<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="07/05/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="37,69,376,1495" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="1"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Thu May 07 2026 03:34:36 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260507T000000+5.30" edition.name="CHN" edition.area="CHN" position.section="07052026-CHN-02" position.sequence="02" ex-ref="07052026-CHN-02.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#0000ff" boxBorderWeight="1.99193248209899">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="30">தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம்!</lang>
	</hl2>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup626659_02_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13.5">தமிழ்­நாடு, கேரளா, மேற்கு வங்­கம் ஆகிய மூன்று முக்­கி­ய­மான மாநி­லங்­க­ளில் நடை­பெற்ற சட்­ட­மன்­றத் தேர்­தல் முடி­வு­கள் பிர­த­மர் மோடிக்கு மகிழ்ச்­சி­யைக் கொடுத்­தி­ருக்­கும். முத­ல­மைச்­சர் பத­வி­யில் இருந்து மூன்று எதி­ரி­கள் இறங்கி விட்­ட­தாக அவர் மகிழ்ந்­தி­ருப்­பார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13.5">தமிழ்­நாட்­டில் தி.மு.க. ஆட்­சித் தகு­தி­யைப் பெறா­மல் போயி­ருக்­க­லாம். அதற்­காக பிர­த­மர் மோடி­யின் கட்சி ஆட்­சிக்கு வந்­து­வி­ட­வில்லை. 27 இடங்­க­ளில் போட்­டி­யிட்டு ஒரு தொகு­தி­யில்­தான் மோடி­யின் பா.ஜ.க. வெற்றி பெற்­றுள்­ளது. பழ­னி­சாமி மூல­மாக ஆட்­சி­யைப் பிடிக்க நினைத்த பா.ஜ.க. படு­கு­ழிக்­குத் தள்­ளப்­பட்­டுள்­ளது. எனவே இதில் மோடி மகிழ்ச்சி அடைய என்ன இருக்­கி­றது?</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13.5">கேர­ளா­வில் தேர்­தல் களத்­தில் பா.ஜ.க.வே இல்லை. அங்கே மோதலே மார்க்­சிஸ்ட் கம்­யூ­னிஸ்ட் கட்­சிக்­கும் காங்­கி­ரஸ் கட்­சிக்­கும் தான். மார்க்­சிஸ்ட் கம்­யூ­னிஸ்ட் வசம் இருந்த ஆட்சி, காங்­கி­ரஸ் வசம் வந்­துள்­ளது. 140 உறுப்­பி­னர்­க­ளைக் கொண்ட கேரள சட்­ட­ச­பை­யில் 102 தொகு­தி­களை காங்­கி­ரஸ் கூட்­டணி கைப்­பற்றி இருக்­கி­றது. 35 இடங்­களை இட­து­சாரி அணி பிடித்­துள்­ளது. பா.ஜ.க. எத்­தனை இடங்­க­ளில் வெற்றி பெற்­றுள்­ளது தெரி­யுமா? மொத்­தமே 3 தான். அதா­வது 140 தொகு­தி­க­ளில் வெறும் 3 இடங்­க­ளைப் பிடித்­துள்­ளது பா.ஜ.க. எனவே இதில் மோடி மகிழ்ச்சி அடைய என்ன இருக்­கி­றது?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13.5">மேற்கு வங்­கத்­தில் மூன்று முறை­யாக வென்று முத­ல­மைச்­ச­ராக இருந்­தார் மம்தா. 15 ஆண்­டு­க­ளாக தொடர்ந்து முத­ல­மைச்­ச­ராக இருந்­தார். அந்த அதி­ருப்­தியை பா.ஜ.க. பயன்­ப­டுத்­திக் கொண்­டது. பா.ஜ.க.வின் எதி­ரி­க­ளான காங்­கி­ரஸ், இட­து­சா­ரி­கள், திரி­ணா­முல் ஆகி­யவை தனித்­த­னி­யா­கப் போட்­டி­யிட்­ட­தும் பா.ஜ.க.வின் வெற்­றிக்கு ஒரு கார­ணம் ஆகும். கடந்த இரண்டு ஆண்­டு­க­ளாக உள்­துறை அமைச்­சர் அமித்ஷா, மேற்கு வங்­கத்­தையே குறி­வைத்­த­படி இருந்­தார். பெண் வாக்­கா­ளர்­களுக்கு மாதம் ரூ.3 ஆயி­ரம், பேருந்­து­க­ளில் இல­வ­சப் பய­ணம் ஆகிய வாக்­கு­று­தி­க­ளால் பா.ஜ.க. மக்­களை ஈர்த்­தது. இது ஆட்சி மாற்­றத்­துக்கு மிக முக்­கிய கார­ணம் ஆகும்.  திரி­ணா­முல் காங்­கி­ரஸ் 40.81 விழுக்­காடு  வாக்­கு­க­ளைப் பெற்­றுள்­ளது. பா.ஜ.க., 45.46 விழுக்­காடு வாக்­கு­க­ளைப் பெற்று ஆட்­சி­யைப் பிடித்­துள்­ளது. திரி­ணா­முல் வாக்­கு­கள் முழு­மை­யாக வீழ்ந்­து­வி­ட­வில்லை. இருப்­பி­னும் மேற்கு வங்­கத்தை நினைத்து 
மட்­டுமே பிர­த­மர் மோடி மகி­ழ­லாம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13.5">தமிழ்­நாடு முத­ல­மைச்­சர் மு.க.ஸ்டாலின் அவர்­கள், கேரள மாநில முத­ல­மைச்­சர் பின­ராயி விஜ­யன் அவர்­கள், மேற்கு வங்க மாநில முத­ல­மைச்­சர் மம்தா பானர்ஜி அவர்­கள் – ஆகிய மூவ­ருக்­கும் முடிந்த அளவு குடைச்­சல் கொடுத்து வந்­தார் பிர­த­மர் மோடி. பா.ஜ.க. ஆளாத மாநி­லங்­கள் என்­பதை விட, அதி­கா­ரம் பொருந்­திய ஆளு­மை­கள் இவர்­கள் என்­ப­தும் மோடி கொடுத்த குடைச்­ச­லுக்கு அடிப்­ப­டைக் கார­ணம் ஆகும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13.5">பிர­த­மர் ஆவ­தற்கு முன்­னால் குஜ­ராத் மாநி­லத்­தின் முத­ல­மைச்­ச­ராக இருந்­த­வர் தான் நரேந்­திர மோடி அவர்­கள். அவர் குஜ­ராத் முத­ல­மைச்­ச­ராக இருந்­த­போது, மாநில உரி­மை­க­ளுக்­காக கடு­மை­யா­கக் குரல் கொடுத்­த­வர். ‘டெல்­லி­யில் இருந்து ஆள்­வதா?’ என்று கேட்­ட­வர் தான். பிர­த­மர் ஆன­தும் அளித்த பேட்­டி­யில், ‘நான் அப்­படி இருக்க மாட்­டேன். எந்த மாநி­லத்­தை­யும் பழி­வாங்க மாட்­டேன். மாநி­லங்­களை மதித்­துச் செயல்­ப­டு­வேன்’ என்று சொன்­ன­வர் தான் மோடி அவர்­கள். ஆனால் இதற்குமுற்­றி­லும் விரோ­த­மா­கத் தான் கடந்த 12 ஆண்­டு­க­ளா­கச் செயல்­பட்டு வரு­கி­றார். மாநி­லங்­களுக்கு எதி­ராக அவர் நடத்தி வரும் வேட்­டை­யால் அதி­கம் பாதிக்­கப்­பட்ட மாநி­லங்­கள் தான் தமிழ்­நா­டும், கேர­ளா­வும், மேற்கு வங்­க­மும்.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13.5"> 
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13.5">தமிழ்­நாட்டை மொத்­த­மா­கப் பழி­வாங்­கி­னார்­கள். ஒரே ஒரு எய்ம்ஸ் மருத்­து­வ­ம­னையை அறி­வித்­து­விட்டு, 10 ஆண்­டு­க­ளா­கக்  கட்­டிக் கொண்டு இருக்­கி­றார்­கள். மது­ரைக்கு மெட்ரோ ரயில், திருச்­சிக்கு மெட்ரோ ரயில்,கோவைக்கு மெட்ரோ ரயில் கேட்­டோம். தர­வில்லை. ஓசூர் விமா­ன­நி­லை­யத்­துக்கு அனு­மதி தர­வில்லை. சென்னை மெட்ரோ திட்­டத்­துக்­காக ஒன்­றிய அரசு தர வேண்­டிய நிதியை  முழு­மை­யா­கத்  தரா­மல் இழுத்­த­டிக்­கி­றார்­கள்.  பெரிய உள்­கட்­ட­மைப்­புத் திட்­டங்­களை மறுக்­கி­றார்­கள். ஒன்­றிய அரசு தர வேண்­டிய திட்­டங்­க­ளுக்­கான நிதி­யைக் கூட நிறுத்தி வைக்­கி­றார்­கள். ஒன்­றிய அர­சின் சரக்கு மற்­றும் சேவை  வரி என்ற பெய­ரால் வசூ­லிக்­கப்­ப­டும் அநி­யாய வரி  கார­ண­மாக தமிழ்­நாட்­டுக்கு  இந்த ஆண்டு மட்­டும்  9 ஆயி­ரத்து 600 கோடி ரூபாய் இழப்பு  ஏற்­பட்­டது. இப்­படி செயற்­கை­யான ஒரு நிதி நெருக்­க­டியை 
உரு­வாக்­கி­யது ஒன்­றிய பா.ஜ.க.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13.5">இதே நிலைமை தான் கேர­ளா­வுக்­கும், மேற்கு வங்­கத்­துக்­கும். இதே நிலை­மை­கள் தான் பா.ஜ.க. ஆளாத மாநி­லங்­க­ளுக்­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13.5">மாநில முத­ல­மைச்­சர்­கள், டெல்­லிக்­குப் போய் போராட்­டம் நடத்­திய காட்­சி­கள் எல்­லாம் மோடி ஆட்­சிக் காலத்­தில் தான் நடந்­தன. டெல்­லிக்­குப் போய் சாலை­யில் நின்று போராட்­டம் நடத்­தி­னார் கேரள மாநில முத­ல­மைச்­சர் பின­ராயி விஜ­யன். கர்­நா­டக முத­ல­மைச்­சர் சித்­த­ரா­மை­யா­வும் போராட்­டம் நடத்­தி­னார். இதெல்­லாம் இந்­திய நாட்­டின் பிர­த­ம­ருக்­குத் தான் அவ­மா­னம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13.5">ஒன்­றி­யத்தை ஆளும் பா.ஜ.க. அர­சாங்­கத்­தின் எதேச்­ச­தி­கார தன்­மை­யால் அதி­கம் பாதிக்­கப்­பட்ட முத­ல­மைச்­சர்­கள், இனி முத­ல­மைச்­சர் நாற்­கா­லி­யில் இல்லை என்று பிர­த­மர் மோடி மகி­ழ­லாம்.  ஆனால் இவர்­கள் அர­சி­யல் களத்­தில் பலம் பொருந்­திய தலை­வர்­கள். அந்­தந்த மாநில எல்­லை­க­ளைக் கடந்த தலை­வர்­கள். இந்­திய நாடா­ளு­மன்­றத்­தில் பலம் பொருந்­திய உறுப்­பி­னர்­களை திரா­விட முன்­னேற்­றக் கழ­க­மும், திரி­ணா­முல் காங்­கி­ரஸ் கட்­சி­யும் வைத்­துள்­ளது. இந்த உறுப்­பி­னர்­கள், பிர­த­மர் மோடிக்கு தமிழ்­நாட்­டை­யும், கேர­ளத்­தை­யும், மேற்கு வங்­கத்­தை­யும் நினை­வூட்­டிக் கொண்டே தான் இருப்­பார்­கள்.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="Wingdings" fontStyle="Regular" size="11">•</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>