<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="19/05/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="503,70,958,1493" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="2"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Tue May 19 2026 03:31:46 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260519T000000+5.30" edition.name="CBE" edition.area="CBE" position.section="19052026-CBE-05" position.sequence="05" ex-ref="19052026-CBE-05.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#000000" boxBorderWeight="2">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="1_TAUN_Vairam" fontStyle="Regular" size="30">தமிழ்நாடு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர்  </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Vairam" fontStyle="Regular" size="26">உதயநிதி ஸ்டாலினின் உரை உணர்த்தும் பாடமும் - படிப்பினையும்!</lang>
	</hl3>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup647124_05_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="2" source="UdhayasirBW_05_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5"> </lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bramma" fontStyle="Regular" size="13.5">பு</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">திதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்நாடு  சட்டப்பேரவையில், திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சார்ந்த சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ‘உதயநிதி ஸ்டாலின்’ அவர்கள் “சனாதன தர்மம்” குறித்து வெளிப்படுத்திய கருத்தினை எதிர்த்தும், விமர்சித்தும் பாரதிய ஜனதாக் கட்சியின் இன்றைய மாநிலத் தலைவர் நைனார் நாகேந்திரன் அவர்களும், முன்னாள் தலைவர் அண்ணாமலை அவர்களும் பா.ஜ.க-வின் செய்தித் தொடர்பாளர் நாராயண திருப்பதி அவர்களும் கண்டன அறிக்கைகளை வெளியிட்டுள் ளார்கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">“சனாதன தர்மத்தின் அடிப்படை என்பது “தர்மம், அர்த்தம், காமம், மோட்சம் எனும் “புருஷார்த்தம்” ஆகும். புருஷன் எனும் ஆண் பற்றிய விஷயம் என்பதால்தான் பெயரே “புருஷார்த்தம்” என சனாதனிகள் குறிப்பிடுகின்றனர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">இதில், பெண்களுக்கென தனியே ஒரு காரியமும் (சமஸ்காரம்), உரிமையும் இல்லை. ஆண் துணை இல்லாமல் பெண்ணிற்கு தனியே மோட்சம் இல்லை என்பதுதான் சனாதனத்தின் முடிவு. மேலும், மக்களை நான்குப் பிரிவுகளாக சனாதன நூல்கள் பாகுபடுத்துகின்றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">அவைமுறையே பிராமணர், சத்ரியர், வைசியர் மற்றும் சூத்திரர் எனும் நான்கு வர்ணங்கள். பெண்களுக்கு வர்ணம் ஏதுமில்லை. அவர்கள் எந்த வர்ணத்தில் ஆண் குடும்பத்தில் பிறக்கிறார்களோ அந்த வகைசார்ந்தப் பெண்களாக இன்றளவும் அறியப்படுகின்றனர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">நான்கு வர்ணங்களைத் தாண்டி, வர்ணத்தைச் சாராதவர்கள் “அவர்ணர்கள்” எனும் பிரிவினையும் சனாதன நூல்கள் குறிப்பிடுகிறது. இவர்களை வர்ணமற்றவர்கள் என்றும், பஞ்சமர்கள், சண்டாளர்கள், அந்த்யஜர்கள் (பாப ஜென்மங்கள்), புலையர்கள், நிதிருஷ்டர்கள், விராத்தியர்கள் எனும் தீண்டத்தகாதவர்கள் என சனாதன நூல்கள் குறிப்பிடுகின்றன என செ.தினகர ஞானகுருசாமி அவர்கள் “சனாதனம் அறிவோம்” என்ற நூலில் ஆதாரங்களுடன் தெளிவுபடுத்துகிறார்”. (“சனாதனம் அறிவோம்” - இரண்டாம் பாகம் ஆசிரியர் செ.தினகர ஞானகுருசாமி பக்கம் 10)</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">சனாதனத்திற்கான விளக்கம் இதுவென அறியப்படுகின்ற நிலையில், ஜாதி வேறு பாடுகளற்ற சமத்துவம், சகோ தரத்துவம் பெண்  உரிமை களுக்காகப் போராடு வதற்காகவே தோற்று விக்கப்பட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் இத்தகைய அடிப்படைக் கொள்கை களை புதிய அரசிற்கு வலி யுறுத்துகின்ற நிலையில் தான், இந்தக் கொள்கை களுக்குத் தடையாகவுள்ள சனாதன தர்மத்தை ஒழித்துக் கட்ட வேண்டும் என்று சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் வாதிட்டதில் எத்தகைய தவறு கண்டுள்ளார்கள் என்பதற்கு ஆதாரப்பூர்வமான உரிய விளக்கம் அவர்களது அறிக்கையில் இல்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">சனாதன தர்மத்தை தமிழ்நாடு பாரதிய ஜனதாக் கட்சியின் தலைவர்கள் வலியுறுத்துவார்க ளேயானால், அவர்களது நோக்கம் என்பது வர்ணாசிரம தர்மத்தை மீண்டும் சனாதனக் கோட்பாட்டின் மூலம் உயிர்ப்பிப்பதற்கான முயற்சியாகத்தான் தமிழ்நாட்டு மக்கள் கருதமுடியும். பாரதிய ஜனதாக் கட்சி இந்திய ஒன்றியத்தில் எத்தகைய சித்தாந்த இலக்கு நோக்கி பயணிக்கிறது என்பதை தமிழ்நாட்டு மக்கள் தெளிவாகவே புரிந்திருக்கிறார்கள். ஒன்றிய பாரதிய ஜனதாக் கட்சி ஆட்சியின் நடவடிக்கைகள் அனைத்தும் இந்திய ஒன்றியப் பகுதியை “இந்துத்துவா” கோட்பாட்டின் அடிப்படையில் “இந்துராஷ்டிரமாக” உருவாக்கிட வேண்டும் என்பதற்கான  திட்டமிட்ட முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கி றார்கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">அத்தகைய இலக்கு நோக்கிய பாரதிய ஜனதாக் கட்சியின் இந்த சித்தாந்த பயணத்தின் படிக்கட்டுகள்தான் “சனாதன தர்மம்” ஆகும். மனித சமூகத்தைப் பிறப்பால் பிரித்து, ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கி   மனிதனை   மனிதன் அடிமையாக்கு கின்ற காட்டுமிராண்டி கோட்பாட்டையும், பெண்களை முற்றிலும் உரிமையற்றவர்களாக ஆக்கியிருக்கின்ற சனாதன தர்மத்தையும் முற்றிலுமாக  எதிர்கின்ற திராவிட முன்னேற்றக் கழகத்தின் சித்தாந்தங்களின் எதிரொலிதான் சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ஆற்றிய உரை என்பதில் எள்ளின் முனையளவுகூட ஐயப்பாட்டிற்கு இடமில்லை. ஆம்!  சனாதனத்திற்கு எதிரான உறைதான்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">திராவிட இயக்கத்தின் மூலமுழக்கத்தை சட்டமன்றத்தின் இன்றைய புதியசூழ்நிலையில், தன்னுடைய முதல் உறையிலேயே எதிரொலித் தமைக்காக, உண்மையான திராவிட இயக்கங்கள் அவரை போற்றிப் பாராட்டவேண்டும். மேலும், எதிர்க்கட்சித் தலைவரின் இந்த நிலைப்பாட்டிலும், சிந்தனையிலும் எள்ளின் முனையளவுகூட எப்பொழுதும் மாற்றம் வராது என்பதை இந்த கட்டுரையின் மூலம் உறுதிப்படுத்துகிறேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">ஆழமான நீர் நிலைகளில் நீந்தத் தெரியாதவர் அல்லது நீந்திக் களைத்துப் போன ஒருவர்    தான் உயிர்ப்பிழைப்பதற்காக, மிதக்கும் வைக்கோல் துரும்பை வாரிப்பிடிப்பதைப்போல, பாரதிய ஜனதாக் கட்சியின் தமிழ்நாட்டு தலைவர்கள் தமிழ்நாட்டில் தங்களுக்கு இடமில்லை என்று தெரிந்த நிலையில், நீந்தத் தெரியாதவன் அல்லது நீந்தி நிலைகுலைந்து போனவன் தன்னைக் காப்பாற்றிக்கொள்வதற்காக வைக்கோல் துரும்பை எட்டிப்பிடிப்பதைப் போல, தமிழ்நாட்டிலுள்ள பாரதிய ஜனதாக் கட்சியின் தலைவர்கள் இந்த சனாதனப் பிரச்சினையைக் கையில் எடுத்திருக்கிறார்கள். காலத்தின் தாக்கத்தால் பகுத்தறிவை வளர்த்துக் கொண்டு சமூக விழிப்புணர்வை நிரம்பப் பெற்றிருக்கின்ற தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் சனாதனக் கோட்பாட்டின் துணைக் கொண்டு தமிழக பாரதிய ஜனதாக் கட்சித் தலைவர்கள் கரை சேர இயலாது என்பதை பகிரங்கமாக எடுத்துக் காட்டிய தேர்தல்தான் நடை பெற்று முடிந்த தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலாகும். இந்த சனாதனக் கோட்பாடு என்பது தமிழ் மக்க ளுடைய தொன்மை யான வாழ்க்கை நெறிக்கு முற்றிலும் முரண்பட்ட தாகும். திருவள்ளுவர் இந்தக் கருத்தை முத்தாய்ப்பாய் தன் குறள் மூலம் வெளிப்படுத்து கிறார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்  சிறப்பொவ்வா</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">செய்தொழில் வேற்றுமை யான்”</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">இந்திய அரசியல் சட்டத்தின் நோக்கங்களுக்கு இந்த சனாதன தர்மம் முற்றிலும் முரண்பட்டதுதான். எனவே, பாரதிய ஜனதாக் கட்சியின் தமிழ்நாட்டுத் தலைவர்கள் சனாதன தர்மம் போன்ற முனைமுறிந்த ஆயுதங்களோடு, சித்தாந்தப் போர்க்களத்தில் திராவிட இயக்கத்தை சந்தித்தால், தொடர் தோல்விகள் என்பது பாரதிய ஜனதாக் கட்சிக்கு நிரந்தரமாகிவிடும். தமிழ்நாடு சனாதன தர்மத்தை உள்ளடக்கமாக கொண்ட பாரதிய ஜனதாக் கட்சியை என்றைக்கும் ஏற்றுக் கொள்ளாது. அதுமட்டுமல்ல, வாழ்நாள் முழுமையும் தமிழ்நாட்டில் பாரதிய ஜனதாக் கட்சித் தலைவர்கள் “இலவு காத்த கிளியாகத்தான்” என்றைக்கும் ஏமாற்றத்தோடு ஏக்கப்பெரு மூச்சோடுதான் வாழ முடியுமே தவிர சனாதன தர்மத்தை நடைமுறைப் 
படுத்தவியலாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">சனாதன தர்மம் என்பது இன்றைய வளர்ந்துவிட்ட சமூகச்சூழலில், ஆம்!  அதுமட்டுமல்ல, அறிவியல் உச்சம் தொட்ட நிலையில் செயற்கை நுண்ணறிவின் மூலம் வியத்தகு மாற்றங்கள் நிதர்சனமாகி கொண்டிருக்கும் இன்றைய அறிவியல் உலகத்தில், சனாதனத்தைப் பற்றிக் கூப்பாடு போட்டுக் கொண்டிருப்பது காலத்தை வீணடிக்கும் செயலாகவே மக்கள் பாரதிய ஜனதாக் கட்சியின் செயல்பாடுகளை மதிப்பீடு செய்வார்கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">காலமாற்றங்களை உள்வாங்கிக் கொண்டு பாரதிய ஜனதாக் கட்சியினர் அறிவியல் அடிப்படையிலான வழிகாட்டுதலைப் பின்பற்றி, சமத்துவம், சகோதரத்துவம் அறிவியல் அடிப்படையி லான முன்னேற்றம் பற்றி சிந்திக்க வேண்டும் என்பதே திராவிட முன்னேற்றக் கழகத்தின் தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் உரை உணர்த்தும் பாடமும் படிப்பினையும் ஆகும்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>