<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="23/04/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,128,958,1214" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Thu Apr 23 2026 03:56:26 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260423T000000+5.30" edition.name="TRY" edition.area="TRY" position.section="23042026-TRY-12" position.sequence="12" ex-ref="23042026-TRY-12.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="62">பாசிச பா.ஜ.க.வையும் --– அடிமை அ.தி.மு.க.வையும் அடி­யோடு வீழ்த்தி, மதச்­சார்­பற்ற முற்­போக்­குக் கூட்­டணி வெற்­றி­வாகை சூடும்! </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="25">சேப்­பாக்­கம்–­தி­ரு­வல்­லிக்­கேணி தொகுதி தந்தை பெரி­யார் சிலை அருகே</lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="37">துணை முத­ல­மைச்­சர் உத­ய­நிதி ஸ்டாலின்  பிரச்­சா­ரத்தை நிறை­வு­செய்­தார்!</lang>
	</hl4>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="Dcmspeech2141_12_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11.5">சென்னை,ஏப்.23 –</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11.5">2026 சட்­டப்­பே­ர­வைத் தேர்­த­லுக்­காக காஞ்­சி­பு­ரம், பேர­றி­ஞர் அண்ணா நினைவு இல்­லத்­தில் தொடங்கி, மாநி­லம் முழு­வ­தும் மேற்­கொண்­டி­ருந்த பிரச்­சா­ரப் பெரும்­ப­ய­ணத்தை, கழக இளை­ஞர் அணிச் செய­லா­ள­ரும் துணை முத­ல­மைச்­ச­ரு­மான உத­ய­நிதி ஸ்டாலின்,  தான் போட்­டி­யி­டும் சேப்­பாக்­கம்–­தி­ரு­வல்­லிக்­கேணி தொகு­தி­யில் உள்ள தந்தை பெரி­யார் சிலை அருகே  நேற்று முன்தினம் நிறைவு செய்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11.5">கழக இளை­ஞர் அணிச் செய­லா­ள­ரும் துணை முத­ல­மைச்­ச­ரு­மான உத­ய­நிதி ஸ்டாலின் ஆற்­றிய உரை­யின் விவ­ரம் வரு­மாறு:
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11.5">வருகை தந்­தி­ருக்­கின்ற உங்­கள் அனை­வ­ருக்­கும் என் முதற்­கண் வணக்­கத்­தை­யும் நன்­றி­யை­யும் தெரி­வித்­துக்­கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">20 நாட்­கள் சுற்­றுப்­ப­ய­ணம்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11.5">சென்ற முறை தலை­வர் அவர்­கள் சேப்­பாக்­கம் – திரு­வல்­லிக்­கேணி தொகு­தி­யில் போட்­டி­யி­டு­வ­தற்கு எனக்கு வாய்ப்பு கொடுத்­தார்­கள். கடந்த முறை­யும் தமிழ்­நாடு முழு­வ­தும் சுற்­றிக்­கொண்டு இருந்­த­த­னால், தொகு­திக்கு வந்து என்­னால் வாக்­குக் கேட்க முடி­ய­வில்லை. அப்­பொ­ழு­தும் மிகப் பெரிய வாக்கு வித்­தி­யா­சத்­தில் வெற்றி பெற வைத்­தீர்­கள். இந்த முறை­யும் அதே மாதிரி கடந்த 20 நாட்­க­ளாக 135 தொகு­தி­க­ளுக்­குச் சென்று, நம் தலை­வ­ருக்­காக, கழ­கத்­துக்­காக, கழ­கத்­தின் வெற்­றிக்­காக நான் உழைத்­தி­ருக்­கி­றேன் என்­றால், நான் மட்­டும் உழைக்­க­வில்லை, நீங்­க­ளும் சேர்ந்­து­தான் உழைத்­தி­ருக்­கி­றீர்­கள். அந்த உழைப்­பில் உங்­க­ளுக்­கும் பங்கு இருக்­கி­றது. ஏனெ­னில், 20 நாட்­கள் நான் இங்கே இல்லை. இந்­தத் தொகுதி முழுக்­கச் சுற்­றிச் சுற்றி ஒவ்­வொரு தெரு­வாக, ஒவ்­வொரு வீடா­கச் சென்று ஏறி இறங்கி வாக்­குக் கேட்­டது, வந்­தி­ருக்­கக்­கூ­டிய நிர்­வா­கி­க­ளா­கிய நீங்­கள்­தாம். அதற்கு முத­லில் நான் என்­றென்­றும் நன்­றிக்­க­டன்­பட்­டி­ருப்­பேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">உங்­க­ளின் ஒத்­து­ழைப்பு</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11.5">கடந்த முறை கிட்­டத்­தட்ட 70,000 வாக்கு வித்­தி­யா­சத்­தில் வெற்றி பெற வைத்­தீர்­கள். வெற்றி பெற்ற உடனே நான் என்­றைக்கோ வந்து உங்­க­ளைப் பார்க்­கிற மாதிரி மற்ற வேட்­பா­ளர்­கள் மாதி­ரியோ மற்ற கழ­கத்­தில் இருக்­கிற மாதிரி கிடை­யாது. உங்­க­ளு­டனே பய­ணித்­தேன். கடந்த ஐந்து வரு­டங்­க­ளாக அனைத்து சுக–­துக்க நிகழ்ச்­சி­க­ளி­லும் உங்­க­ளின் குடும்­பத்­தில் ஒரு­வ­னாக என்னை நீங்­கள் வைத்­தி­ருந்­தீர்­கள். இன்­னும் சொல்­லப்­போ­னால், நான் இன்­றைக்­குச் சட்­ட­மன்ற உறுப்­பி­ன­ராக மட்­டும் இல்லை, உங்­க­ளின் ஒத்­து­ழைப்­பி­னால் ஓர் அமைச்­ச­ராக, இன்­னும் பெரு­மை­யா­கச் சொல்ல வேண்­டும் என்­றால், தமிழ்­நாட்­டின் துணை முத­ல­மைச்­சரை உரு­வாக்­கி­யது இந்­தச் சேப்­பாக்­கம்–­தி­ரு­வல்­லிக்­கேணி சட்­ட­மன்­றத் தொகுதி. அதற்கு என்­றென்­றைக்­கும் நான் கட­மைப்­பட்­டி­ருப்­பேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11.5">கடந்த ஐந்து வரு­டம் என்­னால் முடிந்த அனைத்­துப் பணி­க­ளை­யும் சிறப்­பாக, நான் தனி­யா­கச் செய்­தேன் என்று சொல்ல மாட்­டேன். நாம் இரண்டு பேரும் சேர்ந்து ஒன்­றாக, அத்­தனை பணி­க­ளை­யும் ஒவ்­வொரு வட்­டத்­துக்­கும் ஒவ்­வொரு பகு­திக்­கும் ஒவ்­வொரு தெரு­வுக்­கும் என்­னென்ன தேவை என்­ப­தைப் பார்த்­துப் பார்த்­துச் செய்­தி­ருக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">சேப்­பாக்­கம்–­தி­ரு­வல்­லிக்­கேணியின்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">செல்­லப்­பிள்ளை</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11.5">இன்­றைக்­குத் தமிழ்­நாடு முழு­வ­தும் நான் பய­ணம் செய்­கி­றேன். இளை­ஞர் அணிச் செய­லா­ளர் என்று சொல்­வார்­கள், சின்­ன­வர் என்று சொல்­வார்­கள், அமைச்­சர் என்று சொல்­வார்­கள், துணை முத­ல­மைச்­சர் என்று சொல்­வார்­கள். ஆனால், எல்­லோ­ரும் செல்­ல­மா­கக் கூப்­பி­டு­வது, `சேப்­பாக்­கம்–­தி­ரு­வல்­லிக்­கே­ணி­யின் செல்­லப்­பிள்ளை’ வந்­தி­ருக்­கி­றார் என்­று­தான் சொல்­வார்­கள். அந்த அள­வுக்கு இந்­தத் தொகுதி இப்­போது எனக்கு மன­துக்கு நெருக்­க­மாக, உங்­க­ளி­ட­மி­ருந்து என்­னைப் பிரித்­துப் பேச விரும்­ப­வில்லை. நாம் அத்­தனை பேரும் இந்­தத் தொகு­தி­யில் அப்­ப­டிப் பணி­யாற்றி இருக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11.5">நான் கண்­டிப்­பா­கச் சொல்­கி­றேன் 135 தொகு­தி­க­ளுக்­குச் சென்று மக்­க­ளைச் சந்­தித்­து­விட்டு வந்­தி­ருக்­கி­றேன். நிச்­ச­யம், நம் திரா­விட முன்­னேற்­றக் கழ­கம் ஆட்சி அமைக்­கப்­போ­வது உறுதி. மீண்­டும் நம் தலை­வர் அவர்­கள்­தாம் முத­ல­மைச்­சர் பொறுப்­பில் உட்­கா­ரப்­போ­கி­றார்­கள். அதற்கு ஒரு தூண்­டு­கோ­லாக, `கவுண்ட்­ட­வுன் ஸ்டார்ட்’ என்று சொல்­வார்­களே அதற்கு நம் சேப்­பாக்­கம்–­தி­ரு­வல்­லிக்­கேணி தொகுதி அதி­க­மான வாக்கு வித்­தி­யா­சத்­தில் மீண்­டும் நீங்­கள் வெற்றி பெற வைப்­பீர்­கள் என்ற அந்த நம்­பிக்கை இருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">முன்­மா­திரி தொகுதி</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11.5">குறிப்­பாக, ஐந்து வரு­டம் நம் தலை­வர் அவர்­க­ளின் திட்­டங்­கள், சாத­னை­கள் மக்­க­ளி­டம் சென்­ற­டைந்­துள்­ளன. ஒவ்­வொரு திட்­ட­மும் சென்ற முறை என்­னென்ன வாக்­கு­றுதி கொடுத்­தி­ருக்­கி­றோமோ அதை எல்­லாம் நிறை­வேற்­றிக் கொடுத்­தி­ருக்­கி­றார் தலை­வர். அதைத் தவிர, முக்­கி­ய­மான வாக்­கு­று­தி­க­ளும் கொடுத்­தி­ருக்­கி­றோம் இந்த முறை ஆட்­சிக்கு வந்­தோம் என்­றால், என்­னென்ன செய்­வோம் என்­ப­தும், தமிழ்­நாட்டு மக்­கள் யார் கொடுக்­கிற வாக்­கு­று­தியை நம்­பு­கி­றார்­களோ இல்­லையோ, நம் தலை­வர் கொடுக்­கிற வாக்­கு­று­தியை நிச்­ச­யம் இவர் சொன்­னால் செய்­வார் என்­கிற நம்­பிக்கை, நம் தமிழ்­நாட்டு மக்­க­ளுக்கு இருக்­கி­றது. எனவே, அடித்­துச் சொல்­கி­றேன் இந்த முறை­யும் நம் திரா­விட முன்­னேற்­றக் கழ­கம் மிகப் பெரிய வெற்­றி­யைப் பெறப்­போ­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11.5">சங்­கிக் கூட்­டத்­தை­யும் அடி­மைக் கூட்­டத்­தை­யும் தமிழ்­நாட்­டுக்­குள் நுழைய விட­மாட்­டோம் என்­கிற உறு­தியை இந்­தத் தமிழ்­நாட்டு மக்­கள் இந்­தத் தேர்­த­லில் நிச்­ச­யம் எடுப்­பார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11.5">எனவே, உங்­க­ளுக்­கெல்­லாம் மீண்­டும் என்­னு­டைய நன்­றி­யைச் சொல்லி, மீண்­டும் என்னை நிச்­ச­யம் வெற்றி பெற வைக்­கப்­போ­கி­றீர்­கள், அது உறு­தி­யாக எனக்­குத் தெரி­கி­றது. எத்­தனை வாக்கு வித்­தி­யா­சம் என்­ப­து­தான் எனக்­குத் தெரி­ய­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11.5">கடந்த முறை வாங்­கி­ய­தை­விட அதி­க­மான வாக்கு வித்­தி­யா­சத்­தில் வெற்றி பெற வைப்­பீர்­கள் என்ற நம்­பிக்­கை­யோடு மீண்­டும் அடுத்து ஜெயித்­தா­லும் தோற்­றா­லும் இந்­தச் சட்­ட­மன்­றத் தொகு­தி­யின் உறுப்­பி­ன­ராக இருந்­தா­லும் இல்­லா­விட்­டா­லும் என்­றைக்­குமே நான் உங்­க­ளோ­டு­தான் நான் பய­ணிக்­கப்­போ­கி­றேன். எனவே, இரண்டு பேரும் சேர்ந்து பய­ணிப்­போம். இந்­தச் சேப்­பாக்­கம்–­தி­ரு­வல்­லிக்­கேணி தொகு­தியை இன்­றைக்­குத் தமிழ்­நாட்­டி­லேயே ஒரு முன்­மா­திரி தொகு­தி­யாக நிச்­ச­யம் சீக்­கி­ரம் மாற்­றிக் காட்­டு­வோம். அதற்­கான பணி­க­ளைச் செய்­தி­ருக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11.5">மீண்­டும் திரா­விட மாடல் ஆட்சி 2.o</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11.5">மீண்­டும் ஆட்­சிக்கு வந்து தலை­வ­ரின் உத்­த­ர­வைப் பெற்று மீண்­டும் அந்­தப் பணி­களை எல்­லாம் செய்­வோம். கடந்த மூன்று நாட்­க­ளாக மட்­டு­மல்ல, கடந்த 25 நாட்­க­ளாக நீங்­கள் ஒவ்­வொ­ரு­வ­ரும் ஒவ்­வொரு வீடாக ஏறி, இறங்கி இருக்­கி­றீர்­கள், ஒவ்­வொரு வாக்­கா­ள­ரைச் சந்­தித்­தி­ருக்­கி­றீர்­கள். எனவே, உங்­கள் அனை­வ­ருக்­கும் மீண்­டும் என் நன்­றி­யைத் தெரி­வித்து நம் திரா­விட மாடல் ஆட்சி 2.0 அமை­யப்­போ­வது உறுதி.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11.5">இப்­போது நம் வேலை 23–ஆம் தேதி அனை­வ­ரும் வாக்­க­ளிக்க வேண்­டும். அனை­வ­ரும் உத­ய­சூ­ரி­ய­னுக்கு வாக்­க­ளிக்க வேண்­டும் என்று சொல்­ல­வில்லை, அனை­வ­ரும் முத­லில் வாக்­க­ளிக்க வேண்­டும். அந்த விழிப்­பு­ணர்வை நீங்­கள் ஒவ்­வொ­ரு­வ­ரும் உங்­க­ளின் குடும்­பங்­க­ளில், உங்­க­ளின் வீடு­க­ளில், உங்­க­ளின் தெருக்­க­ளில் அந்த விழிப்பு உணர்வை ஏற்­ப­டுத்­துங்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11.5">அனை­வ­ரும் கண்­டிப்­பாக உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­தில் வாக்­க­ளிப்­ப­தை­யும் நீங்­கள் அத்­தனை பேரும் உறுதி செய்ய வேண்­டும் என்று கேட்­டுக்­கொண்டு இந்­தச் சிறப்­பான பிரச்­சார நிகழ்ச்­சியை ஏற்­பாடு செய்த நம் கழக நிர்­வா­கி­கள் அத்­தனை பேருக்­கும் கலை­ஞ­ரின் உடன்­பி­றப்­பு­கள் உங்­கள் அனை­வ­ருக்­கும் மீண்­டும் என் நன்­றி­யைத் தெரி­வித்து விடை­பெ­று­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11.5">நன்றி, வணக்­கம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11.5">இவ்­வாறு கழக இளை­ஞர் அணிச் செய­லா­ள­ரும் துணை முத­ல­மைச்­ச­ரு­மான உத­ய­நிதி ஸ்டாலின் உரை­யாற்­றி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">நன்றி தெரி­வித்­தார்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11.5">முன்­ன­தாக, கழக இளை­ஞர் அணிச் செய­லா­ள­ரும் துணை முத­ல­மைச்­ச­ரு­ மான உத­ய­நிதி ஸ்டாலின்  உரை­யாற்­றும் போது,
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11.5">நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் தயா­நிதி மாறன், மாவட்­டக் கழ­கச் செய­லா­ளர் சிற்­ற­ரசு, பகு­திக் கழ­கச் செய­லா­ளர்­கள் காம­ராஜ், மதன் மோகன், தொகுதி பார்­வை­யா­ளர்­கள் சி.ஹெச்.சேகர், பாபு, வழக்­க­றி­ஞர் சர­வ­ணன், அர்­ஜுன் சங்­கர், வழக்­க­றி­ஞர் விவேக், மணி­கண்­டன், சந்­தி­ர­நா­தன், சிவ­சூர்ய முரு­கன், ஜெயப்­பி­ர­காஷ், சமூக வலை­த­ளத்­தில் பிரச்­சா­ரங்­களை ஒருங்­கி­ணைத்த அருமை சகோ­தரி நிவே­திதா ஜெசிகா, மாவட்ட இளை­ஞர் அணி அமைப்­பா­ளர் பிர­காஷ்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11.5">மாவட்ட இளை­ஞர் அணி துணை அமைப்­பா­ளர்­கள் தினேஷ், பாலச்­சந்­தர், பகுதி இளை­ஞர் அணி அமைப்­பா­ளர்­கள் சாஜத், கிரி­த­ரன், அனைத்து இளை­ஞர் அணி நிர்­வா­கி­கள், மாவட்­டக் கழக நிர்­வா­கி­கள் வி.என்.துரை, வி.என்.ராஜன், கமலா செழி­யன், ராஜ்­கு­மார், மாநில நிர்­வா­கி­கள் வி.பி.பொன்­ன­ரசு, வி.பி.மணி, அலு­வ­ல­கப் பணிக்­காக இங்­கி­ருந்து பணி­யாற்­றிய நம் தொடர்­புக் குழு­வின் மாநி­லத் துணைச் செய­லா­ளர் மருத்­து­வர் ஹஃபி­சுல்லா, வட்­டக் கழ­கச் செய­லா­ளர்­கள் ஜெக­தீ­சன், மகேஷ், பிர­பா­க­ரன், சின்­ன­ராசு, கோபி, தமீம், ஜி.வி., செந்­தில்­கு­மார், சசி, விஜ­ய­கு­மார், மோகன், லைனர் பிரபு, ஐ.சி.எஃப். சங்­கர், கேரளா ரவி, மாமன்ற உறுப்­பி­னர்­கள் சிவ­ரா­ஜ­சே­க­ரன், ஈஸ்­வரி வெங்­க­டே­சன், மங்கை ராஜ்­கு­மார், ரஹ்­மத்­துல்லா, துபாய் விஜய், ராஜ­ரா­ஜன், அனைத்­துக் கழக அணி­க­ளின் நிர்­வா­கி­கள், அசோ­கன், சட்­ட­மன்ற அலு­வ­ல­கப் பணி­யா­ளர்­கள் அஸ்­வின், மஞ்­சு­நாத், சதீஷ், யோகேஷ், சுதா­கர், தருண், நம் மதச்­சார்­பற்ற முற்­போக்­குக் கூட்­ட­ணிக் கட்­சி­யைச் சேர்ந்த அனைத்து நண்­பர்­க­ளுக்­கும், தயா­நிதி மாறன் அவர்­க­ளின் உத­வி­யா­ளர் ஆனந்த், மாவட்­டச் செய­லா­ளர் சிற்­ற­ர­சு­வின் உத­வி­யா­ளர் பிர­வீன், பிரச்­சார வாகன ஓட்­டு­நர்­கள் கண்­ணன், மகேஷ் உள்­ளிட்ட அனைத்து நிர்­வா­கி­க­ளுக்­கும், அனைத்­துச் சங்­கங்­க­ளின் நிர்­வா­கி­க­ளுக்­கும் நன்றி 
தெரி­வித்­தார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>