<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="01/05/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="37,70,959,920" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Thu Apr 30 2026 15:25:35 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260501T000000+5.30" edition.name="CBE" edition.area="CBE" position.section="01052026-CBE-06" position.sequence="06" ex-ref="01052026-CBE-06.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#000000" boxBorderWeight="3">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="76">கழகத் தலைவரை இந்தியா வியந்து பார்ப்பது ஏன்? </lang>
	</hl2>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup612611_06_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="2" source="ThalaivarStali_06_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">தே</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ர்­தல் களம் 2021ல் களை கட்­டி­
யி­ருந்த நேரம். முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் இல்­லாத சட்­ட­மன்­றத் தேர்­த­லைத் திரா­விட முன்­னேற்­றக் கழ­கம் முதன்­மு­றை­யாக சந்­திக்­கி­றது. உடன்­பி­றப்­பு­க­ளி­டம் நம்­பிக்­கை­யும் உழைப்­பும் வெளிப்­பட்­டா­லும் ஒரு பதற்­ற­மும் உள்­ளூர இருக்­கத்­தான் செய்­தது. உழைத்­துக் கொண்டே இருக்­கும் கழ­கத் தலை­வ­ரின் நம்­பிக்கை அபா­ர­மா­னது. அண்ணா அறி­வா­ல­யம் முகப்­பில் ‘கவுண்ட் டவுன்’ கடி­கா­ரத்­தைப் பொருத்­தச் செய்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தேர்­தல் முடி­வு­கள் வெளி­யாக இன்­னும் எத்­தனை நாட்­கள், எத்­தனை மணி நேரம், எத்­தனை நிமி­டம், எத்­தனை நொடி என்­ப­தைக் காட்­டக்­கூ­டிய அந்த கடி­கா­ரத்­தில் நேர­மும் நாளும் குறைந்து கொண்டே வரும்­போது பல­ரது மன­தும் பதை­ப­தைக்­கி­றது. வாக்­குப்­ப­தி­வுக்­கும் வாக்கு எண்­ணிக்­கைக்­கும் அப்­போது ஏறத்­தாழ மூன்று வாரங்­க­ளுக்கு மேல் இடை­வெளி இருந்­த­தால் பதற்­றம் தொற்­று­கி­றது. இவ்­வ­ளவு வெளிப்­ப­டை­ யாக எதிர்க்­கட்­சி­க­ளும் ஊட­கங்­க­ளும் தெரிந்து கொள்­ளும்­ப­டி­யான சவாலை கழ­கத் தலை­வர் எதிர்­கொள்­கி­றாரே என்ற யோச­னை­யும் பல­ருக்­கும் இருந்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">மே 2ஆம் நாள் தேர்­தல் முடி­வு­கள் வெளி­யா­கத் தொடங்­கின. உத­ய­சூ­ரி­யன் உதிக்­கும் நேரம் வந்­தது. அது உச்சி சூரி­ய­னாக வந்த பகல் 1 மணி­ய­ள­வில் திரா­விட முன்­னேற்­றக் கழ­கம் ஆறா­வது முறை­யாக ஆட்சி அமைப்­ப­தும், தனிப் பெரும்­பான்­மை­யு­டன் ஆட்சி அமைப்­ப­தும் உறு­தி­யான நிலை­யில், மதி­யம் 2 மணி வாக்­கில் கவுண்ட் டவுன் நிறை­வ­டைந்து, கடி­கா­ரம் அணைக்­கப்­பட்­டது. இது­தான் கழ­கத் தலை­வ­ரின் தெளி­வான – திட­மான தொலை­
நோக்­குப் பார்வை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தன் மீதான உழைப்­பின் மீது மட்­டு­மல்ல, கழ­கத்­தின் கடைக்­கோடி உடன்­பி­றப்­பின் உழைப்­பின் மீதும் நம்­பிக்கை வைத்­து­தான் அந்த கவுன்ட் டவுன் கடி­கா­ரத்தை அறி­வா­ய­ல­யத்­தின் முகத்­தில் பொருத்­தச் செய்­தார். வெற்றி பெறு­வ­தற்­கான அத்­தனை உழைப்­பை­யும் அவரே முன்­னின்று செய்­தார். அதே உழைப்பை உடன்­பி­றப்­பு­க­ளும் செய்­யும்­படி வியூ­கம் வகுத்­தார். வென்று காட்­டி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12">‘முத்­து­வேல் கரு­ணா­நிதி ஸ்டாலின் எனும் நான்’ என்று அவர் ஆளு­நர் மாளி­கை­யில் பத­விப் பிர­மா­ணம் எடுத்­த­போது, அவர் முகம் மட்­டும் நிமி­ர­வில்லை. இந்­தி­யாவே அவ­ரைத் திரும்­பிப் பார்த்­தது. தமிழ்­நாடு எனும் மாநி­லத்­தின் முத­ல­மைச்­ச­ராக மட்­டு­மல்ல, இந்­தி­யா­வில் உள்ள அனைத்து மாநி­லங்­க­ளின் உரி­மை­க­ளைக் காக்­கும் போரா­ளி­யாக அவர் சுடர் முகம் தூக்­கி­னார். மத்­திய அரசு என்­பதை ஒன்­றிய அரசு எனக் குறிப்­பிட்­ட­போது, பேர­றி­ஞர் அண்ணா– முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் வழி­யி­லான மாநில சுயாட்­சி­யின் குரல் ஒலித்­தது. இந்­திய நாடா­ளு­மன்­றத்­தில் தமிழ்­நாட்டு எம்.பி.க்களின் குரல் போர் முழக்­க­மா­னது.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">டெல்லி Vs தமிழ்­நாடு என்று கழ­கத் தலை­வர் முன்­வைத்­தது வெறும் தேர்­தல் முழக்­க­மல்ல. கூட்­டாட்சி இந்­தி­யா­வில் சுயாட்­சி­மிக்க மாநி­லங்­க­ளுக்­கான பிர­க­ட­னம். ஒரு மாநி­லத்­தின் சட்­ட­மன்­றத் தேர்­தலை இந்­தி­யாவே கவ­னிக்­கும் தேர்­த­லாக மாற்­றிய பெரு­மை­யும் அவ­ருக்­கே­யு­ரி­யது. தமிழ்­நாட்­டு­டன் தேர்­தலை சந்­தித்த மாநி­லங்­க­ளான மேற்­கு­வங்­கம், கேர­ளம் ஆகி­யவை ஒன்­றிய பா.ஜ.க அர­சால் தமிழ்­நாட்­டைப் போலவே பல வஞ்­ச­கங்­களை சந்­தித்து வரும் மாநி­லங்­கள். அங்­குள்ள மக்­க­ளுக்­கும் சேர்ந்து ஒலித்த குரல்­தான், கழ­கத் தலை­வ­ரின் குரல்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தமிழ்­நாட்­டைத் திட்­ட­மிட்டு வஞ்­சிக்­கும் ஒன்­றிய பா.ஜ.க. அர­சுக்கு எதி­ரா­கத் துணிச்­ச­லு­டன் தன் செயல்­பா­டு­க­ளைக் கடந்த ஐந்­தாண்டு கால­மும் தொடர்ந்து மேற்­கொண்­ட­வர் தமிழ்­நாடு முத­ல­மைச்­ச­ரான நம் கழ­கத் தலை­வர். 2019ஆம் ஆண்டு நடை­பெற்ற நாடா­ளு­மன்­றத் தேர்­த­லில் இந்­தி­யா­வில் வேறெந்த மாநி­லத்­தி­லும் இல்­லாத வகை­யில், மத­வாத பா.ஜ.க.வுக்கு எதி­ரான அர­சி­யல் கட்­சி­களை கொள்கை ரீதி­யாக ஒருங்­கி­ணைத்து மதச்­சார்­பற்ற முற்­போக்கு கூட்­ட­ணி­யைக் கட்­டி­ய­மைத்து, தமிழ்­நா­டு–­பு­துச்­சேரி உள்­ளிட்ட 40 தொகு­தி­க­ளில் 39 தொகு­தி­க­ளில் வெற்­றியை உறுதி செய்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இந்த தமிழ்­நாடு ஃபார்­மு­லா­தான் 2024ல் ‘இந்­தியா’ கூட்­டணி என நாடு தழு­விய அள­வில் அமை­வ­தற்கு கார­ண­மாக அமைந்­தது. எந்­தெந்த மாநி­லங்­க­ளில் எந்­தெந்த கட்­சி­கள் வலு­வா­ன­தாக இருக்­கி­றதோ அவை அந்­தந்த மாநி­லங்­க­ளில் அதிக தொகு­தி­க­ளில் போட்­டி­யிட்டு, மீத­முள்­ள­வற்றை மற்ற கட்­சி­க­ளுக்கு பகிர்ந்­த­ளித்­தல் என்­கிற சிந்­த­னை­யை­யும் முன்­வைத்­த­வர் நம் கழ­கத்­த­லை­வர். 2024 நாடா­ளு­மன்­றத் தேர்­தல் களத்தை ‘இந்­தியா’ கூட்­டணி அப்­ப­டித்­தான் எதிர்­கொண்­டது. அதன் விளைவு முக்­கி­ய­மா­னது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அதற்கு முந்­தைய இரண்டு நாடா­ளு­மன்­றங்­க­ளில் தனித்து ஆட்­சி­ய­மைத்த பா.ஜ.க. இம்­முறை தனி மெஜா­ரிட்டி பெற முடி­யாத மைனா­ரிட்டி அர­சாக அமைந்­தது. கடந்த இரண்டு நாடா­ளு­மன்­றங்­க­ளில் மக்­க­ள­வை­யில் எதிர்க்­கட்­சித் தலை­வரே இல்­லாத நிலை உரு­வா­னது. கழ­கத் தலை­வ­ரின் வழி­காட்­டு­த­லில் அமைந்த ‘இந்­தியா’ 
கூட்­ட­ணி­யால் இந்­திய தேசிய காங்­கி­ரஸ் கட்சி ஏறத்­தாழ 100 இடங்­க­ளில் வென்று, ராகுல் காந்தி அவர்­கள் மக்­க­ளவை எதிர்க்­கட்­சித் தலை­வ­ரா­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ராமர் கோயில் கட்­டிய அயோத்­தியை உள்­ள­டக்­கிய நாடா­ளு­மன்­றத் தொகு­தி­யி­லேயே பா.ஜ.க. தோற்­க­டிக்­கப்­பட்­டது.  உத்­த­ர­பி­ர­தே­சத்­தில் பா.ஜ.க. கண்­டி­ருந்த கன­வைத் தகர்த்­தெ­றிந்­தார். சமாஜ்­வாடி கட்­சித் தலை­வர் அகி­லேஷ் யாதவ். தமிழ்­நாட்­டில் 40க்கு 40 என்ற முழு­மை­யான வெற்­றி­யைப் பெற்று இமா­லய சாதனை புரிந்­தது கழ­கத் தலை­வ­ரின் வழி­ந­டத்­து­த­லில் 
பய­ணித்த இந்­தியா கூட்­டணி.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12">நாடா­ளு­மன்­றத்­தில் மெஜா­ரிட்டி இல்­லாத ஆளுங்­கட்சி, பலம் வாய்ந்த எதிர்க்­கட்­சி­கள் என களத்­தின் நிலையை மாற்­றிக் காட்­டிய சூத்­தி­ர­தாரி ஆனார் நம் கழ­கத்­த­லை­வர். அவர் நாடா­ளு­மன்­றத்­தில் இல்லை. ஆனால், ஒன்­றிய ஆளுங்­கட்­சிக்கு அவர் சிம்ம சொப்­ப­ன­மா­னார்.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">பா.ஜ.க. அல்­லாத கட்­சி­கள் ஆட்சி செய்­யும் மாநி­லங்­க­ளில் ஆளு­நர் மூல­மாக இணை அர­சாங்­கம் நடத்த நினைத்த ஒன்­றிய அர­சின் எண்­ணம் தமிழ்­நாட்­டில் நிறை­வே­றாத வகை­யில், ஆளு­ந­ரின் அடா­வடி நட­வ­டிக்­கை­க­ளுக்கு எதி­ராக உச்­ச­நீ­தி­மன்­றத்­தில் சட்­டப்­போ­ராட்­டம் நடத்தி வெற்றி கண்­டார். சட்­ட­மன்­றத்­தில் ஆளு­நர் உரை­யின்­போது ஆளு­நரே வெளி­ந­டப்பு செய்­யும் நிலைமை உரு­வா­னது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">எதிர்க்­கட்­சி­கள் ஆட்சி செய்­யும் மாநி­லங்­க­ளில் அபாண்ட பழி­க­ளை­யும்–­அ­வ­தூ­று­க­ளை­யும் பரப்பி, ஒன்­றிய பா.ஜ.க அரசு தனது பரி­வா­ரங்­க­ளான அம­லாக்­கத்­துறை, சி.பி.ஐ, வரு­மா­ன­வ­ரித்­துறை, என்.ஐ.ஏ ஆகி­ய­வற்றை ஏவி  நட­வ­டிக்­கையை மேற்­கொள்­வதை வாடிக்­கை­யாக வைத்­துள்­ளது. தமிழ்­நாட்­டில் உள்ள திரா­விட மாடல் அரசு இந்­தப் பூச்­சாண்­டி­க­ளுக்­குப் பயப்­ப­டா­மல் தன் பணி­யைத் தொடர்ந்து மேற்­கொண்­ட­து­டன், ஒன்­றிய பா.ஜ.க அர­சால் ஏவப்­ப­டும் அம­லாக்­கத்­து­றை­யின் உண்மை முகத்தை நாடே அறி­யும் வகை­யில், அங்­கித் திவாரி என்ற அம­லாக்­கத்­துறை ஊழல் அதி­காரி மீது சட்ட நட­வ­டிக்கை எடுத்து கைது செய்து மாநில அர­சின் அதி­கா­ரம் என்ன என்­பதை டெல்லி பாது­ஷாக்­க­ளுக்­குக் காட்­டி­னார் நம் முத­ல­மைச்­சர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தமிழ்­நாடு என்­றைக்­குமே டெல்­லிக்கு அவுட் ஆஃப் கண்ட்­ரோல்­தான் என்­பதை சொல்­லாக மட்­டு­மின்றி, செய­லா­க­வும் நிரூ­பிக்­கும் வகை­யில், கலை­ஞர் மக­ளிர் உரி­மைத் தொகை­யான மாதம் 1000 ரூபாயை தேர்­தல் விதி­மு­றை­க­ளைக் காட்டி நிறுத்­து ­வ­தற்­கும் பா.ஜ.க.வும் அதன் அடி­மைக் கூட்­ட­ணி­க­ளும் முயற்சி செய்­வதை முன்­கூட்­டியே உணர்ந்து, பிப்­ர­வரி 13 அதி­கா­லை­யில் பொழுது விடி­வ­தற்கு முன்பே 1கோடியே 31 இலட்­சம் மக­ளி­ருக்கு 3 மாதங்­க­ளுக்­கான உரி­மைத்­தொ­கை­யை­யும், கோடைக்­கால சிறப்­புத் தொகை­யை­யும் சேர்த்து 5000 ரூபா­யாக அவ­ர­வர் வங்­கிக் கணக்­கில் வரவு வைத்து டெல்­லியை அதிர வைத்­த­வர் கழ­கத் தலை­வர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">மக்­கள்­தொகை அடிப்­ப­டை­யில் தொகுதி வரை­யறை எனும் ஒன்­றிய பா.ஜ.க அர­சின் திட்­டத்­தால், மக்­கள்­தொ­கையை முறை­யா­கக் கட்­டுப்­ப­டுத்தி நாட்­டின் வளர்ச்­சிக்­குத் துணை நின்ற தமிழ்­நாடு உள்­ளிட்ட தென் மாநி­லங்­க­ளும்  ஏனைய சில மாநி­லங்­க­ளும் பாதிக்­கப்­ப­டும் என்­பதை ஏறத்­தாழ ஓராண்­டுக்கு முன்பே எச்­ச­ரிக்கை மணி அடித்­த­து­டன், அது குறித்து ஆலோ­சிப்­ப­தற்கு பல மாநி­லங்­க­ளின் முத­ல­மைச்­சர்­ களை­யும், கட்­சித் தலை­வர்­க­ளை­யும் சென்­னைக்கு அழைத்து கலந்­தா­லோ­சனை மாநாடு நடத்­தி­ய­வ­ரும் தமிழ்­நாடு முத­ல­மைச்­ச­ரான நம் கழ­கத் தலை­வர் அவர்­கள்­தான்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அவர் எச்­ச­ரித்­த­து­போ­லவே, வஞ்­சக ஒன்­றிய பா.ஜ.க. அரசு, மக­ளி­ருக்­கான 33% இட­ஒ­துக்­கீடு எனும் பசுந்­தோ­லைப் போர்த்தி, தொகுதி மறு­வ­ரை­யறை எனும் புலியை அதற்­குள் ஒளித்து வைத்து நிறை­வேற்ற முயன்­ற­போது, அதனை சரி­யாக அடை­யா­ளம் கண்டு, கூட்­ட­ணிக் கட்­சித் தலை­வர்­க­ளி­டம் வலி­யு­றுத்தி, நாடா­ளு­மன்­றத்­தில் மூன்­றில் இரண்டு பங்கு ஆத­ரவு இல்­லாத வகை­யில் எதிர்க்­கட்­சி­க­ளின் ஒருங்­கி­ணைப்பை மேற்­கொண்டு சட்­டத் திருத்த மசோ­தாவை முறி­ய­டித்­துக் காட்­டி­னார் நம் திரா­விட நாய­கர். பிர­த­மர் மோடி தலை­மை­யி­லான பா.ஜ.க அரசு பத­விக்கு வந்த 12 ஆண்­டு­க­ளில் நாடா­ளு­மன்­றத்­தில் எதிர்­கொண்ட முதல் தோல்­விக்கு முதன்­மைக் கார­ண­மாக அமைந்­த­வர் நம் தலை­வர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">பா.ஜ.க.வைத் தோற்­க­டித்­தது மட்­டு­மின்றி, இந்­திய ஜன­நா­ய­கத்­தை­யும் மாநில உரி­மை­க­ளை­யும் அர­ச­மைப்­புச் சட்­டத்­தின் மாண்­பை­யும் காப்­பாற்­றிய பெரு­மைக்­கு­ரி­ய­வ­ராக கழ­கத் தலை­வரை இந்­தியா வியந்து பார்க்­கி­றது. நடப்­பது மாநில சட்­ட­மன்­றத்­திற்­கா­னத் தேர்­தல் என்­ற­போ­தும், அதைத் தமிழ்­நாடு என்ற எல்­லை­யு­டன் சுருக்­கா­மல், தி.மு.க. Vs அ.தி.மு.க. என்று மட்­டுமே பார்க்­கா­மல், புதி­தாக முளைத்து முறுக்­கிக் கொண்­டி­ருக்­கி­ற­வர்­க­ளைப் பற்­றிக் கவ­லைப்­ப­டா­மல், தமிழ்­நாடு இது­வரை கண்­டி­ராத வகை­யில் 4 தேர்­தல் களங்­க­ளா­கத் தொடர்­கின்ற கொள்­கைக் கூட்­ட­ணியை கட்­டுக்­கோப்­பு­டன் முன்­னெ­டுத்து, மேலும் சில கட்­சி­க­ளை­யும் சேர்த்­துக்­கொண்டு டெல்லி Vs தமிழ்­நாடு என்ற பரந்த அள­வி­லான நோக்­கத்­து­டன் தேர்­தல் களத்தை எதிர்­கொண்ட மகத்­தா­னத் தலை­வ­ராக நம் முத­ல­மைச்­சர் உயர்ந்து நிற்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">கார­ணம், மத­நல்­லி­ணக்­க­மும் சமூக நீதி­யும் இணைந்து சிறப்­பான வளர்ச்­சி­யை­யும் அமை­தி­யான சூழ­லை­யும் கொண்­டுள்ள தமிழ்­நாட்­டிற்­குள் அ.தி.மு.க.வின் தோளில் ஏறி, நுழைய முயற்­சிக்­கும் பா.ஜ.க.வின் சதியை முறி­ய­டிக்­கும் தேர்­தல் இது என்­பதை மிகத் தெளி­வாக உணர்ந்தே நம் தலை­வர் டெல்லி Vs தமிழ்­நாடு என இதனை முன்­னெ­டுத்­தார். மக்­க­ளின் 
பேரா­த­ர­வைப் பெற்­றுள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12">அண்ணா அறி­வா­ல­யம் முகப்­பில் இந்­தத் தேர்­த­லி­லும் கவுன்ட் டவுன் கடி­கா­ரம் இயங்­கிக் கொண்­டி­ருக்­கி­றது. கடந்த தேர்­த­லைப் போலவே இந்த முறை­யும் வாக்கு எண்­ணிக்கை நாளான மே 4ஆம் நாள் நண்­ப­க­லில் உச்­சிக்கு சூரி­யன் வரும்­போது, உத­ய­சூ­ரி­ய­னும் அதன் தோழ­மைக் கட்சி சின்­னங்­க­ளும் மகத்­தான வெற்­றி­யைப் பெற்­றி­ருக்­கும் என்­பது நிச்­ச­யம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12">முத­ல­மைச்­ச­ராக தலை­வர் தொடர்­வார். தமிழ்­நாடு வெல்­லும்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>