<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="12/05/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,70,493,1494" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="2"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Tue May 12 2026 03:37:28 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260512T000000+5.30" edition.name="CHN" edition.area="CHN" position.section="12052026-CHN-06" position.sequence="06" ex-ref="12052026-CHN-06.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#000000" boxBorderWeight="3">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="43">சூழ்ச்சிகள் வென்றதில்லை! சூரியன் மறைவதில்லை!</lang>
	</hl2>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup638799_06_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10">‘‘த</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">மி­ழாய்ந்த தமி­ழன் தான் தமிழ்­நாட்­டின் முத­ல­மைச்­சாய் வரு­தல் வேண்­டும்! தமிழ்ப் பகை­வன் முத­ல­மைச்­சாய்த் தமிழ்­நாட்­டில் வாராது தடுத்­தல் வேண்­டும்!” என்­பது பாவேந்­தர் பார­தி­தா­ச­னா­ரின் தமி­ழி­யக்க முழக்­கம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">ஜோசப் விஜய் முதல்­வ­ரா­கப் பொறுப்­பேற்ற விழா­வி­லும், சட்­ட­மன்­றத் தற்­கா­லிக அவைத் தலை­வர் பொறுப்­பேற்ற விழா­வி­லும் தமி­ழுக்கு அவ­ம­ரி­யாதை கிடைத்­தி­ருக்­கி­றது. முத­லில் தமிழ்த்­தாய் வாழ்த்து, அதன் பின்­னர் நாட்­டுப்­பண் இசைக்க வேண்­டிய விழா­வில் ஒன்­றிய அர­சின் கைக்­கூ­லி­யாக மாறி, வந்தே மாத­ரம் பாடலை முதன்­மைப்­ப­டுத்­தித் தமிழ்த்­தாய் வாழ்த்தை மூன்­றா­வது இடத்­திற்­குத் தள்ளி இழி­வுப் படுத்தி இருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">ஆனால் மேற்கு வங்­கத்­தில் ஆட்­சிக்கு வந்த பா.ஜ.க அரி­யணை ஏறும்­போது, வந்தே மாத­ரம் பாடல் அங்கே ஒலிக்­கப்­ப­ட­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">சங்­கி­க­ளது ஆர்.எஸ்.எஸ். சங்­கீ­தம் கேட்க ஆரம்­பித்து விட்­டது. ஒன்­றிய அர­சின் ‘இந்­துத்­து­வா’­ கொள்­கை­யைத் தமி­ழக வீதி­யில் பரப்ப ஓர் அடிமை ஆட்சி கோட்­டை­யில் ஏறி இருக்­கி­றது. பெரி­யார் சொன்­ன­தைப் போலப் பூனைக்­குட்டி வெளியே வந்து விட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">‘‘இன்­னொரு தேர்­த­லைத் தி.மு.க. விரும்­ப­வில்லை; தமி­ழ­கத்­தில் த.வெ.க. ஆட்சி அமைப்­ப­தற்­குத் தி.மு.க. இடை­யூறு செய்­யாது; அர­சி­ய­ல­மைப்பு நெருக்­க­டி­யையோ அல்­லது மற்­றொரு தேர்­த­லையோ தி.மு.க. விரும்­ப­வில்லை. த.வெ.க. ஆட்சி அமைக்­கட்­டும்;  ஆறு மாதங்­கள் பொறுத்­தி­ருந்து பார்ப்­போம். தி.மு.க. செயல் படுத்­திய நலத்­திட்­டங்­க­ளைத் த.வெ.க. அரசு தொடர வேண்­டும்; மாண­வர்­க­ளுக்­கான காலை உண­வுத் திட்­டம், மக­ளிர் உரி­மைத் தொகை திட்­டங்­க­ளைத் தொடர்ந்து செயல்­ப­டுத்த வேண்­டும். பெண்­க­ளுக்கு மாதம் ரூ.2,500 வழங்­கப்­ப­டும் என்ற த.வெ.க.வின் வாக்­கு­று­தியை செயல்­ப­டுத்­து­வது கடி­னம்; தி.மு.க. சிறப்­பான எதிர்க்­கட்­சி­யா­கச் செயல்­பட வேண்­டும் என்­பதே என்­னு­டைய விருப்­பம்” என்று தி.மு.க. தலை­வர் 
மு.க. ஸ்டாலின் தன் அறிக்­கை­யில் வெளி­யிட்­டுள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">தள­பதி மு.க. ஸ்டாலின் ஒரு முத­ல­மைச்­சர் போல் கொளத்­தூர் தொகு­தி­யில் நடந்து கொண்­ட­தில்லை. தன்­னைத் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்ட மக்­க­ளின் ஊழி­யம் செய்­யும் தொண்­ட­னா­கவே தொகு­தி­யில் கிடந்­த­வர்; எதிர்க்­கட்சி, ஆளுங்­கட்சி என்ற போதும் கடைசி வரைக் கூப்­பிட்ட குர­லுக்கு வரக் கூடி­ய­வ­ராக அல்­லா­மல், கூப்­பி­டா­ம­லேயே சென்று வந்­த­வர்; தொகுதி மக்­க­ளின் காவ­ல­னாக, வீட்­டுப் பிள்­ளை­யாக நடந்து கொண்­ட­வர்;</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">வீட்­டி­லி­ருந்து கோட்­டைக்­குப் போகி­றாரா? அல்­லது கோட்­டை­யி­லி­ருந்து அறி­வா­ல­யம் வரு­கி­றாரா? அல்­லது முர­சொலி அலு­வ­ல­கம் செல்­கி­றாரா? மற்ற பகு­தி­க­ளின் நிகழ்ச்­சி­க­ளில் கலந்து கொள்­கி­றாரா? வெளி­யூர் சுற்­று­ப­ய­ணத்­தைத் தொடங்­கு­கி­றாரா? அல்­லது நிகழ்ச்­சி­களை முடித்­துக் கொண்டு சென்னை வரு­கி­றாரா? “வீட்­டுக்­குப் போக வேண்­டாம்;... தொகு­திக்கு செல்!” என்று தன் ஓட்­டு­ன­ரி­டம் பணி­யா­ளர்­க­ளி­டம் அடிக்­கடி சொல்­லிச் சென்று எந்த நேரத்­தி­லும் ‘தொகுதி... தொகுதி...’ என்று ஒரு நக­ரச் சுத்தி தொழி­லாளி போல்...துப்­பு­ர­வுப் பணித் தொழி­லாளி போல் தொகு­தி­யின் காவ­ல­னாக இருந்­த­வ­ருக்கு இந்­தத் தேர்­தல் பரி­சைத் தந்­தார்­களா?.... உண்­ணு­வதை மறந்து, உறங்­கு­வதை மறந்து, உடல் நலத்தை மறந்து, தமிழ்­நாடு முழு­வ­தும் மக்­கள் நலப் பணி­களை செய்­தது மட்­டு­மல்ல; பணி­யா­ளர்­க­ளி­டம் கூறா­ம­லேயே தொகு­திக்கு அடிக்­க­டிச் சென்று பார்­வை­யிட்­ட­வர்; மக்­கள் சொல்­லும் தொகு­திக் குறை­களை நீக்­கிப் பரி­கா­ரங்­கள் பலப் பல செய்து கொடுத்­த­வர்க்கு 
இந்­தப் பரிசா? சொல்­லுங்­கள் பார்க்­க­லாம்?..</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">ரூபாய் 44.88 கோடி மதிப்­பில் பல சிவிக் (Civic) திட்­டங்­கள், சாலை­கள், வடி­கால், குடி­நீர் வசதி போன்ற செய்­த­வர்­தானே இந்த ஸ்டாலின்?; ரூபாய் 200 கோடிக்கு மேல் மதிப்­பில் 45 க்கும் மேற்­பட்ட நக­ராட்சி மற்­றும் குடி­நீர் திட்­டங்­கள் தொடக்­கம், திறப்பு விழா செய்­த­வர் அல்­லவா? புதிய குளிர்­சா­தன வசதி (Air Condition) பேருந்து நிறுத்­தம் அமைத்­துத் தந்­த­வர் இல்­லையா? சாலை­யோ­ரப் பூங்­காக்­கள் மற்­றும் பொது­மக்­கள் பயன்­பாட்டு இடங்­களை அமைத்து தந்­தது தப்பா? அருள்­மிகு கபா­லீஸ்­வ­ரர் கலை மற்­றும் அறி­வி­யல் கல்­லூரி (Arulmigu Kabaleeswarar and size Science college) புதிய கட்­டி­டங்­களை ரூபாய் 31 கோடி அள­வில் கட்டி முடித்­துத் தந்­தாரே.. அது தப்பா? அல்­லது மாண­வர்­க­ளுக்கு வேலை வாய்ப்பு உயர்த்த (Chief Minister creative Centre - high- speed internet) உரு­வாக்­கிக் கொடுத்­தாரே அது தவறா? நூல­கங்­கள், கல்வி ஆத­ரவு வச­தி­கள் மேம்­பாடு என்­றும் பெரி­யார் நகர் போன்ற பகு­தி­க­ளில் மருத்­து­வ­ம­னை­கள் மேம்­பாடு என்­றும், டயா­லி­ஸிஸ் மையங்­கள், ‘ரீஹேப் சென்­டர்­கள்’ நிறு­வி­யும், ஐ.சி.டி.எஸ் மையம் (Integrated Child Development Services) கட்­டி­டம் கட்­டித் திறந்­த­தும், ரூபாய் 50 கோடிக்கு மேல் செலவு செய்து அலங்­கார மீன் சந்தை (Ornamental Fish Market) உரு­வாக்­கித் தந்­தாரே.... இவை­யெல்­லாம் தவறா? வேறு எது தவறு? இப்­ப­டி­யெல்­லாம் கொளத்­தூர் தொகு­திக்­குச் செய்த சாத­னை­களை மறந்து, மக்­கள் எந்­த­வித அர­சி­யல் அனு­ப­வம், பக்­கு­வம் இல்­லாத ஒரு நடி­க­ரின் கட்­சிக்­கும் வாக்­க­ளித்­தது ஏன்? இது சரி என்று அர­சி­யல் ஆய்­வா­ளர்­கள், பொது நோக்­குக் கருத்­தா­ளர்­கள் சொல்­லு­கி­றார்­களா? மாய­வ­லை­யில் சிக்கி ஜன­நா­ய­கத்­தைப் படு­கொலை செய்­தி­ருக்­கி­றார்­கள். ஆம்; ‘‘ஜன­நா­ய­கத்­தின் பல­மும் இதுவே; பல­கீ­ன­மும் இதுவே!” என்று நம்மை உரு­வாக்­கிய பேர­றி­ஞர் அண்ணா சொல்­வாரே... அது­தான் நடை­பெற்று முடிந்­தி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">மக­ளிர் உரி­மைத் தொகை, மக­ளி­ருக்­குக் கட்­ட­ண­மில்லா விடி­யல் 
பய­ணம், காலை உண­வுத் திட்­டம், புது­மைப்­பெண் திட்­டம், தமிழ்ப் புதல்­வன் திட்­டம், நான் முதல்­வன் திட்­டம், கல்­லூரி கன­வுத் திட்­டம், சிக­ரம் தொடு திட்­டம், தோழி­யர் விடுதி , மக­ளிர்க்­கான இட ஒதுக்­கீடு 40% ,சுய உத­விக் குழுக்­கள் மானிய உயர்வு, பெண் குழந்­தை­க­ளுக்கு HPV தடுப்­பூசி, மக்­க­ளைத் தேடி மருத்­து­வம், இன்­னு­யிர் காப்­போம் - நம்மை காப்­போம்- 48 , கலை­ஞ­ரின் கனவு இல்­லம், தாயு­மா­ன­வர் திட்­டம், கல்­லூரி மாண­வர்­க­ளுக்கு மடிக்­க­ணினி, அகழ்­வா­ராய்ச்சி- அருங்­காட்­சி­ய­கம், திருக்­கோ­யில்­கள் குட­மு­ழுக்கு, கோயில்­க­ளின் பல்­லா­யி­ரம் ஏக்­கர் நிலம் ஆக்­கி­ர­மிப்­பில் இருந்து மீட்பு, மத நல்­லி­ணக்­கம் பேணல், பெண்­கள் பாது­காப்பு, கலை­ஞர் நூறாண்டு மருத்­து­வ­ம­னை­கள், கலை­ஞர் நூறாண்டு நூல­கம், கைத்­தறி நெச­வா­ளர்­க­ளுக்கு 300 யூனிட், விசைத்­தறி நெச­வா­ளர்­க­ளுக்கு 1,000 யூனிட் மின்­சா­ரம் இப்­ப­டி­யான திட்­டங்­கள் தந்­த­தால் தோல்­வியா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">1.5 இலட்­சம் விவ­சா­யி­க­ளுக்கு இல­வச மின் இணைப்பு, மீன்­பிடி குறைவு காலத்­தில் நிவா­ர­ணம் ரூ. 6,000, இன்­னு­யிர் காப்­போம்- நம்மை காப்­போம் 48, உங்­க­ளின் ஸ்டாலின், நலம் காக்­கும் ஸ்டாலின், முதல்­வ­ரின் முக­வ­ரித் திட்­டம், வேர்­களை தேடி திட்­டம், சான்­றோர் ஆன்­றோர் பெய­ரி­லான திட்­டம், பொரு­ளா­தார வளர்ச்சி 11.19 சத­வீ­தம், மதுரை ஜல்­லிக்­கட்டு அரங்­கம்,பாசன வேளாண்மை நவீ­ன­ம­யம்.... என்று இப்­ப­டி­யான கணக்­கற்ற பொற்­கா­லச் சாத­னைத் திட்­டங்­களை மு.க.ஸ்டாலின் கொண்டு வந்து எவ­ரும் சாதிக்க முடி­யா­ததை மக்­கள் அனு­ப­வித்­துக் கொண்­டி­ருந்­த­னரே... இவை­யெல்­லாம்  தப்பா? தவறா? ஒவ்­வொரு வீட்­டில் உள்ள ஒவ்­வொரு நப­ரும் ஏதா­வது ஒரு திட்­டத்தை அனு­ப­விக்க வேண்­டும் என்று கொண்டு வந்­தாரே.. அது தவறு என்று எதிர்த்து வாக்கு அளித்­தார்­களா? யாரா­வது சொல்ல முடி­யுமா*?.....</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">அல்­லது நடி­க­ரின் கரூர் கூட்ட நிகழ்­வில் 41 பேர் உயி­ரி­ழந்­தார்­களே.... அத­னைச் சரி என்று ஏற்று வாக்­க­ளித்­தார்­களா? தன் கண­வன், குழந்­தை­க­ளைக் கூடப் பார்க்க மாட்­டேன்; நடி­கர் தான் எனக்கு வேண்­டும் என்று குடும்­பத்­தின் மதிப்­பும், மரி­யா­தை­யும் கெடுத்­துக் பேசிய சில பெண்­க­ளின் மான­மற்ற செய­லைக் கேட்­டுச் சரி­தான் என்று வாக்­க­ளித்­தார்­களா? புயல், மழை வந்­தால் ஓடி வந்து பார்க்­க­வும் வேண்­டாம்; நிவா­ர­ணம் தந்து பசி, பிணிப் போக்­கி­டும் நபர்­கள் தேவை­யில்லை என்று மக்­களை நெருங்­காத நடி­க­ருக்கு வாக்­க­ளித்­தார்­கள்? மொழி, இனத்­தைப் பாது­காக்க மாநில உரி­மை­க­ளுக்­குக் குரல் கொடுக்­கத் தேவை­யில்லை, மக்­கள் பிரச்சி­னை­க­ளில் கசை­ய­டிப்­பட்டு இரத்­தம் ஒழுக, ஒழு­கச் சிறை சென்ற தியா­கம் ஏதும் தேவை­யில்லை ; சினிமா கதா­நா­ய­கன் தான் வேண்­டும் என்று வாக்­க­ளித்­தார்­களா? பின்பு எதற்­கா­கத் தமிழ்­நாடு மக்­கள் வாக்­க­ளித்­தார்­கள் என்று பட்­டி­ய­லிட்டு ஏதா­வது ஒரு 
கார­ணத்­தைச் சொல்­வார்­களா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">சட்­ட­மன்­றத் தேர்­த­லில் வெற்றி வாய்ப்பை இழந்த அண்­ணா­வைப் பார்த்து, ‘‘நீங்­கள் சட்­ட­மன்­றம் செல்­ல­வில்­லையே, உங்­கள் சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­கள் 50 பேர் செல்­லு­கி­றார்­கள். இதற்­குத் தங்­க­ளது பதில் என்ன? “ என்று கேட்­ட­போது, ‘‘இயேசு பிறந்த ஜெரு­ச­லம் நக­ருக்­குள் கிறிஸ்­து­வர்­கள் நுழை­யக் கூடாது என்று இஸ்­லா­மி­யர்­கள் கூறி­ய­தால், பயங்­க­ர சண்டை நடந்து வந்­தது. ஒரு குறிப்­பிட்ட நிபந்­த­னை­யு­டன், அப்­போர் நின்­றது. “எல்­லாக் கிறிஸ்­த­வ­ரும் ஜெரு­ச­லம் செல்­லும் உரிமை பெற்­றார்­கள். ஆனால், ஜெரு­ச­லம் நக­ருக்­குள் கிறிஸ்­த­வர்­க­ளின் தலை­வ­ரான ‘சால்டி ரிச்­சர்ட்’ மட்­டும் உள்ளே வரக்­கூ­டாது” என்­ப­து­தான் அது. நிபந்­தனை பேரில், நான் வெளியே நிற்­கி­றேன். என் அணி­வ­குப்பு உள்ளே செல்­கி­றது. தலை­வன் இல்­லா­மல் அணி­வ­குப்பு அமைக்க முடி­யும்; ஆனால் அணி­வ­குப்பு இல்­லாத தலை­வன் அமைக்க முடி­யாது” என்ற சரித்­திர உண்­மையை அண்ணா எடுத்­துச் சொல்லி நெஞ்­சம் நெகி­ழச் செய்­தார். ‘‘என் வடி­வத்­தில் 50 கழ­கச் சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­கள் செல்­லு­கி­றார்­கள். அவர்­கள் கொள்­கை­க­ளைச் சொல்லி என் எண்­ணத்­தைச் சொல்­லிப் பேசு­வார்­கள்” என்று அண்ணா பதி­ல­ளித்­தார் . அதே பதி­லைப் போலத் தான், தள­பதி அவர்­கள் சட்­ட­மன்­றத்­துக்­குள் செல்ல வாய்ப்பு கிடைக்க வில்­லை­தான்; எனி­னும், அவர் வடி­வத்­தில் 59 உறுப்­பி­னர்­கள் செல்­கி­றார்­கள்* .</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">1936 ஆம் ஆண்டு நடை­பெற்ற சென்னை மாந­க­ராட்­சித் தேர்­த­லில், பெத்து நாயக்­கன் பேட்­டை­யில், நீதிக் கட்சி வேட்­பா­ள­ராக மாமன்ற உறுப்­பி­னர்க்­குப் பேர­றி­ஞர் அண்ணா போட்­டி­யிட்­டார் . குப்­பைத் தொட்­டிக்கு நடை­பெற்ற அந்­தத் தேர்­த­லில் காங்­கி­ரஸ் கட்­சி­யைச் சேர்ந்த பட்­டா­ணிக் கடலை வியா­பா­ரி­யான பெரி­ய­சாமி என்­ப­வ­ரி­டத்­தில் தோற்­றுப் போனார். அப்­ப­டித் தோற்­றுப் போன­தால், அண்­ணா­வைக் காட்­டி­லும் பெரி­ய­சாமி சிறந்­த­வர், உயர்ந்­த­வர் என்று கரு­த­லாமா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">1962ஆம் ஆண்டு அண்ணா காஞ்­சி­பு­ரம் தொகுதி சட்­ட­மன்­றத் தேர்­த­லில் இரண்­டா­வது முறை நின்ற போது, எஸ்.வி.நடேச முத­லி­யார் எனும் ஒரு பேருந்து முத­லா­ளி­யி­டத்­தில் தோற்­றுப் போனார்.  அண்ணா அவர்­கள் இது பற்­றிப் பேசும் போது, “எதி­ரி­கள் திட்­ட­மிட்­டுப் பணி­யாற்­றி­னர்; வெற்றி பெற்­றார்­கள்; அதிலே அவர்­கள் பெரு­மைப்­ப­ட­லாம்; புதிய நம்­பிக்கை கூட ஏற்­ப­டக் கூடும்!ஆனால், அவர்­க­ளின் கணக்­குத் தவறு. தோல்­வி­யு­டன் கழ­கம் கலைந்­தது என்று எண்­ணு­கி­றார்­களே ; அது தான் அவர்­க­ளின் தவ­றான கருத்து! நான் சட்­ட­ச­பை­யில் இருந்து கொண்டு பணி­யாற்­று­வ­தைத் தடுக்க மட்­டுமே இந்­தக் கேள்வி பயன்­ப­டும். எனவே, கழ­கத் தோழர்­களை வேண்­டிக் கொள்­கி­றேன்... தோற்று விட்ட தோல்­வி­களை மறந்து விடுங்­கள்; கண் கலங்கி நிற்­கா­தீர்­கள்; நம் பய­ணம் தொட­ரும்!” என்­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">காஞ்­சி­பு­ரம் தொகுதி சட்­ட­மன்ற உறுப்­பி­ன­ராக அண்ணா அவர்­கள் 
இருந்­த­போது,  (1957 -– 1962) எதிர்க்­கட்சி உறுப்­பி­ன­ராக இருந்து சட்­டப்­பேர­வை­யில் நெச­வா­ளர் பிரச்சினை, குடி­நீர் தட்­டுப்­பாடு, சாலை, கழிவு நீர், விளக்கு வசதி, உள்­ளூர் கட்­ட­மைப்பு வச­தி­கள் போன்ற மக்­க­ளின் தேவை­களை எடுத்து வைத்து  ஆழ­மாக வாதா­டி­னார். ஒரு எம்.எல்.ஏ. என்ற முறை­யில் தொகு­தி­யில் “தாமல்” என்ற கிரா­மத்­திற்­குப் புதிய பள்­ளிக் கட்­டி­டம் 
கட்­டப்­பட்­டுத் திறப்­ப­தற்கு முதல்­வ­ராக இருந்த காம­ரா­ஜர் அவர்­க­ளையே அழைத்து வந்து திறக்­கச் செய்­தார். அந்த ஊர் மற்­றும் சுற்­றி­யுள்ள பல்­வேறு ஊர்­க­ளின் குறை­களை நிவர்த்­திச் செய்­யக் கூறி எல்­லாம் பட்­டி­ய­லிட்­டுப் பேசி­னார். ஒரு சிறந்த சட்­ட­மன்ற உறுப்­பி­னர் என்ற முறை­யில் முன் 
உதா­ர­ண­மா­கத் திகழ்ந்­தார். அது மட்­டும் இல்­லா­மல் தமிழ்­நாடு, இந்­தி­யா­வில் 
ஏற்­பட்ட பல்­வேறு பிரச்சினை­க­ளில் தி.மு.க. தலை­வர் என்ற முறை­யில் பொது­மக்­க­ளி­டத்­தில் மிகுந்த செல்­வாக்­குப் பெற்­ற­வ­ராக திகழ்ந்­தார். அப்­ப­டிப்­பட்ட அண்ணா அவர்­கள், தான் பிறந்து, வளர்ந்த சொந்த ஊரி­லேயே தோற்­க­டிக்­கப்­பட்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">1975 இல் இந்­தி­யா­வில் நெருக்­கடி நிலை­யைக் கொண்டு வந்த 
அன்­றைய பிர­த­மர் இந்­திரா காந்­தி­யா­ரின் சர்­வா­தி­கா­ரத்தை எதிர்த்­துப் பல உயிர்ப் பலித் தியா­கங்­கள் செய்­த­து­டன், காரக்­கி­ர­கம் சென்ற இயக்­கம் தி.மு.க. 1977 இல் தோற்­க­டிக்­கப்­பட்ட காங்­கி­ரஸ் கட்­சி­யின் தலை­வர் இந்­திரா காந்தி பின்­னர், கர்­நா­டக மாநி­லம் சிக்­ம­க­ளூர் வெற்றி பெற்­றுப் நாடா­ளு­மன்­றம் நுழைந்த போது, ஒன்­றிய ஜனதா அர­சாங்­கம் அவ­ரது நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் பத­வி­யைப் பறித்­தது. அர­சி­ய­ல­மைப்­புச் சட்­டத்­தின் உரி­மை­க­ளைப் பறித்த அச் சர்­வா­தி­கா­ரச் செயலை எதிர்த்­துக் குரல் கொடுத்து, ஜன­நா­ய­கத்­தைக் காப்­பாற்­றிய மாம­னி­தர் கலை­ஞர். பின்­னர் சென்­னைக் கடற்­க­ரைக் கூட்­டத்­தில் நடை­பெற்ற தேர்­தல் கூட்­டத்­தில் (30-.09.1979)  “என்னை எதிர்ப்­ப­தாக இருந்­தா­லும்; ஆத­ரிப்­ப­தாக இருந்­தா­லும் உறு­தி­யாக இருப்­ப­வர் கரு­ணா­நிதி” என்று போற்­றி­ய­வர் காங்­கி­ரஸ் தலை­வர் இந்­திரா காந்தி.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">கழ­கம் தோல்­வி­க­ளைக் கண்டு தனது தொடர்ப் பய­ணத்தை என்­றும் நிறுத்­திக் கொண்­ட­தில்லை. 1977 இல் நெருக்­கடி நிலையை எதிர்த்­தற்­காக ஆட்சி கலைப்பு செய்து, சர்க்­கா­ரியா கமி­ஷன் நிய­மித்து, விசா­ரணை என்ற பெய­ரால் அவப்­ப­ழி­பைக் கழ­கத்­தின் மீது சுமத்­தப்­பட்­டது. பின்­னர் நடை­பெற்ற சட்­ட­மன்ற, நாடா­ளு­மன்­றத் தேர்­த­லில் வெற்றி வாய்ப்பை நாம் இழந்­தோம் . 1980- இல் ஒன்­றிய இந்­திரா அர­சால் எம்.ஜி.ஆர். ஆட்சி கலைக்­கப்­பட்­டது. 50:50 இடங்­கள் என்று திமுக, காங்­கி­ர­சு­டன் கூட்­டணி அமைத்த தவ­றான முடி­வால் தோல்­வி­யைச் சந்­தித்­தோம் ; 1984 இல் பிர­த­மர் இந்­திரா காந்­தி­யார் சுடப்­பட்­டுக் கொலை செய்­யப்­பட்­டார். மாநில முத­ல­மைச்­சர் எம்.ஜி.ஆர் வாத நோய் தாக்­கப்­பட்டு, உடல்­நிலை குன்­றி­ய­தால்; அமெ­ரிக்­கா­வில் மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­பட்டு சிகிச்சை பெற்று வந்­தார். இந்­நி­லை­யில் நடை­பெற்ற சட்­ட­மன்ற, நாடா­ளு­மன்­றத் தேர்­தல்­களில் அனு­தா­பக் கார­ணங்­க­ளால் கழ­கம் தோல்­வி­யைச் சந்­திக்க நேர்ந்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">1991 இல் ஈழத் தமி­ழர் ஆத­ரவு, விடு­த­லைப்­பு­லி­கள், சட்­டம் ஒழுங்­குப் பிரச்சினை எனத் தவ­றான குற்­றஞ்­சாட்டி;  கலை­ஞர் தலை­மை­யி­லான சாத­னை­கள் நிகழ்த்திநின்ற கழக ஆட்சி கலைக்­கப்­பட்­டது. பின்பு இரா­ஜீவ் காந்தி படு­கொலை- இப்­ப­டி­யான கார­ணங்­க­ளால் கழ­கம் தனது வெற்றி வாய்ப்பை இழந்­தது. 2011-இல் 2 ஜி அலைக்­கற்றை விவ­கா­ரத்­தில் தி.மு.க. மீது தவ­றான குற்­றச்­சாட்­டு­கள் சுமத்தி; கழ­கம் நாடா­ளு­மன்­றம், சட்­ட­மன்­றத் தேர்­த­லில் பெற வேண்­டிய வெற்றி வாய்ப்பை இழந்­தது. இப்­ப­டிப் பல்­வேறு படி நிலை­க­ளில் தி.மு.க. வெற்றி வாய்ப்­பு­களை இழந்­தா­லும்; இதற்கு இடை­யில் நடை­பெற்ற பல்­வேறு களங்­க­ளில் நின்று வெற்­றி­கள் பல படைத்­தது தி.மு.கழ­கம். அந்­நே­ரத்­தில் பொற்­கா­லச் சாத­னை­கள் நடத்­திய தலை­வர்­கள் கலை­ஞ­ரும், தள­ப­தி­யும் என்­பதை யாரும் மறந்து விடக் கூடாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">உடம்­பெல்­லாம் மூளை; மூளை­யெல்­லாம் சிந்­தனை; சிந்­தனை எல்­லாம் வஞ்­சனை என்று அர­சி­யல் விமர்­ச­னம் செய்­யப்­பட்ட மூத­றி­ஞர் இரா­ஜாஜி அவர்­கள்,  ‘‘தி.மு.­க­ழ­கத்தை மூட்­டைப் பூச்­சி­யைப் போல் நசுக்­கு­வேன்” என்­றார். ஆனால், அதே மூத­றி­ஞர் இரா­ஜாஜி 1967 இல் தி.மு.­க.­வு­டன் கூட்­டணி அமைத்து, அண்ணா தலை­மை­யில் ஆட்சி அமைய துணை நின்­றார் என்­பது வர­லாறு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">ஏழைப் பங்­கா­ளர்; இந்­தி­யா­வின் பல பிர­த­மர்­களை உரு­வாக்­கிய ‘கிங் மேக்­கர்’, என்று போற்­றிப் புக­ழப்­பட்ட கர்­ம­வீ­ரர் காம­ரா­ஜர், ‘‘தி.மு.க.வைக் கட்டை விரலை நறுக்­கு­வது போல், நான் வெட்­டு­வேன்” என்று அர­சி­யல் பேசி­னார். ஆனால், அதே காம­ரா­ஜர் தி.மு.க. ஆட்­சி­யின் தேவையை உணர்ந்து, நெருக்­கடி நிலைக் காலத்­தில்,” முத­ல­மைச்­சர் பத­வியை விட்டு விலகி, தி.மு.க. ஆட்­சி­யைக் கலைத்து விடா­தீர்­கள்; சுதந்­திர இந்­தி­யா­வில் தமிழ்­நாடு ஒன்றே சுதந்­தி­ரக் காற்­று­டன் சுவா­சிக்­கி­றது” என்று சொல்­லிக் கலை­ஞர் இடத்­தில் வேண்­டிக் கொண்ட வர­லாறு உண்டு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">ஜெர்­மனி சர்­வா­தி­கா­ரி­யான அடால்ஃப் ஹிட்­லர், ஆரிய இன மேலா­திக்­க­மும், யூத இன எதிர்ப்­பை­யும் அடிப்­ப­டை­யா­கக் கொண்­ட­வன். தனது ‘‘நாஜி” கட்­சி­யான தேசியசோசி­ய­லிச ஜெர்­மன் தொழி­லா­ளர்க் கட்சி (NSDAP) 
ஆட்­சி­யில் 15 இலட்­சம் குழந்­தை­கள் உள்­ளிட்ட 60 இலட்­சம் யூத இன மக்­க­ளைக் கொன்று அழித்­த­வன். இது தவிர, ரோமா மக்­கள், மாற்­றுத்­தி­ற­னா­ளி­கள், சோவி­யத் கைதி­கள், அர­சி­யல் எதி­ரி­கள் எனப் பல இலட்­சம் பேரைக் கொன்­ற­வன். 1940 இல் பிரிட்­டன் போரின் (Battle of Britain) போது, இலண்­டன் மாந­க­ரைத் தரை மட்­ட­மாக்­கக் கொக்­க­ரித்­த­வன். அதற்­குப் பிரிட்­டன் 
பிர­த­மர் வின்ஸ்­டன்ட் சர்ச்­சில் ‘‘இலண்­ட­னால் தாங்­கிக் கொள்ள முடி­யும்” (டondon can take it) என்று எதிர் வினை­யாற்­றி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">சர்­வா­தி­காரி ஹிட்­ல­ரைத் தோற்­க­டிப்­ப­தற்­குப் பிரிட்­டிஷ் பிர­த­மர் வின்ஸ்­டன் சர்ச்­சில் (Winston Churchill), அமெ­ரிக்க அதி­பர் பிராங்க்­ளின் ரூஸ்­வோல்ட் (Franklin D.Roosevelt), சோவி­யத் யூனி­யன் தலை­வர் ஜோசப் ஸ்டாலின் (Joseph Stalin) ஆகிய மூவ­ரும் (Big Three) ஒன்­றி­ணைந்­த­னர். ஹிட்­லர் படை வீழ்ந்து, அவ­னும் தற்­கொலை செய்து கொண்டு போர் 
முடி­வுற்­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">2026 சட்­ட­மன்­றத் தேர்­த­லில் அந்த நடி­கர் தி.மு.க. கூட்­ட­ணிக் கட்­சிச் சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­க­ளின் ஆத­ரவு பெற்று ஆட்சி அமைத்­தி­ருக்­கி­றார். நாடு பார்த்­துக் கொண்­டு­தான்இருக்­கி­றது. காத்­தி­ருப்­போம் களத்தை நோக்கி!.....</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">இறு­தி­யாக ஒன்று?.... மின்­னணு வாக்­குப்­ப­திவு எந்­தி­ரம் போன்­ற­வற்­றில் பெரும் மோசடி நடந்­தி­ருக்­கி­றது எனத் தக­வல் தொழில் நுட்ப வல்­லு­நர்­கள், ஆய்­வா­ளர்­கள்  கூறு­வ­தை­யும் மறுத்து ஒதுக்கி விட முடி­யாது. இன்­றைய அறி­வி­யல் உல­கத்­தில் நடி­க­ரின் பின்­பு­லத்­தில் இருந்து செயல்­பட்ட ஜெக­தீஷ் பழ­னிச்­சாமி போன்­றோ­ரின் ‘தி ரூட்’ நிறு­வ­னம், டிஜிட்­டல் மேலாண்மை, இன்ஸ்­டா­கி­ராம், சமூக வலைத்­த­ளங்­க­ளில் பரப்­பப்­பட்ட செய்­தி­கள் மூலம் இளை­ஞர்­கள், பெண்­கள், பொது­மக்­கள் என மூளைச் சலவை செய்த அர­சி­யல் மோச­டி­கள் நடை­பெற்­றுள்­ளன என்று ஊட­கங்­கள் பல அம்­ப­லப்­ப­டுத்தி வரு­கின்­றன. இப்­ப­டி­யான  கழ­கத் தோல்­விக்­கான கார­ணங்­க­ளை­யும் புறம் தள்ளி விடா­மல்; நம் கழ­கம் கவ­னத்­தில் கொண்டு எதிர்­கா­லத்­தில் புல­னாய்வு விழிப்­பு­ணர்­வோடு  எதிர்­வினை ஆற்­ற­வும் முன் வர வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">தேர்­தல் மோச­டித் தோல்­வி­க­ளால் தி.மு.க.வைத் துவண்­டு­வி­டச் செய்ய முடி­யாது. சூழ்ச்­சி­கள் வென்­ற­தில்லை! சூரி­யன் மறை­வ­தில்லை!</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>