<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="19/05/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="502,69,958,1495" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="2"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Tue May 19 2026 03:37:36 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260519T000000+5.30" edition.name="CHN" edition.area="CHN" position.section="19052026-CHN-05" position.sequence="05" ex-ref="19052026-CHN-05.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#000000" boxBorderWeight="2">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
<lang class="3" style="Headline1"  font="Arial"  size="15">                                                  </lang>
</hl1>
       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfFrame648224_05_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup647989_05_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup649691_05_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="4" source="cm_05_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.5">“த</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">மி­ழர்­களே!.. தமி­ழர்­களே.. என்­னைக் கட­லில் தூக்கி எறிந்­தா­லும், நான் கட்­டு­ம­ர­மா­கத்­தான் மிதப்­பேன்; அந்­தக் கட்டு மரத்­தில் நீங்­கள் ஏறிச் சவாரி செய்­ய­லாம்; அது ஒரு­போ­தும் கவிழ்ந்து விடாது. என்னை நீங்­கள் கரை சேர்க்­கப் பயன்­ப­டுத்­திக் கொள்­ள­லாம்! தமி­ழர்­களே!... தமி­ழர்­களே... என்னை நீங்­கள் நெருப்­பில் தூக்­கிப் போட்­டா­லும், அதிலே நான்விற­கா­கத்­தான் விழு­வேன்; அடுப்­பெ­ரித்து நீங்­கள் சமைத்­துச் சாப்­பி­ட­லாம்!  “தமி­ழர்­களே!..... தமி­ழர்­களே!.. நீங்­கள் என்­னைப் பாறை­யில் மோதி­னா­லும், சிதறு தேங்­கா­யா­கத் தான் உடை­வேன்;  நீங்­கள் என்­னைப் பொறுக்கி எடுத்து தின்று மகி­ழ­லாம்!” இப்­ப­டிக் கழ­கத் தலை­வ­ராக இருந்த கலை­ஞர் அவர்­கள், 1980 ஆம் ஆண்டு சட்­ட­மன்­றத் தேர்­த­லில் கழ­கம் தோற்­றுப்­போன நேரத்­தில், மேற்­கண்­ட­வாறு சென்னை மெரினா கடற்­க­ரைக் கூட்­டத்­தி­லும், திருச்சி மாநாட்­டி­லும் உணர்ச்­சி­மிகு எழுச்சி உரை ஆற்றி தொண்­டர்­க­ளுக்கு ஆறு­தல் படுத்­தி­னார்/ 1980 ஆம் ஆண்டு கழ­கம் வெற்றி வாய்ப்பு இழந்­தி­ருந்த நேரத்­தில், சோக­ம­ய­மாக உல­விய தொண்­டர்­கள் மத்­தி­யில் கலை­ஞ­ரின் வரி­கள் மிக முக்­கிய அடை­யா­ள­மாக மாற்­றி­யது. தேர்­தல் தோல்­வி­யால் வாடிப் போயி­ருந்த தொண்­டர்­கள் அதைக்­கேட்டு மூவேந்­த­ரின் படை­க­ளைப் போல எழுச்­சி­யுற்­ற­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">கழ­கம் தோல்வி கண்டு இருந்­தா­லும், மக்­க­ளுக்­குச் செய்ய வேண்­டிய பணி­க­ளைச் செய்­யத் தவ­றாது. மக்­களை விட்­டுக் கழ­கம் என்­றும் அக­லாது” என்­பதை இலக்­கி­ய­மாக அக் கூட்­டத்­தில் மேலும் சுட்­டிக் காட்­டிப் பேசி­னார். தேர்­தல் தோல்­வி­யால் தொண்­டர்­கள் மனம் தளர்ந்து விடக்­கூ­டாது என்­ப­தற்­கா­கத்  தமக்­கும், மக்­க­ளுக்­கு­மான பிணைப்பை விளக்க கலை­ஞர் அவர்­கள் கையாண்ட மற்­றொரு நிகழ்ச்­சி­யா­னது உவ­மைச் சான்­றா­கப் பேசு­கி­றது. “தேர்­த­லில் மக்­கள் என்­னைத் தோற்­க­டித்து போ” என்று சொன்­னா­லும், தான் அர­சி­யல் விட மாட்­டேன் அல்­லது தமிழ் மக்­களை விட்டு ஓடி விட மாட்­டேன் என்று நினை­வுப்­ப­டுத்­தி­ னார். “தான் ஒன்­றும் கல்லை எறிந்­தால் ஓடிப் போகும் தெரு நாய் அல்ல; எஜ­மா­னன் கோபித்து அடித்­தா­லும், வீட்டை விட்டு போகா­மல் மீண்­டும் அவ­ரி­டமே வந்து வாலை­யாட்­டிப் பாசம் காட்­டும் வீட்டு வளர்ப்பு நாய் போன்­ற­வன் நான்! போ என்று சொல்­வ­தற்கு நான் ஒன்­றும் தெரு­வோ­ரத்து நாய் அல்ல; வீட்­டின் வளர்ப்பு நாய்!” என்று முழக்­க­மிட்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">அர­சி­யல் வர­லாற்­றில் வெற்றி வாய்ப்பை இழந்த நேரத்­தில்; இந்­தத் தமிழ் மக்­க­ளுக்கு ஆற்­றிய உரை மிக முக்­கி­ய­மா­கக் கரு­தப்­ப­டு­கி­றது. தொடர் தோல்­வி­க­ளால் துவண்டு போயி­ருந்த தி.மு.க. தொண்­டர்­களை மீண்­டும் எழுச்சி பெறச் செய்­ய­வும் மக்­கள் மத்­தி­யில் திமுக மீதான ஈடு­பாட்­டை­யும், கொள்­கைப் பிணைப்­பை­யும் மீண்­டும் உரு­வாக்­க­வும் இந்த உணர்ச்சி மிகு அடுக்கு மொழி உவ­மை­கள் ஆழ­மாக மக்­கள் நெஞ்­சில் தைத்­த­து­டன், கலை­ஞர் மீதும் கழ­கம் மீதும் தொடர் பற்­றுக் கொண்டு செய­லாற்ற பெரும் உத­வி­க­ர­மாக அமைந்­தன!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">கலை­ஞ­ரின் அதே நிலைப்­பாடு கொள்­கை­யோடு இன்­றைய அர­சி­யல் சூழ்­நி­லை­யில் கழ­கத் தலை­வர் தள­பதி அவர்­கள் 
கழ­கத்­தின் மீது அக்­கறை செலுத்தி நட­வ­டிக்கை எடுக்­கும் முயற்­சி­யில் முழு­மூச்­சோடு ஈடு­பட்டு வரு­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">கட்­சியா? ஆட்­சியா? என்­றால் கட்­சி­தான் முக்­கி­யம் என்று கலை­ஞர் பல்­வேறு தரு­ணங்­க­ளில் சொற்­பொ­ழி­வு­கள், எழுத்து ஓவி­யங்­கள், செயல்­பா­டு­கள் போன்­ற­வற்­றால் நிரூ­பித்­துக் காட்­டி­ய­வர். ரத்­த­மும் எலும்­பும் சதை­யும் நாள­மும் கொண்டு இருப்­ப­வர்­கள் கழ­கத் தொண்­டர்கள், அவ­னால் தான் இந்த இயக்­கம் இயங்­கு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">2011 ஆம் ஆண்டு தன் சொந்த ஊரான திரு­வா­ரூர் தொகு­தி­யில் பனிரெண்­டா­வது முறை­யா­கப் போட்­டி­யிட்­டுத் தொடர்ந்து சட்­ட­மன்ற உறுப்­பி­ன­ரா­கக் கலை­ஞர் தேர்வு செய்­யப்­பட்­டார். 50,000 வாக்­கு­கள் மேல் பெற்று வெற்றி பெற்­றி­ருந்­தார்.  வாக்­கா­ளர்­க­ளுக்கு நன்றி அறி­விக்­கும் கூட்­ட­மா­கத் திரு­வா­ரூர் வ.சோ. ஆண்­கள் மேல்­நி­லைப் பள்ளி விளை­யாட்டு மைதா­னத்­தில் ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்த கூட்­டத்­தில் (05-.06.-2011) கலந்து கொண்­டார் கலை­ஞர்.  “என் தம்­பி­மார்­களை எல்­லாம் தோற்­க­டித்து விட்­டார்­கள் என்­பதை நினைக்­கும் போது... திரு­வா­ரூ­ரில் நான் பெற்ற வெற்றி எனக்கு வெற்­றி­யா­கத் தெரி­ய­வில்லை... இருந்­தா­லும், அந்­தத் தோல்­வி­ களை ஒரு படிக்­கட்­டாக வைத்­துக் கொண்­டால் தான் வெற்றி கிடைத்­திட முடி­யும் என்ற பொன்­மொ­ழிக்கு ஏற்ப, என்­றைக்­கும் தோல்­வி­க­ளைப் பற்­றிக் கவ­லைப்­ப­டா­மல், துவண்டு விடா­மல் பணி­யாற்­றிக் கொண்­டி­ருக்­கி­றேன்!....” என்று தொண்­டர்­­ களுக்­குக் கழ­கம் பற்றி வர­லாறு கூறி உணர்ச்சி உரை­யாற்­றி­னார். இன்று அதே நடை­முறை­யில் கழ­கத் தலை­வர் தள­பதி மு.க.ஸ்டாலின் தேர்­தல் தோல்­வி­யி­லும் துவண்டு விடா­மல் தொண்­டர், தோழர்­கள் இடத்­தில் ஊக்­கம் காட்டி வரு­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">“என்ன ஆனா­லும் சரி; சூரி­யன் ஒரு­போ­தும் மறை­யாது! திரும்ப உதித்தே தீரும்! சூரி­யன் இல்­லா­மல் எது­வும் நடக்­காது! இது இயற்கை நியதி மட்­டு­மல்ல; தமிழ்­நாடு அர­சி­யல் நிய­தி­யும் இது­தான். நமக்­குப் பெரும்­பான்மை கிடைக்­க­ வில்­லையே தவிர, கணி­ச­மான எண்­ணிக்­கை­யில் வாக்­கு­கள் கிடைத்­தி­ருக் ­கின்­றன. இப்­படி ஆட்­சி­யில் இருந்து தோற்ற போதெல்­லாம் நாம், மிகக் குறைந்த இடங்­க­ளில் வென்­றி­ருக்­கி­றோம்; இப்­பொ­ழு­தும் 59 இடங்­க­ளில் வந்­தி­ருக்­கின்­றோம். பொது வாழ்க்­கைக்கு 
வந்­தால் வெற்றி, தோல்வி இயல்பு. ஏற்ற இறக்­கங்­கள் இருக்­கும். மேடு பள்­ளங்­கள் இருக்­கும். அது­தான் அர­சி­யல்! இந்­தப் பக்குவம் வேறு யாரை­யும் விட நமக்­குத் தான் அதி­கம். இது­தான் பேர­றி­ஞர்  பெருந்­தகை அண்ணா அவர்­க­ளும், தலை­வர் கலை­ஞர் அவர்­க­ளும் நமக்­குக் கற்­றுத் தந்­தி­ருக்­கிற பக்­கு­வம்!” என்று அண்ணா அறி­வா­ல­யத்­தில் (14-.05.-2026) அன்று நடை­பெற்ற தி.மு.க. மாவட்­டச் செய­லா­ளர்­கள் கூட்­டத்­தில் கழ­கத் தலை­வர் தள­பதி ஸ்டாலின் அவர்­கள் ஆறு­தல் படுத்தி உரை­யாற்றி இருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.5">“என் சக்­திக்கு மீறி­யும் உழைத்­தேன்; உங்­க­ளை­யும் ஓய்­வில்­லா­மல் உழைக்க வைத்­தேன்; இது­வரை எந்த அர­சும் செய்­யாத சாத­னை­களை நாம் கொடுத்­தோம்; மக்­க­ளுக்கு நேர­டிப் பயன் கிடைத்­தது என்­பது அவர்­க­ளுக்­கும் தெரி­யும். இருந்­தா­லும், நாம் ஆட்சி அமைக்க இய­ல­வில்லை.... இதற்­காக நான் யாரை­யும் சுட்­டிக் 
­காட்­டிக் குறை சொல்ல விரும்­ப­வில்லை. தோல்­விக்­கான கார­ணங்­க­ளைக் கழக நிர்­வா­கி­கள் தொடங்­கிப் பொது­மக்­கள் வரை எல்லா வித­மா­க­வும் பேசு­கி­றார்­கள். இதற்கு யார் தான் பொறுப்பு?  யாரும், யாரை­யும் குறை சொல்லாதீர்­கள்!..... கழ­கத்­தின் தலை­வர் என்ற முறை­யில் நானே இந்­தத் தோல்­விக்­குப் பொறுப்­பேற்­றுக் கொள்­கி­றேன்; இது­தான் நிதர்­ச­னம். வெற்றி கிடைத்­தால் அது ஒரு பெருமை அடை­யும் தான். தோல்­விக்­கான பொறுப்­பை­யும் ஏத்­துக்­கி­ற­திலே எந்­தத் தப்­பும் இல்லை. அது­தான் நியா­யம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.5">நீங்­க­ளும் இந்­தத் தோல்­விக்­காக அடுத்­த­வர் மேல் பழி போடா­தீர்­கள்; தோல்­வி­யின் போது ஆதங்­கம் கொட்­டு­வது இயல்­பா­னது. ஆனால், அது பழி­யாக இருக்­கக் கூடாது. ஆய்வு செய்­வ­தா­னால், அடுத்­த­வர் மீதான அவ­தூ­றாக இருக்­கக் கூடாது. தமிழ்­நாட்டு மக்­களை இனி இங்கு இருந்து எப்­படி மீட்­டெ­டுக்கப் போகி­றோம்? அதைப் பற்றி எண்­ணுங்­கள்! எங்கே கோளாறு நடந்­தது? எங்கு மெத்­த­னம் ஏற்­ப­டுத்­தி­யது? என்­பது தான் முக்­கி­யம். நாமே 
ஒவ்­வொ­ரு­வ­ரும் நம்மை நாமே சுய பரி­சோ­தனை செய்து கொள்ள வேண்­டும்!” என்று அக்­கூட்­டத்­தில் தலை­வர் மு.க.ஸ்டாலின் 
பேசி­யது இயே­சு­பி­ரான் மலை பிர­சங்­கத்­தில் தன் சீடர்­க­ளுக்கு உரை­யாற்­றிய செய்­தி­கள் போல் நினை­வுப் படுத்­தி­யுள்­ளது.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.5">இயக்கத் தோழர்­கள் ஒவ்­வொ­ரு­வ­ரும் ஒவ்­வொ­ரு­வர் மீதும் ஏதே­னும் ஒரு கார­ணத்­திற்­கா­கக் குற்­றச்­சாட்­டு­ கள் சொல்­ல­லாம். அந்­தக் குற்­றச்­சாட்­டு­க­ளைக் கூறிப் பழி போட­லாம். அப்­ப­டிப்­பட்ட பழி­கள், குறை­கள் கூற வேண்­டாம். எல்­லா­வற்­றை­யும் நானே ஏற்­றுக்­கொள்­கி­றேன்.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">வெற்­றியை எப்­படி நான் ஏற்­றுக் கொள்­கி­றேனோ, அதைப் போல தோல்­விக்­கும்­நானே பொறுப்பு ஏற்­றுக் கொள்­கி­றேன்....” என்று தள­பதி அவர்­கள் பெருந்­தன்­மை­யோடு, தன் தலை­மைப் பண்­பைக் காட்டி உடன்­பி­றப்­பு­க­ளான மாவட்­டச் செய­லா­ளர்­கள் மத்­தி­யில் பேசி­யி­ருப்­பது மிக­வும் நெஞ்சை நெகிழ வைக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">“மக்­கள் தீர்ப்பே மகே­சன் தீர்ப்பு” என்­றார் அண்ணா. துப்­பாக்கி வேட்­டையை விட ஓட்­டுச் சீட்­டுத் தான் வலி­மை­யா­னது” என்று முழங்­கிய ஆபி­ர­காம் லிங்­க­னது அதே பொருள் புரிந்த கருத்­தைத் தமி­ழ­கத்­தில் பரப்பி வந்­த­வர் அண்ணா.  “ஓட்டா (Vote)? வேட்டா (bomb)?என்­றால், ஓட்டு முறை­யில் நம்­பிக்கை உள்ள இயக்­கம் தி.மு.க” என்­றார். அதைத் திருப்பி பேலட்டா? (ballot)-?, புல்­லட்-டா (bullet)? என்­றால், பேலட்­டின் மீது நம்­பிக்கை கொண்ட இயக்­கம் “என்று கூறு­வார் அண்ணா! அவரே அடிக்­கடி சட்­ட­மன்ற, நாடா­ளு­மன்ற நட­வடிக்­கை­க­ளி­லும், ஏடு­க­ளில் எழு­தும் போதும், மேடை­க­ளில் சொல்­லா­டல்­பொ­ழி­யும் போதும், மக்­க­ளாட்­சித் தத்­து­வத்தை அமெ­ரிக்­கக் குடி­ய­ர­சுத் தலை­வர் ஆப்­ர­ஹாம் லிங்­கன் வரி­களை நினை­வுப்­ப­டுத்­து­வார். “மக்­க­ளுக்­காக, மக்­க­ளால் ஆன, மக்­க­ளின் ஆட்சி (Government of the people, for the people, by the people) என்­பன போன்ற இலட்­சிய வரி­கள் கோடிட்­டுக் கட்­டத் தவற மாட்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">தி.மு.க. ஜன­நா­யக நம்­பிக்­கை­யில் ஆழ­மான கொள்­கை­யு­டைய இயக்­கம் என்­ப­தைச் சுட்­டிக் காட்­டு­வார். அவ­ரின் தம்­பி­யா­கிய கலை­ஞர் ஜன­நா­ய­கம் எனும் மக்­க­ளாட்­சிப் பாதை­யைத் தவற விடா­மல் சர்­வா­தி­கா­ரத்தை வீழ்த்­து­வ­தற்­குத் தமிழ்­நாடு மட்­டு­மல்­லா­மல்; இந்­தி­யா­விற்கே வழி­காட்­டி­யாக நின்­றார். அவர் காவி­ரிக் கரைக்­கு மட்­டு­மல்­லா­மல், கங்­கைக் கரைக்­கும் ஒளி விளக்­கா­கத் திகழ்ந்­தார். அவர்­கள் ஏற்றி வைத்த ஜன­நா­யக விளக்­கைக் கையில் ஏந்தி தள­பதி இன்று கழ­கத்தை மக்­க­ளுக்­கான இயக்­க­மாக மாற்­றிக் கொண்­டி­ருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">தேர்­தல் அர­சி­யல் மற்­றும் ஜன­நா­ய­கத்­தின் மீது தனக்­குள்ள அசைக்க முடி­யாத நம்­பிக்­கையை வெளிப்­ப­டுத்த அண்ணா கையாண்ட மிகச் சிறந்த அர­சி­யல் முழக்­கம் இது. மக்­க­ளாட்­சித் தத்­து­வம் ஆயுதப் புரட்சி அல்­லது வன்­முறை (Bullet) மூலம் மாற்­றங்­களை ஏற்­ப­டுத்­து­வதை விட; தேர்­தல் மற்­றும் வாக்­குச்­சீட்டு  (Ballot) மூலம் அமை­தி­யான முறை­யில் ஆட்­சியை மாற்ற முடி­யும் என்ற ஜன­நா­யகக் கொள்­கையை அண்ணா நம்­பி­னார். அதைத் தொடர்ந்து கலை­ஞ­ரும் அந்த அற­வ­ழிப்­பா­தை­யில் இயக்­கத்தை நடத்தி வந்­தார். உல­கில் புகழ்­பெற்ற (ballot or Bullet) வாக்­குச் சீட்டா? துப்­பாக்­கிக் ­குண்டா? என்ற அர­சி­யல் தத்­து­வக் கருத்­தைத் தமிழ் மொழி­யின் நயத்­திற்கு ஏற்ப “ஓட்டா? வேட்டா?; பேலட்டா? அல்­லது புல்­லட்டா? என்று அடுக்­கு­மொ­ழி­யில் அண்ணா மொழி பெயர்த்து மேடை­க­ளில் முழங்கி வந்­தார். குறிப்­பா­க  தி.மு.க. தேர்­த­லில் போட்­டி­யிட முடிவு செய்த காலக் கட்­டத்­தில், தங்­க­ளின் அர­சி­யல் பாதை வன்­மு­றை­யற்ற அற­வ­ழி­யி­லான தேர்­தல் நெறிப்­பாதை என்­ப­தைக் தொண்­டர்­க­ளுக்­கும், தோழர்­க­ளுக்­கும், மக்­க­ளுக்­கும் தெளி­வு­ப­டுத்த அண்ணா இந்த வரி­க­ளைப் பயன்­ப­டுத்­தி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">அர­சி­யல் எதி­ரி­க­ளால்  எத்­த­னையோ ஈட்­டி­கள், கட்­டா­ரி­கள், கொடு­வாள்­கள், கோட­ரி­கள் தாக்­கு­தல்­க­ளைத் தாங்கி வளர்ந்த இயக்­கம் தான் நமது தி.மு.கழ­கம். எந்த ஒரு தாயும் தனது குழந்தை சிறு­நீர் பெய்து, தான் அணிந்­தி­ருந்த உடை­களை நனைத்து விட்­டது   என்­ப­தற்­காக, குழந்­தை­யைத் தூக்கி எறிந்து வெறுத்து விட மாட்­டாள். அதைப்­போல, “இந்­தத் தேர்­த­லில் மக்­கள் வாக்­க­ளிக்­கத் தவ­றி­விட்­டார்­கள் என்­ப­தற்­காக; அவர்­க­ளைப் புறக்­க­ணித்து விட முடி­யாது. நமது விளக்­க­மும், பய­ண­மும் மேலும் தொடர வேண்­டும்” என்­பார் அண்ணா. “மழை­யி­லும், வெயி­லிலும் காய்ந்து வேளாண்மை செய்­யும் உழ­வன், பரு­வத்­தில் மழை பெய்­ய­வில்லை என்­றால், விளைச்­சல்  பொய்த்து விட்­டால், அல்­லது பெரு­மழை பெய்து வெள்­ளச் சேதம்  ஏற்­பட்டு விட்­டால், அத்­து­டன் தான் விவ­சா­யம் செய்­வதை நிறுத்தி விட மாட்­டான். அடுத்த கட்­டத்தை நோக்கி நகர்­வான். அதைப்­போ­லத் தான் இந்­தக் கழ­கம் அடுத்­தக் கட்ட நட­வ­டிக்­கை­க­ளில் இறங்கி உள்­ளது.” என்­றார் கலை­ஞர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">இன்று அண்ணா, கலை­ஞர் ஆகி­யோ­ரின் அதே நடை­மு­றை­யில் கழ­கத் தலை­வர் தள­பதி, நடந்து முடிந்த தேர்­தல் தோல்­வி­க­ளின் நோய் கண்­ட­றிந்து, மருந்து இடு­வ­தற்­கான ஆக்­கப் பூர்­வ­மான, அறி­வுப்­பூர்­வ­மான நடை­மு­றையை தொண்­டர்­கள், தோழர்­க­ளி­டத்­தில் நேரில் கண்டு கையா­ளும் விதி­களை வகுத்­துள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">“சரி­யான நேரத்­தில், சரி­யான முடிவு எடுத்து, சரி­யாய்ச் செயல்­ப­டுத்­தும்மனி­த­னுக்­குப் பெருமை தவிர வேறு இல்லை” என்ற அறி­ஞர் “கானிங்” கின் மணி­மொ­ழி­யைப் போல, தலை­வர் தள­பதி அவர்­கள் 36 பேர் கொண்ட குழுவை ஆய்வு செய்ய மாநி­லம் முழு­வ­தும் அனுப்பி அறிக்கை கேட்டு  உள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">சென்­னை­யில் கூடிய தி.மு.கழ­கத்­தின் புதிய பொதுக் குழு (04-.07.-1955) தேர்ந்­தெ­டுத்த புதிய பொதுச் செய­லா­ள­ரான  நாவ­லர் நெடுஞ்­செ­ழி­யன் அவர்­களை திருச்சி மாநாட்­டிற்கு  அழைத்­தார் அண்ணா. திருச்சி மாநாட்­டில் (1956 ஆம் ஆண்டு மே ­திங்­கள் 17, 18,19, 20) கலந்து கொண்ட போது, “தம்பீ வா!....தலைமை தாங்­கவா!.... உன் ஆணைக்கு நாங்­கள் எல்­லோ­ரும் அடங்கி நடப்­போம்!.. தலைமை ஏற்று நடத்த வா!...” என்று அண்ணா பேசி­விட்டு கீழே இறங்கி அமர்ந்து, கழ­கத் தோழர்­க­ளின்,  அனை­வ­ரு­டைய பேச்­சை­யும்  பொது­மக்­க­ளோடு  கேட்­டுக் கொண்­டி­ருந்­த­தைப் போல, இப்­பொ­ழுது தலை­வர் தள­பதி அவர்­கள் மக்­கள் தொண்­டாற்ற இயக்­கத் தோழர்­கள் தரும் எதிர்­கால வேண்­டு­கோள்  கருத்­துக்­க­ளைக் கேட்­ப­தற்­காக “உடன்­பி­றப்பே வா!... நீங்­கள் சொல்­லுங்­கள்!..நான் கேட்­கி­றேன்!... அடுத்த 100 ஆண்­டு­க­ளுக்கு இந்த இயக்­கம் உயிர்ப்­போடு இயங்­கும். உங்­க­ளுக்­காக இயங்­கும். உடன்­பி­றப்பே!.. நீங்­கள் சொல்­லுங்­கள்!... நான் கேட்­கி­றேன்!.” என்று தள­பதி மு.க. ஸ்டாலின் காணொ­ளி­யில் பேசி­யி­ருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">அது மட்­டும் அல்ல; ஆங்­காங்கு நடந்த, நடக்­கக்­கூ­டிய  குறை­களை; நடந்து முடிந்த சட்­ட­மன்­றத் தேர்­தல்  தவ­று­களை – குறை­களை - கேட்­ப­தற்­காக 36 பேர் கொண்ட குழுவை அனுப்பி வைத்து அறிக்கை கேட்டு இருக்­கி­றார். ஆகவே, உடன்­பி­றப்பே! உயிர் அணுவே! அண்­ணா­வின் தம்­பி­மார்­களே, கலை­ஞ­ரின் உடன்­பி­றப்பே! நாம் அனை­வ­ரும் ஒன்று கூடு­வோம்! மக்­கள் பணியை, மலர்­வண்­டுப்பணி­யாக நாடு­வோம்! தள­பதி தலை­மை­யில் கழ­கத்­தைக் காப்­போம்!</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>