்­ற­வர்­க­ளைச் சார்ந்­தி­ருக்க வேண்­டிய நிலை இருந்­தது. உரி­மைத்­தொ­கை­யால், அந்­தக் கஷ்­டத்தை உடைத்­தி­ருக்­கி­றோம். எங்­கள் அண்­ணன் ஸ்டாலின் தரும் சீர் என்று மக­ளிர் அனை­வ­ரும் உரி­மை­யோடு பேசு­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அடுத்து, விடி­யல் பய­ணம். பெண்­க­ளின் பொரு­ளா­தா­ரச் சுதந்­தி­ரத்­திற்கு அடிப்­ப­டை­யாக அமைந்­தி­ருக்­கும் புரட்­சி­க­ர­மான திட்­டம். சம்­பா­திக்­கும் பணத்­தில் குறிப்­பிட்ட தொகை போக்­கு­வ­ரத்­திற்கே செல­வா­கி­வி­டும் என்று, வீட்­டுக்­குள்­ளேயே பலர் முடங்­கி­யி­ருந்த நிலையை உடைத்­தி­ருக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">நமது சாத­னை­களை விளக்­கிட</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">ஒரு மாநாடே போட்­டுக் கூற­லாம்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இப்­படி, புது­மைப்­பெண் திட்­டம், தமிழ்ப்­பு­தல்­வன் திட்­டம், நான் முதல்­வன் திட்­டம், தோழி விடு­தி­கள், மக்­க­ளைத் தேடி மருத்­து­வம், இன்­னு­யிர் காப்­போம் – நம்­மைக் காக்­கும் 48, பெண்­கு­ழந்­தை­க­ளுக்கு HPV தடுப்­பூசி, கல்­லூ­ரிக் கனவு திட்­டம், சிக­ரம் தொடு திட்­டம், உயர்­வுக்­குப் படி திட்­டம், பெண்­கள் புத்­தொ­ழில் தொடங்­கிட மானி­யம், அன்­புச்­சோலை, அன்­புக்­க­ரங்­கள், தாயு­மா­ன­வர் திட்­டம், கலை­ஞ­ரின் கனவு இல்­லம், இல்­லம் தேடிக் கல்வி, கல்­லூரி மாண­வர்­க­ளுக்கு மடிக்­க­ணினி, மாபெ­ரும் நூல­கங்­கள், சிப்­காட் தொழிற்­பூங்­காக்­கள், நியோ டைடல் பார்க்­கு­கள், ஊட்­டச்­சத்தை உறுதி செய், அண்­ணல் அம்­பேத்­கர் தொழில் முன்­னோ­டி­கள் திட்­டம், கலை­ஞர் கைவி­னைத் திட்­டம், தொல்­குடி திட்­டம், நலம் காக்­கும் ஸ்டாலின், உங்­க­ளு­டன் ஸ்டாலின்… எனக்கே ரொம்ப களைப்­பா­கி­விட்­டது. கொஞ்­சம் தண்­ணீர் குடித்­துக் கொள்­கி­றேன். இப்­படி சாத­னை­களை விளக்­கிச் சொல்ல வேண்­டும் என்­றால், அதற்கே நாங்­கள் தனி­யாக ஒரு மாநாடு போட வேண்­டும். அந்த அள­விற்கு ஏரா­ள­மான திட்­டங்­க­ளைச் செய்­தி­ருக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இதை­யெல்­லாம் பழ­னி­சா­மி­யால் பொறுத்­துக் கொள்ள முடி­ய­வில்லை. சொல்­வ­தற்­குச் சாத­னை­க­ளும், செயல்­ப­டு­வ­தற்­குத் கொள்­கை­க­ளும் இல்­லாத பழ­னி­சாமி, அவ­தூறு பரப்­பு­கி­றார். அது­வும் எப்­படி? அசிங்­க­மா­கப் பேசு­வ­தை­யும், சாபம் விடு­வ­தை­யும்­தான் தன்­னு­டைய பிர­சா­ர­மாக இப்­போது வைத்­தி­ருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">சுய­ந­லத்­திற்­கா­கத் தமிழ்­நாட்­டின் உரி­மை­களை காவு கொடுக்­கத் துணிந்­து­விட்ட பழ­னி­சா­மிக்­குத் தமிழ்­நாடு பதி­னோ­ரா­வது தோல்­வி­யைக் கொடுக்க வேண்­டும். வெகு­மா­னத்­திற்­கா­கத் தன்­மா­னத்தை இழந்து இன­மா­னத்­திற்­குத் துரோ­கம் செய்­யும் அடி­மைக் கூட்­டத்­திற்­குத், தமிழ்­நாடு சரி­யான பாடம் புகட்ட வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தமிழ்­நாட்­டைப் பொறுத்­த­வ­ரைக்­கும், பாசிச பா.ஜ.க.வும் – அடிமை அ.தி.மு.க.வும் வேரோ­டும் வேரடி மண்­ணோ­டும் வீழ்த்­தப்­பட வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">டபுள் எஞ்­சின் டப்பா எஞ்­சின்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">தமிழ்­நாட்டை சீர­ழிக்க வரு­கி­றது!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தமிழ்­நாட்டு மக்­க­ளுக்கு நான் சொல்­வ­தெல்­லாம் டபுள் எஞ்­சின் டப்பா எஞ்­சின் என்று வரு­வது எதற்­காக?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">உரி­மைத்­தொ­கையை நிறுத்­து­வ­தற்­காக, விடி­யல் பய­ணத்தை முடக்­கு­வ­தற்­காக, புது­மைப்­பெண் மற்­றும் தமிழ்ப்­பு­தல்­வன் போன்ற திட்­டங்­க­ளைத் தடுப்­ப­தற்­காக, இட­ஒ­துக்­கீட்டு உரி­மை­யைப் பறித்­துச் சமூ­க­நீ­தி­யைப் படு­கு­ழி­யில் தள்­ளு­வ­தற்­காக, இதைத்­தான் N.D.A. கூட்­டணி மற்ற மாநி­லங்­க­ளில் செய்து கொண்­டி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அ.தி.மு.க.வுக்­கும் – பா.ஜ.க.வுக்­கும் அளிக்­கும் வாக்கு என்­பது தமிழ்­நாட்­டின் முன்­னேற்­றத்­திற்­குப் போடப்­ப­டும் தடைக்­கற்­கள். இதை மக்­கள் உணர வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இந்த திருப்­பூ­ரில் நிறைய தொழில்­மு­னை­வோர்­கள் இருக்­கி­றீர்­கள். மாநி­லத்­தின் தொழில் வளர்ச்சி எவ்­வ­ளவு முக்­கி­ய­மா­னது என்று உங்­க­ளுக்­கெல்­லாம் நன்­றா­கத் தெரி­யும். அப்­ப­டிப்­பட்ட மாநில வளர்ச்­சியை 0.07 விழுக்­காடு என்ற அவ­ல­நி­லைக்­குத் தள்­ளிய ஆட்­சி­தான், அ.தி.மு.க. ஆட்சி.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">தொழில் வளர்ச்­சி­யில் நாம்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">தமிழ்­நாட்டை உயர்த்­தி­யுள்­ளோம்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஆனால், உங்­கள் ஆத­ர­வோடு தமிழ்­நாட்டை மீட்டு 11.19 விழுக்­காடு வளர்ச்சி, இந்­தி­யா­வி­லேயே டபுள் டிஜிட் வளர்ச்சி, சூப்­பர்ஸ்­டார் ஸ்டேட் என்ற நிலைக்கு நாங்­கள் உயர்த்­தி­யி­ருக்­கி­றோம். இது­தான் திரா­விட மாடல் ஆட்சி! அத­னால்­தான் மீண்­டும், மீண்­டும் ஏரா­ள­மான தொழிற்­சா­லை­கள் தமிழ்­நாட்டை நோக்கி வந்து கொண்டே இருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இந்த வளர்ச்சி தொட­ரத்­தான் சூப்­பர் ஸ்டாரைக் களத்­தில் இறக்­கி­யி­ருக்­கி­றோம். சூப்­பர் ஸ்டார் யார்? நம்­மு­டைய தேர்­தல் அறிக்கை… சின்­னக் குழந்­தை­கள் கூட சொல்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இப்­போது நம்­மு­டைய சூப்­பர்ஸ்­டா­ரின் சூப்­பர் ஹிட் அறி­விப்­பு­க­ளைச் சொல்­லட்­டுமா…</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">முத­லில், இல்­லத்­த­ரசி திட்­டம். எவ்­வ­ளவு கூப்­பன்? எட்­டா­யி­ரம் ரூபாய்க்கு கூப்­பன். இந்­தக் கூப்­பனை வைத்து, உங்­க­ளுக்­குத் தேவைப்­ப­டும் வீட்டு உப­யோ­கப் பொரு­ளைப் புதி­ய­தா­க­வும் வாங்­கிக் கொள்­ள­லாம், இல்லை என்­றால் பழைய பொருளை எக்ஸ்­சேஞ்ச் செய்­தும் வாங்­கிக் கொள்­ள­லாம். உங்­க­ளுக்­குப் பிடித்த கடை­யில் – உங்­க­ளுக்­குப் பிடித்த கம்­பெ­னி­யில் வாங்­கிக் கொள்­ள­லாம். என்­னென்ன? வாஷிங் மெஷின், ஃபிரிட்ஜ், டி.வி., கிரைண்­டர், மிக்சி, மைக்­ரோ­வேவ் அவன், இண்­ட­க்ஷன் ஸ்டவ். இதில் எதை­யெல்­லாம் வாங்க வேண்­டும் என்று, இப்­போதே நம்­மு­டைய தாய்­மார்­கள் – பெண்­கள் எல்­லாம் டிஸ்­கஸ் செய்ய ஆரம்­பித்­து­விட்­டார்­கள். அது­வும் தெரி­யும்... எங்கு பார்த்­தா­லும் அது­தான் பேச்சு. ஆனால், ஒன்று… உங்­களை தய­வு­செய்து கேட்­டுக் கொள்­கி­றேன். உங்­கள் வீட்­டுக்­கா­ர­ரி­டம் எல்­லாம் என்ன வாங்­க­லாம் என்று டிஸ்­கஸ் பண்­ணா­தீர்­கள். உங்­களை கன்­பி­யூஸ் பண்ணி விடு­வார்­கள். குழப்­பம் வந்­து­வி­டும். ஏதா­வது பிரச்­சினை வந்­தால் சொல்­லுங்­கள். அண்­ணன் இருக்­கி­றேன். ஸ்டாலின் இருக்­கி­றேன். நான் பார்த்­துக் கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அடுத்த வாக்­கு­றுதி, உரி­மைத்­தொகை. இப்­போது மாதம் ஆயி­ரம் ரூபாய் என்று ஒரு கோடியே 31 இலட்­சம் சகோ­த­ரி­கள் பெற்று வரு­கி­றார்­கள். அந்த கலை­ஞர் மக­ளிர் உரி­மைத்­தொகை திரா­விட மாடல் 2.0 ஆட்­சி­யில் இனி மாதம் இரண்­டா­யி­ரம் ரூபாய்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இல்­லத்­த­ர­சி­க­ளுக்கு கூப்­ப­னில் ரூ.8 ஆயி­ரம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நீங்­கள் செலுத்­தும் வாக்கு உத­ய­சூ­ரி­ய­னுக்கு!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இப்­போதே நீங்­கள் அனை­வ­ரும் கணக்கு போட ஆரம்­பித்­து­விட்­டீர்­கள். இல்­லையா… என்ன கணக்கு அது? பொங்­க­லுக்கு முன்பு, சொல்­லி­விட்டு மூன்­றா­யி­ரம். பிப்­ர­வ­ரி­யில், சொல்­லா­ம­லேயே ஐந்­தா­யி­ரம்.ஆக­மொத்­தம் எட்­டா­யி­ரம். அடுத்து, இல்­லத்­த­ரசி கூப்­ப­னில் எட்­டா­யி­ரம். “எட்டு + எட்டு = உத­ய­சூ­ரி­ய­னுக்­குத்­தான் எங்­கள் ஓட்டு” எனப் பெண்­கள் எல்­லாம் முடிவு செய்­து­விட்­டார்­கள். அத­னால் நம்­மு­டைய வெற்­றி­யும் இந்த முறை யாரும் எட்­டாத உய­ரத்­திற்­குப் போகப் போகி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இது­மட்­டு­மல்ல, கல்­லூ­ரிக்­குச் செல்­லும் மாண­வர்­க­ளுக்கு மாதம் ஆயி­ரம் ரூபாய் வழங்­கும் புது­மைப்­பெண் தமிழ்ப் புதல்­வன் உத­வித்­தொ­கை­யும் ஆயி­ரம் ரூபா­யி­லி­ருந்து, ஆயி­ரத்து 500 ரூபா­யாக உயர்த்தி வழங்­கப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நெல் கொள்­மு­தல் விலை குவிண்­டால் ஒன்­றுக்கு 3 ஆயி­ரத்து 500 ரூபா­யாக உயர்த்தி வழங்­கப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">கரும்பு கொள்­மு­தல் விலை டன் ஒன்­றுக்கு 4 ஆயி­ரத்து 500 ரூபா­யாக உயர்த்தி வழங்­கப்­ப­டும். பால் கொள்­மு­தல் விலை லிட்­டர் ஒன்­றுக்கு 5 ரூபாய் உயர்த்தி வழங்­கப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">காலை உண­வுத்­திட்­டம் – இப்­போது ஐந்­தாம் வகுப்பு வரை. அது எட்­டாம் வகுப்பு வரை விரி­வாக்­கப்­ப­டும். அடுத்த 5 ஆண்­டு­க­ளில் 35 இலட்­சம் கல்­லூரி மாண­வர்­க­ளுக்கு லேப்­டாப் முழு­மை­யாக வழங்­கப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">கலை­ஞர் கனவு இல்­லம் உள்­ளிட்ட திட்­டங்­கள் மூல­மாக 10 இலட்­சம் ஏழை­க­ளுக்கு வீடு­கள் கட்­டித் தரப் போகி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">மக­ளிர் சுய உத­விக் குழு பெண்­கள் ஷேர் ஆட்டோ வாங்க மானி­யத்­து­டன் கூடிய வங்கி கடன் வழங்­கப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">திருப்­பூ­ரில் 5 ஆயி­ரம் தொழி­லா­ளர்­கள்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">தங்­கும் அள­வுக்கு விடு­தி­கள்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">திருப்­பூர் உள்­ளிட்ட தொழிற்­சா­லை­கள் அதி­க­முள்ள நக­ரங்­க­ளில் பெண்­கள் வேலைக்­குச் செல்­வதை எளி­தாக்க ஆயி­ரம் குழந்­தை­கள் காப்­ப­கங்­கள், தமிழ்­நாடு முழு­வ­தும் உரு­வாக்­கப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">திருப்­பூ­ரில் தேசிய வடி­வ­மைப்பு நிறு­வ­னம் மற்­றும் தேசிய ஆடை தொழில்­நுட்ப நிறு­வ­னம் அமைக்க நட­வ­டிக்கை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஜவு­ளித் தொழில் நவீ­ன­ம­ய­மாக்­கப்­பட்டு, கோவை, திருப்­பூர், கரூ­ரில் இரு­பத்து ஐந்­தா­யி­ரம் தொழி­லா­ளர்­க­ளுக்­குத் தங்­கும் விடு­தி­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">உல­க­ளா­விய உயர் மதிப்பு கொண்ட தென்னை நார் மதிப்பு கூட்­டப்­பட்ட பொருட்­கள் உற்­பத்தி மைய­மா­கத் தமிழ்­நாட்டை உரு­வாக்க நட­வ­டிக்கை என ஏரா­ள­மான வாக்­கு­று­தி­கள் நம்­மு­டைய தேர்­தல் அறிக்­கை­யில் இருக்­கின்­றன. இப்­போது ஏரா­ள­மான சாத­னை­க­ளைச் சொல்லி நான் வாக்கு கேட்­டேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இன்­றைக்­குப் பிர­த­மர் மோடி அவர்­க­ளும் பிர­சா­ரத்­திற்­கா­கத் தமிழ்­நாட்­டிற்கு வந்­தி­ருக்­கி­றார். நாம் பல­முறை கேட்­டும் தமிழ்­நாட்­டிற்­குச் செய்த சிறப்­புத் திட்­டங்­கள் என்று எதை­யும் அவர் சொல்­ல­வில்லை. எப்­போ­தும் சொல்ல மாட்­டார். ஆனால், மக­ளிர் இட­ஒ­துக்­கீட்டை எதிர்த்­தார்­கள் என்று உண்­மைக்­குப் புறம்­பா­கப் பிர­சா­ரம் செய்­வார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">தமிழ்­நாட்­டுக்கு அநீதி இழைக்க</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">கொண்­டு­வ­ரப்­பட்ட கருப்­புச் சட்­டம்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">பிர­த­ம­ருக்கு ஒரே­யொரு விஷ­யத்தை நான் பணி­வு­டன்  ஞாப­கப்­ப­டுத்­து­கி­றேன். மக­ளிர் இட­ஒ­துக்­கீட்டு மசோ­தாவை 2023–இல் கொண்டு வந்­த­போது, தி.மு.க. உள்­ளிட்ட இந்­தியா கூட்­ட­ணிக் கட்­சி­கள் அனை­வ­ரும் முழு­மை­யாக ஆத­ரித்­தோம். அத­னால்­தான் அதை உங்­க­ளால் நிறை­வேற்ற முடிந்­தது. அந்­தச் சட்­டம்நிறை­வேற்­றி­யது, செப்­டம்­பர் 2023. 31 மாத­மாக என்ன செய்­தீர்­கள்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இப்­போது தமிழ்­நாட்­டிற்கு அநீதி இழைக்க வேண்­டும் என்று கருப்­புச் சட்­ட­மான தொகுதி மறு­சீ­ர­மைப்­பைக் கொண்டு வந்­து­தான், 31 மாத­மாக மூலை­யில் போட்ட சட்­டத்தை உங்­கள் சுய­ந­லத்­திற்­குப் பயன்­ப­டுத்­தப் பார்த்­தீர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">உங்­க­ளுக்கு மக­ளிர் முன்­னேற்­றத்­தின் மேல் எல்­லாம் அக்­கறை கிடை­யாது. ஆர்.எஸ்.எஸ். – சங் பரி­வார் கும்­பல்­க­ளின் பிற்­போக்­கு­வா­தங்­கள் எல்­லாம் தமிழ்­நாட்­டிற்கு நன்­றா­கவே தெரி­யும். அத­னால் உங்­கள் பொய்­களை எல்­லாம் மக்­கள் நம்ப மாட்­டார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">பெண்­க­ளுக்கு உள்­ளாட்­சி­க­ளில்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">50 விழுக்­காடு கொடுத்­தது இந்த ஸ்டாலின்­தான்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஏனென்­றால், பெண்­க­ளுக்கு உள்­ளாட்­சி­க­ளில் ஐம்­பது விழுக்­காடு இட­ஒ­துக்­கீடு கொடுத்­தது இந்த முத்­து­வேல் கரு­ணா­நிதி ஸ்டாலின்­தான். பெண்­க­ளுக்­குச் சொத்­து­ரிமை கொடுத்த தலை­வர் கலை­ஞ­ரின் மகன். அத­னால் வேறு எதை­யா­வது புதி­தாக ட்ரை பண்­ணப் பாருங்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">எதைப் பற்­றி­யும் அடிப்­ப­டைப் புரி­தல் இல்­லா­மல் தய­வு­செய்து பேசா­தீர்­கள் பழ­னி­சாமி. பா.ஜ.க. கொடுத்த டூல் கிட் எடுத்­துக் கொண்டு வந்து, தமிழ்­நாட்­டின் வெற்­றி­யைத் திசை திருப்­பிப் பேசிக்­கொண்டு இருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தலை­கு­னிந்து, முதுகு வளைந்து, தரை­யில் ஊர்ந்து, கால்­களை மட்­டுமே பார்த்­துப் பழக்­கப்­பட்ட அடி­மை­சா­மிக்­குத், தமிழ்­நாடு தலை­நி­மிர்ந்து போராடி வெற்றி பெறு­வ­தைப் பொறுத்­துக் கொள்ள முடி­ய­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஸ்டாலின் எதற்­காக இதைக் கொண்­டா­டு­கி­றார் என்று கேட்­கி­றார்? பழ­னி­சாமி அவர்­களே... தமிழ்­நாட்­டின் எழுச்­சியை நான் கொண்­டா­டு­கி­றேன். தமிழ்­நாட்­டின் ஒற்­று­மையை நான் கொண்­டா­டு­கி­றேன். தந்தை பெரி­யார், பேர­றி­ஞர் அண்ணா, முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் வகுத்­துத் தந்த பாதை­யில் நீதிக்­கா­க­வும், கண்­ணி­யத்­திற்­கா­க­வும், கூட்­டாட்­சிக்­கா­க­வும் நெஞ்­சு­ரத்­தோடு நின்று, நாங்­கள் தமிழ்­நாட்­டைக் கொண்­டா­டிக் கொண்­டி­ருக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஆனால், பழ­னி­சாமி அவர்­களே... நீங்­கள் பதவி வெறிக்­காக பா.ஜ.க.வின் பாதம்­தாங்­கி­யாக மாறி, பிறந்த தமிழ் மண்­ணுக்கே துரோ­கம் செய்­யத் துணிந்­தீர்­கள். பத­விக்­காக உங்­கள் தன்­மா­னத்தை அடகு வைத்­தீர்­கள். அது பற்­றித் தமிழ்­நாட்­டில் ஒரு­வ­ருக்­கும் கவலை கிடை­யாது. ஆனால் இன­மா­னத்தை அடகு வைத்­துப் பிழைக்க வேண்­டும் என்றுநினைத்­தீர்­கள் என்­றால், நாங்­கள் பொறுத்­துக் கொள்ள மாட்­டோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">பழ­னி­சா­மி­யின் பச்­சோந்­தித்­த­னத்­தைப்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">பார்த்து நாடே சிரிக்­கி­றது!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">பழ­னி­சாமி அவர்­களே... உங்­க­ளு­டைய பச்­சோந்­தித்­த­னத்­தைப் பார்த்­துத் தமிழ்­நாடே இன்­றைக்கு சிரித்­துக் கொண்­டி­ருக்­கி­றது. இப்­ப­டி­யுமா ஒரு மனி­தர் இருப்­பார் என்று, உங்­களை அர­சி­யல் அவ­மா­ன­மாக நினைக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">உங்­க­ளுக்­குத் துணிவு இருந்­தால் மக­ளிர் இட­ஒ­துக்­கீட்டை எந்­த­வித கண்­டி­ஷ­னும் போடா­மல் இன்­றைக்கே நிறை­வேற்­றுங்­கள் என்று, உங்­கள் ஓனர் பிர­த­மர் மோடி­யி­ட­மும் – அமித் ஷாவி­ட­மும் சொல்­லுங்­கள் பார்ப்­போம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இன்­றைக்­குக்­கூட தி.மு.க. சார்­பில் மக­ளிர் இட­ஒ­துக்­கீட்­டிற்­கா­கத் தனி­ந­பர் மசோதா கொண்டு வந்­தார்­களே... அதை ஏன் நிறை­வேற்­ற­வில்லை என்று உங்­கள் ஓனர்­க­ளைப் பார்த்து கேளுங்­கள் பார்ப்­போம். ஒரே ஒரு நிமி­டம் முதுகை நிமிர்த்­திக் கேள்வி கேட்­கப் பழ­னி­சாமி தயாரா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தமிழ்­நாடு தமிழ்­நா­டாக இருப்­பதை நாங்­கள் கொண்­டா­டு­வோம். தமிழ்­நாட்டு முத­ல­மைச்­ச­ராக நான் கொண்­டா­டு­வேன். உங்­க­ளுக்குஇதெல்­லாம் எரி­கி­றது என்­றால், நாங்­கள் திரும்­பத் திரும்­பக் கொண்­டா­டு­வோம். எங்­கள் தமிழ்­நாட்டை நாங்­கள் கொண்­டா­டிக் கொண்டே இருப்­போம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">என்.டி.ஏ. கூட்­ட­ணிக்கு தமிழ்­நாடு</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">தக்க பாடம் புகட்ட வேண்­டும்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தமிழ்­நாட்­டிற்­குத் துரோ­கம் இழைக்க முயற்சி செய்து தோற்­று­விட்­டுத், தமிழ்­நாட்­டிற்கு எதி­ரா­கச் செயல்­பட ஒன்­று­சேர்ந்­துள்ள N.D.A. கூட்­ட­ணி­யைத், தமிழ்­நாட்டு மக்­கள் புறக்­க­ணிக்க வேண்­டும். பாடம் புகட்ட வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தமிழ்­நாடு வெர்­சஸ்டெல்லி என்ற தேர்­த­லில் டெல்­லி­யின் ஆண­வத்­திற்கு நாம் பாடம் புகட்ட வேண்­டும். அதற்கு ஏப்­ரல் 23–ஆம் நாள் தமிழ்­நாட்டு மக்­கள் உத­ய­சூ­ரி­ய­னுக்­கும் – மதச்­சார்­பற்ற முற்­போக்­குக் கூட்­ட­ணிக் கட்­சி­க­ளின் சின்­னங்­க­ளுக்­கும் வாக்­க­ளிக்க வேண்­டும் என்று, உங்­களை அன்­போ­டும் – உரி­மை­யோ­டும் நான் கேட்க விரும்­பு­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தலை நிமிர்ந்த தமிழ்­நாடு வளம் பெற, நல்­லாட்சி தொடர்ந்­திட, வெல்­வோம் ஒன்­றாக... மீண்­டும் தமிழ்­நாடு வெல்­லட்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இவ்­வாறு முதல்­வர் மு.க.ஸ்டாலின் அவர்­கள் உரை­யாற்­றி­னார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>