<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="14/05/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="37,69,956,1019" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="4"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Thu May 14 2026 03:32:13 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260514T000000+5.30" edition.name="CBE" edition.area="CBE" position.section="14052026-CBE-05" position.sequence="05" ex-ref="14052026-CBE-05.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#000000" boxBorderWeight="2">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="1_TAUN_Vairam" fontStyle="Regular" size="60">களம் உன்­னி­டம்; காலங் கருதி கருத்­தாய் வடி­வம் தந்­தாய் தலைவா; வாழ்க, நீ வாழ்க!</lang>
	</hl1>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfFrame630066_05_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup630026_05_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="3" source="34c09728b6a3598_05_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bramma" fontStyle="Regular" size="17.5">தி</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">ரு­குர்­ஆ­னிலே, ‘தீய­தும் நல்­ல­தும் சம­மாகா’ ‘அல்­லாஹ் எத்­தகையவன் என்­றால் வானங்­களை தூணின்­றியே உயர்த்தி உள்­ளான்; நீங்­கள்  பார்க்­கி­றீர்­கள்’  என்று  சொல்­லப்­பட்டு இருக்­கி­றது. இது இஸ்­லாத்­தின் மறை­மொழி, 2026 ஏப்.23 தேர்­தல் முடி­வு­க­ளுக்­குப் பிறகு இம் மொழி­களை ஒப்­பிட்­டுப் பார்த்து எண்­ணத் தோன்­று­கி­றது. சிலரை ஆசை­கள் வெட்­க­ம­றி­யா­மல்  பேசச் செய்­து­வி­டு­கி­றது. அப்போதெல்­லாம் இப்­ப­டிப்­பட்ட  மொழி­கள்  நமக்கு ஒத்­த­டம் கொடுக்­கின்­றன.  எண்­ணிப்­பார்க்க வைக்­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">நடந்து முடிந்த சட்­ட­மன்­றத் தேர்­த­லில் தி.மு.க, அ.தி.மு.க, த.வெ.க.களத்­தில் நின்­றன. நம்­மைப் பொருத்­த­வரை தி.மு.க.-–அ.தி.மு.க. ஆகிய இரு கட்­சி­க­ளுக்கே போட்டி என்று கரு­தி­னோம். ஆனால் நிலைமை வேறு மாதி­ரி­யாக இருந்­தது. தி.மு.க. ஆளுங்­கட்சி அ.தி.மு.க. எதிர்க்­கட்சி, த.வெ.க. புத்­தம் புதிய கட்சி; அப்­போ­து­தான் பிறந்த குழந்தை மாதிரி! எங்­கள் தொண்டை மண்­டல கிரா­மப் பகு­தி­க­ளில், ‘அச்­ச­மான ஊர்ல ஒரு ஆம்­பி­ளைப் புள்­ளைப் பொறந்­த­தாம்; அது  தொப்­புள் அறுக்­கி­ற­துக்கு முன்­னாடி கப்­பல் ஏறிப் போச்­சாம்’ என்று சொல்­வார்­கள். அப்­ப­டித் தோன்­றிய 
த.வெ.க, தி.மு.க.-–அ.தி.மு.கவை­விட  அதிக இடங்­க­ளைப் பிடித்­தது. ஆனால் அவை தனித்த பெரும்­பான்­மை­யைப் பெற­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">அதிக இடங்­க­ளைத் த.வெ.க.  பிடித்­தது. ஆனால் ஆட்சி அமைக்­கிற விதத்­தில் பெரும்­பான்­மைப் பெற­வில்லை.  இத­னால் ஒரு குழப்­ப­மான  நிலை உரு­வா­னது. பொறுப்பு ஆளு­நர்  சரி­வர வழி­காட்­டு­தல்­களை மேற்­கொள்­ள­வில்லை. த.வெ.க. ஆடிப்­போ­னது. அதிர்ச்சி அடைந்­தது. ஆளு­நர் மாளி­கைக்கு பல­முறை படை­யெ­டுத்­த­னர். இந்­நி­லை­யில், தி.மு.க. அணி­யி­லி­ருந்த காங்­கி­ரஸ், த.வெ.கவை எதிர்த்து வாக்­கு­க­ளைப் பெற்று அங்­கே­போய் சர­ண­டைந்­தது. அண்ணா அறி­வாலயத்­தில் விருந்து சாப்­பிட்­டு­விட்டு பனை­யூ­ரில் கைக­ழு­வி­யது. நிலை­மை­களை நின்று நிதா­னித்­துப் பார்க்­க­வில்லை. கணிக்கவில்லை.  இக் கட்சி இந்­தி­யாவை பா.ஜ.கவி­ட­மி­ருந்து எப்­படி மீட்­கப் போகி­றது?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">தி.மு.க. அணி­யில்  இருக்­கிற கூட்­ட­ணிக் கட்­சி­கள் இவற்­றைப் பார்த்­தன.  த.வெ.கவும்  அணுகி வந்­தது. இட­து­சாரி கட்­சி­கள் தீவிரமாக யோசித்­தன. கழ­கத் தலை­வ­ரைச் சந்­தித்­தன. கருத்­துப் பரி­மாற்­றங்­கள் நடந்­தன. விடு­த­லைச் சிறுத்­­தை­கள் கட்சி நாலா­வி­த­மான யோச­னை­க­ளைச் செய்­தது. அக்­கட்­சி­யி­ன­ரும் தலை­வ­ரைச் சந்­திப்­ப­தும் யோசிப்­ப­து­மாக இருந்­தார்­கள். இறு­தி­யில்  இட­து­சா­ரி­க­ளும்  விடு­த­லைச் சிறுத்­தை­க­ளும் த.வெ.கவை ஆத­ரிப்­பது என்று முடிவு எடுத்­த­னர். கழ­கத் தலை­வர் ஏற்­க­னவே குறிப்­பிட்­ட­படி 
த.வெ.க. ஆட்சி அமைக்க நாங்­கள் இடை­யூ­றாக இருக்க மாட்­டோம் என்று தெரி­வித்து இருந்­தார்.அதன்­ப­டியே அவர் நடந்து கொண்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">இந்­திய யூனி­யன் முஸ்­லிம் லீக் குழப்­ப­மில்­லா­ம­ லும் தெளி­வு­ட­னும் முத­லி­லி­ருந்தே தி.மு.க. அணி­யில் இருப்­ப­தையே விரும்­பி­யது; எடுத்­தும் கூறி­யது. இறு­தி­யில் தமிழ்­நாட்டு நலன் கருதி 
த.வெ.கவை ஆத­ரித்­தது. இல்­லை­யென்­றால் த.வெ.க.112 இடங்­க­ளி­லேயே இருந்­தி­ருக்­கும். அரசை அமைக்க முடி­யா­மல் போயி­ருக்­கும். 
கழ­கத் தலை­வர் ஸ்டாலின்,  “எங்­க­ளது கூட்­ட­ணி­யைச் சார்ந்த தோழர்­கள் இன்­றைய நெருக்­க­டி­யான சிக்­க­லைத் தவிர்க்க நாங்­கள் தமி­ழக வெற்றி கழ­கத்­திற்கு ஆட்சி அமைக்க ஆத­ரவு தெரி­வித்­தா­லும், கொள்கை அடிப்­ப­டை­யில் தி.மு.க. தலை­மை­யி­லான மதச்­சார்­பற்ற முற்­போக்­குக் கூட்­ட­ணி­யில்  தொடர்­கி­றோம் என்று அறி­வித்­தி­ருப்­பதை நான் வர­வேற்­கி­றேன்” என்று கூறி­னார். அதன்­படி 8 பேர் தி.மு.க. அணி­யில் இருப்­ப­வர்­கள் த.வெ.கவை ஆத­ரிப்­ப­தன் மூலம்இன்று அக் கட்சி ஆட்சி பொறுப்பை ஏற்று இருக்­கி­றது.
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">ஏன் த.வெ.க. ஆத­ரிக்க வேண்­டிய நிலை தி.மு.க.  அணி கட்­சி­க­ளுக்கு ஏற்­பட்­டது என்­ப­தைத் தலை­வர் அவ­ரது அறிக்­கை­யில், “ஆட்சி அமைக்­கும் பெரும்­பான்மை யாருக்­கும் கிடைக்­காத  நிலை­யில், மாற்று யோச­னை­க­ளைப் பல­ரும் சொன்­னார்­கள். என்­னைப் பொறுத்­த­வரை, தோழ­மைக் கட்­சி­கள் எந்த முடிவை  எடுத்­தா­லும் அவர்­க­ளின் முடிவை மதித்து  ஒருங்­கி­ணைந்து செயல்­பட்டு நிலை­யான ஆட்சி அமைய வேண்­டும். இன்­னொரு  தேர்­த­லுக்கு வழி வகுத்து விடக்­கூ­டாது  என்­பதே எனது எண்­ண­மாக உள்­ளது” என்று விளக்கி இருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">ஆக, த.வெ.க. ஆட்சி  என்­பது தி.மு.க. அணி கட்­சி­க­ளின் மீது கட்­டப்­பட்ட அரி­ய­ணை­யா­கும். த.வெ.க. தனித்த பெரும்­பான்மையைப் பெற்­று­வி­ட­வில்லை. ஆனால், அவர்­க­ளுக்கு ஆட்­சிக்கு வந்­து­விட வேண்­டும். முதல்­வ­ரா­கி­விட வேண்­டும் என்­கிற ஆசை இருந்­தது. தமிழ்­நாட்­டில்  ஒரு ‘தலப்­பா­கட்டி’ சாமி­யார் இருக்­கி­றார். அவர், ‘ஆசைப்­படு; அடைந்­து­விடு’ என்று ஒரு முழக்­கத்தை முழங்­கு­ப­வர். சிவ­ராத்­தி­ரி­யிலே  ‘ஆனந்­த­தாண்­ட­வம்’ ஆடு­வார். அவர் சொல்­கி­ற­படி எது­வா­னா­லும் ‘ஆசைப்­படு; அடைந்­து­வி­டு’­என்று அடைந்து விட­மு­டி­யாது. அது அவ்­வ­ளவு எளி­தா­னது அல்ல, என்­பதை ‘107’ என்று வந்து நின்று விட்­ட­தைப் பார்த்­தோம். அப்­ப­டியே தி.மு.க. அணி கட்­சி­க­ளின் ஆத­ரவு த.வெ.கவுக்கு  தெரி­விக்­கா­விட்­டால் ‘காடாறு மாதம்; நாடு ஆறு­௨மா­தம்’ என்ற நிலை உரு­வாகி இருக்­கும்.  அவை வேறு­வி­த­மான பிரச்­சி­னை­களை நாட்­டில்  உரு­வாக்­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">‘ஆசையே அலை­போலே, நாமெல்­லாம் அதன் மேலே’  என்­ற­படி  ஆசை­யில்­லா­மல் வாழ்க்கை இல்லை. அந்த ஆசையை நிறை­வேற்­றிக் கொள்­வ­தற்­கு­ரிய அடிப்­படை அவ­சி­ய­மா­கி­றது. புத்­தர் ஆசை­யே­தான் துன்­பங்­க­ளுக்­குக் கார­ணம் என்­றார். அது உண்­மை­தான். ஆசை வாழ்க்­கையை உரு­வாக்­கி­
வி­டும். மறு­பு­றம் இன்­ப­மும் துன்­ப­மும் மாறி மாறி  வர ஏது­வாக இருக்­கும். சந்­தர்ப்­பங்­கள் கிடைக்­கி­ற ­போது கூட ஆசை­கள் நிறை­வே­றி­ வி­டு­வதில்லை. ஏன்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">வானம் தூணின்றி நிற்­கி­றது. அதைத்­தி­ரு­குர்­ஆன் அதன் வார்த்­தை­க­ளில் வெளிப்­ப­டுத்தி அழ­கா­கச் சொல்­கி­றது. அதைத்­தான் கட்­டு­ரை­யின் தொடக்­கத்­தில் எடுத்­துக் காட்டி இருக்­கின்­றோம். அதை­விட என்­னால் செய்­ய­மு­டி­யும் எனது ஆசையை நிறை­வேற்றி வையுங்­கள்  என்று ஒரு­வர் கேட்­டால் - அந்த  ஆசை நிறை­வே­றுமா?  சந்­தர்ப்­பங்­கள் நிற்­காது; நழுவி ஓடி­வி­டும்.  அது நிறை­வேற்ற முடி­யாத ஆசை­யா­கிப் போய்­வி­டும்; ஏனெ­னில் அடிப்­படை சரி­யாக இல்லை. அர­சி­யல் என்­பது அன்­றன்­றாட நியா­யங்­க­ளைப் பேசக் கூடி­யது மட்­டு­மல்ல சில­போது அத­னால் தொலை­நோக்­குத் திட்­டங்­க­ளும் எட்­டப்­போய் விடும். பதவி ஆசை மட்­டும் நிறை­வே­றி­வி­டுமா? என்ன?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">எல்­லா­விதஅம்­சங்­கள்  அவர்­க­ளுக்கு இருந்­தன. அவர்­கள் சுதந்­தி­ரப் போராட்­ட­வீ­ரர்­கள். சென்னை  மாகா­ணத்­திற்கு முதல்­வ­ராக வர­வேண்­டும் என்ற ஆசை­ப்பட்­டார்­கள். அதற்­கு­ரிய சந்­தர்ப்­பங்­கள் வாய்த்­தன. எஸ்.சத்­தி­ய­மூர்த்தி அய்­ய­ரும், சி.என். முத்­து­ரங்க முத­லி­யா­ரும்  முதல்­வ­ராக வர­மு­டி­ய­வில்லை. இன்­னொரு கட்­டத்­தில் காம­ரா­சர் முதல்­வ­ராக வேண்­டும் என்று விருப்­பம் உரு­வா­யிற்று. சட்­ட­மன்­றக் கட்சி ஒரு­
ம­ன­தாக அவ­ரைத் தேர்ந்­தெ­டுக்­க­வில்லை. அப்­போ­தைய தலை­வர்­கள் தேர்­தல் வைத்­தார்­கள். சட்­ட­மன்­றக் கட்சி உறுப்­பி­னர்­கள்  காம­ரா­சரை அதிக வாக்­க­ளித்து வெற்றி பெற­வைத்­தார்­கள். அந்த விருப்­பம் நிறை­வேற்­றப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">அறி­ஞர் அண்­ணா­வின் மர­ணத்­திற்­குப் பிறகு நாவ­லர் நெடுஞ்செழிய­னுக்கு முதல்­வ­ரா­கச் 
சந்­தர்ப்­பம் கிடைத்­தது. அவரோ என்னை ஏக மன­தா­கத் தேர்ந்­தெ­டுத்­தால்  ஏற்­றுக்­கொள்­கி­றேன் என்று சந்­தர்ப்­பங்­களை நிரா­க­ரித்து விட்­டார்.  
பிற­கு­தான் கலை­ஞர் முதல்வரானார். அடிப்­படை இல்­லா­மல் வெறும் சந்­தர்ப்­பங்­க­ளும் பரப்­பு­ரை­யும்  இலக்கை அடை­வ­தில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">ஆனால் ஆசை­ப­டு­ப­வர்­க­ளுக்கு. ‘அடை­ய­
மு­டியா பொரு­ளின் மீது  ஆசை தீராது  அபி­மா­னம்  மாறாது’ என்­றா­கி­வி­டும். தி.மு.க.வின்  அணி­சார்ந்த  கட்­சி­கள் அந்த ஆசையை வெளி­யி
­லி­ருந்து நிறை­வேற்றி இருக்­கின்­றன. த.வெ.க. அரி­ய­ணை­யில் அமர்ந்­து­விட்­டது. தி.மு.க. 
த.வெ.க. ஆட்­சிக்கு வர எந்த இடை­யூ­றை­யும் செய்­ய­வில்லை. காலங் கருதி உத­வி­யைத்­தான் செய்து இருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">ஆனால் இங்கே த.வெ.கவின் வாய்ப்பு போது­மான எண்­ணிக்கை இல்­லா­த­தால் எட்­டி­போய்­விட்­டது. அதை த.வெ.க. நெருங்க வேண்­டு­மா­னால் தி.மு.க.அணி­யி­னர் ஆத­ரவு தர வேண்­டும். அப்­படி ஒரு சந்­தர்ப்­பம், நிலை. அப்­போது த.வெ.கவி­னர் ஆசை எப்­படி நிறை­வே­றும். தி.மு.க. அணி­யி­னர் சட்­டம், அணி­யின் பொது எதிரி,  மக்­கள் ஆகி­ய­வற்­றைப் பார்த்து  ஆத­ரவு தந்­த­னர். சந்­தர்ப்­பங்­கள் வாய்த்த போது  ஆத­ரிக்க ஓர்  அடிப்­ப­டை­யும் கிடைத்­தது. ஆகவே த.வெ.க. ஆட்­சியை அமைத்­தது. சி.ஜோசப் விஜய் அரி­ய­ணையை அலங்­க­ரிக்­கி­றார். இப்­போது  அதி­கார பூர்­வ­மா­க­ வா­னத்­திற்கு நான் தூண் அமைக்­கி­றேன் என்­றும் அவர்  சொல்­ல­லாம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">தேர்­தல் பரப்­பு­ரை­யின்  போது விஜய் பா.ஜ.க.வி­னரை  எதிர்க்க வில்லை.  காங்­கி­ரசை எதிர்க்­க­வில்லை. மற்ற கட்­சி­யி­னர் எவ­ரை­யும் எதிர்த்து  அவர் பேச­வில்லை. ஆனால், தி.மு.க. ‘தீய  சக்தி’  என்று பேசி­னார். அர­சி­யல் பாரம்­ப­ரியமிக்க ஒரு  கட்­சி­யைக் கிண்­ட­ல­டித்­துப் பேசி­னார். தி.மு.க. தீய சக்­தியா நல்ல சக்­தியா என்­பதை இந்­நாடு அறி­யும். ‘தீய­தும் நல்­ல­தும் சம­மாகா’ என்று திரு­குர்­ஆன் கூறும். அது­தான் நமக்கு நினை­வுக்கு வரு­கி­றது. தி.மு.க. தீய சக்தி இல்லை.  நாங்­கள் எப்­படி உங்­க­ளுக்­குச் சம­மா­வோம். ஆனால் தி.மு.க. அணி­யின் கட்­சி­கள் த.வெ.கவை ஆத­ரித்­தது என்­பது அர­சி­யல்நெருக்­க­டி­க­ளி­னால்­தான்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">அத­னால்­தான் கழ­கத்  தலை­வர் விளக்­கம் அளித்து இருக்கிறார்-. த.வெ.கவுக்கு ஏன் தி.மு.க. அணியை சார்ந்த கட்­சி­கள் ஆத­ரவு அளித்­தன என்­ப­தற்கு!  ஆக­வே­தான் காலங்­க­ருதி
த.வெ.கவுக்கு ஆத­ரவு தந்து ஒரு வடி­வம் கொடுத்து இருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">கழ­கத் தலை­வரே, நீங்­கள் அஞ்­சத் தகுந்­தது ஒன்­று­மில்லை. நாங்­கள்  உங்­க­ளோடு இருக்­கின்­றோம். ‘களம் உன்­னி­டம்; காலங் கருதி கருத்­தாய் வடி­வம் தந்­தாய்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">தலைவா, வாழ்க, நீ வாழ்க! வெல்க!!’</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>