<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="21/04/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="35,289,958,1495" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Mon Apr 20 2026 22:06:35 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260421T000000+5.30" edition.name="VLR" edition.area="VLR" position.section="21042026-VLR-06" position.sequence="06" ex-ref="21042026-VLR-06.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="35">பெரம்பூர் தொகுதியில் – துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம்! </lang>
	</hl2>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="mdspeech194_06_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.3">சென்னை, ஏப்.21–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.3">சென்னை, பெரம்­பூ­ரில் கழக இளை­ஞர் அணிச் செய­லா­ள­ரும் துணை முத­ல­மைச்­ச­ரு­ மான உத­ய­நிதி ஸ்டாலின், பெரம்­பூர் தொகுதி வேட்­பா­ளர்  ஆர்.டி.சேகரை ஆத­ரித்து, 
உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­தில் வாக்கு சேக­ரித்து 
பிரச்­சா­ரம் மேற்­கொண்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.3">அப்­போது அவர், ‘‘பெரம்­பூர் மக்­களை ஏமாற்ற நினைக்­கும் அட்­டைக்­கத்­தி­க­ளைப் புறந்­தள்­ளுங்­கள். சுறு­சு­றுப்­புக்­கும் உழைப்­புக்­கும் பெயர் பெற்ற ஆர்.டி.சேக­ருக்கு வாக்­க­ளித்து வெற்­றி­பெ­றச் செய்­யுங்­கள்’’ என்று குறிப்­பிட்­டார்.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.3">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.3">கழக இளை­ஞர் அணிச் செய­லா­ள­ரும் துணை முத­ல­மைச்­ச­ரு­மான உத­ய­நிதி ஸ்டாலின் ஆற்­றிய உரை­ வரு­மாறு:–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.3">முத­லில் இவ்­வ­ளவு சிறப்­பான, அன்­பான, எழுச்­சி­யான வர­வேற்பு கொடுத்­தி­ருக்­கின்ற உங்­கள் அனை­வ­ருக்­கும் முத­லில் என் நன்­றி­யைத் தெரி­வித்­துக் கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.3">கடந்த 18 நாட்­க­ளாக தமிழ்­நாடு முழு­வ­தும் பிரச்­சா­ரம் செய்து, நம் வெற்றி வேட்­பா­ளர்­க­ளுக்கு நம் உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­தி­லும், நம் கூட்­ட­ணிக் கட்சி வேட்­பா­ளர்­க­ளுக்கு கூட்­ட­ணிக் கட்­சி­க­ளின் சின்­னத்­தி­லும் வாக்கு சேக­ரித்­து­விட்டு, இன்று உங்­க­ளை­யெல்­லாம் பார்ப்­ப­தற்கு பெரம்­பூர் வந்­தி­ருக்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.3">நம் வெற்றி வேட்­பா­ளர் அண்­ணன் ஆர்.டி.சேகர் அவர்­க­ளுக்கு உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­தில் வாக்­க­ளித்து, மிகப்­பெ­ரிய வெற்­றி­யைத் தேடித் தர வேண்­டும் என்று உங்­க­ளை­யெல்­லாம் ஆசை­யாக கேட்க வந்­தி­ருக்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.3">சென்ற 2021-ஆம் ஆண்டு சட்­ட­மன்­றத் தேர்­த­லின்­போது அவரை வெற்றி பெறச் செய்து சட்­ட­மன்­றத்­துக்கு அனுப்­பி­னீர்­கள். ஒரு சிறந்த சட்­ட­மன்ற உறுப்­பி­ன­ரா­கச் செயல்­பட்­டி­ருக்­கி­றார். இப்­போது அதே உரி­மை­யோடு மீண்­டும் அவ­ருக்கு வாய்ப்­புக் கொடுங்­கள். இந்த பெரம்­பூ­ரில் அண்­ணன் ஆர்.டி.சேகர் அவர்­கள் நிச்­ச­யம் மிகச் சிறப்­பான ஒரு சட்­ட­மன்ற உறுப்­பி­ன­ரா­கச் செயல்­ப­டு­வார். அவ­ருக்கு மீண்­டும் உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­தில் வாய்ப்­ப­ளி­யுங்­கள் என்று உங்­க­ளைக் கேட்க வந்­தி­ருக்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12.3">தோளோடு தோள் நின்று உறு­துணை!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.3">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.3">இன்று ஆர்.டி.சேகர் அவர்­க­ளுக்கு உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­தில் நீங்­கள் வாக்­க­ளிக்க வேண்­டும் என்று கேட்டு வந்­தி­ருக்­கி­றேன். அண்­ணன் ஆர்.டி.சேகர் அவர்­களை நான் உங்­க­ளி­டம் அறி­மு­கப்­ப­டுத்த வேண்­டிய அவ­சி­யம் இல்லை. உங்­கள் அனை­வ­ருக்­கும் தெரிந்­த­வர்­தான் அண்­ணன் ஆர்.டி.சேகர் அவர்­கள். முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் காலத்­தி­லேயே, இந்­தப் பகு­தி­யில் மாவட்­டச் செய­லா­ள­ரா­கச் சிறப்­பா­கப் பணி­யாற்­றி­ய­வர் அண்­ணன் ஆர்.டி.சேகர் அவர்­கள். எனக்கு என்ன பெருமை என்­றால், நான் இளை­ஞர் அணிச் செய­லா­ள­ராக இப்­போது இருக்­கி­றேன். நான் இளை­ஞர் அணிச் செய­லா­ள­ரா­கும்­போது, அவர் எனக்கு இளை­ஞர் அணித் துணைச் செய­லா­ள­ராக எனக்­குக் கீழ் செயல்­பட்டு, எனக்­குத் தோளோடு தோள் நின்று எனக்கு உறு­து­ணை­யாக இருந்­த­வர்­தான் அண்­ணன் ஆர்.டி.சேகர் அவர்­கள்.  அந்த உரி­மை­யோடு, உணர்­வோடு அவ­ருக்கு வாக்கு கேட்டு நான் வந்­தி­ருக்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12.3">வித்­தி­யா­சம் தெரி­யா­த­வர்­கள்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.3">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.3">இன்­னும் சொல்­லப்­போ­னால், என் உடன்­பி­றவா அண்­ண­னுக்கு வாக்கு கேட்டு உரி­மை­யோடு வந்­தி­ருக்­கி­றேன். இந்த பெரம்­பூர் தொகு­தி­யில் இருக்­கக்­கூ­டிய ஒவ்­வொரு வீட்­டை­யும், ஒவ்­வொரு குடும்­பத்­தை­யும் தனிப்­பட்ட முறை­யில் ஒவ்­வொ­ரு­வர் பெய­ரை­யும் தெரிந்து வைத்­தி­ருப்­ப­வர்­தான் அண்­ணன் ஆர்.டி.சேகர் அவர்­கள். ஆனால், இன்று பெரம்­பூ­ருக்­கும் பெரம்­ப­லூ­ருக்­கும் வித்­தி­யா­சம் தெரி­யா­த­வர்­க­ளெல்­லாம் இன்று பெரம்­பூ­ரில் வந்து உங்­களை ஏமாற்­றி­வி­ட­லாம் என்று நினைத்து, பெரம்­பூர் மக்­களை ஏமாற்­ற­லாம் என்று நினைத்­துக் கனவு கண்­டு­கொண்டு இருக்­கி­றார்­கள். நான் யாரைச் சொல்­கி­றேன் என்று உங்­க­ளுக்­குத் தெரி­யும். ஏன் இப்­போது வந்­தி­ருக்­கி­றார்­கள்? அவர்­க­ளுக்­கும் பெரம்­பூ­ருக்­கும் இதற்கு முன்­னால் ஏதா­வது சம்­பந்­தம் இருக்­கி­றதா? இதற்கு முன்­னால் வந்து உங்­க­ளைப் பார்த்­தி­ருக்­கி­றார்­களா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12.3">ஆர்.டி.சேகர் - மண்­ணின் மைந்­தர்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.3">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.3">அண்­ணன் ஆர்.டி.சேகர் வெறும் தேர்­த­லுக்­குத் தேர்­தல் மட்­டும் உங்­களை வந்து பார்க்­கி­ற­வர் கிடை­யாது. வரு­டம் முழு­தும் உங்­க­ளோடு வாழக்­கூ­டி­ய­வர், இந்த மண்­ணின் மைந்­தர். உங்­கள் குடும்­பத்­தில் ஒரு­வர்­தான் அண்­ணன் ஆர்.டி.சேகர் அவர்­கள். இன்று வேறு ஒரு கும்­பல் வந்து உங்­களை ஏமாற்­ற­லாம் என்று பார்க்­கி­றார்­கள், ஜாக்­கி­ர­தை­யாக இருங்­கள்.  அவர்­க­ளின் வாழ்க்­கை­யும் உங்­கள் வாழ்க்­கை­யும் உங்­கள் தேவை­யும் சம்­பந்­தமே கிடை­யாது. இது­வ­ரைக்­கும் அவர்­கள் பெரம்­பூர் பக்­கம் எட்­டிப் பார்த்­தது கூடக் கிடை­யாது. ஆனால், ஆர்.டி.சேகர் அப்­படி கிடை­யாது. உங்­க­ளில் ஒரு­வர், மண்­ணின் மைந்­தர். பெரம்­பூர் மக்­க­ளி­ட­மி­ருந்து அவ­ரையோ, அவ­ரி­ட­மி­ருந்து பெரம்­பூர் மக்­க­ளையோ பிரித்­துப் பார்க்க முடி­யாது. உங்­கள் குடும்­பத்­தில் ஒரு­வ­ராக இருக்­கக்­கூ­டி­ய­வர். உங்­க­ளின் சுக துக்க நிகழ்ச்­சி­கள் அனைத்­தி­லும் பங்கு கொண்டு உங்­க­ளோடு இருக்­கக்­கூ­டி­ய­வர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.3">கிட்­டத்­தட்ட 40 ஆண்­டு­கா­லப் பொது வாழ்க்­கைக்­குச் சொந்­தக்­கா­ரர் அண்­ணன் ஆர்.டி.சேகர் அவர்­கள். மழை, வெள்­ளம், புயல் வந்­த­போது அண்­ணன் அவர்­கள் களத்­தில் இறங்கி மழை­யில் நனைந்து, இடுப்­ப­ளவு தண்­ணீ­ரில் நின்று உங்­கள் கூட நின்று உங்­க­ளுக்கு உதவி செய்­த­வர். அது­மட்­டு­மல்­லா­மல், கொரோனா காலத்­தி­லும் அவர் உயி­ரைப் பண­யம் வைத்து இந்த பெரம்­பூர் பகுதி மக்­க­ளுக்­குப் பல்­வேறு திட்­டங்­க­ளைக் கொண்டு வந்­தி­ருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12.3">எண்­ணற்ற திட்­டங்­கள்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.3">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.3">சட்­ட­மன்ற உறுப்­பி­ன­ராக எண்­ணற்ற திட்­டங்­களை இந்த பெரம்­பூர் தொகு­திக்கு அவர் கொண்டு வந்­தி­ருக்­கி­றார். இதை­யெல்­லாம் செய்­து­விட்­டுத்­தான் அந்த உரி­மை­யோடு உங்­க­ளி­டம் இன்­னொரு முறை வாய்ப்­புக் கொடுங்­கள் என்று கேட்டு வந்­தி­ருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.3">அண்­ணன் ஆர்.டி.சேகரை வெற்றி பெற வைத்­தீர்­கள் என்­றால், நீங்­கள் உரி­மை­யோடு அவர் வீட்­டுக்­குப் போக­லாம், அவ­ரி­டம் என்ன வேண்­டு­மா­னா­லும் நீங்­கள் கேட்­க­லாம். உங்­கள் கோரிக்­கை­யைச் சொல்­ல­லாம். நிச்­ச­யம் உங்­கள் கோரிக்­கையை நிறை­வேற்­றிக் கொடுப்­பார். ஒரு போன் செய்­தால் போதும், நீங்­கள் அவ­ரைத் தேடி வர வேண்­டாம். அவர் உங்­கள் வீட்­டுக்கு வந்து உங்­க­ளின் தேவை­களை உட­ன­டி­யா­கச் சரி­செய்து கொடுப்­பார். இவற்­றை­யெல்­லாம் நீங்­கள் மற்­ற­வர்­க­ளி­டம் எதிர்­பார்க்க முடி­யாது, அத­னால் ஏமாந்­து­வி­டா­தீர்­கள். அண்­ணன் ஆர்.டி.சேகர் அவர்­கள் பங்­க­ளா­வில் இருக்­கக்­கூ­டிய பண்­ணை­யார் கிடை­யாது. உங்­கள் மண்­ணின் மைந்­தர், உங்­கள் பக்­கத்து வீட்­டில் இருக்­கக்­கூ­டிய உங்­க­ளில் ஒரு­வர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.3">பெரம்­பூ­ரில் அண்­ணன் ஆர்.டி.சேகர் அவர்­க­ளைத் தவிர, வேறு யாருக்­கா­வது வாய்ப்­புக் கொடுத்­து­விட்­டீர்­கள் என்­றால், அப்­படி தப்­பித் தவறி வந்­தார்­கள் என்­றால், நாளைக்கு ஒரு சின்­னப் பிரச்­சினை என்­றால் கூட 30 கிலோ­மீட்­டர் நீங்­கள் சென்று அவர்­கள் பங்­களா வீட்டு வாச­லில் நுழை­வா­யி­லுக்கு முன்­னால் நீங்­கள் நிற்க வேண்­டும். அந்த நுழை­வா­யி­லுக்கு உள்ளே கூட உங்­களை விட­மாட்­டார்­கள் ஞாப­கம் வைத்­துக்­கொள்­ளுங்­கள். இந்­தக் கொடுமை எல்­லாம் சுய­ம­ரி­யாதை உள்ள பெரம்­பூர் மக்­க­ளுக்கு வேண்­டாம் என்று உங்­க­ளுக்கு ஞாப­கப்­ப­டுத்­து­ வ­தற்­குத்­தான் நான் வந்­தி­ருக்­கி­றேன். சுறு­சு­றுப்­புக்­கும் உழைப்­புக்­கும் பெயர் போன அண்­ணன் ஆர்.டி.சேகர் வேண்­டுமா? ஓய்­விற்­கும் சோம்­பே­றித்­த­னத்­துக்­கும் பெயர் போன வெறும் அட்­டைக் கத்­தி­கள் உங்­க­ளுக்கு வேண்­டுமா என்­பதை இந்­தத் தேர்­த­லில் நீங்­கள் முடிவு செய்­யுங்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.3">நான் அடிக்­கடி சொல்­வ­துண்டு, தேர்­தல் என்­பது ஒரு திரு­விழா என்று சொல்­வார்­கள். திரு­விழா நேரத்­தில் எல்­லோ­ரும் கடை போடு­வார்­கள், செட் எல்­லாம் போடு­வார்­கள், பார்த்­தி­ருக்­கி­றீர்­களா? தாஜ்­ம­ஹால், ஈஃபிள் டவர் மாதிரி அலங்­கா­ரம் செய்­வார்­கள். அங்கு இருக்­கக்­கூ­டிய பகுதி மக்­கள் எல்­லாம் நம் ஊருக்கு நம் பகு­திக்கு, தாஜ்­ம­ஹால் கொண்டு வந்­து­விட்­டார்­கள், ஈஃபிள் டவர் வந்­து­விட்­டது என்று சொல்லி போட்டோ எடுத்­துக்­கொள்­வார்­கள். கூட்­டம் கூடு­வது உண்­மை­தான், ஆனால், அவை­யெல்­லாம் உண்­மை­யா­னது  கிடை­யாது. அதெல்­லாம் வெறும் அட்டை, அட்­டை­யில் செய்­தது. ஒரு சின்­னக்­காற்று அடித்­தது என்­றால், அதெல்­லாம் அங்கு இருக்­காது ஞாப­கம் வைத்­துக்­கொள்­ளுங்­கள். தட்­டி­னால், கீழே விழுந்­து­வி­டும். அட்­டை­களை நம்பி ஏமாந்து போய்­வி­டா­தீர்­கள். திரு­விழா முடிந்­த­தும் கடை­கள் எல்­லாம் கழற்­றி­விட்டு எல்­லோ­ரும் அவ­ர­வர் வேலை­யைப் பார்க்க சென்­று­வி­டு­வார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.3">அதே மாதி­ரி­தான் இப்­போது வந்­தி­ருக்­கிற அந்த அட்­டைக் கத்­திக் கூட்­ட­மும், தேர்­தல் முடிந்­த­தும் அவ­ர­வர் பங்­க­ளா­வில் ஒளிந்­து­கொள்­வார்­கள். ஆனால், ஆர்.டி.சேகர் அண்­ணன் உங்­க­ளோடு இருப்­பார், உங்­கள் பகு­தி­யில் இருப்­பார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.3">படத்­தில் நிறைய ஹீரோக்­களை பார்த்­தி­ருப்­போம். நிஜத்­தில் ஒரு ஹீரோ என்­றால் எப்­படி இருக்க வேண்­டும் என்று உங்­க­ளுக்­குத் தெரி­யும். யாருக்­கும் பயப்­ப­டா­மல் இருக்­க­வேண்­டும். வில்­லன்­க­ளின் சதித்­திட்­டங்­க­ளைத் தெரிந்­து­கொண்டு, அவற்றை முறி­ய­டித்­துக் காட்ட வேண்­டும். அப்­ப­டிப்­பட்ட ஒரு ஹீரோ இன்று தமிழ்­நாட்­டில் இருக்­கி­றார் என்­றால் அது நம் தலை­வர் நம் முத­ல­மைச்­சர் அவர்­கள் என்­பதை ஞாப­கம் வைத்­துக்­கொள்­ளுங்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12.3">இந்­தி­யா­வி­லேயே எதிர்த்த முதல் தலை­வர்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.3">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.3">அ.தி.மு.க-வும் பா.ஜ.க-வும் சேர்ந்து மக­ளிர் உரி­மைத் தொகையை நிறுத்த முயற்சி செய்­தார்­கள். ஆனால் நம் முத­ல­மைச்­சர் என்ன செய்­தார்? பிப்­ர­வரி, மார்ச், ஏப்­ரல் மாதம் என மூன்று மாதங்­க­ளுக்­குச் சேர்த்து 3,000, கோடைக்­கா­லச் சிறப்பு நிதி 2,000 என்று 5,000 ரூபாய் கொடுத்து பா.ஜ.க-வின் சதித்­திட்­டத்தை முறி­ய­டித்­த­வர் நம் ஹீரோ, நம் தலை­வர், நம் முத­ல­மைச்­சர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.3">தொகுதி மறு­வ­ரை­யறை மசோ­தா­வைக் கொண்டு வந்து தமிழ்­நாட்­டின் உரி­மை­களை எல்­லாம் பறிக்­கப் பார்த்­தார்­கள். இரண்டு நாட்­க­ளுக்கு முன்­னால் நீங்­கள் தொலைக்­காட்­சி­யில் பார்த்­தி­ருப்­பீர்­கள். அந்த மசோ­தாவை இந்­தி­யா­வி­லேயே எதிர்த்த முதல் தலை­வர், முதல் முத­ல­மைச்­சர் நம் தலை­வர் அவர்­கள்­தான். அந்த மசோ­தா­வைத் தீயிட்­டுக் கொளுத்தி, நம் தலை­வர் அதி­லும் வெற்றி பெற்­றார். நாடா­ளு­மன்­றத்­தில் அந்த மசோ­தா­வைத் தோற்­க­டித்­துப் பாசிச பா.ஜ.க-வை நம் தலை­வர் ஓட ஓட விரட்­டி­ய­டித்­தார். இத­னால்­தான் திரும்­பத் திரும்­பச் சொல்­கி­றேன், தமிழ்­நாடு என்­றைக்­குமே டெல்­லிக்­குக் அவுட் ஆஃப் கண்ட்­ரோல்­தான். ஏனென்­றால், தமிழ்­நாடு என்­றைக்­குமே சுய­ம­ரி­யாதை மண் என்­பதை நீங்­கள் நிரூ­பித்­துக் காட்­டுங்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.3">நம் தலை­வர் அவர்­கள்­தான் உண்­மை­யான நாய­கன், நிஜ நாய­கன். போலி நாய­கர்­களை நம்பி ஏமாந்­து­வி­டா­தீர்­கள். இன்று புதி­தாக வரு­கிற சில பேர் தி.மு.க-வை அழிப்­பேன் ஒழிப்­பேன் என்று சொல்­லிக் கிளம்பி வரு­வார்­கள். அவர்­க­ளுக்­கெல்­லாம் நான் பதில் சொல்ல வேண்­டிய அவ­சி­யம் இல்லை. 70 வரு­டங்­க­ளுக்கு முன்­னால் பேர­றி­ஞர் அண்ணா அவர்­களே பதில் சொல்­லி­யி­ருக்­கி­றார். எங்­களை அழித்­துப் புதைக்க வேண்­டும் என்று நால­டிக்­குக் குழி வெட்ட வரு­வார்­கள், தி.மு.க-வை ஒழித்­து­வி­டு­வேன் என்று சொல்­வார்­கள். அவர்­கள் குழி வெட்டி முடிப்­ப­தற்­குள் நாங்­கள் எட்­ட­டிக்கு வளர்ந்­தி­ருப்­போம். பக்­கத்­தி­லேயே எங்­க­ளுக்கு எட்­ட­டிக்­குக் குழி வெட்­டு­வார்­கள், அவர்­கள் குழியை வெட்­டு­வ­தற்­குள் நாங்­கள் 16 அடி வளர்ந்­தி­ருப்­போம். நீங்­கள் எங்­களை வெட்ட வெட்ட நாங்­கள் வளர்ந்­து­கொண்­டே­தான் இருப்­போம். தி.மு.க-வை எந்­தக் கொம்­ப­னா­லும் அழிக்­கவே முடி­யாது என்று பேர­றி­ஞர் அண்ணா அவர்­கள் சொன்­னார். அதை நாம் இந்­தத் தேர்­த­லில் நிரூ­பித்­துக் காட்ட வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.3">இங்கு அண்­ணன் ஆர்.டி.சேகர் அவர்­கள் வெற்றி பெற்­றார் என்­றால், அவர் இங்கு வேட்­பா­ளர் இல்லை.  நான் வேட்­பா­ளர், நம் தலை­வர் கலை­ஞர் வேட்­பா­ளர் என்று நினைத்­துக்­கொண்டு இந்­தப் பிரச்­சா­ரத்­தைச் செய்­யுங்­கள். இன்­னும் மூன்று நாட்­கள் நம் கைக­ளில் இருக்­கின்­றன. நான் தமிழ்­நாடு முழு­வ­தும் பிரச்­சா­ரத்­துக்­குச் சென்று வந்­தி­ருக்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.3">நான் நிச்­ச­யம் சொல்­கி­றேன், மீண்­டும் தி.மு.க ஆட்சி அமைக்­கப்­போ­வது உறுதி. நம் தலை­வர் மீண்­டும் முத­ல­மைச்­ச­ராக வரப்­போ­வது உறுதி. அதற்கு மேலும் வலு சேர்க்­கிற வித­மாக அண்­ணன் ஆர்.டி.சேகர் அவர்­களை இந்த பெரம்­பூர் தொகு­தி­யில் மிகப்­பெ­ரிய வாக்கு வித்­தி­யா­சத்­தில் நீங்­கள் வெற்றி பெறச் செய்து அனுப்ப வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12.3">பெரம்­பூர் திட்­டங்­கள்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.3">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.3">இந்­தத் தொகு­திக்கு நம் திரா­விட மாடல் அரசு பல்­வேறு திட்­டங்­களை செய்து கொடுத்­துள்­ளது. கணே­ச­பு­ரம் மேம்­பா­லப் பணி­கள் இன்று முடி­யும் நிலை­யில் இருக்­கின்­றன. அந்­தத் திட்­டத்­துக்கு நிதி ஒதுக்­கீடு செய்து அந்­தத் திட்­டத்தை தொடங்கி வைத்­தது நம் திரா­விட மாடல் அரசு, அதை கொண்டு வந்­தது, உங்­க­ளின் சட்­ட­மன்ற உறுப்­பி­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.3">630 கோடி ரூபாய் மதிப்­பீட்­டில் கொடுங்­கை­யூர் குப்­பைக் கிடங்­கில் பயோ மைனிங் முறை­யில் 48 லட்­சம் மெட்­ரிக் டன் கழி­வு­கள் அகற்­றப்­பட்­டி­ருக்­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.3">இந்து, கிறிஸ்­துவ மற்­றும் முஸ்­லிம் சமு­தா­யங்­க­ளுக்கு இறந்­த­வர்­களை நல்­ல­டக்­கம் செய்­திட,  தலா மூன்று ஏக்­கர் நிலம் என மொத்­தம் ஒன்­பது ஏக்­கர் நிலம் ஒதுக்­கப்­பட்­டி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.3">கண்­ண­தா­சன் நகர், முல்லை நகர் பேருந்து நிலை­யங்­கள் 10 கோடி ரூபாய் மதிப்­பீட்­டில் இன்று புதுப்­பிக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன. ஈ.ஹெச்.சாலை­யில் 3 கோடி ரூபாய் மதிப்­பீட்­டில் ஒரு விளை­யாட்டு அரங்­கம் கட்­டிக் கொடுத்­தி­ருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.3">19 கோடி ரூபாய் மதிப்­பீட்­டில் எம்.கே.பி. நக­ரில் ஒரு புதிய திரு­மண மண்­ட­பம். 28 கோடி ரூபாய் மதிப்­பீட்­டில் கேப்­டன் காட்­டன் கால்­வாய், கொடுங்­கை­யூர் கால்­வாய், வியா­சர்­பாடி கால்­வாய் ஆகி­ய­வற்­றில் இன்று வெள்­ளத் தடுப்­புச் சுவர் கட்­டிக் கொடுத்­தி­ருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.3"> </lang>
<lang  class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12.3">உத­ய­சூ­ரி­யன் சின்­னம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.3">இவ்­வ­ளவு திட்­டங்­க­ளைச் செய்து கொடுத்­து­விட்­டுத்­தான் மீண்­டும் இன்­னும் ஒரு வாய்ப்­புக் கொடுங்­கள். இன்­னும் இந்­தப் பகு­திக்கு, இந்­தத் தொகு­திக்கு மேன்­மே­லும்  பல திட்­டங்­க­ளைக் கொண்டு வரு­கி­றேன் என்ற அந்த உறு­தி­மொ­ழி­யைக் கொடுத்­து­விட்­டுப் போகத்­தான் நான் வந்­தி­ருக்­கி­றேன். இன்று தேதி 19. தேர்­தல் நாள் 23. இன்­னும் நம் கைக­ளில் மூன்று நாட்­கள் இருக்­கின்­றன. நீங்­கள் அத்­தனை பேரும் உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­துக்கு வாக்­க­ளிக்க வேண்­டும் என்று முடிவு எடுத்­து­விட்­டீர்­கள். நான் உங்­க­ளி­டம் கேட்­டுக்­கொள்­வ­தெல்­லாம் அடுத்த மூன்று நாள் இந்­தப் பிரச்­சா­ரத்தை மக்­க­ளி­டம் கொண்டு சேருங்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.3">நம் தலை­வர் கடந்த ஐந்து வரு­டத்­தில் நல்ல நல்ல திட்­டங்­க­ளைக் கொடுத்­தி­ருக்­கி­றார். வாக்­கு­று­தி­கள் கொடுத்­தி­ருக்­கி­றோம். ஒவ்­வொ­ரு­வ­ரை­யும் பார்த்­துப் பிரச்­சா­ரம் செய்­யுங்­கள். உங்­கள் தெரு­வில், உங்­கள் வீட்­டில், உங்­கள் பகு­தி­யில் இருக்­கக்­கூ­டிய யாரைச் சந்­தித்­தா­லும், ஒவ்­வொரு வாக்­கா­ள­ரை­யும் பார்த்­துச் சந்­தித்­துப் பேசுங்­கள். ஏன் அண்­ணன் ஆர்.டி.சேகர் அவர்­க­ளுக்கு உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­தில் வாக்­க­ளிக்க வேண்­டும்? ஏன் பெரம்­பூ­ரில் தி.மு.க வெற்றி பெற்­றுக் காட்ட வேண்­டும்?  என்­பதை விளக்­கிக் கூறுங்­கள். எல்­லா­வற்­றை­யும் விட முக்­கி­யம் நம் திட்­டங்­க­ளைச் சொல்­லுங்­கள். ஐந்து வரு­டம் நம் தலை­வர் என்­னென்ன செய்து கொடுத்­தி­ருக்­கி­றார் என்று சொல்­லுங்­கள். ஆட்­சிக்கு வந்­தால் என்ன செய்­வோம், அந்த வாக்­கு­று­தி­கள் கொடுத்­தி­ருக்­கி­றோம், அதைச் சொல்­லுங்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.3">எல்­லா­வற்­றை­யும் விட முக்­கி­யம் அடி­மைக் கூட்­டத்­தை­யும், சங்­கிக் கூட்­டத்­தை­யும் தமிழ்­நாட்­டுக்­குள் நுழைய விட­மாட்­டோம். இந்த பெரம்­பூர் என்­றைக்­குமே தி.மு.க-வின் கோட்டை என்­பதை மீண்­டும் மீண்­டும் பிரச்­சா­ரம் செய்­யுங்­கள். அப்­படி நீங்­கள் செய்­தீர்­கள் என்­றால், நிச்­ச­யம் அண்­ணன் ஆர்.டி.சேகர் அவர்­கள் கடந்த முறை வாங்­கிய வாக்­கு­களை விட அதி­க­மான வாக்கு வித்­தி­யா­ சத்­தில், குறைந்­தது 50,000 வாக்கு வித்­தி­யா­ சத்­தில் அண்­ணன் ஆர்.டி.சேகர் அவர்­களை நீங்­கள் வெற்­றி­பெற வைக்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.3">உங்­களை எல்­லாம் அன்­போடு கேட்­கி­றேன், பண்­போடு கேட்­கி­றேன், பாசத்­தோடு கேட்­கி­றேன், உரி­மை­யோடு கேட்­கி­றேன். உங்­கள் வீட்­டுப் பிள்­ளை­யாக இருந்து கேட்­கி­றேன், தலை­வ­ரின் மக­னாக இருந்து கேட்­கி­றேன், இன்­னும் பெரு­மை­யாக, பூரிப்­பா­கச் சொல்ல வேண்­டும் என்­றால் டாக்­டர் கலை­ஞ­ரின் பேர­னாக இருந்து கேட்­கி­றேன். பெரம்­பூர் தொகு­தி­யில் வெற்றி அவ­சி­யம். அண்­ணன் ஆர்.டி.சேகர் அவர்­க­ளுக்கு உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­தில் வாக்­க­ளித்து மிகப்­பெ­ரிய வெற்­றியை நீங்­கள் தேடித் தர வேண்­டும் என்று உங்­களை எல்­லாம் அன்­போடு கேட்டுக்கொள்கிறேன் வர­வேற்­புக்கு நன்றி.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.3">இவ்­வாறு கழக இளை­ஞர் அணிச் செய­லா­ள­ரும் துணை முத­ல­மைச்­ச­ரு­மான உத­ய­நிதி ஸ்டாலின் உரை­யாற்­றி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12.3">பங்­கேற்­ற­வர்­கள்</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.3"> 
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.3">நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் கலா­நிதி வீரா­சாமி, தொகு­திப் பார்­வை­யா­ளர் தூத்­துக்­குடி ஜோயல், மாவட்­டத் துணைச் செய­லா­ளர் கம­ல­கண்­ணன், மாவட்­டப் பொரு­ளா­ளர் தயா­ளன், தலை­மைச் செயற்­குழு உறுப்­பி­னர் கருணா, பொதுக்­குழு உறுப்­பி­னர்­கள், பகுதி கழ­கச் செய­லா­ளர்­கள் முரு­கன், ஜெய­ரா­மன், நவீன், வட்­டக் கழ­கச் செய­லா­ளர்­கள் ராஜன், கார்த்­தி­பன், உமா­பதி, ஹரி­தாஸ், செந்­த­மிழ் அர­சன், சி.எஸ்.ரவி, ஆறு­மு­கம், அருள், மாரி­முத்து, தின­க­ரன், முரு­கன், ராஜன், மலைச்­சாமி, பாபு, மாவட்ட இளை­ஞர் அணித் துணை அமைப்­பா­ளர்­கள் கௌதம், பொன்.இள­வ­ர­சன், ரவிக்­கு­மார், லயோலா மதன், கட்­பீஸ் சோம­சுந்­த­ர­மூர்த்தி, சத்­தி­ய­நா­ரா­ய­ணன், இளை­ஞர் அணி பகுதி அமைப்­பா­ளர்­கள் ராஜ்­கு­மார், சுரேஷ், இளை­ஞர் அணி உள்­ளிட்ட அனைத்­துச் சார்பு அணி­க­ளைச் சேர்ந்த நிர்­வா­கி­கள், மதச்­சார்­பற்ற முற்­போக்­குக் கூட்­ட­ணிக் கட்­சி­யைச் சேர்ந்த நிர்­வா­கி­கள் உள்­பட ப்லரும் கலந்­து­கொண்­ட­னர்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>