<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="30/04/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="38,63,957,1494" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Thu Apr 30 2026 03:50:27 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260430T000000+5.30" edition.name="TRY" edition.area="TRY" position.section="30042026-TRY-07" position.sequence="07" ex-ref="30042026-TRY-07.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#000000" boxBorderWeight="2">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="TAUN_Kurinji" fontStyle="Regular" size="52">அனைத்துத் தரப்பு மக்களுக்கான சீரான வளர்ச்சித் திட்டங்களால்</lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="1_TAUN_Bramma" fontStyle="Regular" size="61">தமிழ்நாடு முழுவதுமே தி.மு.க.வின் அசைக்க முடியாத கோட்டையாக மாறும்!</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="36">தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி. பேட்டி! </lang>
	</hl3>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="KanimozhiMP_07_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">சென்னை, ஏப்.30–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">கழக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி. அவர்கள் 28.04.2026 தேதியிட்ட – ‘தினகரன்’நாளிதழின்இணைப்பான ‘தேர்தல் டைரி’ – இதழுக்கு அளித்த பேட்டி வருமாறு:–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">செய்தியாளர்:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="12">தி.மு.க.வில் இந்த முறை தேர்தலில் போட்டியிட நிறைய இளம் பெண் வேட்பாளர் களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">கனிமொழி கருணாநிதி எம்.பி.:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">பெண்க ளுக்கான அரசியல் அதிகாரமளித்தல் என்பது அடிப்படை சமூகநீதி. இந்த முறை நாங்கள் போட்டியிடும் 164 தொகுதிகளில் 19 இடங்க ளில் பெண்களுக்கு வாய்ப்பளித்துள்ளோம். உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கான இடஒதுக்கீட்டை முதலில் கொண்டுவந்து, அடிமட்ட அளவில் புரட்சியை ஏற்படுத்தியது தலைவர் கலைஞர் தலைமையிலான 
தி.மு.க.  அரசுதான். அந்த அடித்தளத்திலிருந்து உருவாகும் இந்த இளம் தலைமுறையினர், வருங்காலத்தில் சட்டமன்றங்களில் பெண்க ளின் குரலை இன்னும் வலுவாக எதிரொலிப் பார்கள் என்பது உறுதி. அடுத்த முறை இது இன்னும் அதிகரிக்க வேண்டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">சமூக நீதியை நிலைநாட்டவே திட்டங்கள்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">செய்தியாளர்:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">மகளிர் உரிமைத் தொகை, பெண்களுக்கு விடியல் பயணம், புதுமைப் பெண் திட்டம் என இப்படி பெண்களுக்கு முன்னேற்றத்துக்கும், வாழ்வாதாரத்துக்கும் தி.மு.க.  உதவியாக இருக்கிறது. இந்த திட்டங் களால் பெண்களின் ஓட்டு தி.மு.க.வுக்கு சாதகமாக இருக்குமா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">கனிமொழி கருணாநிதி எம்.பி.:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தி.மு.க.  வாக்குகளுக்காகத் திட்டங்களைத் தீட்டுவ தில்லை. சமூக நீதியை நிலைநாட்டவே திட்டங்களை உருவாக்குகிறோம். பெண் களுக்கு நேரடியாக நிதியுதவி வழங்குவது அவர்களின் வாங்கும் திறனை அதிகரிக்கிறது. இதன் மூலம் ஒட்டுமொத்தப் பொருளாதார மும் வளர்கிறது என்று பல பொருளாதார வல்லுநர்கள் கூறுகிறார்கள். 'மகளிர் உரிமைத் தொகை', 'விடியல் பயணம்' போன்ற திட்டங்கள் உழைக்கும் மகளிரின் சமூக - பொருளாதாரச் சுமையைக் குறைத்து, அவர்கள் சுதந்திரமாகச் செயல்பட  வழி வகுத்துள்ளன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">அனைத்து தரப்பு மக்களுக்கான 
தேர்தல் அறிக்கை!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">செய்தியாளர்:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12"> </lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="12">தி.மு.க.  தேர்தல் அறிக்கை யில் இல்லத்தரசிக்கு ரூ.8000 கூப்பன் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் விவசாயிகள், மீனவர்கள், தொழில்துறையி னருக்கு சலுகைகள் அறிவிக்கப்
பட்டுள்ளது. மக்களிடம் தி.மு.க.  தேர்தல் அறிக்கைக்கு வரவேற்பு உள்ளதா? இதை எப்படி நீங்கள் பார்க்கிறீர்கள்?</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">கனிமொழி கருணாநிதி எம்.பி.:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">வருமான வரி செலுத்தாத குடும்பங்களின் இல்லத்தரசி களுக்கு, வீட்டு வேலை சுமையைக் குறைக்க வாஷிங் மெஷின், மைக் ரோவேவ் ஓவன் போன்ற சாதனங்களை வாங்கவோ, மாற்றவோ 8,000 கூப்பன் வழங்கும் 'இல்லத்தரசி்' திட்டம் ஒரு முக்கிய முன்னெடுப்பாக இருக்கும். இது அவர்களின் விருப்பத்திற்கு முன்னுரிமை அளிக்கும் திட்டம். விவசாயிகளுக்கு மீட்டர்கள் இல்லாத மின் மோட்டார், மாணவர்களுக்கு மடிக் கணினி, 50 லட்சம் வேலைவாய்ப்புகள் என அனைத்துத் தரப்பு மக்களின் தேவை களையும் ஆராய்ந்து உருவாக்கப்பட்ட தேர்தல் அறிக்கை இது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">மக்களிடமிருந்து 80,000 ஆலோசனைகள்!
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">செய்தியாளர்:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="12">தி.மு.க.  தேர்தல் அறிக்கை எப்போதும் கதாநாயகன் தான். இந்த முறை தேர்தல் அறிக்கையை முதல்வர் மு.க.ஸ்டா லின் சூப்பர் ஸ்டார் என்று சொல்லி உள்ளார். தேர்தல் அறிக்கையை அனைத்து தரப்புக்குமானதாக எப்படி தயார் செய்தீர்கள். தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவான உங்களிடம் மக்கள் என்னென்ன கோரிக்கைகள் வைத்தார்கள்? எவ்வளவு நாளில் அறிக்கையை தயார் செய்தீர்கள்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">கனிமொழி கருணாநிதி எம்.பி.:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இந்த அறிக்கையைத் தயாரிக்க, பல வகைகளிலும் மக்களின் கருத்துகளைக் கேட்டுள்ளோம். நேர டியாக சந்தித்தோம். தொழில்நுட்பத்தின் உதவியுடன் ஏ.ஐ. வலைவாசல் ஒன்றை உருவாக்கி மக்களின் கோரிக்கைகளைப் பெற்றோம். இவற்றின் மூலம் 80,000 ஆலோசனைகள் மக்களிடமி ருந்து வந்தன. குடும்பத் தலைவிகளுக்கான உரிமைத் தொகையை உயர்த்த வேண்டும் என்பதும், காலை உணவுத் திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும் என்பதும் மக்களின் நேரடிக் கோரிக்கைகள், அதைத்தான் நாங்கள் தேர்தல் அறிக்கையாக மாற்றி முதலமைச் சர் அவர்கள் சொன்னது போல இதனை இந்தத் தேர்தலின் 'சூப்பர் ஸ்டார்' ஆக உருவாக்கியுள்ளோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">நாடாளுமன்ற உறுப்பினராக 
எனது கடமை!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">செய்தியாளர்:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="12">தமிழ்நாட்டின் குரல் களாக தி.மு.க.  எம்.பி.க்களின் குரல் கள் நாடாளுமன்றத்தில் எப்போதும் ஓங்கி ஒலிக்கும். தற்போது தமிழக பிரச்சினைக்காக நீங்கள் நாடாளு மன்றத்தில் பேசும் பேச்சுகள், எழுப்பும் கேள்விகள் கடும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. உங்கள் பேச்சு களின் வீடியோக்கள் வைரலாக்கப்படுகிறது. நாடாளுமன்றத்தின் கர்ஜனை மொழி என்று முதல்வர் மு.க.ஸ்டாலினே பாராட்டி உள்ளாரே. இதை எப்படி பார்க்கிறீர்கள்?</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">கனிமொழி கருணாநிதி எம்.பி.:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இது எனக்கான தனிப்பட்ட புகழாரம் அல்ல; இது தமிழ்நாட்டு மக்களின் குரலுக் கான அங்கீ காரம். நாடாளுமன்றத்தில் நான் எழுப்பிய 93 கேள்விகளும், 27 விவாதங்களும் மாநிலத்தின் உண்மையான தேவைகளைமையப்படுத்தியவை. காப்பீடு மற்றும் மருந்துகளுக்கான ஜி.எஸ்.டி.யை நீக்க வேண்டும். ஒடுக்கப்பட்ட மக்கள், சிறுபான்மையினர், மகளிர் உரிமைகள், தமிழ்நாட்டு மீனவர் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும் போன்ற மக்கள் சார்ந்த பிரச்சினைகளை உறுதியோடு முன்வைப்பது உள்ளிட்டவை ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக எனது கடமை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">ஒன்றிய அரசின் வஞ்சகச் செயல் இது!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">செய்தியாளர்:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="12">நாடாளுமன்றத்தில் மகளிருக்கு 33% இடஒ துக்கீட்டை கொண்டு வர புதிய மசோதாவை ஒன்றிய அரசு தாக்கல் செய்தது. இதன் மூலம் தொகுதி மறுவரையறை செய்யப்பட்டு தென்மாநிலங்களில் எம்.பி.க்களின் பிரதிநிதித்துவத்தை குறைக்க ஒன்றிய அரசு முயல்வதாக குற்றம்சாட்டப்படுகிறதே?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">கனிமொழி கருணாநிதி எம்.பி.:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ஆம், இது முற்றிலும் உண்மையான குற்றச் சாட்டு. 33% மகளிர் இடஒதுக்கீடு அரசியல் களத்தில் பெண்கள் கொண்டிருக்கும் உரிமை; இதை நாங்கள் முழுமையாக ஆதரிக்கிறோம். ஆனால், அதை நடை முறைப்படுத்த மக்கள் தொகைக்கணக் கெடுப்பு மற்றும் தொகுதி மறுவரையறை போன்ற நிபந்தனைகளை விதிப்பது அப்பட்டமான அரசியல் தந்திரம். மக்கள் தொகையைச் சிறப்பாகக் கட்டுப் படுத்திய தென்மாநிலங்களைத் தண்டிக்கும் வகை யில், இந்த மசோதாவைப் பயன்படுத்தி தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்களின்நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தைக் குறைக்கும் ஒன்றிய அரசின் வஞ்சகச் செயலை நாங்கள் நாடாளுமன்றத்தில் மிகக் கடுமை யாக எதிர்த்துள்ளோம். மக்களவையில் உள்ள 543 இடங்களில் 33 சதவீதம் மகளிர் இடஒதுக்கீட்டை கொடுத்தால் நாங்கள் ஆதரிக்க தயார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">தொகுதி மறுவரையறைக்கு 
பின்னால் இருக்கும் சதி!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">செய்தியாளர்:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12"> </lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="12">இந்த மசோதா மூலம் வடமாநிலங்களுக்கு மட்டுமே தொகுதிகள் ஏறுவது எப்படி? தென் மாநிலங்களுக்கு தொகுதி குறைவது எப்படி?</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="12">நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசின் சட்ட விரோத திட்டங் களை கடுமையாக எதிர்ப்பதால், தமிழ் நாட்டின் குரல்வலையை நெரிக்க இந்த ஆயுதத்தை ஒன்றிய அரசு கையில் எடுக்கிறதா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">கனிமொழி கருணாநிதி எம்.பி.:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தொகுதி மறுவரையறை என்பது மக்கள் தொகையை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு செய்யப்பட்டால், மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தத் தவறிய வட மாநிலங் களுக்கு அதிக தொகுதிகளும், திட்டங்களைச் சிறப்பாகச் செயல் படுத்தி மக்கள் தொகையைக் கட்டுப்படுத்திய தமிழ்நாட்டிற்குத் தொகுதிகள் குறையும் அபாயமும் ஏற்படும். நாடாளு மன்ற தொகுதிகளின் எண்ணிக்கை இப்போது 543 ஆக இருக்கிறது. இதனை 816-–850 ஆக அதிகரிக்க தோற்கடிக்கப்பட்ட மசோதா வின் மூலம் ஒன்றிய அரசு திட்டமிட் டது. அப்படி நடந்தால், BIMARU மாநிலங் கள் என்று அழைக்கப்படும் பீகார், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், உத்தர பிரதேசம் ஆகிய தற்போது பா.ஜ. ஆட்சியில் உள்ள வட மாநிலங்களின் தொகுதி எண்ணிக்கை 420 ஆக உயரும் என்று கணக்கிடப்படுகிறது. அதே நேரத்தில் தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்கள், மேற்கு வங்கம், ஜார்கண்ட் மாநிலங்களின் நாடாளுமன்ற உறுப்பி னர்கள் எண்ணிக்கை 275 ஆக மட்டுமே உயரும். பா.ஜ. ஆளும் வட மாநிலங்களை மட்டும் கைப்பற்றி னால் போதும் நிரந்தரமாக ஆட்சியில் இருந்து விடலாம் என்று கணக்குப் போடுகிறது பா.ஜ. தென் மாநிலங்களின் தயவு தேவையில்லை. இதுதான் தொகுதி மறுவரையறைக்குப் பின்னால் இருக்கும் சதிச் செயல்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">பா.ஜ.க.வின் இரட்டை வேடத்தை 
மக்கள் அறிவார்கள்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">செய்தியாளர்:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12"> </lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="12">வடமாநிலங்களில் நடந்த தேர்தலின்போது, தமிழர்களை இழிவாக பேசிய ஒன்றிய அமைச்
சர்கள் தற்போது தமிழ்நாட்டில் வந்து இந்த மாநிலத்துக்காக நிறைய செய்து உள்ளோம் என்று ஓட்டு கேட்கி றார்கள். பிரதமர் மோடியும் இதே சொல்கிறார். உண்மையில் தமிழ் நாட்டில் நிதியை அள்ளி வழங்கி னார்களா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">கனிமொழி கருணாநிதி எம்.பி.:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இயற்கை பேரிடர்கள் மற்றும் வெள்ளத்தால் தமிழ்நாடு தத்தளித்தபோது தமிழ்நாடு அரசு கோரிய நிவாரண நிதியைக் கூட அவர்கள் ஒதுக்க வில்லை. இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். மாநிலத்திற்கான நிதியை வழங்க மறுத்து வஞ்சித்த தேசிய ஜன நாயகக் கூட்டணிக்குத் தமிழ்நாடு "பூஜ்ஜி யத்தை” தான் அளிக்கும். மேலும், பிற மாநிலத் தேர்ல்களின் போது தமிழ் மக்களை இழிவுப்படுத்துவதும், தமிழ்நாட்டில் தேர்தல் என்றால், தமிழ்ப் பற்று நாடகம் போடுவதும் பா.ஜ.வின் வாடிக்கை. தேர்தலுக்காகத் தமிழ்நாட்டிற்கு வந்து நாடகமாடும் இவர்க ளின் இரட்டை வேடத்தைத் தமிழ்நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">முற்றிலும் அரசியல் உள்நோக்கம் கொண்டவை!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">செய்தியாளர்:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="12">பெண்களின் பாதுகாப்பு தமிழ்நாட்டில் மோசமாக உள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகிறார்களே. அதே நேரத்தில் பெண்களுக்கு பாது காப்பான நகரம் சென்னை என்று ஒன்றிய அரசு தரவுகள் தெரிவிக்கிறது. இதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">கனிமொழி கருணாநிதி எம்.பி.:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">பெண் களுக்கு எதிரான குற்றங்களின் விகிதத்தில் தமிழ்நாடு தேசிய சராசரியை விட மிகக் குறைவாக உள்ளது. தேசிய சராசரி 65.3% ஆக இருக்கும் நிலையில், தமிழ்நாட்டில் அது 23.2%மட்டுமே. 2023ம் ஆண்டுக்கான தேசிய குற்ற ஆவணக் காப்பக்கத்தின் தரவுகளின்படி, பெண்க ளுக்கு எதிரான குற்ற வழக்குகள் உத்தரப்பிரதே சத்தில் 66,381, மகாராஷ்டிராவில் 47,101, ராஜஸ்தானில் 45,450, மத்திய பிரதேசத்தில் 32,342 ஆக உள்ளன. ஆனால் தமிழ்நாட்டில் அது 8,943 குற்றங்களாக பதிவாகிவுள்ளது. இதையும் முற்றிலும் குறைக்கவேண்டும் என் பதே எங்களின் நோக்கம். எதிர்க்கட்சி களின் குற்றச்சாட்டுகள் முற்றிலும் அரசியல் உள் நோக்கம் கொண்டவை. தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் தரவுகளின்படியே, பா.ஜ. ஆளும் வடமாநிலங்களை விடத் தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மிகக் குறைவு. இது மட்டுமின்றி, தமிழ்நாட்டில் 43% காவல் நிலையங்கள்பெண் அதிகாரிகளால் வழிநடத்தப்படுகின்றன.சென்னை போன்ற நகரங்கள் பெண்க ளுக்கான பாதுகாப்பில் இந்தியா விற்கே முன்மாதிரியாக விளங்கு வதை ஒன்றிய அரசின் தரவுகளே உறுதி செய்கின்றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">நீதியை நிலைநாட்டுவதே</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">சிறந்த நிர்வாகம்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">செய்தியாளர்:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12"> </lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="12">தமிழக அரசு மற்றும் போலீசாரின் அதிரடி நடவடிக்கை களால் பெண்களுக்கு எதிரான குற்றங் கள் குறைந்து உள்ளது. போக்சோ வழக்குகள் தொடர்பாக ஏற்படுத்தப் பட்ட விழிப்புணர்வு காரணமாக நிறைய புகார்கள் வருகிறது. இந்த வழக்குகளில் விரைந்து நடத்தப்பட்டு தீர்ப்பு பெற்று தரப்பட்டுள்ளது என்று முதல்வர் கூறுகிறார். பொள்ளாச்சி வழக்குகள் தீர்ப்புபெற்று தரப்
பட்டுள்ளது. ஆனால் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சனம் வைக்கிறார் களே?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">கனிமொழி கருணாநிதி எம்.பி.:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">விழிப்
புணர்வு அதிகரிப்பதால் புகார்களின் எண்ணிக்கை கூடுகிறது; இதனை குற்றங்கள் அதிகரித்துவிட்டதாக எதிர்க்கட்சி கள் திரித்துக் கூறுவது அறியாமை. காவல் துறை மற்றும் பள்ளிகளில் போக்சோ சட்டம் குறித்து விரிவான விழிப்புணர்வு ஏற்படுத்தப் பட்டதால்தான், பாதிக்கப்பட்டவர்கள் தயக்க மின்றி முன்வந்து புகாரளிக்கின்றனர். மேலும், பெண்களுக்கு எதிரான வழக்கு களை விசாரிக்க விரைவு நீதி மன்றங்கள் அமைக்கப்பட்டு, குற்றவாளிகளுக்கு விரை வாகத் தண்டனை பெற்றுத் தரப்படுகிறது. குற்றங்களை மறைக்கும் மாநிலங்களுக்கு மத்தியில், புகார்களைப் பதிவு செய்து நீதியை நிலைநாட்டுவதே சிறந்த நிர்வாகம். அதை தான் இந்த தி.மு.க.  அரசு செய்திருக்கிறது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">செய்தியாளர்:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="12">நடிகர் விஜய்யின் த.வெ.க. வருகை இந்த தேர்தல் களத்தில் எப்படி இருக்கும்? இவர் வருகையால் எந்தக் கட்சிக்கு பாதிப்பு? இவர் பின்னால் சென்று ரசிகர்கள் தொடர்ந்து விபத்தில் சிக்கினார்களே. இதை எப்படி பார்க்கிறீர்கள்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">கனிமொழி கருணாநிதி எம்.பி.:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">கொள்கை ரீதியான எவ்வித அடித்தளமும் இல்லாமல், அரசியலை தனக்கான தனிப்பட்ட பரிசோதனைக்களமாகப் பயன்படுத்த நினைக்கும் இதுபோன்ற முயற்சிகள், தமிழ்நாட்டு அரசியலில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது. ரசிகர்கள் தொடர்ந்து விபத்தில் சிக்குவதைப் பற்றி கேட்டீர்கள். அது மிகுந்த வேதனை யளிக்கும் விஷயம். மக்களின் வாக்குகளைக் கேட்பதற்கு முன், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொறுப் புணர்வை அவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">சித்தாந்தமற்ற ஒரு கட்சி 
தி.மு.க.வுக்கு போட்டியாக முடியாது!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">செய்தியாளர்:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="12">தி.மு.க.–த.வெ.க. வுக்கும் இடையேதான் போட்டி என்று விஜய் கூறி உள்ளார். ஆனால், பிரச்சாரத்துக்கே ரெஸ்ட் எடுத்து தான் வெளியே வந்து உள்ளார். மக்களுக்கான அரசியல் தலைவர் என்று கூறிக்கொண்டு இவ்வாறு செய்தால் மக்கள் ஏற்பார்களா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">கனிமொழி கருணாநிதி எம்.பி.:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">மக்களின் வாழ்வாதாரத்தையும், மாநில உரிமை யையும் காக்கும் தீவிரமான போர்க்களம் தான் அரசியல், சமூக நீதியையும் மாநில சுயாட்சியையும் காக்க முக்கால் நூற்றாண் டுக்கும் மேலாகத் தொடர்ந்து களத்தில் நிற்கும் தி.மு.க.விற்கு, சித்தாந்தமற்ற ஒரு கட்சி ஒருபோதும் போட்டியாக முடியாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">திராவிட மாடலின் கொள்கை வெற்றி!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">செய்தியாளர்:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="12">தமிழ்நாடு அரசு கொண்டு வந்த மகளிருக்கான உரிமைத்தொகை, இலவச பஸ் பயணம், தமிழ் புதல்வன், புதுமைப்பெண் திட்டம் போன்ற பல திட்டங்களை செயல்படுத்த முடியாது என கூறிய பா.ஜ.வினர், இன்று அவர்கள் ஆளும் மாநிலங்களில் இந்த திட்டங்களை காப்பி அடித்து உள்ளார்கள். இதேபோல், இந்த திட் டங்கள் நிறைவேற்ற முடியாது என கூறிய எடப்பாடி பழனிசாமியும் அ.தி.மு.க.  தேர்தல் அறிக்கையில் கூறி உள்ளாரே?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">கனிமொழி கருணாநிதி எம்.பி.:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இதுவே திராவிட மாடலின் கொள்கை வெற்றி! தொடக்கத்தில் இந்தத் திட்டங்களை 'இலவசம்' என்று கேலி செய்த பா.ஜ., இன்று அவற்றின் தாக்கத்தை உணர்ந்து பிற மாநி லங்களில் அப்படியே பின்பற்றுகின்றது. அதே போல, மக்களுக்கான தேவையைத் தாமே முடிவு செய்து 'பிரிட்ஜ்' தருவதாக 
அ.தி.மு.க.  அறிவிக்கிறது. ஆனால், தி.மு.க.  இல்லத்தரசிகளுக்கு ₹8,000 கூப்பன் வழங்கி, அவர்களுக்குத் தேவையான பொருட்களை அவர்களே தேர்வு செய்யும் உரிமையை (Freedom of Choice) வழங்கியுள்ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">தமிழ்நாடே தி.மு.க.வின் கோட்டைதான்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">செய்தியாளர்:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="12">தி.மு.க.வுக்கு எப்போதுமே தெற்கு மற்றும் மேற்கு மாவட்டங்கள்தான் கை நழுவி போகும் என்று கூறப்படுகிறது. ஆனால், 2021ம் ஆண்டு முதல் தென் மாவட்டங்கள் தி.மு.க.வின் கோட்டையாக மாறி வருகிறது. இதேபோல் மேற்கு மாவட்டமும் இந்த முறை தி.மு.க.வின் கோட்டையாக மாறுமா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">கனிமொழி கருணாநிதி எம்.பி.:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">2021ல் நாங்கள் வெற்றிபெற்ற பிறகு, கொடுத்த 505 வாக்குறுதிகளில் 404-ஐ நிறை வேற்றிக் காட்டியுள்ளோம். இந்த உழைப்பிற்கும் நேர்மைக்கும் மக்கள் மத்தியில் மிகப்பெரிய அங்கீகாரம் கிடைத்துள்ளது. மேற்கு மாவட்டங்களில் மட்டுமன்றி, எங்களின் அனைத்துத் தரப்பு மக்களுக்கான சீரான வளர்ச்சித் திட்டங்களால், இந்த முறை தமிழ்நாடு முழுவதுமே தி.மு.க. வின் அசைக்க முடியாத கோட்டையாக மாறும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இவ்வாறு கழக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி. பேட்டியளித்தார்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Bramma" fontStyle="Regular" size="13">நன்றி:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">‘‘தினகரன்’’</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">‘தேர்தல் டைரி’</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">28.04.2026</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>