<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="18/05/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="37,70,956,1198" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="4"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Mon May 18 2026 03:31:30 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260518T000000+5.30" edition.name="CBE" edition.area="CBE" position.section="18052026-CBE-02" position.sequence="02" ex-ref="18052026-CBE-02.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#0000ff" boxBorderWeight="2">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="1_TAUN_Vairam" fontStyle="Regular" size="66">‘புஷ்பா’ பட பாணிதான் புதிய அரசியலா? </lang>
	</hl2>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup644495_02_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14">திராவிட இயக்கத்தமிழர் பேரவைத் தலைவர் சுப.வீரபாண்டியன் அவர்கள் ‘திராவிடம் 100’ வலையொளிக்கு அளித்த பேட்டி வருமாறு:–</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13.5">திராவிடம் 100 :</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">வணக்கம் ஐயா</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13.5">சுப.வீ : </lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">வணக்கம் இளஞ்சித்திரன்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13.5">திராவிடம் :</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் ஆளுங்கட்சியான த.வெ.க. இன்று தன் பெரும் 
பான்மையை மெய்ப்பித்துள்ளது. இது அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து வந்த 25  உறுப்பினர்களின் ஆதரவி னால் தான் நடந்துள்ளதா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13.5">சுப.வீ :</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று, இப்போது சட்டமன்ற வாக்கெடுப்பிலும் வெற்றி பெற்றுள்ள முதலமைச்சருக்கும், ஆளுங் கட்சி யினருக்கும் வாழ்த்துகளை முதலில் தெரிவித்துக் கொள்கின்றேன். ஏற்கனவே வெளியில் இருந்து தான் பெற்றுள்ள ஆதரவையும் காட்டித்தான் ஆட்சி அமைக்கும் உரிமையை ஆளுநரிடமிருந்து முதல்வர் விஜய் பெற்றார்.  அந்த ஆதரவு அவருக்கு எங்கிருந்து கிடைத்தது? தன் தேர்தல் பரப்புரை முழுவதிலும், யாரைத் தீய சக்தி, தீய சக்தி என்று சொல்லிக் கொண்டிருந்தாரோ, அந்த சக்தியோடு சேர்ந்து போட்டியிட்டுத் தேர்தலில் வெற்றி பெற்றவர்களின் ஆதரவைத்தான் அவர் முதலில் பெற்றார். அதுதான் ஆட்சி அமைக்க அடிப்படையாக இருந்தது. இப்போது கிடைத்திருப்பது வெறும் கூடுதல் ஆதரவு. அவ்வளவுதான்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13.5">திராவிடம் :</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">நீங்கள் சொல்வது போல, எங்கள் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவால்தான் நீங்கள் ஆட்சி அமைக்க முடிந்திருக்கிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சட்டமன்றத்திலேயே கூறினார். ஆனால் அதற்குத் தன் எக்ஸ் தளத்தில், மாலையில் முதலமைச்சர் விஜய் ஒரு எதிர்க் கருத்தைப் பதிவு செய்துள்ளார்  எங்கள் வெற்றியின் வீச்சை, கொளத்தூர் தொகுதி முடிவிலிருந்து நீங்கள் அறிந்து கொள்ளவில்லையா என்று கேட்டிருக்கிறார். இந்த விடையில் ஒரு விதமான ஆணவம் தெரிகிறது. இது குறித்து....?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13.5">சுப.வீ : </lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">வெற்றி எப்போதும் ஆணவத்தைக் கொண்டு வந்து சேர்க்கும்  ஆனால் அதனைக் காலம் சரி செய்யும்! இதுதான் இயற்கையின் போக்கு!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">உதயநிதி அவர்களின் கூற்றுக்கு விஜய் சட்டமன்றத்திலேயே விடை சொல்லி இருக்கலாம். ஆனால் அங்கு அமைதியாக இருந்து விட்டு, வீட்டிற்குப் போய், மாலையில் எக்ஸ் தளத்தில் பதில் சொல்கிறார். இதற்கு என்ன காரணம்? சட்டமன்றத்திலேயே விடை சொல்வதென்றால், அதனை விஜய் அவராக அப்போதே சொல்ல வேண்டும். ஆனால் வீட்டிற்குப் போய், எக்ஸ் தளத்தில், அவர் பெயரால் யார் வேண்டு மானாலும் விடை சொல்லலாம். அது யாருடைய கருத்து என்பதை நாம் அறிந்து கொள்ள முடியாது! என் பார்வையில் எனக்கு இரண்டு விஜய் தெரிகிறார்கள்! சட்டமன்றத்தில் அமர்ந்திருக்கும் விஜய், ஒரு திரைப்படத்தில் வரும் “அம்பி”யைப் போல இருக்கிறார். மேடையில் பேசும், எக்ஸ் தளத்தில் பதிவிடும் விஜய், அதே படத்தில் வரும் “அந்நியனை”ப் போல இருக்கிறார்! இனிவரும் காலங்களிலும் சட்டமன்றத்தில் யாராவது கேள்வி கேட்டால், வீட்டிற்குப் போய், மாலையோ,  இரவோ எக்ஸ் தளத்தில்தான் விடை சொல்வார் போல் இருக்கிறது! விஜய் அவர்களை யாரோ பின்னிருந்து இயக்குகிறார்கள்  என்பது தெளிவாகத் தெரிகிறது. அந்த “யாரோ” –  யார் என்று தெரிந்தால், எல்லாம் வெளிவந்து விடும்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13.5">திராவிடம் :</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அந்தப் பதிவில், விஜய் இன்னொன்றை யும் குறிப்பிடுகிறார்.  புதிய ஆட்சி மதச்சார்பின்மை யிலும், சமூக நீதியிலும் கொண்டிருக்கும் அழுத்தமான கருத்துகளைப் பார்த்துத் தி.மு.க. அலறுகிறது என்கிறார்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13.5">சுப.வீ:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இதற்குச் சிரிக்காமல் விடை சொல்வது கொஞ்சம் கடினம்தான்! விஜய் கட்சி, மதச்சார்பின்மை யிலும், சமூக நீதியிலும் ஒரு நூற்றாண்டுக்கும் மேலாகப் போராடி வருவதைப் போலவும், தி.மு.க. இப்போதுதான் மூன்றாண்டுகளுக்கு முன்னால் தொடங்கப்பட்ட கட்சி போலவும் விஜய் பதிவிடுகின்றார். மிகுந்த கவனத்தோடும், மரியாதையோடும் சொல்கிறேன் –  இது மிகவும் குழந்தைத்தனமாக இருக்கிறது. நான் childish என்று கூறவில்லை, childlike என்றுதான் கூறுகிறேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13.5">திராவிடம் :</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தம்மை முற்போக்காளர் என்றும், சமூக நீதிப் பார்வை கொண்டவர் என்றும் சொல்லிக் கொள்ளும், பெரியார், அம்பேத்கர் ஆகிய தலைவர்களைக் கொள்கைத் தலைவர்கள் என்று முன் நிறுத்தும் முதலமைச்சர் விஜய், இப்போது தன் ஆஸ்தான ஜோதிடர் ஒருவரை அரசின் சிறப்பு அதிகாரியாக நியமித்து, எதிர்ப்பு வந்தவுடன் மறுநாளே திரும்பப் பெற்றுக் கொண்டிருப்பது குறித்து.....?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13.5">சுப.வீ :</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அவர் நியமித்திருக்கிற பள்ளிக் கல்வித்துறை அமைச்சர், அரசுத் தலைமை வழக்கறிஞர் ஆகியோரைப் பார்க்கும் போதே, அவருடைய முற்போக்கு நமக்குப் புரிகிறது. வழக்கறிஞராக நியமிக்கப்பட்டிருக்கும் அவர்தான், அவருடைய இறக்குமதிக்காருக்கான வரி ஏய்ப்பு வழக்கில் அவருக்காக வாதாடியவர் என்றும் சொல்கிறார்கள். ஜோதிடர் நியமனத்திற்கு சட்டமன்றத்திலேயே கடும் எதிர்ப்பு எழுந்திருக்கிறது.  குறிப்பாக, பிரேமலதா அவர்களும், தமீம் அன்சாரி அவர்களும் மிகச்சரியாகத் தங்கள்  எதிர்ப்பைப் பதிவு செய்திருக்கிறார்கள்.  சேரன் செங்குட்டுவன் காலத்திலேயே சோதிடத்தைப் பொய் என்று மெய்ப்பித்திருக்கிற இளங்கோவடிகளைத் தமீம் அன்சாரி எடுத்துக்காட்டியிருக்கிறார். ஜோதிடத்தில் உங்களுக்கு நம்பிக்கை இருந்தால், தனிப்பட்ட முறையில் அவரை அருகில் வைத்துக் கொள்ளுங்கள், அரசு அதிகாரியாக ஆக்குவது சரியில்லை என்று பிரேமலதா கூறியிருக்கிறார். அதன் பிறகுதான், உடனடியாக அப்பொறுப்பிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டிருக்கிறார். என்ன வேடிக்கை என்றால், மற்றவர்களுக்கு நடக்கப் போவதை எல்லாம் சோதிடம் மூலம் கண்டுபிடித்துச் சொல்லிவிடுவார் என நினைத்து நியமிக்கப்பட்ட அவருக்கு, தனக்கு அடுத்த நாள் என்ன நடக்கும் என்பது தெரியாமல் போய்விட்டது!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13.5">திராவிடம் :</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">எதிர்பாராத வெற்றி, தான் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்னும் எண்ணத்தை அவரிடம் உருவாக்கி இருக்கிறதா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13.5">சுப.வீ :</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அவர் பெற்றுள்ள வெற்றி, எதிர்பாராத, பெரிய வெற்றிதான். ஆனால் அதே நேரத்தில், இன்னொன்றையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்! ஆளுங்கட்சி பெற்றுள்ள வாக்குகள் 
1 கோடியே 72 லட்சம் என்றால்,  தி.மு.க கூட்டணி பெற்றுள்ள வாக்குகள் ஒரு கோடியே 54 லட்சம். 
அ.தி.மு.க. கூட்டணியும் ஒரு கோடிக்கு மேல் வாக்குகளைப் பெற்றுள்ளது. அதாவது, 35% வாக்குகள் ஆளுங்கட்சிக்கு கிடைத்துள்ளன என்றால், 65% வாக்குகள் எதிராக விழுந்து உள்ளன என்பதை மறந்து விடக்கூடாது. எல்லா நாள்களிலும், எல்லா மாநிலங்களிலும் பெரும்பாலும் ஆளுங் கட்சிகளின் நிலை இதுதான். எனவே வெற்றி பெற்று விட்டோம் என்ற மமதையில் அரசாள நினைப்பது நல்லதில்லை!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13.5">திராவிடம் :</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">சென்ற அரசு வைத்து விட்டுப் போயிருக்கிற கடன் சுமைகளைப் பற்றி, உள்ளே போய்ச் சரி பார்த்து, வெள்ளை அறிக்கை வெளியிட்ட பிறகுதான், தான் கூறிய தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியும் என்றும், தனக்குக் கொஞ்சம் அவகாசம் வேண்டும் என்றும் விஜய் கேட்டிருக்கிறாரே?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13.5">சுப.வீ :</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அவகாசம் கேட்பதில் பிழை இல்லை. ஆனால், தமிழ்நாட்டின் நிதிநிலை பற்றித் தனக்குத் தெரியாது என்று சொல்வது, அவருடைய அறியாமையையே வெளிப்படுத்துகின்றது! 2021 இல் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தவுடன், அன்றைய நிதியமைச்சர் ஒரு வெள்ளை அறிக்கையை வெளியிட்டார். அதன் பிறகு, கடந்த பிப்ரவரி மாதமும் வெள்ளையறிக்கை வெளியிடப்பட்டது. எவ்வளவு கடன் இருக்கிறது என்பது வெளிப்படையாகச் சொல்லப்பட்டது! அவற்றையெல்லாம் இன்றைய முதலமைச்சர் அறிந்து வைத்திருக்க வேண்டும். அல்லது, அவருடைய உரைகளையும், எக்ஸ் தளப் பதிவுகளையும் எழுதிக் கொடுப்பவர்களாவது அவருக்குச் சொல்லி இருக்க வேண்டும்! இன்னொன்று, கடன் சுமை என்பது இந்தியாவில் உள்ள எல்லா மாநிலங்களுக்கும் உரியது! அந்தக் கடன், சமூக நலன்களுக்கும், மாநிலத்தின் முன்னேற்றத்திற்கும் பயன்பட்டு இருக்கிறதா என்பதுதான் அடிப்படைக் கேள்வி ! இன்னொரு செய்தி – இந்தியாவில் உள்ள எல்லா மாநிலங்களிலும் கடன் சுமை இருக்கிறது. அப்படிக் கடன் சுமையோடு இருக்கிற மாநிலங்களில் முதல் 10 இடங்களில் தமிழ்நாடு இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது! மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மட்டுமே கடன் பெற வேண்டும் என்று விதியும் இருக்கிறது. அந்த விதிக்கு உட்பட்டுத்தான் தமிழ்நாடு உள்பட எல்லா மாநிலங்களும் கடன் வாங்கி இருக்கின்றன!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அந்த வகையில் பஞ்சாப் மாநிலம் 48% கடன் வாங்கி முதல் இடத்தில் இருக்கிறது. அடுத்து, இமாச்சலப் பிரதேசம் 46% மேற்கு வங்கம் 40%. முதல் 10 இடங்களில் இடம்பெறாத தமிழ்நாடு அரசு,  26.1% கடன்தான் வாங்கி இருக்கிறது. சமூக நலத் திட்டங்களில், தமிழ்நாடு முன்னணியில் இருக்கிறது என்பதையும் இங்கு குறித்துக் கொள்ள வேண்டும்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13.5">திராவிடம் :</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தலைவர்கள் எல்லோரையும் நேரில் சென்று பார்த்த முதலமைச்சர் விஜய், அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளர் எடப்பாடி அவர்களை மட்டும்பார்க்காதது ஏன்?  அது முறையானதா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13.5">சுப.வீ :</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">பதவியேற்றவுடன், மூத்த முன்னோடித் தலைவர்களை நேரில் சென்று பார்த்தது நல்ல பண்பு! அதை நாம் வரவேற்கலாம்!  அதே நேரம், எடப்பாடியாரை மட்டும் ஏன் பார்க்கவில்லை என்ற வினா எழவே செய்கிறது.  நம் கழகத் தலைவரை மட்டும் இல்லாமல், அண்ணன் வைகோ அவர்களை, அன்புமணி அவர்களை நேரில் சென்று பார்த்தி ருக்கிறார்.  234 தொகுதிகளில் போட்டியிட்டு, ஓரிடத்தில் கூட வெற்றி பெறாத –  ஏன், ஓரிடத்தில் கூட கட்டுத்தொகையைத் திரும்பப் பெற முடியாத கட்சியின் தலைவராக இருக்கிற சீமான் அவர்களையும் நேரில் சென்று பார்த்திருக்கிறார். ஆனால் எடப்பாடியை மட்டும் சந்திக்கவில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">நண்பர் திருமாவளவன்,  நீங்கள் எடப்பாடியையும் பார்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார். அது ஒரு நாகரிகம். ஆனால் அதை விஜய் பின்பற்றவில்லை!  அவரைச் சந்திக்கவில்லை என்பது மட்டுமல்லாமல், அவர் தலைமையில் வெற்றி பெற்ற ஒரு குழுவினரை நேரில் சென்று பார்த்திருக்கிறார்.  இது முற்றிலும் முறையற்றது. சட்டமன்றத்திலும், 
அ.தி.மு.க.வின் சார்பில் எடப்பாடியாரை மட்டும் இல்லாமல், வேலுமணியையும் பேச அழைத்திருக் 
கிறார்கள். இதுவும் தவறான ஒரு வழியைக் கொண்டதாகவே இருக்கிறது! இதற்கெல்லாம் என்ன பொருள் என்று சின்னப் பிள்ளைக்குக் கூடத் தெரியும்! எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், சட்டமன்றத்தில் சொல்லி இருப்பது போல, முதலில் சி.வி. சண்முகம் வீட்டிற்கு சோபா போகிறது. பிறகு முதலமைச்சர் போகிறார். இது புஷ்பா பட வழியில் நடக்கிற அரசா, புதிய அரசா என்று கேட்டிருக்கிறார். மேலும் இந்த சேஞ்ச் நடப்பதற்குப் பின்னால், வேறு எதுவும் எக்ஸ்சேஞ்ச் நடந்து இருக்கிறதா என்றும் அதிரடியாகக்  கேட்டிருக்கிறார்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13.5">திராவிடம் :</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">நாங்கள் ரீல்ஸ் வெளியிட்டதாகச் சொல்கிறீர்கள்.  இப்போது உங்கள் ரீல் அறுந்து விட்டது என்று விஜய் சொல்லி இருக்கிறார். இனிமேல் தங்களை யாரும் அசைக்க முடியாது என்பது போலவும் பேசியிருக்கிறார்.  இந்த போக்கு சரியானதா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13.5">சுப.வீ :</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அவரை அசைக்க வேண்டும், ஆட்சியை மாற்ற வேண்டும் என்பதெல்லாம் நம் நோக்கமில்லை   அப்படி இருந்திருக்குமானால், நம்மோடு கூட்டணியில் இருந்தவர்கள் அங்கு போகும்போது, தலைவரே அதனை ஏற்றுக் கொண்டு, புதிய ஆட்சிக்கு நாங்கள் எந்த இடையூறும் செய்ய மாட்டோம் என்று கூறியிருக்க மாட்டார். எந்த ஒன்றையும் முறையாகச் செய்யுங்கள் என்றுதான் சொல்கிறோம்! 
அ.தி.மு.க.வை  உடைத்து ஒரு குழுவைத் தன் பக்கம் இழுத்துக் கொள்ள முயல்வதும், குதிரை பேரம் நடத்துவதும் சரியானதில்லை! எல்லோரும் பதவியை எதிர்பார்த்துத் தான் இருக்கிறோம் என்று சி.வி. சண்முகம் சொல்கிறார். அதாவது, மக்கள் பணிக்காக தாங்கள் வரவில்லை என்பதை அவர் வெளிப்படை யாகச் சொல்கிறார். புதிதாக அரசியலுக்கு வந்திருக்கும் விஜய் வெற்றி தோல்விகளைப் பெரிதாகக் கருதுவது இயல்புதான். அவருடைய அனுபவத்தில் எதையும் இதுவரை அவர் பெரிதாகப் பார்க்கவில்லை. இந்திரா காந்தி, அறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராசர், ஸ்டாலின் என்று எல்லோரும் தேர்தலில் தோல்வியடைந்து இருக்கிறார்கள்.  ஏன், அண்ணல் அம்பேத்கரே தேர்தலில் தோற்று இருக்கிறார்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இவற்றையெல்லாம் விஜய் அறிந்திருக்க வேண்டும். அறியாமையும், இப்போது அவரை ஆட்டிப் படைக்கலாம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">நான் மீண்டும் ஒருமுறை சொல்ல விரும்புகிறேன். வெற்றி சிலருக்கு ஆணவத்தைக் கொண்டு வரலாம். ஆனால் காலம் அதைச் சரி செய்யும்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இவ்வாறு சுப.வீரபாண்டியன் அவர்கள் பேட்டியளித்துள்ளார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>