<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="25/04/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="38,69,957,1493" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="4"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Fri Apr 24 2026 23:22:00 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260425T000000+5.30" edition.name="MDU" edition.area="MDU" position.section="25042026-MDU-05" position.sequence="05" ex-ref="25042026-MDU-05.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#000000" boxBorderWeight="2">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="35">தொகுதி மறுவரையறை: பா.ஜ.க. போட்ட ‘நோ பால்!’ ஸ்டாலின் அடித்த ‘சிக்ஸர்!’</lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="81">தி.மு.க. கூட்டணியின் பெருவெற்றி உறுதியானது எப்படி?</lang>
	</hl2>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfFrame600822_05_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup600941_05_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="3" source="M5bw_05_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="4" source="M4bw_05_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="5" source="M2bw_05_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">த</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">மிழ்­நாட்டு தேர்­தல் வர­லாற்­றில் நிச்­ச­யம் வித்­தி­யா­ச­மான தேர்­தல்­தான் இது. கார­ணம் இந்த தேர்­த­லில் போட்டி யாருக்­கும், யாருக்­கும் இடை­யில் என்­ப­தி­லேயே அனைத்து தரப்­பி­ன­ருக்­கும் உடன்­பாடு இருக்­க­வில்லை. தமிழ்­நாட்­டின் ஆளும் கட்­சி­யான தி.மு.க இந்த தேர்­தல்</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">“டெல்லி அணிக்­கும், தமிழ்­நாடு அணிக்­கு­மான போட்டி”</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">என்று அறி­வித்தே தேர்­தலை சந்­திக்­கி­றது. எதிர்க் கட்­சி­யான அ.இ.அ.தி.மு.க இந்த நோக்­கினை மறுத்து, இந்த தேர்­த­லும் வழ­மை­யான தமிழ்­நாட்டு முர­ண­ர­சி­ய­லான “தி.மு.க  எதிர் அ.இ.அ.தி.மு.க” என்ற போட்­டி­தான் என்று கூறு­கி­றது. இந்த இரண்­டி­லி­ருந்­தும் மாறு­பட்டு புதி­தா­கக் கட்சி துவங்­கி­யுள்ள நடி­கர் விஜய் 
“தி.மு.க எதிர் தவெக” என்­ப­து­தான் போட்டி என்று ஓயா­மல் ஒவ்­வொரு கூட்­டத்­தி­லும் அரற்­றத் தொடங்­கி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">ஸ்டாலின் தலை­மை­யில் தொடர்ந்த தி.மு.க. வர­லாறு</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தி.மு.க-விற்கு 2018-ஆம் ஆண்டு ஸ்டாலின் தலை­மை­யேற்­ற­தி­லி­ருந்தே ஒன்­றி­யத்­தில் ஆட்­சிப் பொறுப்­பேற்­றி­ருந்த பா.ஜ.க.-வின் இந்­துத்­துவ, மீட்­பு­வாத, பாசிச அர­சி­ய­லுக்கு எதி­ராக இயங்­கு­வது என்ற உறு­தி­யான நிலை­பாட்டை எடுத்­துள்­ளார். இது திரா­விட இயக்­கத்­தின் அடி­நா­த­மான கொள்­கை­க­ளின் வர­லாற்­றுத் தொடர்ச்சி என­லாம். பார்ப்­ப­ன­ரல்­லா­தோர் அர­சி­யல், தமிழ் மொழி பண்­பாட்டு பாது­காப்பு மற்­றும் வளர்ச்சி, இரண்­டை­யும் இணைக்­கும் தமிழ் மாநில உரி­மை­கள், சுயாட்சி ஆகி­ய­வயை அனைத்­துமே பா.ஜ.க.-வின் இந்­துத்­துவ மீட்­பு­வாத பெருந்­தே­சிய நோக்­கிற்கு எதி­ரா­னவை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">உண்­மை­யில் போட்­டி­யி­டும் தொகு­தி­கள், ஏற்­க­னவே பெற்­றுள்ள வெற்­றி­கள் அடிப்­ப­டை­யில் தி.மு.க-.விற்­கும், அ.இஅ.தி.மு.க-.விற்­கும்­தான் போட்டி. ஆனால் அ.இ.அ.தி.மு.க பா.ஜ.க.-விடம் கொள்கை ரீதி­யாக சர­ண­டைந்து விட்­ட­தால்­தான் தி.மு.க. அதனை டில்லி அணி­யில் சேர்த்­து­விட்­டது. பா.ஜ.க., அ.இஅ.தி.மு.க. முக­மூடி அணிந்து வரு­கி­றது என்­ப­து­தான் அதன் வாதம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஆனால் அ.இ.அ.தி.மு.க. நாங்­கள் பா.ஜ.க.-வுடன் தேர்­தல் கூட்­ட­ணி­தான் வைத்­துள்­ளோம். கொள்கை வேறு, கூட்­டணி வேறு என்று கூறி, தி.மு.க வேண்­டு­மென்றே பா.ஜ.க. அடி­மை­யென்று எங்­க­ளைக் கூறு­கி­றது. நாங்­கள் பா.ஜ.க.-வீற்கு 27 தொகு­தி­க­ளைத்­தான் கொடுத்­துள்­ளோம். எங்­கள் தலை­மை­யில்­தான் கூட்­டணி என்று கூறி வரு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">த.வெ.க., பா.ஜ.க., -அ.இ.அ.தி.மு.க. கூட்­ட­ணியை புறக்­க­ணித்து அபத்­த­மாக தன்னை தி.மு.க-.வின் முக்­கிய எதி­ரி­யாக முன்­னி­றுத்­திக்­கொள்­வது பேசு­வ­தற்கே தகு­தி­யில்­லாத ஒன்று என்­ப­தால் தி.மு.க. தலை­வர் ஸ்டாலின் அந்­தக் கட்­சியை குறிப்­பிட்­டுப் பேசு­வதே கிடை­யாது. பெரும்­பா­லும் தி.மு.க. அந்த கட்­சியை பொருட்­ப­டுத்­து­வ­தே­யில்லை. சில சம­யங்­க­ளில் இரண்­டாம் கட்­டத் தலை­வர்­கள் சில கருத்­துக்­களை தேவை கருதி கூறு­வ­து­டன் சரி.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தி.மு.க. தன் நிலை­பாடு பா.ஜ.க., அ.இ.அ.தி.மு.க. முக­மூடி அணிந்து தமிழ்­நாட்­டில் நுழை­யப் பார்க்­கி­றது என்­பதே என்று மிகத் தெளி­வாக விளக்­கி­யுள்­ளது. பல்­வேறு மாநி­லங்­க­ளில் மாநில கட்­சி­க­ளின் முது­கி­லேறி உள்ளே நுழை­யும் பா.ஜ.க. அந்த மாநி­லத்­தின் அதி­கா­ரத்­தைக் கைப்­பற்­று­வதை நடை­மு­றை­யா­கக் கொண்­டுள்­ளது வெளிப்­ப­டை­யா­னது. மஹா­ராஷ்­டிரா, பீஹார் ஆகிய இரண்டு மாநி­லங்­க­ளும் முக்­கி­ய­மான உதா­ர­ணங்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தி.மு.க-.வின் கருத்­திற்கு முக்­கிய ஆதா­ரம் எடப்­பாடி பழ­னி­சாமி பா.ஜ.க. கொண்­டு­வந்த பல்­வேறு பிற்­போக்கு சட்­டங்­களை ஆத­ரித்­த­து­தான். காஷ்­மீர் மாநில அந்­தஸ்த்தை பறித்­ததை எதிர்க்­க­வில்லை. குடி­யு­ரிமை சீர்­தி­ருத்­தச் சட்­டத்தை ஆத­ரித்­தார். விவ­சாய சட்­டங்­களை ஆத­ரித்­தார். பின்­னர் 2024 நாடா­ளு­மன்ற தேர்­த­லில் தொகுதி பேரம் படி­யா­மல் தனித்து நின்ற போது, கூட்­டணி தர்­மத்­திற்­காக அந்த சட்­டங்­களை ஆத­ரித்­த­தா­கச் சொன்­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஆளு­நர் ரவி, பா.ஜ.க. மாநி­லத் தலை­வர் அண்­ணா­மலை ஆகி­யோர் திரா­விட கோட்­பாட்டை நிரா­க­ரித்­துப் பேசி­ய­போது, திரா­வி­டம் என்ற கருத்தே பொய்­யா­னது என்று சொன்­ன­போது எடப்­பாடி பழ­னி­சாமி வாயையே திறக்­க­வில்லை. செய்­தி­யா­ளர்­கள் கேட்­ட­போது திரா­வி­டம் குறித்­தெல்­லாம் ஆய்­வா­ளர்­க­ளி­டம்­தான் கேட்க வேண்­டும் என்று கூறி­விட்­டார்.  இவ்­வ­ளவு பல­வீ­ன­மான கொள்­கைப் பிடிப்பு கொண்­ட­வ­ராக இருப்­ப­தால்­தான் இவரை பா.ஜ.க. அடிமை என்று கூறு­வது சாத்­தி­ய­மா­னது என்­பது மட்­டு­மல்ல, அவ­சி­ய­மா­ன­தா­க­வும் மாறி­விட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">பிர­ச்சா­ரப் பாடல்: ஒளிஞ்சு வரும் பருந்து</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இதை­யெல்­லாம் மன­தில் வைத்­து­தான் தி.மு.க. இந்த தேர்­த­லுக்­கான பிரச்­சா­ரப் பாடலை உரு­வாக்­கி­யது. அதன் வரி­கள் துல்­லி­ய­மா­னவை:</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">பெரும் பெரும் பருந்து</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">வரும் வரும் ஓளிஞ்சு</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">நடிப்­பி­னைப் புரிஞ்சு</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">விரட்­டு­வோம் துணிஞ்சு</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அதா­வது பா.ஜ.க. என்­னும் பருந்து நேர­டி­யாக வரா­மல், அ.இ.அ.தி.மு.க. பின்­னால் ஒளிந்­து­கொண்டு வரு­கி­றதுஎன்­ப­து­தான் அதன் பொருள். இந்த கருத்தை 
அ.இ.அ.தி.மு.க.தொடர்ந்து மறுத்து வந்­தது. பல அர­சி­யல் விமர்சகர்­க­ளும் பழ­னி­சாமி பா.ஜ.க.-விற்கு 27 தொகு­தி­கள்­தான் கொடுத்­துள்­ளார். அது எப்­படி அடி­மைத்­த­னம் என்­றெல்­லாம் வாதம் செய்­தார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இந்த விவா­தத்தை முடித்து வைக்­கும் வித­மாக வந்­த­து­தான் தொகுதி மறு­வ­ரை­யறை சட்­டம். அத­னைச் சுருக்­க­மாக புரிந்­து­கொள்­வோம். அர­சி­ய­ல­மைப்பு சட்­டம், பத்­தாண்­டு­க­ளுக்கு ஒரு­முறை மக்­கள் தொகை கணக் ­கெ­டுப்பு நடந்து முடிந்­த­பி­றகு, புதிய மக்­கள் தொகைக்கு ஏற்­றாற்­போல நாடா­ளு­மன்ற தொகு­தி­களை அதி­க­ரித்து மறு­வரையறை செய்­ய­லாம் என்று கூறு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இந்­தியா முழு­வ­தும் குடும்­பக் கட்­டுப்­பாடு திட்­டம் அறி­மு­கப் படுத்­தப் பட்ட பிறகு ஒரு சிக்­கல் தோன்­றி­யது. அதா­வது மக்­கள் தொகை பெருக்­கத்தை கட்­டுப்­ப­டுத்­தும் மாநி­லங்­க­ளில் நாடா­ளு­மன்ற தொகு­தி­க­ளின் எண்­ணிக்கை குறை­யும் அபா­யம் தோன்­றி­யது. அப்­படி நடந்­தால் மாநி­லங்­கள் உண்­மை­யில் குடும்­பக் கட்­டுப்­பாட்டை அமல்­ப­டுத்­தா­மல், அதிக தொகு­தி­கள் பெரு­வ­தற்­காக மக்­கள் தொகையை அதி­க­ரிக்­கத் துவங்­கி­னால் அது நாட்­டுக்கே நல்­ல­தல்ல என்ற கவலை ஏற்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அத­னால் 1971- சென்­சஸ் அடிப்­ப­டை­யில் வரை­ய­றுக்­கப்­பட்ட தொகு­தி­களே 1976 முதல் 25 ஆண்­டு­க­ளுக்­குத் தொட­ரும் என முடிவு செய்­யப்­பட்­டது. அதன்­படி 543 தொகு­தி­கள் என்­பது நிலை­ப­டுத்­தப்­பட்­டது. பின்­னர் 25 ஆண்­டு­கள் முடிந்­த­போது, 2001-ஆம் ஆண்டு மீண்­டும் இன்­னொரு 25 ஆண்­டு­க­ளுக்கு இந்த நிலை நீடிக்­கப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இப்­போது அந்த கால­மும் முடிந்­து­விட்­டது. மக்­கள் தொகை பெரு­கி­விட்­டது. அத­னால் தொகு­தி­க­ளின் எண்­ணிக்­கையை அதி­க­ரிக்க வேண்­டும். அப்­போ­து­தான் உண்­மை­யான மக்­கள் பிர­தி­நி­தித்­து­வம் இருக்­கும் என்று சிலர் கரு­தி­னர். பாஜக புதிய நாடா­ளு­மன்ற கட்­டி­டத்­தில் மக்­க­ள­வை­யில் 888 உறுப்­பி­னர்­கள் உட்­கா­ரக் கூடிய வித த்தில் அரங்­கம் உரு­வாக்­கப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இதில் பிரச்­சினை என்­ன­வென்­றால் வட மாநி­லங்­க­ளில் மக்­கள் தொகை அதி­க­ரிப்­பின் சத­வீ­தம் மிக அதி­கம். தென் மாநி­லங்­க­ளில் குறைவு என்­ப­தால் மக்­கள் தொகை அடிப்­ப­டை­யில் தொகு­தி­களை வரை­ய­றுத்­தால் தென் மாநி­லங்­க­ளின் விகி­தா­சார பிர­தி­நி­தித்­து­வம் குறைந்­து­ வி­டும் என்­ப­து­தான். உதா­ர­ண­மாக 543 கொண்ட அவை­யில் தமிழ்­நாடு 39 உறுப்­பி­னர்­க­ளைக் கொண்­டுள்­ளது. இது 7.2% என்று வைத்­துக்­கொண்­டால் புதிய சபை­யில் அது 850 பேரில் 46 பேர் என்று கொண்­டால் 5.4% ஆகக் குறைந்­து­வி­டும். மக்­கள் தொகை­யைக் குறைத்­த­தற்­காக தன் அர­சி­யல் அதி­கா­ரத்தை இழப்­ப­தாக ஆகி­வி­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">பா.ஜ.க. இந்த பிரச்­சி­னையை மடை­மாற்­று­வ­தற்­காக பெண்­க­ளுக்­கான 33% இட ஒதுக்­கீட்­டைத் தரு­வதை இந்த பிரச்­சி­னை­யு­டன் இணைத்­தது. அதா­வது தொகுதி மறு­வ­ரை­யறை செய்­யும்­போது 33% தொகு­தி­கள் பெண்­க­ளுக்கு ஒதுக்­கப்­ப­டும் என்று தீர்­மா­னம் இயற்­றி­யது. அதனை அனைத்­துக் கட்­சி­க­ளும் ஏற்­றுக்­கொண்­டன. ஆனால் தொகுதி மறு­வ­ரை­யறை மக்­கள் தொகை அடிப்­ப­டை­யில் செய்­யப்­ப­டுமா என்ற அச்­சம் எழுந்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இதனை முன்­கூட்­டியே தவிர்ப்­ப­தற்­காக ஸ்டாலின் முதல்­வர்­கள் மாநாட்­டைக் கூட்­டி­னார். அதில் இப்­போ­தி­ருக்­கும் 543 தொகு­தி­களே மேலும் முப்­ப­தாண்­டு ­க­ளுக்­குத் தொட­ரும் என்று அறி­விக்­கக் கோரும் தீர்­மா­னம் நிறை­வேற்­றப்­பட்­டப் பட்­டது. பெண்­க­ளுக்­கான இட ஒதுக்­கீட்டை இப்­போ­துள்ள எண்­ணிக்கை அடிப்­ப­டை­யி­லேயே வழங்­கக் கோரி­யது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இந்த பின்­ன­ணி­யில்­தான் பா.ஜ.க. திடீ­ரென சென்ற வாரம் மூன்று புதிய மசோ­தாக்­களை அறி­மு­கம் செய்ய நாடா­ளு­மன்­றத்­தைக் கூட்­டி­யது. அதில் டிலி­மி­டே­ஷன் கமிட்­டியை அறி­விப்­பது, மொத்த தொகு­தி­களை 850 என்று வரை­யறை செய்­வது, பெண்­க­ளுக்கு 33% இட ஒதுக்­கீடு ஆகி­யவை அடங்­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இவை அனைத்­தை­யுமே பெண்­க­ளுக்­கான இட ஒதுக்­கீட்­டிற்­கான மசோ­தாக்­கள் என்று பா.ஜ.க. கூறி­ய­து­தான் மிகப்­பெ­ரிய மோசடி என­லாம். பெரும் பருந்து வரும் ஒளிஞ்சு என்ற வார்த்­தை­க­ளுக்கு ஏற்ப மக­ளிர் நலன் என்ற போர்­வை­யில் இந்­திய அர­சி­யல் கட்­டு­மா­னத்­தையே மாற்­றி­ய­மைக்க பா.ஜ.க. முயன்­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">பொங்­கி­யெ­ழுந்த முதல்­வர் ஸ்டாலின் மிகக் கடு­மை­யாக 
ஒன்­றிய அரசை எச்­ச­ரித்­தார். தமிழ்­நாடு முழு­வ­தும் அனை­வர் 
இல்­லங்­க­ளி­லும் கருப்­புக் கொடி ஏற்­றச் சொன்­னார். கருப்­புச் சட்டை அணி­யச் சொன்­னார். அவரே கருப்­புக் கொடி­யேற்றி, மசோ­தா­வின் நகலை எரித்­தார். இது மிகப்­பெ­ரிய எழுச்­சியை உரு­வாக்­கி­யது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">தொடர்ந்து காங்­கி­ரஸ் தலை­வர்­கள், பிற மாநில முதல்­வர்­க­ளு­டன் பேசி­னார். நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களை மசோ­தாக்­களை எதிர்த்து வாதிட அனுப்பி வைத்­தார். நாடா­ளு­மன்­றத்­தில் பிர­த­மர் கூச்­சமே இல்­லா­மல் இந்த மசோ­தாக்­கள் மக­ளி­ருக்­கா­னவை என்று பசப்­பி­னார். இந்த மசோ­தாக்­களை ஏற்­றுக்­கொள்­ளா­வி­டால் எதிர்­கட்­சி­கள் மக­ளி­ருக்கு எதி­ரா­னவை என்று பொருள்­ப­டும் என்று மிரட்­டிப் பார்த்­தார். ஆனால் எதிர்­கட்­சி­கள் இணைந்து நின்று இந்த மசோ­தாக்­களை முறி­ய­டித்­தன. மூன்­றில் இரண்டு பங்கு ஆத­ரவு இல்­லா­த­தால் மசோ­தாக்­கள் தோல்வி அடைந்­தன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தமிழ்­நாட்­டின் அர­சி­யல் எதிர்­கா­லத்­தைக் காக்க இவ்­வ­ளவு முக்­கி­ய­மான போர் மூண்­ட­போது பழ­னி­சாமி ஒன்­றிய பா.ஜ.க. அரசை ஆத­ரித்­தார். வாய் வார்த்­தை­யாக அமித் ஷா எல்லா மாநி­லங்­க­ளுக்­கும் 50% இருக்­கை­கள் அதி­க­ரிக்­கும் என்று சொன்­னதை அனை­வ­ரும் நம்ப வேண்­டும் என்­றார். அவர்­கள் கொண்­டு­வந்த மசோ­தா­வில் அப்­ப­டி­யொரு கருத்தே இல்­லையே என்­றால், அமித் ஷா சொல்­வதே “வேத­வாக்கு” என்று தன் அடிமை விசு­வா­சத்தை நிரூ­பித்­தார். தி.மு.க-.வின் பிர­சா­ரப் பாடல் முற்­றி­லும் உண்­மை­யாக மாறி­யது. ஒளிஞ்சு வந்த பருந்­தின் நடிப்­பினை புரிஞ்சு துணிஞ்சு விரட்­டி­யது தி.மு.க. 
கூட்­டணி.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">உறு­தி­யான பெரும் வெற்றி</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">பா.ஜ.க. தமிழ்­நாட்­டின் நல­னுக்கு எதி­ரான முடிவை எவ்­வ­ளவு நய­வஞ்­ச­மாக செயல்­ப­டுத்த முயல்­கி­றது என்­பதை அனை­வ­ரும் புரிந்­து­கொண்­ட­னர். அதனை முதல்­வர் ஸ்டாலின் சிறி­தும் தயக்­க­மின்றி கடு­மை­யாக எதிர்த்து முறி­ய­டித்த செயலை அனை­வ­ரும் வியந்து போற்­றி­னர். இது தேர்­தல் களத்­தில் ஒரு ஆத­ரவு அலையை உரு­வாக்­கி­யுள்­ளதை உணர முடி­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">கொஞ்­சம் கூட கூச்­ச­மின்றி பழ­னி­சாமி பா.ஜ.க.-வின் ஏமாற்று வேலையை ஆத­ரித்து பேசி­ய­தும், அதன் பிறகு பிர­த­ம­ரு­டன் கூட்­டத்­தில் பங்­கேற்­ற­தும் அவர் எந்த அளவு மாநில நல­னில் அக்­க­றை­யின்றி இருக்­கி­றார் என்­பதை அம்­ப­லப்­ப­டுத்­தி­யது. ராகுல் காந்தி எப்­படி மோடி­தான் அமெ­ரிக்க அதி­பர் டிரம்ப்­பின் கட்­டுப்­பாட்­டில் இருக்­கி­றாரோ அது­போல தமிழ்­நாட்டு முதல்­வர் தன் கட்­டுப்­பாட்­டில் இருக்க வேண்­டும் என்று நினைக்­கி­றார் என்­றார். ஸ்டாலின் அப்­படி கட்­டுப்­பட மாட்­டார் என்­ப­தால், பழ­னி­சா­மியை ஆட்­சிக்­குக் கொண்­டு­வர விரும்­பு­கி­றார் என்­றார். ஸ்டாலி­னின் உறு­தி­யான ஆளு­மையை, தலை­மைப் பண்பை ராகுல் காந்­தி­யும், மல்­லி­கார்­ஜுன கார்­கே­யும். தேஜஸ்வி யாத­வும் வான­ளாவ புகழ்ந்­த­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இப்­போது களத்­தில் உள்ள இரண்டு முக்­கிய அணி­க­ளை­யும் பண்­பு­ரீ­தி­யாக ஒப்­பிட்­டால் எந்த அளவு தி.மு.க அணி முன்­ன­ணி­யில் இருக்­கி­றது என்று புரி­யும். ஐந்து தலைப்­பு­க­ளில் ஒப்­பி­டு­வோம். 1) முதல்­வர் வேட்­பா­ளர்; 2) கூட்­டணி ஒருங்­கி­ணைப்பு; 3) கட்சி கட்­ட­மைப்பு; 4) ஆட்­சி­யின் சாத­னை­கள்; 5) பிர­சா­ரம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">முதல்­வர் வேட்­பா­ளர்:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஐந்­தாண்டு ஆட்­சிக்­குப் பிறகு ஸ்டாலின் அகில இந்­திய அள­வில் ஆளுமை மிக்க தலை­வ­ரா­கக் கரு­தப்­ப­டு­கி­றார். பீஹார் தேர்­த­லின் முன்­னால் அங்கே உரை­யாற்ற அழைக்­கப்­பட்­டார். பொரு­ளா­தார வளர்ச்­சி­யில் தமிழ்­நாடு நாட்­டி­லேயே முன்­ன­ணி­யில் இருப்­பது அவரை சிறந்த ஆட்­சி­யா­ள­ரா­க­வும் அடை­யா­ளப்­ப­டுத்­தி­யுள்­ளது. பிற கட்­சித் தலை­வர்­களை அணு­கு­வது, தனிப்­பட்ட நட்­பு­ற­வைப் பேணு­வது, தன்­னைக் கடு­மை­யாக விமர்­சிப்­ப­வர்­க­ளை­யும் உடல் நலம் சரி­யில்­லை­யென்­றால் சென்று பார்த்து நலம் விசா­ரிப்­பது என பண்­பட்ட, முதிர்ச்­சி­யான அர­சி­ய­லுக்கு உரி­ய­வ­ராக அவர் விளங்­கு­கி­றார். கூட்­டணி கட்­சி­யி­னர் அவ­ரைப் போற்­றிப் பாராட்­டு­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">எடப்­பாடி பழ­னி­சா­மியோ தன் சொந்­தக் கட்­சிக்­கா­ரர்­க­ளையே மன்­னிக்­கா­த­வ­ராக, கட்­சியை விட்­டுச் செல்­ப­வர்­களை தடுத்து அர­வ­ணைக்க முன்­வ­ரா­த­வ­ராக, தொடர்ந்து எதி­ரி­களை உரு­வாக்­கிக் கொள்­ப­வ­ரா­கவே வெளிப்­ப­டு­கி­றார். அவ­ரி­டம் மாநில உரி­மை­கள் சார்ந்த விழிப்­பு­ணர்வோ, கோட்­பாட்­டுப் புரி­தல்­களோ வெளிப்­ப­டு­வ­தில்லை. தன்­னு­டைய அர­சி­யல் முடி­வு­களை அவ­ரால் நயம்­பட விளக்­க­வும் முடி­வ­தில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தன்னை முதல்­வ­ராக்­கிய சசி­க­லா­வி­டம் அவர் ஏன் விரோ­தம் பாராட்­டு­கி­றார் என்­பதை பொது­வெ­ளி­யில் விளக்­கா­தது, அவர் சசி­கலா காலில் விழுந்து பத­வி­யேற்ற காட்­சியை கேலிப்­பொ­ரு­ளாக மாற்­றி­விட்­டது. இப்­போது சசி­க­லாவே மீண்­டும் அர­சி­யல் களத்­திற்கு வந்து அவரை துரோகி என்­ற­ழைத்து பிர­சா­ரம் செய்­யத் துவங்­கி­விட்­டார். தேர்­தல் களத்­தில் பழ­னி­சாமி தொடர்ந்து சந்­திக்­கும் தோல்­வி­க­ளு­டன் இவை­யெல்­லாம் சேர்ந்து கொள்­ளும்­போது அவர் ஆளு­மை­யற்ற, சுய­நல அர­சி­யல்­வா­தி­யா­கவே அறி­யப்­ப­டு­கி­றார். அவரை ஆத­ரித்து பேச விரும்­பு­ ப­வர்­கள்­கூட விவா­தங்­க­ளில் மிகுந்த  நெருக்­க­டிக்கு ஆளா­கி­றார்­கள். கூட்­டணி கட்­சி­யி­னர், குறிப்­பாக பா.ஜ.க. தலை­வர்­கள் அவரை சிறப்­பித்­துப் பேசு­வ­தே­யில்லை. பழ­னி­சாமி பிர­த­மரை புகழ்­கி­றார். பிர­த­மர் அவரை பராட்­டு­வ­தும் இல்லை; அவர் முதல்­வ­ராக வேண்­டு­மென முன்­மொ­ழி­வ­து­மில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">கூட்­டணி ஒருங்­கி­ணைப்பு:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஸ்டாலின் தலை­மை­யி­லான கூட்­டணி ஏழாண்­டு­க­ளாக தொடர்ந்து வரு­கி­றது. இரண்டு நாடா­ளு­மன்ற தேர்­தல்­கள், ஒரு சட்­ட­மன்ற தேர்­தல், உள்­ளாட்­சித் தேர்­தல்­கள் என தொடர் வெற்­றி­க­ளைக் குவித்து வரு­கி­றது. எல்லா கூட்­ட­ணி­க­ளி­லும் இயல்­பா­கவே ஏற்­ப­டக்­கூ­டிய தொகு­திப் பங்­கீட்டு முரண்­பா­டு­கள் வந்­தா­லும், ஸ்டாலின் அனைத்து கட்­சித் தலை­வர்­க­ளை­யும் அர­வ­ணைத்­துச் செல்­வ­தில் வெற்றி பெற்று விடு­கி­றார். இந்­துத்­துவ, மத­வாத எதிர்ப்பு என்ற வலு­வான இலட்­சி­யம் அணியை ஒருங்­கி­ணைப்­ப­தில் பெரும்­பங்கு வகிக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இந்த நிலை­யில் அ.இ.அ.தி. மு.க. அணி­யில் இடம்­பெற்­றி­ருந்த தே.மு.தி.க.,  தி.மு.க. அணி­யில் இணைந்­தி­ருப்­பது பொது­மக்­கள் பார்­வை­யில் அணிக்கு வலுச்­சேர்த்­துள்­ளது. பழ­னி­சாமி தே.மு.தி.க-விற்­குத் தரு­வ­தா­கச் சொல்லி ஏமாற்­றிய மாநி­லங்­க­ளவை உறுப்­பி­னர் இருக்­கையை தி.மு.க. அந்த கட்­சிக்­குக் கொடுத்­தது ஸ்டாலி­னின் நம்­ப­கத்­தன்­மையை அதி­க­ரித்­துள்­ளது. பிரே­ம­லதா முழு மன­து­டன் உற்­சா­க­மாக பிர­சா­ரத்­தில் ஈடு­பட்டு வரு­கி­றார். அது­போல எஸ்.டி.பி.ஐ. கட்­சி­யும் அணி மாறி­யுள்­ளது சிறு­பான்மை வாக்­கு­களை முழு­மை­யாக தி.மு.க. கூட்­டணி பக்­கம் கொண்­டு­வந்­து­விட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">பழ­னி­சாமி கூட்­ட­ணி­யில் நிலை­யற்ற தன்மை உரு­வாக இடம்­கொ­டுத்­து­விட்­டார். சென்ற சட்­ட­மன்ற தேர்­தலை பா.ஜ.க., பா.ம.க. மற்­றும் இதர கட்­சி­க­ளு­டன் சந்­தித்த அவர், நாடா­ளு­மன்ற தேர்­த­லில் பா.ஜ.க.-விட­ மி­ருந்து வில­கி­விட்­டார். அது­வும் தேர்­த­லுக்கு சற்று முன்­னால் என்.டி.ஏ. கூட்­ட­ணிக்­கட்­சி­களை பிர­த­மர் கூட்­டி­ய­போது டில்­லிக்­குச் சென்று பங்­கேற்­ற­வர், அதன் பிறகு கூட்­ட­ணியை முறித்­தார். அவர் கட்­சிக்­கா­ரர்­கள் பட்­டாசு வெடித்­துக் கொண்­டா­டி­னர். பல தலை­வர்­கள் பா.ஜ.க. கூட்­ட­ணி­யால்­தான் நாம் தோற்­றோம் என்று வெளிப்­ப­டை­யா­கக் கூறி­னர். பழ­னி­சாமி இனி ஒரு­போ­தும் பா.ஜ.­க.-­வு­டன் கூட்­டணி கிடை­யாது என்­றார். இத்­த­னைக்­கும் பிறகு ஓராண்­டுக்கு முன்­னால் திடீ­ரென டில்லி சென்று அமித் ஷாவை சந்­தித்து மீண்­டும் கூட்­ட­ணி­யில் சேர்ந்­து­விட்­டார். அவர் ஏன் இப்­படி அப­வுட்­டர்ண் எடுக்­கி­றார் என்­பதை பொருத்­த­மான சொல்­லா­ட­லில் விளக்க முடி­வ­தில்லை. பா.ஜ.­க.-­வால்­தான் தோற்­றோம் என்று சொன்­ன­வர்­கள், அத­னு­டன் எந்த கொள்கை உடன்­பா­டும் கிடை­யாது என்­ற­வர்­கள், ஏன் திடீ­ரென கூட்­டணி வைக்­கி­றார்­கள் என்று யாருக்­கும் புரி­வ­தில்லை. இத­னால்­தான் மிரட்­டப் பட்­டார், அடகு வைத்­தார் என்­பது போன்ற பேச்­சுக்­கள் எழு­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">பா.ஜ.க. மட்­டு­மில்­லா­மல் அன்­பு­மணி ராம­தாஸ், டி.டி.வி.தின­க­ரன் ஆகிய இரு­வ­ருமே மிக, மிகக் கடு­மை­யாக, சொல்­லக் கூசும் வார்த்­தை­க­ளில், பழ­னி­சா­மியை சில காலம் முன்­பு­வரை விமர்­சித்­துள்­ளார்­கள். இப்­போது அவ­ரு­டன் சேர்ந்து ஒரே மேடையை பகிர்ந்­து­கொள்­கி­றார்­கள். இது போன்ற மாறு­தல்­கள் அர­சி­ய­லில் சக­ஜம் என்­றா­லும், ஓர­ள­வா­வது கார­ணங்­கள் கூறப்­பட வேண்­டும். இல்­லா­விட்­டால் கட்சி அணி­யி­ன­ரி­டம் ஒற்­றுமை ஏற்­ப­டு­வதோ, அவ­ர­வர் ஆத­ரவு வாக்­கு­கள் மற்­ற­வ­ருக்­குக் கிடைப்­பதோ கடி­னம். அப்­படி வாக்­கு­கள் பரி­மா­றப் பட­வில்­லை­யென்­றால் கூட்­ட­ணி­யால் எந்த பய­னும் கிடை­யாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">கட்சி கட்­ட­மைப்பு:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தி.மு.க. கடந்த சில ஆண்­டு­க­ளாக தொடர்ந்து தன் கட்சி அணி­களை விரி­வாக்­கிக் கட்­ட­மைத்து வரு­கி­றது. இளை­ஞர் அணி, மக­ளிர் அணி உள்­ளிட்­டவை மிக­வும் சிறப்­பாக ஒருங்­கி­ணைக்­கப்­பட்­டுள்­ளன. சமீ­பத்­தில் இந்த அணி­யி­னர் நட த்திய மாநா­டு­கள், வாக்­குச்­ச­வடி முக­வர்­கள் மாநா­டு­கள் போன்­றவை பிரம்­மாண்­ட­மாக இருந்­தன. அவற்­றிற்கு ஒப்­பா­கச் சொல்­லக்­கூ­டிய எந்த மாநா­டும் அ.இஅ.தி.மு.க-.வால் கடந்த ஆண்­டில் நட த்தப் பட­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">ஆட்­சி­யின் சாத­னை­கள்:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">பெரும் வர­லாற்று முன்­ன­கர்­வு­களை தி.மு.க இந்த ஐந்­தாண்­டு­க­ளில் சாதித்­துள்­ளது. விடி­யல் பய­ணம் என்ற மக­ளி­ரின் கட்­ட­ண­மில்லா பேருந்­துப் பய­ணம், மக­ளிர் உரி­மைத் தொகை, காலை உண­வுத் திட்­டம் என்று தொடங்­கி­னால் வரி­சை­யாக திட்­டங்­கள் வந்­து­கொண்டே இருக்­கின்­றன. கல்வி, மனித வள மேம்­பாடு சார்ந்து மிகச் சிறப்­பான முன்­னெ­டுப்­பு­கள் நடந்­துள்­ளன. சுகா­தா­ரத் துறை­யி­லும் பல பாய்ச்­சல்­கள் நடந்­துள்­ளன. கீழடி அக­ழாய்வு போன்ற பண்­பாட்­டுத் தளங்­க­ளில் மிகப் பெரிய சாத­னை­கள் நிகழ்ந்­துள்­ளன. ஆட்­சியை விமர்­சித்­துப் பேசு­வ­து­தான் அர­சி­யல் விமர்­ச­னம் என்ற தவ­றான எண்­ணத்­தால்­தான் இந்த சாத­னை­களை எடுத்­துக் கூற ஊட­கங்­கள் தயங்­கு­கின்­றன. இத்­து­டன் ஒப்­பி­டும்­போது பழ­னி­சாமி நான்­காண்­டு­களை வீணாக்­கி­விட்­டார் என்­று­தான் சொல்­ல­வேண்­டும். விமர்­ச­கர்­கள் தி.மு.க சாத­னை­க­ளைப் புறக்­க­ணித்­தா­லும் அவற்­றால் பய­ண­டைந்த அடித்­தட்டு மக்­கள் அவற்றை நிச்­ச­யம் மன­தில் கொண்­டி­ருப்­பார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">பிரச்­சா­ரம்:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">பா.ஜ.­க.-­வின் எதேச்­ச­தி­கார மத­வாத பாசி­சத்தை எதிர்ப்­பது, பழ­னி­சாமி பா.ஜ.­க.-­வி­டம் சர­ண­டைந்­ததை விமர்­சிப்­பது, திரா­விட மாடல் ஆட்­சி­யின் சாத­னை­க­ளைப் பேசு­வது, சமூக நீதி கொள்­கை­களை விளக்­கு­வது என தி.மு.க கூட்­ட­ணி­யின் பிர­ச்சார சொல்­லா­டல் மிக வலு­வாக அமைந்­துள்­ளது. முதல்­வர் ஒரு­பு­றம், துணை முதல்­வர் உத­ய­நிதி ஸ்டாலின் ஒரு­பு­றம், மக­ளிர் அணித் தலைவி கனி­மொழி கரு­ணா­நிதி ஒரு­பு­றம் என்று தொடர்ந்த சுற்­றுப்­ப­ய­ணத்­தில் பிர­ச்சா­ரத்தை மிகச் சிறப்­பாக முன்­னெ­டுத்­துள்­ளார்­கள். உத­ய­நி­தி­யின் உரை­யா­டல் தன்மை கொண்ட பிரச்­சா­ரம் மிகப்­பெ­ரிய வர­வேற்­பைப் பெற்­றுள்­ள­தைக் காண முடி­கி­றது. எல்லா பிரச்­சி­னை­க­ளை­யும் சிரித்த முகத்­து­டன், நகைச்­சு­வை­யாக எதிர்­கொள்­கி­றார். அவ­ரு­டைய இயல்­பான தன்­னம்­பிக்கை மிகுந்த வசீ­க­ரத்­தைத் தரு­கி­றது. இவர்­க­ளைத் தவிர கூட்­டணி கட்­சித் தலை­வர்­க­ளும் தொடர்ந்து மாநி­லத்தை சுழன்­ற­டித்து பிரச்­சா­ரம் செய்து வரு­கின்­ற­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இத­னு­டன் ஒப்­பி­டும்­போது அ.இ.அ.தி.மு.க-., பா.ஜ.க. அணி­யின் பிரச்­சா­ரத்­திற்கு ஒரு­மித்த பண்பு அமை­ய­வில்லை. தி.மு.க. அர­சின் மீது சில குறை­க­ளைக் கடு­மை­யா­கக் கற்­பிக்­கின்­ற­னர். ஆனால் அதற்கு மாற்­றாக முன்­வைக்க அவர்­க­ளி­டம் வலு­வான சொல்­லா­டல் எது­வும் இல்லை. அ.இ.அ.தி.மு.க-வால் பா.ஜ.க. கொள்­கை­யைப் பேச முடி­யாது. பா.ஜ.க.-வால் அ.இ.அ.தி.மு.க-.வை பாராட்ட முடி­யாது. அத­னால் தி.மு.க. ஆட்­சியை வசை­பா­டு­வ­து­டன் பிர­சா­ரம் முடிந்­து­வி­டு­கி­றது. கூடு­த­லாக மூன்­றா­வது முனை­யாக பல­ரா­லும் கரு­தப்­ப­டும் விஜ­யின் பிர­சா­ர­மும் ஒரு சில வரி­க­ளில் தி.மு.க-.வை மூர்க்­க­மாக எதிர்ப்­ப­து­டன் முடிந்­து­வி­டு­கி­றது. அப்­ப­டி­யா­னால் அவ­ருக்­குக் கிடைக்­கும் வாக்­கு­கள் தி.மு.க எதிர்ப்பு வாக்­கு­க­ளைத்­தான் பிரிக்க முடி­யும் என்­பது வெளிப்­ப­டை­யா­னது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இதை­யெல்­லாம் பண்பு ரீதி­யாக சிந்­துத்­துப் பார்த்­தால் எந்த கருத்­துக் கணிப்­பும் எடுக்­கா­ம­லேயே ஒன்று புரி­யும். ஸ்டாலின் தொடர்­வார்! தமிழ்­நாடு வெல்­லும் என்­ப­து­தான் அது. அந்த வெற்­றி­யும் சாதா­ரண வெற்­றி­யாக இருக்­காது; இமா­லய வெற்­றி­யா­கத்­தான் இருக்­கும் என­லாம். மே மாதம் நான்­காம் தேதி  திரா­விட மாடல் 2.0 ஆட்சி துவங்­கும். வெல்­வோம் ஒன்­றாக!</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>