<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="23/04/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="502,70,960,1261" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="4"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Thu Apr 23 2026 03:43:39 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260423T000000+5.30" edition.name="CHN" edition.area="CHN" position.section="23042026-CHN-05" position.sequence="05" ex-ref="23042026-CHN-05.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="21">தி.மு.க. ஆட்சி தொடர நியாயமான காரணங்கள் ஏராளமாக உள்ளன!</lang>
	<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="21"> </lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="35">தமிழ்நாட்டில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு வாக்களிப்பீர்! </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="25">தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை அறிக்கை!</lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="40">காத்திடுவீர் திராவிட தமிழ்மண்ணை! </lang>
	</hl4>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="Selvaperunthag_05_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">சென்னை, ஏப். 23–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">தமிழ்­நாட்­டில் தி.மு.க. ஆட்சி தொடர நியா­ய­மான கார­ணங்­கள் ஏரா­ள­மாக உள்­ளன. எனவே மீண்­டும் அந்­தப் பொற்­கால ஆட்சி அமைய மதச்­சார்­பற்ற முற்­போக்­குக் கூட்­ட­ணிக்கு வாக்­க­ளிப்­பீர் என்று வேண்­டு­கோள் விடுத்து தமிழ்­நாடு காங்­கி­ரஸ் தலை­வர் கு.செல்­வப் பெருந்­தகை அறிக்கை வெளி­யிட்­டுள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">அவ­ரது அறிக்கை வரு­மாறு:</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">நடை­பெ­ற­வுள்ள சட்­ட­மன்­றத் தேர்­த­லுக்­கான வாக்­குப்­ப­தி­வின் போது தமி­ழக மக்­கள் தங்­க­ளது எதிர்­கா­லத்தை மன­தில் வைத்­துக் கொண்டு ஜன­நா­ய­கக் கட­மையை ஆற்ற வேண்­டி­யது மிக­மிக அவ­சி­ய­மா­கும். தமி­ழக அர­சி­யல் மற்­றும் தேசிய அள­வி­லான அர­சி­ய­லை­யும் மன­தில் வைத்­துக் கொண்டு எந்த கூட்­ட­ணிக்கு வாக்­க­ளிப்­பது என்­பதை வாக்­கா­ளப் பெரு­மக்­கள் மிக ஆழ­மாக சிந்­தித்து முடி­வெ­டுக்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">எவ­ரும் மறுக்க முடி­யாது!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">தமி­ழ­கத்தை பொறுத்­த­வரை கடந்த 5 ஆண்­டு­க­ளாக மு.க. ஸ்டாலின் அவர்­கள் தலை­மை­யில் மிகச் சிறப்­பான ஆட்சி செயல்­பட்­டதை எவ­ரும் மறுக்க முடி­யாது.  2021 சட்­ட­மன்­றத் தேர்­த­லின் போது கொடுத்த மொத்த வாக்­கு­று­தி­க­ளில் 505 இல் 400-க்கும் மேற்­பட்ட வாக்­கு­று­தி­களை நிறை­வேற்றி சாதனை புரிந்­தி­ருக்­கி ­றார். மீதி­யுள்ள வாக்­கு­று­தி­கள் ஒன்­றிய பா.ஜ.க. அர­சின் ஒத்­து­ழைப்பு இல்­லா­த­தால் நிறை­வேற்ற முடி­ய­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">இந்த சட்­ட­மன்­றத் தேர்­த­லில் மீண்­டும் ஆட்­சி­ய­மைப்­ப­தற்கு தமிழ்­நாட்டு மக்­க­ளி­டம் தேர்­தல் அறிக்­கையை வெளி­யிட்­ட­தோடு, சூறா­வளி சுற்­றுப்­ப­ய­ணத்தை மேற்­கொண்டு மதச்­சார்­பற்ற முற்­போக்கு கூட்­ட­ணிக்கு ஏன் வாக்­க­ளிக்க வேண்­டும் என்­கிற ஒரு கருத்­தி­யலை  மு.க. ஸ்டாலின் அவர்­கள் உரு­வாக்­கி­யி­ருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">ஒன்­றிய பா.ஜ.க. வின் மாற்­றாந்­தாய் 
மனப்­பான்மை!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">கடந்த 12 ஆண்­டு­க­ளாக ஒன்­றி­யத்­தில் ஆட்சி செய்­கிற பா.ஜ.க., தமிழ்­நாட்டு மக்­க­ளுக்கு வழங்க வேண்­டிய நிதி பகிர்­வில் பார­பட்­சம், புதிய கல்­விக் கொள்கை என்­கிற போர்­வை­யில் மும்­மொழி திணிப்பு, கிரா­மப்­புற மாண­வர்­களை பாதிக்­கும் நீட் தேர்வு திணிப்பு, வெள்ள நிவா­ரண நிதி புறக்­ க­ணிப்பு,மெட்ரோ ரயில் திட்ட புறக்­க­ணிப்பு என வஞ்­சிக்­கப்­பட்ட பட்­டி­யல் நீண்டு கொண்டே போகும். அந்­த­ள­விற்கு தமிழ்­நாட்டை மாற்­றாந்­தாய் மனப்­பான்­மை­யோடு ஒன்­றிய பா.ஜ.க. அரசு இது­வரை நடத்­தி­யி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">ஆனால், நிதிப் பகிர்­வில்  எத்­த­கைய அநீ­தி­கள் இழைக்­கப்­பட்­டா­லும் அதை­யெல்­லாம் எதிர்­கொண்டு, மாநில அர­சின் சொந்த நிதி ஆதா­ரங்­க­ளைக் கொண்டு வளர்ச்சி திட்­டங்­கள் தொடர்ந்து நிறை­வேற்­றப்­பட்டு வரு­கி­றது. அனைத்து வகை­யி­லும் தமிழ்­நாட்டை தொடர்ந்து வஞ்­சித்து  வரு­கிற ஒன்­றிய பா.ஜ.க.வோடு கூட்­டணி வைத்­தி­ருக்­கிற அ.தி.மு.க., இது­வரை தமிழ்­நாட்­டின் உரி­மைக்­காக பேசி­யது கிடை­யாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">பா.ஜ.க.வின் ஊத­கு­ழல் அ.தி.மு.க.!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">இன்­றைய அ.தி.மு.க. என்­பது பா.ஜ.க.வின் ஊது­கு­ழ­லாக, கைப் பாவை­யாக, அடிமை கட்­சி­யாக மாறி விட்­டது. அ.தி.மு.க. என்ற முக­மூடி அணிந்து கொண்டு பா.ஜ.க. தமிழ்­நாட்­டில்  நுழைய முற்­ப­டு­கி­றது. அத­னால் தான் தலை­வர் ராகுல்­காந்தி, முத­ல­மைச்­சர் மு.க. ஸ்டாலின் ஆகி­யோர் நடை­பெ­ற­வுள்ள சட்­ட­மன்­றத் தேர்­தல் என்­பது தமிழ்­நாட்­டிற்­கும், டில்­லிக்­கும் நடை­பெ­று­கிற தேர்­தல் என்று பிர­க­ட­னம் செய்­த­னர். இதன்­மூ­லம் பா.ஜ.க. வின் ஆதிக்­கத்­தில் சிக்­கி­யுள்ள அ.தி.மு.க. கூட்­ட­ணியை புறக்­க­ணிக்க வேண்­டி­யது தமிழ்­நாட்டுமக்­க­ளின் முதல் ஜன­நா­ய­கக் கட­மை­யா­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">கடந்த 2019, 2024 மக்­க­ளவை தேர்­தல் மற்­றும் 2021 சட்­ட­மன்­றத் தேர்­த­லில் அ.தி.மு.க., பா.ஜ.க., வகுப்­பு­வாத ஊழல் சக்­தி­களை எப்­படி தமிழ்­நாட்டு மக்­கள் நிரா­க­ரித்து, தி.மு.க. தலை­மை­யி­லான காங்­கி­ரஸ் உள்­ளிட்ட மதச்­சார்­பற்ற முற்­போக்கு கூட்­ட­ணிக்கு அமோக ஆத­ரவு அளித்­த­தைப் போல அதை­விட பேரா­த­ரவு அளித்து 200-க்கும் மேற்­பட்ட இடங்­க­ளில் வெற்றி பெறு­வ­தற்கு தமிழ்­நாட்டு மக்­கள் வாக்­க­ளிக்க வேண்­டு­மென அன்­போடு கேட்­டுக் கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">கொளத்­தூர் பொதுக்­கூட்­டத்­தில் உரை­யாற்­றிய முத­ல­மைச்­சர் மு.க. ஸ்டாலின் அவர்­கள் தி.மு.க. ஆட்சி மீண்­டும் அமைந்­த­தும்,  தேர்­தல் வாக்­கு­று­தி­யில் கூறி­ய­படி, இல்­லத்­த­ர­சி­க­ளுக்கு ரூபாய் 8000 மதிப்­புள்ள கூப்­பன் வழங்­கும்  திட்­டத்­திற்கு முதல் கையெ­ழுத்து போடு­வேன் என்று உறுதி கூறி­யி­ருக்­கி­றார். இதை ரொக்­க­மாக வழங்­கா­த­தன் நோக்­கம் இந்த கூப்­பன் மூலம்  மக்­கள் தங்­க­ளது வீட்­டிற்கு தேவை­யான எந்த பொருளை வாங்க விரும்­பு­கி­றார்­களோ, அதை வாங்­கு­வ­தற்­கான வாய்ப்பு கிடைத்­தி­
ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">பல்­வேறு வாக்­கு­று­தி­கள்! நிச்­ச­யம் நிறை­வேற்­ற­வார்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">தி.மு.க. தலை­வர் மு.க. ஸ்டாலின் அவர்­கள் வெளி­யிட்ட தேர்­தல் அறிக்­கை­யில், ரூபாய் 10 லட்­சம் வரை மருத்­துவ காப்­பீடு, முதி­யோர் மற்­றும் கைம்­பெண் ஊதி­யம் இனி மாதம் ரூபாய் 2000, மக­ளிர் உரி­மைத்­தொகை இனி மாதம் ரூபாய் 2000, கட்­ட­ண­மில்லா விடி­யல் பய­ணம் என்­றென்­றும் தொட­ர­வும், காலை உணவு திட்­டம் இனி 8 ஆம் வகுப்பு வரை என உறு­தி­மொ­ழி­களை கூறி­யி­ருக்­கி­றார். விவ­சா­யி­கள் வாழ்­வில் வளம் பெற 20 லட்­சம் புதிய நவீன மின்­சார பம்பு செட்­டு­கள், இனி நெல் கொள்­மு­தல் விலை குவிண்­டா­லுக்கு ரூபாய் 3500, கரும்பு டன் ஒன்­றுக்கு ரூபாய் 4500 என வாக்­கு­று­தி­கள் வழங்­கப்­பட்­டி­ருக்­கி­றது.
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">10 லட்­சம் புதிய கான்­கி­ரீட் வீடு­கள், ரூபாய் 10,000 கோடி­யில் கிரா­மப்­புற சாலை­கள், 5 ஆண்­டு­க­ளில் 50 லட்­சம் வேலை வாய்ப்­பு­கள், 35 லட்­சம் மாண­வர்­க­ளுக்கு விலை­யில்லா மடிக்­க­ணினி உள்­ளிட்ட பல்­வேறு வாக்­கு­று­தி­களை வழங்­கி­யி­ருக்­கி­றார். ஏற்­க­னவே, கொடுத்த வாக்­கு­று­தி­களை நிறை­வேற்­றிய மு.க. ஸ்டாலின் அவர்­கள், தற்­போது கொடுத்­துள்ள வாக்­கு­று­தி­க­ளை­யும் நிச்­ச­யம் நிறை­வேற்­று­வார் என்­கிற நம்­பிக்­கை­யும் தமிழ்­நாட்டு மக்­க­ளி­டம் உரு­வா­கி­யி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">கடந்த 5 ஆண்­டு­க­ளாக எந்­த­வித ஊழல் குற்­றச்­சாட்­டு­களோ, முறை­கே­டு­களோ, சட்­டம் ஒழுங்கு சீர்­கு­லைவோ எது­வும் ஏற்­ப­டா­மல் மாநில உரி­மை­களை பாது­காக்க தொடர்ந்து உரி­மைக் குரல் எழுப்பி வரு­கிற  மு.க. ஸ்டாலின் அவர்­கள், மாநி­லம் கடந்து தேசிய அள­வி­லும் பெரும் பாராட்­டு­களை பெற்று வரு­கி­றார். கடந்த அ.தி.மு.க. ஆட்சி என்­பது தமிழ்­நாட்­டின் இருண்ட காலம். சட்­டம் ஒழுங்கு சீர்­கு­லை­வுக்கு சாத்­தான்­கு­ளத்­தில் தந்தை - மகன் லாக்­கப்­பில் படு­கொலை, தூத்­துக்­குடி துப்­பாக்­கிச்­சூட்­டில் 13 பேர் பலி, பாலி­யல் பலாத்­கா­ரத்­திற்கு பொள்­ளாச்சி, நிர்­மலா தேவி விவ­கா­ரம் உள்­ளிட்ட பட்­டி­யலே சாட்­சி­யா­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">முதன்மை மாநி­ல­மாக்­கிய நம்­பர் 1 முதல்­வர்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">எனவே, மீண்­டும் மு.க. ஸ்டாலின் தலை­மை­யில் ஆட்சி தொடர வாக்­கா­ளர்­க­ளுக்கு நியா­ய­மான கார­ணங்­கள் ஏரா­ள­மாக உள்­ளன. கடந்த 5 ஆண்­டு­க­ளில் இந்­தி­யா­வி­லேயே மொத்த உள்­நாட்டு உற்­பத்­தி­யில் தமிழ்­நாட்டை முதன்மை மாநி­ல­மாக திக­ழச் செய்த பெருமை  மு.க. ஸ்டாலின் அவர்­க­ளுக்கு உண்டு. அவ­ரது ஆட்சி என்­பது மக­ளி­ருக்­கான விடி­ய­லாக அமைந்­தி­ருக்­கி­றது.  கூட்­டணி கட்­சி­யி­னரை அர­வ­ணைத்­துக் கொண்டு, அனைத்து தரப்பு மக்­க­ளை­யும் ஒருங்­கி­ணைத்து நல்­லி­ணக்­கத்­தோடு ஆட்சி செய்த திரு. மு.க. ஸ்டாலின் அவர்­க­ளது ஆட்சி ஒரு பொற்­கால ஆட்­சி­யா­கவே மக்­கள் கரு­து­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">இந்த அடிப்­ப­டை­யில் நடை­பெ­ற­வுள்ள வாக்­குப்­ப­தி­வில் தமிழ்­நாட்டு மக்­கள் தங்­க­ளது மேலான வாக்­கு­களை தி.மு.க. தலை­மை­யி­லான, காங்­கி­ரஸ் உள்­ளிட்ட மதச்­சார்­பற்ற முற்­போக்கு கூட்­டணி கட்­சி­க­ளுக்கு அவ­ர­வர் சின்­னங்­க­ளில் வாக்­க­ளித்து அமோக ஆத­ரவு வழங்கி மீண்­டும் ஸ்டாலின் ஆட்சி தொட­ரட்­டும், தமிழ்­நாடு வெல்­லட்­டும் என்ற முழக்­கத்­திற்­கேற்ப உங்­கள் நல்­லா­த­ர­வினை வழங்க வேண்­டு­மென இரு­க­ரம் கூப்பி அன்­போடு வேண்­டு­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">இவ்­வாறு தமிழ்­நாடு காங்­கி­ரஸ் தலை­வர் கு. செல்­வப்­பெ­ருந்­தகை தனது அறிக்­கை­யில் தெரி­வித்­துள்­ளார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>