<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="23/04/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="502,70,957,1238" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="2"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Thu Apr 23 2026 03:35:22 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260423T000000+5.30" edition.name="CBE" edition.area="CBE" position.section="23042026-CBE-10" position.sequence="10" ex-ref="23042026-CBE-10.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#000000" boxBorderWeight="2">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="37">கடந்த தேர்தலை விட களம் அற்புதமாக இருக்கிறது!</lang>
	</hl2>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup587989_10_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bramma" fontStyle="Regular" size="12.9">நா</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.9">ன் தி.மு.கழகத்தின்  தேர்தல் பார்வையாளராக கடந்த பத்து மாதங்களாகப் பணியாற்றி வரும் திருத்துறைப்பூண்டி தொகுதிக்கு தற்பொழுது நாள்தோறும் சென்று வருகின்றேன். மற்றபடி அதைச் சுற்றியிருக்கும் திருவாரூர் மாவட்டத்தின் மற்ற மூன்று தொகுதிகளையும் கடந்து சென்றும், உள்ளே நுழைந்து வெளியேறியும்...</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.9">தொகுதிக்கு உட்பட்ட நண்பர்கள், தொழில்முறை சார்ந்த வியாபார பெருமக்கள், உறவினர்கள், தி.மு.கழக நிர்வாகிகள், தொண்டர்கள்... சில இடங்களில் மாற்றுக்கட்சிகளைச் சார்ந்த தொண்டர்கள், நிர்வாகிகள் என்றும் பேசி வருகின்றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.9">இவற்றையெல்லாம் விட, ஒவ்வொரு நாளும் நான்கு மணி நேரங்களுக்கும் மேலாக, தமிழ்நாடு முழுவதிலும் இருக்கின்ற அனைத்துப் பகுதி தொகுதிகளிலும் இருக்கக் கூடிய கழக நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், நண்பர்கள், தொழில்முறை சார்ந்த வியாபாரப் பெருமக்கள் அனைவரிடமும் இணையம் வழியாகவும், தொலைபேசி வாயிலாகவும் தினமும் தொடர்பில் இருக்கின்றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.9">நேரடியாக விஷயத்திற்கு வந்து விடுகின்றேன். தி.மு.க. கூட்டணி 200+ உறுதியாக வெல்லும்..!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.9">நான் பார்வையாளராக இருக்கும் திருத்துறைப் பூண்டியில் இ.கம்யூ 30 ஆயிரத்திற்கும் கூடுதலான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும். தி.மு.க. போட்டியிட்டிருந்தால், வித்தியாசம் 40 ஆயிரத்திற்கு மேல் சென்றிருக்கும். மன்னார்குடி தி.மு.க. வெற்றி உறுதி. திருவாரூர் தலைவர் கலைஞர் இந்த முறையும் வித்தியாசத்தில் அரை செஞ்சுரி அடிப்பார். நன்னிலத்தில், மாவட்டச் செயலாளர் பூண்டி கலைவாணன் அவர்கள் கடும் உழைப்போடு எஸ் டி பி ஐ,... ஆர் காமராஜை அலற விட்டுக் கொண்டி ருக்கின்றார்கள். ஆர்.கே கிட்டத்தட்ட அழாத குறையாக புலம்பி, நெஞ்சை நக்கி தொகுதியை விட்டு நகர முடியாமல் கலங்கி நிற்கின்றார். இன்றைய நாளில் நன்னிலம் நம்ம நிலம் என்று தி.மு.க. கூட்டணி வெற்றிபெறும் நிலையில் இருக்கின்றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.9">எங்கள் மயிலாடுதுறை மாவட்டத்தில் மூன்று தொகுதியுமே வழக்கம் போல தி.மு.க. கூட்டணி தான் வெல்லும். யார் என்ன பேசினாலும், மக்கள் மிகத் தெளிவாக இருக்கின்றார்கள். திராவிட மாடல் அரசின் திட்டங்கள் ஒவ்வொரு வீட்டிற்குள்ளேயும் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தியிருப்பதை உணரமுடிகின்றது. குக்கிராமம் வரைக்குமான சாலைகள், உட்கட்டமைப்புகள், நலத்திட்டங்கள், முதியோர்களுக்கு வீடு தேடி ரேஷன், இல்லம் தேடி மருத்துவம், தரமான மருந்துகள், தரமான செக்கப்புகள், கிராமப்புற அடித்தட்டு மக்களை பெருமளவில் ஈர்த்திருக்கின்றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.9">ஒவ்வொரு கிராமத்திலும், வார்டிலும் அரசில் 42 துறை அதிகாரிகளையும் கொண்டு வந்து முகாம் போட்டு அந்தந்தப் பகுதி மக்களின் மிகப் பெரும்பான்மையான அரசு சம்பந்தப்பட்ட தேவைகளை நிறைவேற்றித் தந்த, உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் பயனாளிகள் நாம் பிரச்சாரம் செய்யும் போது நமக்கே நினைவூட்டுகின்றார்கள்..!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.9">ஒரு உதாரணம் சொல்கின்றேன்.  கடந்த 2021 சட்டமன்ற தேர்தலின் போது, பூம்புகார் சட்டமன்ற தொகுதிக்கு போட்டியிட்ட எங்கள் மாவட்ட கழகச் செயலாளர் நிவேதா முருகன் அவர்களுடன் பிரச்சார வாகனத்தில் சந்திரப்பாடி என்ற மீனவ கிராமத்திற்குச் சென்றேன். வண்டி செல்லவே முடியாமல் மிக மோசமான குண்டும் குழியுமான சாலையில் வாகனம் ஆடி ஆடிச் சென்றது. வீடுகளில் சின்னச் சின்ன திண்ணைகள். அங்கே பெண்கள் கால் நீட்டி அமர்ந்திருந்தனர். வேட்பாளர் வணக்கம் வைத்தாலும் பதில் வணக்கம் இல்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.9">இந்த தேர்தல்... பத்து நாட்கள் முன்பாக வேட்புமனு தாக்கல் செய்யும் நாளன்று அங்கே வேட்பாளர் சென்றிருப்பதாகச் சொன்னார்கள். நானும் அங்கே சென்றேன்... அதே தெரு...இப்பொழுது பளபளப்பான சிமெண்ட் சாலையுடன் காட்சிஅளிக்கின்றது. வேட்பாளர் உள்ளே சென்றிருக்கின்றார்.... இந்த வழியாக வருவார், இங்கேயே நில்லுங்கள் என்றார்கள் ஊர் மக்கள் சிலரும், நிர்வாகிகளும். அங்கேயே இறங்கி, மக்களிடம் பேசலாம் என்று சென்றேன். அதற்குள்ளாக வேட்பாளரின் வாகனம் வரும் ஒலிபெருக்கிச் சத்தம் கேட்டது...</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.9">அவ்வளவு தான் அதே தெருவைச் சார்ந்த அதே பெண்கள் எழுந்து ஓடி வந்து தெருமுனையில் ஆவலோடு நின்றார்கள். வேட்பாளர் வாகனம் வருகிறது. இறங்கினால் தான் ஆச்சு என்று அடம்பிடித்து அவரை இறங்க வைத்து... வாழ்த்துச் சொல்லி அனுப்புகிறார்கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.9">கடந்த தேர்தலை விட களம் இன்னும் கூடுதலாக, மிக அற்புதமாக மாறியிருக்கின்றது. மக்கள் ஆட்சிக்கு ஆதரவாக... தலைவர் தளபதியார் அவர்களுக்கு ஆதரவாக மிகத் தெளிவான முடிவுடன் காத்திருக்கின்றனர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.9">தி.மு.க.வினர் ஓராண்டுக்கும் மேலாக களத்தில் உழன்று கொண்டிருக்கின்றனர். இதே மக்களுடன் மக்களாக நின்று அவர்கள் தேவைகளை இயன்ற அளவு முடித்துத் தந்திருக்கின்றோம். எண்ணற்ற நலத்திட்டங்கள், தொலைநோக்குத் திட்டங்கள், மக்கள் வாழ்வாதாரத் திட்டங்கள், மாநிலத்தின் வளர்ச்சி, அனைத்து மக்களின் கரங்களிலும் நல்ல பணப்புழக்கம், நல்ல விளைச்சல், விளைச்சலுக்கு ஏற்ற நல்ல விலை, மின் தடை இல்லை, வேலை இல்லா திண்டாட்டம் இல்லை, வேலைக்கு ஆட்கள் கிடைக்கவில்லை என்ற புலம்பல்கள் தான் எங்கும் கேட்கின்றன. தரமான அரசு மருத்துவம், கல்வித்துறையின் மிகச் சிறப்பான செயல்பாடு... மக்கள் மீதான முதல்வ ரின் அதீத அன்பும், அக்கறையும்....  அரசு நிர்வாகத்தில் கட்சிக் 
காரர்களின் தலையீடு முழுவதுமாக நிறுத்தப் 
பட்டது...</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.9">அனைத்துமே மக்கள் மனதில் ஆழமாகப் பதிந்து விட்டிருக்கின்றது. ஆறு மாதங்கள் முன்பாக ஓரணியில் தமிழ்நாடு என்ற முழக்கத்தோடு, தி.மு.க. நிர்வாகிகள் வீடு வீடாகச் சென்று தி.மு.கழகத்திற்கான உறுப்பினர்களைச் சேர்த்தார்கள். அதில் 234 சட்டமன்ற தொகுதிகளிலும் மக்கள் ஆவலோடு தங்கள் விவரங்களைக் கூறி, அவர்கள் முழு அனுமதியோடு சராசரியாக 45 சதவிகிதம் பேர் தங்களை தி.மு.கழகத்தின் உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டிருக் கின்றார்கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.9">இந்த ஸோ கால்ட் ஊடகவியலாளர்களுக்கு இதெல்லாம் தெரியாது. எஸ்.ஐ.ஆர். என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச் சாவடி, விளையாட்டுப் போட்டிகள், ஸ்டாலின் மகளிர் படை... இப்படியாக தொடர்ந்து மக்களோடு மக்களாக ஒவ்வொரு தி.மு.க. காரனும் கடந்த ஓராண்டாக இருந்திருக்கின்றான்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.9">ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் இருக்கின்ற ஒவ்வொரு வீட்டிலும், குடும்பத்திலும் இருக்கின்ற மக்களை சந்திப்பது எங்களுக்கு மிகவும் பழகிப்போன ஒன்றாக இருக்கின்றது. அந்த மக்களுக்கும் நாங்கள் தான் அவர்களுடைய அரசுக்கான பிரதிநிதிகள் என்று புரிந்து போயிருக்கின்றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.9">அ.தி.மு.க. இன்னமும் கூட முழுமையாக மக்களைச் சந்தித்து முடிக்கவில்லை. நா.த.க., 
த.வெ.க. எல்லாம் நெடுஞ்சாலைகளில் மர நிழல்களில்ஓய்வெடுப்பதை பரவலாகக் காணமுடிகிறது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.9">இதில் தி.மு.க.வின் உழைப்பு என்பது எதிரிகளின் நெற்றிப்பொட்டில் தீப் பறக்க வைக்கும்..!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.9">அத்தோடு தேர்தல் நாளன்று தி.மு.க.வினரின் உழைப்பு.... வாக்காளர்களை வாக்குச் சாவடிகளுக்குள் கொண்டு வந்து சேர்க்கும் மாண்பு....</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.9">மீண்டும் சொல்கிறேன்... தி.மு.க. கூட்டணி 200+ தொகுதிகளில் இந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் சொல்லி அடிக்கும்..!</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>