<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="08/05/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,968,610,1495" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Thu May 07 2026 15:34:54 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260508T000000+5.30" edition.name="CBE" edition.area="CBE" position.section="08052026-CBE-07" position.sequence="07" ex-ref="08052026-CBE-07.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="20">இந்திய யூனியன் முஸ்லிம் லீக்</lang>
	<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="20"> </lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="34">தி.மு.க. தலைமையிலான கூட்டணியில்தான் என்றும் தொடர்வோம்! </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="24">பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் பேட்டி!</lang>
	</hl3>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="KADHAR_07_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="9.5">சென்னை, மே 8 –</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="9.5">அண்­மை­யில் நடந்­து­மு­டிந்த தமிழ்­நாடு சட்­டப்­பே­ர­வைத் தேர்­தல் முடி­வு­க­ளுக்­குப் பிறகு தி.மு.க. தலை­மை­யி­லான மதச்­சார்­பற்ற முற்­போக்­குக் கூட்­ட­ணி­யில் இடம்­பெற்ற இந்­திய யூனி­யன் முஸ்­லிம் லீக், வாணி­யம்­பாடி, பாப­நா­சம் ஆகிய இரண்டு தொகு­தி­க­ளில் வெற்­றி­பெற்­றது. வாணி­யம்­பாடி தொகு­தி­யில் எஸ்.எஸ்.பி.சையத் பாரூக், பாப­நா­சம் தொகு­தி­யில் ஏ.எம்.ஷாஜ­ஹான் ஆகி­யோர் வெற்­றி­பெற்­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="9.5">இதை­ய­டுத்து, மதச்­சார்­பற்ற முற்­போக்­குக் கூட்­ட­ணி­யின் தலை­வர் முத்­து­வேல் கரு­ணா­நிதி ஸ்டாலின் அவர்­களை, சென்னை தேனாம்­பேட்­டை­யில் உள்ள அவ­ரது இல்­லத்­தில், இந்­திய யூனி­யன் முஸ்­லிம் லீக் தேசிய தலை­வர் பேரா­சி­ரி­யர் கே.எம்.காதர் மொகி­தீன், மாநில பொதுச் செய­லா­ளர் கே.ஏ.எம்.முஹம்­மது அபூ­பக்­கர், மாநில பொரு­ளா­ளர் எம்.எஸ்.ஏ.ஷாஜ­ஹான், மாநில முதன்மை துணைத் தலை­வர் எம்.அப்­துர் ரஹ்­மான், மாநில துணைத் தலை­வர் கே.நவாஸ் கனி எம்.பி., வாணி­யம்­பாடி தொகுதி எம்.எல்.ஏ. எஸ்.எஸ்.பி.சையத் பாரூக், பாப­நா­சம் தொகுதி எம்.எல்.ஏ., ஏ.எம்.ஷாஜ­ஹான் மற்­றும் இ.யூ.முஸ்­லிம் லீகின் மூத்த நிர்­வா­கி­கள் ஆகி­யோர் சந்­தித்­த­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="9.5">அப்­போது புதிய சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­கள் இரு­வ­ரும் தங்­க­ளது சான்­றி­தழ்­களை தி.மு.க. தலை­வர் அவர்­க­ளி­டம் காண்­பித்து வாழ்த்­துப் பெற்­ற­னர். அப்­போது நூறு சத­வீ­தம் வெற்­றி­பெற்ற இ.யூ.முஸ்­லிம் லீகிற்கு தி.மு.க. தலை­வர் மு.க.ஸ்டாலின் தமது வாழ்த்­து­களை தெரி­வித்­துக் கொண்டு, மகிழ்ச்­சியை வெளிப்­ப­டுத்­தி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="9.5">இதைத் தொடர்ந்து நடை­பெற்ற செய்­தி­யா­ளர்­கள் சந்­திப்­பில், ஊட­க­வி­ய­லா­ளர்­கள் எழுப்­பிய கேள்­வி­க­ளுக்கு தேசிய தலை­வர் பேரா­சி­ரி­யர் கே.எம்.காதர் மொகி­தீன் விளக்­கம் அளித்­தார். அதன் விவ­ரம் வரு­மாறு:</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="9.5">கேள்வி :</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="9.5">நடை­பெற்று முடிந்த சட்­ட­மன்­றத் தேர்­த­லில் தி.மு.க. கூட்­ட­ணி­யில் இடம் பெற்று போட்­டி­யிட்ட உங்­கள் இ.யூ.முஸ்­லிம் லீகிற்கு இரண்டு இடங்­கள் கிடைத்து இருக்­கின்­றன. கேர­ளா­வில் முஸ்­லிம் லீக் உள்­ள­டக்­கிய காங்­கி­ரஸ் கூட்­டணி அரசு அமைய உள்ள நிலை­யில், கேர­ளா­வைப் போல தமிழ்­நாட்­டி­லும் தற்­போது கூட்­டணி அரசு அமை­யும் என்ற சூழ­லில், பாரம்­ப­ரி­ய­மிக்க தேசிய கட்­சி­யாக உள்ள தங்­க­ளது நிலைப்­பாடு எப்­படி இருக்­கும்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="9.5">பேரா­சி­ரி­யர் கே.எம். காதர் மொகி­தீன்:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="9.5">இந்­திய யூனி­யன் முஸ்­லிம் லீக் தமிழ்­நாட்­டைப் பொறுத்­த­வரை திரா­விட முன்­னேற்ற கழ­கம் தலை­மை­யி­லான மதச்­சார்­பற்ற முற்­போக்­குக் கூட்­ட­ணி­யில் அங்­கம் வகிக்­கி­றது. கேரள மாநி­லத்­தில் காங்­கி­ரஸ் கூட்­ட­ணி­யில் இருக்­கி­றது. கேர­ளா­வில் 22 தொகு­தி­க­ளில் நாங்­கள் வெற்றி பெற்­றி­ருக்­கி­றோம். இது­வரை அங்­கி­ருந்த கம்­யூ­னிஸ்ட் அரசு மாறி, இப்­பொ­ழுது காங்­கி­ரஸ் கூட்­டணி அரசு வர­வுள்ள நிலை­யில், எங்­க­ளது இந்­திய யூனி­யன் முஸ்­லிம் லீகைச் சேர்ந்த நான்­கைந்து உறுப்­பி­னர்­கள் அமைச்­சர்­கள் ஆகும் வாய்ப்பு உள்­ளது. இது கேர­ளா­வில் உள்ள  வழக்­க­மான நிலை­யா­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="9.5">அதே­நே­ரத்­தில் தமிழ்­நாட்­டில், நடை­பெற்ற முடிந்த சட்­ட­மன்­றத் தேர்­தல் முடி­வு­கள் யாருக்­கும் பெரும்­பான்­மை­யைத் தராத நிலை­யில், கூட்­டணி அரசு அமை­யும் என்ற சூழல் உள்­ளது. இத­னைக் கருத்­தில் கொண்டு, கடந்த இரண்டு நாட்­க­ளாக எங்­க­ளி­டத்­தில் பல­ரும் பல்­வேறு கருத்­து­களை முன்­வைத்­துக் கொண்­டி­ருக்­கின்­ற­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="9.5">அவர்­கள் அனை­வ­ரி­ட­மும் நாங்­கள் உறு­தி­யாக சொன்­னது ஒன்றே ஒன்­று­தான். நாங்­கள் திரா­விட முன்­னேற்­றக் கழ­கம் தலை­மை­யி­லான மதச்­சார்­பற்ற முற்­போக்­குக் கூட்­ட­ணி­யில் பாரம்­ப­ரி­ய­மாக இருந்து வரு­கி­றோம். அன்­றும் இருந்­தோம், இன்­றும் இருக்­கி­றோம், இனி­யும் இருப்­போம், என்­றும் தொடர்­வோம் என்று நாங்­கள் அவர்­கள் அனை­வ­ரி­ட­மும் மிகத் தெளி­வா­கக் கூறி­விட்­டோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="9.5">ஆகை­யால் இங்கே எங்­க­ளது நிலைப்­பாட்­டில் எந்த குழப்­ப­மும் இல்லை. ஊட­கங்­க­ளி­லும் அங்கு இங்­கு­மாக பல­ரும் பல­வற்றை பேசு­வார்­கள் தான். அவற்­றால் விளை­யும் குழப்­பங்­கள் ஒரு­போ­தும் எங்­களை பாதிக்­கப் போவ­தில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="9.5">எங்­க­ளைப் பொறுத்த வரை, ஜன­நா­யக அடிப்­ப­டை­யில் தேர்­தல் களத்­தில் கூட்­டணி அமைத்து நின்­றோம். வெற்­றி­யும் பெற்­றோம். மக்­கள் எந்த அடிப்­ப­டை­யில் எங்­க­ளுக்கு இந்த முடி­வைத் தந்­தார்­களோ அந்த அடிப்­ப­டை­யி­லேயே நாங்­கள் தொடர்­கி­றோம். இவ்­வா­றாக நாங்­கள் எடுத்­தி­ருக்­கும் முடிவு நல்ல முடி­வா­கவே இருக்­கும். அதன் மூலம் நமது தமிழ்­நாடு மாநி­லத்­தில் நல்­லதே நடக்­கட்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="9.5">கேள்வி :</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="9.5">தி.மு.க. தலை­வரை, இந்­திய யூனி­யன் முஸ்­லிம் லீகின் வெற்றி பெற்ற இரண்டு வேட்­பா­ளர்­க­ளு­டன் இணைந்து, அவ­ரது இல்­லத்­தில் சந்­தித்­துப் பேசி­னீர்­களே? அது குறித்து விளக்­கிக் கூற முடி­யுமா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="9.5">பேரா­சி­ரி­யர் கே.எம். காதர் மொகி­தீன்:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="9.5">நிச்­ச­ய­மாக! தமிழ்­நாட்­டில் உள்ள மாநில மக்­கள் மட்­டு­மின்றி, இந்­தி­யா­வில் உள்ள அனைத்து மாநில மக்­க­ளும் வியந்து போற்­றும் வகை­யில் கடந்த ஐந்­தாண்­டு­க­ளாக வெற்­றி­க­ர­மான மக்­க­ளாட்­சியை திரா­விட மாடல் அரசு என்ற அடை­மொ­ழி­யு­டன் மிகச் சிறப்­பாக நடத்­திக் காட்­டி­யி­ருக்­கி­றார் திரா­விட முன்­னேற்­றக் கழ­கத் தலை­வர் முத்­து­வேல் கரு­ணா­நிதி ஸ்டாலின் அவர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="9.5">இன்­னும் ஒரு­படி மேலே சொல்­வ­தா­னால், வெளி­நா­டு­க­ளில் உள்­ள­வர்­க­ளும் இந்த ஆட்­சி­யைப் பாராட்டி, வாழ்த்து தெரி­வித்து, இந்த ஆட்­சி­யு­டைய திட்­டங்­களை முன்­மா­தி­ரி­யாக கொண்டு தாங்­க­ளும் செயல்­ப­டுத்த போவ­தாக கனடா, இலங்கை போன்றநாடு­க­ளில் இருந்து தெரி­விக்­கப்­பட்­ட­தாக ஊட­கங்­கள் வழியே அறி­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="9.5">இப்­ப­டிப்­பட்ட நல்­லாட்­சி­யைக் கொடுத்த திரா­விட முன்­னேற்­றக் கழக தலை­மை­யி­லான மதச்­சார்­பற்ற முற்­போக்­குக் கூட்­டணி, இந்­தத் தேர்­த­லிலே அமோக வெற்றி பெற்று, மீண்­டும் இந்த நல்­லாட்சி தொடர வேண்­டும் என்று நாங்­கள் நம்­பிக் கொண்­டி­ருந்­தோம். ஆனால் அது நிக­ழ­வில்லை என்­பது எங்­க­ளுக்கு மிகப்­பெ­ரிய வருத்­தத்தை அளித்­துள்­ளது. அந்த வருத்­தத்தை ஸ்டாலின் அவர்­க­ளு­டன் பகிர்ந்து கொண்­டோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="9.5">தேர்­தல் வரும், போகும். வெற்றி தோல்­வி­கள் வரும் போகும். எத்­த­னையோ தேர்­தல்­க­ளைச் சந்­தித்து வெற்­றி­க­ளை­யும், தோல்­வி­க­ளை­யும் மாறி மாறிக் கண்­டி­ருக்­கி­றோம். வெற்­றி­யில் மமதை கொள்­வ­து­மில்லை. தோல்­வி­யில் துவண்டு போவ­து­மில்லை. இது­தான் எங்­கள் வழமை. தி.மு.க. தலை­வர் ஸ்டாலின் அவர்­கள் உட­னான சந்­திப்­பி­லும் இதையே உணர்ந்­தோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="9.5">நாடா­ளு­மன்­றத்­தில் திரா­விட முன்­னேற்­றக் கழ­கம் தலை­மை­யி­லான மதச்­சார்­பற்ற முற்­போக்­குக்  கூட்­ட­ணி ­யின் செயல்­பா­டு­கள் இன்­னும் வீரி­யம் காணும். மக்­கள் பிரச்­ச­னை­களைமுன் எப்­போ­தை­யும் விட அழுத்­த­மாக முன் வைப்­போம், வெற்றி பெறு­வோம்.
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="9.5">கேள்வி :</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="9.5">நடந்து முடிந்த சட்­ட­மன்­றத் தேர்­த­லில் தமி­ழக வெற்­றிக் கழ­கத்­திற்கு பெரும்­பான்மை கிடைக்­க­ வில்லை. இந்­நி­லை­யில், ஆட்சி அமைப்­ப­தற்­காக உங்­க­ளது ஆத­ர­வைக் கோரி­னார்­களா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="9.5">பேரா­சி­ரி­யர் கே.எம். காதர் மொகி­தீன்:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="9.5">நேர­டி­யாக எங்­க­ளி­டத்­தில் சம்­பந்­தப்­பட்­டோர் யாரும் வந்து கேட்­ட­தாக எனக்­குத் தக­வல் இல்லை. அவர்­கள் மூல­மா­கப் பல பேர் எங்­க­ளைக் கேட்­டுக் கொண்­டி­ருந்­தார்­கள். நேற்­றுக் காலை­யில் கூடக் கேட்­டார்­கள், தொடர்ந்து கேட்­டுக் கொண்­டி­ருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="9.5">நாங்­கள் சொன்ன பதில், இந்­திய யூனி­யன் முஸ்­லிம் லீகைப் பொறுத்த வரை திரா­விட முன்­னேற்­றக் கழ­கம் தலை­மை­யி­லான மதச்­சார்­பற்ற முற்­போக்­குக் கூட்­ட­ணி­யில், பேர­றி­ஞர் அண்ணா, முத்­த­மிழ் அறி­ஞர் கலை­ஞர் ஆகி­யோர் காலத்­தில் இருந்­தது போலவே தள­பதி ஸ்டாலின் அவர்­க­ளு­டைய காலத்­தி­லும் தொடர்ந்து நீடிக்­கி­ றோம், இனி­யும் தொடர்ந்து நீடிப்­போம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="9.5">இதை நான் உறு­தி­யா­கச் சொல்­வ­தற்­குக் கார­ணம், எங்­க­ளது கூட்­டணி என்­பது தேர்­தல் ஒன்றை மட்­டும் முன்­வைத்து செய்­யப்­பட்ட கூட்­டணி அல்ல. மாறாக இது கொள்­கைக் கூட்­டணி. கொள்கை ரீதி­யான உடன்­பாடு எங்­க­ளுக்­குள் உள்­ளது என்­ப­தால், இந்த உடன்­பாட்­டுக்கு எல்­லையோ, கால வரை­ய­றையோ கிடை­யாது. எனவே இந்த கூட்­ட­ணி­யில் நேற்­றும் இருந்­தோம், இன்­றும் இருக்­கி­றோம், இனி­யும் தொடர்­வோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="9.5">கேள்வி :</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="9.5">தி.மு.க. தலை­மை­யி­லான மதச்­சார்­பற்ற முற்­போக்­குக் கூட்­ட­ணி­யில் அங்­கம் வகித்த காங்­கி­ரஸ் இப்­பொ­ழுது தமி­ழக வெற்­றிக் கழ­கத்­திற்கு ஆத­ரவு தெரி­விப்­ப­தாக செய்­தி­கள் வரு­கின்­ற­னவே? இது­கு­றித்து உங்­க­ளது கருத்து என்ன?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="9.5">பேரா­சி­ரி­யர் கே.எம். காதர் மொகி­தீன்:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="9.5">திரா­விட முன்­னேற்­றக் கழ­கம் தலை­மை­யி­லான மதச்­சார்­பற்ற முற்­போக்கு கூட்­ட­ணி­யில் நிறைய கட்­சி­கள் இருக்­கின்­றன. ஒவ்­வொ­ரு­வ­ருக்­கும் வெவ்­வேறு முடி­வு­கள் இருக்­க­லாம். அதில் எங்­க­ளுக்கு எந்த தொடர்­பும் கிடை­யாது. எங்­க­ளைப் பொறுத்­த­வரை தி.மு.க.வுடன் நாங்­கள் கொண்­டுள்ள கூட்­டணி கொள்கை கூட்­டணி என்­ப­தால் தேர்­தல் முடிந்து விட்­டது. உங்­களை விட்­டும் விடை பெறு­கி­றோம் என்று சொல்­லக்­கூ­டிய நிலை­யில் நாங்­கள் இல்லை.
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="9.5">பேர­றி­ஞர் அண்ணா காலம்தொடங்கி, முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் அவர்­க­ளது காலம் தொடர்ந்து,இப்­பொ­ழுது தள­பதி ஸ்டாலின் அவர்­க­ளது காலத்­தி­லும் சரி, இனி­யும் சரி - இந்­தப் பாரம்­ப­ரி­யம் தொட­ரும். நாங்­கள் இந்­தக்கூட்­ட­ணி­யில் தொடர்ந்து இருப்­போம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="9.5">இவ்­வாறு இ.யூ.முஸ்­லிம் லீக் தேசிய தலை­வர் பேரா­சி­ரி­யர் கே.எம்.காதர் மொகி­தீன் பேட்டி அளித்­தார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>