<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="14/05/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="37,68,609,1255" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="3"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Wed May 13 2026 18:49:05 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260514T000000+5.30" edition.name="MDU" edition.area="MDU" position.section="14052026-MDU-05" position.sequence="05" ex-ref="14052026-MDU-05.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#000000" boxBorderWeight="2">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="25">ரூ.98 கோடி டெண்டர் முறைகேடு, வருமானத்தை மீறி சொத்து சேர்ப்பு:</lang>
	<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular"  size="25">  </lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="36">எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கர், ஆர்.காமராஜ்,நத்தம் விஸ்வநாதன் மீது லஞ்ச ஒழிப்பு துறையில் வழக்குகள் நிலுவை!</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="40">த.வெ.க.வுக்கு ஆதரவுக்கான பின்னணி குறித்து பரபரப்பு தகவல்கள்!</lang>
	</hl3>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfFrame633366_05_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">சென்னை, மே 14 –</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">டெண்­டர் முறை­கேடு, வரு­மா­னத்­திற்கு அதி­க­மாக சொத்­து­கள் சேர்த்­தது, குட்கா வழக்கு, உணவு கொள்­மு­தல் செய்­தது உள்­ளிட்ட வழக்­கு­க­ளில் அ.தி.மு.க. முன்­னாள் அமைச்­சர்­க­ளான எஸ்.பி.வேலு­மணி, 
சி.விஜ­ய­பாஸ்­கர், ஆர்.காம­ராஜ், நத்­தம் விஸ்­வ­நா­தன், எம்.ஆர்.விஜ­ய­பாஸ்­கர் உள்­ளிட்­டோர் மீது லஞ்ச ஒழிப்­புத்­துறை, சி.பி.சி. ஐ.டி., சி.பி.ஐ., அம­லாக்­கத்­து­றை­யில் வழக்­கு­கள் நிலு­வை­யில் உள்­ள­தால், தங்­களை காப்­பாற்றி கொள்­ளும் வகை­யில் இவர்­கள் தங்­க­ளது ஆத­ரவு எம்­.எல்­.ஏ.க்களு­டன் எடப்­பாடி பழ­னி­சா­மியை எதிர்த்து த.வெ.­க.­வுக்கு ஆத­ரவு அளித்­துள்­ள­தாக தற்­போது தக­வல் வெளி­யாகி உள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">எஸ்.பி.வேலுமணி</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அ.தி.­மு.க. ஆட்சி 2015–-18ம் ஆண்டு காலத் தில் உள்­ளாட்­சித்­துறை அமைச்­ச­ராக எஸ்.பி.வேலு­மணி இருந்­தார். அவ­ரது பணிக் காலத்­தில் சென்னை மற்­றும் கோவை மாந­க­ராட்­சி­கள் மற்­றும் உள்­ளாட்சி அமைப்­பு­க­ளில் தெரு விளக்­கு­களை 
எல்­.இ.டி. பல்­பு­க­ளாக மாற்ற முடிவு செய்­யப்­பட்­டது. அதன்­படி அப்­போ­தைய சந்தை மதிப்­பில் ரூ.600 விலை­யில் இருந்த எல்­.இ.டி. விளக்­கு­களை டெண்­டர் எடுத்த நிறு­வ­னங்­கள் ஒரு எல்­.இ.டி. விளக்கு ரூ.4,500 என வாங்­கி­ய­தாக கணக்கு காட்டி மோசடி நடந்­த­தாக குற்­றச்­சாட்டு எழுந்­தது. இதன் மூலம் டெண்­டர் எடுத்த கே.சி.பி. இன்­ஜி­னி­ய­ரிங் பிரை­வேட் லிமி­டெட் உள்­ளிட்ட நிறு­வ­னத் ­தின் மூலம் அர­சுக்கு ஒரு எல்­இடி விளக்­கு­கள் ரூ.3,900 வரை இழப்பு ஏற்­பட்­டது. அதன்­படி கடந்த 2015 முதல் 2018ம் ஆண்டு வரை அதா­வது 3 ஆண்­டு­கள் எல்.இ.டி. விளக்­கு­கள் வாங்­கி­ய­தில் ரூ.500 கோடி வரை ஊழல் நடந்­தது அம்­ப­ல­மா­னது. டெண்­டர் எடுத்த நிறு­வ­னங்­கள் அப்­போது உள்­ளாட்­சித்­துறை அமைச்­ச­ராக இருந்த எஸ்.பி.வேலு­ம­ணி­யின் பினாமி நிறு­வ­னங் ­கள் என்­றும், அந்த நிறு­வ­னங்­கள் டெண்­டர் எடுக்­கும் வகை­யில் சில விதி­மு­றை­க­ளும் திருத்­தப்­பட்­ட­தாக கூறப்­ப­டு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இது­கு­றித்து அளித்த புகா­ரின்­படி லஞ்ச ஒழிப்­புத்­துறை விசா­ரணை நடத்­தி­ய­தில் பினாமி நிறு­வ­னங்­க­ளுக்கு ஆத­ர­வாக டெண்­டர் விதி­க­ளில் திருத்­தம் செய்­தது மற்­றும் எல்­.இ.டி. விளக்­கு­கள் கொள்­மு­தல் செய்­த­தில் பல நூறு கோடி ரூபாய் முறை­கேடு நடந்­தது உறு­தி­யா­னது. அதை­தொ­டர்ந்து எஸ்.பி. வேலு­மணி மற்­றும் டெண்­டர் எடுத்த நிறு­வ­னங்­கள் மீது லஞ்ச ஒழிப்­புத்­துறை வழக்கு பதிவு செய்து கடந்த 2022ஆம் ஆண்டு செப்­டம்­பர் 13ம் ேததி எஸ்.பி.வேலு­ம­ணிக்­குச் சொந்­த­மான 26 இடங்­க­ளில் சோதனை நடத்தி வழக்கு தொடர்­பான முக்­கிய ஆவ­ணங் களை கைப்­பற்­றி­யது. அதே­போல், சென்னை மாந­க­ராட்­சி­யில் கடந்த 2018ம் ஆண்டு மழை­நீர் வடி­கால் பணி­களை மேற்­கொள்ள டெண்­டர் ஒதுக்­கீடு செய்­யப்­பட்­டது</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அப்­போது உள்­ளாட்­சித்­துறை அமைச்­ச­ராக இருந்து எஸ்.பி.வேலு­மணி மழை­நீர் வடி­கால் பணி­கள் செய்ய டெண்­டர் விடப் பட்­டது. டெண்­டர் எடுத்த நிறு­வ­னத்­திற்கு ஆத­ர­வாக ஒப்­பந்த புள்ளி வழங்­கி­ய­தன் மூலம் ரூ.26.61 கோடி முறை­கேடு நடந்­த­தாக குற்­றச்­சாட்டு எழுந்­தது. அது தொடர்­பாக அறப்­போர் இயக்­கம் சார்­பில் லஞ்ச ஒழிப்­புத்­து­றை­யில் புகார் அளிக்­கப்­பட்­டது. அதன்­படி லஞ்ச ஒழிப்­புத்­துறை விசா­ரணை நடத்­தி­ய­தில் பினாமி நிறு­வ­னத்­திற்கு டெண்­டர் விடும் வகை­யில் சென்னை மாந­க­ராட்­சியை சேர்ந்த 11 பொறி­யா­ளர்­கள்அமைச்­சர் 
எஸ்.பி.வேலு­ம­ணிக்கு ஆத­ர­வாக முறை­கேட்­டில் ஈடு­பட்­டது உறு­தி­யா­னது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அதை­தொ­டர்ந்து லஞ்ச ஒழிப்­புத்­துறை அதி­முக முன்­னாள் அமைச்­சர் எஸ்.பி.வேலு­மணி மற்­றும் சென்னை மாந­க­ராட்­சி­யில் பணி­யாற்­றிய பொறி­யா­ளர்­கள் உள்­பட 11 பேர் மீது ரூ.26.61 கோடி முறை­கேடு மற்­றும் எல்­.இ.டி. விளக்கு முறை­கேடு என மொத்­தம் ரூ.98.25 கோடி மோசடி செய்­த­தாக லஞ்ச ஒழிப்­புத்­துறை வழக்­குப் பதிவு செய்­யப்­பட்டு, நீதி­மன்­றத்­தில் குற்­றப் பத்­தி­ரி­கை­யும் தாக்­கல் செய்­யப்­பட்­டுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அதே­போல், அ.தி.­மு.க. ஆட்சி காலத்­தில் எஸ்.பி.வேலு­மணி 2016-–21ம் ஆண்டு காலத்­தில் அமைச்­ச­ராக பணி­யாற்­றி­னார். அவ­ரது பணிக்­கா­லத்­தில் வரு­மா­னத்­திற்கு அதி­க­மாக ரூ.58.23 கோடி சொத்து சேர்த்­தது தொடர்­பாக எஸ்.பி.வேலு­மணி மற்­றும் அவ­ரது சகோ­த­ரர், அவ­ரது பினா­மி­கள் மீது லஞ்ச ஒழிப்­புத்­துறை வழக்கு பதிவு செய்­துள்­ளது. இந்த டெண்­டர் முறை­கேடு மற்­றும் வரு­மா­னத்­திற்கு அதி­க­மாக சொத்து குவித்­தது என மொத்­தம் 2 வழக்­கு­கள் லஞ்ச ஒழிப்­புத்­து­றை­யில் நிலு­வை­யில் உள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">2026ம் ஆண்டு தேர்­த­லில் அ.தி.­மு.க. மீண்­டும் ஆட்­சிக்கு வரும் என்­றும், அப்­போது தன் மீது போடப்­பட்ட லஞ்ச ஒழிப்­புத்­துறை வழக்­கில் இருந்து தப்­பித்து விட­லாம் என்று அ.தி.மு.க. முன்­னாள் அமைச்­சர் எஸ்.பி.வேலு­மணி நினைத்­தார். ஆனால் நடந்து முடிந்த தேர்­த­லில் யாரும் எதிர்­பார்க்­காத வகை­யில் நடி­கர் விஜய் கட்சி த.வெ.க. 
ஆட்­சிக்கு வந்­தது. அ.தி.மு.க. வெறும் 47 எம்.எல்.ஏ.க்களு­டன் இந்த தேர்­த­லில் மூன்­றா­வது இடத்­திற்கு தள்­ளப்­பட்­டது. தமி­ழ­கத்­தில் த.வெ.க. தலை­வர் விஜய் முதல்­வ­ராக பத­வி­யேற்­றுக் கொண்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தேர்­தல் நேரத்­தில் விஜய், முன்­னாள் அமைச்­சர்­கள் ஊழல் வழக்­கு­களை மீண்­டும் விசா­ரணை நடத்தி நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டும் என்று தெரி­வித்­தி­ருந்­தார். அதன்­படி விஜய் லஞ்ச ஒழிப்­புத்­து­றை­யில் முன்­னாள் அமைச்­சர்­கள் மீதான ஊழல் வழக்­கு­கள் தொடர்­பான கோப்­பு­களை லஞ்ச ஒழிப்­புத் துறை­யி­டம் கேட்­டுள்­ள­தாக கூறப்­ப­டு­கி­றது. இதில் எஸ்.பி.வேலு­மணி மீதான இரண்டு வழக்­கு­க­ளில் குற்­றப்­பத்­தி­ரிகை தாக்­கல் செய்­யப்­பட்டு நீதி­மன்­றத்­தில் இறு­தி­கட்ட விசா­ர­ணை­யில் இருப்­பது தெரி­ய­வந்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">சி.விஜ­ய­பாஸ்­கர்</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">முன்­னாள் அமைச்­சர் சி.விஜ­ய­பாஸ்­கர் அ.தி.மு.க. ஆட்சி காலத்­தில் 2016-–21ம் ஆண்டு சுகா­தா­ரத்­துறை அமைச்­ச­ராக பணி­யாற்­றி­னார். தனது பணிக்­கா­லத்­தில் சி.விஜய­ பாஸ்­கர் தனது வரு­மா­னத்தை காட்­டி­லும் ரூ.35.79 கோடி சொத்து குறிப்பு வழக்கு லஞ்ச ஒழிப்­புத்­துறை வழக்கு பதிவு செய்து கடந்த 2023ம் ஆண்டு நீதி­மன்­றத்­தில் குற்­றப்­பத்­தி­ரிகை தாக்­கல் செய்­துள்­ளது. இந்த சொத்து குவிப்பு வழக்­கில் லஞ்ச ஒழிப்­புத்­துறை சோத­னை­யின்  போது சி.விஜய­ 
பாஸ்­கர் மனைவி ரம்யா வீட்­டில் இருந்து ரூ.23.85 லட்­சம் ரொக்க பணம், 4.87 கிலோ தங்­கம் மற்­றும் பல கோடி மதிப்­புள்ள சொத்து ஆவ­ணங்­கள் பறி­மு­தல் செய்­யப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இது­த­விர சி.விஜ­ய­பாஸ்­கர் மீது தமி­ழ­கம் முழு­வ­தும் குட்கா விற்­பனை செய்ய குட்கா வியா­பா­ரி­க­ளி­டம் பல கோடி ரூபாய் லஞ்­சம் வாங்­கி­யது தொடர்­பாக சி.பி.ஐ. வழக்கு ஒன்று உள்­ளது. பணம் மோசடி தொடர்­பாக ஒன்­றிய அம­லாக்­கத்­து­றை­யில் வழக்கு ஒன்­றும், திரு­வள்­ளூர் மாவட்­டத்­தில் மருத்­துவ கல்­லூரி தொடங்க அடிப்­படை வச­தி­கள் இல்­லாத கல்வி நிறு­வ­னத்­திற்கு மருத்­துவ கல்­லூரி தொடங்க தடை­யில்லா சான்று வழங்­கி­யது தொடர்­பான வழக்கு என முன்­னாள் அ.தி.­மு.க. அமைச்­சர் சி.விஜ­ய­பாஸ்­கர் மீது 4 வழக்­கு­கள் நிலு­வை­யில் உள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">எம்.ஆர்.விஜ­ய­பாஸ்­கர்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">முன்­னாள் அ.தி.­மு.க. அமைச்­சர் எம்.ஆர்.விஜ­ய­பாஸ்­கர் மீது கரூர் மாவட்­டத்­தில் மேலக்­க­ரூர் சார்­ப­தி­வா­ளர் எல்­லைக்­குட்­பட்ட பகு­தி­யில் ரூ.100 கோடி மதிப்­புள்ள 22 ஏக்­கர் நிலம் அப­க­ரித்தவழக்­கில், எம்.ஆர்.விஜ­ய­பாஸ்­கர் அவ­ரது சகோ­த­ரர் சேகர், பிர­வீன் உள்­ளிட்ட 13 பேர் மீது மோசடி உள்­ளிட்ட 
6 பிரி­வு­க­ளின் கீழ் சிபி­சி­ஐடி போலீ­சார் வழக்கு பதிவு செய்து எம்.ஆர்.விஜ­ய­பாஸ்­ கரை கைது செய்­த­னர். தற்­போது எம்.ஆர்.விஜ­ய­பாஸ்­கர் நிதி­மன்­றத்­தின் நிபந்­தனை ஜாமீ­னில் வெளியே உள்­ளார். கடந்த பிப்­ர­வரி மாதம் அனு­ம­தி­யின்றி ஆற்று மணலை கொட்டி வைத்­தி­ருந்­த­தாக எம்.ஆர். விஜ­ய­பாஸ்­கர் மீதான வழக்கு தற்­போது சி.பி.­சி.­ஐ.­டி.­யில் நிலு­வை­யில் உள்­ளது. வரு­மா­னத்­திற்கு அதி­க­மாக சொத்து சேர்த்­த­தாக எம்.ஆர்.விஜ­ய­பாஸ்­கர் மீது லஞ்ச ஒழிப்­புத்­துறை வழக்­குப் பதிவு செய்து விசா­ரணை நடத்தி வரு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">நத்­தம் விஸ்­வ­நா­தன்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">முன்­னாள் அ.தி.­மு.க. அமைச்­சர் நத்­தம் விஸ்­வ­நா­தன் கடந்த 2017ம் ஆண்டு அப்போ தைய அ.தி.மு.க. ஆட்­சி­யில் மின்­சா­ரத்­துறை அமைச்­ச­ராக இருந்­தார். இவ­ரது பணிக் காலத்­தில் சூரிய மின் சக்தி திட்­டத்­துக் ­காக அதி­க­ள­வில் நிலம் கையப்­ப­டுத்­தப்­பட்­டது. அந்த வகை­யில் சூரிய மின்­சக்தி நிலை­யம் அமைக்க நிலம் வாங்­கி­ய­தில் ரியஸ் எஸ்­டேட் வியா­பாரி ஒரு­வ­ரி­டம் ரூ.50 லட்­சம் மோசடி செய்­த­தாக நத்­தம் விஸ்­வ­நா­தன் மீது திருச்­சி­யில் வழக்கு பதிவு செய்­யப்­பட்­டது. மேலும், அமைச்­ச­ராக இருந்த போது, ரூ.3 கோடி மோசடி வழக்கு நிலு­வை­யில் உள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">ஆர்.காம­ராஜ்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">2011-–21ம் ஆண்­டில் அ.தி.­மு.க. ஆட்­சி­யில் உணவு மற்­றும் சிவில் சப்ளை அமைச்­ச­ராக பணி­யாற்­றி­னார். அவ­ரது பணிக்­கா­லத்­தில் தனது அதி­கா­ரத்தை பயன்­ப­டுத்தி வரு­மா­னத்­திற்கு அதி­க­மாக ரூ.127.49 கோடி சொத்து சேர்த்­த­தாக லஞ்ச ஒழிப்­புத்­து­றை­யில் வழக்கு பதிவு செய்­யப்­பட்­டுள்­ளது. பொது விநியோ­ கத்­திற்­கான உணவு பொருட்­கள் கொள்­மு­தல் செய்­த­தில் விலையை உயர்த்தி பொருட்­கள் கொள்­மு­தல் செய்­த­தாக ஆர்.காம­ராஜ் மீது ரூ.350 கோடி ஊழல் புகாரை லஞ்ச ஒழிப்­புத்­துறை விசா­ரணை­ யில் உள்­ளது. ஆர்.காம­ராஜ் மற்­றும் அவ­ரது மகன்­க­ளான டாக்­டர்­கள் இனி­யன், இன்­பன்ஆகி­யோர் பினாமி நிறு­வ­னம் மூலம் தஞ்­சா­வூ­ரில் ‘ காமாட்சி மெடிக்­கல் சென்­டர்’ என்ற பெய­ரில் பன்­னோக்கு மருத்­து­வ­மனை உள்­ளிட்ட சொத்­து­கள் வாங்­கி­ய­தாக புகா­ரும் லஞ்ச ஒழிப்­புத்­து­றை­யில் நிலு­வை­யில் உள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இது­போன்று லஞ்ச ஒழிப்­புத்­துறை, சி.பி.­ சி­.ஐ.டி., சி.பி.ஐ., அம­லாக்­கத்­து­றை­யில் பல்­வேறு வழக்­கு­க­ளில் சிக்­கி­யுள்ள தற்­போது எம்.எல்.ஏ.­வாக வெற்றி பெற்ற அ.தி.­மு.க. முன்­னாள் அமைச்­சர்­க­ளான எஸ்.பி.வேலு­மணி, சி.விஜ­ய­பாஸ்­கர், தோல்வி அடைந்த எம்.ஆர்.விஜ­ய­பாஸ்­கர், நத்­தம்­விஸ்­வ­நா­தன், ஆர்.காம­ராஜ் உள்­ளிட்டோ தங்­கள் வழக்­கு­க­ளில் இருந்து தப்­பிக்­கும் வகை­யில், எடப்­பாடி பழ­னி­சாமிமீது தேர்­தல் தோல்வி மற்­றும் ஆட்சி அமைப்­ப­தற்கு கூட்­டணி தொடர்­பாக கார­ணங்­களை கூறி, எடப்­பாடி பழ­னி­சா­மிக்கு எதி­ராக, முன்­னாள் அமைச்­சர் சி.வி.சண்­மு­கத்­து­டன் இணைந்து எஸ்.பி.வேலு­மணி, சி.விஜ­ய­பாஸ்­க­ரன், எம்.ஆர்.விஜ­ய­பாஸ்­க­ரன், ஆர்.காம­ராஜ், நத்­தம் விஸ்­வ­நா­தன் உள்­ளிட்­டோர் தங்­க­ளது ஆத­ரவு எம்.எல்.ஏ.க் ­களு­டன் த.வெ.­க.­வில் இணைந்­துள்­ள­தாக எஸ்.பி.வேலு­மணி நெருங்­கிய வட்­டா­ரத்­தில்இருந்து தற்­போது தக­வல் வெளி­யாகி உள்­ளது.
</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>