<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="23/04/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="37,67,957,907" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="4"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Wed Apr 22 2026 16:14:06 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260423T000000+5.30" edition.name="TRY" edition.area="TRY" position.section="23042026-TRY-13" position.sequence="13" ex-ref="23042026-TRY-13.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#000000" boxBorderWeight="2">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="61">ஒரே போர் வீரன் – -இரண்டு களங்கள்!</lang>
	</hl2>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup587379_13_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="2" source="1CMcol_13_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="16.5">க</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ழ­கத் தலை­வ­ரும் முதல்­வ­ரு­மான மு.க.ஸ்டாலின் அவர்கள் தேர்­தல் களத்­தில் தொடர்ந்து பணி­யாற்­றிக் கொண்டு இருக்­கி­றார். ஓய்வு ஒழிச்­ச­லின்றி பணி. கழ­கம் மற்­றும் கூட்­ட­ணிக் கட்சி வேட்­பா­ளர்­க­ளுக்­காக வாக்­கு­க­ளைத் திரட்­டு­கி­றார். அதற்­கா­கப் பொதுக்­கூட்­டங்­க­ளில் பேசு­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">காலை­யில் நடை­ப­யிற்­சி­யின் போதும் வாக்­கா­ளர் சந்­திப்பை ஸ்டாலின் தொட­ரு­கி­றார். அப்­ப­டிப் போகும்­போது தெரு­வோர தேநீர் கடை­க­ளில் தேநீர் அருந்­து­கி­றார். மக்­க­ளி­டம் வாக்­கா­ளர்­க­ளி­டம் அப்­போது விசா­ரிப்­பும் உரை­யா­ட­லும் நடை­பெ­று­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">பூ விற்­போர், கறி­காய் விற்­போர், பாரம் சுமப்­போர், தொழி­லா­ளர்­கள் என எவ­ரை­யும் அவர் விட்டு வைக்­க­வில்லை, சந்­தித்­துக் கொண்டே வாக்­கு­க­ளைக் கேட்­டுக்­கொண்டே முன்­னே­றிக் கொண்­டி­ருந்­தார். ஸ்டாலின் செல்­லு­மி­ட­மெல்­லாம் வர­வேற்­கும் மக­ளிர் திரள். அவர்­க­ளி­டம் குதூ­க­லம் வானைத் தொட­ரு­கி­றது. ஏனென்­றால் அவர்­க­ளுக்­காக அவர் அவ்­வ­ளவு சாத­னைக­ளைச் செய்து இருக்­கி­றார். மேலும் அவர்­­களுக்­கா­கச் சாத­னை­க­ளைக் குவிக்க இருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தேர்­தல் களத்­தில் எதி­ரி­க­ளின் குற்­றச்­சாட்­டு­க­ளுக்கு ஆணித்­த­ர­மான பதில்­க­ளைத் தந்து கொண்டே முன்­னே­று­கி­றார். தேர்­தல் களத்­தில் ஒன்­றைப் பரப்­பு­ரை­யின் போது சொன்­னார். அதா­வது டெல்லி அணிக்­கும் தமிழ்­நாடு அணிக்­கும் போட்டி என்­றார். இடை­யில் உள்ள எடப்­பா­டிக்­கும் நமக்­கும் எது­வு­மில்லை. நமது இலக்கு டெல்­லியை எதிர்­கொள்­வ­தே-­­வீழ்த்­து­வதே எனும் கருத்தை அவர் பேச்சு முன் வைத்­தது. இது எல்­லோ­ரை­யும் கவர்ந்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தேர்­தல் களத்­தில் ஸ்டாலின் பரப்­புரை வாளைச் சுழற்­றிக் கொண்டே முன்­னே­று­வது ஒரு புறம் நடந்து கொண்டே இருக்­கி­றது. தலை­வர் மட்­டு­மன்றி ஓர் அணியே பரப்­புரை செய்­கி­றது; டெல்­லி­யின் மறைந்­தி­ருந்து தாக்­கும் தேர்­தல் களம் மட்­டு­மல்ல; இன்­னொரு களத்­திற்­கும் அவர் ஆயத்­த­மாக வேண்­டி­யி­ருந்­தது. திடீ­ரென்று நாடா­ளு­மன்­றத்­தின் நிகழ்வு பற்­றிய ஓர் அறி­விப்பு வெளி­யா­கி­றது. இரண்­டா­வது களம் உரு­வா­கி­விட்­டது. அதைத் தலை­வர் தமிழ்­நாட்­டி­லி­ருந்தே சந்­திக்கிறார்; நெறிப்­ப­டுத்­து­கி­றார்; வழி­காட்­டு­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அந்­தக் களம் தமிழ்­நாட்­டுத் தேர்­தல் களத்­தை­விட மிகப் பெரி­யது. இந்­திய களம் அது. ஸ்டாலின் டெல்­லி­யில் இல்லை. ஆனால் அவ­ரின் போர்க்­கு­ரல் ஒன்­றிய பா.ஜ.க. அர­சின் பிர­த­ம­ருக்­குக் கேட்­கி­றது. நாடா­ளு­மன்­றக் கட்­ட­டத்­தில் எதி­ரொ­லிக்­கி­றது. பா.ஜ.க.வுக்கு எதி­ராக உள்ள கட்­சி­கள் எல்­லாம் ஓர் அணி­யா­கத் திர­ளு­கின்­றன. ஒரு­மித்த கருத்­தைக் கொள்­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">நாடா­ளு­மன்­றத்­தில் பா.ஜ.க. ஒன்­றிய அரசு கொண்டு வந்த மூன்று மசோ­தாக்­களை எதிர்க்­கட்­சி­கள் தோல்­வி­யு­றச் செய்­து­விட்­டன. ஆளுங்­கட்சி கொண்டு வந்த தீர்­மா­னம் தோல்வி அடைந்து 
விட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ஒரு போர்­வீ­ரன் ஒரே நேரத்­தில் இரண்டு களங்­க­ளைச் சந்­தித்த நிகழ்­வு­களை இந்­தியா பார்த்­தது. அது என்ன? எப்­படி?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ஒரு களம்-­­த­மிழ்­நாட்­டின் தேர்­தல் களம். டெல்லி அணியை தமிழ்­நாடு அணி பிட­றி­யில் கால்­பட ஓடச் செய்ய இருக்­கிற களம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">மற்­றொன்று கடந்த ஜன.28 ஆம் தேதி நாடா­ளு­மன்­றக் கூட்­டத்தொடர் தொடங்­கி­யது. இது நிதி நிலை அறிக்கை விவா­தக் கூட்­டத் தொடர் ஆகும். ஏப்­ரல் 16 வரை நாடா­ளு­மன்ற மக்­க­ளவை கூட்­டங்­கள் இரண்டு கட்­டங்­க­ளாக நடந்­தன. அதன்­பி­றகு மூன்­றா­வது கட்­ட­மாக ஏப்­ரல் 16 முதல் 18 வரை மூன்று நாள்­கள் நாடா­ளு­மன்ற மக்­க­ளவை சிறப்பு அமர்வு என்று அறி­விக்­கப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">இந்­தச் சிறப்பு அமர்வு எதற்கு நடை­பெற இருக்­கி­றது என்ற செய்­தியை அறிந்த மு.க.ஸ்டாலின், ஏப்­ரல் 14 ஆம் தேதியே தொகுதி மறு­வ­ரை­யறை சம்­பந்­த­மான மசோ­தாக்­கள் பற்­றிய இறுதி எச்­ச­ரிக்­கையை பிர­த­ம­ருக்­குப் போர் பிர­க­ட­ன­மாக ஓர் அறிக்­கை­யின் மூலம் வெளி­யிட்­டார். அதில் ‘எனது தலை­மை­யில் மிகப் பெரிய போராட்­டம் இந்­தி­யா­வையே திரும்­பிப் பார்க்க வைத்­தி­ரு­வோம்’ என்று குறிப்­பிட்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ஏப்.16ஆம் தேதி-­­த­மிழ்­நாடு முழு­வ­தும் இன்று கருப்­புக் கொடி போராட்­டம் என்று ஸ்டாலின் அறி­வித்­தார். இதற்­கா­கத் தலை­மைக் கழ­கம் ஓர் அறி­விப்பை வெளி­யிட்­டது. அந்த அறிக்­கை­யில் வீடு­க­ளி­லும் பொது இடங்­க­ளி­லும் கருப்­புக் கொடி ஏற்­று­மாறு கேட்­டுக் கொள்­ளப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தேர்­தல் களத்­தில் பரப்­புரை நிகழ்ச்­சி­யின் போதே ஸ்டாலின் கருப்­புக் கொடியை நாமக்­கல்­லில் உயர்த்­தி­னார். மசோதா எரிந்து சாம்­ப­லா­யிற்று. இது­வெல்­லாம் மசோ­தாக்­கள் மக்­க­ள­வை­யில் தாக்­கல் ஆன அன்று நடந்­தவை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இந்த மூன்று நாள்­கள் சிறப்­புக் கூட்­டம் தேவை­யில்லை என்­றா­லும் ஒன்­றிய பா.ஜ.க. அரசு மூன்று மசோ­தாக்­களை ஏப்­ரல்16 ஆம் தேதி தாக்­கல் செய்­தது. (1 ) அர­சி­ய­ல­மைப்­புச் சட்­டம் 131-–ஆவது திருத்த மசோதா சட்­டம் -– 2026 (2) தொகுதி மறு­வ­ரை­யறை மசோதா -– 2026 (3) யூனி­யன் பிர­தே­சங்­க­ளின் சட்­டங்­கள் திருத்த மசோதா-–2026  என இம்­மூன்று மசோ­தாக்­களை மக்­க­ள­வை­யில் அறி­மு­கம் செய்து வைத்து சட்ட அமைச்­சர் அர்­ஜூன் ராம் மேக்­வால் பேசி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">மசோ­தாக்­களை அறி­மு­கம் செய்­வ­தற்கே வாக்­கெ­டுப்பு நடந்­தது. அறி­மு­கத்­துக்கு ஆத­ர­வாக 251 உறுப்­பி­னர்­க­ளும் எதி­ராக 185 உறுப்­பி­னர்­க­ளும் வாக்­க­ளித்­த­னர். இந்த வாக்­கெ­டுப்­பும் 40 நிமிட விவா­ தத்­திற்கு பின்னே நிகழ்ந்­தது. இந்த மசோ­தாக்­கள் குறித்து 18 மணி நேரம் விவா­தம் நடக்­கும் என்­றும் 17 ஆம் தேதி மாலை 4.00 மணிக்கு மசோ­தாக்­க­ளின் மீது வாக்­கெடுப்பு நடக்­கும் என்­றும் கூறப்­பட்­டது. இதை மக்­க­ள­வைத் தலை­வர் ஓம் பிர்லா தெரி­வித்து இருந்­தார். ஆனால் அதிக நேர­மா­யிற்று. மக்­க­ள­வைத் தலை­வர் குறிப்­பிட்ட நேரத்­திற்கு வாக்­கெ­டுப்பு நடை­பெ­ற­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">என்ன வியப்பு என்­றால் இந்த மசோ­தாக்­கள் தாக்­கல் செய்த சில மணி­நே­ரங்­க­ளில் இவை தோற்­கும் என்­ப­தற்­கு­ரிய சைகை­களை மிக பல­மாக ஸ்டாலின் பரப்­பு­ரை­யின் போது விடா­மல் சொல்­லிக் கொண்டு இருந்­தார். தொலைக்­காட்­சி­க­ளில் எதிர்க்­கட்­சி­கள் 238 வாக்­கு­களை மசோ­தா­வுக்கு எதி­ராக அளிக்­கக் கூடும் எனும் செய்­தி­களை வெளி­யிட்­டுக் கொண்டே இருந்­தன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இரா­குல் காந்தி ஒன்­றிய பா.ஜ.க. அரசு மகத்­தான தோல்­வியை சந்­திக்­கும். அப்­போது நாங்­கள் யார் என்­பதை பிர­த­மர் புரிந்து கொள்­வார் என்று பேசி­னார். இவ்­வி­ரு­வர்­க­ளின் பேச்­சும்  பெரும் வியப்பை ஏற்­ப­டுத்­தின.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">மசோ­தா­வின் மீது டி.ஆர்.பாலு, கனி­மொழி கரு­ணா­நிதி, ஆ.இராசா, சு.வெங்­க­டே­சன் மிகக் கடு­மை­யாக பா.ஜ.க. ஒன்­றிய அரசை விமர்­ச­னம் செய்து பேசி­னர். இம்­ம­சோ­தாக்­களை எதிர்த்­தும் அவை நிறை­வே­றாது என்­றும் பா.ஜ.க. ஒன்­றிய அரசு மகத்­தான தோல்­வி­யைச் சந்­திக்­கும் என்­றும் ஸ்டாலின் கூறிக் கொண்டே இருந்­தார். அவை தொலைக்­காட்­சி­க­ளில் ஒளி­ப­ரப்­பாகி வந்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">ஏப்­ரல் 17 ஆம் தேதி மாலை 6.00 மணி புதிய சார் மன்­னனை வீழ்த்த மக்­க­ளவை ஆயத்­த­மா­யிற்று. அர­சி­யல் சட்­டத்­தி­ருத்த மசோதா என்­ப­தால் இவை நிறை­வேற மக்­க­ள­வை­யில் மூன்­றில் இரண்டு பங்கு ஆத­ரவு தேவை. மக்­க­ள­வை­யில் 528 உறுப்­பி­னர்­கள் வாக்­க­ளித்­த­னர். வெற்றி பெற 352 வாக்­கு­கள் தேவை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">ஆளும் ஒன்­றிய பா.ஜ.க. அரசு 298 வாக்­கு­களே மசோ­தா­வுக்கு ஆத­ர­வா­கப் பெற முடிந்­தது. எதிர்க்­கட்­சி­கள்  230 வாக்­கு­களை மசோ­தா­வுக்கு எதி­ராக அளித்­தன. வாக்­கெ­டுப்பு முடி­வு­கள் திரை­யில் தோன்­றிய போது மக்­கள் சபையே ஒரு நிமி­டம் ஸ்தம்­பித்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">மோடி அரசு 54 வாக்­கு­கள் குறை­வா­கப் பெற்று 131-ஆவது சட்­டத் திருத்­தம் மிகப் பரி­தா­ப­மா­கத் தோற்­றது. மசோதா தோல்­வி­யுற்ற சில நிமி­டங்­க­ளில் அதிர்ந்து போன நாடா­ளு­மன்ற விவ­கார துறை அமைச்­சர்  கிரண் ரிஜிஜீ மற்ற இரண்டு மசோ­தாக்­க­ளைத் திரும்­பப் பெற்­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">சோவி­யத் ரஷியா மற்­றும் சீனா­வின் உல­க­றிந்த இட­து­சாரி இயக்­கங்­க­ளின் இரட்­டை­யர்­க­ளான புல்­கா­னின்-–­­கு­ரு­ஷேவ், மா-–சே-–­­துங், சூ-–யென்-–­­லாய்  என்­பது போல (அவர்­கள் இரட்­டை­யர்­க­ளா­கக் காட்­சி­ய­ளித்­ததை மட்­டும் கணக்­கில் கொள்க. மற்­ற­படி அவர்­க­ளோடு இவர்­களை ஒப்­பிட்­ட­தா­கக் கரு­தக்­கூடாது.)  தெற்­கா­சி­யா­வின் கடைந்­தெ­டுத்த வல­து­சா­ரி­க­ளான நரேந்­திர மோடி- – அமித்ஷா இரட்­டை­யர்­களின் வீழ்ச்சி ஆரம்­ப­மா­கி­விட்­டது. இதைத் தொடர வழி­வகை செய்து கொண்டே இருக்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">டெல்லி களத்­தை-–­­மக்­க­ள­வைத் தீர்­மா­னங்­களை தேர்­தல் களத்­தில்  பரப்­பு­ரைச் செய்து கொண்டே ஒன்­றிய பா.ஜ.க. அரசை வீழ்ச்­சி­யு­றச் செய்­து­விட்­டார் ஸ்டாலின். எல்லா எதிர்க்­கட்­சி­யி­ன­ருக்­கும் தமது நன்­றி­களை ஸ்டாலின் தெரி­வித்­துக் கொண்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">ஆடி­போய் நிற்­கி­றது பா.ஜ.க. வெளி­யில் காட்­டா­மல் தோல்­வியை மறைக்க நாட்டு மக்­க­ளுக்கு ஒரு ‘சப்பை’ உரையை ஆற்­றி­னார் - பிர­த­மர். மல்­லி­கார்­ஜூன கார்கே குறிப்­பிட்­டது போல ‘ஸ்டாலின் என்­றால் பிர­த­மர் மோடிக்குபயம்’ என்­பதை நமது கொள்கை ரீதி­யாக ஸ்டாலின் உறு­திப்­ப­டுத்­தி­விட்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தமிழ்­நாட்­டுத் தேர்­தல் களம் நடை­பெற்­றுக் கொண்டு இருக்­கி­றது.  ஸ்டாலின் கவி­மணி பாடி­யது போல ‘நிற்க எனக்கு நேர­மில்லை இன்­னும் நெடுந்­தூ­ரம் போக வேண்­டும் அம்மா’ என்று விரைந்து கொண்டு இருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ஒரே போர்­வீ­ரன் ஒரே நேரத்­தில் இரண்டு களங்­க­ளை­யும் சந்­திக்­கி­றான். இது திரா­விட இயக்க வர­லாற்­றில் ஒரு புதிய அத்­தி­யா­யம், மிக பல­மான எதி­ரியை சந்­திக்­கி­ற­போது கொள்­கைத் துணிவு நமது தலை­வர்­க­ளி­டத்­திலே இருந்து இருக்­கி­றது. அது இரத்­தத்­தில் கலந்து களத்­தில் கருத்­தாய் வெடிக்­கி­றது. வெற்­றியை அடை­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">சார் சட­ச­ட­வென வீழ்ந்­தது போல” மோடி ஆட்சி அதிர்ந்து போய் இருக்­கி­றது.  அதிர்ச்­சி­யில் பிதற்­றல்­கள் அதி­க­மாகி இருக்­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தள­ப­தி­யின் சுவ­டு­க­ளில் நமது பாதங்­களை அழுத்­திப் பதித்­துத் தொட­ரு­வோம். அவர் கரத்­தி­னைப் பலப்­­படுத்­து­வோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">தென்­தி­சை­யைப் பார்க்­கின்­றேன்; என்­சொல்­வேன் என்­றன்
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">சிந்தை யெல்­லாம் தோள்­க­ளெல்­லாம் பூரிக்கு தடடா”</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">-– புரட்­சிக்­க­வி­ஞர் பார­தி­தா­சன்</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>