<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="19/05/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="37,33,957,1493" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Mon May 18 2026 14:36:27 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260519T000000+5.30" edition.name="CBE" edition.area="CBE" position.section="19052026-CBE-03" position.sequence="03" ex-ref="19052026-CBE-03.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#000000" boxBorderWeight="2">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="20">கோவை </lang>
	<lang class="3" style="Headline2"  font="Arial" fontStyle="Bold"  size="20">19.05.2026</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="32">அ.தி.மு.க. அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை வளைப்பதற்கு குதிரை பேரம்!    </lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="ANU_TAU_Bramma" fontStyle="Regular" size="79">இதுதான் விஜய்யின் கிளீன் பாலிடிக்ஸா?</lang>
	</hl4>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup645380_03_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup629873_03_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="3" source="Cartoon1_03_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">“த</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">மி­ழக சட்­ட­மன்ற தேர்­தல் களத்­தில் எத்­தனை பேர் இருந்­தா­லும் இரண்டே இரண்டு பேருக்கு மட்­டும்­தான் போட்டி. ஒன்று 
த.வெ.க., மற்­றொன்று தி.மு.க.” இப்­படி தேர்­தல் பிர­சா­ரக் கூட்­டங்­க­ளில் தேய்ந்த ரெக்­கார்டு போல் தமி­ழக வெற்­றிக்­க­ழக தலை­வர் விஜய் பேசிய வார்த்­தை­களை இன்­று­ வரை யாரும் மறந்­தி­ருக்க வாய்ப்­பில்லை. எப்­ப­டியோ ஒரு வகை­யில் அவ­ரது பேச்சு பலித்து விட்­டது. ஆட்சி அமைப்­ப­தற்­கான பெரும்­பான்மை கிடைக்­கா­விட்­டா­லும் போட்­டி­யிட்ட 233 தொகு­தி­க­ளில் விஜய்­யின் தமி­ழக வெற்­றிக்­க­ழ­கத்­திற்கு 108 இடங்­கள் கிடைத்­தது. தனி மெஜா­ரிட்டி கிடைக்­கா­ 
விட்­டா­லும் தனிப்­­பெ­ரும் கட்­சி­யாக அதிக தொகு­தி­களை த.வெ.க. பெற்­றது. இதை வைத்து எப்­படி ஆட்­சியை அமைப்­பது? என்ற குழப்­பத்­தில் பரி­த­வித்து நின்­றது 
தமி­ழக வெற்­றிக்­க­ழ­கம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இந்­தச்­சூ­ழ­லில் திமு­க­வின்க டும் உழைப்­பால் 5 தொகு­தி­களை கைப்­பற்­றிய காங்­கி­ரஸ் கட்சி, கூட்­டணி தர்­மத்தை சுக்­கு­நூ­றாக உடைத்து தள்­ளி­விட்டு விஜய்க்கு ஆத­ர­வுக்­க­ரம் நீட்­டி­யது. அப்­பு­றம் என்ன? நீங்க தான் முத­ல­மைச்­சர் என்று கட்­சி­யி­னர் உசுப்­பி­விட, தமிழ் நாடு பொறுப்பு கவர்­னர் அர்­லே­கரை சந்­தித்­தார் விஜய். ஆனால் மெஜா ரிட்­டிக்­கான 118 எம்.எல்.ஏ.க்களின் ஆத­ரவு கடி­தத்­து­டன் வந்­தால் தான், ஆட்சி அமைப்­ப­தற்கு அழைக்க முடி­யும் என்று கிடுக்­கிப்­பிடி போட் டார் ஒன்­றிய பா.ஜ.­வின் முக­வ­ராக செயல்­ப­டும் பொறுப்பு கவர்­னர் அர்­லே­கர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">‘மத­வாத சக்­தி­களை எந்­தநி லையி­லும் எதிர்ப்­பேன்’ என்று ஏற்க னவே முழங்­கிய விஜய், ஆட்­சியை தக்­க­வைக்­கும் முயற்சி­ யில் தனது இமேஜ், டேமேஜ் ஆகி­வி­டக்
­­கூ­டாது என்­ப­தில் உறு­தி­யாக இருந்­தார். இத­னால் மத­வாத சக்­தி­கள் மீதான எதிர்ப்­பில் தீவி­ரம் காட்­டும் தி.மு.க. கூட்­ட­ணி­யில் 
போட்­டி­யிட்டு வெற்றி பெற்ற கட்­சி­களை அணுகி தனது அர­சுக்­கான ஆத­ரவை தரும்­படி  அழைப்பு கடி­தம் கொடுத்­தார். காங்­கி­ரசை போல் நன்றி மறந்­து­வி­டா­மல் தி.மு.க. 
கூட்­டணி தலை­வ­ரான முன்­னாள் முதல்­வர் மு.க.ஸ்டாலின் கவ­னத்­திற்கு இதை கொண்டு சென்­ற­னர் அதில் இடம் பெற்ற 
கூட்­டணி கட்­சி­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">“மத­வாத சக்­தி­கள் தலை­தூக்க எந்த நிலை­யி­லும் அனு­ம­திக்க கூடாது. மக்­கள் தந்த தீர்ப்­புக்கு பதி­லாக கவர்­னர் ஆட்சி அமை­வ­தற்கு வழி­வ­குக்க கூடாது” என்று இந்­திய கம்­யூ­னிஸ்ட், மார்க்­சிஸ்ட் கம்­யூ­னிஸ்ட், விடு­தலை சிறுத்­தை­கள், இந்­திய யூனி­யன் முஸ்­லிம் லீக் கட்­சி­கள் தங்­க­ளது ஆத­ரவை தமி­ழக வெற்­றிக் கழ­கத்­திற்கு வழங்­கின. த.வெ.க. ஆட்சி அமை­வ­தற்கு எந்த நிலை­யி­லும் இடை­யூ­றாக இருக்க மாட்­டோம் என்று பெருந்­தன்­மை­யோடு அறி­வித்­தார் கூட்­டணி தலை­வர் மு.க.ஸ்டாலின். இப்­படி பல்­வேறு பர­ப­ரப்­பான நிகழ்­வு­க­ளுக்கு மத்­தி­யில் கடந்த 13ம் தேதி, சட்­டப்­பே­ர­வை­யில் நம்­பிக்கை வாக்­கெ­டுப்பு நடந்­தது. இதற்கு முந்­தை­ய­நாள் நடந்த நிகழ்­வு­க­ளும், அதன் தொடர்ச்­சி­யாக நம்­பிக்கை வாக்­கெ­டுப்­பில் நடந்த டுவிஸ்ட்­டும் தான், தற்­போது தமிழ்­நாட்டு மக்­க­ளின் ஹாட் டாபிக்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தேர்­தல் பிர­சா­ரத்­தில் பெயரை கூட குறிப்­பி­டா­மல் மற்­றும் பலர் என்று அ.தி.­மு.­க.­வை ­யும், முன்­னாள் எதிர்க்­கட்சி தலை­வ­ராக இருந்த எடப்­பாடி பழ­னி­சா­மி­யை­யும் விமர் சித்­தார் விஜய். ஆனால் நம்­பிக்கை வாக்
­­கெ­டுப்­புக்கு ஒரு­நாள் முன்பு, எடப்­பாடி பழ­னி­சா­மிக்கு எதிர்ப்பு தெரி­வித்து, விஜய்யை 
ஆத­ரிக்க வேண்­டும் என்ற கோரிக்­கை­யு­டன் போர்க்­கொடி தூக்­கி­னர் தற்­போது 
எம்.எல்.ஏ.க்களாக உள்ள முன் னாள் அமைச்­சர்­கள் உள்­ளிட்ட 25 பேர். இவர்­களை நேரில் சந்­தித்து சால்வை அணி­வித்து பூங்­கொத்து கொடுத்து மகிழ்ச்­சி­யூட்­டி­னார் விஜய். நம்­பிக்கை வாக்­கெ­டுப்­பில் இவர்­கள் அனை­வ­ரும் விஜய்­யின் த.வெ.க. அர சுக்கு ஆத­ர­வாக வாக்­க­ளித்­த­னர். ஒரு­பு­றம் தன்னை தூய­சக்தி என்­றும், தி.மு.க.வை தீய­சக்தி என் றும் வசை­பா­டி­னார் விஜய். ஆனால் அந்த தி.மு.க.­வின் கடும் உழைப்­பால் வெற்றி பெற்ற கூட்­டணி கட்­சி­க­ளின் ஆத­ர­வோடு முதல்­வ­ருக்­கான இருக்­கை­யில் அமர முடிவு செய் தார் விஜய். மற்­றொரு புறம், ஒரு பொருட்­டா­கவே அவர் நினைக்­காத அ.தி.­மு.­க.­ வில் இருந்து தனக்கு ஆத ரவு தரும் எம்.எல்.ஏ.க்களுக்­கும் தூண் டில் போட்­டுள்­ளார் அவர். தன்னை தூய­சக்தி என்று கூறிக்­கொள்­ளும் விஜய், தன்­னால் இக­ழப்­பட்ட கட் சிக­ளின் எம்.எல்.ஏ.க்களுக்கு வலை­வி­ரித்து பெரும் குதிரை பேரத்­திற்­கும் வழி­வ­குத்­துள்­ளார். இதன் கார­ண­மாக அவர், மாற்­றத்­திற்­கான தூய சக்தி அல்ல. ஜன­நா­ய­கத்தை இழி வுப­டுத்­தும் துர்­நாற்ற சக்தி என்று சாட்­டையை சுழற்­றி­யுள்­ளார் அ.ம.­மு.க. பொதுச்­செ­ய­லா­ளர் டிடிவி.தின­க­ரன். இதே­போல் தி.மு.க. தலை­வர் மு.க.ஸ்டாலி­னும், இது தூய­சக்தி அல்ல. பிற கட்சி சட்­ட­மன்ற உறுப் பினர்­களை தூக்­கும் சக்தி என்று வெளிப்­ப­டை­யாக தெரி­வித்­தி­ருப்­பது, தமி­ழக மக்­கள் 
மன்­றத்­தில் பெரும் கவ­னத்தை ஈர்த்துள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அனு­ப­வம் இல்­லா­மல் ஆட்­சித் திறன் இன்மை என்­பது ஒரு­பு­றம் இருக்­கி­றது. அதே­நே­ரத்­தில் அர­சி­யல் பேரங்­கள் என்­ப­தும், அதற்கு அன்ப ளிப்­பாக உயர்­ப­த­வி­கள் என்­ப­தும் வரும் நாட்­க­ளில் கண்­டிப்­பாக அரங் கேறும். இது மிஸ்­டர் கிளீன் என்ற விஜய்­யின் இமேஜ் முகத்­தி­ரையை அகற்றி பெரும் டேமேஜ் ஆக்­கும் என்­பது மட்­டும் நிதர்­ச­னம். அதை உணர்ந்து விஜய் செயல்­ப­டு­வாரா? என்­ப­தும் இன்­றைய மில்­லி­யன் டாலர் கேள்­வி­க­ளில் ஒன்று என்­கின் றனர் தமி­ழக அர­சி­யல் நோக்­கர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14">தொடக்கமே இப்­படி இருந்தா?</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தமி­ழக சட்­ட­மன்­றத்­தில் நடந்த நம்­பிக்கை வாக்­கெ­டுப்பு மற்­றும் தமி­ழக வெற் றிக்­க­ழக அர­சின் செயல்­பா­டு­கள் குறித்து திமுக தலை­வர் மு.க.ஸ்டாலின் வெளி யிட்­டுள்ள அறிக்கை ஒன்று பொது­மக்­கள் மத்­தி­யில் மிகுந்த கவ­னம் பெற்­றுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">“கிளீன் பாலி­டிக்ஸ் என்று சொல்லி ஆட் சிக்கு வந்­த­வங்க, Dirty politics (அழுக்கு அர­சி­யல்) பண்­ணிக்­கிட்­டி­ருக்­காங்க. பிளவு பட்ட அதி­முக என்­னும் குழம்­பிய குட்­டை­யில, மீன்­பி­டிக்க முயற்சி பண்ணி அவங்க உறுப்­பி­னர்­களை விலைக்கு வாங்கி இருக்­காங்க. உங்­க­ளோட ஸ்டார் டிங்கே இப்­படி இருந்தா பினி­ஷிங் எப்­படி இருக்­கும்? இது தூய­சக்­தியா? இல்ல, அடுத்த கட்சி எம்­எல்­ஏக்­களை தூக்­குற சக்­தியா? என தமி­ழக வெற்றி கழ­கத் திற்கு வாக்­க­ளிச்ச மக்­களே வருந்­தும் நிலை உரு­வா­கி­டிச்சு. மாண்­பு­மிகு முதல் வர் அவர்­களே, உங்­கள் செயல்­பா­டு­களை மக்­கள் தொடர்ந்து பார்க்­கு­றாங்க. அடுத்து பிள­வு­பட்ட அதி­முக உறுப்­பி­னர்­க­ளுக்கு நீங்க என்ன ரிட்­டன் கிப்ட் கொடுக்க போறீங்க என்­ப­தை­யும் மக்­கள் பார்க்­கத் தான் போறாங்க. எங்­களை பொறுத்த வரை திரா­விட முன்­னேற்ற கழ­கம் தன் கொள்­கை­யில் உறு­தியா இருந்து ஆக்­கப் பூர்­வ­மான எதிர்க்­கட்­சி­யாக செயல்­ப­டும்,” என்று குறிப்­பிட்­டுள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14">வெறும் பேச்சு மட்­டும் தானா?</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">“முகத்தை மூடிக்­கொண்டு நான் யாரை யும் சந்­திக்க மாட்­டேன். எனது சந்­திப் புகள் வெளிப்­ப­டை­யா­கவே இருக்­கும். நண்­பர்­களோ, எதி­ரி­களோ 8 கோடி பேரும் என் மக்­கள். விஜய் தவறு செய்ய மாட்­டான். தவறு செய்­ய­வும் விட­மாட்­டான். தவறு செய்­யும் எண்­ணம் இருந்­தால் அதை இப்­போதே அழித்து விடுங்­கள். இது புதிய தொடக்­கம். புதிய சகாப்­தம் தொடங்­கி­யது,”. இப்­ப­டித்­தான் கடந்த 10ம்தேதி, தமிழ்­நாட்­டின் புதியமுதல மைச்­ச­ராக பத­வி­யேற்ற போது முழங் கினார் தமி­ழக வெற்­றிக்­க­ழக தலை­வர் விஜய். ஆனால் ஆட்சி அமைப்­ப­தற்கு சிக்­கல் ஏற்­பட்­ட­போது, பட்­டி­னம்­பாக் கத்­தில் உள்ள விஜய் வீட்­டிற்கு ஒரு­வர் முகத்தை மூடி­ய­படி வந்­தார். அவர் யார் என்று சட்­ட­பே­ர­வை­யில் பிரே­ம­லதா கேள்வி எழுப்பி இருந்­தார். இதே­போல் பல்­வேறு அர­சி­யல் கட்சி தலை­வர்­கள் விமர்­சித்து இருந்­த­னர். ஆனால், இது வரை அந்த நபரை பற்றி விஜய் வாயை திறக்­க­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14">பத­வியை தக்க வைப்­ப­தில் குறி!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">பெரும்­பான்மை இல்­லாத எந்­த­வொரு அர­சாங்­க­மும், நிபந்­த­னை­க­ளின் கீழ் செயல்­பட வேண்­டிய நிர்­பந்­தங்­களை எதிர்­கொள்­ளும். அது­வும் ஜன­நாய கம் காப்­ப­தற்­காக விஜய்க்கு ஆத­ரவு கொடுத்­துள்ள திமுக கூட்­டணி கட்­சி­கள், அவ­ரது தன்­னிச்­சை­யான முடி­வு­க­ளுக்கு ஒரு போதும் அனு­ம­திக்­க­மாட்­டார்­கள். அதே­போல் எதிர்க்­கட்­சி­யான திமு­க­வும் மிகப்­பெ­ரும் வலு­வாக உள்­ளது. இவர் களை எதிர்­கொண்டு முதல்­வர் பத­வி­யில் நீடிப்­பது எளி­தான காரி­யம் அல்ல. இதை உணர்ந்தே விஜய், திமுக கூட்­டணி கட்­சிக ளின் ஆத­ரவு நிலைப்­பாட்டை கடந்து பிள வுபட்ட அதி­முக அணி­யின் ஆத­ர­வுக்கு ஆர்­வம் காட்­டு­கி­றார். அதிர்ஷ்­ட­வ­ச­மாக கிடைத்த முதல்­வர் வாய்ப்பை எந்த நிலை­யி­லும் விட்டு விடக்­கூ­டாது என்­ப­தில் மட்­டும் உறு­தி­யாக இருக்­கி­றார் என்­பது தவெக முன்­னணி நிர்­வா­கி­கள் கூறும் ரக­சிய தக­வல்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14">சர்ச்­சைக்­கு­ரிய முதல் சறுக்­கல்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">விஜய்­யின் ஜோதி­டர் ரதன்­பண்­டிட் 
வெற்­றி­வேல், முதல்­வ­ரின் அர­சி­யல் பிரிவு சிறப்பு அதி­கா­ரி­யாக நிய­ம­னம் செய்து அர­சாணை வெளி­யி­டப்­பட்­டது. இதற்கு தி.மு.க., 
காங்­கி­ரஸ், வி.சி.க., சி.பி.­எம்., சி.பி.ஐ. உள்­ளிட்ட  பல்­வேறு கட்­சி­கள் கண்­ட­னம் தெரி­வித்­தன. கொள்கை தலை­வர்­க­ளாக  பெரி­யா­ரை­யும், அம்­பேத்­க­ரை­யும்  அறி­வித்­
­தி­ருக்­கும் விஜய், தனது  ஆஸ்­தான 
ஜோதி­ட­ருக்கு அரசு உயர்­ப­தவி வழங்­கி­யது அறி­வி­ய­லுக்கே அபத்­த­மா­னது என்று  
கண்­ட­னங்­கள் வலுத்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">மேலும் சட்­ட­மன்­றத்­தில் நடந்த நம்­பிக்கை வாக்­கெ­டுப்பு தீர்­மா­னத்­தில் பேசிய  தே.மு.­தி.க. பொதுச்­செ­ய­லா­ளர் பிரேம லதா, மனி­த­நேய ஜன­நா­யக கட்சி தலை­வர் தமி­முன்­அன்­சாரி ஆகி­யோர், விஜய் முன்பே இதற்கு கடும் கண்­ட­னம் தெரி­வித்­த­னர். இதைய டுத்து ஜோதி­டரை பத­வி­யில் இருந்து நீக்கி அரசு சார்­பில் அறி­விப்பு வெளி யிடப்­பட்­டது. இந்த நிகழ்வு விஜய் அர­சுக்கு சர்ச்­சைக்­கு­ரிய முதல் சறுக்­கல் என்றுமக்­கள் மத்­தி­யில் பர­வ­லாக பேச்சு எழுந்­துள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14">மூன்­றா­வது இடத்­தில் 
தமிழ்த்­தாய் வாழ்த்து!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">விஜய் தலை­மை­யி­லான தமிழ் நாடு அமைச்­ச­ரவை பத­வி­யேற்பு விழா­வில் தமிழ்த்­தாய் வாழ்த்து மூன்­றா­வ­தாக பாடப்­பட்ட விவ­கா­ர­மும் அர­சி­யல் சர்ச்­சை­யாக உரு வெடுத்­தது. இதே­போல் தற்­கா­லிக கவர்­னர் பத­வி­யேற்பு விழா­வி­லும் இந்­த­நி­லையே தொடர்ந்­தது. தமி ழக வெற்­றிக்­க­ழ­கம் என்ற பெய­ரில் கட்சி நடத்­து­ப­வர், தமி­ழுக்கு முன் னுரிமை தர­வேண்­டும் என்­ப­தைக் கூட உண­ராத நிலை­யில் இருக் கக்­கூ­டாது என்று அறி­வு­றுத்­தி­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இந்­த­நி­லை­யில் எதிர்க்­கட்­சி­க­ளின்கருத்­து­க­ளுக்கு விளக்­கம் அளித்து அமைச்­சர் ஆதவ்­அர்­ஜூனா அறிக்கை ஒன்றை வெளி­யிட்­டார். ஆளு­நர் அலு­வ­லக விதி­மு­றைக ளின் படி அந்த நிகழ்ச்­சி­கள் நடந்­தது. இனி இது­போன்ற சம்­ப­வங்­கள் நடக்­காது. தமி­ழக வெற்­றிக்­க­ழ­கத்­தின் தலைமை யில் அமைந்­தி­ருக்­கும் தமிழ்­நாடு அர­சுக்கு இதில் உடன்­பா­டில்லை என்று விளக்­கம் அளித்­தது குறிப்­பி­டத்­தக்­கது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14">சபா­நா­ய­க­ரின் முடிவு என்ன?</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தமி­ழ­கத்­தில் பெரும் பர­ப­ரப்பை ஏற்ப டுத்­தி­யுள்­ளது அ.தி.மு.க.­வின் உட்­கட்சி பிரச்சினை.இதற்கு மத்­தி­யில் விஜய்க்கு ஆத­ர­வாக 
வாக்­க­ளித்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் விவ­கா­ரம் தொடர்ந்து பேசு பொருளாகி வரு­கி­றது. சட்­ட­மன்­றத்­தில் நடைபெற்ற நம்­பிக்கை வாக்­கெ­டுப்­பில் விஜய் தலை­மை­
யி­லான த.வெ.க. அரசு, 144 வாக்­கு­க­ளு­டன் வெற்றி பெற்­றது. இதில் அ.தி.மு.க.­வின் 
அதி­கா­ரப்­பூர்வ நிலைப்பாடு அர­சுக்கு 
எதி­ராக இருந்­தது. ஆனால் அ.தி.மு.க. முன்­னாள் அமைச்­சர் சி.வி.சண்­மு­கம் தலை­மை
­யி­லான 25 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள், பொதுச்­செ­ய­லா­ளர் எடப்­பாடி பழ­னி­சாமி அறி­வித்த கட் சியின் கொறடா உத்­த­ரவை மீறி த.வெ.க. அர­சுக்கு ஆத­ர­வாக வாக்­க­ளித்­த­னர். இந்த நட­வ­டிக்கை அ.தி.மு.க.­வில் பெரும் அதிர்வை ஏற்­ப­டுத்­தி­யது. இதை­ய­டுத்து எடப்­பாடி பழ­னி­சாமி தலை­மை­யி­லான அ.தி.மு.க. தரப்பு, கொறடா உத்­த­ரவை மீறிய 25 எம்.எல்.ஏ.க்கள் மீது நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும் என்று சபா­நா­ய­க­ரி­டம் மனு அளித்­துள்­ளது. இந்த மனுமீது சபா­நா­ய­கர் என்ன நட­வ­டிக்கை எடுப்­பார்என்­ப­தும் மிகுந்த எதிர்­பார்ப்­பாக 
உள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14">இந்த ஆட்சி மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டது!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="14">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">பாஜ தலை­மை­யி­லான என்­.டி.ஏ. கூட்ட ணியில் இருக்­கும் அ.தி.மு.க. இரண்­டாக பிள­வு­பட்டு நிற்­கி­றது. அதில் ஒரு தரப்பு விஜய் தலை­மை­யி­லான அர­சுக்கு ஆத­ரவு தெரி­வித்­துள்­ளது. இது­போன்ற ஆத­ரவு எம்.எல்.ஏ.க்கள் இருக்­கும் ஒரு வீட்­டிற்குப் புதிய சோபா செல்­கி­றது. அதனை தொடர்ந்து புதிய முதல்­வர் விஜய் செல்­கி­றார். அந்த சோபா­வுக்­குள் என்ன இருக்­கி­றது? என்­பது மர்­ம­மாக உள்­ளது. புது­மை­யான ஆட்சி என்று கூறும் விஜய், புஷ்பா படப்­பா­ணி­யில் ஆட்சி நடத்­திக் கொண்­டி­ருக்­கி­றார். இந்த வகை­யில் நம்­பிக்கை வாக்­கெ­டுப்­பிற்கு முன்­பா­கவே இந்த ஆட்சி, மக்­க­ளின் நம்பிக்­கையை இழந்­து­விட்­டது. இவர்­க­ளுக்கு நம்­பிக்கை கொடுத்த எங்­கள் தோழமை கட்­சி­யின் நம்­பிக்­கை­யும் கொஞ்­சம் கொஞ்­ச­மாக சிதைந்து கொண்­டி­ருக்கிறது என்று நம்­பிக்கை வாக்­கெ­டுப்­பில் எதிர்க்­கட்சி தலை­வர் உத­ய­நிதி ஸ்டாலின் பேசி­னார். அவ­ரது பேச்சு தற்­போது சமூ­க­வ­லை­த­ளங்­க­ளில் வைர­லாகி பிர­ள­யத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14">அ.தி.­மு.க. அணிக்கு 
காங்­கி­ரஸ் எதிர்ப்பு!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">விஜய்க்கு அ.தி.மு.க.­வின் ஒரு அணி ஆத­ரவு வழங்­கி­யது குறித்து பேசிய காங்­கி­ரஸ் எம்.பி.கார்த்தி சிதம்­ப­ரம், ‘நம்­பிக்கை வாக்­கெ­டுப்­பில் விஜய் வெற்றி பெற்­று­விட்­டார். அ.தி.மு.க.­வில் நடந்­தது ஒரு தனி விவ­கா­ரம். விஜய்க்கு ஆத­ர­வாக வாக்­க­ளித்த அணியை தகுதி நீக்­கம் செய்ய வேண்­டும் என்று மனுக்­கள் செல்­ல­லாம். அது நீதி­மன்­றத் திற்­கும் போக­லாம். அந்த அணி­யின் எதிர்­கா­லம் என்­ன­வா­கும் என்­ப­தில் இன்­னும் தெளி­வில்லை. எனவே இவர் களை ஆட்­சிக்­குள் சேர்க்க வேண்­டிய அவ­சி­யம் இல்லை. இவர்­கள் இல்லாம­லேயே ஆட்சி நடத்­தும் வாய்ப்பு விஜய்க்கு இருக்­கி­றது,” என்று தெரி­வித் துள்­ளார். இது அர­சி­யல் வட்­டா­ரத்­தில் பல கேள்­வி­களை எழுப்­பி­யுள்­ளது. குறிப்­பாக அ.தி.மு.க. ஆத­ரவு அணியை அமைச்­ச­ர­வை­யில் சேர்ப்­பதை காங்கிரஸ் விரும்ப ­வில்­லையா? என்ற பெரும் கேள்­வி­யும் எழுந்­துள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">நன்றி:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="18"> தினகரன்</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">17.05.2026</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>