<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="21/04/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="38,68,493,1494" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="2"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Tue Apr 21 2026 03:41:49 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260421T000000+5.30" edition.name="CHN" edition.area="CHN" position.section="21042026-CHN-12" position.sequence="12" ex-ref="21042026-CHN-12.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#000000" boxBorderWeight="2">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
<lang class="3" style="Headline1"  font="Arial"  size="15">                                                  </lang>
</hl1>
       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup576679_12_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup577898_12_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="3" source="EzhilanNaganat_12_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.2">பி</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.2">ர­த­மர் நரேந்­தி­ரர், ஈரான், இசு­ரேல், அமெ­ரிக்க நாடு­க­ளுக்­குப் போர் நடை­பெற்­றுக் கொண்­டி­ருந்­த­போது, கொரானா தொற்­றுக் காலத்­தில் மாநி­லங்­கள் ஒன்­றிய அர­சுக்கு ஒத்­து­ழைத்­தது போல இப்­போ­ரி­னால் ஏற்­ப­டும் இறக்­கங்­க­ளைச் சந்­திக்க மாநில முதல்­வர்­கள் ஒன்­றிய அர­சோடு கைகோர்க்க வேண்­டும் என்­றார். ஒரே மாதத்­தில் இந்­நி­லை­யி­லி­ருந்து தலை­கீ­ழாக மாறி மாநில உரி­மை­க­ளைப் பறிக்­கின்ற தொகுதி மறு­வ­ரை­யறை சட்­டத்­தி­ருத்­தத்தை நாடா­ளு­மன்­றத்­தில் முன்­மொ­ழி­யச் செய்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.2">தமிழ்­நாட்­டின் முத­ல­மைச்­சர் முத்­து­வேல் கரு­ணா­நிதி ஸ்டாலின் கொதித்­தெ­ழுந்­தார். தொகுதி சட்ட வரை­ய­றை­யின் நகலை எரித்­தார். தீ பர­வட்­டும் என்­றார். ஆம், தீ பர­வி­யது. காஷ்­மீர், உத்­தி­ரப்­பி­ர­தே­சம் தொடங்கி மேற்கு வங்­கம், பஞ்­சாப், தெலங்­கனா, கேரளா, தமிழ்­நாடு ஆகிய மாநி­லங்­க­ளில் உள்ள பாஜ­கவை எதிர்க்­கும் அனைத்­துக் கட்­சி­க­ளும் ஒன்­றி­ணைந்து நாடா­ளு­மன்­றத்­தில் கொண்­டு­வ­ரப்­பட்ட தொகுதி மறு­வ­ரை­ய­றைச் சட்­டத்­தி­ருத்­தத்­தைத் தோல்­வி­யு­றச் செய்­தன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.2">உல­கின் பல நாடு­க­ளில் மக்­கள்­தொகை பெரு­கு­வ­தும் குறை­வ­தும் நிகழ்ந்து கொண்­டி­ருக்­கின்­றன. மக்­கள்­தொகை பெருக்­கம் நாட்­டி­னு­டைய பொரு­ளா­தா­ரத்தை, சுற்­றுச்­சூ­ழலை, உண­வுத் தேவை­யைப் பாதிக்­கும் என்­ப­தைப் பல அறி­ஞர்­கள் சுட்டி வரு­கின்­ற­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.2">சான்­றாக, 18ஆம் நூற்­றாண்­டில் இர­பர்ட் தாமஸ் மால்­தஸ் என்­ப­வர் மக்­கள்­தொ­கைப் பெருக்­கத்­தால் உண­வுப் பற்­றாக்­குறை ஏற்­ப­டும், நோய்­கள் பெரு­கும், மக்­கள் பெரும் எண்­ணிக்­கை­யில் இறந்­து­வி­டு­வர் என்று குறிப்­பிட்­டார். ஆனால், ஐரோப்­பிய நாடு­க­ளில் பொரு­ளா­தார வளர்ச்சி ஏற்­பட்ட பிறகு மால்­தஸ் கணித்­த­வாறு மக்­கள்­தொகை பெரு­க­வில்லை. மாறாக, மக்­கள்­தொகை குறைந்­தது. இங்­கி­லாந்து நாட்­டில் தொழில்­பு­ரட்சி ஏற்­பட்ட காலத்­தில் மக்­கள்­தொகை வீழ்ச்­சி­யு­றத் தொடங்­கி­யதை அறி­ஞர் காரல் மார்க்சு தனது மூல­த­னம் நூலில் புள்­ளி­வி­வ­ரங்­க­ளோடு வெளி­யிட்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.2">சமூக, பொரு­ளா­தா­ரத் தளங்­க­ளில் வளர்ச்சி ஏற்­பட்டு, மக்­கள் வாழ்­நி­லை­யில் முன்­னேற்­றம் ஏற்­பட்­டது. எனவே, வட அமெ­ரிக்க ஐரோப்­பிய நாடு­க­ளில் மக்­கள்­தொகை வளர்ச்சி பெரு­ம­ள­வில் குறைந்­தது. ஆனால் இந்­தி­யா­வில் மக்­கள்­தொகை பெருகி இன்று உல­கின் மக்­கள்­தொகை எண்­ணிக்­கை­க­ளில் முதல் நாடாக இடம்­பெற்­றுள்­ளது. சீனா முதல் இடத்­தில் இருந்து இரண்­டாம் இடத்­திற்­குச் சென்­றுள்­ளது. இதற்கு முதன்­மை­யான கார­ணம் சீனா­வின் பொரு­ளா­தார வளர்ச்சி மக்­கள் வாழ்­வி­ய­லில் பெரும் முன்­னேற்­றத்தை ஏற்­ப­டுத்­தி­யது. பெண்­கள் கரு­வு­று­தல் குறைந்­தது. தொடர்ந்து குழந்­தை­கள் இறப்பு வீதம், மகப்­பேறு காலத்­தில் தாய் இறப்பு வீதம் குறைந்­தது. ஐக்­கிய நாடு­கள் மன்­றம் ஆண்­டு­தோ­றும் வெளி­யி­டும் மானுட மேம்­பாட்­டுக் குறி­யீ­டு­க­ளில், 2025ஆம் ஆண்டு புள்­ளி­வி­வ­ரப்­படி உல­கின் 193 நாடு­க­ளின் தர­வ­ரி­சைப் பட்­டி­ய­லில் சீனா 78ஆம் இடத்­தில் உள்­ளது. இந்­தியா 130ஆம் இடத்­தில் உள்­ளது. இதற்கு கார­ணம், வட மாநி­லங்­க­ளில் மக்­கள்­தொகை கட்­டுப்­ப­டுத்­தப் பட­வில்லை. மேலும், கல்வி, சுகா­தா­ரம், பாது­காக்­கப்­பட்ட குடி­நீர் ஆகிய குறி­யீ­டு­க­ளில் பின்­தங்­கி­யும், வறுமை, வேலை­யின்மை ஆகி­ய­வற்­றால் வட மாநி­லங்­கள் பின்­தங்­கி­யுள்­ளதே ஆகும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.2">ஒன்­றிய அரசு 1960களி­லி­ருந்து குடும்­பக் கட்­டுப்­பா­டுத் திட்­டத்தை மாநி­லங்­கள் பின்­பற்ற வேண்­டும் என்று தொடர்ந்து வலி­யு­றுத்­தி­யது. இந்த வேண்­டு­கோ­ளைத் தென் மாநி­லங்­கள் ஏற்று, குடும்­பக் கட்­டுப்­பாடு திட்­டத்தை வெற்­றி­க­ர­மா­கச் செயல்­ப­டுத்­தின. இத­னால் தென் மாநி­லங்­க­ளில் மக்­கள்­தொகை வளர்ச்சி குறைந்­து­விட்­டது. இதன் தொடர்­பா­கத் தமிழ்­நாடு அர­சால் நீதி­பதி ஜோசப் குரி­யன் தலை­மை­யி­லான ஒன்­றி­ய-­மா­நில உற­வு­கள் குறித்து ஆய்வு செய்ய அமைக்­கப்­பட்ட குழு, சில ஆய்வு புள்­ளி­வி­வ­ரங்­க­ ளை­யும் வெளி­யிட்­டுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.2">1971ஆம் ஆண்­டில் தமிழ்­நா­டும், பீகார் மாநி­ல­மும் மக்­கள் தொகை­யில் ஏறக்­கு­றைய ஒரே எண்­ணிக்­கை­யில் இருந்­தன (தமிழ்­நாடு – 4.1 கோடி, பீகார் 4.2 கோடி). நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளின் எண்­ணிக்­கை­யில் பீகார் 40 ஆக­வும், தமிழ்­நாடு 39 ஆக­வும் இருந்­தன. 50 ஆண்­டு­க­ளுக்­குப் பிறகு தமிழ்­நாட்­டின் மக்­கள்­தொகை 2025இல் 7.6 கோடி­யாக உயர்ந்­துள்­ளது. ஆனால் பீகார் மாநி­லத்­தின் மக்­கள் தொகை 12.3 கோடி­யாக உயர்ந்­துள்­ளது. பெண்­கள் கரு­வு­று­தல் எண்­ணிக்­கை­யில் ஏற்­ப­டும் ஏற்­றத்­தாழ்­வு­களே இதற்கு கார­ண­மாக அமை­கி­றது. சான்­றாக, 2023 மாதிரி புள்­ளி­வி­வர அறிக்­கை­யின்­படி (Sample Registration System – Statistical Report 2023), பீகா­ரின் மொத்­தக் கரு­வு­று­தல் வீதம் 2.8 ஆக­வும், தமிழ்­நாட்­டின் வீதம் 1.3 விழுக்­கா­டா­க­வும் உள்­ளது என்று இவ்­வ­றிக்கை குறிப்­பி­டு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.2">இந்­தப் புள்­ளி­வி­வ­ரங்­க­ளைப் பயன்­ப­டுத்­தி­னால் மக்­க­ள­வை­யில் பீகார் மாநி­லத்­தின் உறுப்­பி­னர்­க­ளின் எண்­ணிக்கை 40-லிருந்து 50 ஆக உய­ரும். அதே நேரத்­தில் தமிழ்­நாட்­டின் எண்­ணிக்கை 39லிருந்து 29ஆகக் குறை­யும். இவ்­வாறு வட மாநி­லங்­க­ளின் கரு­வு­று­தல் வீதம் உத்­தி­ர­பி­ர­தே­சம் 2.6, மத்­தி­ய­பி­ர­தே­சம் 2.4, இரா­ஜஸ்­தான் 2.3, சத்­தீஸ்­கர் 2.2 என உள்­ளது. இதற்கு மாறாக, மிகக் குறைந்த கரு­வு­று­தல் வீதங்­கள் தில்லி 1.2, தமிழ்­நாடு 1.3, மேற்கு வங்­கம் 1.3, மகா­ராஷ்­டிரா 1.4, கேரளா, கர்­நா­டகா, ஆந்­திரா, பஞ்­சாப் ஜம்மு காஷ்­மீர் ஆகிய மாநி­லங்­க­ளில் மொத்­தக் கரு­வு­று­தல் வீதம் முறையே 1.5ஆக உள்­ளது. இந்­தப் புள்­ளி­வி­வ­ரங்­க­ளின்­படி, மக்­கள்­தொகை அடிப்­ப­டை­யா­கக் கொண்டு தொகுதி மறு­வ­ரை­ய­றை­யைச் செய்­வது குடும்­பக் கட்­டுப்­பா­டுத் திட்­டத்தை ஏற்று, நாட்­டின் மக்­கள் தொகை­யைக் குறைத்து, தேசிய அள­வி­லான இலக்­கு­களை எட்­டிய மாநி­லங்­க­ளுக்­குப் பிர­தி­நி­தித்­து­வம் வழங்­கு­வ­தில் தண்­டனை அளிப்­ப­தா­க­வும், அவற்றை எட்­டாத மாநி­லங்­க­ளுக்­குப் பரி­ச­ளிப்­ப­தா­க­வும் உள்­ளது. இது­போன்று மக்­கள்­தொகை அடிப்­ப­டை­யி­லான பல தர­வு­கள் நீதி­பதி ஜோசப் குரி­யன் அறிக்­கை­யில் வழங்­கப்­பட்­டுள்­ளன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.2">கடந்த 12 ஆண்­டு­க­ளாக ஒன்­றிய அர­சி­லும், வட மாநி­லங்­க­ளி­லும் ஆட்சி செய்­யும் பாஜக (இரட்டை என்­ஜின்) அர­சு­கள் என்ன செய்­யத் தவ­றின? அதிக மக்­கள்­தொ­கை­யைக் கொண்ட வட மாநி­லங்­க­ளில் குடும்­பக் கட்­டுப்­பா­டுத் திட்­டத்­தைத் தீவி­ர­மாக நடை­மு­றைப்­ப­டுத்­தத் தவ­றி­ய­தும், கல்வி, சுகா­தா­ரம் போன்ற துறை­க­ளில் தேவை­யான வளர்ச்­சியை அடை­யா­மல் இருப்­ப­தற்­கும் பாஜ­க­வின் இரட்டை என்­ஜின் அர­சு­கள்­தானே கார­ணம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.2">மேலும், பாஜ­க­வின் மூளை­யா­கச் செயல்­ப­டும் ஆர்.எஸ்.எஸ். சங் பரி­வார அமைப்­பு­கள் மக்­கள்­தொ­கை­யில் இசு­லா­மி­யர்­கள் பெரு­கி­வி­டு­வார்­கள் என்ற பொய்­யான பரப்­பு­ரை­யைக் கட்­ட­விழ்த்து, இந்­துக்­கள் அதிக குழந்­தை­க­ளைப் பெற்­றுக்­கொள்ள வேண்­டும் என்று வற்­பு­றுத்தி குடும்­பக் கட்­டுப்­பாடு திட்­டத்­திற்கு எதி­ரா­கவே செயல்­பட்டு வரு­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.2">இதன் விளைவு என்­ன­வென்­றால் உத்­தி­ரப் பிர­தே­சம், மத்­தி­யப் பிர­தே­சம், பீகார், சத்­தீஸ்­கர், இரா­ஜஸ்­தான் ஆகிய மாநி­லங்­க­ளில் குழந்­தை­கள் இறப்பு வீதத்­தில் 2025ஆம் ஆண்டு புள்­ளி­வி­வ­ரப்­படி குழந்­தை­கள் இறப்பு விகி­தம் எதிர்­பார்த்த அள­வில் குறை­ய­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.2">தென் மாநி­லங்­க­ளில் குடும்­பக் கட்­டுப்­பாடு திட்­டம் சிறந்த முறை­யில் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­டு­வ­தால் பிறக்­கின்ற 1000 குழந்­தை­க­ளில் தமிழ்­நாட்­டில் 7, கேர­ளா­வில் 5, கர்­நா­ட­கா­வில் 14, ஆந்­தி­ரா­வில் 19, தெலங்­கா­னா­வில் 18 குழந்­தை­கள் இறக்­கின்­றன. உத்­தி­ர­பி­ர­தே­சத்­தில் 1000 பிறந்த குழந்­தை­க­ளுக்கு 37 குழந்­தை­கள் இறக்­கின்­றன. குழந்­தை­க­ளின் இறப்பு விகி­தத்­தில் ஆப்­பி­ரிக்க நாடு­க­ளுக்கு இணை­யாக உத்­த­ரப் பிர­தேச மாநி­லம் உள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.2">அதே போன்று 2025 புள்­ளி­வி­வ­ரப்­படி மகப்­பேறு காலங்­க­ளில் தாய் இறந்­து­வி­டும் எண்­ணிக்கை ஒரு இலட்­சத்­திற்கு உத்­தி­ர­பி­ர­தேச மாநி­லத்­தில் 141ஆக­வும், மத்­தி­யப் பிர­தேச மாநி­லத்­தில் 159 ஆக­வும், தமிழ்­நாட்­டில் 35, ஆந்­திர மற்­றும் கேர­ளா­வில் 30 என்­றும் கர்­நா­ட­கா­வில் 63, தெலங்­கா­னா­வில் 45 என்­றும் உள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.2">2025ஆம் ஆண்டு ஒன்­றிய அர­சின் புள்­ளி­வி­வ­ரப்­படி பிறந்த குழந்தை முதல் 5 வயது வரை உள்ள குழந்­தை­கள், உத்­தி­ர­பி­ர­தே­சத்­தில் - ஊட்­டச்­சத்­துப் குறை­பாடு உள்ள குழந்­தை­கள் (49 விழுக்­காடு) வளர்ச்­சியே இல்­லாத குழந்­தை­கள் (5 விழுக்­காடு), எடை குறை­வான குழந்­தை­க­ளின் எண்­ணிக்கை 20 விழுக்­காட்டு அள­வில் உள்­ள­னர். பீகார் மாநி­லத்­தில் 43 விழுக்­காடு, 9 விழுக்­காடு, 21 விழுக்­காட்டு அள­வில் உள்­ளது. மத்­தி­யப் பிர­தே­சத்­தில் 42 விழுக்­காடு, 8 விழுக்­காடு, 25 விழுக்­காட்டு அள­வில் உள்­ளது. இரா­ஜஸ்­தான் மாநி­லத்­தில் 36 விழுக்­காடு, 6 விழுக்­காடு, 17 விழுக்­காட்டு அள­வில் உள்­ளது. அதே சம­யத்­தில் தமிழ்­நாட்­டில் 14 விழுக்­காடு, 3 விழுக்­காடு, 6 விழுக்­காட்டு அள­வில் உள்­ளது. கேர­ளா­வில் 36 விழுக்­காடு, 3 விழுக்­காடு, 10 விழுக்­காட்டு அள­வில் உள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.2">இத்­த­கைய குறை­பா­டு­க­ளால் ஆரம்­பப் பள்ளி முதல் உயர்­நிலை பள்ளி செல்­லும் குழந்­தை­க­ளின் எண்­ணிக்கை மேற்­கு­றிப்­பிட்ட இந்தி பேசும் வட மாநி­லங்­க­ளில் குறை­வா­கவே உள்­ளது. ஆனால் தமிழ்­நாடு 1 முதல் 12ஆம் வகுப்பு வரை செல்­லும் மாண­வர்­க­ளின் எண்­ணிக்கை 90 விழுக்­காட்­டைக் கடந்து உள்­ளது. கேரளா 100 விழுக்­காட்டு அளவை எட்டி முத­லி­டத்­தில் உள்­ளது. மேலும் தமிழ்­நாடு உயர் கல்­வி­யில் சேரும் மாண­வர்­க­ளின் எண்­ணிக்­கை­யில் 52 விழுக்­கா­டாக உயர்ந்து இந்­திய மாநி­லங்­க­ளில் முதல் மாநி­ல­மாக உள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.2">மானுட வளர்ச்­சிக்­குத் தேவை­யான தாய்-­சேய் இறப்­பு­க­ளைக் கட்­டுப்­ப­டுத்­தத் தவ­றி­யது, கல்வி, சுகா­தா­ரம் போன்ற வச­தி­களை வழங்­கத் தவ­றி­யது யார் என்­பதை இப்­புள்­ளி­வி­வ­ரங்­கள் சுட்­டு­கின்­றன. மானுட வளர்ச்­சி­யில் இந்­தி­யா­வில் தென்­னக மாநி­லங்­கள் முதன்­மை­யாக இருப்­ப­தற்கு கார­ணம் குடும்­பக் கட்­டுப்­பா­டுத் திட்­டத்தை உரிய முறை­யில் நிறை­வேற்றி கல்வி, சுகா­தா­ரம் போன்ற துறை­க­ளில் மாநில அர­சு­கள் கவ­னம் செலுத்தி மானுட மேம்­பாட்­டுக் குறி­யீ­டு­க­ளில் வட மாநி­லங்­களை விட மேம்­பட்ட நிலை­யில் உள்­ளதே ஆகும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.2">ஆக்­கப்­பூர்­வ­மான அர­சி­ய­லுக்­குப் பதி­லாக எதிர்­மறை அர­சி­யலை ஒன்­றிய பாஜக அரசு பின்­பற்றி நாட்­டின் வளர்ச்­சிக்­குப் பெரும் பங்­காற்றி வரும் தென்­னக மாநி­லங்­க­ளைத் திட்­ட­மிட்­டுச் சிதைப்­ப­து­தான் சமூக நீதியா? என்ற கேள்வி எழு­கி­றது. மேலும், தென்­னக மாநி­லங்­கள் இந்­தி­யா­வின் ஒட்­டு­மொத்த உள்­நாட்டு உற்­பத்­திக்கு 30 விழுக்­காட்­டுப் பங்­கினை அளித்து வரு­கின்­றன. தென்­னக மாநி­லங்­கள் தங்­க­ளுக்கு வழங்­கப்­பட்­டுள்ள மறை­முக வரி அதி­கா­ரங்­களை மட்­டுமே பயன்­ப­டுத்தி மாநி­லத்­தின் ஒட்­டு­மொத்த உள்­நாட்டு உற்­பத்­தி­யில் 8 விழுக்­காட்டு வரி வரு­வா­யைத் திரட்­டு­கின்­றன. ஆனால், வட மாநி­லங்­கள் சொந்த வரி வரு­வாயை 5 விழுக்­காட்டு அள­வில்­தான் திரட்­டு­கின்­றன. தென்­னக மாநி­லங்­கள் பொரு­ளா­தார வளர்ச்­சி­யைச் சிறந்த முறை­யில் மேலாண்மை செய்­வ­தன் வழி­யாக நேர்­முக மற்­றும் மறை­முக வரி வரு­வாயை ஒன்­றிய அர­சிற்கு வட மாநி­லங்­க­ளை­விட அதிக அள­வில் திரட்­டித் தரு­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.2">ஆனால், ஐந்து தென்­னக மாநி­லங்­கள் இணைந்து 17 விழுக்­காடு அள­விற்­குத்­தான் ஒன்­றிய அர­சின் வரிப்­ப­கிர்வு பங்­கி­னைப் பெறு­கின்­றன. ஆனால், உத்­தி­ர­பி­ர­தே­சம் மட்­டும் 17 விழுக்­காட்டு வரிப்­ப­கிர்­வினை ஒன்­றிய அர­சி­ட­மி­ருந்து பெறு­கி­றது. எனவே, தென்­னக மாநி­லங்­க­ளின் வரி வரு­வா­வை­யப் பெற்­றுத்­தான் ஒன்­றிய அர­சி­னால் வட மாநி­லங்­க­ளின் நிதி நிலை­யைச் சரி செய்ய முடி­கி­றது. இத்­த­கைய போக்கு வட மாநி­லங்­கள் வளர்ச்சி அடை­வ­தற்­குத் தென் மாநி­லங்­கள் உறு­து­ணை­யாக இருக்­கின்­றன என்­ப­து­தான் உண்மை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.2">இத்­த­கைய ஆதா­ரப்­பூர்­வ­மான தர­வு­க­ளை­யும், தக­வல்­க­ளை­யும் மறைத்­து­விட்­டுப் பெண்­க­ளுக்கு 33 விழுக்­காடு இட ஒதுக்­கீடு என்ற ஏற்­க­னவே 2023இல் நிறை­வேற்­றப்­பட்ட சட்­டத்தை இந்­தத் தொகுதி மறு­வ­ரை­ய­றைச் சட்­டத்­தி­ருத்­தத்­து­டன் இணைத்­துத் தொடர்ந்து மக்­களை ஏமாற்ற முற்­பட்ட ஒன்­றிய பாஜக அர­சிற்கு எதிர்க்­கட்­சி­கள் ஒன்­றி­ணைந்து தக்க பாடத்­தினை வழங்­கி­யுள்­ளன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.2">1976ஆம் ஆண்­டில் காங்­கி­ரசு ஆட்­சி­யில் 25 ஆண்­டு­க­ளும், பாஜக ஆட்­சி­யில் 2002இல் மேலும் 25 ஆண்­டு­கள் தள்ளி வைத்­தன. இந்த அணு­கு­மு­றை­யின் அடிப்­ப­டை­யில் தொலை­நோக்­குப் பார்­வை­யோடு அணுகி தமிழ்­நாட்­டின் முத­ல­மைச்­சர் முத்­து­வேல் கரு­ணா­நிதி ஸ்டாலின், தமிழ்­நாட்­டுச் சட்­ட­மன்­றத்­தில் தொகுதி மறு­வ­ரை­ய­றைச் சட்­டத்தை 25 ஆண்­டு­கள் தள்­ளி­வைக்­கும் தீர்­மா­னத்தை நிறை­வேற்றி ஒன்­றிய அர­சிற்கு அனுப்பி வைத்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.2">நீதி­பதி ஜோசப் குரி­யன் அறிக்­கை­யில் தொகுதி மறு­வ­ரை­ய­றை­யின் வழி­யாக நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளின் எண்­ணிக்­கை­யைப் பல நாடு­கள் மேற்­கு­றிப்­பிட்ட அணு­கு­மு­றை­யையே பின்­பற்றி வரு­கின்­றன என்று குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. சான்­றாக, அமெ­ரிக்க நாடா­ளு­மன்­றம் 1929 முதல் 435 உறுப்­பி­னர்­க­ளையே கொண்­டுள்­ளது. ஆனால், மக்­கள் தொகை 1929க்கு பிறகு மூன்று மடங்கு அதி­க­ரித்­துள்­ளது. இத்­தாலி நாட்­டில் 2020ஆம் ஆண்­டில் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளின் எண்­ணிக்­கையை 630லிருந்து 400ஆகக் குறைத்­துள்­ளது. ஜப்­பான் நாட்­டி­லும் 465 உறுப்­பி­னர்­கள் கொண்ட நாடா­ளு­மன்ற எண்­ணிக்­கை­யைக் குறைக்­கும் முயற்­சி­கள் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன. பெண்­கள் கரு­வு­று­தல் தொடங்கி, தொட­ரும் பல குறை­பா­டு­கள் காலப்­போக்­கில் குறைந்து வரு­கின்­றன என்­பதே உல­கின் பல நாடு­க­ளில் நாம் காண்­கிற உண்மை. இத்­த­கைய நோக்­கில் நீதி­பதி ஜோசப் குரி­யன் குழு அறிக்கை தொகுதி மறு­வ­ரை­ய­றையை 100 ஆண்­டு­க­ளுக்­குத் தள்­ளி­வைக்­கப் பரிந்­து­ரைத்­துள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.2">பாஜக நரேந்­தி­ரர் விரும்­பு­வது போல 800க்கு மேற்­பட்ட உறுப்­பி­னர்­க­ளைக் கொண்ட நாடா­ளு­மன்­றத்­தில் கருத்­தா­ழ­மிக்க விவா­தங்­கள் நடை­பெ­று­வது குறைந்­து­வி­டும். பல மாநி­லங்­க­ளின் பிரச்­சி­னை­களை உரிய முறை­யில் எடுத்­துக்­கூ­று­வ­தற்கு வழங்­கப்­ப­டும் கால அள­வும் பெரு­ம­ள­வும் குறைந்து விடும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.2">ஒன்­றிய அரசு பல நிதிச் சிக்­கல்­க­ளைச் சந்­தித்து வரு­கி­றது. ஈரான் இசு­ரேல் போரின் கார­ண­மாக இந்­தி­யா­வின் ஒட்­டு­மொத்த உள்­நாட்டு உற்­பத்தி 6 விழுக்­காட்­டி­லி­ருந்து 5 விழுக்­காட்­டிற்­குச் சரிந்­து­வி­டும் என்று பல ஆய்வு நிறு­வ­னங்­கள் சுட்­டிக்­காட்­டு­ கின்­றன. 2025-–2026ஆம் ஆண்டு ஒன்­றிய அர­சின் நிதி­நிலை அறிக்கை புள்­ளி­வி­வ­ரத்­தில் 543 நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்­குச் செல­வி­டும் தொகை மிக மிக அதி­கம் என்று பல ஆய்­வா­ளர்­கள் குறிப்­பி­டு­கின்­ற­னர். ஆண்டு ஒன்­றிற்கு நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்­கும் மற்ற இதர செல­வி­னங்­க­ளுக்­கும் 1300 கோடி ரூபாய் செல­வி­டப்­ப­டு­கி­றது. ஆண்­டு­தோ­றும் நாடா­ளு­மன்ற மேம்­பாட்டு நிதிக்­காக வழங்­கப்­ப­டும் ரூபாய் 5 கோடி இந்­தக் கணக்­கில் சேர்த்­துக்­கொள்­ளப்­ப­ட­வில்லை. இந்­தத் தொகை 800க்கும் மேற்­பட்ட உறுப்­பி­னர்­கள் என்று கணக்­கிட்­டால் ஆண்­டிற்கு 2000 கோடிக்கு மேல் செல­வா­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.2">உத­கை­யில் சட்­ட­மன்­றத்தை நடத்­து­வ­தைக் கண்­ட­னம் செய்து அறி­ஞர் அண்ணா- “கும்பி எரி­கி­றது, குடல் கரு­கு­கி­றது. கோலேந்­தி­களே குளு­குளு ஊட்டி உங்­க­ளுக்கு ஒரு கேடா?” என்று கேட்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.2">பொரு­ளா­தா­ரம் சரி­கி­றது. விலை­வாசி விண்­ணைத் தொடு­கி­றது. வேலை­யில்­லாத் திண்­டாட்­டம் இளை­ஞர்­களை வாட்­டு­கி­றது. ஏற்­றத்­தாழ்­வு­கள் பெரு­கு­கின்­றன. நரேந்­தி­ரர் ஆட்­சியோ நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளின் எண்­ணிக்­கையை உயர்த்தி, மக்­கள் கவ­னத்தை ஏமாற்­றப் பார்க்­கி­றது என்று அறி­ஞர் அண்ணா வழி­யில் சொல்­லத் தோன்­று­கி­றது அல்­லவா?</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>