<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="22/04/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,70,958,1495" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Wed Apr 22 2026 03:42:33 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260422T000000+5.30" edition.name="CHN" edition.area="CHN" position.section="22042026-CHN-05" position.sequence="05" ex-ref="22042026-CHN-05.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="62">இந்தியாவின் ‘நம்பர் ஒன்’ மாநிலமாக மட்டுமல்லாமல், தெற்காசியாவின் ‘மாடல்’ மாநிலமாக</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="85">தமிழ்நாட்டை நிச்சயம் மாற்றிக் காட்டுவேன்!</lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="33">கொளத்தூர் - பிரச்சார நிறைவுக் கூட்டத்தில்  </lang>
	</hl4>
<hl5 id="Headline1" class="1" style="Headline5">
		<lang class="3" style="Headline5"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="39">தலைவர், முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி!</lang>
	</hl5>
<hl6 id="Headline1" class="1" style="Headline6">
		<lang class="3" style="Headline6"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="35">தமிழ்நாடு எல்லாத் துறைகளிலும் வளர்ச்சி!</lang>
	</hl6>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup579003_05_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup579004_05_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup579007_05_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup579006_05_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12.5">சென்னை, ஏப்.22–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12.5">“தமிழ்­நாட்டை சூப்­பர்ஸ்­டார் ஆக்­கிய இந்த முத்­து­வேல் கரு­ணா­நிதி ஸ்டாலி­னின் ஆட்சி தொடர தி.மு.க. தலை­மை­யி­லான மதச்­சார்­பற்ற முற்­போக்­குக் கூட்­ட­ணிக்கு வாக்­க­ளிப்­பீர்!” என­வும்,  “இந்­தி­யா­வின் நம்­பர் ஒன் மாநி­ல­மாக மட்­டு­மல்­லா­மல், தெற்­கா­சி­யா­வின் மாடல் மாநி­ல­மா­கத் தமிழ்­நாட்டை நான் நிச்­ச­யம் மாற்­றிக் காட்­டு­வேன்!” “இது உறுதி... உறுதி... உறுதி..!” என்­றும் கொளத்­தூர் பிரச்­சா­ரக் கூட்­டத்­தில் தலை­வர், முதல்­வர் மு.க.ஸ்டாலின் சூளு­ரைத்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">கழ­கத் தலை­வ­ரும், முத­ல­மைச்­ச­ரு­மான மு.க. ஸ்டாலின் அவர்­கள் நேற்று (21–04–2026), சென்னை, கொளத்­தூ­ரில் நடை­பெற்ற சட்­ட­மன்­றத் தேர்­தல் பரப்­புரை நிறை­வுப் பொதுக்­கூட்­டத்­தில் ஆற்­றிய உரை  வரு­மாறு:–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">என்­ன­தான் ஒட்­டு­மொத்­தத் தமிழ்­நாட்­டிற்­கும் நான் முத­ல­மைச்­ச­ராக இருந்­தா­லும், சென்னை – நான் பாச­மாக வளர்த்த குழந்தை போன்று! ஏனென்­றால் நான் அந்­த­ள­விற்கு உங்­க­ளோடு ஒன்றி இருப்­ப­வன். அது­மட்­டு­மல்ல, சென்­னைக்கு மாந­க­ரத் தந்­தை­யாக, மக்­க­ளால் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்ட முதல் மேய­ராக இருந்­த­வன் நான். சென்னை – பல கன­வு­க­ளு­டன் நான் உரு­வாக்­கிய திட்­டங்­க­ளால் வளர்ந்­தி­ருக்­கும் மாந­க­ரம்! அத­னால்­தான் அப்­ப­டிச் சொல்­கி­றேன். அதி­லும், இந்த நம்­மு­டைய கொளத்­தூர் என்­னு­டைய செல்­லக் குழந்தை!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14">கொளத்­தூ­ருக்கு வரா­மல்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14">என்­னால் இருக்க முடி­யாது!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">பொங்­கல், கிறிஸ்­து­மஸ், ரம்­ஜான் எனப் பண்­டி­கை­க­ளைக்­கூட, நான் உங்­க­ளு­டன்­தான் கொண்­டாடி இருக்­கி­றேன். முத­ல­மைச்­சர் பொறுப்­பில் இருப்­ப­தால் தமிழ்­நாடு முழு­வ­தும் அனைத்து மாவட்­டத்­திற்­கும் சுற்­றுப்­ப­ய­ணம் சென்­றா­லும், பத்து நாட்­க­ளுக்கு ஒரு­முறை கொளத்­தூ­ருக்கு வரா­மல் என்­னால் இருக்­கவே முடி­யாது. ஒரு வாரம் ஆனால், நம்­மு­டைய சேகர்­பா­பு­வி­டம், “எப்­போது தொகு­திக்­குச் செல்­ல­லாம்? தொகு­தி­யில் என்ன வேலை நடக்­கி­றது?” என்று நானே கேட்க ஆரம்­பித்­து­வி­டு­வேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">தேர்­தல் அறி­வித்­த­தும் வேட்­பு­மனு தாக்­கல் செய்ய வந்­தேன்; அடுத்து இப்­போ­து­தான் பிரச்­சா­ரத்­தின் கடைசி நாள் உங்­க­ளி­டம் வாக்கு கேட்டு வந்­தி­ருக்­கி­றேன். ஏனென்­றால், அந்த அள­விற்கு இந்­தத் தொகு­திக்­குத் தொடர்ந்து வந்து அனைத்­துப் பணி­க­ளை­யும் செய்து கொடுத்­தி­ருக்­கி­றேன். நான் செய்து கொடுத்த திட்­டப் பணி­கள்­தான் எனக்­காக இங்கு ஓட்டு கேட்­டி­ருக்­கின்­றன. மற்ற வேட்­பா­ளர்­க­ளுக்­கா­கத் தமிழ்­நாடு முழு­வ­தும் சுற்றி வந்த நான், என்­னு­டைய தொகு­தி­யில் மொத்­த­மா­கவே ஒரு மணி நேரம்­தான் சுற்­றி­யி­ருக்­கி­றேன். கொளத்­தூர் மக்­கள் என் மேல் காட்­டும் அன்பு அப்­ப­டிப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">வரு­டம் முழு­வ­தும் நன்­றா­கப் படித்த மாண­வன் தேர்­வுக்கு முன்பு சிறி­ய­தாக ‘revise’ செய்­தாலே போதும். அது­போன்று, இத்­தனை ஆண்டு உங்­க­ளுக்­காக உழைத்­தி­ருக்­கி­றேன். நான் செய்த திட்­டங்­களே எனக்­கா­கப் பேசும். நான் சொல்­வது சரி­தானே?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14">கொளத்­தூ­ருக்கு பல திட்­டங்­களை</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14">தந்த நான் உங்­க­ளி­டம் ஆத­ரவு கேட்­கி­றேன்!
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">ஒவ்­வொரு ஊருக்­கும் சென்­ற­போது, அங்கு போட்­டி­யி­டும் வேட்­பா­ளர்­களை அறி­மு­கப்­ப­டுத்தி வைத்­தேன். கொளத்­தூ­ரில் எனக்கு நானே ‘intro’ கொடுத்­துக் கொள்­கி­றேன். உங்­க­ளுக்­காக உழைத்து இத்­தனை திட்­டங்­க­ளைக் கொளத்­தூ­ருக்­குக் கொண்டு வந்த உங்­க­ளில் ஒரு­வ­னான இந்த முத்­து­வேல் கரு­ணா­நிதி ஸ்டாலி­னுக்கு மூன்று முறை வாய்ப்பு கொடுத்­தீர்­கள். உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­தில் வாக்­க­ளித்து இன்­னொரு முறை­யும் எனக்கு வாய்ப்பு கொடுங்­கள். கொடுப்­பீர்­களா? கொளத்­தூர் வேட்­பா­ளர் முத்­து­வேல் கரு­ணா­நிதி ஸ்டாலி­னின் வெற்றி உறு­தியா? நன்றி!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">ஏற்­க­னவே ஒரு மாடல் தொகு­தி­யா­கக் கொளத்­தூரை மாற்றி வைத்­தி­ருக்­கி­றேன். இன்­னும் சிறப்­பாக உயர்ந்த கொளத்­தூ­ராக, உறு­தி­யாக மேம்­ப­டுத்­து­வேன். நிறைய பேர் என்­னி­டம், “மற்ற ஊர்­க­ளை­விட நீங்­கள் சென்­னைக்கு நிறை­யத் திட்­டங்­க­ளைக் கொண்டு வரு­வது போன்று இருக்­கி­றது” என்று சொல்­வார்­கள். நான் அனைத்து ஊர்­க­ளை­யும் சம­மா­கத்­தான் பார்க்­கி­றேன். அனைத்து மாவட்­டங்­க­ளுக்­குமே அந்­தந்­தப் பகு­தி­க­ளின் மக்­கள் தொகைக்­கேற்­பத் திட்­டங்­க­ளைச் செய்து கொடுத்­துக் கொண்­டு­தான் இருக்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">இருந்­தா­லும், ஏன் நிறை­யப் பேருக்கு அப்­ப­டித் தோன்­று­கி­றது என்று யோசித்­துப் பார்த்­தேன். அப்­போ­து­தான் புரிந்­தது, கடந்த அ.தி.மு.க. ஆட்­சி­யில் பத்­தாண்­டு­கா­ல­மா­கச் சென்னை முற்­றி­லு­மா­கப் புறக்­க­ணிக்­கப்­பட்டு இருந்­தது. மாநி­லத்­தில் அ.தி.மு.க. ஆட்­சியே இருந்­தா­லும்­கூட, சென்னை வளர வேண்­டும் என்­றால், தி.மு.க.தான் வேண்­டும் என்று, சென்­னை­யின் தீர்ப்பு எப்­போ­துமே சாலி­டாக தி.மு.க. பக்­கம்­தான் இருக்­கும்! அத­னா­லேயே சென்­னை­யைப் பழி­வாங்­கு­வது போன்று அ.தி.மு.க. ஆட்­சி­யில் பாரா­மு­க­மாக வைத்­தி­ருப்­பார்­கள். நம்­மு­டைய தலை­ந­க­ரையே தவிக்­க­விட்ட ஆட்­சி­தான் அ.தி.மு.க. ஆட்சி! சிறிய மழைக்கே வெள்­ளத்­தில் உங்­க­ளைத் தத்­த­ளிக்­க­விட்ட ஆட்சி அ.தி.மு.க. ஆட்சி!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14">சென்­னை­யில் ஏரா­ள­மான திட்­டங்­களை</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14">நிறை­வேற்றி புதுப்­பித்­தி­ருக்­கி­றோம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">புதி­தாக எதை­யும் செய்­ய­வில்லை என்­றா­லும் பர­வா­யில்லை; முந்­தைய தி.மு.க. அர­சில் நாம் உரு­வாக்­கிய கட்­ட­மைப்­பு­க­ளைக் கூடச் சீர்­கு­லைத்து வைத்­தி­ருந்­தார்­கள். சென்­னை­யைத் தேங்­க­வும், வளர்ச்­சிக்­காக ஏங்­க­வும் வைத்­து­விட்­டுப் போய்­விட்­டார்­கள். சென்­னைக்­குச் சம­மாக இருந்த மற்ற நக­ரங்­கள் அனைத்­தும் பத்­தாண்டு அ.தி.மு.க. ஆட்­சி­யில், வேறு லெவ­லுக்­குப் போயி­ருந்­தார்­கள். அதைச் சரி­செய்­வது போன்று, இப்­போது நம்­மு­டைய கடந்த5 ஆண்டு ஆட்­சி­யில், மள­ம­ள­வெ­னச் சென்­னை­யின் அனைத்­துப் பகு­தி­க­ளி­லும், மேம்­பா­லங்­கள், மெட்ரோ பணி­கள், பூங்­காக்­கள், நூல­கங்­கள், முதல்­வர் படைப்­ப­கங்­கள், மழை­நீர் வடி­கால்­கள், நகர்ப்­புற வாழ்­விட மேம்­பாட்டு வாரி­யம் சார்­பாக ஏழை­க­ளுக்கு நக­ரின் மையப்­ப­கு­தி­க­ளில் அடுக்­கு­மாடி குடி­யி­ருப்­பு­கள், விளை­யாட்டு மைதா­னங்­கள், குத்­துச்­சண்டை அகா­டெமி, நவீன பேருந்து நிலை­யங்­கள், தாழ்­தள பேருந்­து­கள், மின் பேருந்­து­கள், AC பேருந்­து­கள் எனப் பட்­டி­யல் போட்­டால் போய்க் கொண்டே இருக்­கும்... அந்த அள­விற்கு வேலை பார்த்­தி­ருக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">அது­வும் வட­சென்னை வளர்ச்­சித் திட்­டம் எனக் கொண்டு வந்து, 8 ஆயி­ரம் கோடி ரூபாய் ஒதுக்கி, உட்­கட்­ட­மைப்­பு­களை மேம்­ப­டுத்தி, வட­சென்­னை­யின் இமே­ஜையே மாற்­றி­விட்­டோம். நிறைய பேர், இப்­படி நாம் உரு­வாக்­கிய இடங்­க­ளுக்­குச் சென்று பார்க்­கும்­போது, “நம்­மு­டைய சென்­னை­யில் இப்­படி ஒரு வச­தியா? எப்­படி இருந்த இடம் இப்­படி மாறி­விட்­டது?” என்று கேட்டு reels போடு­கி­றார்­கள். அதை­யெல்­லாம் பார்க்­கும்­போது எனக்கு ஏற்­ப­டும் மகிழ்ச்­சியை விவ­ரிக்க வார்த்­தை­களே இல்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">இப்­ப­டி­யாக, அ.தி.மு.க.–வின் 10 ஆண்டு ஆட்­சி­யில் கண்­டு­கொள்­ளப்­ப­டா­மல் இருந்த சென்­னைக்கு, தலை­ந­க­ருக்­கு­ரிய கவ­னம் இப்­போ­து­தான் கிடைக்­கி­றது. நம்­மு­டைய ஆட்­சி­யில் தலை­ந­க­ரைத் தலை­சி­றந்த நக­ராக மாற்றி இருக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">அடுத்­த­கட்­ட­மாக, நேற்று முன்­தி­னம் ‘சென்னை சூப்­பர் சிக்ஸ்’ என்ற பெய­ரில் ஒரு சிறப்­புச் செயல்­திட்­டத்­தை­யும் அறி­வித்­தி­ருக்­கி­றேன். ராபின்­சன் பூங்­கா­வில் கட்சி தொடங்­கிய நாளி­லி­ருந்தே சென்னை தி.மு.க.–வின் கோட்டை! யாரா­லும் உடைக்க முடி­யாத கோட்டை! 2021–இல் முழு வெற்­றி­யைத் தந்து, நம்மை அரி­ய­ணை­யில் ஏற்­றிய கோட்டை. அந்த வெற்றி இந்த முறை­யும் தொடர வேண்­டும்! கடந்த முறை­யை­விட, அதிக வாக்கு வித்­தி­யா­சத்­தில் இந்த முறை வெற்றி பெற வேண்­டும். எத்­தனை பேர் வந்­தா­லும், சென்­னைக்­காக உழைக்­கும் தி.மு.க. கொடி மட்­டும்­தான் சென்­னை­யில் பறக்க வேண்­டும்! பறக்­கும்! இது உறுதி!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14">கொளத்­தூர் தொகு­தியை ஒரு மாடல்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14">தொகு­தி­யாக மாற்­றி­யுள்­ளேன்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">உங்­க­ளுக்­கான திட்­டங்­க­ளை­யும் வளர்ச்­சிப் பணி­க­ளை­யும் கொண்டு வந்­தி­ருக்­கி­றோம். எடுத்­துக்­காட்­டிற்கு இந்த கொளத்­தூர் தொகு­தி­யையே எடுத்­துக் கொள்­ளுங்­கள். இதை ஏன் நான் மாடல் தொகுதி என்று சொல்­கி­றேன் தெரி­யுமா? கடந்த 5 ஆண்­டில் தமிழ்­நாட்­டில் முதல் முறை­யாக முதல்­வர் படைப்­ப­கங்­கள், முதல்­வர் கல்­விச் சோலை அமைத்­தி­ருக்­கி­றோம். கொளத்­தூ­ருக்­குத் தேவை­யான மேம்­பா­லங்­கள் கட்­டித் திறந்­தி­ருக்­கி­றோம். அதிக அள­வி­லான ஏரி, குளங்­க­ளைத் தூர்­வா­ரிச் சீர­மைத்­தி­ருக்­கி­றோம். நவீன பேருந்து நிலை­யங்­கள், தர­மான மருத்­து­வ­மனை, வச­தி­யான திரு­மண மாளிகை, பூங்­காக்­கள், இளை­ஞர்­க­ளுக்­கான மினி ஸ்டேடி­யம், விளை­யாட்­டுத் திடல்­களை அமைத்­தி­ருக்­கி­றோம். புதி­தா­கக் கல்­லூ­ரி­யைத் தொடங்­கி­யி­ருக்­கி­றோம். வண்­ண­மீன்­கள் வர்த்­தக மையம் திறந்­தி­ருக்­கி­றோம். கொளத்­தூ­ரில்­தான் அதிக அள­வி­லான அர­சுப் பள்ளி புதிய கட்­ட­டங்­க­ளைக் கட்­டிக் கொடுத்து, smart வகுப்­ப­றை­களை அமைத்­தி­ருக்­கி­றோம். இப்­படி கொளத்­தூ­ரில் திரும்­பும் பக்­க­மெல்­லாம், புதிய புதிய கட்­ட­மைப்­பு­களை உரு­வாக்­கி­யி­ருக்­கி­றோம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14">கொளத்­தூர் மாடல் தொகுதி</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14">என்­றால், திரா­விட மாடல் ஆட்­சி­யில், தமிழ்­நாடே ஒரு மாடல் state தான்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">தமிழ்­நாடு முழு­வ­தும் என்­னு­டைய இந்த பிரச்­சார நிறைவு உரை­யைப் பார்க்­கும் என்­னு­யிர் மக்­களே... நாங்­கள் ஆட்­சிக்கு வந்து முதல் மூன்று ஆண்­டு­க­ளில் செய்த சாத­னை­க­ளைப் பார்த்தே, நாடா­ளு­மன்­றத் தேர்­த­லில் இந்­தி­யா­வி­லேயே யாரும் பெற முடி­யாத நாற்­ப­துக்கு நாற்­பது என்ற முழு வெற்­றி­யைப் கொடுத்­தீர்­கள். அதே போன்று சட்­ட­மன்­றத் தேர்­த­லி­லும் நாம் வர­லாறு படைக்க வேண்­டும். தமிழ்­நாட்­டின் தொடர் வளர்ச்­சிக்­காக எங்­க­ளுக்­குத் தொடர்ச்­சி­யான வெற்­றி­யைத் தர வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14">நம் சாத­னைத் திட்­டங்­க­ளில்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14">ஒரு­சி­ல­வற்­றைக் கூறு­கி­றேன்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">நம்­மு­டைய சாத­னைத் திட்­டங்­க­ளு­டைய பெயர்­களை மட்­டும் சொன்­னாலே, இன்­றைக்கு ஒரு­நாள் போதாது. அத­னால் ஒரு சில திட்­டங்­களை மட்­டும் சொல்லி அது எப்­படி மக்­க­ளோடு நெருங்கி இருக்­கி­றது, அந்­தத் திட்­டங்­க­ளால் பய­ன­டை­யும் பய­னா­ளி­கள் இந்த ஸ்டாலினை எப்­ப­டிப் பார்க்­கி­றார்­கள் என்று சொல்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">மக­ளிர் மேம்­பாடு என்று எடுத்­துக் கொண்­டால், மாதம் ஆயி­ரம் ரூபாய் கலை­ஞர் மக­ளிர் உரி­மைத் தொகை வாங்­கும் சகோ­த­ரி­கள், இந்த ஸ்டாலினை நினைத்­துப் பார்ப்­பார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">ஒவ்­வொரு முறை­யும் விடி­யல் பேருந்­தில் சுதந்­தி­ர­மா­கப் பய­ணிக்­கும் போதும் என்னை நினைத்­துப் பார்ப்­பீர்­கள்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">அதே­போன்று தோழி விடு­தி­கள் திட்­டம், pink ஆட்­டோக்­கள், கருப்பை வாய் புற்­று­நோய் தடுப்­பூசி வழங்­கும் திட்­டம் என நிறைய இருக்­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">கல்வி வளர்ச்சி என்று எடுத்­துக் கொண்­டால், காலை உண­வுத் திட்­டத்­தில் சுவை­யான உண­வைச் சாப்­பி­டும் குழந்­தை­க­ளும், காலை­யில் சீக்­கி­ரமே எழுந்து வேலைக்­குச்செல்­லும் பெண்­க­ளும், என்னை நன்­றி­யோடு நினைத்­துப் பார்ப்­பார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">புது­மைப்­பெண் திட்­டத்­தில் மாதம் ஆயி­ரம் வரு­கி­றது என்று கல்­லூ­ரிக்­குச் செல்­லும் மாண­வி­கள் அனை­வ­ரும் இந்த ஸ்டாலி­னுக்கு thanks சொல்­லு­வார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">அப்­ப­டித்­தான் ஒரு பெண் ‘கல்­வி­யில் சிறந்த தமிழ்­நாடு’ என்ற நிகழ்ச்­சி­யில் மேடை­யில் நின்று கண்­ணீ­ரோடு இந்­தத் திட்­டம் எப்­படி உத­வி­யாக இருக்­கி­றது என்று நன்றி சொன்­னார். நெகிழ்ந்­து­போன நான் அவர்­களை அழைத்து உச்­சந்­த­லை­யில்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">கழகத் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் அவர்கள் நேற்று (21.4.2026) கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பெரவள்ளூர் சதுக்கத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்து உரையாற்றினார். இக்கூட்டத்தில், சென்னை கிழக்கு மாவட்ட கழகச் செயலாளர் அமைச்சர் பி.கே.சேகர்பாபு, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், பகுதிக் கழகச் செயலாளர்கள்  நாகராஜன்,  ஐசிஎஃப் முரளி, தோழமைக் கட்சிகளின் மாவட்ட கழக நிர்வாகிகள், கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியை சார்ந்த கழக நிர்வாகிகள், பல்வேறு அமைப்புகளைச் சார்ந்த நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>