<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="01/05/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="504,67,957,1495" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="2"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Fri May 01 2026 03:36:53 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260501T000000+5.30" edition.name="CHN" edition.area="CHN" position.section="01052026-CHN-06" position.sequence="06" ex-ref="01052026-CHN-06.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#000000" boxBorderWeight="2">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Bramma" fontStyle="Regular" size="45">புதி­ய­ எ­ழுச்­சி­ பெ­று­வோம்!</lang>
	</hl2>
<hl1 id="Headline1" class="1" style="Headline1">
<lang class="3" style="Headline1"  font="Arial"  size="15">                                                  </lang>
</hl1>
       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfFrame613655_06_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="2" source="maydaylogoco_06_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="3" source="BWShanmugamMP_06_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bramma" fontStyle="Regular" size="30">அ</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">மெ­ரிக்­கா­வில் அதி­காலை முதல் அந்தி சாயும் வரை வேலை செய்­யும் ஒரு நிலை இருந்­தது. இத­னால் ஏற்­பட்ட மனக்­கு­மு­றல்­களை அமெ­ரிக்க தொழி­லா­ளர்­கள் 19ம் நூற்­றாண்­டின் தொடக்­கத்திலேயே வெளிக்­காட்­டி­னர். பதி­னாறு, பதி­னெட்டு மணி­நே­ரம் வேலை செய்ய வேண்­டும் என்­பது சாதா­ர­ண­மாக எடுத்­துக் கொள்­ளப்­பட்­டது.  1806ம் ஆண்டு பில­டெல்­பியா நகர தொழி­லா­ளர்கள் வேலை நிறுத்­தத்­தில் ஈடு­பட்­ட­னர்.  1820 மற்­றும் 1830களில் வேலை நேரத்­தைக் குறைக்க வேண்டும் என்று பற்­பல வேலை நிறுத்­தங்­கள் நாட்­டில் நடை­பெற்­றன. 10 மணி­நே­ரம் என்ற கோரிக்கை பல தொழில் மையங்­க­ளின் முன்வைக்­கப்
­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">பில­டெல்­பியா நகர எந்­தி­ரத் தொழி­லா­ளர்­க­ளின் சங்­கம்­தான் உல­கின் முதற்­சங்­க­மாக கரு­தப்­படுகிறது.  இத்­தொ­ழிற்­சங்­கம் உரு­வான இரு ஆண்டுகளுக்­குப் பின்­தான் இங்­கி­லாந்­தில் தொழிற்­சங்கங்­கள் உரு­வா­கத் தொடங்­கின.  10 மணி நேர வேலை­நாள் என்ற கோரிக்­கையை வலி­யு­றுத்தி 1827ல் பில­டெல்­பி­யா­வில் கட்­டி­டம் கட்­டும் தொழி லாளர்­கள் நடத்­திய வேலை நிறுத்­தத்­தில்­தான் இந்­தக் கோரிக்கை பிர­தா­ன­மாக வைக்­கப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">1834ல் நியூ­யார்க்­கில் ரொட்டி தொழி­லா­ளர்­கள் வேலை நிறுத்­தம் செய்­த­னர்.  இந்த ரொட்டி தொழிலாளர்­கள் எகிப்­திய அடி­மை­க­ளைக் காட்­டி­லும் அதி­கம் துன்­புற்­ற­னர். நாள் ஒன்­றுக்கு அவர்­கள் 18 மணி­யி­லி­ருந்து 20 மணி நேரம் வரை வேலை செய்ய வேண்­டிய நிலை இருந்­தது.  இதன் விளை வாக, தொழிற்­சங்க இயக்­கத்­தின் அதி­வேக வளர்ச்­சி­யால் 1850களில் புதிய உத்­வே­கத்தை அடைந்­தது. முத­லா­ளித்­து­வத்­தின்­கீழ் தொழிலாளர்­கள் சுரண்­டப்­பட்ட எல்லா வள­ரும் நாடு­களிலும் இப்­போ­ராட்­டங்­கள் தலை­தூக்க ஆரம்­பித்தன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஆஸ்­தி­ரே­யா­வில் கட்­டி­டத் தொழி­லா­ளர்­கள் 8 மணி நேர வேலை, 8 மணி நேர பொழு­து­போக்கு, 8 மணி நேர ஓய்வு என்ற கோரிக்­கையை முன் வைத்து போராடி, அதை அடை­வ­தில் வெற்­றி­யும் பெற்­ற­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இதன் விளை­வாக உள்­ளூர் தேசிய தொழிற்­சங்கங்­கள் ஒன்­றி­ணைந்து ஒரு கூட்­ட­மைப்பை ஏற்படுத்த வேண்­டிய அவ­சி­ய­மும், எழுச்­சி­யும் உருவானது.  1866ம் ஆண்டு ஆகஸ்ட் 20ம் நாள் பால்­டி­மோர் எனும் இடத்­தில் தேசிய தொழிற்­சங்கத்தை உரு­வாக்­கி­னார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தேசிய தொழிற்­சங்­கத்­தின் முதல் மாநாடு 1866ல் நடை­பெற்­றது. அதில் அமெ­ரிக்கா முழுமைக்­கும், 8 மணி 
நேர வேலை­தான் என்­பதை சட்டமாக்க வேண்­டும். அதன் மூலம் மட்­டுமே முத லாளித்­துவ அடி­மைத்­த­னத்­தி­லி­ருந்து இந்­நாட்­டின் தொழி­லா­ளியை காப்­பாற்ற முடி­யும். அதற்­காக நாம் நம்­மு­டைய சக்தி அனைத்­தை­யும் ஒன்­று­தி­ரட்ட
வேண்­டு­மென தீர்­மா­னம் நிறை­வேற்­றி­னார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அதன்­வி­ளை­வாக, 1886ம் ஆண்டு அமெ ரிக்கா, சிகாகோ நக­ரில் அடி­மைப்­பட்­டுக் கிடந்த தொழி­லா­ளர்­களை ஒருங்­கி­ணைத்து தங்­க­ளது உரி­மை­களை கேட்டு, போராட்­டம் நடத்தி, பலர் தங்­கள் அங்­கங்­க­ளை­யும், தன்­னு­யி­ரை­யும் இழந்தனர். இறு­தி­யாக, உரிமை கிடைத்த நாளாக தொழி லாளர்­கள் உரி­மையை மீட்­டெ­டுத்த நாள் மே நாள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">உழைப்­ப­வர்­கள் நினை­வில் நிறுத்­த­வேண்­டிய நாள்; உழைப்­ப­வன் உரி­மைக்­காக தியா­கம் செய்த நாள்;  உழைப்­ப­வன் தனக்­கு­ரிய உரி­மை­களை புரிந்து கொண்ட நாள்;  தங்­க­ளது உரி­மைக் காக உழைப்­ப­வர்­கள் தங்­களை அழித்­துக் கொண்ட நாள்;  உழைப்­ப­வன் தன் விடிவை நோக்­கிச் செல்ல தன் உதி­ரத்தை சிந்தி பாதை அமைத்த நாள்;  உழைப்­ப­வன் முன்­னேற, தம்­மு­டைய கல்­லறை களை படிக்­கல்­லாக்­கித் தந்த நாள்;  நம் முன்­னோர்களின் தியாக நினைவு நாள்; நாம் வணங்­கு­வோம், வணங்கி உழைக்­கும் வர்க்­கம் உலகை ஆள பாடு­ப­டு­வோம்’’.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">முதன்­மு­த­லில் தமி­ழ­கத்­தில்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">மே தினம் கொண்­டா­டப்­பட்­டது!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">  
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தந்தை பெரி­யார் அவர்­கள் ரஷ்யா சென்று வந்த பிறகு சோஷ­லிச கருத்­துக்­களை திரா­விட இயக்­கக் கருத்­துக்­க­ளோடு ஒன்­றாக இணைத்து திரா­விட இயக்­கங்­கள், தொழி­லா­ளர் உரி­மைக்காக என்­றும் போரா­டும் என்று கொள்­கைப் 
பிர­கட னம் செய்­தார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தமி­ழ­கத்­தில் முதன்­மு­த­லில் மே தினம் கொண்­டா­டப்
­பட்­டது.  சிந்­த­னைச் சிற்பி சிங்­கார வேலர் தான் முதன்­மு­த­லில் மே தினக் கூட்­டத்தினை 1923ம் ஆண்டு சென்­னை­யில் நடத்­தி­னார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">திரா­விட இயக்­கத்­திற்கே உரி­யது!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தமிழ்­நாட்­டில் திரா­விட இயக்­கத்­திற்­கென ஒரு வர­லாறு உண்டு. நாம் தொழிற்­சங்­கத்­திற்கு புதியவர்­கள் அல்ல.  இந்­தி­யா­வில் தொழிற்­சங்க இயக்கத்தை தலைமை தாங்கி நடத்­திய பெருமை திரா­விட இயக்­கத்­திற்கே உரி­யது.  1918ம் ஆண்டிலேயே நாகை­யில்­தான் இர­யில்வே தொழி­லா­ளர்க்கென ஒரு தொழிற்­சங்­கம் அமைக்­கப்­பட்­டது.  அந்­நா­ளில் அந்த தொழிற்­சங்­கத்தை தலைமை தாங்கி நடத்­தி­ய­வர் திரா­விட பரம்­ப­ரை­யில் வந்த ரங்­கோன் பக்­கி­ரி­சா­மிப்­பிள்ளை என்­ப­வர்­தான்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">தொழி­லா­ளர்­கள் மத்­தி­யில் விழிப்­பு­ணர்வு!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தொழி­லா­ளர்­கள் உழைப்பை சுரண்­டிக் கொண்டிருந்த வெள்­ளைக்­கார ஏகா­தி­பத்­தி­யத்தை எதிர்த்து, இர­யில்வே தொழி­லா­ளர்­கள் பல போராட் டங்­களை நடத்­தி­னர். அப்­போ­ராட்­டத்­தில் தமிழ்த் தென்­றல் திரு.வி.க., சிந்­த­னைச்­சிற்பி சிங்­கார வேலர், டாக்­டர் வர­த­ரா­ஜுலு நாயுடு, வ.உ.சிதம்­ப­ரம் பிள்ளை,  சுப்­பி­ர­ம­ணிய சிவா, தந்தை பெரி­யார் ஆகி­யோர் தொழி­லா­ளர்­கள் மத்­தி­யில் விழிப் புணர்ச்­சியை ஏற்­ப­டுத்­தி­னர்.  பல்­வேறு போராட்­டங் களை திரா­விட இயக்­கத் தலை­வர்­கள் தலைமை தாங்கி நடத்­தி­னார்­கள்.  அதன் மூலம் தந்தை பெரி­யார் மற்­றும் தொழிற்­சங்­கத் தலை­வர்­கள் சிறை­ப­டுத்­தப்­பட்­ட­னர். சென்னை, பி.என்.சி. மில்­லில் நடை­பெற்ற போராட்­டத்­தில் தொழி­லா­ளர் கள் மீது துப்­பாக்­கிச் சூடு நடத்­தப்­பட்­டது. தலைவராக இருந்த தமிழ்த்­தென்­றல் திரு.வி.க. அவர்­கள் நாடு கடத்த வேண்­டு­மென்று வெள்­ளைக்­கார ஏகா­தி­பத்­தி­யம் ஆணை­யிட்­டது.  திரு.வி.க.வை நாடு கடத்த வேண்­டு­மென்ற சட்­டம் நிறை­வேற்­றப் பட்­டால் நீதிக்­கட்சி தனது ஆட்­சியை ராஜி­னாமா செய்­யு­மென்று அறி­வு­றுத்­தப் பட்­ட­தின் கார­ணத்தால் திரு.வி.க.வை நாடு கடத்­தும் சட்­டத்­தைத் திரும்­பப் பெற்­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">கழ­கம் தோன்­றிய நாள் முதல், பொது­வு­டைமை கருத்­துக்­க­ளை­யும், திரா­விட இயக்க கோட்­பாடுகளை­யும் ஒன்­றி­ணைத்து, தந்தை பெரி­யா­ரும், பேர­றி­ஞர் அண்­ணா­வும், முத்­த­மி­ழ­றி­ஞர் கலைஞரும், தற்­போ­துள்ள கழ­கத் தலை­வர் முத்­து­வேல் கரு­ணா­நிதி ஸ்டாலின் அவர்­க­ளும், துணை முதல்­வர் உத­ய­நிதி ஸ்டாலின் அவர்­க­ளும் திரா விட இயக்­கக் குறிக்­கோ­ளி­லி­ருந்து சற்­றும் வில­கா­மல் தொழி­லா­ளர்­களை பாது­காத்து, அவர்களின் கோரிக்­கை­களை எவ்­வித சம­ர­ச­மு­மின்றி நிறை­வேற்றி நல்­லாட்சி நடத்தி வரு­வதை நாம் நன்கு அறி­வோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">பேர­றி­ஞர் அண்ணா அவர்­க­ளும் ஆட்சி பொறுப் பேற்ற பின் தொழி­லா­ளர்க்­கென ஒரு தனிப்­பி­ரிவை உண்­டாக்கி ஒரு அமைச்­ச­ரை­யும் நிய­மித்­தார். முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் அவர்­கள் மே தினத்தை ஊதி­யத்­து­டன் கூடிய விடு­முறை நாளாக அறிவித்த பெருமை இந்­தி­யா­வி­லேயே கலை­ஞர் அவர்களையே சாரும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">சென்னை, சிந்­தா­ரிப்­பேட்­டை­யில் உள்ள நேப்­பி­யர் பூங்கா என்ற பெயரை மே தினப் பூங்கா என பெய­ரிட்­டார்.  அந்த பூங்­கா­வில் மே தின நினைவு சின்­னத்­தினை நிறுவி, ஆண்­டு­தோ­றும், மே நாளன்று,  மலர் வளை­யம் வளைத்து, மே நாள் தியா­கி­க­ளுக்கு கழ­கத் தலை­வ­ரும், மாண்­பு­மிகு முதல்­வ­ரும் மற்­றும் அமைச்­சர்­கள், நாடா­ளு­மன்ற, சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­கள், கழக முன்­னோ­டி­கள், தொ.மு.ச. பேரவை நிர்­வா­கி­க­ளும் மல­ரஞ்­சலி செலுத்தி வரு­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தொழி­லா­ளர்­க­ளுக்கு 4 சத­வி­கி­தம் குறைந்த பட்ச போனஸ் இருந்த நிலையை 8.33 சத­வி­கிதமாக மாற்­றிய பெருமை கழக அர­சையே சாரும். இது இந்­தி­யா­விற்கே ஒரு வழி­காட்­டி­யாக அமைந்தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இப்­படி தொழி­லா­ளர்க்­கென பல்­வேறு சட்­டங்களை திருத்தி,  தொழி­லா­ளர்­க­ளுக்கு பல்­வேறு நன்­மை­க­ளை­யும், உரி­மை­க­ளை­யும், கழக ஆட்சி யில் நடந்­தே­றி­யது.  அது­மட்­டு­மல்­லா­மல் சாலை யோரத்­தில் வியா­பா­ரம் செய்­வோர், ஆட்டோ தொழி­லா­ளர்­கள், கைவி­னை­ஞர்­கள், கட்­டி­டத் தொழி­லா­ளர்­கள் போன்ற அமைப்­பு­சாரா தொழிலாளர்­க­ளுக்கு அமைப்­பு­சாரா நல­வா­ரி­யத்தை அமைத்து, தொழி­லா­ளர்­க­ளின் வாழ்­வா­தா­ரத்திற்கு வழி அமைத்­தது திரா­விட முன்­னேற்­றக் கழக ஆட்சி.  விவ­சா­யி­கள் நலன் பெற­வும், விவசாயத் தொழி­லா­ளர்­க­ளுக்கு குறைந்­த­பட்ச ஊதியத்தை நிர்­ண­யம் செய்து பல்­வேறு திட்­டங்­களை அவர்­க­ளுக்­காக நிறை­வேற்­றி­யது கழக அரசு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தொழி­லா­ளர்­கள் தங்­கள் உரி­மை­க­ளுக்­காக போராடி பெற்ற சலு­கை­கள் மற்­றும் தொழி­லா­ளர்களின் சமூக பாது­காப்பு ஆகி­ய­வை­கள் இன்று ஒன்­றிய அர­சி­னால் மறுக்­கப்­பட்டு வரு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தொழி­லா­ளர்­க­ளுக்­காக நிறை­வேற்­றப்­பட்ட தொழிற்­சங்க சட்­டங்­களை, இன்று  மத்­திய அரசு, 4 சட்­டத் தொகுப்­பு­க­ளாக மூர்க்­கத்­த­ன­மாக நடை முறைப்­ப­டுத்தி தொழி­லா­ளர்­க­ளின் உரி­மை­களை பறித்­துள்­ளது.  இத­னால் தொழி­லா­ளர்­கள்  பெற் றிருந்த உரி­மை­கள் அடி­யோடு அகற்­றப்­பட்டு, பல்­வேறு இன்­னல்­க­ளுக்கு ஆளாகி வரு­கின்­ற­னர். மீண்­டும் பழைய நிலைக்கே செல்ல வேண்­டிய அவல நிலையை ஒன்­றிய அரசு ஏற்­ப­டுத்தி வரு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தொழிற்­சங்­கங்­கள் ஒன்­றிய அரசை எதிர்த்து, பல்­வேறு போராட்­டங்­கள் நடத்­தி­யும், எதற்­கும் செவி­சாய்க்­கா­மல் தொழி­லா­ளர் விரோத போக்கை கையாண்டு, முத­லா­ளி­க­ளுக்­கும், கார்ப்­ப­ரேட் கம்­பெ­னி­க­ளுக்­கும் உறு­து­ணை­யாக இருந்து வரு கிறது. இந்­நிலை மாறிட வேண்­டு­மா­னால், தொழி லாளர்­க­ளா­கிய நாம் ஒன்­றிய அரசை எதிர்த்து போராடி, நம்­மு­டைய உரி­மை­களை நிலை­நாட்ட வேண்­டும்.  தொழி­லாளி என்­றைக்­கும் தன்னு டைய போராட்­டத்­தின் மூலம் தான் எதை­யும் சாதிக்க முடி­யும் என்­ப­து­தான் வர­லாறு. அதை நாம் நிரூ­பித்­துக் காட்ட வேண்­டிய நிலைக்கு ஒன்­றிய அர­சால் தள்­ளப்­பட்­டுள்­ளோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தொழி­லா­ளர் விரோத, விவ­சாய விரோத, மக்­கள் விரோத, ஜன­நா­யக விரோத, பாசிச பா.ஜ.க. ஆட்­சியை அனை­வ­ரும் ஒன்று கூடி, இழந்த உரி­மையை மீண்­டும் பெற்­றிட, இந்­திய நாட்­டின் அர­சி­யல் சாச­னத்­திற்­கெ­தி­ரா­க­வும், பாரா­ளு­மன்ற ஜன­நா­ய­கத்தை கேள்­விக்­கு­றி­யாக்­கும் போக்கு, நாட்­டின் பன்­மு­கத்­தன்­மைக்கு மாறா­க­வும், ஒரே நாடு, ஒரே தேர்­தல், ஒரே மொழி, ஒரே மதம் என்று செயல்­ப­டும் பாசி­சத்­திற்­கெ­தி­ராக கருத்­தா­லும், கரத்­தா­லும் உழைக்­கும் தொழி­லா­ளர்­கள், விவசாயி­கள், பொது­மக்­கள் அனை­வ­ரும் இணைந்து நாட்­டில் அமை­திப் புரட்­சியை உரு­வாக்க  இந்த மே நாளில் உறு­தி­யேற்­போம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">புதி­ய­தொரு உல­கம் செய்­வோம்;</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">கெட்ட போரி­டும் உலகை வேரோடு சாய்ப்­போம்!”</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>