<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="15/05/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="37,69,376,1547" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="1"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Fri May 15 2026 03:30:26 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260515T000000+5.30" edition.name="CBE" edition.area="CBE" position.section="15052026-CBE-02" position.sequence="02" ex-ref="15052026-CBE-02.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#0000ff" boxBorderWeight="1.99193248209899">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="34">எதிர்க்கட்சித் தலைவரின் எழுச்சி உரை!</lang>
	</hl1>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup637491_02_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">புதி­தா­கத் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்ட சபா­நா­ய­கர், துணை சபா­நா­ய­கரை வாழ்த்தி, சட்­டப்­பே­ர­வை­யில் மாண்­பு­மிகு எதிர்க்­கட்­சித் தலை­வர்  உத­ய­நிதி ஸ்டாலின் அவர்­கள் ஆற்­றிய உரை என்­பது வர­லாற்­றுச் சிறப்பு மிக்க எழுச்சி உரை­யா­கவே அமைந்­தி­ருந்­தது. பெரும்­பா­லும் புதிய உறுப்­பி­னர்­கள் நிறை­யப் பேர் அவைக்­குள் வந்­தி­ருப்­ப­தால் இந்த உரை அவர்­க­ளுக்கு எடுத்த சட்­ட­ச­பைப் பாட­மா­க­வும் அமைந்­தி­ருந்­தது.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">அன்­றைய சென்னை மாகா­ணத்­துக்கு  1920 ஆம் ஆண்டு முதல் பொதுத் தேர்­தல் நடந்­தது. அதில் திரா­விட இயக்­கத்­தின் தாய் அமைப்­பான  நீதிக்­கட்சி எனப்­ப­டும் தென்­னிந்­திய நல உரி­மைச் சங்­கம் ஆட்சி அமைத்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">நீதிக்­கட்­சி­யின் நீட்­சி­யாக தந்தை பெரி­யார் அவர்­க­ளால் திரா­வி­டர் கழ­கம் என்ற சமூக சீர்­தி­ருத்த அமைப்பு உரு­வா­னது. அந்­தச் சமூக சீர்­தி­ருத்­தக் கருத்­து­களை நடை­மு­றைப்­ப­டுத்த திரா­விட முன்­னேற்­றக் கழ­கம் என்ற அர­சி­யல் இயக்­கத்தை பேர­றி­ஞர் அண்ணா உரு­வாக்கி, 1967 ஆம் ஆண்டு முதன்­மு­த­லாக கழ­கத்தை ஆட்­சி­யில் அமர்த்­தி­னார். ஐந்து முறை திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்தை ஆட்­சி­யில் அமர்த்தி நவீன  தமிழ்­நாட்டை  உரு­வாக்­கிய சிற்­பி­யா­கத் திகழ்ந்­தார் தமி­ழி­னத் தலை­வர் கலை­ஞர் அவர்­கள். ஆறா­வது முறை­யாக  ஆட்­சி­யைக்  கைப்­பற்றி,  இந்­தி­யாவே  வியந்து பார்க்­கும் திரா­விட மாடல் 
ஆட்­சி­யைக் கொடுத்­தார் திரா­விட நாய­கன் முத்­து­வேல் கரு­ணா­நிதி ஸ்டாலின் அவர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">இந்­தத் தேர்­த­லில் எந்­தக் கட்­சிக்­கும் ஆட்சி அமைக்­கும் பெரும்­பான்­மையை மக்­கள் வழங்­க­வில்லை. தி.மு.க.வுடன் கூட்­டணி அமைத்­துப் 
போட்­டி­யிட்ட கட்­சி­க­ளின் ஆத­ர­வு­டன் ஆட்சி அமைத்­துள்­ளது த.வெ.க. இந்­தச் 
சூழ­லில் சட்­ட­மன்ற எதிர்க்­கட்­சித் தகு­தி­யோடு சபைக்­குள் சென்­றுள்­ளது தி.மு.க.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">துணை முத­ல­மைச்­ச­ராக இருந்து பல்­வேறு திட்­டங்­க­ளைச் செயல்­ப­டுத்தி திரா­விட மாடல் ஆட்­சிக்கு பேரும் புக­ழும் ஏற்­ப­டுத்­தித் தந்த மாண்­பு­மிகு உத­ய­நிதி ஸ்டாலின் அவர்­களை எதிர்க்­கட்­சித் தலை­வ­ராக இருந்து செயல்­பட ஆணை­யிட்­டுள்­ளார் திரா­விட நாய­கன், கழ­கத் தலை­வர் மு.க.ஸ்டாலின் அவர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">இரண்டு நாடா­ளு­மன்­றத் தேர்­தல்­க­ளின் போதும், இரண்டு சட்­ட­மன்­றத்  தேர்­தல்­க­ளின் போதும்  தமிழ்­நாட்­டின் அனைத்­துப் பகு­தி­க­ளுக்­கும் சென்று, சுற்­றிச் சுழன்று பணி­யாற்­றி­ய­வர் மாண்­பு­மிகு உத­ய­நிதி ஸ்டாலின் அவர்­கள். இளை­ஞ­ர­ணிச் செய­லா­ள­ராக இருந்து பல்­லா­யி­ரக்­க­ணக்­கான இளை­ஞர்­களை கழ­கத்தை நோக்கி ஈர்த்­தது மட்­டு­மல்ல; அவர்­களை, கொள்கை வார்ப்­பு­க­ளாக  வார்ப்­பித்­த­வர்  மாண்­பு­மிகு  உத­ய­நிதி அவர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">ஆட்­சித் தகுதி, கட்­சித் தகுதி ஆகிய இரண்டு தகு­தி­க­ளோடு வளர்ந்த அவர், தமிழ்­நாடு சட்­ட­மன்­றத்­தின் எதிர்க்­கட்­சித் தலை­வ­ரா­கப் பொறுப்­பெ­டுத்­தி­ருப்­பது மிகச் சிறப்பு ஆகும். தமி­ழி­னத் தலை­வர் கலை­ஞ­ரும், திரா­விட நாய­கன் மு.க.ஸ்டாலின் அவர்­க­ளும் எதிர்க்­கட்­சித் தலை­வர் பத­வி­யில் இருந்து, அன்­றைய ஆளும்­கட்­சி­யின் தவ­று­களை தினந்­தோ­றும் சுட்­டிக் காட்டி சிம்ம சொப்­ப­ன­மாக இருந்­த­வர்­கள் என்­ப­து­தான் வர­லாறு. அத்­த­கைய வர­லாற்­றின் தொடர்ச்சி தான் நான் என்­பதை முதல் நாள் ஆற்­றிய உரை­யி­லேயே மெய்ப்­பித்­துக் காட்­டி­விட்­டார் மாண்­பு­மிகு உத­ய­நிதி ஸ்டாலின் அவர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">தனது முதல் உரை­யையே முத்­திரை பதிக்­கும் உரை­யாக ஆற்றி விட்­டார் மாண்­பு­மிகு உத­ய­நிதி அவர்­கள். தந்தை பெரி­யார், பேர­றி­ஞர் அண்ணா, 
தமி­ழி­னத் தலை­வர் கலை­ஞர், திரா­விட மாடல் ஆட்­சி­யைத் தந்த  மு.க.ஸ்டாலின் ஆகி­யோரை வணங்­கித் தொடங்­கி­னார். தன்­னைத் தேர்ந்­தெடுத்து அனுப்­பிய சேப்­பாக்­கம் – திரு­வல்­லிக்­கேணி தொகுதி மக்­க­ளுக்கு நன்றி சொன்­னார். தி.மு.க. கூட்­ட­ணிக்கு வாக்­க­ளித்த 1 கோடியே 54 லட்­சத்து 82 ஆயி­ரத்து 782 வாக்­கா­ளர்­க­ளுக்கு நன்­றி­யைத் தெரி­வித்­தார்.  முத்­த­மி­ழ­றி­ஞர் டாக்­டர் கலை­ஞ­ரின் உயி­ரி­னும் மேலான அன்பு  உடன்­பி­றப்­பு­கள் அத்­தனை  பேருக்­கும் நன்­றி­யைத் தெரி­வித்து நெகிழ வைத்­தார் மாண்­பு­மிகு உத­ய­நிதி அவர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">இறுக்­க­மான சூழலை உடைக்­கும் வகை­யில் மாண்­பு­மிகு உத­ய­நிதி அவர்­க­ளின் பேச்சு அமைந்­தி­ருந்­தது. முத­ல­மைச்­சர் விஜ­யும், பேர­வைத் தலை­வ­ரா­கத் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்ட ஜே.சி.டி.பிர­பா­க­ர­னும், எதிர்க்­கட்­சித் தலை­வ­ராக இருக்­கும் உத­ய­நிதி அவர்­க­ளும் ஒரே கல்­லூ­ரி­யில் படித்­த­வர்­கள். இதனை 
சுட்­டிக் காட்­டிப் பேசி­னார் மாண்­பு­மிகு உத­ய­நிதி.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">“ஒரே கல்­லூ­ரி­யில் நாம் படித்­தி­ருந்­தா­லும் அர­சாங்­கத்தை நடத்­து­வ­தில் 
தி.மு.க. தான் சீனி­யர் பேட்ச். அது உங்­க­ளுக்­குத் தெரி­யும். 1967–லேயே 
ஆட்­சிக்கு வந்­தது தி.மு.க. நாங்­கள்­தான் சீனி­யர்ஸ். அந்த அடிப்­ப­டை­யில் 
எங்­க­ளின் அறி­வை­யும் அனு­ப­வத்­தை­யும் நாங்­கள் பகிர்ந்­து­கொள்­ளத் தயா­ராக இருக்­கிறோம்”</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">என்று சொன்­னதை பேர­வையே ரசித்­தது. முத­ல­மைச்­சர் விஜய் அப்­போ­து­தான் சிரித்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">“திரா­விட முன்­னேற்­றக் கழ­கம் இந்­தச் சட்­டப் பேர­வை­யில்  எதி­ரிக் கட்­சி­யாக இல்­லா­மல், ஒரு ஆக்­கப்­பூர்­வ­மான எதிர்க்­கட்­சி­யாக நிச்­ச­யம் செயல்­ப­டும். எங்­கள் தலை­வர் அவர்­கள் சொன்ன மாதிரி, திரா­விட முன்­னேற்­றக் கழ­கம் என்­றைக்­குமே ஒரு ஆக்க சக்­தி­தான்”</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5"> </lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">என்­பதை ஆணித்­த­ர­மா­கச் சொன்­னார் மாண்­பு­மிகு உத­ய­நிதி அவர்­கள். அதே நேரத்­தில் பல­வீ­ன­மான ஆளும்­கட்சி நீங்­கள்</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">என்­ப­தை­யும் அழுத்­த­மா­கச் சொன்­னார் மாண்­பு­மிகு உத­ய­நிதி அவர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">அமைச்­ச­ர­வைப் பொறுப்­பேற்ற அன்று, தமிழ்த்­தாய் வாழ்த்து மூன்­றா­வது இடத்­துக்­குத் தள்­ளப்­பட்­டது. இத­னைச் சுட்­டிக் காட்டி கடு­மை­யான கண்­ட­னத்தை பதிவு செய்­யத் தவ­ற­வில்லை மாண்­பு­மிகு உத­ய­நிதி. பா.ஜ.க.வின் மர­பு­க­ளுக்கு நீங்­கள் அடி­ப­ணி­யக் கூடாது என்­பதை, புதிய அர­சுக்கு புத்­தி­ம­தி­யா­கச் சொன்­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">“நடந்து முடிந்த தேர்­த­லில் ஆட்சி அமைப்­ப­தற்­கான பெரும்­பான்­மையை ஆளுங்­கட்­சிக்கு மக்­கள் வழங்­கா­மல் போனா­லும், திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தின் தலை­மை­யில் தேர்­த­லைச் சந்­தித்து வென்ற தோழமை இயக்க சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­க­ளின் ஆத­ர­வோடு ஆட்சி அமைத்­தி­ருக்­கக்­கூ­டிய புதிய அர­சிற்­கும், மாண்­பு­மிகு முத­ல­மைச்­சர் அவர்­க­ளுக்­கும் என்­னு­டைய வாழ்த்­து­களை நான் மீண்­டும் தெரி­வித்­துக் கொள்­கி­றேன்.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">” என்ற வார்த்­தை­க­ளில் மாண்­பு­மிகு 
உத­ய­நிதி அவர்­க­ளின் நுட்­ப­மான ஆளு­மைத் திறன் வெளிப்­பட்­டது.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">ஆளும்­கட்சி­யி­ன­ருக்கு கோபம் ஏற்­ப­டுத்­தாத சொற்­க­ளால், உண்­மையை உடைத்­துச் சொல்லி அதனை அவைக் குறிப்­பில் ஏற்றி விட்­டார் மாண்­பு­மிகு உத­ய­நிதி.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">“வெல்க தமிழ், வாழ்க தமிழ்­நாடு! மக்­க­ளைப் பிரிக்­கும் சனா­த­னம் நிச்­ச­யம் ஒழிக்­கப்­பட வேண்­டும்” என்று தனது உரையை நிறைவு செய்­துள்­ளார் மாண்­பு­மிகு உத­ய­நிதி. திரா­விட முன்­னேற்­றக் கழ­கம் தனது கொள்கை முழக்­கத்தை 
எப்­போ­தும் கைவி­டாது</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">என்­ப­தற்­கான எடுத்­துக்­காட்­டாக எதிர்க்­கட்­சித் தலை­வர் மாண்­பு­மிகு உத­ய­நிதி அவர்­க­ளின் உரை அமைந்­தி­ருந்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="Wingdings" fontStyle="Regular" size="11">•</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>