<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="29/04/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="37,69,376,1495" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="1"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Tue Apr 28 2026 16:02:59 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260429T000000+5.30" edition.name="TRY" edition.area="TRY" position.section="29042026-TRY-02" position.sequence="02" ex-ref="29042026-TRY-02.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#ff00ff" boxBorderWeight="1.99193248209899">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="30">இரட்டை எஞ்­சி­னால் அணைக்க முடி­யாத மணிப்­பூர்!</lang>
	</hl1>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup582321_02_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">2023</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">ஆம் ஆண்டு மே மாதத்­தில் இருந்து எரி­கி­றது மணிப்­பூர். இரட்டை எஞ்­சி­னால் இன்­ன­மும் அணைக்க முடி­ய­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">தமிழ்­நாட்­டுக்­குப் பரப்­பு­ரைக்கு வந்த பிர­த­மர் நரேந்­திர மோடி­யும், உள்­துறை அமைச்­சர் அமித்­ஷா­வும், ‘மத்­தி­யி­லும்  மாநி­லத்­தி­லும் பா.ஜ.க. ஆட்சி அமைந்­தால், அந்த இரட்டை எஞ்­சின் வளர்ச்சி ஏற்­ப­டும்’ என்று சொல்­லிப் போனது  பொய்  என்­பதை  மணிப்­பூர்  மூன்று  ஆண்­டு­க­ளாக  மெய்ப்­பித்து வரு­கி­றது. இதை­யே­தான் இவர்­கள் மேற்கு வங்க தேர்­தல் பரப்­பு­ரை­யி­லும் சொல்லி ஏமாற்றி வரு­கி­றார்­கள்.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">மணிப்­பூ­ரில் இரண்டு நாட்­க­ளுக்கு முன் நடந்த வன்­மு­றை­யில் 3 பேர் பலி­யாகி இருக்­கி­றார்­கள். மணிப்­பூர் மாநி­லம், உக்­ருல் மாவட்­டத்­தின் சில பகு­தி­க­ளில் இரு சமூ­கத்­தி­ன­ரி­டையே மீண்­டும் வன்­முறை வெடித்­துள்­ளது.இதில்­தான் 3 பேர் பலி­யா­னார்­கள். பெண்­கள் மற்­றும் குழந்­தை­கள் உட்­பட பலர் காய­ம­டைந்­த­னர். இரண்டு வீடு­கள் தீயிட்டு  கொளுத்­தப்­பட்­டன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">முல்­லம்,  ஷோங்ஃ­பால்  ஆகிய   கிரா­மங்­கள்  மீதும்  தாக்­கு­தல் நடத்­தப்­பட்­டுள்­ளது. முல்­லம் கிரா­மத்­தில்  ரோந்­துப்  பணி­யில் ஈடு­பட்­ட­வர்­கள் மீது  ஆயு­தக்குழு­வி­னர் நடத்­திய துப்­பாக்­கிச் சூட்­டில் 29 வயது தன்­னார்­வ­லர் ஒரு­வர்கொல்­லப்­பட்­டார். நான்கு பேர் காய­ம­டைந்­த­னர். இத­னைத்  தொடர்ந்தே பதி­லடிமோதல் ஏற்­பட்­டுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">ஏப்­ரல் 7 ஆம் தேதி  பிஷ்­ணு­பூர் மாவட்­டத்­தில் மொய்­ராங் ட்ராங்­லாபி பகு­தி­ யில் உள்ள வீடு ஒன்­றின் மீது மர்ம நபர்­கள் குண்­டு­களை வீசி தாக்­கு­தல் நடத்­தி­னர். இதில் வீட்­டில் தூங்­கிக் கொண்­டி­ருந்த 5 வயது சிறு­வ­னும், 6 மாதக் குழந்­தை­யும் கொல்­லப்­பட்­ட­னர். அப்­பாவி குழந்­தை­க­ளைக் கொன்­ற­வர்­களை  விரைந்து கைது செய்ய வலி­யு­றுத்தி பல்­வேறு அமைப்­பு­கள் சார்­பில் தொடர் போராட்­டங்­கள் நடந்து வரு­கின்­றன.  இரண்டு குழந்­தை­கள் உயி­ரி­ழந்த சம்­ப­வம் அம்­மா­நி­லத்­தில் மீண்­டும் பதற்­றத்தை ஏற்­ப­டுத்தி இருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">அங்கு நிறுத்­தப்­பட்­டி­ருந்த இரு ஆயில் டேங்­கர்­கள், ஒரு லாரியை தீ வைத்து எரித்­த­னர். அரு­கே­யுள்ள தற்­கா­லி­கப் போலீஸ் நிலை­யத்­தை­யும் அவர்­கள் சூறை­யா­டி­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">குழந்­தை­க­ளைக் கொன்ற குற்­ற­வா­ளி­களை உடனே கைது செய்­யக்­கோரி, கடந்த ஏப்­ரல்  18ஆம் தேதி இம்­பால் மேற்கு மாவட்­டத்­தின் சிங்­ஜா­மில் தீப்­பந்த ஊர்­வ­லம் நடை­பெற்­றது. அப்­போது போராட்­டக்­கா­ரர்­க­ளில் சிலர், தடையை மீறி மணிப்­பூர் முத­ல­மைச்­ச­ரின் வீட்டை முற்­று­கை­யிட சென்­ற­னர். இதை­ய­டுத்து அவர்­கள் மீது, கண்­ணீர் புகைக் குண்­டு­களை வீசி­யும், தடி­யடி நடத்­தி­யும் பாது­காப்­புப் படை­யி­னர் கலைத்­த­னர். இச்­சம்­ப­வம் தொடர்­பாக இது­வரை 21 பேரை போலீ­சார் கைது செய்­த­னர்.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">  
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">சமூக ஊட­கங்­க­ளில் வன்­மு­றை­யைத் தூண்­டும் வகை­யில் கருத்­து­ க­ளைப் பதி­விட்ட 23 வயது இளை­ஞ­ரை­யும் போலீ­சார் கைது செய்­த­னர்.  வன்­மு­றை­யைத்  தூண்­டவோ அல்­லது சமூக நல்­லி­ணக்­கத்­தைக் குலைக்­கவோ முயற்­சிக்­கும் எவர்  மீதும்  கடு­மை­யான நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டும் என­வும் காவல் துறை­யி­னர் எச்­ச­ரித்­துள்­ள­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">மார்ச் 26 அன்று இந்­திய ராணு­வம் மற்­றும் அசாம்  ரைபிள்  படை­யி­னர், மணிப்­பூர் போலீ­சா­ரு­டன் ஒருங்­கி­ணைந்து மாநி­லம் முழு­வ­தும் முழு அள­வில் சோத­னை­யில் ஈடு­பட்­ட­னர். இதில், இம்­பால் கிழக்கு, இம்­பால் மேற்கு பிஷ்­ணு­பூர், சந்­தேல், கங்­போக்பி, சுரா­சந்த்­பூர் மற்­றும் தெங்­ன­வு­போல் மாவட்­டங்­க­ளில் தொடர்ச்­சி­யாக நடத்­திய  சோத­னை­க­ளில்  மலை மற்­றும் பள்­ளத்­தாக்­குப் பகு­தி­க­ளில் செயல்­பட்டு வந்த பயங்­க­ர­வா­தக் குழுக்­க­ளைச் சேர்ந்த 17 பேர் கைது செய்­யப்­பட்டு உள்­ள­னர். அவர்­க­ளி­டம் இருந்து சக்தி வாய்ந்த வெடி­குண்­டு­கள், வெடி­பொ­ருட்­கள், துப்­பாக்­கி­கள், கைத்­துப்­பாக்­கி­கள், தோட்­டாக்­கள், மொபைல் போன், சிம் கார்டு, போரில் பயன்­ப­டுத்­தும் ஆயு­தங்­கள் உள்­ளிட்­ட­வற்றை பறி­மு­தல் செய்­த­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">ஏப்­ரல் 25  அன்று மணிப்­பூர் ஒரு­மைப்­பாட்­டிற்­கான ஒருங்­கி­ணைப்­புக் குழு சார்­பில் மாபெ­ரும் பேரணி நடந்­துள்­ளது. முத­ல­மைச்­சர் யும்­னம் கேம் சந்த்சிங்­கின் இல்­லத்தை நோக்கி நான்கு திசை­யில் இருந்­தும் போராட்­டக்­கா­ரர்­கள்திரண்டு வந்­துள்­ள­னர். போராட்­டக்­கா­ரர்­களை பாது­காப்­புப்  படை­யி­னர் தடுத்­த­னர். கண்­ணீர்ப் புகைக் குண்­டு­களை வீசி­னார்­கள். இந்த மோத­லில் 22 பேர் காயம் அடைந்­த­னர். ஏப்­ரல் 7 ஆம் தேதி இரண்டு குழந்­தை­கள் கொல்­லப்­பட்­ட­தற்கு நீதி கேட்டு முத­ல­மைச்­ச­ரி­டம் கடி­தம் தரப்­பட்­டுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">குறிப்­பிட்ட சமூக மக்­க­ளுக்கு ராணு­வச் சீரு­டை­கள் தரப்­பட்டு அவர்­கள் மற்ற சமூக மக்­கள் மீது தாக்­கு­தல் நடத்­தத் தூண்டி விடப்­ப­டு­வ­தாக ‘வாய்ஸ் ஆப் தி நாகா யூத்’ என்ற அமைப்பு குற்­றம் சாட்டி உள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">இப்­படி நாள் தோறும் மணிப்­பூ­ரில் இருந்து பதற்­றம் ஏற்­ப­டுத்­தும் செய்­தி­கள் வந்து கொண்டே இருக்­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">மணிப்­பூ­ரின்  மெய்­தேய் சமூ­கத்­தி­ன­ரைப் பட்­டி­யல் பழங்­கு­டி­யி­ன­ராக  அறி­விப்­பது தொடர்­பாக நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு மணிப்­பூர் பா.ஜ.க.           அர­சுக்கு அம்­மா­நில உயர் நீதி­மன்­றம் 2023 மார்ச் 27இல் உத்­த­ரவு பிறப்­பித்­தது. இதனை குக்கி சமூ­கத்­தி­னர் எதிர்க்­கி­றார்­கள்.  மே 3இல் மெய்­தேய் சமூ­கத்­தி­ன­ருக்­கும் குக்கி பழங்­கு­டி­க­ளுக்­கும் இடையே மோதல் வெடித்­தது.  இந்­தக் கல­வ­ரத்­தில் 250க்கும் மேற்­பட்­டோர் கொல்­லப்­பட்­ட­னர். 60,000க்கும் மேற்­பட்­டோர் வீடு­களை இழந்­த­னர். இவ்­வ­ள­வுக்­குப் பிற­கும் பா.ஜ.க. முத­ல­மைச்­சர் பிரேன் சிங்கை காப்­பாற்றி வைத்­தி­ருந்­தது பா.ஜ.க. தலைமை.  ஒன்­றரை ஆண்­டு­கள் கழித்து முத­ல­மைச்­சர் பத­வி­யி­லி­ருந்து பிரேன் சிங் வில­கி­னார். அங்கு குடி­ய­ர­சுத் தலை­வர் ஆட்சி  அமல்­ப­டுத்­தப்­பட்­டது. ஏறத்­தாழ ஓர் ஆண்டு காலத்­துக்­குப் பின்­னர் பா.ஜ.க.வின் யும்­நம் ஹேம்­சந்த் சிங்  தலை­மை­யில், 2026 பிப்­ர­வ­ரி­யில் புதிய அரசு அமைந்­தது. புதிய அரசு அமைந்த பிற­கும் மாநி­லம் அமை­தி­யா­க­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">மணிப்­பூரை அமை­தி­யாக்க மாநில பா.ஜ.க. அர­சா­லும் முடி­ய­வில்லை. ஒன்­றிய பா.ஜ.க. அர­சா­லும் முடி­ய­வில்லை. உண்­மை­யில் பிர­த­மர் மோடிக்கு மணிப்­பூ­ரைப்பற்றி அக்­கறை இல்லை. கல­வ­ரம் தொடங்கி 862 நாட்­க­ளுக்­குப் பிற­கு­தான் மணிப்­பூர் சென்­றார் பிர­த­மர் மோடி. 2024 ஆம் ஆண்டு நடை­பெற்ற நாடா­ளு­மன்­றத் தேர்­த­லில் வாக்­குக் கேட்­டுக் கூட மணிப்­பூர் போக­வில்லை பிர­த­மர். அந்­த­ள­வுக்­குத் தான் அவ­ருக்கு அமைதி மீதும், மக்­கள் மீதும் அக்­க­றையே!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">இரட்டை எஞ்­சின் பற்றி வாய் கிழி­யப் பேசும், உள்­துறை அமைச்­சர் அமித்­ஷா­வால்மணிப்­பூரை அமை­தி­யாக்க முடி­ய­வில்லை. சர்­தார் படே­லுக்கு அடுத்­த­ப­டி­யாக ‘இரும்பு மனி­தர்’ பெயர் பல­கை­யைப் பொருத்­திக் கொள்­ளும் அமித்­ஷா­வால்  மணிப்­பூரை  அமை­தி­யாக்க  முடி­யா­மல்   போனது  அக்­க­றை­யின்­மையா?       தகு­தி­யின்­மையா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="Wingdings" fontStyle="Regular" size="11">•</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>