<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="21/04/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="384,34,960,764" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="4"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Tue Apr 21 2026 03:31:50 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260421T000000+5.30" edition.name="CBE" edition.area="CBE" position.section="21042026-CBE-02" position.sequence="02" ex-ref="21042026-CBE-02.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="20">கோவை </lang>
	<lang class="3" style="Headline1"  font="Arial" fontStyle="Bold"  size="20">21.04.2026</lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="27">‘வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சீர்திருத்த மசோதாவுக்கு’ எதிர்ப்புத் தெரிவித்ததற்கு நன்றி!</lang>
	<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="27"> </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="43">தி.மு.க. தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவு! </lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="26">முதல்வர் மு.க.ஸ்டாலினை – ரோமன் கத்தோலிக்க – இறைச்சபை – தென்னிந்தியத் திருச்சபை உள்ளிட்ட கிறிஸ்துவ அமைப்புகளின் நிர்வாகிகள் சந்தித்து தெரிவித்தனர்!</lang>
	</hl4>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup361639_02_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="2" source="21col_02_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">சென்னை, ஏப். 21 –</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">சிறுபான்மையினரான கிறிஸ்துவமக்களின்  பாதுகாவலர் முதலமைச்சர்– கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களை ரோமன் கத்தோலிக்க – இறைச்சபை, தென்னிந்தியத் திருச்சபை (சிஎஸ்ஐ), இந்திய தேசிய தேவாலயங்கள் பேரவை , தமிழ்நாடுஆயர் பேரவை (ரோமன் கத்தோலிக்கம்),ஆர்த்தடாக்ஸ் திருச்சபை,  ஜீசஸ் கால்ஸ் அமைப்பு, ஏ.ஜி.திருச்சபை, இந்திய நற்செய்தி திருச்சபை, சிரியோ-மலபார் கத்தோலிக்க திருசசபை, ஈயேசு மீட்கிறார் அமைப்பு, தமிழ் சுவிசேஷலூத்தரன் தேவாலயம், இரும்புலியுர் பெந்தேகோஸ்தே மிஷன் ஆகிய கிறிஸ்துவ  அமைப்பு களின் பேராயர், முன்னாள் பேராயர் மற்றும் நிர்வாகிகள் என 40க்கும் மேற்பட்டோர் நேரில் சந்தித்து “வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்கு முறை சீர்திருத்த மசோதா 2026”-விற்கு எதிர்ப்பு தெரிவித்ததற்கு நன்றி தெரிவித்தும் -  தமிழ்நாடு சட்டப் பேரவை பொதுத்தேர்தலில் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சிகளுக்கு  ஆதரவு அளிப்பதாக உறுதி அளித்தனர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தமிழ்நாடு முதலமைச்சர் கழகத்தலைவர்  மு.க.ஸ்டாலின் அவர்களை,நேற்று முன்தினம் (19.04.2026) காலை,  சித்தரஞ்சன் சாலையில் உள்ள அவரது இல்லத்தில், ரோமன் கத்தோலிக்க – இறைச்சபை, தென்னிந்தியத் திருச்சபை (சிஎஸ்ஐ), இந்திய தேசிய தேவாலயங்கள் பேரவை , தமிழ்நாடு ஆயர் பேரவை (ரோமன் கத்தோலிக்கம்), ஆர்த்தடாக்ஸ் திருச்சபை,  ஜீசஸ் கால்ஸ் அமைப்பு, ஏ.ஜி.திருச்சபை, இந்திய நற்செய்தி திருச்சபை, சிரியோ-மலபார் கத்தோலிக்க திருசசபை, ஈயேசு மீட்கிறார் அமைப்பு, தமிழ் சுவிசேஷலூத்தரன் தேவாலயம், இரும்புலியுர் பெந்தேகோஸ்தே மிஷன் ஆகிய கிறிஸ்துவ  அமைப்பு களின் பேராயர், முன்னாள் பேராயர் மற்றும் நிர்வாகிகள் என 40க்கும் மேற்பட்டோர் நேரில் சந்தித்து கிறிஸ்துவ சொத்துகள் மற்றும் தேவாலாயங்களை அழிக்கக் கூடிய “வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்கு முறை சீர்திருத்த மசோதா2026”-வை எதிர்த்து முதலாவது நபராக குரல் கொடுத்து, தொடர்ந்து அம்மசோதாவை திரும்ப வேண்டுமென்று வலியுறுத்தி வருவதற்காக நன்றி தெரிவித்தனர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அதுசமயம் சிறுபான்மையினர் நலனுக்காக முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் காலத்திலிருந்தே பாடுபட்டு வரும் தி.மு.க.ழகத்தை தலைமையேற்று வழிநடத்தி வரும் திராவிட மாடல் ஆட்சி நாயகர்   முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களை நன்றி கூறி பாராட்டினை தெரிவித்த தோடு, நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் தோளோடு தோளாக,  அத்துணை கிறிஸ்துவ அமைப்புகளும் – கிறிஸ்துவ மக்களும், கழகத் தலைவர்  அவர்கள் தலைமை யிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவு அளிப்பதோடு, அவர்கள் வெற்றிபெறஉறுதுணையாக இருந்து செயலாற்றி, மதவாத கட்சியான பாஜக கூட்டணியைதோற்கடிப்போம் என்று உறுதி பூண்டனர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">மேலும், இரண்டு நாட்களுக்கு முன்பு கருஞ்சட்டை அணிந்து, கருப்பு கொடியேற்றி, மறுசீரமைப்பு திருத்தச் சட்ட நகலை எரித்து, இந்தியாவையே தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்து, பாசிச பாஜக அரசு கொண்டு வந்த “தொகுதி மறுசீரமைப்பு திருத்தச் சட்டத்தை” பாராளுமன்றத்தில் தோற்கடித்தைப் போலவே, கிறிஸ்துவ மக்களுக்கு எதிராக ஒன்றிய பாஜக அரசு கொண்டு வரும் இந்த “வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சீர்திருத்த மசோதா 2026-வினையும்  பாராளுமன்றத்தில் தோற்கடித்திட வேண்டுமென கோரிக்கை வைத்தனர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இந்நிகழ்வில் கழக  மாநிலங் களவை உறுப்பினரும் – மூத்தவழக்கறிஞருமான பி.வில்சன் எம்.பி.உடனிருந்தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">கழகத் தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்களை நேற்று முன்தினம் (19.4.2026) அவரது இல்லத்தில், ரோமன் கத்தோலிக்க - இறைச்சபை ஆட்சிப் பயிற்சிப் பள்ளியின் சென்னை மயிலாப்பூர் மறைமாவட்டத்தின் முன்னாள் பேராயர் ஏ.எம். சின்னப்பா, அருட்தந்தை ஆல்டோ, தென்னிந்தியத் திருச்சபையின் (CSI) ஆயர் அருட்தந்தை பவுல் பிரான்சிஸ் ரவிச்சந்திரன், பொதுச் செயலாளர் வழக்கறிஞர் சி. பெர்னந்தாஸ் ரத்தின ராஜா, செபாஸ்டியன், எபெனேசர், இந்திய தேசிய தேவாலயங்கள் பேரவை பொதுச் செயலாளர் (NCCI) அருட்தந்தை ஆசிர் எபெனேசர், தமிழ்நாடு ஆயர் பேரவையின் (ரோமன் கத்தோலிக்கம்) துணை பொதுச் செயலாளர் அருட்தந்தை பிரான்சிஸ் ஜோசப், அருட்தந்தை டாக்டர். வின்சென்ட் சின்னதுரை, ஜேக்கபைட் சிரியன் ஆர்த்தடாக்ஸ் திருச்சபையின் அருட்தந்தை பேசில், ஜீசஸ் கால்ஸ் அமைப்பின் திருமதி ஸ்டெல்லா ரோமோலா பால் தினகரன், டேனியல் டேவிட்சன், ஏ.ஜி. திருச்சபையின் போதகர் ஆலன், இந்திய நற்செய்தி திருச்சபையின் (Evangelical Church of India) துணைத் தலைவர் ஆயர் கதிரோலி மாணிக்கம், தமிழ்நாடு லத்தீன் ஆயர் மாநாட்டின் பிரதிநிதி அருட்தந்தை பிரான்சிஸ் ஸ்டீபன், சிரியோ-மலபார் கத்தோலிக்க திருச்சபையின் அருட்தந்தை ஷெபின், இயேசு மீட்கிறார் அமைப்பின் பிரதிநிதி சகோதரர் கே. பொன் பாண்டிஇன்பரசு, சகோதரர் ஜே. ரத்தன் ராஜ், மெதடிஸ்ட் சர்ச் ஆஃப் இந்தியா மெட்ராஸ் மண்டல மாநாட்டின் பிஷப் திரு. சி.ஜி. தயானந்த், அருட்தந்தை டாக்டர் எஸ்.சி. பால் ராஜ், செல்வின் ஜெபராஜ், டெர்ரி ராக்லேண்ட், தமிழ் சுவிசேஷ லூத்தரன் தேவாலயத்தின் அருட்தந்தை பாஸ்டர் சாம்சன், இரும்புலியூர் பெந்தேகோஸ்தே மிஷனின் சகோதரர் டேவிட் பிரவீன், இம்மானுவேல் டேவிட், ஆல்வின் பிரபு, செல்வம் மற்றும் நிர்வாகிகள் சந்தித்து, வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்குமுறை) சட்ட மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்ததற்கும், சிறுபான்மையின மக்களுக்கு பாதுகாவலராக விளங்குவதற்கும் நன்றி தெரிவித்தனர். உடன் நாடாளுமன்ற உறுப்பினர் பி. வில்சன், வழக்கறிஞர் ரிச்சர்ட் வில்சன் ஆகியோர் உள்ளனர்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>