<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="05/05/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="501,73,958,782" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="4"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Mon May 04 2026 22:18:17 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260505T000000+5.30" edition.name="MDU" edition.area="MDU" position.section="05052026-MDU-03" position.sequence="03" ex-ref="05052026-MDU-03.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="48">தமிழ்நாட்டில் கத்திரி வெயில் தொடக்கம் ! </lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="27">28ம் தேதி வரை நீடிக்கும்!</lang>
	</hl2>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     
     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">சென்னை, மே 5–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">அக்னி நட்­சத்­தி­ரம் என்­னும் கத்­தரி வெயில் காலம்நேற்று தொடங்கி 28ம் தேதிவரை நீடிக்­கும். இந்த நாட்­க­ளில் வெயில் கொளுத்­தும்,ஒரு சில இடங்­க­ளில் வெப்பஅலை வீச­வும் வாய்ப்­புள்­ளது. இந்­நி­லை­யில், வேலூ­ரில் நேற்று 109 டிகிரி வெயில்கொளுத்­தி­யது. இந்­திய வானிலை ஆய்வு மையத்­தின் நீண்ட கால அறிக்­கை­யின்­படி, இந்­தி­யா­வில் 11 நாட்­க­ளுக்கு ஒரு சில இடங்­க­ளில் வெப்ப அலை வீசும் என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. குறிப்­பாக சூரிய வெப்­பம் பூமி­யில் விழந்து வெளி­யேற முடி­யா­மல் தரைப்­ப­கு­ தி­யில் நிலை கொள்­ளும்சூழ்­நிலை உரு­வா­கி­யுள்­ளது.இத­னால் நாட்­டின் பெரும்­பா­லான இடங்­க­ளில் வெப்பஅலை வீச வாய்ப்­புள்­ளது. கடந்த 150 ஆண்­டு­க­ளுக்கு பிறகு இது­போன்ற ஒரு நிலை தற்­போது உரு­வா­கி­யுள்­ளது. கடந்த 1877ம் ஆண்­டில் நாட்­டில் சூப்­பர் எல்-­­நினோ ஏற்­பட்­ட­தால் 21 மாதங்­கள் வெப்­பம் நீடித்­தது. அதே­போன்ற நிலை தற்­போ­தும் உரு­வா­கி­யுள்­ளது. இத­னால் பகல் நேரங்­க­ளில் வெப்­பத்­தின் தாக்­கம் அதி­க­மாக இருக்­கும். வெப்­ப­நிலை இயல்­பை­விட 2 டிகிரி செல்­சி­யஸ் முதல் 5 டிகிரி செல்­சி­யஸ் வரை­யில் அதி­க­ரித்து 113 டிகிரி வரை வெயில் கொளுத்­தும் என்­றும் கணிக்­கப்­பட்­டுள்­ளது. இதன் கார­ண­மாக காலை 11 மணி முதல் மாலை­யில் 4 மணி வரை­யில் பொது­மக்­கள் வெளி­யில் வர வேண்­டாம் என்­றும் இந்­திய வானிலை ஆய்வு மையம் தெரி­வித்­துள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இந்­நி­லை­யில், கிழக்கு மற்­றும் தென்­கி­ழக்கு திசை­யில் இருந்து வீசிய காற்­றின் கார­ண­மாக தமி­ழ­கத்­தில் மேற்கு தொடர்ச்சி மாலை மாவட்­டங்­கள் தொடங்கி தெற்கு கர்­நா­டகா வரை­யில் உள்ள பகு­தி­கள், தென் மாவட்­டங்­க­ளில் கன்­னி­யா­கு­மரி திரு­நெல்­வேலி மாவட்­டங்­க­ளி­லும், விழுப்­பு­ரம், கட­லூர், புதுச்­சேரி பகு­தி­க­ளி­லும் நேற்று கன­மழை பெய்­துள்­ளது. உள் மாவட்­டங்­க­ளில் ஒரு சில இடங்­க­ளில் மழை பெய்­துள்­ளது குறிப்­பி­டத்­தக்­கது. அதன் தொடர்ச்­சி­யாக இன்­றும் தமி­ழ­கத்­தில் மீண்­டும் மழை பெய்­யத் தொடங்­கும். மேலும், வங்­கக் கடல் மற்­றும் அர­பிக் கடல்­க­ளில் இரு வளி மண்­டல காற்று சுழற்சி உரு­வா­கும் சூழல் உரு­வா­கி­யுள்­ளது. அதற்கு முன்­னோட்­ட­மாக இலங்கை பகு­தி­யில் ஒரு காற்­ற­ழுத்த தாழ்­வுப்­ப­குதி உரு­வா­கி­யுள்­ளது. இது வட மேற்கு திசை­யில் நகர்ந்து ஆந்­திர கடற்­க­ரையை கடந்து மேற்கு நோக்கி பய­ணித்து அர­பிக் கடல் பகு­திக்கு செல்­லும் என்­ப­தால் வட கட­லோர மாவட்­டங்­க­ளில் மழை பெய்­யும் வாய்ப்பு உரு­வா­கி­ய­தால் திரு­வள்­ளூர் மாவட்­டத்­தில் மழை பெய்­துள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இந்த நிகழ்வு உரு­வா­வ­தற்கு முன்பே அர­பிக் கட­லில் ஒரு காற்று சுழற்சி உரு­வா­கும் என்­றும் கணிக்­கப் பட்­டுள்­ளது. வங்­கக் கடல் நிகழ்வு தமி­ழ­கத்தை நெருங்கி வருமா, வில­கிச் செல்­லுமா என்ற சந்­தே­கத்­துக்கு இடையே, நல்ல மழை தமி­ழ­கத்­தில் பெய்­யும் என்று உறு­தி­யா­கி­யுள்­ளது. இந்த மழை 3வது வாரம் வரை­யில் நீடிக்­கும். இந்­நி­லை­யில், இன்­றும் சில இடங்­க­ளில் மழை பெய்­யும் வாய்ப்­புள்­ளது. வானம் மேகம் சூழ்ந்்து காணப்­ப­டும். அதன் கார­ண­மாக உயர் அடுக்கு மேகம் வெயிலை தடுத்­துக் கொண்டு இருப்­ப­தால் வெப்ப சல­னம் ஏற்­பட்டு வெப்­பச் சலன மழை பெய்­யும். படிப்­ப­டி­யாக மழை பெய்­யும் வாய்ப்­பும் உரு­வா­கி­யுள்­ளது. வங்­கக் கடல் நிகழ்வு இலங்கை அருகேஉரு­வா­கி­யுள்­ளது. மே மாதம்இது போன்ற நிகழ்வு உரு­வா­வது அரி­தான ஒன்று. இந்­நி­லை­யில், அக்னி நட்­சத்­தி­ரம் என்­னும் கத்­தரி வெயில் காலம் தமி­ழ­கத்­தில் நேற்று தொடங்கி 28ம் தேதி வரை நீடிக்­கும். இந்த நாட்­க­ளில் வெயில் கொளுத்­தும் என்­றும் எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. இதன் முன்­னோட்­ட­மாக தமி­ழ­கத்­தில் கடந்த மாதம் தொடங்கி தற்­போது வரை­யில் வெப்­பம் அதி­க­ரித்து அதன் தொடர்ச்­சி­யாக வெயி­லும் கொளுத்தி வரு­கி­றது. இந்த ஆண்டு ஏப்­ரல் மாதத்­தில் மட்­டும் அதி­க­பட்­ச­மாக 106 டிகிரி வரை­யில் வெயில் அதி­க­ரித்­துள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">தற்­போது உரு­வா­கி­யுள்ள கத்­தரி வெயில் கார­ண­மாக வெயில் சுட்­டெ ­ரிக்­கும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டும் நிலை­யில், தற்­போது கோடை மழை பெய்­வ­தற்­கான சாத­க­மான சூழ்­நிலை உரு­வா­கி­யுள்­ளது. அத­னால் அக்னி நட்­சத்­திர பாதிப்பு குறை­வாக இருக்­கும் என்­றா­லும் புழுக்­கம் அதி­க­மாக இருக்­கும். சில இடங்­க­ளில் அனல் காற்று வீசும். மாலை­யில் மழை பெய்து குளிர்­விக்­கும் நிலை உரு­வா­கி­யுள்­ளது. மாலை மற்­றும் இரவு நேரங்­க­ளில் மழை பெய்­யும். வெப்­பத்தை தணிக்க அதிக தண்­ணீர் குடிப்­ப­தும், பழ­ர­சங்­கள், மோர், உள்­ளிட்ட குளிர்ச்­சி­யான நீர் ஆகா­ரத்தை அதி­கம் எடுத்­துக் கொள்ள வேண்­டும் என்­றும் மருத்­து­வர்­கள் தெரி­வித்­துள்­ள­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளி­யிட்­டுள்ள அறிக்கை: தமி­ழ­கத்­தில் நேற்று ஒரு­சில இடங்­க­ளில் மழை பெய்­துள்­ளது. குறிப்­பாக மதுரை, விழுப்­பு­ரம், கள்­ளக்­கு­றிச்சி, விழுப்­பு­ரம், திரு­வள்­ளூர் மாவட்­டங்­க­ளில் மழை பெய்­துள்­ளது. பெரும்­பா­லான இடங்­க­ளில் வறண்ட வானிலை நில­வி­யது. வேலூ­ரில் அதி­க­பட்­ச­மாக 109 டிகிரி வெயில் கொளுத்­தி­யது. திருத்­தணி 107 டிகிரி, சென்னை, ஈரோடு 106 டிகிரி, கரூர்,திருப்­பத்­தூர், தர்­ம­புரி 104 டிகிரி வெயில் நில­வி­யது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">வெப்­ப­நிலை இயல்­பை­விட 2 டிகிரி செல்­சி­யஸ் முதல் 4 டிகிரி செல்­சி­ய­சுக்­கும் அதி­க­மாக இருந்­தது. இதற்­கி­டையே, வளி மண்­ட­லத்­தில் சுமார் 1.5 கிமீ உய­ரத்­தில் தெற்கு சத்­தீஸ்­கர் முதல் கும­ரிக்­க­டல் வரை, தெலங்­கானா, ஆந்­திரா மற்­றும் தமிழ்­நாடு வழி­யாக ஒரு வளி மண்­டல காற்­ற­ழுத்த தாழ்­வுப்­பாதை நிலை கொண்­டுள்­ளது. இதன் கார­ண­மாக தமி­ழ­கத்­தில் ஒரு­சில இடங்­க­ளி­லும், புதுச்­சேரி மற்­றும் காரைக்­கால் பகு­தி­க­ளி­லும் இடி மின்­ன­லு­டன் கூடிய லேசா­னது முதல் மித­மான மழை பெய்­யும். மேலும், நீல­கிரி, கோவை, திருப்­பூர், தேனி திண்­டுக்­கல், ஈரோடு, சேலம், நாமக்­கல், திருச்சி, அரி­ய­லூர், பெரம்­ப­லூர், திரு­வண்­ணா­மலை, கரூர் மற்­றும் கள்­ளக்­கு­றிச்சி மாவட்­டங்­க­ளில் ஓரிரு இடங்­க­ளில் இன்று இடி மின்­ன­லு­டன் கூடிய கன மழை பெய்­யும். இதே­நிலை 9ம் தேதி வரை நீடிக்­கும். அதி­க­பட்ச வெப்­ப­நிலை குறிப்­பி­டத்­தக்க மாற்­றத்­துக்­கான வாய்ப்பு குறைவு. ஒரு­சில இடங்­க­ளில் இயல்­பை­விட 4 டிகிரி செல்­சி­ய­சுக்­கும் அதி­க­ரித்து வெப்­ப­நிலைகாணப்­ப­டும். சென்­னை­யில்வெயில் 106 டிகிரி வரை உய­ர­வும் வாய்ப்­புள்­ளது. அதன் கார­ண­மாக அச­வு­க­ரி­யம் ஏற்­ப­ட­வும் வாய்ப்­புள்­ளது.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>