<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="30/04/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="38,72,957,1494" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="4"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Thu Apr 30 2026 03:31:32 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260430T000000+5.30" edition.name="CBE" edition.area="CBE" position.section="30042026-CBE-05" position.sequence="05" ex-ref="30042026-CBE-05.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#000000" boxBorderWeight="2">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
<lang class="3" style="Headline1"  font="Arial"  size="15">                                                  </lang>
</hl1>
       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfFrame608900_05_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfFrame609166_05_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfFrame609377_05_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup609072_05_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup610892_05_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup610896_05_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">இன்­னொரு விஷ­யத்தை நாயுடு அவர்­க­ளுக்கு நினைவுபடுத்த விரும்­பு­கி­றேன். நாங்­கள் தி.மு.க. வினர் திரா­விட நாடு பரப்­பு­ரையை 1950களில் மிகக் கடு­மை­யா­கப் பரப்­புரை செய்து கொண்­டி­ருந்­தோம். அப்­போது, தினத்­தந்தி நாளேட்­டின் நிறு­வ­ன­ரும் நாம் – தமி­ழர் இயக்­கத்­தின் தலை­வ­ராக இருந்த சி.பா.ஆதித்­த­னார்  சுதந்­திர தமிழ்­நாடு கேட்டு வந்­தார். அப்­போது அவர் தமிழ்­நாட்டு மக்­க­ளுக்கு ஒரு கருத்தை எடுத்­துச் சொல்­லிக் கொண்டு இருந்­தார். அதற்­கா­கப் பரி­சை­யும் நாட்டு மக்­க­ளுக்கு வழங்­கி­னார். குடும்­பக் கட்­டுப்­பாட்­டுக்கு எதி­ரா­னது அது. அதிக பிள்­ளை­கள் பெற்ற குடும்­பத்­தி­ன­ருக்­குப் பெற்­றோர்க்கு எங்­கள் குடும்­பம்  பெரிசு அந்­தக் குடும்­பத்­தின் ஒளிப் படத்­தி­னைத் தினத்­தந்­தி­யில் வெளி­யிட்டு அவர்­க­ளுக்­குப் பரி­சும் தந்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">சி.பா. ஆதித்­த­னாரை, ‘ஏன் இப்­படி செய்­கி­றீர்­கள்?’ என்று கேட்­டார்­கள். அவர் சொன்­னார், ‘நாம் – தமிழ்­நாட்டு மக்­கள் குடும்­பக் கட்­டுப்­பாட்டை அமல்­ப­டுத்­தி­னால் பிறகு தமிழ்­நாட்­டின் மக்­கள் தொகை குறைந்­து­வி­டும். இத­னால் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளின் எண்­ணிக்கை குறை­யும்’ என்­றார். நாயுடு அவர்­களே ஆதித்­த­னார் சொன்­ன­து­தான் நடந்­தது. அர­சுக்  கொள்­கையை நடை­முறைப்­ப­டுத்தி நாம் பாதிப்­புக்கு ஆளா­கி­றோம். அதனை நடை­மு­றைப்­ப­டுத்­தாத மாநி­லங்­கள் 
அதி­க­மான நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளைப் பெறு­கி­றார்­கள். இது எப்­படி சரி­யா­கும்? ஆகவே நாடா­ளு­மன்­றத் தொகுதி மறு­சீ­ர­மைப்பு மசோ­தா­வைத் தோற்­க­டித்­தோம். இது எப்­ப­டித் தவ­றா­கும்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">நீங்­கள், வல­து­சாரி இரட்­டை­யர்­கள் மோடி­யும் – அமித்­ஷா­வும் 50%  நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளின் எண்­ணிக்­கையை உயர்த்­தித் தரு­வ­தா­கச் சொல்லி இருக்­கி­றார்­களே, அவர்­கள் செய்­வார்­கள் என்று சொல்­கி­றீர்­கள். எப்­போது அதனை அவர்­கள் சொல்­கி­றார்­கள். மசோதா விவா­தத்­தின் போது சொல்­கி­றார்­கள். 50% சேர்த்து தரு­கி­றோம், அனைத்து மாநி­லங்­க­ளுக்­கும் இத­னைத் தரு­கி­றோம். ஒரு மணி நேரம் தாருங்­கள், மசோ­தா­வில் இணைத்து அந்த அதி­க­ரிப்­பைத் தரு­கி­றோம் என்­கி­றார்­கள்.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">இதை உயர்த்தி தென்­னிந்­தி­யர்க்கு பங்­க­ளிப்பை வழங்­கு­வதை விட 25 ஆண்­டு­க­ளுக்கு 543 உறுப்­பி­னர்­களே இருந்­து­விட்டு போகட்­டும். என்­கி­றார் – எங்­கள் தலை­வர் ஸ்டாலின். இப்போ உங்­கள் கருத்­தைச் சொல்­லுங்­கள். இப்­போது உள்­ள­வர்­களுக்கே பேசு­வ­தற்கு மக்­க­ள­வை­யில் நேரம் கிடைப்­ப­தில்லை.மக்­க­ள­வை­யில் உறுப்­பி­னர்­களை 800க்கு மேல் ஆக்­கி­னால் அனை­வ­ருக்­கும்  பேச வாய்ப்பு 
எப்­ப­டிக் கிடைக்­கும்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">தி.மு.க. மக­ளி­ருக்கு எது­வும் செய்­ய­வில்லை, என்ன சாதனை செய்­து­விட்­டீர்­கள் – நாட்­டின் மதிப்­பை­யும் மக­ளி­ரின் மதிப்­பை­யும் குலைத்து விட்­ட­தா­க­வும், சொல்­கி­றீர்­கள். நாயு­டு­காரு இப்­படி ஆகி­விட்­டாரே, மூன்­றாந்­தர பிரச்­சா­ர­கர் ஆகி­விட்­டாரே, என்று நான் பெரி­தும் வருந்­தி­னேன். இது­வன்றி இன்­னொரு குண்­டைத் தூக்­கிப் போட்டு இருக்­கி­றீர்­கள். அது என்­ன­வென்­றால் மக­ளிர் இட ஒதுக்­கீடு, தொகுதி மறு சீர­மைப்பு செய்­யா­மல் போனால் ஆண்­கள் பாதிக்கப்­ப­டு­வீர்­கள் என்று கூறு­கி­றீர்­கள். அது எப்­படி என்று நீங்­கள் விளக்­க­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">பல்­லா­யி­ரம் கோடி ரூபாய்­களை மோடி அர­சி­ட­மி­ருந்து பெறுங்­கள், ஆந்­தி­ராவை மேலும் செழு­மைப்­ப­டுத்­துங்­கள். புதிய தலை­ந­க­ர­மாக அம­ரா­வ­தி­யைக் கட்­ட­மை­யுங்­கள். தி.மு.க.வைக் குறைச் சொன்­னால் உத­வி­கள் கிடைக்­கும் என்­றால் அதனை மேலும் செய்­யுங்­கள், உங்­களை நாட்டு மக்­கள் நன்­றா­கத் தெரிந்து கொள்ள அது உத­வட்­டும், ஆனால் நீங்­கள் தவ­றான அணி­யில் 
இருப்­பதை நாட்டு மக்­கள் மன்­னிக்க மாட்­டார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">ஒரு காலத்­தில் புகழ்­மிக்­க­தாக இருந்த சென்­னைப் புகழை மெல்ல இழந்து வரு­கி­றது என்று சொல்லி இருக்­கி­றீர்­கள். தரு­ம­மிகு சென்னை புக­ழின் உச்­சி­யில் இருந்து வரு­கி­றது. அதன் மவுசு கூடிக் கொண்டே போகி­றது. தெலுங்கை தாய்­மொ­ழி­யா­கக் கொண்ட நடி­கர்­கள், பாட­கர்­கள், இசை அமைப்­பா­ளர்­கள், தயா­ரிப்­பா­ளர்­கள் எல்­லாம் வளர்ந்த சென்னை இது! வளர்த்த சென்னை இது! ஆந்­தி­ரப் பிரி­வி­னைக்­குப் பிறகு மெல்ல ஹைத­ரா­பாத்­துக்கு அவர்­கள் எல்­லாம் சென்று விட்­டார்­கள். இது­வெல்­லாம் உங்­க­ளுக்கு நன்­றா­கத் தெரி­யும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">தென்­னிந்­தி­யா­வுக்கே முதல் பல்­க­லைக் கழ­கம் சென்­னை­யில்­தான் இருந்­தது. ‘எல்­லா­ரும்’ இங்கேதான் படித்­தார்­கள். அந்­தச் சென்­னை­யின் புகழ் இப்­போது குறைந்­து­விட்­ட­தாக நீங்­கள் சொல்­கி­றீர்­கள்.  பரப்­பு­ரைக்கு வந்த உங்­க­ளுக்கு வளர்ச்­சியை ஒப்­பிட்­டுப் பார்க்­கத் தெரி­ய­வில்லை. நாயு­டு­கா­ருவே நீங்­கள்   மகா­பா­ர­தத்து சல்­லி­யன் போல ஆகி­விட்­டீர்­கள். இதற்கு மேல் நான் ஒன்­றும் சொல்­லப்­போ­வ­தில்லை.  சென்னை, ஹைத­ரா­பாத், பெங்­க­ளூர் மாதி­ரி­தான் பரந்­தூர் இங்கே தயா­ரா­கிக் கொண்டு இருக்­கி­றது. நீங்­கள், அம­ரா­வ­தி­யில் மூழ்கி இருக்­கி­றீர்­கள். சென்­னை­யைப் பற்றி நாங்­கள் கவ­லைப்­ப­டா­மலா வளர்ந்து இருக்­கி­றது. சென்னை உங்­க­ளின் தொழில் சாம்­ராஜ்­யத்­தின்  சந்­தை­யாக இருக்­கி­றதே, அது உங்­க­ளுக்கு 
இப்­போது புகழ்­மிக்­க­தாக இருக்­குமே.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">சென்­னை­யி­லி­ருந்து அமெ­ரிக்­கா­வுக்­குச் செல்­கி­றார்­கள் என்­றால் அவர்­க­ளின் மதி நுட்­பம், ஆனால் அதே நேரத்­தில் தொழில் நுட்­பத்­தி­லும் தொழிற்­சாலை­க­ளி­லும் சென்னை பெரு வளர்ச்சி பெற்று இருக்­கி­றது. சென்­னை­யும் அதன் புற­ந­க­ரும் எவ்­வ­ளவு வளர்ச்சி அடைந்­தி­ருக்­கி­றது என்று உங்­க­ளுக்­குத் தெரி­யும். ஆனால் மோடி அர­சில் சிக்­கிக் கொண்டு பயன்­க­ளைப் பெறத் தொடங்கி விட்­டீர்­கள் எனும் போது மோடி­யின் 12 ஆண்டு ஆட்சி – சாதனை ஆட்­சி­யா­கத்­தான் உங்­க­ளுக்­குத் தெரி­யும். ஏன் அவர் கிருஷ்­ண­ரா­க­வும் உங்­க­ளுக்­குத் தெரி­வார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">நாயு­டு­காரு, நீங்­கள் திரா­வி­டன் என்று பத்­தி­ரி­கை­யா­ள­ரின் பேட்­டி­யின் போது மிகப் பெரு­மி­த­மா­கக் கூறி­யி­ருந்­தீர்­கள். அதோடு தமிழ்­நாடு திரா­விட நாக­ரி­கத்­தின் மய்­யம் என்று குறிப்­பிட்டு இருக்­கி­றீர்­கள். மிக்க மகிழ்ச்சி அடைந்­தேன். நீதிக்­கட்­சி­யின் உண்­மை­யான பெயர் ‘South  Indian Liberal Fedaration’ (தென்­னிந்­திய நல­வு­ரி­மைச் சங்­கம்) அப்­போது ஆந்­தி­ரர்­கள் ‘திரா­விட’ எனும் சொல்லை எதிர்த்­தார்­கள். அந்­தச் சொல்­லைப் போட்டு அர­சி­யல் தொடங்­கி­யி­ருந்­தால் தென்­னிந்­தி­யா­வின் நிலையே வேறு­மா­திரி ஆகி­யி­ருக்­கும். இன்று நீங்­கள் ‘திரா­வி­டன்’ என்று சொன்­னதை வர­லாற்­றோடு இணைத்­துப் பார்க்க வேண்­டி­ய­வ­னாக இருக்­கி­றேன். அவ்­வ­ள­வு­தான்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">திரா­வி­ட­ராக இருந்­து­கொண்டு ஆரிய அடி­வ­ரு­டி­க­ளின் சக­வா­சம் உங்­க­ளுக்கு ஏன், நாயுடு அவர்­களே, உங்­கள் சுய­ந­லம்­தான்! எனக்­குப் புரிந்­து­ 
விட்­டது. என்ன செய்­ய­லாம், காலந்­தோ­றும்தென்­னிந்­தி­யா­வுக்கு இப்­படி ஒரு பின்­ன­டைவு ஏதா­வதுஒரு வகை­யில் வந்து நேரு­கி­றது. திரா­விட நாக­ரி­க­மும், திரா­வி­ட­னும் இல்­லா­மல்  ஆகி­வி­டு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">தமிழ்­நாட்­டில் உள்ள தெலுங்­கர்­கள் பற்றி கூறி இருக்­கி­றீர்­கள். நீங்­கள் அர­சி­யல் களத்­தில் புகு­வ­தற்கு முன்பே அவர்­கள் குடும்­பம் குடும்­ப­மா­கத் தமிழை அறிந்து உணர்ந்து தமி­ழ­ராக  வாழ்­ப­வர்­கள், கிறிஸ்­த­வ­மும் இஸ்­லா­மும் தமி­ழுக்கு தமி­ழர்­க­ளுக்­குப் பங்­க­ளிப்பு அளித்­த­தைப் போல தெலுங்கு பேசு­ப­வர்­கள் தமி­ழோடு இணைந்து தமி­ழ­ரா­கிப் போன தனி வர­லாறு பற்றி ஒரு நூலே எழு­த­லாம். ரெட்­டி­யார்­க­ளும் நாயு­டு­கா­ரு­க­ளும் நிரம்­பப்­பேர் இருக்­கி­றார்­கள். ஒரு பட்­டி­யலே தயா­ரிக்­க­லாம். இவர்­க­ளுள் திரா­விட இயக்­கத்­திற்கு என்று சிறப்­பாக பாடு­பட்­ட­வர்­கள் உண்டு. இப்­போ­தும் பணி­யாற்­றிக் கொண்டு இருக்­கி­றார்­கள். நாங்­கள் எல்­லாம் தமி­ழ­ரா­கவே ஆகி வளர்ச்­சியை நோக்கி விரைந்து கொண்டு இருக்­கின்­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">சோமலெ, ஓமந்­தூர் இரா­ம­சாமி ரெட்­டி­யா­ரின் வாழ்க்கை வர­லாற்றை எழு­தி­யி­ருக்­கி­றார். அதில் ஓர் இடத்­தில் ஓமந்­தூ­ரார், ‘என்­னு­டைய தாயார்  தமி­ழும் தெலுங்­கும் கலந்­து­தான் பேசு­வார். தனித்­தெ­லுங்கு பேசு­வ­தில்லை. நாங்­கள் எல்­லாம் தமிழ்­தான் பேசு­கின்­றோம்’ என்று குறிப்­பிட்டு இருக்­கி­றார். இவர்­க­ளெல்­லாம் தமி­ழ­ரா­கிப் போன­வர்­கள் இல்­லையா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">அண்­ணா­மலை ரெட்­டி­யார் காவ­டிச் சிந்து பாடி­னார். உவ­மைக் கவி­ஞர் சுரதா ‘அமு­தம் தேனும் எதற்கு?’ என்று பாடல் புனைந்­தார். உடு­மலை நாரா­ய­ண­கவி ‘கன்­னித்­த­மிழ் சாலை­யோ­ரம்’ எனும் பாடலை இயற்­றி­னார். பி.சுசீலா பார­தி­தா­ச­னின் ‘தமி­ழுக்கு அமுது என்று பேர்’ எனும் பாடலை இசைத்­தார். தமி­ழும் தெலுங்­கு­மாய் கைகோத்து இருப்­பதை காலக் கண்­ணா­டிக் 
காட்­டு­கி­றதே.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">திரு­ம­லை­யில் நாள்­தோ­றும் பாடும் சுப்­ர­பா­தம் எழு­தி­ய­வர் அன்­ன­மாச்­சா­ரி­யார். அதைப் பாடி­ய­வர் எம்.எஸ். அன்­ன­மாச்­சா­ரி­யார் நாலா­யி­ரத்­திற்கு உரை எழு­தி­யி­ருக்­கி­றார். வர­த­ரா­ஜூலு நாயுடு ‘தமிழ்­நாடு’ எனும் பெய­ரில் நாளேட்டை நடத்­தி­ய­வர். அதில் பணி­யாற்­றி­ய­வர் என்.டி.சுந்­த­ர­வ­டி­வேலு. அதி­சய மனி­த­ராய் வாழ்ந்­த­வர் 
ஜி.டி.நாயுடு. இந்­தச் சால்பும் சான்­றாண்­மை­யும் தமி­ழும் தெலுங்­கும் அல்­லவோ?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">பெரி­யார், ‘எனக்­குத் தாய்­மொழி கன்­ன­டம். தெலுங்கு நன்­றா­கப் பேசு­வேன். எனக்­குப் படிக்க எழுத தமிழ் மட்­டுமே தெரி­யும். ஆந்­திர நாட்­டில் பேசிய தமிழ் தெலுங்கு, கர்­நா­ட­கத்­தில் பேசிய தமிழ் கன்­ன­டம், கேர­ளத்­தில் பேசிய தமிழ் மலை­யா­ளம்’ என்­றார். இப்­படி அவர் பேசி­ய­தற்கு தென்­னிந்­திய மொழி­க­ளுக்­கி­டையே உள்ள உற­வு­தான் கார­ணம். எடுத்­துக்­காட்டு:வீடு என்­ப­தற்கு – இல்­லம் (தமிழ்) இல்லு (தெலுங்கு) வீடு (மலை­யா­ளம்) மனெ (கன்­ன­டம்) இத­னால்­தான் பெரி­யார் 
அப்­ப­டிச் சொன்­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">அறி­ஞர் அண்ணா, அவ­ரது தாயார் பங்­காரு அம்­மாள், சிற்­றன் னையார் இரா­ஜா­மணி 
அம்­மை­யார், அண்­ணா­வின் சகோ­தரி நாக­ரத்­தி­னம் அம்­மாள், இவர்­க­ளு­டைய  மகள் சௌந்­திரா அம்­மாள் ஆகி­யோர் சர­ள­மா­கத் தெலுங்­குப் பேசக் கூடி­ய­வர்­கள். அண்­ணி­யார் ராணி அம்­மாள், 
பரி­ம­ளம் போன்­ற­வர்­க­ளுக்­குத் தெலுங்­குப் பேசத் தெரி­யாது. இத­னை­ அண்­ணி­யார் ராணி அம்­மாவே எழு­தி­யி­ருக்­கி­றார். தமிழ்­நாட்­டில் தெலுங்கு அப்­படி ஒரு  சமூ­கத் தேவை­யாகி விட்­டது. நாயுடு அவர்­களே. ஆகவே வளர்ச்சி நிலை­யில் தெலுங்­கர் என மறந்து அவர்­கள் எங்­க­ளோடு தமிழராகிப் போனார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">இன்­னும் ஒன்­றை­யும் சொல்­கி­றேன். திரா­விட இயக்­கத்­தின் விடி­வெள்ளி டாக்­டர் சி.நடே­ச­னார் தெலுங்­கைத்­தான் ஆரம்­பப் பள்­ளி­யில் சேர்ந்து இறு­தி­வரை படித்­தார். பிற­கு­தான் தமி­ழைக் கற்­றார். அப்­ப­டி­யொரு கால நிலை அது. ஆகவே வளர்ச்சி நிலை­யில் நாங்­கள் தமி­ழ­ராய் 
இருக்­கின்­றோம் நாயுடு அவர்­களே.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">நடி­க­மணி டி.வி.நாரா­ய­ண­சாமி, நடி­க­வேள் 
எம்.ஆர். ராதா, பட்­டுக் கோட்டை அழ­கர்­சாமி, ஏ.பி.ஜனார்த்­த­னம், சி.பி.சிற்­ற­ரசு, கே.ஜி.இராதா ம­ணா­ளன் என இப்­படி எழுத்­தி­லும் பொது வாழ்க்­கை­யி­லும் கலை உல­கி­லும் இன்­னும் பலர் தெலுங்­கைத் தாய்­மொ­ழி­யா­கக் கொண்டு தமி­ழ­ராய் ஆனார்­கள் – தமி­ழா­கிப் போனார்­கள் என்­பதை உங்­க­ளுக்­குத் தெரி­விக்க விரும்­பு­கி­றேன். அவர்­க­ளுக்கு தமிழ்­நாடு பற்­றிய வளர்ச்­சி­தான் மேலோங்கி நிற்­கி­றது. இப்­ப­டிப் பல சாத­னை­யா­ளர்­கள் இருக்­கி­றார்­கள். ஒரு கட்­டு­ரை­யில் அத்­தனை பெய­ரை­யும் சொல்­லி­விட முடி­யாது. ‘எந்­தரோ மகா­நு­பா­வலு அந்­த­ரக்கி வந்­த­னம்’ சேஸ்தானு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">தென்­னிந்­தி­யா­வின் மொழி­கள் எல்­லாம் சமஸ்­கி­ருத கலப்­பால் தனி தேசி­யத்­தன்மை பெற்­று­விட்­டன. தமிழ்­தே­சம், (நாடு) தெலுங்­கு­தே­சம், கர்­நா­ட­கம், கேர­ளம் என இன்று ஆகி­விட்­டன. இந்­திய ஒன்­றி­யத்­தில் இணைந்து இருக்­கின்­றோம். அவ்­வற்­றிக்­கு­ரிய உரி­மை­களை நாம் கோரி நிற்­கின்­றோம். ஒன்­றி­யம் அதனை வழங்­கி­னால் தானே முன்­னே­றிச் செல்ல முடி­யும். நீங்­கள் இந்­தி­யப் பகு­தி­கள் என்று சொல்­வ­தைப் பார்த்­தால் இந்­தி­யாவை ஒப்­புக் கொள்­ளா­மல் தி.மு.க. மறுத்­தது போல் நீங்­கள் கூறு­வது சரி­யில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">டபுள் எஞ்­சின் வளர்ச்­சிப் பற்றி பேசி இருக்­கி­றீர்­கள். கடந்த ஐந்து ஆண்­டு­க­ளில் குறிப்­பி­டத்­தக்க வளர்ச்சி தமிழ்­நாடு அடை­ய­வில்லை என்று 
பேசி இருக்­கி­றீர்­கள். இதற்­குப் பதிலைத் தீக்­க­திர் நாளேடு (22.04.2026) உங்­க­ளுக்கு எடுத்­துக் கூறி­யி­ருக்­கி­றது. அத­னைக் கீழே தரு­கி­றேன். 
படித்­துப் பாருங்­கள்.¬¬¬¬
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">நாயுடு அவர்­களே, உங்­க­ளுக்­குத் தென்­னிந்­திய மாநி­லங்­க­ளின் மீது உண்­மை­யி­லேயே பிடிப்புஇருக்­கி­றது. பேட்­டி­யின் போது பெரு­மி­தத்­தோடுதங்­க­ளைத்  ‘திரா­வி­டன்’ என்று பிர­க­ட­னப்­ப­டுத் ­திக் கொண்டு இருக்­கி­றீர்­கள். எம்.ஜி.ஆர். தென்­னிந்­திய முதல்­வர்­கள் மாநாட்டை 1983இல் பெங்­க­ளூ­ரில் கூட்­டி­னார். 1989இல் வள்­ளு­வர் கோட்­டத்­தில் கலை­ஞர் முதல்­வர் பொறுப்பு 
ஏற்­றுக் கொண்­ட­போது  ஒன்­று­பட்ட ஆந்­தி­ரா­வின் முதல்­வ­ராக என்.டி.ஆர். வந்­தி­ருந்­தார்.  தேவை­யான போது எல்­லாம் அவர் தென்­ன­கத்­தின் ஒற்­று­மைக்­கும் சாத­னை­கள் நிகழ்த்­து­ வ­தற்­குத் துணை­யாக இருந்­தார். எங்­கள் முதல்­வர் ஸ்டாலி­னும் தென்­னிந்­தி­யா­வின் 
ஒற்­று­மையை வலி­யு­றுத்­தியே பேசி வரு­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14">நீங்­கள் தி.மு.க.வை எவ்­வ­ளவு வேண்­டு­மா­னா­லும் விமர்­ச­னம் செய்­யுங்­கள். நாடா­ளு­மன்­றத் தொகுதி மறு­சீ­ர­மைப்பு மசோதா தோல்வி அடைய நீங்­க­ளும் உதவி இருந்­தால் நன்­றாக இருந்­தி­ருக்­கக்­கூ­டும். இப்­ப­டிப்­பட்ட சேவை செய்ய வாய்ப்­புக் கிடைத்து இருக்­கும் என்­ப­த­னால் ‘தொருக்­குனா இட்­வன்ட்டி சேவா’ என்று இக்­க­டி­தத்­திற்­குத் தலைப்­பிட்டு இருக்­கின்­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14">தென்­ன­கத்­திற்கு தேசிய ஜன­நா­ய­கக் 
கூட்­டணி ஒன்­றும் செய்­யாது. நீங்­கள் அந்த அணி­யிலி­ருந்து வெளி­யேறி விடுங்­கள். ஒன்­றி­யத்­தில் ஒரு புதிய அரசை உரு­வாக்­கு­வோம். மோடி – அமித்ஷா கூட்­டணி  ஆரிய வர்த்­தத்தை  ஸ்தாபிக்க வந்த அணி. நீங்­களோ ‘திரா­வி­டன்’ என்­கி­றீர். அதைக் காப்­பாற்­ற­வும் ‘தொருக்­குனா இட்­வன்டி சேவா’ என்­பதை மனத்­தில் இருத்­தி­யும் தேசிய ஜன­நா­ய­கக் கூட்­ட­ணி­யி­லி­ருந்து – மோடி அணி­யி­லி­ருந்து வில­கி­ வி­டுங்­கள். இதை செய்ய முன் வாருங்­கள். தி.மு.க.வை விமர்­ச­னம் செய்து பயன் இல்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">			</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="17">இப்­ப­டிக்கு</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="16.5">ஓர் ‘அரை­குறை’ பாம­ரன்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>