<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="29/04/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="38,71,957,1213" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="4"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Tue Apr 28 2026 16:04:31 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260429T000000+5.30" edition.name="TRY" edition.area="TRY" position.section="29042026-TRY-05" position.sequence="05" ex-ref="29042026-TRY-05.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#000000" boxBorderWeight="2">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="TAUN_Kurinji" fontStyle="Regular" size="52">நர சந்திரபாபு நாயுடுவுக்கு ஓர் ‘அரைகுறை’ பாமரனின்  பகிரங்கக் கடிதம்!</lang>
	</hl2>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup607549_05_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup608823_05_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup608824_05_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup608822_05_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="18">பி</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">ரி­ய­மைன ஆந்­திர முக்ய மந்­திரி என்.சந்­தி­ர­பாபு நாயுடு காரிக்கி, வந்­த­னம்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">தெலுகு நாக்கு ராசே தானிக்கி சது­வே­தா­னக்கி ராது. கொஜ்­ஜிக தெலு­கினி நேனு மாட்­லா­டு­துனு. அந்தே. தெலுகு, தேட்டா தெனுகு அன்ட்­டாரு. கொப்ப கவி பாரதி ‘சுந்­தர தெலுங்கு’  அனி ராசி பெட்­டுன்­டாடு. பாட்­டினி வினுதே, தானி அந்­தரு தெலுசு குன்ட்­டாமு, மீக்கு தெலு­சு–மா மாத்ரு பாஷ ‘தமிழ்’ அனி.  நேனு தானி ‘அர­வம்’ அனி சொப்­ப­க­லனு, ஆ ‘டெர்ம்’ மஞ்­சிது காது. தெலு­குனி நேனு மாட்­லாட நேர்­சு­குன்­னான்னு அன்டே,  அதி மா நைன ரெய்ச்­சூர்ல உண்டே டப்­புடு  ஜெரி­கின்­னதி. கொஜ்­ஜிக தெலு­சுக் குன்­னாமு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">ஒக்க introduction காவா­லனி இலேக்கா ராசி பெட்­டி­னானு. வேற விஷ­ய­முந்தி ராசி தானிக்கி. இப்­புடு, நேனு நா மாத்ரு பாஷ­லேனி ராஸ்­தானு. வந்­த­னம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">கடந்த ஏப்­ர­லில் 16 முதல் 18 வரை மக்­க­ளவை சிறப்­புக் கூட்­டம் என்­கிற அறி­விப்பு 13, 14 ஆம் தேதி­க­ளில் தெரிந்­தது. 14 ஆம் தேதியே எங்­கள் தலை­வர் ஸ்டாலின் மக்­க­ள­வை­யில் தொகுதி வரை­யறை, மக­ளிர் இட­ஒ­துக்­கீடு, யூனி­யன் பிர­தேச மசோ­தாக்­கள் (2026) தாக்­கல் ஆகப் போகி­றது என அறிந்­தார். அத­னால் அவர் எதிர்ப்­புக் குரலை – போர்க்­கு­ரலை எழுப்­பி­னார். நட­வ­டிக்­கை­க­ளில் இறங்­கி­னார். தென்­னிந்­திய முதல்­வர்­க­ளும் – உங்­க­ளைத் தவிர்த்து எதிர்ப்­பைத் தெரி­வித்து இருந்­தார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">ஒன்­றிய பா.ஜ.க. அர­சுக்கு நீங்­கள் இப்­போது ஒரு தூணாக இருக்­கி­றீர்­கள் என்­பது எனக்­குத் தெரி­யும். உங்­கள் ஆத­ர­வைத் திரும்­பப் பெற்­றால் மோடி அரசு இருக்­காது. கவிழ்ந்­து­வி­டும். அவ்­வ­ளவு ‘எவ­ரெஸ்ட்’ உச்­சத்­தில் நீங்­கள் இருக்­கி­றீர்­கள். ஆனால் தென்­னிந்தி யாவின் முதல்­வர்­க­ளுள் ஒரு­வ­ராக இருந்து கொண்டு உங்­கள் குர­லைக் காண முடி­ய­வில்­லையே என்று நான் எங்­கள் முர­சொ­லி­யில் ஒரு பெட்­டிச் செய்­தியை எழு­தி­னேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">அதில் நான், ‘நாடா­ளு­மன்­றத் தொகுதி மறு­சீ­ர­மைப்­புப் பிரச்­சினை: சந்­தி­ர­பாபு நாயு­டு­வின் கருத்து என்ன?’ என்று கேட்டு இருந்­தேன். அதில் ‘அதற்­கான சந்­தர்ப்­பம் வரும்­போது தொகுதி சீர­மைப்­புப் பிரச்­சி­னைப் 
பற்­றிப் பார்த்­துக் கொள்­ள­லாம், இப்­போது என்ன அவ­ச­ரம்?’ என்று  அப்­போது சொல்­லி­யி­ருந்­தீர்­கள். ஆகவே இப்­போது உங்­கள் கருத்து என்­ன­வென்று கேட்­டி­ருந்­தேன்.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">முர­சொ­லி­யில் ஏப்­ரல் 16 ஆம் தேதி  பெட்­டிச் செய்தி வெளி­யா­யிற்று, அதே நாளில் ஆங்­கில இந்து நாளேட்­டில், ‘Women Reservation Bill Will be Passed: Naidu’ என்று  ஒற்­றைக் காலத்­தில் ஒரு செய்தி வெளி­யாகி இருந்­தது. நான் எழு­தி­ய­தால் நாயுடு கருத்­துத் தெரி­வித்­து­விட்­டார் என்று நான் சொல்ல வர­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">நாயுடு கருத்­துச் சொல்ல வேண்­டிய நேரம் வந்­து­விட்­டது. கருத்­தைத் தெரி­வித்­தார். வினா­வும் விடை­யும் ஒரே நாளில் மக்­க­ளுக்­குக் கிடைத்­து­விட்­டன. எப்­ப­டியோ நாயுடுவெளி­யில் வந்­து­விட்­டார். ஆக, அவர் மோடி அர­சைத் தீவி­ர­மாக ஆத­ரிக்­கி­றார் என்று நாட்டு மக்­க­ளுக்­குத் தெரி­வித்­து­விட்­டார் என்றே உங்­கள் செய்­தி­யைப் பார்த்து நான் தெரிந்து கொண்­டேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">அதோடு நான் ஒன்றை உங்­க­ளுக்­குச் சொல்ல வேண்­டும். கடந்த ஏப்­ரல் 15 ஆம் தேதி  நீங்­கள் ஒன்­றிய உள்­துறை அமைச்­சர் அமித்­ஷா­வை­யும் சட்ட அமைச்­சர் அர்­ஜூன் மேக்­வா­லை­யும் சந்­தித்­தப் பிறகே 16 ஆம் தேதி இந்­து­வில் உங்­க­ளின் ஆத­ரவு கருத்து வெளி­யா­யிற்று. அதற்­குள் இங்கே கர்­நா­டக துணை முதல்­வர் டி.கே. சிவக்­கு­மார், தெலுங்­கானா முத­ல­மைச்­சர் ரேவந்த் ரெட்டி, கேரள முதல்­வர் பிண­ராய் விஜ­யன் ஆகி­யோர் மூன்று மசோ­தாக்­களை எதிர்த்த செய்­தி­கள் வெளி­வந்­தன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">இவற்­றில் டி.கே.சிவ­கு­மா­ரும், ரேவந்த் ரெட்­டி­யும் தி.மு.க.வை ஆத­ரித்து தமிழ்­நாட்­டில் பரப்­பு­ரைச் செய்­த­னர். கர்­நா­டக முதல்­வர் சித்த ராமையா மசோ­தாக்­களை எதிர்த்து அறிக்கை  வெளி­யிட்­டது ஏற்­க­னவே வெளி­வந்­து­விட்து. இதை­யெல்­லாம் நீங்­கள் பார்த்து இருப்­பீர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">நீங்­க­ளும் டெல்லி அணிக்­கும்  பரப்­பு­ரைச் செய்ய தமிழ்­நாட்­டிற்கு வந்­தீர்­கள். நீங்­கள் மோடி – இ.பி.எஸ். அணியை ஆத­ரித்து பேசத் தொடங்­கி­னீர்­கள். அது அர­சி­யல் அறம். நான் அது குறித்து உங்­க­ளி­டம் எது­வும் கேட்க முடி­யாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">ஏப்­ரல் 20ஆம் தேதி கோவைக்­குப் பரப்­பு­ரைச் செய்ய வந்­தீர்­கள். அதே போல சாத்­தூர், தளி, ஓசூர் போன்ற  சட்­ட­மன்­றத் தொகு­தி­க­ளில் உள்ள உங்­கள் கூட்­டணி வேட்­பா­ளர்­களை ஆத­ரித்­துப் பேசி­னீர்­கள். இறு­தி­யா­கப் பத்­தி­ரி­கை­யா­ள­ரி­டம் தங்­க­ளது கருத்­து­களை எடுத்­துக் கூறி­யி­ருக்­கி­றீர்­கள். பரப்­பு­ரைக் கூட்­டங்­க­ளி­லும் பத்­தி­ரி­கை­யா­ள­ரி­ட­மும் நீங்­கள் கூறி­ய­வை­களை கீழ்க்­கா­ணு­மாறு வரி­சைப்­ப­டுத்­த­லாம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">(1) தி.மு.க.வும் காங்­கி­ர­சும் 33% மக­ளிர் இட ஒதுக்­கீட்டை ஆத­ரிக்­க­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">(2) நேர­டி­யா­கத் தி.மு.க.வை ஒரு கேள்வி கேட்­கி­றேன். எதற்­காக மசோ­தாவை நீங்­கள் எதிர்க்­கி­றீர்­கள்;  அத­னால் என்ன இலா­பம் அடைந்­தீர்­கள்; என்ன சாதித்­து­விட்­டீர்­கள்? தமிழ்­நாடு டெல்­லி­யைத் தோல்­வி­யு­றச் செய்­து­விட்­டது என்று சொல்­கி­றீர்­கள். நீங்­கள் டெல்­லியை வீழ்த்­த­வில்லை. தென்­னிந்­தி­யா­வுக்­குக் கிடைக்க வேண்­டிய பங்­க­ளிப்­பைக் கிடைக்­கா­மல் செய்­து­விட்­டீர்­கள். தென்­னிந்­தி­யா­வுக்­கும் சமூ­கத்­திற்­கும் அநீ­தியை இழைத்­து­வீட்­டீர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">(3) பிர­த­மர் மோடி­யும் ஒன்­றிய அர­சும் 50% இடங்­கள் எல்லா மாநி­லங்­க­ளி­லும் உயர்த்­தித் தரப்­ப­டும் என்று தெரி­வித்து இருக்­கி­றார்­கள். அமித்­ஷா­வும் அதை ஒப்­புக் கொண்டு இருக்­கி­றார்.  தென்­னிந்­தி­யா­வுக்­கு­ரிய பங்­க­ளிப்பு கிடைக்­கும்  என்று தெரி­வித்து இருக்­கி­றார். செய்­வார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">(4) மக­ளி­ருக்­குத் தி.மு.க. மாபெ­ரும் சாத­னை­களை செய்­து­விட்­ட­தா­கச் சொல்­கி­றது. நீங்­கள் என்ன சாதனை செய்­து­விட்­டீர்­கள்? நாட்­டின் மதிப்­பை­யும் மக­ளி­ரின் மதிப்­பை­யும் குலைத்­து­விட்­டீர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">(5) மக­ளிர் இட ஒதுக்­கீடு, தொகுதி மறு­சீ­ர­மைப்பு செய்­யா­மல் நடை­மு­றைப்­ப­டுத்­தி­னால் ஆண்­கள் பாதிக்­கப்­ப­டு­வார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">(6) ஒரு காலத்­தில் இந்த மாநி­லம் முன்­னே­றி­ய­தாக இருந்­தது. சென்னை தென்­னிந்­தி­யா­வின் புகழ்­மிக்­க­தாய் இருந்­தது. அதன் புகழை மெல்ல இழந்து வரு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">(7) மோடி 12 ஆண்­டு­கள் திற­மை­யாக ஆட்சி செய்து வரு­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">(8) ஆந்­தி­ராவை நாங்­கள் முன்­னேற்றி இருக்­கி­றோம். ஹைத­ரா­பாத்­தைப் போல பெங்­க­ளூரு விமான நிலை­யங்­க­ளைப்­போல சென்­னையை மேம்­ப­டுத்­த­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">(9) அம­ரா­வ­தி­யில் 5000 ஏக்­க­ரில் ஒரு விமான நிலை­யத்­தைக் கட்­டு­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">(10) சென்­னை­யைப் பற்றி யாரும் பேசு­வ­தில்லை. சென்னை மக்­கள் அமெ­ரிக்­கா­வுக்­குச் சென்று கொண்டு இருக்­கி­றார்­கள். சுந்­தர் பிச்­சை­யும் அதில் ஒரு­வர். தொழில் நுட்­பங்­களை இந்த அர­சால் தமிழ்­நாட்­டில் பயன்­ப­டுத்­திக் கொள்­ள­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">(11) ஞான­மு­டன் இருந்து நன்­றா­கச் சிந்­தி­யுங்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">(12) நானும் திரா­வி­டன். தமிழ்­நாடு திரா­விட 
நாக­ரி­கத்­தின் மய்­யம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">(13) தமிழ்­நாட்­டில் உள்ள பல தெலுங்கு குடும்­பங்­கள் இந்த மாநி­லத்­தின் வளர்ச்­சிக்கு உத­வு­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">(14) தமிழ்­நாடு, ஆந்­திரா, கர்­நா­ட­கம், கேர­ளம் எல்­லாம் இந்­தி­யா­வின் பகு­தி­கள் – மொழி வேறா­னா­லும் நாம் அனை­வ­ரும் இந்­தி­யர்­கள் வெறுப்­பைப் பரப்­பா­மல் முன்­னேற்­றத்தை நோக்­கிச் செல்­ல­வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">(15) டபுள் என்­ஜின் அர­சு­கள் உள்ள மாநி­லங்­க­ளில் வளர்ச்சி தானாக நடை­பெ­று­கி­றது. இதற்கு மாறாக தமிழ்­நாட்­டில் கடந்த ஐந்து ஆண்­டு­க­ளில் குறிப்­பி­டத்­தக்க வளர்ச்சி எது­வும் இல்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">இப்­படி மனம்­போன போக்­கில் கூறி­யி­ருக்­கி­றீர்­கள். நீங்­கள் மிக­வும் அனு­ப­வம் வாய்ந்­த­வர். மதச்­சார்­பற்ற அணி­க­ளோடு நெருங்­கிய உற­வில் இருந்­த­வர். மாநில உரி­மை­க­ளுக்­குக் குரல் கொடுத்­த­வர். ஆனால் அம­ரா­வதி கட்­டு­மா­னம் உங்­களை மாற்­றி­விட்­டது. உங்­க­ளின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களை மோடி அர­சி­டம் அடகு வைத்­து­விட்டு அர­சி­யல் ஆதா­யம் பெறு­கி­றீர்­கள். அதற்­கா­கத் தி.மு.க.வை மிகக் கடு­மை­யான முறை­யில் விமர்­ச­னம் செய்து வரு­கி­றீர்­கள். இல்­லை­யென்­றால் மோடி சர்க்­கார் உங்­களை நம்­பாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">தி.மு.க. 33% மக­ளிர் இட ஒதுக்­கீட்டை ஆத­ரிக்­க­வில்லை. காங்­கி­ர­சும் ஆத­ரிக்­க­வில்லை என்­கி­றீர்­கள். இது சரியா? 2023 ஆம் ஆண்டு தி.மு.க., காங்­கி­ரஸ் ஆத­ர­வோடு இட­ஒ­துக்­கீடு சட்­டத்தை நிறை­ வேற்­ற­வில்­லையா?  அந்­தச் சட்­டத்­தில், புதி­தாக நடத்­தப்­ப­ட­வி­ருக்­கும் மக்­கள் கணக்­கெ­டுப்பை முடித்­து­விட்டு தொடர்ந்து மறு­சீ­ர­மைப்­பை­யும் முடித்­து­வி­ட­லாம். அதன் பிறகு 33% இட ஒதுக்­கீடு மக­ளி­ருக்கு நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­டும்  என்று இல்­லையா? இப்­போ­தும் தி.மு.க. 543 மக்­க­ளவை உறுப்­பி­னர்­க­ளுள் மக­ளி­ருக்கு மூன்­றில் ஒரு பகுதி ஒதுக்­கீடு செய்ய வேண்­டும் என்றே நாங்­கள் கூறு­கின்­றோம். ஆனால் நீங்­க­ளும் சங்­ப­ரி­வா­ரங்­க­ளும் மக­ளிர்க்கு இட ஒதுக்­கீடு வழங்­கக் கூடாது என்­பது தி.மு.க.வின் கொள்கை போலப் பேசி வரு­கி­றீர்­களே? இது அறமா என்று நீங்­கள் நிதா­ன­மாக சிந்­திக்க வேண்­டும். இப்­படி இருக்க, எங்­களை  நீங்­கள் ஞான­மு­டன் சிந்­திக்­கச் சொல்­கி­றீர்­கள். நீங்­கள் அல்­லவா ‘ஞான மருந்த வேண்­டும்’ மிக­வும் வருத்­தப்­ப­டு­கி­றேன், நாயுடு அவர்­களே!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">நீங்­கள் தி.மு.க.வை நேர­டி­யாக ஒரு கேள்­வி­யைக் கேட்­ப­தா­கச் சொல்­கி­றீர்­கள். மசோ­தாவை எதிர்த்து தோற்­க­டித்­த­தால் என்ன சாதித்து விட்­டீர்­கள், என்ன இலா­பம் அடைந்து விட்­டீர்­கள் என்­கி­றீர்­கள். ஆம்; தமிழ்­நாடு டெல்­லியை வென்­றி­ருக்­கி­றது. தென்­னிந்­தி­யாவை காப்­பாற்றி இருக்­கி­றது. அநீ­தியை நாங்­கள் இழைக்­க­வில்லை. நீதியை நிலை­நாட்டி இருக்­கின்­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">தி.மு.க. அல்­லாத இந்த நாட்­டின் குடி­ம­கள் சக்தி ராஜேஸ்­வரி என்­ப­வர் வலை­த­ளத்­தில் ஒரு 
கருத்­தைக் கூறி­யி­ருக்­கி­றார். நாட்டு மக்­க­ளுக்கு ஒரு எடுத்­துக் காட்­டின் மூலம் விளக்கி இருக்­கி­றார். 
அந்­தக் கருத்தை நாயு­டு­கா­ருக்கு சமர்ப்­பிக்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">‘‘இப்ப நாடா­ளு­மன்­றத்­தில் எம்.பி. எண்­ணிக்கை அதி­கப்­ப­டுத்­து­வது தமிழ்­நாட்­டிற்கு எப்­படி ஆபத்­துன்னு ரொம்ப எளி­மையா சொல்­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">உங்க அப்­பா­வுக்கு நீங்க, உங்க தம்­பின்னு 
மொத்­தம் ரெண்டு பசங்க. உங்­க­ளுக்கு தாத்தா சொத்து  5 ஏக்­கர் இருக்கு. இப்ப உங்­க­ளுக்­கும் 
கல்­யா­ணம் ஆகுது. உங்க தம்­பிக்­கும் கல்­யா­ணம் ஆகுது. இப்ப நீங்க வேலைக்­குப் போயி நல்லா சம்­பா­திச்சு, ஒரே ஒரு குழந்தை பெத்­துக்­கிட்டு நல்லா வாழு­றீங்க. ஆனா, உங்க தம்பி ஊதாரி, குடி­கா­ரன், வேலைக்­குப் போக மாட்­டான். அவ­னுக்­குச் சோறு போட வக்­கில்­லைன்­னாக் கூட 4 புள்­ளை­க­ளைப் பெத்து வெச்­சி­ருக்­கான். கூட்­டுக் குடும்­பமா இருக்­கி­ற­தால நீங்க உழைப்­பதை உங்க  ஊதா­ரித் தம்பி குடும்­ப­மும் உட்­காந்து தின்­னுது. ‘கூட்­டுக் குடும்­பம், என்ன பண்ணி தொலை­ய­றது...’ன்னு சம்­பா­திச்சு குடும்­பத்­துக்­குச் செலவு பண்­ணு­றீங்க.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">இப்ப பூர்­வீக நிலத்தை சொத்தை பிரிக்­க­லாம்னு உங்க அப்பா சொல்­றாரு. மொத்­தம் 5 ஏக்­கர். அண்­ணன் தம்­பிக்கு தலா 2.5 ஏக்­கர் அது­தானே சரி. அது­தானே நியா­யம். ஆனா உங்க அப்பா என்ன சொல்­றாரு. உனக்கு ஒரே ஒரு பையன் உன் தம்­பிக்கு நாலு பசங்க. அத­னால உங்­க­ளுக்­குச் சரியா சொத்து பிரிச்சு தரேன்”னு சொல்லி ஒரு குழந்தை இருக்­கி­ற­தால உனக்கு 1 ஏக்­கர். 4 குழந்தை இருக்­கி­ற­தால 
அவ­னுக்கு நாலு  ஏக்­கர்”னு சொன்னா என்ன பண்­ணு­வோம்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">‘சூப்­பர்ப்பா, அப்­பான்னா நீதான் அப்­பா’னு 
சொல்­வோமா இல்லை.  அப்­பாவா இருந்­தாக் கூட அயோக்­கி­யப் பய­லேன்னு தூக்­கிப்­போட்டு மிதிச்சு 
‘மரி­யா­தையா எனக்கு 2.5 ஏக்­கர் தாடா’ன்னு 
கேட்­போமா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">இங்க பாதிக்­கப்­பட்ட நீங்­கள் தென்­னிந்­திய மாநி­லங்­கள். நாலு பிள்ளை பெத்த ஊதாரி வாழ்க்கை வாழு­ற­வன் வட இந்­திய மாநி­லங்­கள். இப்ப சொல்­லுங்க.”</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5"> 
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">இந்த வலை­தள கருத்­தாளி சொல்­வது என்ன? குடும்­பக் கட்­டுப்­பாட்டை அமல்­ப­டுத்­திய மாநி­லங்­கள் தென்­னிந்­திய மாநி­லங்­கள். மக்­கள் தொகை குறை­வாக ஆகி­விட்­டது. அதன் அடிப்­ப­டை­யில் நாடா­ளு­மன்­றத் தொகு­தி­களை மறு சீர­மைப்­புச் செய்­தால் தொகு­தி­கள் குறை­யும். வட இந்­திய மாநி­லங்­கள் குடும்­பக் கட்­டுப்­பாட்­டுத் திட்­டத்தை அமல்­ப­டுத்­த­வில்லை. அங்கே மக்­கள் தொகை அதி­க­மாக இருக்­கி­றது. அதன் அடிப்­ப­டை­யில் தொகு­தி­களை வரை­ய­றுத்­தால் அவர்­க­ளுக்கு அதிக தொகுதி கிடைக்­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">நாயுடு அவர்­களே தென்­னிந்­தியா இத­னால் பாதிப்பு அடை­யுமே, அத­னால் தொகுதி மறு­சீ­ர­மைப்பு மசோ­தா­வைத் தோற்­க­டித்­தோம். இது சாதனை  அல்­லவா? ஆதா­யம் அல்­லவா? தமிழ்­நாடு டெல்­லியை வீழ்த்­தி­யது நியா­யந்­தானே. இந்­தத் தொண்­டில் – சேவை­யில் தாங்­கள் பங்­கேற்­றி­ருக்க வேண்­டும். ‘தொருக்­குனா இட்­வன்டி சேவா’ எனும் வைர வரி­களை உங்­க­ளுக்கு நான் நினை­வு­ப­டுத்­து­வ­தில் தவறு ஏதும் இருக்க முடி­யாது. நீங்­கள் ஒன்­றிய பா.ஜ.க. அரசை ஆத­ரித்து விட்­டீர்­கள். பெருந்­த­வறு இழைத்­து­விட்­டீர்­கள்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>