<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="12/05/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="501,66,961,1498" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="4"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Mon May 11 2026 23:53:07 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260512T000000+5.30" edition.name="MDU" edition.area="MDU" position.section="12052026-MDU-05" position.sequence="05" ex-ref="12052026-MDU-05.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="21">1 வாக்கு வித்தியாசத்தில் தோல்வி:</lang>
	<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="21"> </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="32">பெரியகருப்பன் தாக்கல் செய்த வழக்கின் தீர்ப்பு! </lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="22">தேதி குறிப்பிடாமல் சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைப்பு!</lang>
	</hl4>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup642187_05_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="2" source="whatsapp1c_05_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="3" source="Theerarkal2_05_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">சென்னை, மே 12 –</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">திருப்­பத்­தூர் தொகு­தி­யில் 1 வாக்கு வித்­தி­யா­ சத்­தில் தோல்­வி­ய­டைந்த தி.மு.க. வேட்­பா­ளர் பெரி­ய­க­ருப்­பன் தாக்­கல் செய்த வழக்­கில், தீர்ப்பை தேதி குறிப்­பி­டா­மல் சென்னை உயர் நீதி­மன்ற ஒத்­தி­வைத்­தது. தமிழ்­நாடு சட்­ட­மன்­றத் தேர்­த­லில், சிவ­கங்கை மாவட்­டம், திருப்­பத்­தூர் தொகு­தி­யில், தி.மு.க., சார்­பில் போட்­டி­யிட்ட பெரி­ய­க­ருப்­பன் 83 ஆயி­ரத்து 364 வாக்­கு­க­ளை­யும், த.வெ.க., வேட்­பா­ளர் சீனி­வாச சேது­பதி 83 ஆயி­ரத்து 365 வாக்­கு­க­ளை­யும் பெற்­றி­ருந்­த­னர். த.வெ.க., வேட்­பா­ளர் சீனி­வாச சேது­பதி, ஒரு வாக்கு வித்­தி­யா­சத்­தில் வெற்றி பெற்­ற­தாக அறி­விக்­கப்­பட்­டார். இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்­டில் பெரி­ய­க­ருப்­பன் அவ­சர வழக்கு தொடர்ந்­தார். அதில், “சிவ­கங்கை மாவட்­டம், திருப்­பத்­தூர் தொகு­திக்கு பதி­வான தபால் வாக்கு, திருப்­பத்­தூர் மாவட்ட தொகு­திக்கு அனுப்­பப்­பட்­டு­விட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">அந்த வாக்கை மீட்டு, என்­னு­டைய தொகு­தி­யின் கணக்­கில் சேர்க்க வேண்­டும். அது­வரை சீனி­வாச சேது­பதி, சட்­ட­மன்ற நட­வ­டிக்­கை­க­ளில் பங்­கேற்க தடை விதிக்க வேண்­டும்” என்று கூறி­யி­ருந்­தார். இந்த வழக்கு, நீதி­ப­தி­கள் எல்.விக்­டோ­ரியா கவுரி, என்.செந் தில்­கு­மார் ஆகி­யோர் கொண்ட டிவி­சன் பெஞ்­சில் விடு­முறை நாளான நேற்று அவ­சர வழக்­காக விசா­ர­ ணைக்கு வந்­தது. அப்­போது, பெரி­ய­க­ருப்­பன் தரப்­பில் ஆஜ­ரான மூத்த வக்­கீல் முகுல் ரோத்­தஹி, சிவ­கங்கை மாவட்ட திருப்­பத்­தூர் தொகுதி தபால் வாக்கு, திருப்­பத்­தூர் மாவட்ட திருப்­பத் ­தூர் தொகு­திக்கு அனுப்­பப்­பட்­டுள்­ளது. அங்கு அந்த வாக்கை, அந்த தொகுதி தேர்­தல் அதி­காரி நிரா­க­ரித்­துள்­ளார். அந்த வாக்கை சிவ­கங்கை மாவட்ட திருப்­பத்­தூர் தொகு­திக்கு அனுப்­பி­யி­ருக்க வேண்­டும். செல்­லத்­தக்க அந்த வாக்கு திருப்பி அனுப்­பப்­பட்டிருந்­தால் இரு வேட்­பா­ளர்­க­ளும் சம­மான வாக்­கு­களை பெற்­றி­ருப்­பர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">குலுக்­கல் மூலம் வெற்றி வேட்­பா­ளர் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்­டி­ருப்­பார்” என்று வாதிட்­டார். உடனே நீதி­ப­தி­கள், “இது­போன்ற சூழ்­நி­லை­க­ளில் என்ன நடை­முறை பின்­பற்ற வேண்­டும் என தேர்­தல் ஆணை­யம் ஏதே­னும் விதி­கள் வகுத்­துள்­ளதா? எனக் கேள்வி எழுப்­பி­னர். இதற்கு பதி­ல­ளித்த மூத்த வக்­கீல், “இது­சம்­பந்­த­மாக எந்த நடை­மு­றை­யும் இல்லை. இது­கு­றித்து தேர்­தல் ஆணை­யத்­துக்கு பல புகார்­கள் அளித்­தும் எந்த பதி­லும் இல்லை. தவ­றான முக­வ­ரிக்கு செல்­லும் கடி­தம் கண்டு பிடிக்­கும்­போது, சரி­யான முக­வ­ரிக்­கு ­தானே அனுப்பி வைக்க வேண்­டும். அது போல இந்த வாக்கை சரி­யான தொகு­திக்கு அனுப்ப உத்­தர விட­வேண்­டும்” என்­றார். த.வெ.க., வேட்­பா­ளர் சீனி­வாச சேது­பதி தரப்­பில் ஆஜ­ரான மூத்த வக்­கீல் அபி­ஷேக் மனு சிங்வி, “இந்த விவ­கா­ரம் தொடர்­பாக பெரி­ய­க­ருப்­பன் தேர்­தல் வழக்­கு­தான் தாக்­கல் செய்ய முடி­யும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">சட்­ட­மன்ற நட­வ­டிக்­கை­க­ளில் பங்­கேற்க தடை கோரி இந்த வழக்கை தாக்­கல் செய்ய முடி­யாது என்­ப­தால், எந்த இடைக் கால உத்­த­ர­வும் பிறப்­பிக்­க­கூ­டாது. வேட்­பா­ளர் வெற்றி பெற்­ற­தாக அறி­விக்­கப்­பட்­டு­விட்­டால், அவரை கட­மை­யாற்ற அனு மதிக்க வேண்­டும். சட்­ட­மன்ற நட­வ­டிக்­கை­க­ளில் பங்­கேற்க அவ­ருக்கு தடை விதிக்க முடி­யாது. தடை விதித்­தால், மக்­கள் உரிமை பாதிக்­கப்­ப­டும்” என்­றார். தேர்­தல் ஆணை­யம் தரப்­பில் ஆஜ­ரான வக்­கீல் கே.தருண், “இந்த விவ­கா­ரத்­தில் தேர்­தல் வழக்­கு­தான் தாக்­கல் செய்ய முடி­யும். தபால் வாக்­கு­கள் இந்­திய தபால் துறை மூலம் அனுப்­பப்­ப­டு­வ­தில்லை. தபால் வாக்­கு­களை பெற தேர்­தல் ஆணை­யம், துணை தாசில்­தா­ரர் அந்­தஸ்து அதி­கா­ரியை நிய­மிக்­கும். அந்த அதி­காரி தபால் வாக்­கு­களை பெற்று, சம்­பந்­தப்­பட்ட தொகுதி தேர்­தல் அதி­கா­ரி­களுக்கு அனுப்பி வைப்­பார். அர­சி­யல் கட்சி பிர­தி­நி­தி­க­ளும் இதில் அமர்த்­தப்­ப­டு­வ­தால் எந்த தவ­றும் நடக்­காது. தபால் வாக்கு வேறு தொகு­திக்கு மாற்றி அனுப்பி விட்­டால்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">என்ன செய்ய வேண்­டும்? என சட்­டத்­தில் குறிப்­பி­டப்­ப­ட­ வில்லை. தேர்­தல் வழக்கு தாக்­கல் செய்­யும் வரை தேர்­தல் தொடர்­பான ஆவ­ணங்­கள் பத்­தி­ரப்­ப­டுத்தி வைக்­கப்­பட்­டி­ருக்­கும்” என்­றார். அதற்கு நீதி­ப­தி­கள், “தபால் வாக்­கு­கள் வேறு தொகு­திக்கு அனுப்­பி­யது குறித்து திமுக வேட்­பா­ள­ரின் புகா­ருக்கு பதி­ல­ளிக்­கா­தது ஏன்? ஒரு வாக்­காக இருந்­தா­லும் பதி­ல­ளிக்க வேண்­டிய கடமை தேர்­தல் ஆணை­யத்­துக்கு உள்­ளது. இதற் கான கார­ணங்­களை விரி­வாகவிளக்கி இன்று தேர்­தல் ஆணை­யம் அறிக்கை தாக்­கல் செய்ய வேண்­டும். இந்த வழக்கை இன்று மீண்­டும் விசா­ரிப்­போம்” என்று உத்­த­ர­விட்­ட­னர். அதன்­படி, இன்று மீண்­டும் வழக்கு விசா­ர­ணைக்கு வந்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">அப்­போது திருப்­பத்­தூர் பெயர் கொண்ட வேறு தொகு­திக்கு அனுப்­பப்­பட்ட ஒரு தபால் வாக்­குச்­சீட்­டால், தேர்­தல் முடி­வு­கள் மாறி­யுள்­ள­தா­க­வும், தபால் வாக்­குச்­சீட்டு தொகுதி மாறி அனுப்­பி­னால் என்ன நடை­முறை பின்­பற்­றப்­ப­டும் என்­பது தெரி­யாத நிலை உள்­ள­தா­க­வும் பெரி­ய­க­ருப்­பன் தரப்­பில் வாதி ­டப்­பட்­டது. இறு­தி­யில் இரு­த­ரப்பு வாதங்­களை பதிவு செய்து கொண்ட விடு­மு­றைக்­கால அமர்வு நீதி­ப­தி­கள் தி.மு.க. வேட்­பா­ளர் பெரி­ய­க­ருப்­பன் தாக்­கல் செய்த வழக்­கின் தீர்ப்பை தேதி குறிப்­பி­டா­மல் சென்னை உயர்­நீ­தி­மன்­றம் ஒத்­தி­வைத்தது.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>