<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="24/04/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="38,69,957,1493" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="4"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Thu Apr 23 2026 21:18:25 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260424T000000+5.30" edition.name="CBE" edition.area="CBE" position.section="24042026-CBE-05" position.sequence="05" ex-ref="24042026-CBE-05.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#000000" boxBorderWeight="2">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="79">தமிழகத் தாய்ப் பாசத் திராவிட மாடல் தி.மு.க. ஆட்சி என்றும் தொடரும்!</lang>
	</hl1>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup594022_05_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14.5">ஒ</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">ன்­றிய அர­சின் தொகுதி மறு­வ­ரை­ய­றைத் திட்­டம் தோற்­றது இந்­திய மக்­க­ளுக்­குத் தெரி­விப்­பது என்ன?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">“தமி­ழ­கத் தாய்ப் பாசத் திரா­விட மாடல் திமுக ஆட்சி என்­றும் தொட­ரும்” எனும் கட்­டு­ரையை அமெ­ரிக்க நாட்­டில் இருந்து அனுப்­பு­கி­றேன். தமி­ழ­கத் தாய்ப் பாச ஆட்சி என்­றும் தொட­ரும் என்­ப­தற்கு இன்­றைய மிகச் சிறந்த எடுத்­துக்­காட்டு எது?, முதல்­வர் ஸ்டாலி­னால் தமி­ழ­கத்­தில் துவங்­கிய தீ, இந்­திய நாடு முழு­வ­தும் பரவி, டெல்லி பாரா­ளு­மன்­றத்­தைச் சூழ்ந்து, ஒன்­றிய அர­சின் தொகுதி மறு­வ­ரை­ய­றைத் திட்­டம் தோற்­க­டிக்­கப்­பட்ட செய்­தி­யையே வலி­யு­றுத்­து­கி­றது. இச்­செய்­தியே அமெ­ரிக்­கா­வில் வாழும் பெரும்­பா­லான தமி­ழர்­க­ளின் விருப்­ப­மும் என்­ப­தைத் தமி­ழக மக்­கள் அறிய வேண்­டும். பிற கார­ணங்­க­ளை­யும் இக்­கட்­டு­ரை­யில் தெளி­வாக விளக்கி இருக்­கி­றேன் என்­பதை தமி­ழக மக்­க­ளுக்கு அகம் மகிழ்ந்து தெரி­விக்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">தமி­ழ­கத் தி.மு.க. திரா­விட மாடல் ஆட்சி, இன்­றும் இனி என்­றும் தொட­ரும் என்­ப­தற்கு அடிப்­ப­டைக் கார­ணம் என்ன? இந்த ஆட்சி “மக்­கள் தொண்டே மகே­சன் தொண்டு” என 1967- ல் அறி­ஞர் அண்ணா, பின்பு கலை­ஞர் , நடப்பு 2026-ல் முதல்­வர் ஸ்டாலின் ஆகிய மூவ­ரா­லும் தாய்ப் பாசத்­து­டன் தொடர்­வது தான் அசைக்க முடி­யாத கார­ணம். இதற்கு மிகச் சிறந்த கார­ணம், 
மு.க.ஸ்டாலின் முதல்­வ­ரா­கப் பதவி ஏற்­ற­தும், தமி­ழக மக்­கள்­மக்­கள் தொண்டே மகே­சன் தொண்டு என பேர­றி­ஞர் அண்ணா தலை­மை­யில் துவங்­கிய முதல் திரா­விட மாடல் அரசு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">மார்ச் 6, 1967-ல் பேர­றி­ஞர் அண்ணா தலை­மை­யில் பொறுப்­பேற்ற முதல் திமுக ஆட்சி, முதல் நாளி­லி­ருந்து தமி­ழக மக்­க­ளின் அடிப்­ப­டைத் தேவை­களை மக்­கள் மகி­ழும் வகை­யில் தாய்ப் பாசத்­து­டன், “மக்­கள் தொண்டே மகே­சன் தொண்டு” என ஆட்சி நடத்­தி­னார். முதன் முத­லில் இந்த தாய்ப் பாச ஆட்சி துவங்கி, கலை­ஞர் ஆட்­சி­யில் தொடர்ந்து, இப்­பொ­ழுது மு.க.ஸ்டாலின் ஆட்­சி­யில், இந்­திய நாட்­டின் அனைத்து மாநி­லங்­க­ளும் போட்டி இட்டு நடை­
மு­றைப்­ப­டுத்­தும் மக்­கள் நலன் சார்ந்த திட்­டங்­களை நடை­மு­றைப்­ப­டுத்தி இம­ய­மலை உச்­சி­யைத் தொடும் அள­வில் வள­ரும் வண்­ண­மாக இருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10">மாற்­றான் தோட்­டத்து மல்­லி­கைப் பூவும் மணக்­கும் என்­ப­தன் பொருள் என்ன?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">திரா­விட மாடல் ஆட்­சிக்கு எதி­ரான கட்­சி­கள் மட்­டு­மின்றி, ஒன்­றிய அர­சும், திரா­விட மாடல் அர­சின் தோட்­டத்து மல்­லி­கைப் பூவும் மணக்­கும் என்­பதை அறிய மறுக்­கின்­ற­னர். ஆனால் பேர­றி­ஞர் அண்ணா ஆட்­சி­யில் தொடங்கி, நடப்பு தமி­ழக முதல்­வர் ஆட்­சி­யி­லும், மக்­கள் தொடர்ந்து அடை­யும் நன்­மை­களே மாற்­றான் தோட்­டத்து மல்­லிகை பூவும் மணக்­கும் என்­ப­தன் பொருள் என்­பதை இன்­றா­வது அவர்­கள் அறிய வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10">அறி­ஞர் அண்ணா – கலை­ஞர்  – முதல்­வர் ஸ்டாலின் மூவ­ரின் திரா­விட மாடல் ஆட்­சி­யின் சிறப்பு</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">படி அரி­சித் திட்­டத்­தால் மக்­கள் பசி தீர்த்த அறி­ஞர் அண்ணா ஆட்சி</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">பேர­றி­ஞர் அண்ணா பதவி ஏற்ற 1967 ஆம் ஆண்டு, தமி­ழ­கத்­தில் அரி­சிப் பஞ்­சம். ஆட்சி அமைத்த தும், மக்­கள் உடல் நலம் காக்க, ஒரு ரூபாய்க்கு ஒரு படி அரி­சித் திட்­டத்தை கொண்டு வந்­தார். இதுவே தமி­ழ­கத்­தில் மட்­டு­மின்றி, இந்­திய அனைத்து மாநி­லங்­க­ளி­லும் மக்­கள் பசி தீர்த்த ஓர் ஆட்சி இந்­திய நாட்­டில் முதல் முத­லாக மலர்ந்­த­தற்கு சாட்சி. இதை அறிந்த எம்­ஜி­ஆர், “படி அரிசி கிடைக்­கும் இக்­கா­லத்­திலே நாங்­கள் படி ஏறி பிச்சை கேட்க மாட்­டோம்” என்ற பொரு­ளில் ஒரு திரைப்­ப­டத்­தில் பாடி­யது அனை­வ­ரும் அறிந்த செய்தி. மேலும், புன்­செய் நிலங்­க­ளுக்­கான வரி ரத்து, குடிசை வீடு­க­ளுக்கு தீ பிடிக்­காத கூரை, சீர்­தி­ருத்­தத் திரு­ம­ணங்­கள் அனைத்­தும், அண்­ணா­வின் ஆட்­சிக் காலத்­தில் நிறை­வேற்­றப்­பட்ட திரா­விட மாடல் மக்­கள் நலத் திட்­டங்­க­ளா­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">ஒரு ரூபாய்க்கு ஒரு படி அரி­சித் திட்­டம் இன்­றைய தமி­ழர்­க­ளுக்­குத் தெரி­விப்­பது என்ன? அண்ணா பத­வி­யேற்ற அன்றே திரா­விட மாடல் கொள்­கை­க­ளுக்­கான அடித்­த­ள­மிட்­டார் என்­ப­தைத் தவிர வேறு என்ன?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10">திரா­விட மாடல் தலை­வர் பேர­றி­ஞர் அண்­ணா­வின் மாபெ­ரும் சாதனை</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">மெட்­ராஸ் ஸ்டேட் (Madras State) என இருந்த மாநி­லப் பெயரை ‘தமிழ்­நாடு’ எனப் பெயர் மாற்றி, ஜன­வரி 14, 1969 அன்று அதி­கா­ரப்­பூர்­வ­மாக அறி­வித்­த­வர் பேர­றி­ஞர் அண்ணா. இதற்கு முன்­ன­தாக, ஜூலை 18, 1967-60 இதற்­கான தீர்­மா­னம் சட்­ட­ச­பை­யில் ஒரு­ம­ன­தாக நிறை­வேற்­றப்­பட்­டது. தமிழ்­நாடு பெயர் சூட்­டும் விழா­வில் அண்ணா தெரி­வித்த செய்­தி­களை இன்­றைய தமிழ் மக்­கள் அறிய வேண்­டு­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">“நமது மாநி­லத்­திற்கு ‘தமிழ்­நாடு’ என்ற பெயர் கிடைத்­தி­ருப்­ப­தை­யொட்டி இந்த விழா நடை­பெ­று­கிற நேரத்­தில், என் உடல் நலக்­கு­றை­வால், இந்த விழா­விற்கு வரக்­கூ­டாது, என்று என்­னு­டைய மருத்­து­வர்­கள் - குடும்­பத்­தி­னர் - தம்­பி­மார்­கள் எல்­லாம் தடுத்­தார்­கள். ஆனால், அதை­யெல்­லாம் மீறி நான் வந்­தி­ருக்­கி­றேன் என்­றால், தமிழ் நாட்­டிற்கு ‘தமிழ்­நாடு’ என்று பெயர் கிடைத்­தி­ருக்­கும் இந்த விழா­வில் நான் கலந்­து­கொள்­ள­வில்லை என்­றொல், என்­னு­டைய உடல் இருந்து எந்­தப் பய­னும் இல்லை. அந்த உணர்­வோ­டு­தான் நான் இந்த விழா­வில் பங்­கேற்க வந்­தி­ருக்­கி­றேன்”. தமிழ்­நாடு என அண்ணா பெயர் சூட்­டி­யது தமி­ழக மக்­கள் யாரும் மறக்க இய­லாத மாபெ­ரும் சாதனை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10">தமி­ழக விவ­சா­யி­க­ளுக்­குத் தடை­யில்லா மின்­சா­ரத்தை கட்­ட­ண­மின்றி வழங்­கிய கலை­ஞர்</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10"> 
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">பேர­றி­ஞர் அண்­ணா­விற்­குப் பிறகு, தமி­ழக முதல்­வ­ராக முத்­த­மிழ் அறி­ஞர் கலைஞர் பதவிஏற்­றார். தமி­ழ­கத்­தில் விவ­சா­யப் புரட்­சி­யைத் துவக்க விரும்பி, நில நீரைப் பயன்­ப­டுத்­தும் விவ­சா­யி ­க­ளுக்கு தங்கு தடை இன்றி கட்­ட­ண­மில்லா மின்­சா­ரத்தை வழங்கி விவ­சா­யப் பரப்­ப­ள­வை­யும் விவ­சாய உற்­பத்­தி­யை­யும் பெருக்­கி­னார். இதன் சிறப்பு என்ன? ஒரு விவ­சாயி கூட தடை­யில்லா கட்­ட­ண­மில்லா மின்­சா­ரம் வழங்க அர­சைக் கேட்­க­வில்லை. அதன் பிறகு விவ­சா­யம் மழை இன்­மை­யி­னால் பாதிக்­கப்­ப­டும் ஆண்­டு­க­ளில் விவ­சா­யக் கட­னாக விவ­சா­யி­கள் வாங்­கிய கடன் முழு­வ­து­மாக அரசே ஏற்­றது. இவ்­வாறு, அண்­ணா­வின் மறை­விற்­குப் பின்பு கலை­ஞர் தலை­மை­யி­லான தி.மு.க. அர­சின் ஆட்­சி­யில் தமிழ்­நாடு உண­வுத் தேவை­யில் தன்­னி­றைவு பெற்று, குஜ­ராத் மாநில அரி­சிப் பஞ்­சத்­திற்கு உத­வும் வகை­யில் இருந்தது. இச்­செய்தி இன்­றைய இந்­திய ஒன்­றி­யத் தலைமை அமைச்­சி­ரு க்­குத் தெரி­யுமா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10">இந்­திய அள­வில் கடைப்­பி­டிக்­கும் முன்­னோ­டித் திட்­டங்­களை வழங்­கிய கலை­ஞர்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">மனி­தர்­களை மனி­தனே இழுத்­துச் செல்­லும் வகை­யி­லான கைரிக்­சாக்­களை ஒழித்­தார். குடி­சை­க­ளில் வாழ்­வோ­ருக்கு நிரந்­தர வீடு­கள் கட்­டித் தரு­வ­தற்­கா­கக் குடிசை மாற்று வாரி­யம் என்ற அமைப்பை அமைத்து பெரு­ந­க­ரங்­க­ளில் குடி­சை­கள் அகற்­றப்­பட்டு, அங்கு வாழும் மக்­க­ளுக்கு அடுக்­கு­மாடி வீடு­கள் கட்­டித் தரப்­பட்­டன. இத்­திட்­ட­மும் இந்­திய அள­வில் முன்­னோ­டித் திட்­ட­மா­கும். அரசு நிகழ்ச்­சி­க­ளின் தொடக்­கத்­தில் தமிழ்த்­தாய் வாழ்த்து, பார்­வை­யற்­றோ­ருக்கு அறு­வைச் சிகிச்சை செய்து கண்­ணா­டி­கள் வழங்­கும் கண்­ணொ­ளித் திட்­டம், பிச்­சைக் காரர்­கள் மற்­றும் தொழு­நோ­யா­ளி­க­ளின் மறு­வாழ்­வுக்­காக இர­வ­லர் இல்­லங்­கள் அமைத்­தல், இந்­தி­யா­வி­லேயே முதன்­மு­றை­யாக கோவை­யில் வேளாண் பல்­க­லைக்­க­ழ­கம், பிற்­ப­டுத்­தப்­பட்ட சமு­தா­யத்­தி­ன­ருக்­கென தனி அமைச்­ச­ரவை, ஆகி­ய­வற்­றைத் துவக்­கி­ய­தும் கலை­ஞர் இன்றி வேறு யார்? இவை அனைத்­தும் மக்­கள் நலத்­திட்­ட­மின்றி வேறு என்ன?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">கலை­ஞர் முதல் முத­லாக மக்­கள் கேட்­கா­ம­லேயே வழங்­கிய கலர் தொலைக்­காட்­சிச் பெட்டி இன்­றும் இயங்­கு­கி­றது. இத­னால் மக்­க­ளின் பொது அறிவு வளர்ந்­தது. கலை­ஞர் தமிழ் மக்­க­ளுக்­குப் பாச­மு­டன் வழங்­கிய மக்­கள் நலத்­திட்­டங்­களை இன்­னும் அடுக்­க­லாம். அதற்கு இக்­கட்­டு­ரை­யில் இடம் போதாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10">இந்­திய நாட்­டின் அனைத்து மாநில முதல்­வர்­க­ளும் இந்­திய சுதந்­திர நாளில் கொடி­யேற்­றும் உரி­மையை வாங்­கித் தந்­த­வர் கலை­ஞர்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">சுதந்­திர தினம், குடி­ய­ரசு தினம் ஆகிய நாட்­க­ளில் மாநில ஆளு­நர்­களே தேசி­யக் கொடியை ஏற்­றும் உரி­மை­யு­டை­ய­வர்­க­ளாக இருந்­த­னர். “இந்­திய அள­வில் சுதந்­திர தினத்­தில் பிர­த­ம­ரும், குடி­ய­ரசு தினத்­தில் குடி­ய­ர­சுத் தலை­வ­ரும் கொடி­யேற்­றும் உரி­மை­யு­டை­ய­வர்­க­ளாக இருக்­கும்­போது, மாநி­லங்­க­ளில் மக்­க­ளால் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்ட அர­சுக்­குத் தலைமை வகிக்­கும் முதல்­வர்­க­ளுக்கு கொடி ஏற்­றும் உரிமை வழங்­கப்­பட வேண்­டும்’ என்று குரல் கொடுத்­த­வர் கலை­ஞர். அவ­ரது குரல் குரல் ஓங்கி ஒலித்து, 1972-ஆம் ஆண்டு சுதந்­தி­ரத்­தின் வெள்ளி விழா­வை­யொட்டி இந்­தி­யா­வின் அனைத்து மாநி­லங்­க­ளி­லும் சுதந்­திர தினத்­தில் அந்­தந்த மாநில முதல்­வர்­கள், தலை­மைச் செய­ல­கத்­தில் கொடி­யேற்­று­வ­தற்கு ஒன்­றிய அரசு அனு­மதி அளித்­தது. இந்த உரி­மை­யைப் பெற்­றுத் தந்­த­வர் கலை­ஞர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">இந்­திய நாட்­டின் அனைத்து மாநில முதல்­வர்­க­ளுக்­கும் இந்­திய சுதந்­திர நாளில் கொடி­யேற்­றும் உரி­மையை வாங்­கித் தந்­த­வர் கலை­ஞர். இந்த அரிய செய­லுக்கு எந்த ஒரு முதல்­வ­ரா­வது, குறிப்­பாக தமி­ழக எதிர்க்­கட்சி முதல்­வர் இவ­ருக்கு நன்றி தெரி­வித்­தது உண்டா? சிந்­திப்­போம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10">முதல்­வர் மு.க.ஸ்டாலின் திரா­விட மாடல் அர­சின் உல­கம் வியக்­கும் திட்­டங்­கள்</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">தமி­ழக முதல்­வர் மு.க.ஸ்டாலின் தலை­மை­யி­லான அரசு, “திரா­விட மாடல்” ஆட்சி கல்வி, மருத்­து­வம், பெண்­கள் மேம்­பாடு மற்­றும் உள்­கட்­ட­மைப்­பில் கவ­னம் செலுத்­து­கி­றது. கலை­ஞர் மக­ளிர் உரி­மைத் தொகை மாதம் ரூபாய் 2000, புது­மைப் பெண் திட்­டம், காலை உண­வுத் திட்­டம் எட்­டாம் வகுப்பு மாண­வர்­கள் வரை, அர­சுப் பள்­ளி­யில் படித்து உயர்­கல்வி பயி­லும் மாண­வி­க­ளுக்கு மாதம் ரூபாய் 1,500. பெண்­க­ளுக்கு இல­வ­சப் பேருந்­துப் பய­ணம், தொற்றா நோய்­க­ளுக்கு வீடு தேடிச் சென்று சிகிச்சை அளித்­தல், விபத்து நடந்த 48 மணி நேரத்­திற்­குள் இல­வச அவ­ச­ரச் சிகிச்சை. வறு­மைக் கோட்­டிற்­குக் கீழ் உள்ள, ஆத­ர­வற்­றோர் மற்­றும் மாற்­றுத்­தி­ற­னா­ளி­க­ளுக்­கான சிறப்பு நலத்­திட்ட உத­வி­கள். மூவ­லூர் ராமா­மிர்­தம் அம்­மை­யார் நினைவு திரு­மண நிதி­யு­தவி, முதி­யோர் மற்­றும் விதவை ஓய்­வூ­தி­யம், அர­சுப் பள்­ளி­க­ளில் கல்வி பயின்ற மாண­வர்­க­ளுக்கு மருத்­து­வப் படிப்­பில் 7.5% உள்­ஒ­துக்­கீடு, புதிய தொழில் முத­லீ­டு­களை ஈர்த்­தல், ‘உங்­க­ளு­டன் ஸ்டாலின்’ போன்ற சிறப்பு திட்டங்கள் முகாம்­கள் மூலம் அர­சின் சேவை­கள் நேர­டி­யாக மக்­க­ளின் வீடு தேடி வழங்­கப்­ப­டு­கின்­றன. மற்­றும் மக்­க­ளைத் தேடி மருத்­து­வம் போன்­றவை மக்­க­ளின் வாழ்க்­கைத் தரத்தை உயர்த்­தும் முக்­கிய திட்­டங்­க­ளா­கும். நான் முதல்­வன் திட்­டத்­தில் தமி­ழ­கத்­தில் 2025 ஆம் ஆண்­டில் மட்­டும் 57 பேர், இந்­தி­யக் குடி­யி­யல் பணி­கள் தேர்­வில் (UPSC Exam) வெற்றி பெற்­றுள்­ள­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10">முதல்­வர் மு.க.ஸ்டாலின் திரா­விட மாடல் அர­சின் வியத்­தகு மனித நேய­மும் மக்­கள் மேல் உள்ள பாச­மும்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">கொரோனா நோய் சம­யத்­தில் தமி­ழ­கத்­தில் அ.தி.­மு.க. ஆட்சி புரிந்­தது. அப்­பொ­ழுது மக்­க­ளுக்கு வரு­மா­னம் இல்லை. இதை அறிந்த அப்­போ­தைய எதிர்க்­கட்­சித் தலை­வர் ஸ்டாலின், ஒவ்­வொரு குடும்­பத்­திற்­கும் 5000 ரூபாய் வழங்க வேண்­டும் என அ.தி.­மு.க. முத­ல­மைச்­ச­ரி­டம் தெரி­வித்­தார். இவ­ரின் கருத்தை அரசு ஏற்­க­வில்லை. அதற்கு அடுத்து தி.மு.க. அர­சின் முதல்­வ­ராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்ற சம­யத்­தி­லும் கொரோனா நோய் தொடர்ந்­தது. இவர் பதவி ஏற்­ற­தும், ஒவ்­வொரு குடும்­பத்­திற்­கும் 5000 ரூபாயை இரண்டு தவ­ணை­யாக வழங்­கி­னார். இச்­செய்தி மக்­க­ளுக்கு அறி­விப்­பது என்ன? முதல்­வர் ஸ்டாலி­னின் மனி­த­நே­ய­மும் மக்­க­ளின் மேல் உள்ள பாச­மும் இன்றி வேறு என்ன? சிந்­திப்­போம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10">தமி­ழ­கத்­தின் பன்­மு­கத்­தன்மை வளர்ச்­சிக்கு வித்­திட்ட முதல் தமி­ழக முதல்­வர் மு. க. ஸ்டாலின்</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">பொரு­ளா­தார வளர்ச்சி: 2024-25 ஆம் ஆண்­டில், தமிழ்­நாடு 11.19 விழுக்­காடு (31.19 லட்­சம் கோடி ரூபாய்) பொரு­ளா­தார வளர்ச்­சி­யைப் பதிவு செய்து, இந்­தி­யா­வின் மிகச் சிறந்த 14 ஆண்­டு­க­ளில் இல்­லாத அள­வுக்கு இரட்டை இலக்­கப் பொரு­ளா­தார வளர்ச்­சியை எட்­யுள்­ளது. உற்­பத்­தித் துறை சரா­சரி வளர்ச்சி: 9.4 விழுக்­காடு, தொழில்: இந்­தி­யா­வின் மொத்த உற்­பத்­தித் துறை­யில் (Manufacturing GDP) 12.7 விழுக்­காடு பங்­க­ளிப்­பு­டன் தமிழ்­நாடு முத­லி­டத்­தில் உள்­ளது. தொழில்­துறை: 40,000-க்கும் மேற்­பட்ட தொழிற்­சா­லை­க­ளு­டன், உற்­பத்தி மற்­றும் ஜவுளி, ஆட்­டோ­மொ­பைல், மின்­ன­ணுப் பொருட்­கள் உற்­பத்­தி­யில் சிறந்து விளங்­கு­கி­றது. ஒட்­டு­மொத்த வளர்ச்சி: வெறும் 6 விழுக்­காடு மனித வளத்­து­டன், இந்­தி­யா­வின் மொத்த உள்­நாட்டு உற்­பத்­தி­யில் (GDP) சுமார் 9.21 விழுக்­காடு பங்­க­ளிப்பை தமிழ்­நாடு வழங்­கு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10">தமி­ழ­கத்­தில் தனி நபர் வரு­மா­னம் இந்­தி­யாவை விட அதிக அள­வில் இருப்­ப­தற்கு முக்­கிய கார­ணம் முதல்­வர் ஸ்டாலின் என்­பதை தமி­ழக மக்­கள் அறி­வர்</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">தமி­ழ­கத்­தின் தனி­ந­பர் வரு­மா­னம் ரூ. 2,42,339 (2021-–22) இலி­ருந்து ரூ. 3,61,619 (2024-–25) இந்­திய மைய வங்­கி­யின் 2024-25 புள்­ளி­வி­வ­ரக் கையேட்­டின்­படி உயர்ந்து, 49.22% வளர்ச்­சி­யைப் பதிவு செய்து, இந்­தி­யா­வின் முக்­கிய மாநி­லங்­க­ளில் முத­லி­டத்­தில் உள்­ளது. 2023-–24 இல், தமி­ழ­கத்­தின் தனி­ந­பர் வரு­மா­னம் ரூ. 2.78 லட்­ச­மாக இருந்­தது, இது தேசிய சரா­ச­ரி­யான ரூ. 1.69 லட்­சத்தை விட 1.64 மடங்கு அதி­கம். தமி­ழ­கத்­தில் தனி நபர் வரு­மா­னம் இந்­தி­யாவை விட அதிக அள­வில் இருப்­ப­தற்கு முக்­கிய கார­ணம் ஒருங்­கி­ணைந்த வளர்ச்சி. திரா­விட மாடல் அரசு வழங்­கிய மக்­கள் நல நிதித் திட்­டங்­க­ளின் ஆதா­ரத்­தைப் பயன்­ப­டுத்தி ஒருங்­கி­ணைந்த வளர்ச்­சியை தமி­ழ­கம் முதன் முத­லாக எட்­டி­யது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10">அறி­ஞர் அண்­ணா­வும், கலை­ஞ­ரும், முதல்­வர் ஸ்டாலி­னும் தமி­ழ­கத்தை ஆட்சி புரி­யாது இருந்­தி­ருந்­தால் இன்று தமி­ழ­கம் ஒரு இந்தி மொழி மாநி­ல­மாக மாறி இருக்­கும்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">பண்­டி­தர்­க­ளுக்கு மட்­டுமே புரிந்த தமிழை, பாம­ர­ரும் படித்­துப் புரிந்­து­கொள்­ளும் வகை­யில், எதுகை, மோனை நயத்­து­டன் கூடிய எளி­மை­யான, எளி­மை­யான, ஆவே­ச­மான புதிய உரை­ந­டையை உரு­வாக்­கி­னார் அறி­ஞர் அண்ணா. இந்­தித் திணிப்­பைத் தடுத்து, தமிழ் மற்­றும் ஆங்­கி­லம் என்ற இரு­மொ­ழிக் கொள்­கையை வலி­யு­றுத்தி, தாய்­மொ­ழி­யான தமி­ழைப் பாது­காத்­தார். துறை­தோ­றும் தமிழ் என்ற கொள்­கை­யு­டன், அரசு அலு­வ­ல­கங்­க­ளில் தமிழ்ப் பயன்­பாட்டை ஊக்­கப்­ப­டுத்­தி­னார். அண்­ணா­வின் மேடைப் பேச்­சு­கள் மற்­றும் எழுத்­துக்­கள் தமிழ் மொழியை ஒரு ஆக்­கப்­பூர்­வ­மான, சம­கா­லத் தேவை­க­ளுக்கு ஏற்ற கரு­வி­யாக மாற்­றி­னார். இன்று தமி­ழர்­கள் தமிழ் மொழி­யில் சர­ள­மா­கப் பேசு­வ­தற்­கும் எழு­து­வ­தற்­கும் வித்­திட்­ட­வர் பேர­றி­ஞர் அண்ணா இன்றி வேறு யார்? அண்­ணா­வும் கலை­ஞ­ரும், குறிப்­பாக முதல்­வர் ஸ்டாலி­னும் தமி­ழ­கத்தை ஆட்சி புரி­யாது இருந்­தி­ருந்­தால், இன்று தமி­ழ­கம் ஒரு இந்தி மொழி மாநி­ல­மாக மாறி இருக்­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10">திரா­விட மாடல் அர­சின் திட்­டங்­களை மாற்­றுக் கருத்­து­டைய தமி­ழக கட்­சி­க­ளும் பிற மாநி­லங்­க­ளும் கடைப்­பி­டிக்­கும் கார­ணம் என்ன?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">தமி­ழக அர­சின் பன்­மு­கத்­தன்மை வளர்ச்­சியை அறிந்தே, தமி­ழ­கத்­தில் உள்ள அனைத்­துக் கட்­சி­க­ளும், பிற மாநி­லங்­க­ளில் உள்ள அனைத்து கட்­சி­க­ளும் திரா­விட மாடல் அர­சின் கொள்­கை­க­ளைக் கடைப்­பி­டிக்­கக் துவங்கி விட்­டன என்­பது உல­கம் அறிந்த செய்தி. எடுத்­துக்­காட்­டாக மகா­ராஷ்­டிரா மாநி­லத்­தில் இக்­கொள்­கை­க­ளைப் பயன்­ப­டுத்யே பிஜேபி தன்­னு­டைய ஆட்­சி­யைத் தக்க வைத்­துள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10">ஒன்­றிய அர­சும் அடுத்த பாரா­ளு­மன்­றத் தேர்­த­லில் திரா­விட மாடல் கொள்­கை­க­ளைக் கடைப்­பி­டிக்­கும் கட்­டா­யம் ஏற்­பட்­டுள்­ளது</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">இத­னால் நாம் அறி­வது என்ன? அடுத்து அமை­ய­வி­ருக்­கும் ஒன்­றிய அரசு, திரா­விட மாடல் அர­சின் மக்­கள் நலத்­திட்­டங்­க­ளைப் பயன்­ப­டுத்­தியே வெற்றி பெற இய­லும் என்­ப­த­னால், இவற்­றைத் தாங்­கள் மக்­க­ளுக்கு வழங்­கு­வோம் எனும் உறுதி மொழி­யைத் தங்­கள் தேர்­தல் அறிக்­கை­யில் தெரி­விக்­கும் கட்­டா­யம் ஏற்­ப­டும். இதற்­கு­  எடுத்­துக்­காட்டு என்ன? இப்­பொ­ழுது நடக்­கும் அஸ்­ஸாம் மேலும் மேற்கு வங்­கா­ளம் ஆகிய இரு மாநி­லங்­க­ளின் தேர்­தலே எடுத்­துக்­காட்டு. அஸ்­ஸாம்  மாநில பா.ஜ.க. தேர்­தல் அறிக்­கை­யில், ஒன்­றி­யப் பொரு­ளா­தார அமைச்­சர், ஒவ்­வொரு குடும்­பத் தலை­விக்­கும் ரூபாய் 3000 மாதம் வழங்­கு­வ­தா­க­வும், மேற்கு வங்­கத்­தில் இன்­றைய ஒன்­றிய உள்­துறை அமைச்­சர் இதே அளவு தொகையை மேற்­கு­வங்க ஒவ்­வொரு குடும்­பத் தலை­விக்­கும் தரு­வ­தா­க­வும் தங்­கள் தேர்­தல் அறிக்­கை­யின் வாயி­லாக மக்­க­ளி­டம் உறு­தி­மொழி அளித்­துள்­ள­னர் என்­பதை நாம் அறிய வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">இதில் வேடிக்கை என்­ன­வென்­றால், எந்த ஒரு இன்­றைய ஒன்­றிய அர­சின் தலைமை அமைச்­சர் திரா­விட மாடல் அர­சின் மக்­கள் நலத்­திட்­டங்­களை இல­வ­சம் எனத் தெரி­வித்­தாரோ, அதே</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">அர­சின் இரு மூத்த அமைச்­சர்­கள், தற்­பொ­ழுது, திரா­விட மாடல் மக்­கள் நலத்­திட்­டங்­களை இந்த இரு மாநி­லங்­க­ளின் மக்­க­ளுக்கு வழங்­கு­வோம் என உறு­தி­மொழி எடுத்­தி­ருக்­கி­றார்­கள். இப்­பொ­ழு­து­தான் இவர்­க­ளுக்கு “மாற்­றான் தோட்­டத்து மல்­லி­கைப் பூவும் மணக்­கும்” எனும் உண்மை தெரிந்­தி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">இப்­ப­டிப்­பட்ட தாய்ப் பாச ஆட்­சி­யைத் தமி­ழக மக்­கள் நடப்பு 2026 ஆம் ஆண்டு பொதுத் தேர்­த­லில் வெற்றி பெற ஏற்­க­னவே முடி­வெ­டுத்து விட்­ட­னர் என்­ப­தற்கு இச்­செய்­தி­களே மாபெ­ரும் எடுத்­துக்­காட்டு.தி.மு.க.  வெல்­லும் எனும் மக்­க­ளின் தொடர் கருத்­துக்­க­ணிப்பே இதற்கு ஆதா­ரம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10">தமி­ழ­கத்­தில் நடக்க இருக்­கும் தேர்­தல் ஒரு இரண்­டா­வது சுதந்­தி­ரப் போராட்­டம் என்­பதை மக்­கள் அறி­வது அவ­சி­யம் ஏன்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">இந்­திய நாடு 1947 ஆம் ஆண்­டில் சுதந்­தி­ரம் அடைந்­தது என்­பது நாம் அறிந்த செய்தி. ஒரு நாட்­டின் சுதந்­தி­ரத்­திற்கு எந்த அளவு மக்­கள் உழைக்க வேண்­டுமோ அந்த அளவு தமி­ழக மக்­கள் ஒருங்­கி­ணைந்து பணி­யாற்றி தாய்ப் பாச­மிக்க இந்த ஆட்­சியை நிலைக்க வைக்­கப் பாடு­பட வேண்­டும். இந்த அளவு உழைத்­தால் தான், தமி­ழ­கத்­திற்கு இரண்­டா­வது சுதந்­தி­ரத்­தைப் பெற்­றுத்­தந்த பெரு­மையை நாம் அடைய முடி­யும். இச்­செ­ய­லால் மட்­டுமே திரா­விட மாடல் அர­சின் எதிர்­கால மக்­கள் நலத்­திட்­டங்­களை பயன்­ப­டுத்­திச் செழிப்­பாக வாழ இய­லும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10">“பிறப்­பொக்­கும் எல்லா உயிர்க்­கும்” “யாதும் ஊரே யாவ­ரும் கேளிர்” எனும் இரு தமிழ் மண்­ணின் கொள்­கை­க­ளுக்கு முற்­றி­லும் எதி­ரான கொள்­கை­களை தமி­ழ­கத் திரா­விட மாடல் ஆட்­சிக்கு எதி­ரான சில கட்­சி­கள் பரப்­பு­வ­தையே தொழி­லா­கக் கொண்­டுள்­ள­னர்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">இவ்­வாறு நான் தெரி­விப்­ப­தற்­குக் கார­ணம் என்ன? தாய்ப்­பாச ஆட்சி வழங்­கிய அனைத்­துச் சலு­கை­க­ளை­யும் தொடர்ந்து அனு­ப­வித்து வரும் தமி­ழர் சிலர், அவற்றை மறந்து, கூடா நட்­பு­டன் தாயையே பழிக்­கும் அள­வுக்கு மாற்­றப்­பட்­டுள்­ளார்­கள். ஒற்றை ஆட்சி முறை, ஒரு­வரே தலை­வர், அனை­வ­ருக்­கும் ஒரு வகை உணவு, ஒற்றை மொழி, ஒரே தெய்­வம், ஒரே மதம், ஒரே நிற­மு­டைய உடை ஆகிய, 21 ஆம் நூற்­றாண்­டுக்­குத் தேவை­யற்ற கொள்­கை­களை உடை­ய­வர்­க­ளி­டம் இவர்­கள் தற்­பொ­ழுது பழகி அவர்­கள் சொற்­க­ளைக் கேட்டு அதன்­படி நடக்க ஆரம்­பித்து விட்­டார்­கள். இவர்­க­ளின் இச்­செ­யல்­கள் அனைத்­தும், திரா­விட தமிழ் மண்­ணின், தமி­ழர்­க­ளின், “பிறப்­பொக்­கும் எல்லா உயிர்க்­கும்” “யாதும் ஊரே யாவ­ரும் கேளிர்” கொள்­கை­க­ளுக்கு முற்­றி­லும் எதி­ரான கொள்­கை­கள். இவர்­கள் இந்த இரு தமிழ் மண் கடைப்­பி­டிக்க மறந்து விடு­வார்­களோ என, கொள்­கை­க­ளைக் கடைப்­பி­டிக்­கும் தமி­ழர்­க­ளு­டன் இணைந்து நானும் வருந்­து­கி­றேன். இவர்­கள் “மாற்­றான் தோட்­டத்து மல்­லி­கைப் பூவும் மணக்­கும்” எனும் அறி­ஞர் அண்ணா தெரி­வித்த சொற்­றொ­ட­ரை­யும் மறந்­தா­லும் மறக்­க­லாம். “பிறப் பொக்­கும் எல்லா உயிர்க்­கும்” எனும் தமிழ் மண்­ணின் திரு­வள்­ளு­வர் கொள்­கை­யை­யும் தமிழ் மக்­கள் மறந்து விடு­வார்­களோ?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10">தமி­ழ­கத்­தில் தேர்­தல் நடக்­கும் சம­யத்­தில் அதி­கா­ரி­களை மாற்­றும் அவ­லம் தெரி­விப்­பது என்ன?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">தமி­ழ­கச் சட்­டப்­பே­ர­வைத் தேர்­தலை நியா­ய­மா­க­வும், சுதந்­தி­ர­மா­க­வும் நடத்த, தமி­ழக அதி­கா­ரி­கள் மாற்­றம் என தேர்­தல் ஆணை­யம் தெரி­வித்­துள்­ளது. இதன் கார­ண­மாக மாற்­றப்­பட்­ட­வர்­கள் உள்­து­றைச் செய­லா­ளர் தீரஜ்­கு­மார், தலை­மைச் செய­லர் முரு­கா­னந்­தம், பொறுப்பு டிஜி­பி­யாக இருந்த வெங்­கட்­ரா­மன், சென்னை காவல் ஆணை­ய­ராக இருந்த அருண். மாற்­றப்­பட்­டுள்ள தீரஜ்­கு­மா­ருக்கு தேர்­தல் தொடர்­பான எந்த பணி­க­ளை­யும் ஒதுக்­கக் கூடாது என­வும் தேர்­தல் ஆணை­யம் ஆணை. இன்­னும் எத்­தனை அதி­கா­ரி­கள் மாற்­றப்­பட போகி­றார்­கள் என யாருக்­கும் தெரிய வாய்ப்­பில்லை. இதைப் போல மாற்­றுக் கட்சி ஆளும் மேற்­கு­வங்க மாநி­லத்­தி­லும் அதி­கா­ரி­கள் மாற்­றப்­ப­டு­கி­றார்­கள். தேர்­தலை நியா­ய­மா­க­வும், சுதந்­தி­ர­மா­க­வும் நடத்த வேண்­டும் எனும் செய்தி வர­வேற்­கத்­தக்­கது. இச்­செய்தி உண்மை என்­றால் ஏன் பா.ஜ.க. ஆளும் மாநி­லம்­க­ளில் ஒரு­வர் கூட மாற்­றப்­ப­ட­வில்லை, மக்­கள் கேட்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">இவை மட்­டு­மின்றி, தேர்­த­லுக்கு முன்­பாக இன்­னும் பல அவ­லங்­கள் தமி­ழ­கத்­தி­லும் நடக்க வாய்ப்­பி­ருக்­கி­றது. அவற்­றில் மிக முக்­கி­ய­மான ஒன்று- மகா­ராஷ்­டிரா, ஹரி­யானா மேலும் ஆந்­திரா மாநி­லங்­க­ளில் நடந்த வாக்­குத் திருட்டு தமி­ழ­கத்­தி­லும் அரங்­கே­ற­லாம். மக்­கள் ஓட்­டைச் சுமக்­கும் இயந்­தி­ர­மும் ஒன்­றிய அர­சின் பேச்­சைக் கேட்­க­லாம். தமிழ்­நாடு முதல்­வ­ரை­யும் மேற்­கு­வங்க முதல்­மு­றை­யும் எப்­ப­டி­யா­வது தோற்­க­டிக்க வேண்­டும் என சிலர் துடி துடிப்­பு­டன் இருக்­கின்­ற­னர். இந்த இரு மாநி­லங்­க­ளி­லும் தேர்­த­லுக்கு முன்­பும் தேர்­தல் நடக்­கும் போதும் எது­வும் நடக்­க­லாம். இவ்­விரு மாநி­லங்­க­ளும் மிகக் கவ­ன­மாக இருக்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10">தமி­ழ­கத்­தைத் தொடர்ந்து வஞ்­சிக்­கும் ஒன்­றிய அரசு</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">ஒன்­றிய அரசு ஒவ்­வொரு ஆண்­டும் ஒவ்­வொரு மாநி­லத்­திற்­கும் கல்வி நிதி, பேரி­டர் காலங்­க­ளில் ஏற்­ப­டும் நிதிச் சுமை­யைத் தடுக்க உதவி, மொழி வளர்ச்­சிக்கு நிதி ஆகி­யவை மிக முக்­கி­ய­மா­ன­தா­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">1.ஒன்­றிய அர­சுக்கு வரி­யா­கத் தமிழ்­நாடு செலுத்­தும் ஒவ்­வொரு ரூபாய்க்­கும் 29 பைசா­தான் திரும்­பக் கிடைக்­கி­றது. பா.ஜ.க. ஆளும் உத்­த­ரப் பிர­தே­சத்­திற்கு ச2.73-க்கும் அதி­க­மா­க­வும், பீகார் போன்ற மாநி­லங்­க­ளுக்கு 37 ரூபாய் திரும்­பக் கிடைக்­கி­றது. 2014 முதல் 2022 வரை ஒன்­றிய அர­சின் நேரடி வரி வரு­வா­யில் தமிழ்­நாட்­டின் பங்கு ரூ.5.16 லட்­சம் கோடி. ஆனால் வரிப் பகிர்­வாக தமிழ்­நாட்­டுக்­குக் கிடைத்­தது வெறும் ரூ.2.08 லட்­சம் கோடி.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">2.ஒன்­றிய 2024-–2025 நிதி நிலை அறிக்­கை­யில் தமிழ்­நாட்­டுக்­கான ஒரு திட்­ட­மும் இல்லை. தமிழ்­நாடு என்ற பெய­ரும் இல்லை. ஆந்­தி­ரப் பிர­தே­சத்­தின் தலை­ந­கரை உரு­வாக்க ரூ.15,000 கோடி, கோப்­பர்த்­தி­யில் தொழில் முனை­யம் என ஆந்­தி­ரா­வுக்கு நிதி வழங்­கப்­பட்­டுள்­ளது. அதே­போல பீகா­ரில் நெடுஞ்­சா­லை­களை மேம்­ப­டுத்த ரூ.26,000 கோடி, வெள்ள நிவா­ர­ணப் பணி­க­ளுக்­காக 11,500 கோடி ரூபாய் ஒதுக்­கப்­பட்­டி­ருக்­கி­றது. இதற்கு கார­ணம் என்ன? பெரும்­பான்மை இல்­லாத ஒன்­றிய அர­சைக் காப்­பாற்­று­வ­தற்­கா­கவே இந்த இரு மாநி­லங்­க­ளுக்­கும் அவர்­கள் கேட்ட நிதி­யைத் தாண்டி நிதி வழங்­கப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">3. தமிழ்­நாட்­டில் கடந்த 2014-2025 பத்து ஆண்­டு­க­ளில் ஏற்­பட்ட புயல், வெள்­ளம் போன்ற கடு­மை­யான இயற்­கைப் பேரி­டர், இழப்­பு­க­ளுக்­குத் தமிழ்­நாடு அரசு கோரிய ரூ.24,679.77 கோடி நிதி­யில், தற்­போ­து­வரை வெறும் ரூ.4,136 கோடியை மட்­டுமே பேரி­டர் பாதிப்பு நிவா­ரண நிதி­யாக தமிழ்­நாடு பெற்­றுள்­ளது. இதே கால­கட்­டங்­க­ளில் பா.ஜ.க. ஆளும் மகா­ராஷ்­டிரா, உத்­த­ரப்­பி­ர­தே­சம் மற்­றும் மத்­தி­யப்­பி­ர­தே­சம் போன்ற மாநி­லங்­கள் ஒவ்­வொன்­றுக்­கும் ரூ.24,000 கோடிக்­கும் அதி­க­மாக நிதியை அள்­ளிக் கொடுத்­துள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">4. மொழி­க­ளுக்கு நிதி ஒதுக்­கு­வ­தி­லும் ஒன்­றிய அரசு பார­பட்­சம்: 10 10 ஆண்­டு­க­ளில் சமஸ்­கி­ரு­தத்­துக்கு ரூ.2,869 கோடி; தமி­ழுக்கு வெறும் ரூ.100 கோடி.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">5.கல்வி பொதுப்­பட்­டி­ய­லில் இடம் பெற்­றி­ருந்­தா­லும் தமிழ்­நாட்­டுக்கு 2024-–25 ஆம் நிதி­யாண்­டிற்­கான சுமார் 72,152 கோடிக்­கும் அதி­க­மான நிதி இது­வரை ஒன்­றிய அரசு வழங்­க­வில்லை. மும்­மொ­ழிக் கொள்கை எதிர்ப்பு என இதற்கு ஒன்­றிய அரசு தெரி­விக்­கி­றது. இந்த நிதி மறுப்­பால், தமிழ்­நாட்­டில் 43 லட்­சத்­திற்­கும் மேற்­பட்ட மாண­வர்­கள் மற்­றும் 2 லட்­சத்­திற்­கும் அதி­க­மான ஆசி­ரி­யர்­க­ளின் பயன்­பெ­றும் திட்­டங்­கள் பாதிக்­கப்­பட்­டுள்­ளன. ஒன்­றிய அர­சின் இந்த அவ­லச் செய்­தி­களை திரா­விட மாடல் அர­சுக்கு எதி­ரான கட்­சி­கள் எப்­பொ­ழுது உண­ரப்­போ­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10">திரா­விட மாடல் அர­சுக்கு எதி­ரான தமி­ழக எதிர்க்­கட்­சி­க­ளும் தமி­ழக மக்­க­ளைத் தொடர்ந்து வஞ்­சிக்­கின்­ற­னர்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">திரா­விட மாடல் கொள்­கைத் தூண்­க­ளுக்கு எதி­ராக இயங்­கும் தமி­ழக சில எதிர்க்­கட்­சி­கள், இவை போன்ற வகை­க­ளில் ஒன்­றிய அரசு 12 ஆண்­டு­க­ளா­கத் தமி­ழ­கத்­தைத் தொடர்ந்து வஞ்­சிப்­பதை அறிந்­தும், அவற்­றின் சொந்த நல­னுக்­காக ஒன்­றிய அர­சு­டன் இணைந்து பய­ணிப்­பது எதற்­காக? இவர்­க­ளின் இச்­செ­யல்­க­ளைத் தமி­ழக மக்­கள் கண்­ணும் கருத்­து­மா­கக் கவ­னித்து வரு­கி­றார்­கள் என்­பதே இவர்­க­ளுக்­குத் தெரி­யாதா? இவர்­க­ளின் இச்­செ­யல்­க­ளுக்கு வரும் மே மாதம் நாலாம் தேதி, இந்­திய ஒன்­றிய அரசை டெல்லி பாரா­ளு­மன்­றத்­தில் தோற்­க­டித்­த­தைப் போல தமி­ழக மக்­கள் தக்க பாடம் கற்­பிப்­பார்­கள். திரா­விட மாடல் அர­சின் கொள்­கைத் தூண்­கள் மக்­க­ளுக்­குத் தொடர்ந்து வழங்­கும் நன்­மை­கள் யாவை?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">திரா­விட மாடல் என்­பது சமூக நீதி, சமத்­து­வம், ஒருங்­கி­ணைந்த வளர்ச்சி, மத்­தி­யில் கூட்­டாட்சி மாநி­லத்­தில் சுயாட்சி, மற்­றும் சுய­ம­ரி­யாதை ஆகி­ய­வற்றை அடிப்­ப­டை­யா­கக் கொண்ட கொள்­கை­யா­கும். அனைத்­துத் தரப்பு மக்­க­ளுக்­கும் சம­மான வாய்ப்­பு­கள், கல்­வி­யில் முன்­னேற்­றம், பெண்­க­ளுக்கு அதி­கா­ர­ம­ளித்­தல் மற்­றும் மாநில உரிமை, சுகா­தார மேம்­பாடு, மொழி மற்­றும் கலாச்­சா­ரப் பாது­காப்பு, மதச்­சார்­பின்மை போன்ற கொள்­கை­களை இது முன்­னி­றுத்­து­கி­றது. இது ஒரு பகுத்­த­றிவு சார்ந்த, சம­தர்ம சமூ­கத்தை உரு­வாக்­கு­வதை நோக்­க­மா­கக் கொண்­டுள்­ளது. இக் கொள்­கை­கள் வழி­யில் முதல்­வர் ஸ்டாலின் தனது அர­சாட்­சியை நேர்­மை­யாக நடத்தி வரு­கி­றார். திரா­விட மாடல் கொள்­கை­களை அரசு அமல்­ப­டுத்­தி­யதே ஒருங்­கி­ணைந்த தமி­ழக வளர்ச்­சிக்கு ஒரு மாபெ­ரும் அசைக்க முடி­யாத கார­ணம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">திரா­விட மாடல் அர­சின் முக்­கிய கொள்­கை­க­ளால் தொடர்ந்து பய­ன­டை­யும் மக்­கள், தமி­ழக முதல்­வர் ஸ்டாலின் தெரி­வித்­த­தைப் போல அவற்­றைப் புதைக்க விடு­வார்­களா இனி? ஞாயிறு கிழக்­கில் உதிக்­கும் வரை, இச்­செ­யல் தமி­ழ­கத்­தில் என்­றுமே நடக்­காது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10">நடப்பு 2026 தேர்­த­லில் திரா­விட மாடல் அரசு வென்­ற­தும் சாதிக்க வேண்­டிய ஆளு­நர் சார்ந்த முக்­கிய திட்­டம் என்ன?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">குடி­ய­ர­சுத் தலை­வ­ரால் நிய­மிக்­கப்­பட்ட ஆளு­நர் ஆர்.என். ரவி (செப்­டம்­பர் 2021 மார்ச் 2026), தமிழ்­நாட்டு மாநில அர­சின் அதி­கா­ரத்­தில் தலை­யிட்டு, அர­சி­யல் சாச­னத்­திற்­குப் புறம்­பாக 10- க்கும் மேற்­பட்ட மசோ­தாக்­களை நிறுத்தி வைத்­தல், நீட் தேர்வு மசோதா எதிர்ப்பு, அரசு தயா­ரித்த ஆளு­நர் உரை புறக்­க­ணிப்பு, பத­வி­யில் இருந்­த­ப­டியே, திமுக அர­சின் ‘திரா­விட மாடல்’ ஆட்­சி­யைக் ‘காலா­வ­தி­யான சித்­தாந்­தம்’ என்று விமர்­சித்த அர­சி­யல் கருத்­துக்­கள், கல்வி நிறு­வ­னங்­க­ளில் மதச்­சார்­பான கருத்­துக்­களை வலி­யு­றுத்­தி­யது, “நீரா­ரும் கட­லு­டுத்த நில­ம­டந்­தைக் கெழி­லொ­ழு­கும்” எனும் சட்ட சபை துவங்­கு­வ­தற்கு முன்பு இசைக்­கப்­ப­டும் தமிழ் பாடலை தமி­ழக அரசு மர­புக்கு எதி­ராக பாட விடாது தடுத்­தல், “தமிழ்­நாடு” எனும் பெயரை “தமி­ழ­கம்” என மாற்ற அறி­வு­றுத்­தல் போன்ற, இது­வ­ரை­யும் எந்த ஒரு ஆளு­ந­ரும் செய்­யாத செயலை, தமி­ழக மக்­க­ளின் வரிப்­ப­ணத்­தில் வாழ்ந்த ஆளு­நர், இந்­திய மக்­கள் அனை­வ­ரின் எதிர்ப்­பைச் சுமந்து வெளி­யே­றி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">ஏப்­ரல் 2025-ல், தமிழ்­நாடு ஆளு­நர் ஆர்.என். ரவி 10 மசோ­தாக்­களை நிறுத்தி வைத்­தது, சட்­டப்­பே­ரவை மீண்­டும் நிறை­வேற்­றிய மசோ­தாக்­க­ளைக் குடி­ய­ர­சுத் தலை­வ­ருக்கு அனுப்­பி­யது “சட்­ட­வி­ரோ­த­மா­னது” மற்­றும் “அர­சி­யல் சாச­னத்­திற்கு எதி­ரா­னது” என உச்ச நீதி­மன்­றம் ஆளு­ந­ருக்கு எதி­ராக அதி­ர­டிக் கருத்­துக்­க­ளைத் தெரி­வித்­தது. மேலும், ஆளு­நர் கால­வ­ரை­யின்றி மசோ­தாக்­களை நிறுத்தி வைக்க முடி­யாது என்­றும், மக்­க­ளாட்­சி­யில் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்ட அர­சிற்கு அதி­கா­ரம் உள்­ளது என்­றும் நீதி­மன்­றம் வலி­யு­றுத்­தி­யது.
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">திரா­விட மாடல் அரசு வெற்றி பெற்­ற­தும் முதல்­வர் ஸ்டாலின் துணை வேந்­தர்­களை நிய­மிப்­பார் பல்­க­லைக்­க­ழ­கப் பட்­ட­ம­ளிப்பு விழா­வில் இவரே பட்­டங்­களை வழங்­கு­வார்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">அர­சுக்­கும் ஆளு­ந­ருக்கு இடை­யில் நிக­ழும் சிக்­கலை தவிர்ப்­ப­தற்கு திரா­விட மாடல் அரசு சட்­ட­மன்­றத் தேர்­த­லில் வெற்றி பெற்­ற­தும் உச்­ச­நீ­தி­மன்­றத்தை அணுகி சட்­ட­ச­பை­யால் நிறை­வேற்­றப்­பட்ட திட்­டங்­களை ஆளு­ந­ருக்கு அனுப்ப வேண்­டிய தேவை­யில்லை. அனுப்ப வேண்­டிய கட்­டா­யம் இருப்­பின், அதை ஆளு­நர் 30 நாட்­க­ளில் கையெ­ழுத்­திட்டு அர­சுக்கு அனுப்ப வேண்­டும். அதற்கு அடுத்து, அரசு நிதி­யால் இயங்­கும் பல்­க­லைக்­க­ழ­கங்­க­ளின் துணை வேந்­தர்­களை முதல்­வரே நிய­மிக்க வேண்­டும். மேலும் பல்­க­லைக்­க­ழ­கங்­க­ளில் நிக­ழும் பட்­ட­ம­ளிப்பு விழா­வில் முதல்­வரே பட்­டங்­களை வழங்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10">முதல்­வர் ஸ்டாலின் புகழ் இம­ய­மலை போல என்­றும் நிமிர்ந்து நிற்­கும் நாட்­கள் வெகு தொலை­வில் இல்லை</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">ஆட்சி அமைத்­த­தும் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­டும் திட்­டங்­களை திட்­டங்­களை திரா­விட மாடல் அரசு அமல்­ப­டுத்­து­வ­தோடு, மேலே தெரி­வித்த சிக்­க­ல்களை முதல்­வர் மு.க.ஸ்டாலின் தலைமை எளி­தா­கத் தீர்க்­கும் என மக்­கள் திட­மாக நம்­பு­கி­றார்­கள். இச்­சா­த­னையை எட்­டி­னால், எதிர்­கா­லத்­தில் இந்­திய நாட்­டின் அனைத்து மாநில முதல்­வர்­க­ளும் ஆளு­நர்­க­ளும் ஒருங்­கி­ணைந்து பணி­யாற்றி அந்­தந்த மாநி­லத்­தின் வரு­வா­யைப் பெருக்கி மக்­கள் நல­மாக வாழ்­வ­தற்கு வழி காண்­பார்­கள். இச்­சா­த­னையை முதல்­வர் ஸ்டாலின் நிறை­வேற்­று­வார். அப்­பொ­ழுது, கலை­ஞர் தனக்கு மட்­டு­மின்றி, இந்­திய நாட்­டின் அனைத்து மாநில முதல்­வர்­க­ளுக்­கும் சுதந்­திர தினத்­தில் கொடி­யேற்­றும் உரி­மை­யைப் பெற்­றுத் தந்­த­தை­  போல இவ­ரு­டைய செய­லை­யும் மாநில முதல் அமைச்­சர்­கள் பாராட்­டு­வார்­கள். இது கண்­டிப்­பாக இந்­தி­யா­வில் நிகழ வேண்­டிய ஒரு செயல், கண்­டிப்­பாக நிக­ழும். இச்­சா­த­னை­யால் முதல்­வர் ஸ்டாலின் புகழ் இம­ய­மலை போலஎன்­றும் நிமிர்ந்து நிற்­கும் நாட்­கள் வெகு தொலை­வில் இல்லை!</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>