<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="21/04/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,722,959,1251" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="6"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Tue Apr 21 2026 03:37:44 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260421T000000+5.30" edition.name="CBE" edition.area="CBE" position.section="21042026-CBE-11" position.sequence="11" ex-ref="21042026-CBE-11.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="62">‘திராவிட மாடல்’ ஆட்சியே பெண்களுக்கான ஆட்சிதான்! </lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="33">டெல்டா பரப்புரையில் - மோடிக்கு - கனிமொழி கருணாநிதி எம்.பி. பதிலடி!</lang>
	</hl2>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="Kanimozhi2_11_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="9">நாகை, ஏப். 21 –</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="9">நாகப்­பட்­டி­னம் தொகுதி தி.மு.க. கூட்­டணி         வேட்­பா­ளர் ம.ம.க. தலை­வர் ஜவா­ஹி­ருல்லா, திருத்­து­றைப்­பூண்டி இந்­திய கம்­யூ­னிஸ்டு வேட்­பா­ளர் மாரி­முத்து ஆகி­யோ­ருக்­காக தி.மு.க. துணைப் பொதுச்செய­லா­ள­ரும், நாடா­ளு­மன்ற கழக குழுத் தலை­வ­ரு­ மான கனி­மொழி கரு­ணா­நிதி அவர்­கள் ஏப்­ரல் 19 ஆம்தேதி கடும் வெயி­லில் பரப்­புரை மேற்­கொண்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9">அப்­போது அவர் பேசு­கை­யில் குறிப்பிட்டதாவது:–
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9">“நாம் மக்­களை சந்­தித்து எங்­க­ளு­டைய கூட்­ட­ணிக்கு வாக்­க­ளிக்க வேண்­டும் என்று கேட்­கும்­பொ­ழுது ஒரு உரி­மை­யோடு வந்து மக்­களை   சந்­தித்து வாக்கு கேட்­கி­றோம். ஏனென்­றால் மக்­க­ளுக்கு தந்­தி­ருக்­கக்­கூ­டிய வாக்­கு­று­தி­களை எல்­லாம் நிறை­வேற்றி தந்­தி­ருக்­கி­றோம் என்ற அந்த உரி­மை­யோடு வந்து உங்­களை சந்­தித்து வாக்கு கேட்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9">ஆனால் எதி­ர­ணி­யிலே இருக்­கக்­கூ­டி­ய­வர்­கள் உங்­க­ளைப்  பார்த்து ஓட்டு கேட்­கும்­போது என்ன சொல்லி கேப்­பாங்க?   ‘தமிழ்­நாட்­டுக்கு தொடர்ந்துதுரோ­கம் செய்து கொண்­டி­ருக்­கி­றோம். எங்­க­ளுக்கு ஓட்டு போடுங்­க’ன்னா அவங்­க­ளால கேட்க முடி­யும்?
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9">இன்று நம்­மு­டைய வேட்­பா­ள­ராக இங்கே நிற்­கக்­கூ­டிய பேரா­சி­ரி­யர் ஜவா­ஹி­ருல்லா அவர்­கள் பாப­நாச ம் சட்­ட­மன்ற உறுப்­பி­ன­ராக பணி­யாற்­றி­னார். அங்கே  சுவாமி மலை­யிலே அங்கே இருக்­கக்­கூ­டிய அந்த முரு­கன் கோயி­லுக்கு லிப்ட் வேண்­டும் என்று கேட்டு அங்கே இருக்­கக்­கூ­டிய பக்­தர்­க­ளுக்­காக அதை பெற்று தந்­தது நம்­மு­டைய பேரா­சி­ரி­யர் அவர்­கள்­தான்.  இது­தான் தமிழ்­நாடு.  அர­சி­யல் தாண்டி இந்த சமூ­கத்­தின் மீது அக்­கறை இருக்­கக்­கூ­டிய ஒரு­வ­ரைத்­தான் நம் அவ­ரு­டைய வாழ்த்­துக்­க­ளோடு நம்­மு­டைய முத­ல­மைச்­சர் அண்­ணன் தள­பதி அவர்­கள் நமக்கு இங்கே வேட்­பா­ள­ராக தந்­தி­ருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9">2021ல ஆட்சி பொறுப்­பேற்ற பின்  27 மாவட்­டங்­கள்ல் 917 ஏரி­கள் 1212 கோடி மதிப்­பீட்­டில சீர­மைக்­கப்­பட்­டி­ருக்­கி­றது. இந்த நாகப்­பட்­டி­னம் தொகு­தி­யில மட்­டும் நாகை நகர பகு­தி­யில சுமார் 9 கோடி மதிப்­பில புதிய தோழி விடுதி கட்­டப்­பட்­டி­ருக்­கி­றது. நாகூர் பேருந்து நிலை­யத்­துக்கு அரு­கிலே யாத்­தி­ரை­கள் தங்­கும் விடுதி கட்­டப்­பட்­டி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9">நாகூர் கடற்­க­ரை­யில நாகூர் ஹனீபா அவர்­க­ளின் பெய­ரில நெய்­தல் பூங்கா அமைக்­கப்­பட்­டது. சுமார் 18 ஆண்­டு­க­ளுக்­குப் பின்­னர் சிக்­கல் சிங்­கா­ர­வே­லர் திருக்­கோ­யில் கும்­பா­பி­ஷே­கம் திமுக ஆட்­சி­யில் தான் நடை­பெற்­றது. அக்­கரை குளம் பகு­தி­யில புதிய  பா0லம் அமைக்­கப்­பட்­டி­ருக்­கி­றது. 12 கோடி மதிப்­பில காடம்­பாடி மற்­றும் பப்­ளிக் ஆபீஸ் ரோடு பகு­தி­க­ளில மழை­நீர் வடி­கால் அமைக்­கப்­பட்­டுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9">மீன­வர்­க­ளுக்கு  மீன்­பிடி தடை­கால நிவா­ர­ணம் 8,000-லிருந்து 12000 ஆக உயர்த்தி வழங்­கப்­ப­டும். மீன்­பிடி குறைவு கால நிவா­ர­ணம் 6000-லிருந்து 9000 ஆக உயர்த்தி வழங்­கப்­ப­டும். கட­லோர நீர்­வாழ் உயி­ரின வளர்ப்பு மண்­ட­லங்­கள் அக்வா ஜோன் உரு­வாக்­கப்­பட்டு அதன் மூலம் மீன் உற்­பத்தி அதி­க­ரிக்­கப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9">மீனவ பெண்­க­ளின் வாழ்­வா­தா­ரத்தை மேம்­ப­டுத்த முக்­கிய நக­ரங்­க­ளிலே நவீன மீன் விற்­பனை அங்­கா­டி­கள் உரு­வாக்­கித் தரப்­ப­டும். அது­மட்­டு­மில்­லா­மல் நீண்ட நாளாக இருக்­கக்­கூ­டிய மீனவ சகோ­த­ரி­க­ளு­டைய கோரிக்கை அவர்­க­ளுக்­காக தனி­யாக  அடை­யாள அட்­டை­கள் வழங்­கப்­பட வேண்­டும் என்று கேட்­டி­ருக்­கி­றார்­கள். அது­வும் நம்­மு­டைய ஆட்சி வந்­த­வு­டன் செய்து தரப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="9">மோடி நொந்து போயி­ருக்­கி­றார்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9">நாடா­ளு­மன்­றத்­திலே கொண்­டு­வ­ரப்­பட்ட மசோதா  நம்­மால் தோற்க்­க­டிக்­கப்­பட்­ட­தும்  இன்­னைக்கு எல்­லா­ரும் புலம்ப ஆரம்­பிச்­சிட்­டாங்க.  அது­வும் பிர­த­மர் அவர் வந்து இந்த நாட்­டு­டைய பிர­த­ம­ராக பேச­வில்லை- ஏதோ தேர்­த­லுக்­காக பேசு­வது போல பேசு­கி­றார்.  எதிர்­கட்­சி­களை எல்­லாம் சாடி பேசக்­கூ­டிய அள­விற்கு அவ்­வ­ளவு நொந்து போயி­ருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9">இதை தாண்டி ஒன்­றிய அர­சாங்­கம் நேத்­துல இருந்து ஒரு புது கதையை பரப்ப ஆரம்­பிச்­சி­ருக்­காங்க. என்­னன்னா நம்­மு­டைய கூட்­டணி மத­சார்­பற்ற முற்­போக்கு கூட்­டணி பெண்­க­ளுக்கு எதி­ரா­ன­வர்­கள் என்று.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9">இந்த கடந்த ஐந்து ஆண்டு கால ஆட்சி பெண்­க­ளுக்­கான ஆட்­சி­தான். மக­ளிர் உரிமை தொகை­யி­லி­ருந்து விடி­யல் பய­ணத்­தி­லி­ருந்து புதுமை பெண் திட்­டத்­தி­லி­ருந்து எல்­லாமே பெண்­க­ளுக்கு முக்­கி­யத்­து­வம் தரக்­கூ­டிய ஆட்­சி­யா­கத்­தான் நம் ஆட்சி இருந்­தி­ருக்­கி­றது. அந்த நம்­மு­டைய தமிழ்­நாட்­டில் தான் இன்­னைக்கு உள்­ளாட்சி தேர்­தல்­கள்ல் 50 சத­வீ­தம் பெண்­க­ளுக்கு இட ஒதுக்­கீடு தந்­தி­ருக்­கக்­கூ­டிய மாநி­லங்­க­ளில்  நம் மாநி­லம் தான் இருக்கு. அதைத்­தாண்டி பெண்­க­ளுக்கு சொத்­துல சம உரிமை என்ற நிலையை கொண்டு வந்­தது தலை­வர் கலை­ஞர் அவர்­கள். நம்மை பார்த்து தொடர்ந்து காலம் கால­மாக பெண்­க­ளுக்கு நாடா­ளு­மன்­றத்­தி­ல­யும் சட்­ட­மன்­றத்­தி­ல­யும் இட ஒதுக்­கீடு 33% கொடுக்க வேண்­டும் என்று போரா­டிய தலை­வர் தலை­வர் கலை­ஞர் அவர்­கள். அவர் வழி­யிலே தொடர்ந்து அதற்­காக குரல் எழுப்­பிக் கொண்­டி­ருக்­கக்­கூ­டிய முத­ல­மைச்­சர் நம்­மு­டைய முத­ல­மைச்­சர் அண்­ணன் தள­பதி அவர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9">இங்­கி­ருந்து டெல்லி வரைக்­கும் கூட்­டிட்டு போயி அங்கே நூற்­றுக்­க­ணக்­கான ஆயி­ரக்­க­ணக்­கான மக­ளீர் அணி திரா­விட முன்­னேற்ற கழ­கத்­தில் இருக்­கக்­கூ­டிய நம்­மு­டைய சகோ­த­ரி­களை எல்­லாம் டெல்­லிக்கு கூட்­டிட்டு போய்  மக­ளி­ருக்­கான இட ஒதுக்­கீடு வேண்­டும் என்று போராடி இருக்­கக்­கூ­டிய இயக்­கம் திரா­விட முன்­னேற்ற கழ­கம். அவர்­கள் கொண்­டு­வந்த மசோதா உள்ளே  நரி, வெளியே ஆடு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9">அவர்­கள் சொன்­னது மக­ளி­ருக்­கான  மசோதா கொண்டு வரு­கி­றோம் என்று.  மக­ளி­ருக்­கான மசோதா கொண்டு வர­ணும்னா இப்ப 543 பேர் இருக்­காங்க நாடா­ளு­மன்­றத்­தில அந்த அதுல 33 சத­வீ­தம் கொடுத்­தால் யாருக்­கும் எந்த ஆட்­சே­ப­னை­யும் இல்லை.  யாருக்­கும் எந்த பிரச்­ச­னை­யும் இல்லை .</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9">இருக்­கக்­கூ­டிய நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள்ல் 543ல 33% பெண்­க­ளுக்கு என்று இட ஒதுக்­கீடு செய்­யுங்­கள், சட்­ட­மன்­றங்­க­ளிலே அதே மாதிரி இருக்­கக்­கூ­டிய எண்­ணிக்­கை­யி­லேயே இட ஒதுக்­கீடு செய்­யுங்­கள் என்­ப­து­தான் திரா­விட முன்­னேற்ற கழ­கத்­து­டைய,  நம்­மு­டைய கூட்­ட­ணி­யில் இருக்­கக்­கூ­டிய அத்­தனை இயக்­கங்­க­ளும் எடுத்­தி­ருக்­கக்­கூ­டிய நிலைப்­பாடு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9">ஆனால் இவர்­கள் கொண்­டு­வந்த மசோதா என்­ன­வென்­றால்...  இருக்­கக்­கூ­டிய 543 தொகு­தி ­களை 850 ஆக மாற்றி அதில் 33% கொடுப்­பார்­க­ளாம், 
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9">அந்த 850 இல் அவர்­க­ளுக்கு ஓட்டு போடக்­கூ­டிய குஜ­ராத், உத்­தரபிர­தே­சம், ராஜஸ்­தான், பீகார், ஹரி­யானா, சத்­தீஸ்­கர்  மாநி­லங்­க­ளுக்கு அதிக எம்­பிக்­கள் போய்­வி­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9">ஆனால் மக்­கள் தொகை­யைக் கட்­டுப்­ப­டுத்­திய   தென் மாநி­லங்­கள்,  பெண்­க­ளுக்கு கல்­வியை அதி­கப்­ப­டுத்தி இருக்­கக்­கூ­டிய மாநி­லங்­க­ளுக்கு மக்­கள் தொகை குறை­வால்  எம்­பிக்­கள்  குறைக்­கப்­ப­டும். அவர்­க­ளுக்கு ஓட்­டுப் போடாத  மாநி­லங்­கள் வெஸ்ட் பெங்­கால், தமிழ்­நாடு, கேரளா,  கர்­நா­டகா,  ஆந்­திரா,  தெலுங்­கானா இதி­லி­ருந்து ஒரு ஓட்டு கூட அவங்­க­ளுக்கு தேவைப்­ப­டாது. இந்த மாநி­லங்­கள் இல்­லா­மல் அவர்­கள் என்ன வேண்­டு­மா­னா­லும் மாற்­ற­லாம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9">அவர்­கள் கொண்டு வந்­தது மக­ளிர் மசோதா இல்லை. கொண்டு வந்­தது தமிழ்­நாட்­டுக்கு எதி­ரான மசோதா.  இந்­தி­யா­வில் இருக்­கக்­கூ­டிய தென் மாநி­லங்­க­ளுக்கு எதி­ரான மசோதா. ஆனா அதுக்கு ஒரு வேஷம் போட்டு கொண்டு வந்­தாங்க. அந்த வேஷத்தை கலைத்த பெருமை தமிழ்­நாட்­டிற்கு உண்டு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9">நம்­மு­டைய முத­ல­மைச்­சர் அண்­ணன் தள­பதி அவர்­க­ளுக்கு உண்டு. முதல் தோல்வி அவங்கஎதிர்­பார்க்­க­வில்லை. அத­னா­ல­தான் பிர­த­மர் தொடர்ந்துமக­ளிர் மசோ­தாவை தோற்­க­டித்­து­விட்­டார்­கள் என்று பிர­த­மர் சொல்­லிக் கொண்­டி­ருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9">இங்கே இருக்­கக்­கூ­டிய எடப்­பாடி பழ­னி­சாமி  இதற்கு  கண்­ட­னம் தெரி­விக்­கி­றார்.  வட மாநி­லங்­க­ளில் இருக்­கக்­கூ­டிய தலை­வர்­கள் சொன்­னால் பர­வா­யில்லை.  ஆனால் எடப்­பாடி பழ­னி­சாமி தமிழ்­நாட்­டுக்கு துரோ­கம்­செய்­யக்­கூ­டிய பழ­னி­சா­மி­யாக மாறி இருக்­கி­றார்.  நம்­மு­டைய எண்­ணிக்கை குறைந்­தால் பர­வா­யில்லை என்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9">ஒன்­றிய அர­சாங்­கம் மோடி அர­சாங்­கம் இப்­போது ஒரு கடி­தம் எழு­தி­இ­ரு­கி­றது நம்ம முத­ல­மைச்­ச­ருக்கு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="9">விவசாயிகளுக்கு ஊக்கத் தொகையை நிறுத்த வேண்டுமாம்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9">நெல் விளை­விக்­கக்­கூ­டிய விவ­சா­யி­க­ளுக்குநம்­மு­டைய அர­சாங்­கம் ஊக்­கத்­தொகை கொடுப்­பதை நிறுத்த வேண்­டு­மாம். ஏன் நிறுத்­த­ணும்? அவங்­க­ளுக்கு அந்த நெல்லை அரி­சியை பாது­காப்­பாக வைத்­துக்­கொள்ள முடி­ய­வில்லை. நாம் விளை­வித்து  அனுப்­பு­கிற அரி­சியை வைத்து கொள்­வ­தற்கு வழி­யில்லை.  அத­னால்  விவ­சா­யி­க­ளுக்கு கொடுக்­கக்­கூ­டிய ஊக்க தொகையை நீங்­கள் நிறுத்த வேண்­டும் என்று ஒரு மாநில அர­சாங்­கத்தை பார்த்து மோடி ஆட்சி ஒன்­றிய அர­சாங்­கம் தெரி­விக்­கி­றது என்­றால் இதை­விட கேவ­லம் என்ன இருக்க முடி­யும்? இதற்கு டெல்டா விவ­சா­யி­கள் இந்­தத் தேர்­த­லில் பதில் அளிக்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9">இது நம்­மு­டைய தலை­வர் கலை­ஞர் அவர்­க­ளு­டைய மண். இந்த மண்­ணில் அவர்­க­ளுக்கு இட­மில்லை.  வெற்றி என்­பது நமக்கு மட்­டும்­தான் என்­பதை அவர்­க­ளுக்கு நாம் தெளி­வு­ப­டுத்த வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9">இந்த ஆட்­சி­யிலே விவ­சா­யி­க­ளுக்­காக நம்­மு­டைய முத­ல­மைச்­சர் அவர்­கள் எத்­த­னையோ திட்­டங்­களை கொண்டு வந்­தி­ருக்­கி­றார்­கள்.  நம்­மு­டைய தலை­வர் கலை­ஞர் அவர்­கள் இருந்த காலத்­திலே தான் ஆட்சி காலத்­திலே தான் விவ­சா­யி­க­ளுக்கு இல­வச மின்­சா­ரம் தரப்­பட்­டது.  அதே­போல இந்த தேர்­தல் அறிக்­கை­யிலே நம்­மு­டைய முத­ல­மைச்­சர் அண்­ணன் தள­பதி அவர்­கள் 20 லட்­சம் விவ­சா­யி­கள் பயன்­ப­டக்­கூ­டிய வகை­யிலே எந்­த­வித மீட்­ட­ரும் இல்­லா­மல் மின் மோட்­டர்­கள் புது மின் மோட்­டார்­களை விவ­சா­யி­க­ளுக்கு வழங்­கு­வேன் என்று அறி­வித்­தி­ருக்கிறார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9">அது­மட்­டுமி இல்­லா­மல் நாம் செய்து தந்­தி­ருக்­கக்­கூ­டிய திட்­டங்­கள் 786 கோடி­யில 47,285 ஏக்­கர் தரிசு நிலங்­களை மறு­ப­டி­யும் சாகு­ப­டிக்­கள் கொண்டு வந்­தி­ருக்­கி­றோம்.  அதில்  51 லட்­சம் பேர் பய­னா­ளி­க­ளாக மாறி­யி­ருக்­கி­றார்­கள்.  213 ஒழுங்கு முறை விற்­பனை கூடங்­களை நாம் சந்தை தளத்­து­டன் இணைத்­தி­ருக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9">அதன் மூலம் 6636கோடி மதிப்­பி­லான விலை பொருள் வர்த்­த­கம் நடை­பெற்­றி­ருக்­கி­றது.  19 லட்­சம் விவ­சா­யி­கள் அத­னால் பய­ன­டைந்­தி­ருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9">வேளாண்­மைக்கு இன்­னைக்கு ஆள் இல்ல. மேலும்  எல்லா வேலை­யும் நம்­மால செய்ய முடி­யல. அத­னால் அதற்­கான இயந்­தி­ரங்­களை இன்று நம்­மு­டைய அர­சாங்­கம் விவ­சா­யி­க­ளுக்கு வாட­கைக்கு தரக்­கூ­டிய அள­விற்­கான அந்த திட்­டத்தை கொண்டு வந்து செயல்­ப­டுத்­திக் கொண்­டி­ருப்­பது நம்­மு­டைய முத­ல­மைச்­சர் அண்­ணன் தள­பதி அவர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9">இப்­படி தொடர்ந்து விவ­சா­யி­க­ளுக்கு உறு­து­ணை­யாக இருக்­கக்­கூ­டிய ஆட்சி திரா­விட முன்­னேற்ற கழக ஆட்சி.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9">நாகப்­பட்­டி­னம் -வேதா­ரண்­யம் ஆகி­ய­வற்றை இணைக்­கும் புற­வ­ழிச்­சாலை 23 கோடி செல­வில் அமைக்­கப்­பட்­டி­ருக்­கி­றது. இந்த தொகு­தி­யில் அரசு மருத்­து­வ­மனை நவீன வச­தி­க­ளு­டன் புதிய கூடு­தல் கட்­டி­டம் 9 கோடி மதிப்­பீட்­டில கட்டி முடிக்­கப்­பட்டு நம்­மு­டைய முத­ல­மைச்­சர் அவர்­களே அதை திறந்து வைத்­தி­ருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9">திருத்­து­றை­பூண்டி நக­ரப்­ப­கு­தி­யில் புதிய பேரூந்து நிலை­யம் கட்டி முடிக்­கப்­பட்டு விரை­வில திறக்­கப்­பட உள்­ளது. திருத்­து­பூண்டி நக­ரம் முழு­வ­தும் வெள்­ள­நீர் வடி­கால் திட்ட பணி­கள் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன. நம்­மு­டைய ஆட்சி மறு­ப­டி­யும் ஒரு மாதத்­திலே மறு­ப­டி­யும் வந்­து­வி­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9">வந்­த­வு­டன் திரு­வா­ரூர் மாவட்­டத்­தில வேளான் தொழில் பூங்கா அமைக்­கப்­ப­டும். வேளாண்மை பொருட்­க­ளுக்­கான தொழில் பூங்கா அமைக்­கப்­ப­டும். 2030க்குள்ள வீடு மனை­யற்ற தகு­தி­யுள்ள ஒவ்­வொரு ஆதி­தி­ரா­வி­டர் மற்­றும் பழங்­கு­டி­யின குடும்­பத்­திற்கு வீட்­டு­மனை பட்டா வழங்க படிப்­ப­டி­யாக நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9">முத்­துப்­பேட்டை அலை­யாத்தி காடு­க­ளுக்கு வரும் சுற்­றுலா பய­ணி­க­ளுக்கு வச­தி­கள் மேம்­ப­டுத்­தப்­ப­டும். அந்த வச­தி­கள் மேம்­ப­டுத்­தப்­ப­டக்­கூ­டி­ய­தால் இங்கே இருக்கு சுற்றி இருக்­கக்­கூ­டிய எல்­லா­ருக்­குமே வரு­மா­ன­மும் அதி­க­ரிக்க அது வாய்ப்­பாக அமை­யும்”.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9">இவ்வாறு கனிமொழி கருணாநிதி எம்.பி. அவர்கள் உரையாற்றினார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>