<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="13/05/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="501,703,960,1496" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="4"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Tue May 12 2026 22:36:41 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260513T000000+5.30" edition.name="CHN" edition.area="CHN" position.section="13052026-CHN-04" position.sequence="04" ex-ref="13052026-CHN-04.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="32">விமான நிலையம் -– கிளாம்பாக்கம் இடையே மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் தொடக்கம்!</lang>
	</hl2>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="Theerarkal1_04_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">சென்னை, மே 13 –</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">சென்னை விமான நிலை­யம் - – கிளாம்­பாக்­கம் பேருந்து நிலை­யத்தை இணைக்­கும் மெட்ரோ ரயில் திட்­டத்­திற்­கான ஆரம்­ப­கட்ட நட­வ­டிக்­கை­கள் தொடங்கி நடை­பெற்று வரு­கி­றது. சென்­னை­யில் இருந்து வெளி மாவட்­டங்­க­ளுக்கு செல்­லும் பய­ணி­கள் மின்­சார ரயில் மூல­மாக வண்­ட­லூர் சென்று அங்­கி­ருந்து கிளாம்­பாக்­கம் பேருந்து நிலை­யம் செல்­கின்­ற­னர். மேலும் மாந­கர பேருந்­து­கள் மூலம் கிளாம்­பாக்­கம் பேருந்து நிலை­யம் சென்­ற­டை­கின்­ற­னர். இத­னால் பய­ணி­க­ளின் சிர­மத்தை குறைக்க சென்னை விமான நிலை­யம் வரை உள்ள மெட்ரோ ரயில் திட்­டத்தை கிளாம்­பாக்­கம் பேருந்து நிலை­யம் வரை நீட்­டிக்க வேண்­டும் என்ற கோரிக்கை எழுந்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">சென்னை புற­ந­கர் பகு­தி­யான தாம்­ப­ரம், பல்­லா­வ­ரம், குரோம்­பேட்டை உள்­ளிட்ட பகு­தி­கள் அசுர வளர்ச்சி அடைந்து வரும் நிலை­யில் அப்­ப­கு­தி­யில் உள்ள ஜிஎஸ்டி சாலை உள்­ளிட்ட முக்­கிய சாலை­க­ளில் தினந்­தோ­றும் பெரும் போக்­கு­வ­ரத்து நெரி­சல் ஏற்­பட்டு வரு­வ­தால், அந்த வழித்­த­டத்­தில் மெட்ரோ ரயில் சேவை திட்­டம் கொண்டு வரப்­பட்­டால் போக்­கு­வ­ரத்து நெரி­சலை முற்­றி­லும் ஒழிக்க முடி­யும் என அப்­ப­குதி மக்­கள் தெரி­வித்து வரு­கின்­ற­னர். இதை­ய­டுத்து சென்னை விமான நிலை­யத்­தில் இருந்து, கிளாம்­பாக்­கம் வரை மெட்ரோ ரயில் திட்­டம் நீட்­டிக்­கப்­ப­டும் என தமிழ்­நாடு அரசு தெரி­வித்து பல ஆண்­டு­கள் ஆன நிலை­யி­லும் திட்­டம் நிறை­ வேற்­றப்­ப­டா­மல் இருந்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">இந்­நி­லை­யில் சென்னை மெட்ரோ ரயில் திட்­டம் கட்­டம் 1ல் விமான நிலை­யத்­தி ­லி­ருந்து கிளா ம்­பாக்­கம் பேருந்து முனை­யம் வரை மெட்ரோ ரயிலை மேம்­பால சாலை­யு­டன் இணைத்து நீடிப்­ப­தற்­கான விரி­வான திட்ட அறிக்­கையை தமிழ்­நாடு அரசு சிறப்பு திட்­டத் துறை செய­லா­ள­ரி­டம் மெட்ரோ நிர்­வா­கம் சமர்ப்­பித்­தது. அந்த அறிக்­கை­யில், சென்னை விமான நிலை­யத்­தி­லி­ருந்து கிளாம்­பா க்­கம் பேருந்து நிலை­யம் வரை மெட்ரோ ரயில் சேவையை நீட்­டிக்க ரூ.9,335 கோடி செல­வில் மேற்­கொள்­ளப்­பட உள்­ளது. மேலும், சென்னை விமான நிலை­யம் முதல் கிளாம்­பாக்­கம் வரை­யி­லான மெட்ரோ வழித்­த­டத்­தில் சென்னை விமான நிலை­யம், பல்­லா­வ­ரம், கோதண்­டம் நகர், குரோம்­பேட்டை, மகா­லட்­சுமி காலனி, தாம்­ப­ரம், இரும்­பு­லி­யூர், பீர்க்­கன்­கா­ரணை, பெருங்­க­ளத்­தூர், வண் ட­லூர், அறி­ஞர் அண்ணா உயி­ரி­யல் பூங்கா, கிளாம்­பாக்­கம் பேருந்து நிலை­யம் ஆகிய 13 மெட்ரோ ரயில் நிலை­யங்­கள் அமையஉள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">மேலும் பல்­லா­வ­ரம், குரோம்­பேட்டை, தாம்­ப­ரம், பெருங்­க­ளத்­தூர் மற்­றும் வண்­ட­லூர் வழி­யா­கச் செல்­லும், இது கிளாம்­பாக்­கம் பேருந்து முனை­யம், விமான நிலை­யம் மற்­றும் தாம்­ப­ரம் ரயில் நிலை­யம் போன்ற முக்­கிய போக்­கு­வ­ரத்து மையங்­க­ளுக்கு இணைப்பை வழங்­கப்­பட உள்­ளது. இந்­நி­லை­யில் சென்னை விமான நிலை­யம் முதல் கிளாம்­பாக்­கம் வரை 15.46 கிலோ மீட்­டர் மெட்ரோ ரயில் வழித்­த­டத்­திற்­கான விரி­வான திட்ட அறிக்­கைக்கு தமிழ்­நாடு அரசு ஒப்­பு­தல் அளித்­துள்­ளது. மேலும் நிலம் கைய­கப்­ப­டுத்­தும் பணி­களை தொடங்­க­வும் சென்னை மெட்ரோ ரயில் நிறு­வ­னத்­துக்கு அரசு அனு­மதி வழங்­கி­யது. ஆனால், பல்­வேறு கார­ணங்­க­ளால் கிடப்­பில் போடப்­பட்ட இந்த திட்ட பணி­கள், தற்­போது மீண்­டும் தொடங்கி நடை­பெற்று வரு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">இது­கு­றித்து அதி­கா­ரி­கள் கூறு­கை­யில், ‘‘கிளாம்­பாக்­கம் பேருந்து நிலை­யம் செயல்­பாட்­டுக்கு வந்­த­தி­லி­ருந்து தென் மாவட்­டங்­க­ளுக்கு பய­ணம் செய்­யும் மக்­க­ளின் எண்­ணிக்கை அதி­க­ரித்­துள்­ளது. ஆனால் விமான நிலை­யம் மற்­றும் கிளாம்­பாக்­கம் இடையே நேரடி ரயில் இணைப்பு இல்­லா­த­தால் பய­ணி­கள் பல்­வேறு சிர­மங்­களை சந்­தித்து வரு­கின்­ற­னர். இந்த பிரச்­னைக்கு தீர்­வா­கவே புதிய மெட்ரோ திட்­டம்வடி­வ­மைக்­கப்­பட்­டுள்­ளது. சுமார் 15 கிலோ­ மீட்­டர் நீளத்­தில் அமை­ய­வுள்ள இந்த பாதை­யில் 12 மெட்ரோ நிலை­யங்­கள் அமைக்­கப்­பட உள்­ளன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">திட்­டம் செயல்­பாட்­டுக்கு வந்­தால் விமான நிலை­ யத்­தி­ லி­ருந்து கிளா ம்­பாக்­கம் வரை நேரடி மெட்ரோ பய­ணம் சாத்­தி­ய­மா­கும். இதன் மூலம் ஜிஎஸ்டி சாலை­யில் நீண்­ட­கா­ல­மாக இருந்து வரும் போக்­கு­வ­ரத்து நெரி­ச­லும் குறை­யும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">இந்த திட்­டத்­திற்­கான விரி­வான அறிக்கை ஏற்­க­னவே ஒன்­றிய அர­சி­டம் அனுப்­பப்­பட்­டுள்­ளது. மேலும், தேசிய நெடுஞ்­சா­லைத் துறை, விமான நிலைய நிர்­வா­கம் மற்­றும் குடி­நீர் வாரி­யம் உள்­ளிட்ட பல துறை­க­ளு­டன் ஆலோ­ச­னை­கள் நடை­பெற்று வரு­கின்­றன. நில அள­வீடு மற்­றும் பாதை வரை­ப­டப் பணி­க­ளும் பெரும்­பா­லும் நிறை­வ­டைந்­துள்­ளது. இதை­ய­டுத்து, தற்­போது ஆரம்­ப­கட்ட பணி­கள் தொடங்­கி­ யுள்­ளது,’ என்­ற­னர்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>