<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="20/04/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,68,959,1503" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Sun Apr 19 2026 23:03:42 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260420T000000+5.30" edition.name="VLR" edition.area="VLR" position.section="20042026-VLR-04" position.sequence="04" ex-ref="20042026-VLR-04.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="TAUN_Eswar" fontStyle="Regular" size="34"> </lang>
	</hl3>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Bramma" fontStyle="Regular" size="36">ரூ.8000 கூப்பன் திட்டம் ‘திராவிட மாடல்’ 2.O ஆட்சியில் நிறைவேற்றப்படும்!</lang>
	</hl2>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="50">“டி.டி. நெக்ஸ்ட்” ஆங்கில நாளேட்டிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி...    </lang>
	</hl4>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup583248_04_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup583249_04_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup583250_04_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">செய்­தி­யா­ளர்:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="12.5">தி.மு.க. பல திட்­டங்­களை செயல்­ப­டுத்தி பல சாத­னை­களை எட்­டி­யுள்­ளது. அதே நேரத்­தில், வெற்­றியை உறுதி செய்ய 20-க்கும் மேற்­பட்ட கட்­சி­க­ளு­டன் பெரிய கூட்­டணி அமைப்­பது ஏன் அவ­சி­ய­மாக இருந்­தது?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">முதல்­வர் மு.க.ஸ்டாலின்:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">தேர்­த­லில் வெற்றி பெறு­வ­தற்­கான எல்லா வியூ­கங்­க ­ளை­யும் வகுக்க எல்லா கட்­சி­க­ளுக்­கும் உரிமை உண்டு. ஒத்த கருத்­து­டைய மதச்­சார்­பின்­மையை கடைப்­பி­டிக்­கிற கட்­சி­களை கூட்­ட­ணி­யில் சேர்த்து கொண்டு பய­ணிக்­கி­றோம். 2019 நாடா­ளு­மன்­றத் தேர்­தல் தொடங்கி எங்­கள் கூட்­ட­ணி­யில் அங்­கம் வகிக்­கும் கட்­சி­கள் இன்று வரை­யில் இணைந்தே பய­ணிக்­கின்­றன. ஐந்­தாண்டு திரா­விட மாடல் ஆட்­சி­யின் திட்­டங்­க­ளால் மக்­கள் பய­ன­டைந்து வரு­வ­தைக் கண்­டும், எங்­கள் கூட்­ட­ணி­தான் வெற்­றிக்­கூட்­டணி என்­பதை உணர்ந்­தும், தமிழ்­நாட்­டின் வளர்ச்­சிக்­கும் எதிர்­கால நல­னுக்­கும் திரா­விட மாடல் ஆட்­சி­தான் தொடர வேண்­டும் என்ற எண்­ணத்­தில் பல்­வேறு புதிய கட்­சி­க­ளும் எங்­களை ஆத­ரித்­துள்­ள­னர். அத­னால், கடந்த காலத்­தை­விட 
அதி­க­மான கட்­சி­கள் கூட்­ட­ணி­யில் இடம்­பெற்­றுள்­ள­னர். வலி­மை­யான எங்­க­ளது கூட்­டணி மேலும் வலி­மை­சேர்ப்­ப­தும் 
தேர்­தல் வியூ­கம்­தானே!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14">மக்­க­ளின் வர­வேற்பை பெற்ற</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14">தி.மு.க. Brand திட்­டங்­கள்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">செய்­தி­யா­ளர்:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="12.5">நீங்­கள் செயல்­ப­டுத்­திய திட்­டங்­க­ளில்,   அதிக பொது­மக்­க­ளின் பாராட்­டைப் பெற்ற 
திட்­டம் எது என்று நினைக்­கி­றீர்­கள்?</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">முதல்­வர் மு.க.ஸ்டாலின்:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">எங்­க­ளின் எல்லா திட்­டங்­க­ளும் மக்­க­ளுக்­கா­னது. ஒவ்­வொரு திட்­டத்­தி­லும் பயன் அடை­யும் பய­னா­ளி­களை பொறுத்து ஒரு திட்­டங்­க­ளில் வர­வேற்பு கூடு­த­லாக இருக்­கும். கலை­ஞர்மக­ளிர் உரிமை தொகை, விடி­யல் பய­ணம், மாண­வர்­க­ளுக்­கான காலை உணவு திட்­டம்,மாணவ, மாண­வி­க­ளின் உயர்­கல்­வியை உறுதி செய்­யும் புது­மைப்­பெண், தமிழ்ப்­பு­தல்­வன் திட்­டம், ஒவ்­வொரு இளை­ஞ­ரை­யும் போட்­டித் தேர்­வுக்கு தயார்ப்­ப­டுத்­தும்­நான் முதல்­வன் என பல திட்­டங்­களை சொல்­ல­லாம். இந்த திட்­டங்­கள் மக்­க­ளி­டையே மிகுந்த வர­வேற்பை பெற்­றி­ருக்­கின்­றன. எங்­கள் திட்­டங்­க­ளால் குடும்­பத்­தில் யாரா­வது ஒரு­வர் பயன் அடைந்­தி­ருப்­பார். அது­தான் எங்­க­ளுக்கு மகிழ்ச்­சியை தரு­கி­றது. அத­னால் பயன் அடைந்த பய­னா­ளி­கள் சொல்­லும் பாராட்­டைத்­தான் பெரு­மை­யாக நினைக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">தி.மு.க. Brand திட்­டம் என மற்­ற­வர்­க­ளால் வர்­ணிக்­கப்­ப­டும்­க­லை­ஞர் மக­ளிர் உரி­மைத்­தொகை திட்­டத்தை அறி­விக்­கும்­போது அதை செயல்­ப­டுத்த முடி­யுமா? அதற்­கான சாத்­தி­ய­கூ­று­கள் இல்லை என்­றெல்­லாம் சந்­தே­கத்தை பல­ரும் எழுப்­பி­னார்­கள். ஆனால் அதை எல்­லாம் முறி­ய­டித்து, வெற்­றி­க­ர­மாக செயல்­ப­டுத்தி 1.31 கோடி குடும்­பத்­த­லை­வி ­க­ளுக்கு மாதம் ரூ1000 உரிமை தொகை வழங்கி வரு­கி­றோம். இந்த திட்­டத்­தால் பெண்­க­ளின் பொரு­ளா­தார சுதந்­தி­ரம் காக்­கப்­பட்­டுள்­ளது, குழந்­தை­க­ளின் கல்வி , மருத்­து­வம் உள்­ளிட்ட அடிப்­படை தேவை­க­ளுக்கு அந்த தொகை உதவி வரு­கி­றது. எதிர்­கால தேவைக்­காக அவர்­கள் சேமித்­தும் வரு­வ­தாக பெண்­கள் தெரி­விக்­கின்­ற­னர். உள்­ளூர் வணி­க­மும் இதன்­மூ­லம் பய­ன­டைந்து வரு­கி­றது. எங்க அண்­ணன் தரும் பணம் என சகோ­த­ரி­கள் உரி­மை­யோடு இந்த பணத்தை பயன்­ப­டுத்தி வரு­கின்­ற­னர் . அந்த அளவு இந்த உரி­மைத் தொகை இன்று ஒவ்­வொரு குடும்­பத்­தின் அங்­க­மாக மாறி­விட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14">அ.தி.மு.க. முது­கில் ஏறி</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14">நுழைய பார்க்­கும் பா.ஜ.க.!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">செய்­தி­யா­ளர்:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="12.5">நீங்­கள் அடிக்­கடி “தமிழ்­நாடு Vs டெல்லி” என்று கூறு­கி­றீர்­கள். ஆனால் எதிர்க்­கட்­சித் தலை­வர் இது தமிழ்­நாடு தேர்­தல் என்­கி­றார். அதில் டெல்­லியை ஏன் கொண்டு வரு­கி­றீர்­கள்?</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">முதல்­வர் மு.க.ஸ்டாலின்:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">தமிழ்­நாடு சட்­டப்­பே­ர­வைத் தேர்­த­லில் டெல்­லி­யின் தலை­யீடு இல்லை என்­றால் எதற்­காக கூட்­டணி தொகு­திப் பங்­கீட்டு பேச்­சு­வார்த்தை நடத்­தக் கூட எடப்­பாடி பழ­னி­சாமி ஏன் டெல்­லிக்கு ஓடி­னார்? தமிழ்­நாட்டு மக்­க­ளின் ஆத­ர­வைப் பெற்று வெல்ல முடி­யாத பா.ஜ.க., அ.தி.மு.க. முது­கில் ஏறி புற­வா­சல் வழி­யாக நுழை­யப் பார்க்­கி­றது என்­பது வெளிப்­ப­டை­யான உண்மை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">தமிழ்­நாட்­டின் நிதி உரிமை கல்வி உரிமை மொழி உரிமை பண்­பாட்டு உரிமை என அனைத்­தின் மீதும் தொடர் தாக்­கு­தலை நிகழ்த்தி கொண்­டி­ருக்­கும் ஒன்­றிய பா.ஜ.க. அர­சி­டம் இருந்து தமிழ்­நாட்­டைப் பாது­காக்­கும் அர­ணாக மத­சார்­பற்ற முற்­போக்கு கூட்­டணி இருக்­கி­றது. மக்­கள் ஆத­ர­வு­டன் நிற்­கும் எங்­களை நேர­டி­யாக வெல்ல முடி­யாது என தெரிந்து அடி­மை­க­ளின் முது­கில் ஏறி வரு­கின்­ற­னர். அத­னால்­தான் பிர­த­மர் மோடி­யும், அமித்­ஷா­வும் NDA அரசை அமைப்­போம் என தொடர்ந்து கூறி வரு­கின்­ற­னர். தமிழ்­நாட்டை தொடர்ந்து வஞ்­சிக்­கும் டெல்­லிக்­கும் அவர்­க­ளுக்கு துணை போகும் அ.தி.மு.க.வை யும் வீழ்த்த தமிழ்­நாடு போரா­டும். இப்­போது தமிழ்­நாட்­டின் அர­சி­யல் உரி­மை­யையே பறிக்­கும் தொகுதி மறு சீர­மைப்பு எனக் கூறி நாடா­ளு­மன்ற ஜன­நா­ய­கத்­திற்கே பேரா­பத்தை பா.ஜ.க. கொண்டு வர, அதற்கு அதி.மு.க. வக்­கா­லத்து வாங்­கு­கி­றது. அத­னால்­தான் இந்த தேர்­தல் தமிழ்­நாடு அணி Vs டெல்லி அணி என்­கி­றோம். தமிழ்­நாட்­டின் நலன் காக்­கும் எங்­கள் அணிக்­கும்- அர­சி­யல் உரிமை உள்­ளிட்ட அனைத்­தி­லும் தமிழ்­நாட்டை நாசம் செய்ய காத்­தி­ருக்­கும் அவர்­கள் அணிக்­கு­மான தேர்­தல். இதில் உறு­தி­யாக தமிழ்­நாடு வெல்­லும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14">ஊழ­லின் ஊற்­றுக் கண்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14">எடப்­பாடி, புனி­தர் வேடம் போடு­கி­றார்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">செய்­தி­யா­ளர்:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">தேர்­தல் பிரச்­சா­ரங்­க­ளில் தனிப்­பட்ட தாக்­கு­தல்­கள் அதி­க­ரித்து 
வரு­வ­தாக நீங்­கள் நினைக்­கி­றீர்­களா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">முதல்­வர் மு.க.ஸ்டாலின்:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">ஐந்­தாண்­டு­
க­ளாக எதிர்க்­கட்­சித் தலை­வ­ராக நாங்­கள் என்ன செய்­தோம் என பேச­லாம். ஆட்­சிக்கு வந்­தால் என்ன செய்ய போகி­றோம் என சொல்­ல­லாம். ஆனால், அதைக்­கூட அவர்­க­ளால் சொல்ல முடி­ய­வில்லை. எங்­கள் ஆட்சி மீது குறை சொல்ல ஏது­மில்­லாத விரக்­தி­யில் தோல்வி பயத்­தில் தரக்­கு­றை­வான தனி நபர் விமர்­ச­னங்­களை, அவ­தூ­று­களை பேசி வரு­கின்­றன எதிர்க்­கட்­சி­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">எதிர்க் கட்­சித் தலை­வர் எடப்­பாடி பழ­னி­சாமி அவர்­கள் பிரச்­சா­ரத்­தில் அரு­வ­ருக்­கத்­தக்க வகை­யில் தொடர்ந்து பேசி வரு­கி­றார். ஊழ­லின் ஊற்­றுக்­கண்­ணாக ஆட்சி நடத்­தி­ய­வர் இன்று புனி­தர் வேடம் போட்டு பொய் பேசு­கி­றார். துணை முதல்­வர் உத­ய­நிதி ஸ்டாலின் அவர்­க­ளைப் பற்றி மிக மோச­மா­கப் பேசி­னார். அடுத்து என்னை பற்றி சொல்­லும் போது ‘‘ஸ்டாலின் ஆட்­சி­யில்­கொ­ரோனா இருந்­தி­ருந்­தால் ஸ்டாலி னே போய்ச் சேர்ந்­தி­ருப்­பார்’’ என்­றார். நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் கனி­மொழி அவர்­க­ளைப் பற்றி அரு­வ­ருக்­கத்­தக்க வகை­யில் பேசி­னார். தொடர்ந்து அப்­ப­டிப் பேசு­வ­தையேபழ­னி­சாமி வழக்­க­மாக வைத்­தி­ருக்­கி­றார். இதை­யெல்­லாம் பார்க்­கும்­போது- தனக்கு என சொல்ல சாதனை இல்­லாத கார­ணத்­தால்- தி.மு.க. அர­சின் சாத­னை­களை திசை­தி­ருப்ப திட்­ட­மிட்­டே ­தான் அவர் இப்­படி அவ­தூறு பேசு­கி­றார் எனத் தெரி­கி­றது.இதற்­கெல்­லாம் தமிழ்­நாட்டு மக்­களே தக்க பாடம் புகட்­டு­வார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14">அற­நி­லை­யத் துறை­யில்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14">எண்­ணற்ற சாத­னை­கள்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">செய்­தி­யா­ளர்:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="12.5">இந்து சமய அற­நி­லை­யத் துறை தொடர்­பான அறி­விப்­பு­கள், கோவில் குட­மு­ழுக்கு உள்­ளிட்­டவை தேர்­தல் அறிக்­கை­யில் சேர்க்­கப்­பட்­ட­தற்கு கார­ணம் என்ன?</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">முதல்­வர் மு.க.ஸ்டாலின்:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">இந்து சமய அற­நி­லை­யத்­துறை என்ற அர­சுத்­துறை உள்­ளது. அதற்கு தனி அமைச்­சர் இருக்­கி­றார். அந்­தத்­து­றை­யின் சார்­பில் என்ன செய்­யப் போகி­றோம் என தேர்­தல் வாக்­கு­று­தி­யில் அறி­விப்­ப­தில் தவ­றில்­லையே. அதி­லும் குறிப்­பாக திரா­விட மாடல் அர­சின் இந்து சமய அற­நி­லை­யத்­து­றை­யில் எண்­ணற்ற சாத­னை­களை செய்­தி­ருக்­கி­றோம். 4 ஆயி­ரத்­துக்­கும் மேற்­பட்ட திருக்­கோ­யில்­க­ளுக்கு குட­மு­ழுக்கு நடத்­தி­யுள்­ளோம். ஆக­வே
­ம­தச்­சார்­பின்­மையை பேணிக்­காக்­கும் வகை­யில் தி.மு.க. தேர்­தல் அறிக்­கை­யில் இந்து, இசு­லா­மிய, கிறிஸ்­து­வம் என அனைத்து சம­யங்­க­ளுக்­கான வாக்­கு­று­தி­க­ளுமே இடம்­பெற்­றுள்­ளன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14">மோடி அர­சின் கடன்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14">உயர்வை பற்றி எடப்­பாடி பேசு­வாரா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">செய்­தி­யா­ளர்:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5"> </lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="12.5">எதிர்க்­கட்­சித் தலை­வர் எடப்­பாடி கே. பழ­னி­சாமி ஐந்து ஆண்­டு­க­ளில் ரூ. 5 லட்­சம் கோடி கடன் எடுத்­த­தாக குற்­றம்­சாட்­டு­ கி­றார். அதற்கு உங்­கள் பதில் என்ன?</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">முதல்­வர் மு.க.ஸ்டாலின்:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">தமிழ்­நாட்டு அர­சின் நிதி நிலையை அத­ல­பா­தா­ளத்­தில் தள்ளி விட்­டுப் போன அவ­ருக்கு நிதி மேலாண்மை பற்­றிப் பேச தகுதி இல்லை. திரா­விட மாடல் அர­சில்­தான் பொரு­ளா­தார ஆய்­வுக்­குழு அமைத்து- நிதி மேலாண்­மையை சீராக்­கி­யுள்­ளோம். ஒன்­றிய  பா.ஜ.க. அர­சின் பார­பட்ச GST நிதி பங்­கீடு, கல்வி நிதி , குடி­நீர் திட்ட நிதி, நூறு நாள் வேலை திட்ட நிதி என எந்த ஒரு நிதி­யை­யும் முறை­யாக விடு­விக்­க­வில்லை. கன­மழை, புய­லால் தமிழ்­நாட்டு மக்­கள் பாதிக்­க­பட்­ட­போது கூட நிவா­ரண நிதி அளிக்­க­வில்லை. ஒன்­றிய பட்­ஜெட்­டில் தமிழ்­நாட்­டிற்­கென எந்த வளர்ச்சி திட்­டங்­க­ளும் அறி­விக்­க­வில்லை. தமிழ்­நாட்­டின் மீது பொரு­ளா­தார தாக்­கு­தலை ஒன்­றிய பா.ஜ.க. அரசு மறை­மு­க­மாக நடத்தி வரு­கி­றது. அதற்­காக தமிழ்­நாட்டு மக்­கள் பாதிக்­கப்­பட வேண்­டுமா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">ஒன்­றிய பா.ஜ.க. அரசு நிதி நெருக்­க­டி­கள் கொடுத்­தா­லும் தமிழ்­நாட்­டின் தொழில் வளத்தை பெருக்கி தமிழ்­நாட்­டின் பொரு­ளா­தா­ரத்தை 30 லட்­சம் கோடி­யாக உயர்த்தி உள்­ளோம். கடந்த ஐந்­தாண்டு கால தி.மு.க. ஆட்­சி­யில் (2021–-26) தமிழ்­நாட்­டின் கடன் அளவு 96% மட்­டுமே அதி­க­ரித்­துள்­ளது. ஆனால் அதே­ச­ம­யம், அ.தி.மு.க. ஆட்­சி­யில் (2016-–21) இது 128% ஆக அதி­ரித்­தி­ருந்­தது. மேலும், நமது மொத்த மாநில உள்­நாட்டு உற்­பத்­தி­யு­டன் (GSDP) ஒப்­பி­டும்­போது கடன் விகி­தம் 26.43% மட்­டுமே உள்­ளது. இது அனு­ம­திக்­கப்­பட்ட 28.7% க்குள்­தான் இருக்­கி­றது. கடந்த அதி.மு.க. ஆட்­சி­யில் வாங்­கப்­பட்ட கட­னவை விட குறைந்த விகி­தத்­தில்­தான் கடன் வாங்­கப்­பட்­டுள்­ளது. பழ­னி­சாமி ஆட்­சி­யில் எந்த நலத் திட்­டங்­க­ளும் வழங்­கா­ம­லேயே கடன் அளவு கடு­மை­யாக அதி­க­ரித்­தது. ஆனால் எங்­க­ளது ஆட்­சி­யில் மக­ளிர் உரி­மைத் தொகை, விடி­யல் பய­ணம், புது­மைப்­பெண், தமிழ்ப்­பு­தல்­வன், நான் முதல்­வன் உள்­ளிட்ட நலத்­திட்­டங்­க­ளும் அடிப்­படை கட்­ட­மைப்­பு­க­ளும் செயல்­ப­டுத்தி வரு­கின்ற போதும் கடன் அளவை கட்­டுக்­குள் வைத்­துள்­ளோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14">220 சத­வீ­தம் அதி­க­ரித்த</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14">இந்­தி­யா­வின் மொத்­தக் கடன்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">எங்­களை பார்த்து கேள்வி எழுப்­பும்  பழ­னி­சாமி மோடி அர­சின் கடன் உயர்வை பற்றி கேட்­பாரா? மோடி அரசு கடனே வாங்­கா­மல்­தான் இந்­தி­யாவை ஆட்சி செய்து கொண்­டி­ருக்­கி­றதா? பா.ஜ.க. ஆட்­சிக்கு வரு­வ­தற்கு முன்பு பிர­த­மர் மன்­மோ­கன் சிங் ஆட்­சி­யில் 2014 மார்ச் நில­வ­ரப்­படி இந்­தி­யா­வின் மொத்­தக் கடன் சுமார் 55.87 லட்­சம் கோடி ரூபாய். தற்­போது மோடி ஆட்­சி­யில் கடன் எவ்­வ­ளவு தெரி­யுமா? 2026 பிப்­ர­வ­ரி­யில் 180 லட்­சம் கோடி ரூபாயை கடன் தாண்­டி­விட்­டது. மோடி­யின் கடந்த 12 ஆண்டு கால ஆட்­சி­யில் இந்­தி­யா­வின் மொத்­தக் கடன் சுமார் 220% அதி­க­ரித்­து­விட்­டது. மோடி ஆட்­சி­யில் இந்த வர­லாறு காணாத கடன், பழ­னி­சா­மி­யின் கண்­ணுக்­குத் தெரி­ய­வில்­லையா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14">பொரு­ளா­தார வளர்ச்­சி­யில்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14">நம்­பர் 1 மாநி­லம் தமிழ்­நாடு!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">செய்­தி­யா­ளர்:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5"> </lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="12.5">புதிய திட்­டங்­கள் கடன் சுமையை அதி­க­ரிக்­குமா? கடன் அதி­க­ரிக்­கா­மல் திட்­டங்­களை செயல்­ப­டுத்த அர­சுக்கு திட்­ட­மி­டல் உள்­ளதா?</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">முதல்­வர் மு.க.ஸ்டாலின்:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">வீழ்ச்­சி­யில் இருந்த தமிழ்­நாட்­டின் பொரு­ளா­தா­ரத்தை மீட்டு 11.19% என்ற இரட்டை இலக்க பொரு­ளா­தார வளர்ச்சி விகி­தத்­து­டன் இன்று இந்­தி­யா­வி­லேயே No 1 மாநி­ல­மாக தமிழ்­நாட்டை உயர்த்தி உள்­ளோம். அடுத்த ஐந்­தாண்­டில் தமிழ்­நாட்­டின் பொரு­ளா­தா­ரத்தை 1 டிரில்­லி­யன் டாலர் அளவு உயர்த்த இலக்கு நிர்­ண­யித்து அதற்­கான திட்­டங்­களை வகுத்து செய­லாற்றி வரு­கி­றோம். ஆகவே மக்­க­ளுக்­கான நலத்­திட்­டங்­களை வழங்­கு­வ­தற்கு எந்த வித பொரு­ளா­தார தடை­க­ளும் இருக்­காது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">கடன் வாங்­கா­மல் உல­கில் குடும்­பங்­
களோ, நிறு­வ­னங்­களோ, அர­சு­களோ நடப்­ப­தில்லை. இந்­தி­யா­வில் மாநில அர­சு­கள் கடன் வாங்­கு­வ­தற்­கான உச்ச வரம்­பு­கள் நிர்­ண­யிக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன. அந்­தந்த மாநி­லத்­தின் ஒட்­டு­மொத்த உள்­நாட்டு உற்­பத்தி (GSDP) மதிப்­பைப் பொறுத்­துத்­தான் மாநி­லங்­கள் கடன் வாங்க முடி­யும். அந்த சீலிங் லிமிட்டை தமிழ்­நாடு அரசு தாண்­ட­வில்லை. விதி­களை மீறி கடன் பெற­வில்லை. ஒன்­றிய அரசு எப்­ப­டிக் கடனை வாங்­கு­கி­றதோ அதே அள­வு­கோ­லைத்­தான் தமிழ்­நாடு அர­சும் பின்­பற்­று­ கி­றது. எங்­கள் திட்­டங்­கள் எல்­லாமே முறை­யான நிதி ஆலோ­ச­னைக்­குப் பிறகே அறி­விக்­கப்­ப­டு­கின்­றன. செயல்­ப­டுத்­தப்­ப­டு ­கின்­றன!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">செய்­தி­யா­ளர்:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5"> </lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="12.5">பிற கட்­சி­க­ளைச் சேர்ந்த வேட்­பா­ளர்­க­ளுக்கு, குறிப்­பாக அ.தி.மு.க.விலி­ருந்து வந்­த­வர்­க­ளுக்கு வாய்ப்பு அளிக்­கப்­பட்­டுள்­ளது. இது அந்­தத் தொகு­தி­க­ளில் தி.மு.க. உறுப்­பி­னர்­க­ளின் மன உறு­தியை பாதிக்­காதா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">முதல்­வர் மு.க.ஸ்டாலின்:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">கழ­கத் தொண்­டர்­க­ளின் மன நிலை எனக்­குத் தெரி­யும். எனது தேர்­தல் யுக்தி எனது அன்பு உடன்­பி­றப்­பு­க­ளுக்­குத் தெரி­யும். ஆக­வே­தான் கழ­கத் தொண்­டர்­கள் அனை­வ­ரும் தேர்­தல் களத்­தில் பம்­ப­ர­மாக சுழன்று பணி­யாற்­றிக் கொண்­டி­ருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14">குற்­றங்­களைத் தடுப்­ப­தில்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14">விரைந்து நட­வ­டிக்கை!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">செய்­தி­யா­ளர்:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="12.5">அ.தி.மு.க. மட்­டு­மல்­லா­மல் அனைத்துஎதிர்க்­கட்­சி­க­ளும் சட்­டம் ஒழுங்கு குறித்து குற்­றம்­
சாட்­டு­கின்­றன. மது மற்­றும் கஞ்சா போன்ற போதைப்­பொ­ருட்­கள் கட்­டுப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை என்ற 
குற்­றச்­சாட்­டு­க­ளும்உள்­ளன. உங்­கள் பதில் என்ன?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">முதல்­வர் மு.க.ஸ்டாலின்:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">கடந்த அதி.மு.க. ஆட்­சியை விட எங்­க­ளது ஆட்­சி­யில் சட்­டம் ஒழுங்கு சிறப்­பாக உள்­ளது. குற்­றங்­க­ளைத் தடுப்­ப­தி­லும் சரி குற்­ற­வா­ளி­க­ளுக்கு விரைந்து தண்­டனை பெற்­றுத்­த­ரு­வ­தி­லும் சரி முன்­னோடி மாநி­ல­மாக தமிழ்­நாடு உள்­ளது. சட்­டம் ஒழுங்கு பற்றி குறை கூறு­வ­தெல்­லாம் வெற்று அவ­தூ­று­கள். குட்கா மாமூல் வசூல் செய்து தமிழ்­நாட்­டில் மூலை முடுக்­கெல்­லாம் குட்­காவை நட­மாட விட்­டுப் போனது எடப்­பாடி பழ­னி­சாமி தலை­மை­யி­லான அதி.மு.க.தான்! கடந்த அ.தி.மு.க. ஆட்­சி­யில் அமைச்­சரே போதைப்­பொ­ருள் விற்­ப­னைக்கு லஞ்­சம் வாங்­கி­யது தொடர்­பான வழக்­கு­கள் CBI விசா­ர­ணை­யில் 
உள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">பிர­த­மர் மோடி­யின் குஜ­ராத் மாநி­லம்­தான் போதை பொருள் குடோ­னாக இருந்து வரு­கி­றது என்­பது புள்­ளி ­வி­வ­ரங்­களை புரட்­டிப் பார்த்­தாலே தெரி­யும்.ஆனால் நாங்­கள் ஆட்­சிப் பொறுப்­பிற்கு வந்­த­வு­டன் போதைப் பொருள் ஒழிப்­பில் தனிக் கவ­னம் செலுத்தி கடும் நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது. சொத்­துக்­கள் பறி­மு­தல், வங்கி கணக்கு முடக்­கம் என தி.மு.க. அரசு போல் போதைப் பொருட்­க­ளுக்கு எதி­ராக அ.தி.மு.க. ஆட்­சி­யில் நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­ட­வில்லை. அது போன்ற வழக்­கு­க­ளில் தி.மு.க. ஆட்சி போல் அதி.மு.க. ஆட்­சி­யில் விரைந்து தண்­டனை வாங்­கிக் கொடுக்­கப்­பட வில்லை.  ஆகவே அதி.மு.க.- பா.ஜ.க. வின­ருக்கு தமிழ்­நாட்டை பற்றி பேச எந்த தகு­தி­யும் இல்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14">‘நீட்’: எங்­கள் போராட்­டம்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14">எல்லா வகை­யி­லும் தொட­ரும்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">செய்­தி­யா­ளர்:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5"> </lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="12.5">கல்­வியை மாநில பட்­டி­ய­லில் மீண்­டும் கொண்டு வர­வும், NEET தேர்­வி­லி­ருந்து விலக்கு பெற­வும் தீர்வு எப்­போது கிடைக்­கும்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">முதல்­வர் மு.க.ஸ்டாலின்:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">தமி­ழ­கத்­தில் நீட் தேர்வை ரத்து செய்து, 12-ஆம் வகுப்பு மதிப்­பெண்­கள் அடிப்­ப­டை­யில் மருத்­துவ மாண­வர் சேர்க்கை நடத்த வேண்­டும் என்­ப­தில் தி.மு.க. அரசு உறு­தி­யாக உள்­ளது. நீட் தேர்­வால் ஏற்­பட்­டுள்ள பாதிப்­பு­கள் குறித்து ஆய்வு செய்ய, ஓய்வு பெற்ற நீதி­பதி ஏ.கே. ராஜன் தலை­மை­யில் குழுவை அமைத்­தோம். அதன் பரிந்­து­ரை­யின் அடிப்­ப­டை­யில் சட்­டப் போராட்­டங்­களை முன்­னெ­டுத்­தோம். நீட் தேர்­வில் இருந்து விலக்கு கோரும் மசோதா சட்­ட­மன்­றத்­தில் ஒரு­ம­ன­தாக நிறை­வேற்­றப்­பட்டு நீண்ட போராட்­டத்­திற்கு பிறகு குடி­ய­ர­சுத் தலை­வ­ருக்கு அனுப்பி வைத்­தோம். நீட் தேர்வு கூட்­டாட்­சித் தத்­து­வத்­திற்கு எதி­ரா­னது. மாநி­லங்­க­ளின் கல்வி உரி­மை­யைப் பறிக்­கி­றது என்­றும் கூறி, உச்ச நீதி­மன்­றத்­தில் வழக்கு தொடர்ந்­தி­ருக்­கி­றோம். நீட் தேர்­வுக்கு எதி­ராக 50 லட்­சம் கையெ­ழுத்­து­க­ளைப் பெற்று குடி­ய­ர­சுத் தலை­வ­ருக்கு அனுப்­பி­னோம். நீட் தேர்­வில் நடக்­கும் முறை­கே­டு­க­ளைக் கண்­டித்து போராட்­டங்­கள் நடத்­தப்­பட்­டன.நீட் விலக்கு தொடர்­பா­கத் தொடர்ந்து அனைத்­துக் கட்­சிக் கூட்­டங்­களை நடத்தி, சட்­டப் போராட்­டத்­தைத் தீவி­ரப்­ப­டுத்­தி­ னோம். பிர­த­ம­ரைச் சந்­திக்­கும் போதெல்­லாம் நீட் விலக்கு மசோ­தா­வுக்கு ஒப்­பு­தல் அளிக்க வேண்­டும் என்று அழுத்­தம் கொடுத்து வரு­கி­றோம். தி.மு.க. அரசு ஆட்­சி­யி­லி­ருந்து நீட் தேர்வை ரத்து செய்ய என்ன முன்­மு­யற்­சி­கள் எடுக்க வேண்­டுமோ- அதை­யெல்­லாம் எடுத்­துள்­ளோம். இவை­யெல்­லாம் ஒரு பக்­கம் செய்து கொண்­டி­ருந்­தா­லும் மோடி அரசு தமிழ் மாண­வர்­களை வஞ்­சிக்­கி­றது. அதற்கு அ.தி.மு.க.வும் துணை போகி­றது.தி.மு.க. அங்­கம் வகிக்­கும் இந்­தியா கூட்­ட­ணி­யின் அரசு ஒன்­றி­யத்­தில் அமைந்­த­வு­டன் தீர்வு கிடைக்­கும். அது­வரை எங்­கள் போராட்­டம் எல்லா வகை­யி­லும் தொட­ரும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">செய்­தி­யா­ளர்:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="12.5">கடந்த ஐந்து ஆண்­டு­க­ளில் தி.மு.க. அரசு சந்­தித்த முக்­கிய சவால்­கள் என்ன? மீண்­டும் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்­டால் எதிர்­கால சவால்­கள் என்ன என்று நினைக்­கி­றீர்­கள்?</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">முதல்­வர் மு.க.ஸ்டாலின்:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">2021-ஆம் ஆண்­டுக்கு முந்­தைய 10 ஆண்டு கால அதி.மு.க. ஆட்­சி­யால் செய­லி­ழந்த தமிழ்­நாட்டை மீண்­டும் வளர்ச்­சியை நோக்கி பய­ணிக்க செய்­வ­து­தான் பெரும் சவா­லாக இருந்­தது. அது­வும் கொரோனா இரண்­டாம் அலை­யின் தாக்­கம் வேறு உச்­சத்­தில் இருந்­தது, ஒன்­றிய அர­சின் ஓர­வஞ்­சனை வேறு தொடர்ந்­தது. ஆனால், அனைத்­தை­யும் சமா­ளித்து இன்று தமிழ்­நாட்­டின் வளர்ச்­சியை நான்கு கால் பாய்ச்­ச­லில் பய­ணிக்க வைத்து விட்­டோம். இனி­வ­ரும் காலங்­க­ளில் தமிழ்­நாட்­டின் வளர்ச்­சியை அடுத்த கட்­டத்­திற்கு எடுத்து செல்­வது, உட்­கட்­மைப்பு, கல்வி, மருத்­து­வம் ஆகி­ய­வற்­றிற்கு அதிக முக்­கி­யத்­து­வம் அளிப்­பது, AIதொழில்­நுட்­பத்­திற்கு ஏற்­ற­படி இளை­ஞர்­க­ளின் திறனை வளர்த்து தயார்­ப­டுத்­து­வது, தமிழ் நாட்­டின் மொழி, பண்­பாடு, பொரு­ளா­தா­ரம் மீதான டெல்­லி­யின் படை­யெ­டுப்பை தொடர்ந்து எதிர்த்து நமது உரி­மையை நிலை­நாட்­டு­வது இவற்றை முன் நிறுத்தி ஆட்சி அமை­யும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14">செய்­தி­யா­ளர்:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="12.5">தேர்­த­லில் பல முனைப் போட்டி நிலவி வரு­கி­றது. இது தி.மு.க. கூட்­ட­ணிக்கு சாத­கமா அல்­லது பாத­கமா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">முதல்­வர் மு.க.ஸ்டாலின்:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">எத்­தனை முனை போட்­டி­யாக இருந்­தா­லும் மீண்­டும்­வெல்­வது தி.மு.க. கூட்­ட­ணி­தான்.களம் தி.மு.க.விற்கு சாத­க­மா­கவே இருக்­கி­றது. திரா­விட மாடல் 2.0 ஆட்சி அமை­வதை நீங்­க­ளும் பார்க்­கத்­தான் போகி­றீர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">செய்­தி­யா­ளர்:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="12.5">மீண்­டும் ஆட்­சிக்கு வரும் என்ற நம்­பிக்­கை­யில் தி.மு.க.  உள்­ளது. திரா­விட மாடல் 2.0-ல் முன்­னு­ரிமை பெறும் துறை­கள் எவை?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">முதல்­வர் மு.க.ஸ்டாலின்:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">கல்வி, மருத்­து­வம், தொழில் வளம், சமூக மேம்­பாடு ஆகி­ய­வற்­றிற்கு கூடு­தல் முக்­கி­யத்­து­வம் அளித்து செய­லாற்­று­வோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">செய்­தி­யா­ளர்:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="12.5">கடந்த ஐந்து ஆண்­டு­க­ளில் அர­சில் இருந்­த­போது நீங்­கள்   மேம்­ப­டுத்த வேண்­டி­யது எது என நினைக்­கி­றீர்­கள்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">முதல்­வர் மு.க.ஸ்டாலின்:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">திரா­விட மாடல் அர­சின் ஐந்­தாண்டு காலம் சாத­னை­கள் நிரம்­பி­யது. நல்­லாட்­சிக்கு இலக்­க­ண­மாக வெளிப்­ப­டை­யான நிர்­வா­கத்தை அளித்து மக்­க­ளின் மன­தில் இடம்­பி­டித்­துள்­ளோம் என்­பதே எனது பதில்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">¬¬இவ்­வாறு முதல்­வர் மு.க. ஸ்டாலின் அவர்­கள் பேட்­டி­ய­ளித்­தார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>