<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="14/05/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,573,958,1495" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Thu May 14 2026 03:45:11 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260514T000000+5.30" edition.name="TRY" edition.area="TRY" position.section="14052026-TRY-03" position.sequence="03" ex-ref="14052026-TRY-03.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="55">தமிழ்நாட்டில் – தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் ஒலிக்க வேண்டும்!</lang>
	<lang class="3" style="Headline2"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular"  size="55"> </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="43">சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் உரை...   முதல் பக்கத் தொடர்ச்சி</lang>
	</hl3>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="MAY12Abw_03_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">தலை­வரை இன்­றைக்­குத் தேர்ந்­தெ­டுத்­தி­ருக்­கி­றோம். வர­லாற்­றுச் சிறப்­பு­மிக்க இந்­தச் சட்­டப் பேர­வை­யில்  பேர­வைத் தலை­வ­ரா­கத் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்­டி­ருக்­கக்­கூ­டிய உங்­க­ளுக்­கும், துணைத் தலை­வ­ரா­கத் தேர்வு செய்­யப்­பட்­டி­ருக்­கக்­கூ­டிய  ரவி­சங்­கர் அவர்­க­ளுக்­கும் எங்­கள் தலை­வர் சார்­பா­க­வும், கழக சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­கள் சார்­பா­க­வும் மீண்­டும் என்­னு­டைய வாழ்த்­து­களை தெரி­வித்­துக் கொள்­கிறேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">பேர­வைத் தலை­வர் அவர்­களே! இங்கே ஏற்­க­னவே எல்­லோ­ரும் குறிப்­பிட்­ட­தைப் போல நீங்­கள் எப்­பொ­ழு­துமே சிரித்த முகத்­திற்­குச் சொந்­தக்­கா­ரர் என்று கேள்­விப்­பட்­டி­ருக்­கி­றேன். அது­மட்­டு­மல்ல எல்­லோ­ரி­ட­மும் மிகுந்த அன்­போடு பழ­கக்­கூ­டி­ய­வர் என்று பலர் சொல்லி நான் கேள்­விப்­பட்­டி­ருக்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இதே சட்­டப் பேர­வை­யில் 1980-ஆம் ஆண்­டுத் தேர்­த­லி­லும் 2011 சட்­ட­மன்­றத் தேர்­த­லி­லும் நீங்­கள் வெற்றி பெற்று ஒரு சிறந்த சட்­ட­மன்ற உறுப்­பி­ன­ரா­கப் பணி­யாற்றி இருக்­கி­றீர்­கள். எனவே பேர­வை­யின் மர­பு­க­ளும் விதி­க­ளும் உங்­க­ளுக்­குப் புதி­யது கிடை­யாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">நீங்­கள் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்ட மூன்று முறை­யும் ஆளுங்­கட்சி உறுப்­பி­ன­ரா­கச் சட்­ட­மன்­றத்­திற்­குள் வந்­தி­ருக்­கி­றீர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இந்த முறை எதிர்க்­கட்­சி­க­ளை­யும் அர­வ­ணைத்­துச் செயல்­ப­டு­கின்ற ஒரு பேர­வைத் தலை­வ­ராக நீங்­கள் பொறுப்­பேற்று இருக்­கி­றீர்­கள். அந்­தப் பொறுப்­பில் மிகச் சிறப்­பாக நடு­நிலை­மை­யோடு செயல்­ப­டு­வீர்­கள் என்­ப­து­தான் எங்­கள் அத்­தனை பேரு­டைய எதிர்­பார்ப்பு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">அதே­போல ஒரு எளிய பின்­ன­ணி­யில் இருந்து வந்து முதன்­மு­றை­யா­கச் சட்­ட­மன்ற உறுப்­பி­ன­ரா­கப் பொறுப்­பேற்று இருக்­கக்­கூ­டிய, மக்­க­ளால் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்­டி­ருக்­கக்­கூ­டிய  ரவி­சங்­கர் அவர்­கள் பேர­வை­யின் துணைத் தலை­வ­ராக உங்­க­ளுக்கு உறு­து­ணை­யாகஇருந்து இந்த அவையை வழி­ந­டத்­து­வார் என்றுநாங்­கள் அத்­தனை பேரும் நம்­பு­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="13">பேர­வை­யில் தொடர வேண்­டிய</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="13">அர­சி­யல் நாக­ரிகம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">பேர­வைத் தலை­வர் அவர்­களே! நம்­மு­டைய  முத­ல­மைச்­சர் அவர்­கள் நேற்று எங்­களு­டைய தலை­வ­ரு­டைய வீடு­க­ளுக்­கும் அனைத்­துக் கட்­சித் தலை­வர்­க­ளின் வீடு­க­ளுக்­கும் சென்று வாழ்த்­து­கள் பெற்­றுக்­கொண்டு சென்­றார். அந்த அர­சி­யல் நாக­ரி­கம் இந்­தப் பேர­வை­யி­லும் தொடர வேண்­டும் என்­ப­து­தான் எங்­க­ளின் எண்­ணம், எதிர்­பார்ப்பு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">ஏற்­க­னவே நான் சொல்லி இருந்­தா­லும் மறு­ப­டி­யும் சொல்ல விரும்­பு­கி­றேன். திரா­விட முன்­னேற்­றக் கழ­கம் இந்­தச் சட்­டப் பேர­வை­யில் எதிரி கட்­சி­யாக இல்­லா­மல் ஒரு ஆக்­கப்­பூர்­வ­மான எதிர்க்­கட்­சி­யாக நிச்­ச­யம் செயல்­ப­டும். எங்­கள் தலை­வர் அவர்­கள் சொன்ன மாதிரி திரா­விட முன்­னேற்­றக் கழ­கம் என்­றைக்­குமே ஒரு ஆக்க சக்­தி­தான்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">பேர­வைத் தலை­வர் அவர்­களே! இந்­தப் பேர­வைக்­கென்று ஒரு மிகப்­பெ­ரிய வர­லாறு இருக்­கி­றது. இன்­றைக்கு இந்­தி­யா­வில் பண்­பாட்டு ரீதி­யா­க­வும் பொரு­ளா­தார ரீதி­யா­க­வும் தமிழ்­நாடு சிறப்­பாக முன்­னேறி இருக்­கி­றது என்­றால் இந்­தப் பேர­வை­யில் நடந்த விவா­தங்­கள், எடுக்­கப்­பட்ட முடி­வு­கள், இயற்­றப்­பட்ட சட்­டங்­கள், நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மா­னங்­கள் இவை­யெல்­லாம்­தான்  கார­ணம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="13">நடு­நி­லை­யோடு</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="13">செயல்­பட வேண்­டும்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">பிற மாநி­லங்­க­ளுக்­கெல்­லாம் ஒரு எடுத்­துக்­காட்­டாக, வழி­காட்­டக்­கூ­டிய வகை­யில் செயல்­பட்டு இந்­தி­யா­வையே திரும்­பிப் பார்க்க வைத்த சட்­ட­மன்­றப் பேரவை இந்­தத் தமிழ்­நாட்டு சட்­ட­மன்­றப் பேரவை. அப்­ப­டிப்­பட்ட இந்­தப் பேர­வை­யில் ஆரோக்­கி­ய­மான ஆக்­கப்­பூர்­வ­மான 
விவா­தங்­க­ளுக்கு இடம் கொடுத்து ஜன­நா­யக மாண்­பு­க­ளுக்கு முக்­கி­யத்­து­வம் கொடுத்து பேர­வைத் தலை­வர் அவர்­கள் என்­றைக்­கும் நடு­நி­லை­மை­யோடு செயல்­பட வேண்­டும் என்று நாங்­கள் அனை­வ­ரும் விரும்­பு­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">நாம் இங்கே ஆளுங்­கட்சி, எதிர்க்­கட்சி என்று எதி­ரெ­திர் வரி­சை­யில் உட்­கார்ந்து இருந்­தா­லும் தமிழ்­நாட்­டின் வளர்ச்சி என்று வரும் பொழுது நாம் அனை­வ­ரும் ஒரே வரி­சை­யில் முன் வரி­சை­யில் நின்று உழைக்க வேண்­டும் என்று நான் விரும்­பு­கி­றேன்.அதைத்­தான் தமிழ்­நாட்டு மக்­க­ளும் எதிர்­பார்த்­துக் கொண்­டி­ருக்­கி­றார்­கள், விரும்­பு­கி­றார்­கள். திரா­விட முன்­னேற்­றக் 
கழ­க­மும் அதைத்­தான் விரும்­பு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">எங்­க­ளு­டைய தலை­வர் அவர்­கள் கடந்த ஐந்து ஆண்­டு­க­ளில் அடிக்­கடிசொல்­கின்ற ஒரு வார்த்தை, “இது எனது அரசு அல்ல நமது அரசு” என்று எங்­க­ளு­டைய தலை­வர் அவர்­கள் அடிக்­கடி சொல்­வார். அதை நிரூ­பித்­தும் காட்­டி­யி­ருக்­கி­றார். சென்ற திரா­விட மாடல் அரசு என்­பது வாக்­க­ளித்த மக்­க­ளுக்கு மட்­டும் இல்­லா­மல் வாக்­க­ளிக்­காத மக்­க­ளுக்­கு­மான அர­சா­கத்­தான் செயல்­பட்டு வந்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">ஆகவே இந்­தப் புதிய அர­சும் அனை­வ­ருக்­கு­மான அர­சாக, உங்­க­ளுக்கு வாக்­க­ளிக்­காத மக்­க­ளுக்­கு­மான அர­சா­கச் செயல்­பட 
வேண்­டும் என்று நான் விரும்­பு­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="13">தமிழ்­நாட்­டின் நலன்­தான்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="13">மிக முக்­கி­யம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இந்த நேரத்­தில் இன்­னொரு விஷ­யத்­தை­யும் இங்கே நினை­வு­ப­டுத்த விரும்­பு­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">பேர­வைத் தலை­வர் அவர்­க­ளும்  முத­ல­மைச்­சர் அவர்­க­ளும் இன்­றைக்கு எதிர்க்­கட்­சித் தலை­வ­ராக இருக்­கின்ற நானும் ஒரே கல்­லூ­ரி­யில் படித்த பழைய மாண­வர்­கள். ஒரே கல்­லூ­ரி­யில் நாம் படித்­தி­ருந்­தா­லும் அர­சாங்­கத்தை நடத்­து­வ­தில் தி.மு.க தான் சீனி­யர் பேட்ச், அது உங்­க­ளுக்­குத் தெரி­யும். 1967-லேயே ஆட்­சிக்கு வந்­தது தி.மு.க. நாங்­கள் தான் சீனி­யர்ஸ். அந்த அடிப்­ப­டை­யில் எங்­க­ளின் அறி­வை­யும் அனு­ப­வத்­தை­யும்  நாங்­கள் பகிர்ந்­து­கொள்­ளத் தயா­ராக இருக்­கி­றோம். அதை ஏற்­றுக்­கெள்ள நீங்­க­ளும் தயா­ராக இருங்­கள். ஏனென்­றால் நமக்கு எப்­போ­துமே தமிழ்­நாட்டு மாநி­லத்­தின் நலன்­தான் மிக மிக முக்­கி­யம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">பேர­வைத் தலை­வர் அவர்­களே! நீங்­கள் போட்­டி­யின்­றித் தேர்­வாகி இருக்­கி­றீர்­கள். முத­ல­மைச்­ச­ரும் எதிர்க்­கட்­சித் தலை­வ­ரான நானும் அவை முன்­ன­வ­ரும் உங்­களை இந்த இருக்­கை­யில், அமரவைத்­தி­ருக்­கி­றோம். இன்­றைக்கு உங்­கள் கையைப் பிடித்து அழைத்­துக்­கொண்டு வந்து உட்­கார வைத்­தி­ருக்­கி­றோம். இனி எங்­கள் இரண்டு தரப்­பை­யும் நீங்­கள் தான் கையைப் பிடித்து அர­வ­ணைத்து கோபம் இல்­லா­மல், கோபப்­ப­டா­மல் - நீங்­கள் கோபப்­பட மாட்­டீர்­கள் என்று தெரி­யும் - உங்­க­ளைக் கோபப்­ப­டுத்­து­கின்ற மாதிரி எந்­தச் செய­லை­யும் நாங்­கள் செய்ய மாட்­டோம். இரண்டு தரப்­பை­யும் நீங்­கள் வழி­ந­டத்த வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="13">சட்­டப் பேர­வை­யின்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="13">கூடு­தல் சிறப்பு!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">சட்­ட­மன்ற ஜன­நா­ய­கத்­தில் ஆளுங்­கட்சி காது­க­ளா­க­வும் எதிர்க்­கட்சி குர­லா­க­வும் இருக்க வேண்­டும். அதில் தான் இந்த அவை­யின் பெருமை நிச்­ச­யம் அடங்கி இருக்­கி­றது. பொது­வாக இதற்கு முந்­தைய சட்­ட­மன்­றப் பேர­வையைஎடுத்­துக் கொண்­டால் ஆளுங்­கட்சி வரி­சை­யில் அதிக உறுப்­பி­னர்­க­ளும் எதிர்க்­கட்சி வரி­சை­யில் அதை­வி­டக் குறை­வான உறுப்­பி­னர்­களும் இருப்­பார்­கள். ஆனால் இந்த முறை 
கிட்­டத்­தட்ட ஆளுங்­கட்­சிக்கு இணை­யான எதிர்க்­கட்சி வரிசை வலி­மை­யாக இன்­றைக்கு அமைந்­தி­ருக்­கி­றது. அது­தான் இந்­தப் பேர­வை­யின் இன்­னொரு கூடு­தல் சிறப்பு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இதன் மூல­மாக தமிழ்­நாட்டு மக்­கள் ஒரு 
முக்­கி­ய­மான செய்­தியை நமக்­குச் சொல்­லி­ 
யி­ருக்­கிறார்­கள். அது என்­ன­வென்­றால், எதிர்க்­கட்சி வரிசை மிக மிக வலி­மை­யாக இருந்து இந்த அரசை, புதிய அரசை வழி­ந­டத்த வேண்­டும், ஆக்­கப்­பூர்­வ­மான விமர்­ச­னங்­களை முன்­வைக்க வேண்­டும் என்று மக்­கள் நமக்­குச் சொல்­லி­யி­ருக்­கி­றார்­கள் என்று நான் நம்­பு­கிறேன். ஆகவே மக்­க­ளு­டைய எண்­ணத்­தைப் பிர­தி­ப­லிக்­கின்ற மாதிரி எங்­க­ளு­டைய பணி­கள் நிச்­ச­யம் இருக்­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">பேர­வைத் தலை­வர் அவர்­களே! இந்த அரசு பொறுப்­பேற்ற நிகழ்ச்­சி­யில் நடந்த ஒரு நிகழ்வை இங்கே நான் சுட்­டிக்­காட்ட விரும்­பு­ கி­றேன். ஏற்­க­னவே சுட்­டிக்­காட்டி இருக்­கி­றார்­கள். அந்த நிகழ்ச்­சி­யில் தமிழ்த்­தாய் வாழ்த்து மூன்­றா­வது இடத்­திற்­குத் தள்­ளப்­பட்­டி­ருக்­கி­றது. இது தமிழ்­நாட்டு மக்­கள் மத்­தி­யில் மிகப்­பெ­ரிய ஒரு கோபத்­தை­யும், அதிர்ச்­சி­யை­யும் ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">அதை எதிர்க்­கட்­சி­கள் எல்­லோ­ரும் விமர்­சித்­தி­ருக்­கி­றோம். அதற்கு ஆளுங்­கட்­சி­யும் ஒரு விளக்­கத்­தைக் கொடுத்­தி­ருக்­கி­றார்­கள், நானும் பார்த்­தேன். எங்­க­ளது கருத்து என்­ன­வென்­றால், பா.ஜ.க ஆட்­சிக்கு வந்­தி­ருக்­கக்­கூ­டிய மேற்­கு­வங்க மாநி­லத்­தில்பதவி ஏற்பு நிகழ்ச்­சி­யின் போது ‘வந்தே மாத­ரம்’ பாடல் பாடப்­ப­ட­வில்லை. ஆனால் இங்கே தமிழ்­நாட்­டில் அது பாடப்­பட்­­டிருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="13">ஆளு­நர் உரை­யில் தவறு</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="13">நடந்து விடக் கூடாது!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">மேற்­கு­வங்­கத்­தில் இன்­றைக்கு யார் ஆளு­ந­ரா­கச் சென்று உட்­கார்ந்து இருக்­கி­றார் என்று உங்­கள் அத்­தனைபேருக்­கும் தெரி­யும். நான் சொல்ல வேண்­டிய அவ­சி­யம் இல்லை. அவர் இங்கே ஆளு­ந­ராக இருந்­த­போது தமிழ்­நாடு சட்­ட­மன்­றப் பேர­வை­யில் தமிழ்த்­தாய் வாழ்த்­துக்கு முன்பு தேசிய கீதம் பாட வேண்­டும் என்று பேர­வை­யின் மர­பையே மாற்­றச் சொன்­ன­வர்­தான் இன்­றைக்கு மேற்­கு­வங்­கத்­தில் ஆளு­ந­ராக இருக்­கி­றார். அதை நாங்­கள் 
உறு­தி­யாக, எங்­க­ளது தலை­வர், அப்­போ­தைய முத­ல­மைச்­சர் உறு­தி­யாக மறுத்­தார். அத­னால் 2023-ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து மூன்று வரு­டம் அவர் பேர­வை­யி­லி­ருந்து வெளி­ந­டப்பு செய்­து­விட்­டுச் சென்ற காட்­சி­களை எல்­லாம் 
நீங்­க­ளும் பார்த்­தி­ருப்­பீர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இதன் மூல­மாக நாங்­கள் சொல்ல வரு­வது, அடுத்து விரை­வி­லேயே இந்­தப் பேர­வை­யில் ஆளு­நர் உரை நிகழ்த்­த­வி­ருக்­கி­றார். ஆகவே ஏற்­க­னவே உங்­கள் அர­சின் பத­வி­யேற்பு 
விழா­வில் நடந்த அந்­தச் சம்­ப­வம், அந்­தத் தவறு மீண்­டும் இந்­தப் பேர­வை­யில் நடப்­ப­தற்கு 
நீங்­கள் அனு­ம­திக்­கக்­கூ­டாது, நாங்­க­ளும் 
அனு­ம­திக்க மாட்­டோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">பேர­வை­யில் மட்­டு­மல்ல, தமிழ்­நாட்­டில் நடக்­கக்­கூ­டிய எந்த நிகழ்ச்­சி­யாக இருந்­தா­லும் சரி, அரசு நிகழ்ச்­சி­யாக இருந்­தா­லும் சரி, எந்த நிகழ்ச்­சி­யாக இருந்­தா­லும் சரி, தமிழ்த்­தாய் வாழ்த்து என்­றைக்­கும் இரண்­டா­வது இடத்­திற்கு நாம் தள்­ளிப்­போக விடக்­கூ­டாது. இந்த அரசு அதற்கு அனு­ம­திக்­கக்­கூ­டாது என்று நான் இங்கே கேட்­டுக்­கொள்­கின்­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">மிக­வும் விழிப்­போடு இருந்து நம்­மு­டைய உரி­மையை, மர­பைப் பாது­காக்க வேண்­டும் என்று உங்­களை எல்­லாம் வலி­யு­றுத்தி நான் கேட்­டுக்­கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">பேர­வைத் தலை­வர் அவர்­களே, வண்­டிக்கு பிரேக் எப்­ப­டியோ, ஒரு காளைக்கு மூக்­க­ணாங் க­யிறு எப்­ப­டியோ, அப்­ப­டித்­தான் ஆளுங்­கட்­சிக்கு எதிர்க்­கட்சி என்று பேர­றி­ஞர் அண்ணா அவர்­கள் நமக்­குச் சொல்லி இருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">ஆகவே பேர­றி­ஞர் அண்ணா சொன்ன வழி­யில் ஆளுங்­கட்­சி­யின் செயல்­பாட்டை உற்று நோக்கி உங்­க­ளின் நிறை­களை, குறை­க­ளைச் சுட்­டிக்­காட்­டு­கின்ற ஒரு ஆக்­கப்­பூர்­வ­மான எதிர்க்­கட்­சி­யாக நாங்­கள் நிச்­ச­ய­மா­கச் செயல்­ப­டு­வோம்.
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இந்த அவைக்­குப் புதி­ய­வர்­கள், முதல் முறை சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­கள் நிறைய பேர் வந்­தி­ருக்­கி­றீர்­கள். அதில் மிகுந்த மகிழ்ச்சி. அதே­போல நீண்ட வரு­டங்­க­ளுக்­குப் பிறகு நிறைய பெண் சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­கள் இங்கே இடம் பெற்று இருக்­கி­றீர்­கள். அதில் எங்­க­ளுக்­குக் 
கூடு­தல் மகிழ்ச்சி. அத்­தனை பேருக்­கும் 
மீண்­டும் என்­னு­டைய வாழ்த்­து­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">தமிழ்­நாட்­டின் உரி­மை­க­ளுக்­கா­க­வும், வளர்ச்­சிக்­கா­க­வும் நாம் எல்­லா­ரும் சேர்ந்து ஒன்­றா­கப் பய­ணிப்­போம். எது எப்­ப­டி­யா­னா­லும் திரா­விட இயக்­கத்­தின் அடிப்­ப­டைக் கொள்­கைப்­படி எல்­லோ­ருக்­கும் எல்­லாம் கிடைப்­பதை உறுதிசெய்­கின்ற வகை­யில் எதிர்க்­கட்சி வரி­சை­யில் இருந்து நாங்­கள் நிச்­ச­யம் செயல்­ப­டு­வோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">நடந்து முடிந்த தேர்­த­லில் ஆட்சி அமைப்­ப­தற்­கான பெரும்­பான்­மையை ஆளுங்­கட்­சிக்கு மக்­கள் வழங்­கா­மல் போனா­லும், திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தின் தலை­மை­யில் தேர்­த­லைச் சந்­தித்து வென்ற தோழமை இயக்க சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­க­ளின் ஆத­ர­வோடு ஆட்சி அமைத்­தி­ருக்­கக்­கூ­டிய புதிய அர­சிற்­கும், முத­ல­மைச்­சர் அவர்­க­ளுக்­கும் என்­னு­டைய வாழ்த்­து­களை நான் மீண்­டும் தெரி­வித்­துக் கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">பேர­வைத் தலை­வர் அவர்­க­ளுக்­கும், 
பேர­வைத் துணைத் தலை­வர் அவர்­க­ளுக்­கும் என்­னு­டைய நன்றி. உங்­க­ளு­டைய பணி­கள் சிறக்­கட்­டும். மீண்­டும் என்­னு­டைய வாழ்த்­து­
க­ளைத் தெரி­வித்­துக் கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">வெல்க தமிழ், வாழ்க தமிழ்­நாடு! மக்­க­ளைப் பிரிக்­கும் சனா­த­னம் நிச்­ச­யம் ஒழிக்­கப்­பட வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இவ்­வாறு சட்­டப் பேர­வை­யில் எதிர்க்­கட்­சித் தலை­வர் உத­ய­நிதி ஸ்டாலின் அவர்­கள் 
உரை­யாற்­றி­னார்.</lang>
</p>

<block id="subarticle1" boxBorderWeightColor="" boxBorderWeight="" style="subarticle" width="1" >

	<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="12">முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அவர்கள் முன்னிலையில் நேற்று முன்தினம் (12.5.2026) தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், சட்டமன்றப் பேரவைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜே.சி.டி.பிரபாகரை, சட்டப்பேரவை தலைவர் இருக்கையில், அவை முன்னவர்  அமைச்சர் 
கே.ஏ. செங்கோட்டையன், எதிர்க்கட்சித் தலைவர்  உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் அமர வைத்தனர்.</lang>
</p>
<hl2 id="Headline2" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline"  font=""  size=""></lang>
</hl2>
</block>
    </body.content>
  </body>
</nitf>