<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="23/04/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,128,959,1495" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Wed Apr 22 2026 16:25:10 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260423T000000+5.30" edition.name="MDU" edition.area="MDU" position.section="23042026-MDU-08" position.sequence="08" ex-ref="23042026-MDU-08.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="62">பாசிச பா.ஜ.க.வையும் --– அடிமை அ.தி.மு.க.வையும் அடி­யோடு வீழ்த்தி, மதச்­சார்­பற்ற முற்­போக்­குக் கூட்­டணி வெற்­றி­வாகை சூடும்! </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="25">சேப்­பாக்­கம்–­தி­ரு­வல்­லிக்­கேணி தொகுதி தந்தை பெரி­யார் சிலை அருகே</lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="37">துணை முத­ல­மைச்­சர் உத­ய­நிதி ஸ்டாலின்  பிரச்­சா­ரத்தை நிறை­வு­செய்­தார்!</lang>
	</hl4>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup579149_08_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="2" source="Dcmspeech2141_08_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11.8">சென்னை,ஏப்.23 –</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11.8">2026 சட்­டப்­பே­ர­வைத் தேர்­த­லுக்­காக காஞ்­சி­பு­ரம், பேர­றி­ஞர் அண்ணா நினைவு இல்­லத்­தில் தொடங்கி, மாநி­லம் முழு­வ­தும் மேற்­கொண்­டி­ருந்த பிரச்­சா­ரப் பெரும்­ப­ய­ணத்தை, கழக இளை­ஞர் அணிச் செய­லா­ள­ரும் துணை முத­ல­மைச்­ச­ரு­மான உத­ய­நிதி ஸ்டாலின்,  தான் போட்­டி­யி­டும் சேப்­பாக்­கம்–­­தி­ரு­வல்­லிக்­கேணி தொகு­தி­யில் உள்ள தந்தை பெரி­யார் சிலை அருகே  நேற்று முன்­தி­னம் நிறைவு செய்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11.8">கழக இளை­ஞர் அணிச் செய­லா­ள­ரும் துணை முத­ல­மைச்­ச­ரு­மான உத­ய­நிதி ஸ்டாலின் ஆற்­றிய உரை­யின் விவ­ரம் வரு­மாறு:
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11.8">வருகை தந்­தி­ருக்­கின்ற உங்­கள் அனை­வ­ருக்­கும் என் முதற்­கண் வணக்­கத்­தை­யும் நன்­றி­யை­யும் தெரி­வித்­துக்­கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12.3">20 நாட்­கள் சுற்­றுப்­ப­ய­ணம்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11.8">சென்ற முறை தலை­வர் அவர்­கள் சேப்­பாக்­கம் – திரு­வல்­லிக்­கேணி தொகு­தி­யில் போட்­டி­யி­டு­வ­தற்கு எனக்கு வாய்ப்பு கொடுத்­தார்­கள். கடந்த முறை­யும் தமிழ்­நாடு முழு­வ­தும் சுற்­றிக்­கொண்டு இருந்­த­த­னால், தொகு­திக்கு வந்து என்­னால் வாக்­குக் கேட்க முடி­ய­வில்லை. அப்­பொ­ழு­தும் மிகப் பெரிய வாக்கு வித்­தி­யா­சத்­தில் வெற்றி பெற வைத்­தீர்­கள். இந்த முறை­யும் அதே மாதிரி கடந்த 20 நாட்­க­ளாக 135 தொகு­தி­க­ளுக்­குச் சென்று, நம் தலை­வ­ருக்­காக, கழ­கத்­துக்­காக, கழ­கத்­தின் வெற்­றிக்­காக நான் உழைத்­தி­ருக்­கி­றேன் என்­றால், நான் மட்­டும் உழைக்­க­வில்லை, நீங்­க­ளும் சேர்ந்­து­தான் உழைத்­தி­ருக்­கி­றீர்­கள். அந்த உழைப்­பில் உங்­க­ளுக்­கும் பங்கு இருக்­கி­றது. ஏனெ­னில், 20 நாட்­கள் நான் இங்கே இல்லை. இந்­தத் தொகுதி முழுக்­கச் சுற்­றிச் சுற்றி ஒவ்­வொரு தெரு­வாக, ஒவ்­வொரு வீடா­கச் சென்று ஏறி இறங்கி வாக்­குக் கேட்­டது, வந்­தி­ருக்­கக்­கூ­டிய நிர்­வா­கி­ க­ளா­கிய நீங்­கள்­தாம். அதற்கு முத­லில் நான் என்­றென்­றும் நன்­றிக்­க­டன்­பட்­டி­ருப்­பேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12.3">உங்­க­ளின் ஒத்­து­ழைப்பு</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11.8">கடந்த முறை கிட்­டத்­தட்ட 70,000 வாக்கு வித்­தி­யா­சத்­தில் வெற்றி பெற வைத்­தீர்­கள். வெற்றி பெற்ற உடனே நான் என்­றைக்கோ வந்து உங்­க­ளைப் பார்க்­கிற மாதிரி மற்ற வேட்­பா­ளர்­கள் மாதி­ரியோ மற்ற கழ­கத்­தில் இருக்­கிற மாதிரி கிடை­யாது. உங்­க­ளு­டனே பய­ணித்­தேன். கடந்த ஐந்து வரு­டங்­க­ளாக அனைத்து சுக–­­துக்க நிகழ்ச்­சி க­ளி­லும் உங்­க­ளின் குடும்­பத்­தில் ஒரு­வ­னாக என்னை நீங்­கள் வைத்­தி­ருந்­தீர்­கள். இன்­னும் சொல்­லப்­போ­னால், நான் இன்­றைக்­குச் சட்­ட­மன்ற உறுப்­பி­ன­ராக மட்­டும் இல்லை, உங்­க­ளின் ஒத்­து­ழைப்­பி­னால் ஓர் அமைச்­ச­ராக, இன்­னும் பெரு­மை­யா­கச் சொல்ல வேண்­டும் என்­றால், தமிழ்­நாட்­டின் துணை முத­ல­மைச்­சரை உரு­வாக்­கி­யது இந்­தச் சேப்­பாக்­கம்–­­தி­ரு­வல்­லிக்­கேணி சட்­ட­மன்­றத் தொகுதி. அதற்கு என்­றென்­றைக்­கும் நான் கட­மைப்­பட்­டி­ருப்­பேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11.8">கடந்த ஐந்து வரு­டம் என்­னால் முடிந்த அனைத்­துப் பணி­க­ளை­யும் சிறப்­பாக, நான் தனி­யா­கச் செய்­தேன் என்று சொல்ல மாட்­டேன். நாம் இரண்டு பேரும் சேர்ந்து ஒன்­றாக, அத்­தனை பணி­க­ளை­யும் ஒவ்­வொரு வட்­டத்­துக்­கும் ஒவ்­வொரு பகு­திக்­கும் ஒவ்­வொரு தெரு­வுக்­கும் என்­னென்ன தேவை என்­ப­தைப் பார்த்­துப் பார்த்­துச் செய்­தி­ருக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12.3">சேப்­பாக்­கம்–­­தி­ரு­வல்­லிக்­கே­ணி­யின்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12.3">செல்­லப்­பிள்ளை</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11.8">இன்­றைக்­குத் தமிழ்­நாடு முழு­வ­தும் நான் பய­ணம் செய்­கி­றேன். இளை­ஞர் அணிச் செய­லா­ளர் என்று சொல்­வார்­கள், சின்­ன­வர் என்று சொல்­வார்­கள், அமைச்­சர் என்று சொல்­வார்­கள், துணை முத­ல­மைச்­சர் என்று சொல்­வார்­கள். ஆனால், எல்­லோ­ரும் செல்­ல­மா­கக் கூப்­பி­டு­வது, `சேப்­பாக்­கம்–­­தி­ரு­வல்­லிக்­கே­ணி­யின் செல்­லப்­பிள்ளை’ வந்­தி­ருக்­கி­றார் என்­று­தான் சொல்­வார்­கள். அந்த அள­வுக்கு இந்­தத் தொகுதி இப்­போது எனக்கு மன­துக்கு நெருக்­க­மாக, உங்­க­ளி­ட­மி­ருந்து என்­னைப் பிரித்­துப் பேச விரும்­ப­வில்லை. நாம் அத்­தனை பேரும் இந்­தத் தொகு­தி­யில் அப்­ப­டிப் பணி­யாற்றி இருக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11.8">நான் கண்­டிப்­பா­கச் சொல்­கி­றேன் 135 தொகு­தி­க­ளுக்­குச் சென்று மக்­க­ளைச் சந்­தித்­து­விட்டு வந்­தி­ருக்­கி­றேன். நிச்­ச­யம், நம் திரா­விட முன்­னேற்­றக் கழ­கம் ஆட்சி அமைக்­கப்­போ­வது உறுதி. மீண்­டும் நம் தலை­வர் அவர்­கள்­தாம் முத­ல­மைச்­சர் பொறுப்­பில் உட்­கா­ரப்­போ­கி­றார்­கள். அதற்கு ஒரு தூண்­டு­கோ­லாக, `கவுண்ட்­ட­வுன் ஸ்டார்ட்’ என்று சொல்­வார்­களே அதற்கு நம் சேப்­பாக்­கம்–­­தி­ரு­வல்­லிக்­கேணி தொகுதி அதி­க­மான வாக்கு வித்­தி­யா­சத்­தில் மீண்­டும் நீங்­கள் வெற்றி பெற வைப்­பீர்­கள் என்ற அந்த நம்­பிக்கை இருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12.3">முன்­மா­திரி தொகுதி</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11.8">குறிப்­பாக, ஐந்து வரு­டம் நம் தலை­வர் அவர்­க­ளின் திட்­டங்­கள், சாத­னை­கள் மக்­க­ளி­டம் சென்­ற­டைந்­துள்­ளன. ஒவ்­வொரு திட்­ட­மும் சென்ற முறை என்­னென்ன வாக்­கு­றுதி கொடுத்­தி­ருக்­கி­றோமோ அதை எல்­லாம் நிறை­வேற்­றிக் கொடுத்­தி­ருக்­கி­றார் தலை­வர். அதைத் தவிர, முக்­கி­ய­மான வாக்­கு­று­தி­க­ளும் கொடுத்­தி­ருக்­கி­றோம் இந்த முறை ஆட்­சிக்கு வந்­தோம் என்­றால், என்­னென்ன செய்­வோம் என்­ப­தும், தமிழ்­நாட்டு மக்­கள் யார் கொடுக்­கிற வாக்­கு­று­தியை நம்­பு­கி­றார்­களோ இல்­லையோ, நம் தலை­வர் கொடுக்­கிற வாக்­கு­று­தியை நிச்­ச­யம் இவர் சொன்­னால் செய்­வார் என்­கிற நம்­பிக்கை, நம் தமிழ்­நாட்டு மக்­க­ளுக்கு இருக்­கி­றது. எனவே, அடித்­துச் சொல்­கி­றேன் இந்த முறை­யும் நம் திரா­விட முன்­னேற்­றக் கழ­கம் மிகப் பெரிய வெற்­றி­யைப் பெறப்­போ­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11.8">சங்­கிக் கூட்­டத்­தை­யும் அடி­மைக் கூட்­டத்­தை­யும் தமிழ்­நாட்­டுக்­குள் நுழைய விட­மாட்­டோம் என்­கிற உறு­தியை இந்­தத் தமிழ்­நாட்டு மக்­கள் இந்­தத் தேர்­த­லில் நிச்­ச­யம் எடுப்­பார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11.8">எனவே, உங்­க­ளுக்­கெல்­லாம் மீண்­டும் என்­னு­டைய நன்­றி­யைச் சொல்லி, மீண்­டும் என்னை நிச்­ச­யம் வெற்றி பெற வைக்­கப்­போ­கி­றீர்­கள், அது உறு­தி­யாக எனக்­குத்தெரி­கி­றது. எத்­தனை வாக்கு வித்­தி­யா­சம் என்­ப­து­தான் எனக்­குத் தெரி­ய­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11.8">கடந்த முறை வாங்­கி­ய­தை­விட அதி­க­மான வாக்கு வித்­தி­யா­சத்­தில் வெற்றி பெற வைப்­பீர்­கள் என்ற நம்­பிக்­கை­யோடு மீண்­டும் அடுத்து ஜெயித்­தா­லும் தோற்­றா­லும் இந்­தச் சட்­ட­மன்­றத் தொகு­தி­யின் உறுப்­பி­ன­ராக இருந்­தா­லும் இல்­லா­விட்­டா­லும் என்­றைக்­குமே நான் உங்­க­ளோ­டு­தான் நான் பய­ணிக்­கப்­போ­கி­றேன். எனவே, இரண்டு பேரும் சேர்ந்து பய­ணிப்­போம். இந்­தச் சேப்­பாக்­கம்–­­தி­ரு­வல்­லிக்­கேணி தொகு­தியை இன்­றைக்­குத் தமிழ்­நாட்­டி­லேயே ஒரு முன்­மா­திரி தொகு­தி­யாக நிச்­ச­யம் சீக்­கி­ரம் மாற்­றிக் காட்­டு­வோம். அதற்­கான பணி­க­ளைச் செய்­தி­ருக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="12.3"> </lang>
<lang  class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12.3">மீண்­டும் திரா­விட மாடல் ஆட்சி 2.o
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11.8">மீண்­டும் ஆட்­சிக்கு வந்து தலை­வ­ரின் உத்­த­ர­வைப் பெற்று மீண்­டும் அந்­தப் பணி­களை எல்­லாம் செய்­வோம். கடந்த மூன்று நாட்­க­ளாக மட்­டு­மல்ல, கடந்த 25 நாட்­க­ளாக நீங்­கள் ஒவ்­வொ­ரு­வ­ரும் ஒவ்­வொரு வீடாக ஏறி, இறங்கி இருக்­கி­றீர்­கள், ஒவ்­வொரு வாக்­கா­ள­ரைச் சந்­தித்­தி­ருக்­கி­றீர்­கள். எனவே, உங்­கள் அனை­வ­ருக்­கும் மீண்­டும் என் நன்­றி­யைத் தெரி­வித்து நம் திரா­விட மாடல் ஆட்சி 2.0 அமை­யப்­போ­வது உறுதி.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11.8">இப்­போது நம் வேலை 23–ஆம் தேதி அனை­வ­ரும் வாக்­க­ளிக்க வேண்­டும். அனை­வ­ரும் உத­ய­சூ­ரி­ய­னுக்கு வாக்­க­ளிக்க வேண்­டும் என்று சொல்­ல­வில்லை, அனை­வ­ரும் முத­லில் வாக்­க­ளிக்க வேண்­டும். அந்த விழிப்­பு­ணர்வை நீங்­கள் ஒவ்­வொ­ரு­வ­ரும் உங்­க­ளின் குடும்­பங்­க­ ளில், உங்­க­ளின் வீடு­க­ளில், உங்­க­ளின் தெருக்­க­ளில் அந்த விழிப்பு உணர்வை ஏற்­ப­டுத்­துங்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11.8">அனை­வ­ரும் கண்­டிப்­பாக உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­தில் வாக்­க­ளிப்­ப­தை­யும் நீங்­கள் அத்­தனை பேரும் உறுதி செய்ய வேண்­டும் என்று கேட்­டுக்­கொண்டு இந்­தச் சிறப்­பான பிரச்­சார நிகழ்ச்­சியை ஏற்­பாடு செய்த நம் கழக நிர்­வா­கி­கள் அத்­தனை பேருக்­கும் கலை­ஞ­ரின் உடன்­பி­றப்­பு­கள் உங்­கள் அனை­வ­ருக்­கும் மீண்­டும் என் நன்­றி­யைத் தெரி­வித்து விடை­பெ­று­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11.8">நன்றி, வணக்­கம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11.8">இவ்­வாறு கழக இளை­ஞர் அணிச் செய­லா­ள­ரும் துணை முத­ல­மைச்­ச­ ரு­மான உத­ய­நிதி ஸ்டாலின் உரை­யாற்­றி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12.3">நன்றி தெரி­வித்­தார்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="12.3">முன்­ன­தாக, கழக இளை­ஞர் அணிச் செய­லா­ள­ரும் துணை முத­ல­மைச்­சரு­ மான உத­ய­நிதி ஸ்டாலின்  உரை­யாற்­றும் போது,
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11.8">நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் தயா­நிதி மாறன், மாவட்­டக் கழ­கச் செய­லா­ளர் சிற்­ற­ரசு, பகு­திக் கழ­கச் செய­லா­ளர்­கள் காம­ராஜ், மதன் மோகன், தொகுதி பார்­வை­யா­ளர்­கள் சி.ஹெச்.சேகர், பாபு, வழக்­க­றி­ஞர் சர­வ­ணன், அர்­ஜுன் சங்­கர், வழக்­க­றி­ஞர் விவேக், மணி­கண்­டன், சந்­தி­ர­நா­தன், சிவ­சூர்ய முரு­கன், ஜெயப்­பி­ர­காஷ், சமூக வலை­த­ளத்­தில் பிரச்­சா­ரங்­களை ஒருங்­கி­ணைத்த அருமை சகோ­தரி நிவே­திதா ஜெசிகா, மாவட்ட இளை­ஞர் அணி அமைப்­பா­ளர் பிர­காஷ்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11.8">மாவட்ட இளை­ஞர் அணி துணை அமைப்­பா­ளர்­கள் தினேஷ், பாலச்­சந்­தர், பகுதி இளை­ஞர் அணி அமைப்­பா­ளர்­கள் சாஜத், கிரி­த­ரன், அனைத்து இளை­ஞர் அணி நிர்­வா­கி­கள், மாவட்­டக் கழக நிர்­வா­கி­கள் வி.என்.துரை, வி.என்.ராஜன், கமலா செழி­யன், ராஜ்­கு­மார், மாநில நிர்­வா­கி­கள் வி.பி.பொன்­ன­ரசு, வி.பி.மணி, அலு­வ­ல­கப் பணிக்­காக இங்­கி­ருந்து பணி­யாற்­றிய நம் தொடர்­புக் குழு­வின் மாநி­லத் துணைச் செய­லா­ளர் மருத்­து­வர் ஹஃபி­சுல்லா, வட்­டக் கழ­கச் செய­லா­ளர்­கள் ஜெக­தீ­சன், மகேஷ், பிர­பா­ க­ரன், சின்­ன­ராசு, கோபி, தமீம், ஜி.வி., செந்­தில்­கு­மார், சசி, விஜ­ய­ கு­மார், மோகன், லைனர் பிரபு, ஐ.சி.எஃப். சங்­கர், கேரளா ரவி, மாமன்ற உறுப்­பி­னர்­கள் சிவ­ரா­ஜ­ சே­க­ரன், ஈஸ்­வரி வெங்­க­டே­சன், மங்கை ராஜ்­கு­மார், ரஹ்­மத்­துல்லா, துபாய் விஜய், ராஜ­ரா­ஜன், அனைத்­துக் கழக அணி­க­ளின் நிர்­வா­கி­கள், அசோ­கன், சட்­ட­மன்ற அலு­வ­ல­கப் பணி­யா­ளர்­கள் அஸ்­வின், மஞ்­சு­நாத், சதீஷ், யோகேஷ், சுதா­கர், தருண், நம் மதச்­சார்­பற்ற முற்­போக்­குக் கூட்­ட­ணிக் கட்­சி­யைச் சேர்ந்த அனைத்து நண்­பர்­க­ளுக்­கும், தயா­நிதி மாறன் அவர்­க­ளின் உத­வி­யா­ளர் ஆனந்த், மாவட்­டச் செய­லா­ளர் சிற்­ற­ர­சு­வின் உத­வி­யா­ளர் பிர­வீன், பிரச்­சார வாகன ஓட்­டு­நர்­கள் கண்­ணன், மகேஷ் உள்­ளிட்ட அனைத்து நிர்­வா­கி­ க­ளுக்­கும், அனைத்­துச் சங்­கங்­க­ளின் நிர்­வா­கி­க­ளுக்­கும் நன்றி தெரி­வித்­தார்.</lang>
</p>

<block id="subarticle1" boxBorderWeightColor="" boxBorderWeight="" style="subarticle" width="1" >

	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">சின்னாளபட்டிக்கு ரூ. 750 கோடி மதிப்பில் வைகை அணையிலிருந்து குடி தண்ணீர் கொண்டுவரப்படும் என்றும், அரசு சமுதாய நல மையம் 24 மணி நேரமும் செயல்படும் அரசு மருத்துவமனையாக மாற்றப்படும் என சின்னாளபட்டியில் நடைபெற்ற இறுதிகட்ட தேர்தல் பிரச்சாரத்தில் அமைச்சர் ஐ.பெரியசாமி பொதுமக்கள் மத்தியில் பேசி உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார். மாணவன் ஒருவர் அமைச்சரின் படத்தை வரைந்து அமைச்சரிடம் வழங்கி பாராட்டைபெற்றார். அருகில் ஒன்றிய செயலாளர் முருகேசன் உட்பட தி.மு.க. நிர்வாகிகள்  உள்ளனர்.</lang>
	</hl2>
</block>
    </body.content>
  </body>
</nitf>