<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="22/04/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,33,958,1211" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Tue Apr 21 2026 16:52:19 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260422T000000+5.30" edition.name="TRY" edition.area="TRY" position.section="22042026-TRY-11" position.sequence="11" ex-ref="22042026-TRY-11.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="20">திருச்சி </lang>
	<lang class="3" style="Headline2"  font="Arial" fontStyle="Bold"  size="20">22.04.2026</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="35">திருவொற்றியூர் வேட்பாளர் எல்.சுந்தர்ராஜனுக்கு வாக்களிப்பீர்!</lang>
	<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="35"> </lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="65">சங்கிக் கூட்டத்தைத் தமிழ்நாட்டுக்குள் நுழைய விடக்கூடாது! அடிமைக் கூட்டத்தை   மீண்டும் தமிழ்நாட்டுக்குள், குறிப்பாக சென்னையில் தலையெடுக்க விடக்கூடாது!   </lang>
	</hl4>
<hl5 id="Headline1" class="1" style="Headline5">
		<lang class="3" style="Headline5"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="35">துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சார முழக்கம்! </lang>
	</hl5>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup336569_11_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup284850_11_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="3" source="20.4.2026dmky_11_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.3">சென்னை, ஏப்.22–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.3">திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தின் இளை­ஞ­ர­ணிச் செய­லா­ள­ரும் – தமிழ்­நாடு துணை முத­ல­மைச்­ச­ரு­மான உத­ய­நிதி ஸ்டாலின் அவர்­கள் நேற்று முன்தினம் (20.4.2026) திரு­வள்­ளூர்  மாவட்­டம் திரு­வெற்­றி­யூர் சட்­ட­மன்ற தொகு­திக்­கான திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தின் தலை­மை­யி­லான மதச்­சார்­பற்ற முற்­போக்கு கூட்­ட­ணி­யின் மார்க்­சிஸ்ட் கம்­யூ­னிஸ்ட் கட்­சி­யின் வேட்­பா­ளர் சுந்­தர்­ரா­ஜன் அவர்­க­ளுக்கு அரி­வாள் சுத்­தி­யல் நட்­சத்­தி­ரம் சின்­னத்­தில் வாக்கு சேக­ரித்து பிரச்­சா­ரம் மேற்­கொண்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.8">அப்­போது அவர் ஆற்­றிய உரை வரு­மாறு:–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.8">இவ்­வ­ளவு சிறப்­பான, எழுச்­சி­யான, அன்­பான வர­வேற்பு அளித்­தி­ருக்­கக்­கூ­டிய உங்­கள் அனை­வ­ருக்­கும் முதற்­கண் என் நன்­றி­யைத் தெரி­வித்­துக் கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.8">கடந்த 20 நாட்­க­ளில் கிட்­டத்­தட்ட 120 சட்­ட­மன்­றத் தொகு­தி­க­ளுக்­குச் சென்று, அங்­கி­ருக்­கக்­கூ­டிய தொகுதி மக்­களை எல்­லாம் சந்­தித்து, நம் வெற்றி வேட்­பா­ளர்­க­ளுக்கு உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­தி­லும், நம் கூட்­ட­ணிக் கட்சி வேட்­பா­ளர்­க­ளுக்கு நம் கூட்­ட­ணிச் சின்­னங்­க­ளி­லும் வாக்கு கேட்­டு­விட்டு, இன்று திரு­வொற்­றி­ 
யூ­ருக்கு வருகை தந்து உங்­களை எல்­லாம் சந்­தித்து, நம் தோழர் சுந்­தர்­ராஜ் அவர்­க­ளுக்கு அரி­வாள் சுத்­தி­யல் நட்­சத்­தி­ரம் சின்­னத்­தில் வாக்­க­ளித்து மிகப்­பெ­ரிய வெற்­றி­யைத் தேடித்­தர வேண்­டும் என்று உங்­களை எல்­லாம் கேட்­டுக்­கொள்­வ­தற்­காக வந்­தி­ருக்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.8">நான் கிட்­டத்­தட்ட 120 தொகு­தி­க­ளுக்கு நேர­டி­யா­கச் சென்று வந்­தி­ருக்­கி­றேன். எங்­குச் சென்­றா­லும் மிகப்­பெ­ரிய எழுச்சி, மிகப்­பெ­ரிய வர­வேற்பு இருக்­கி­றது. 100% நம் திரா­விட முன்­னேற்­றக் கழ­கம் மீண்­டும் ஆட்சி அமைக்­கப்­போ­வது உறுதி. 100% நம் தலை­வர் அவர்­கள் மீண்­டும் முத­ல­மைச்­சர் ஆகப்­போ­வது உறுதி. அதற்கு மேலும் வலு­சேர்க்­கும் வித­மாக இங்கே திரு­வொற்­றி­யூ­ரில் தோழர் சுந்­தர்­ராஜ் அவர்­க­ளுக்கு அரி­வாள் சுத்­தி­யல் நட்­சத்­தி­ரம் சின்­னத்­தில் நீங்­கள் வாக்­க­ளித்து மிகப்­பெ­ரிய வெற்­றி­யைத் தேடித்­தர வேண்­டும் என்று கேட்­டுக்­கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.8">இந்­தத் திரு­வொற்­றி­யூர் தொகு­தி­யில் நம் வெற்றி வேட்­பா­ளர் தோழர் சுந்­தர்­ராஜ் அவர்­களை உங்­க­ளி­டத்­தில் தலை­வர் அவர்­கள் ஒப்­ப­டைத்­தி­ருக்­கி­றார்­கள். கம்­யூ­னிஸ்ட் இயக்­கத்­துக்­கும் நம் திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­துக்­கும் கலை­ஞ­ருக்­கும் மிகப்­பெ­ரிய நெருங்­கிய தொடர்பு உண்டு. “நான் பெரி­யாரை மட்­டும் சந்­திக்­கா­மல் இருந்­தி­ருந்­தால் நானும் கம்­யூ­னிஸ்ட் ஆகி­யி­ருப்­பேன், கம்­யூ­னிஸ்ட் கட்­சி­யில் சேர்ந்­தி­ருப்­பேன்” என்று கலை­ஞர் அவர்­கள் பல முறை பெரு­மை­யா­கக் குறிப்­பி­டு­வார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.8">அப்­ப­டிப்­பட்ட பெருமை வாய்ந்த கம்­யூ­னிஸ்ட் கட்­சி­யின், நம் கூட்­ட­ணிக் கட்­சி­யின் வேட்­பா­ளர் தோழர் சுந்­தர்­ராஜ் அவர்­க­ளுக்­குத்­தான் அரி­வாள் சுத்­தி­யல் நட்­சத்­திர சின்­னத்­தில் வாக்­க­ளிக்க வேண்­டும் என்று உங்­களை எல்­லாம் உரி­மை­யோடு கேட்க வந்­தி­ருக்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12.3">தொழிலாளர் தோழர்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.8">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.8">ஒரு தொழி­லா­ளி­யா­கத் தன் வாழ்க்­கை­யைத் தொடங்­கி­ய­வர். ஏழை எளிய மக்­க­ளு­டைய நண்­பர், தோழர். இந்­தப் பகு­தி­யில் இருக்­கக்­கூ­டிய தொழி­லா­ளர்­க­ளின் அனைத்­துப் பிரச்­சி­னை­க­ளை­யும் தெரிந்­த­வர். அவர்­க­ளு­டைய உரி­மை­க­ளுக்­கா­கத் தின­மும் குரல் கொடுக்­கக்­கூ­டி­ய­வர். ஏதோ தேர்­த­லுக்­குத் தேர்­தல் மட்­டும் உங்­களை வந்து சந்­திக்­கக்­கூ­டி­ய­வர் கிடை­யாது தோழர் சுந்­தர்­ராஜ் அவர்­கள். மக்­க­ளோடு இருக்­கக்­கூ­டி­ய­வர். உங்­க­ளின் பிரச்­சி­னை­களை அறிந்­த­வர், அதைத் தீர்க்­கக்­கூ­டிய ஆற்­ற­லைப் பெற்­ற­வர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.8">அத­னால்­தான் நீங்­கள் அனை­வ­ரும் அரி­வாள் சுத்­தி­யல் நட்­சத்­தி­ரம் சின்­னத்­தில் வாக்­க­ளித்து மிகப்­பெ­ரிய வாக்கு வித்­தி­யா­சத்­தில் அவரை வெற்­றி­பெற வைக்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.8">ஏற்­க­னவே சென்ற சட்­ட­மன்­றத் தேர்­த­லில் நம் சகோ­த­ரர் கே.பி.சங்­கர் அவர்­களை வெற்­றி­பெற வைத்து நீங்­கள் சட்­ட­மன்­றத்­துக்கு அனுப்­பி­னீர்­கள். இந்த முறை நம் கூட்­ட­ணிக் கட்­சிக்கு அந்த வாய்ப்­பைத் நம் தலை­வர் கொடுத்­தி­ருக்­கி­றார். உங்­க­ளை­யெல்­லாம் உரி­மை­யோடு வந்து ஏன் வாக்கு கேட்­கி­றேன் என்­றால், இந்த ஐந்து ஆண்­டு­க­ளில் நம் திரா­விட மாடல் அரசு இந்­தத் தொகு­திக்­குப் பல்­வேறு திட்­டங்­க­ளைச் செய்து கொடுத்­தி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.8">உதா­ர­ணத்­துக்­குச் சில திட்­டங்­களை மட்­டும் உங்­க­ளுக்கு ஞாப­கப்­ப­டுத்த விரும்­பு­கி ­றேன்.
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.8">எண்­ணூர் நெட்­டுக்­குப்­பம் கொசஸ்­தலை ஆறு மற்­றும் முகத்­து­வா­ரம் 150 கோடி ரூபாய் ஒதுக்­கீடு செய்­யப்­பட்டு, ஆழப்­ப­டுத்­தப்­பட்டு, தூண்­டில் வளைவு அமைக்­கப்­பட்­டி­ருக்­கி­றது என்­றால் அது நம் முத­ல­மைச்­சர் திரா­விட மாடல் அர­சின் திட்­டம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.8">25 கோடி ரூபாய் மதிப்­பீட்­டில் விம்கோ நக­ரில் ரயில்வே சுரங்­கப்­பாதை கட்­டு­கின்ற பணி நடை­பெற்று வரு­கி­றது. இதைச் செய்து கொடுத்­தது நம் திரா­விட மாடல் அரசு, நம் முத­ல­மைச்­சர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.8">25 கோடி ரூபாய் மதிப்­பீட்­டில் அண்­ணா­மலை நகர் ரயில்வே சுரங்­கப்­பாதை அமைக்­கின்ற பணி. 24 கோடி ரூபாய் மதிப்­பீட்­டில் அரசு பாலி­டெக்­னிக் கல்­லூரி அமைக்­கின்ற பணி.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.8">20 கோடி ரூபாய் மதிப்­பீட்­டில் நெட்­டுக்­குப்­பம், தாழங்­குப்­பம் கடற்­க­ரை­யில் மீன் இறங்­கு­த­ளம், வலை பின்­னும் கூடம், மீன் காய­வைக்­கின்ற இடம் உள்­ளிட்ட பல்­வேறு வச­தி­களை ஏற்­ப­டுத்­திக் கொடுத்­தி­ருக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.8">சுமார் 16 கோடி ரூபாய் மதிப்­பீட்­டில் அரசு கலைக் கல்­லூரி மேம்­பாட்­டுப் பணி. 14 கோடி ரூபாய் மதிப்­பீட்­டில் பேருந்து நிலை­யம் அமைக்­கின்ற பணி. பார­தி­யார் நக­ரில் மீன்­பிடி இறங்­கு­த­ளம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.8">10 கோடி ரூபாய் மதிப்­பீட்­டில் மணலி ஏரிப் படகு குளம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.8">10 கோடி ரூபாய் மதிப்­பீட்­டில் கத்­தி­வாக்­கத்­தில் நவீன மீன் சந்தை மற்­றும் திரு­மண 
மண்­ட­பம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.8">திரு­வொற்­றி­யூர் மீன் சந்தை வளா­கம். 8 கோடி ரூபாய் மதிப்­பீட்­டில் மணலி அம்­பேத்­கர் தெரு­வில் ஒரு திரு­மண மண்­ட­பம். 5 கோடி ரூபாய் மதிப்­பீட்­டில் கத்­தி­வாக்­கத்­தில் ஒரு புதிய பேருந்து நிலை­யம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.8">5 கோடி ரூபாய் மதிப்­பீட்­டில் திரு­வொற்­றி­யூர் நெடுஞ்­சா­லை­யில் ஒரு சமு­தாய நலக் கூடம். இவ்­வ­ளவு திட்­டங்­க­ளை­யும் செய்து கொடுத்­தி­ருக்­கி­றோம்.  மீண்­டும் நம் வெற்றி வேட்­பா­ள­ருக்கு ஒரு வாய்ப்­பைக் கொடுங்­கள். மீண்­டும் இந்­தத் தொகு­திக்கு இன்­னும் பல்­வேறு திட்­டங்­களை நிச்­ச­யம் எடுத்து வரு­வோம் என்­கிற வாக்­கு­று­தி­யைக் கொடுக்க நான் வந்­தி­ருக்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12.3">நிறைவேற்றிய வாக்குறுதிகள்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.8"> 
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.8">நாம் இந்­தத் தொகு­திக்கு மட்­டும் இவ்­வ­ளவு திட்­டங்­கள் செய்து கொடுத்­தி­ருக்­கி­றோம். ஒட்­டு­மொத்­தத் தமிழ்­நாட்­டுக்கு நம் தலை­வர் முத­ல­மைச்­சர் அவர்­கள் பல்­வேறு வாக்­கு­று­தி­கள் கொடுத்து, அந்த வாக்­கு­று­தி­கள் அனைத்­தை­யும் நிறை­வேற்­றிக் கொடுத்­தி­ருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.8">உதா­ர­ணத்­துக்கு ஆட்­சிக்கு வந்­த­வு­டன் நம் முத­ல­மைச்­சர் போட்ட முதல் கையெ­ழுத்து மக­ளி­ருக்­குக் கட்­ட­ண­மில்­லாப் பேருந்து திட்­டம். ஒவ்­வொரு மக­ளி­ரும் கிட்­டத்­தட்ட மாதம் குறைந்­தது 900 ரூபாய் வரை சேமித்­தி­ருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.8">அர­சுப் பள்­ளி­யில் படிக்­கக்­கூ­டிய குழந்­தை­கள் காலை­யில் பசி­யோடு படிக்­கக்­கூ­டாது என்று முத­ல­மைச்­சர் காலை உண­வுத் 
திட்­டம்.
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.8">பள்­ளிக்­கூ­டத்­தில் படிக்­கின்ற குழந்­தை­கள் கல்­லூரி சென்று படிக்க வேண்­டும் என்று அவர்­க­ளுக்கு மாதம் 1000 ரூபாய் கல்வி ஊக்­கத்­தொகை. இப்­ப­டிப் பல்­வேறு திட்­டங்­க­ளைச் செய்து கொடுத்­தி­ருக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.8">சமீ­பத்­தில் மூன்று மாதங்­க­ளுக்கு முன்பு 10 லட்­சம் கல்­லூரி மாணவ மாண­வி­க­ளுக்கு இல­வச மடிக்­க­ணினி திட்­டத்தை அறி­வித்து, ஒரே மாதத்­தில் நம் முத­ல­மைச்­சர் அவர்­கள் கொடுத்து முடித்­தார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.8">கலை­ஞர் மக­ளிர் உரி­மைத் தொகைத் திட்­டம். கடந்த மூன்று ஆண்­டு­க­ளாக ஒரு கோடியே 31 லட்­சம் மக­ளி­ருக்கு மாதம் 1,000 ரூபாய் உரி­மைத் தொகை நம் முத­ல­மைச்­சர் அவர்­கள் கொடுத்து வரு­கி­றார்­கள். அந்­தத் திட்­டத்தை நிறுத்­து­வ­தற்கு அ.தி.மு.க–வும் பா.ஜ.க–வும் முயற்சி செய்­தார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.8">தேர்­த­லைக் கார­ணம் காட்டி உரி­மைத் தொகைத் திட்­டத்தை நிறுத்­து­வ­தற்கு நீதி­மன்­றத்­துக்­குச் சென்­றார்­கள். ஆனால் நம் தலை­வர் என்ன செய்­தார்? பிப்­ர­வரி, மார்ச், ஏப்­ரல் என மூன்று மாதங்­க­ளுக்­கும் சேர்த்து 3,000 ரூபாய், கோடை­கால சிறப்பு நிதி 2,000 ரூபாய் என்று மொத்­தம் 5,000 ரூபாய் வங்­கிப் பரி­மாற்­றம் செய்­தார் நம் முத­ல­மைச்­சர் அவர்­கள். ஒரு கோடியே 31 லட்­சம் குடும்­பங்­க­ளுக்கு 5,000 ரூபாய் முத­ல­மைச்­சர் கொடுத்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.8">இப்­பொ­ழுது வாக்­கு­றுதி கொடுத்­தி­ருக்­கி­றோம், மீண்­டும் ஆட்­சிக்கு வந்­த­வு­ட­னேயே மக­ளிர் உரி­மைத் தொகை 1,000 ரூபாய் இல்லை, அதை உயர்த்தி 2000 ரூபாய் கொடுப்­போம் என்று வாக்­கு­றுதி கொடுத்­தி­ருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.8">முத­ல­மைச்­சர் காலை உண­வுத் திட்­டம் எட்­டாம் வகுப்பு வரை விரி­வாக்­கப்­ப­டும் என்று சொல்­லி­யி­ருக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.8">கல்வி ஊக்­கத்­தொ­கையை 1,500 ரூபா­யாக உயர்த்தி கொடுப்­போம் என்று சொல்­லி­யி­ருக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.8">அடுத்த ஐந்து ஆண்­டு­க­ளில் அனைத்­துக் கல்­லூரி மாணவ மாண­வி­க­ளுக்­கும் 35 லட்­சம் மடிக்­க­ணி­னி­கள் இல­வ­ச­மாக வழங்­கப்­ப­டும் என்று வாக்­கு­றுதி கொடுத்­தி­ருக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.8">ஆட்சி அமைந்­த­வு­டன் முத­ல­மைச்­சர் அவர்­கள் அனைத்து மக­ளிர் கைக­ளி­லும் 8,000 ரூபாயை ஒப்­ப­டைத்­து­வி­டு­வார்­கள். வீட்­டுக்கு என்ன மின்­சா­த­னப் பொருட்­கள் தேவை என்­பதை மக­ளிர் அவர்­களே முடிவு செய்து வாங்­கிக்­கொள்­ளட்­டும் என்­கிற ஒரு நல்ல வாக்­கு­று­தியை நம் தலை­வர் கொடுத்­தி­ருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.8">இந்த வாக்­கு­றுதி எல்­லாம் நிறை­வேற வேண்­டும் என்­றால், வரும் சட்­ட­மன்­றத் தேர்­த­லில் மீண்­டும் திரு­வொற்­றி­யூர் என்­றைக்­குமே தி.மு.க–வின் கோட்டை என்­பதை நாம் நிரூ­பித்­துக் காட்ட வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.8">ஒன்றை மட்­டும் நினை­வில் வைத்­துக்­கொள்­ளுங்­கள், மீண்­டும் நம் தலை­வர் சொல்­வது போல் இந்­தச் சட்­ட­மன்­றத் தேர்­தல் டெல்லி அணி vs  தமிழ்­நாடு அணி. வெற்­றி­பெ­றப்­போ­வது டெல்லி அணியா, தமிழ்­நாடு அணியா? டெல்லி அணி­யைத் தோற்­க­டித்து வீட்­டுக்கு அனுப்ப வேண்­டும். தமிழ்­நாடு அணி­யான நாம் வெற்­றி­பெற்­றுக் காட்ட வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.8">நான் இவ்­வ­ளவு திட்­டங்­கள் சொன்­னேன் அல்­லவா, இவ்­வ­ளவு செய்­தி­ருக்­கி­றோம் என்று சொல்­கி­றேன் அல்­லவா. மீண்­டும் ஆட்­சிக்கு வந்­தால் இவ்­வ­ளவு செய்­வோம் என்று சொல்­கி­றேன் அல்­லவா, ஒன்றை மட்­டும் யோசித்­துப் பாருங்­கள். கடந்த ஐந்து ஆண்­டு­க­ளில் ஒன்­றிய பா.ஜ.க அரசு எந்த விதத்­தி­லா­வது தமிழ்­நாட்­டுக்கு உதவி செய்­தி­ருக்­கி­றார்­களா?  தமிழ்­நாட்­டுக்கு ஏதா­வது திட்­டங்­க­ளைக் கொடுக்­கி­றார்­களா? நாம் கேட்­கின்ற நிதி­யைக் கொடுக்­கி­றார்­களா? எந்த உத­வி­யும் கிடை­யாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.8">இன்று தேர்­தல் அறி­வித்­த­வு­டன் மோடி அவர்­க­ளும் அமித்ஷா அவர்­க­ளும் மாறி மாறித் தமிழ்­நாட்­டுக்கு வரு­கி­றார்­கள். ஆனால் தமிழ்­நாட்­டுக்கு எந்­தத் திட்­டங்­க­ளும் அவர்­கள் கொடுப்­பது கிடை­யாது. சென்ற ஒன்­றிய அர­சின் பட்­ஜெட்­டில் தமிழ்­நாட்­டுக்கு எந்­தத் திட்­ட­மும் கிடை­யாது. “தமிழ்­நாடு” என்­கிற பெயரே அதில் கிடை­யாது. இப்­ப­டித் தொடர்ந்து தமிழ்­நாட்­டைப் புறக்­க­ணிக்­கக்­கூ­டிய மோடி அரசை, ஒன்­றிய பா.ஜ.க அர­சைப் பழி­வாங்க வேண்­டிய நேரம், தீர்த்­துக்­கட்ட வேண்­டிய நேரம், அவர்­க­ளுக்­குச் சரி­யான விடை­யைக் கொடுக்க வேண்­டிய நேரம்­தான் வரும் சட்­ட­மன்­றத் தேர்­தல்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.8">இந்த வெற்றி மிக மிக முக்­கி­ய­மான வெற்­றி­யாக இருக்க வேண்­டும்.  23–ஆம் தேதி தேர்­தல். இன்று தேதி 20. இன்­னும் இரண்டு நாட்­கள் நம் கைக­ளில் இருக்­கின்­றன. நம் தோழர் சுந்­தர்­ராஜ் அவர்­க­ளுக்கு அரி­வாள் சுத்­தி­யல் நட்­சத்­தி­ரம் சின்­னத்­தில் வாக்­க­ளித்து அவரை வெற்றி பெற வைக்க வேண்­டும் என்று நீங்­கள் முடி­வெ­டுத்­து­விட்­டீர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.8">நான் உங்­க­ளி­டம் கேட்­டுக்­கொள்­வ­தெல்­லாம் ஒன்­று­தான். அடுத்த இரண்டு நாட்­கள் நீங்­கள் ஒவ்­வொ­ரு­வ­ரும் பிரச்­சா­ரம் செய்­யுங்­கள். உங்­க­ளின் தெரு­வில், உங்­க­ளின் வீடு­க­ளில், உங்­கள் பகு­தி­யில் இருக்­கக்­கூ­டிய யாரைப் பார்த்­தா­லும் பிரச்­சா­ரம் செய்­யுங்­கள். ஏன் நம் சுந்­தர்­ராஜ் அவர்­க­ளுக்கு வாக்­க­ளிக்க வேண்­டும்? கம்­யூ­னிஸ்ட் வேட்­பா­ளர் சுந்­தர்­ராஜ் அவர்­களை ஏன் வெற்­றி­பெற வைக்க வேண்­டும்? நம் மதச்­சார்­பற்ற முற்­போக்­குக் கூட்­டணி ஏன் மீண்­டும் ஆட்­சிக்கு வர வேண்­டும்? நம் தலை­வர் ஏன் ஆட்­சிக்கு வர வேண்­டும்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.8">சாத­னை­க­ளைச் சொல்­லுங்­கள். ஐந்து ஆண்­டு­கள் நம் தலை­வர் என்­னென்ன திட்­டங்­கள் கொடுத்­தி­ருக்­கி­றார். வாக்­கு­று­தி­க­ளைச் சொல்­லுங்­கள். மீண்­டும் ஆட்­சிக்கு வந்­தால் என்­ன­வெல்­லாம் நம் தலை­வர் அவர்­கள் செய்து கொடுக்­கி­றேன் என்று சொல்­லி­யி­ருக்­கி­றார் என்­ப­தைச் சொல்­லுங்­கள். எல்­லா­வற்­றை­யும் விட முக்­கி­யம், சங்­கிக் கூட்­டத்­தைத் தமிழ்­நாட்­டுக்­குள் நுழைய விடக்­கூ­டாது. அடி­மைக்கூட்­டத்தை மீண்­டும் தமிழ்­நாட்­டுக்­குள், குறிப்­பாக சென்­னை­யில் தலை­யெ­டுக்க விடக்­கூ­டாது.
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12.3">தி.மு.க.வின் கோட்டை!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.8">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.8">இந்­தத் திரு­வொற்­றி­யூர் என்­றென்­றைக்­கும் தி.மு.க–வின் கோட்டை. இந்­தச் சென்னை மாந­க­ரமே தி.மு.க–வின் கோட்டை என்­பதை இந்­தத் தேர்­த­லில் நாம் நிரூ­பித்­துக் காட்ட வேண்­டும் என்­றால், அடுத்த இரண்டு நாட்­கள் இந்­தப் பிரச்­சா­ரத்தை ஒவ்­வொரு வாக்­கா­ள­ரைச் சந்­தித்து நீங்­கள் பேசுங்­கள். அப்­ப­டிச் செய்­தீர்­கள் என்­றால், நிச்­ச­யம் மிகப்­பெ­ரிய வெற்­றி­யைப் பெற­லாம். சென்ற முறை நம் கே.பி.சங்­கர் அவர்­கள் கிட்­டத்­தட்ட 40,000 வாக்கு வித்­தி­யா­சத்­தில் வெற்­றி­பெற்­றார். இந்த முறை அண்­ணன் தோழர் சுந்­தர்­ராஜ் அவர்­க­ளைக் குறைந்­த­பட்­சம் 50,000 வாக்­கு­கள் வித்­தி­யா­சத்­தில் நீங்­கள் வெற்­றி­பெற வைத்து காட்ட வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.8">உங்­க­ளை­யெல்­லாம் அன்­போடு கேட்­கி­றேன், பண்­போடு கேட்­கி­றேன், பாசத்­தோடு கேட்­கி­றேன், உரி­மை­யோடு கேட்­கி­றேன், உங்­கள் வீட்­டுப் பிள்­ளை­யாக இருந்து கேட்­கி­றேன், தலை­வ­ரின் மக­னாக இருந்து கேட்­கி­றேன், இன்­னும் பெரு­மை­யா­கப் பூரிப்­பா­கச் சொல்ல வேண்­டும் என்­றால், முத்­த­மி­ழ­றி­ஞர் டாக்­டர் கலை­ஞ­ரின் பேர­னாக இருந்து, தோழர் சுந்­தர்­ராஜ் அவர்­க­ளுக்கு அரி­வாள் சுத்­தி­யல் நட்­சத்­தி­ரம் சின்­னத்­தில் வாக்­க­ளித்து மிகப்­பெ­ரிய வாக்கு வித்­தி­யா­சத்­தில் வெற்­றி­பெற வைத்து அவ­ரைச் சட்­ட­மன்­றத்­துக்கு அனுப்­புங்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.8">இந்­தத் தொகு­திக்கு என்­னென்ன தேவையோ, நம் முத­ல­மைச்­ச­ரி­டம் சொல்­லிப் போராடி, நிச்­ச­யம் அந்த உரி­மை­யைப் பெற்­றுக்­கொ­டுத்து உங்­கள் தொகு­திக்கு என்­னென்ன திட்­டங்­கள் தேவையோ, அத்­தனை திட்­டங்­க­ளை­யும் கொண்டு வரு­வார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.8">உங்­க­ளின் அன்­புக்­கும் வர­வேற்­புக்­கும் நன்றி நன்றி நன்றி.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11.8">கலந்­து­கொண்­ட­வர்­கள்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.8">மாவட்ட கழ­கச் செய­லா­ளர் மாத­வ­ரம் சுதர்­ச­னம், சட்­ட­மன்ற உறுப்­பி­னர் கே.பி.சங்­கர், பகுதி செய­லா­ளர்­கள் தனி­ய­ரசு, ஆறு­மு­கம், அருள்­தா­சன், மாவட்ட அவைத்­த­லை­வர் குறிஞ்சி கணே­சன், ஆனந்­தன், கழ­கப் பேச்­சா­ளர் சிவாஜி கிருஷ்­ண­மூர்த்தி, மாவட்ட இளை­ஞர் அணி அமைப்­பா­ளர் மதன்­கு­மார், துணை அமைப்­பா­ளர்­கள் மணி­வண்­ணன், கேபிள் கணே­சன், இளை­ஞர் அணி உள்­ளிட்ட அனைத்­துச் சார்பு அணி­க­ளைச் சேர்ந்த நிர்­வா­கி­கள், மதச்­சார்­பற்ற முற்­போக்­குக் கூட்­ட­ணிக் கட்­சி­யைச் சேர்ந்த நிர்­வா­கி­கள் உள்­பட இளை­ஞர்­கள், பெண்­கள் உள்­பட பொது­மக்­கள் 
கலந்­து­கொண்­ட­னர்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>