<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="19/05/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="37,68,376,1494" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="1"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Tue May 19 2026 03:48:19 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260519T000000+5.30" edition.name="TRY" edition.area="TRY" position.section="19052026-TRY-02" position.sequence="02" ex-ref="19052026-TRY-02.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#cb0000" boxBorderWeight="1.99193248209899">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="37">குதிரை பேரம் – விளக்கம் தேவை!</lang>
	</hl2>
<hl1 id="Headline1" class="1" style="Headline1">
<lang class="3" style="Headline1"  font="Arial"  size="15">                                                  </lang>
</hl1>
       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup646559_02_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="16">பெ</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13.5">ரும்­பான்மை கிடைக்­காத தனது கட்­சியை ஆட்­சி­யில் அமர்த்த – தனது செல்­வாக்கை அதி­க­ரித்­துக் கொள்ள குதிரை பேரம் நடத்­தி­னார் முத­ல­மைச்­சர் விஜய் என்­பது குற்­றச்­சாட்டு. இதற்கு முறை­யான விளக்­கத்தை அவர் வாயைத் திறந்து சொல்ல வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13.5">விஜய் கட்­சிக்கு ஆட்சி அமைக்­கும் பெரும்­பான்மை கிடைக்­க­வில்லை. உட­ன­டி­யாக காங்­கி­ரஸ் கட்­சி­யைச் சேர்ந்­த­வர்­கள், அவ­ருக்கு ஓடிப் போய் ஆத­ர­வைத் தரு­கி­றார்­கள். தி.மு.க. கூட்­ட­ணி­யில் போட்­டி­யிட்ட காங்­கி­ரஸ் கட்­சிக்கு இரண்டு நாளில் மனம் மாறத் தரப்­பட்ட உறு­தி­மொழி என்ன?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13.5">டி.டி.வி. தின­க­ரன் தனது கட்­சி­யின் ஒரு எம்.எல்.ஏ.வைக் காணும் என்­றும், எனது கையெ­ழுத்தை அவர் போட்­டுள்­ளார் என்­றும் ஆளு­ந­ரி­டம் மனு தரு­கி­றார். கிண்டி காவல் நிலை­யத்­தி­லும் புகார் தரு­கி­றார். ‘நான் போக­வில்லை’ என்று அந்த எம்.எல்.ஏ.வே பேட்டி தரு­கி­றார். பின்­னர் அவரே விஜய் ஆத­ர­வா­ள­ராக மாறு­கி­றார். அந்த எம்.எல்.ஏ.வை கட்­சியை விட்டு நீக்­கி­விட்­டார் டி.டி.வி. தின­க­ரன். அப்­ப­டி­யா­னால் தின­க­ரன் கட்சி எம்.எல்.ஏ.வுக்கு தரப்­பட்ட வாக்­கு­றுதி என்ன?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13.5">அ.தி.மு.க. என்ற கட்­சியே முத­ல­மைச்­சர் விஜய் போட்ட தூண்­டி­லில் இரண்­டா­கப் பிள­வு­பட்டு நிற்­கி­றது. அக்­கட்­சி­யின் பொதுச்­செ­ய­லா­ளர் எடப்­பாடி பழ­னி­சாமி பின்­னால் 22 உறுப்­பி­னர்­கள் நிற்­கி­றார்­கள். விஜய் ஆட்­சியை ஆத­ரிப்­ப­வர்­கள் முன்­னாள் அமைச்­சர் வேலு­மணி பின்­னால் இருக்­கி­றார்­கள். விஜய் ஆட்­சிக்கு ஆத­ர­வாக 25 அ.தி.மு.க. உறுப்­பி­னர்­கள் வாக்­க­ளித்­துள்­ளார்­கள். இந்த 25 பேருக்கு தரப்­பட்ட ரக­சிய வாக்­கு­றுதி என்ன?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13.5">தேர்­த­லுக்கு முன்­ன­தாக கூட்­டணி அமைத்து போட்­டி­யிட்டு  கூட்­டணி  ஆட்­சியை அமைப்­ப­தைப் பற்றி பிரச்­சினை இல்லை. மேலும்,சில கட்­சி­கள் தங்­க­ளது நிர்­வா­கக் குழுக் கூட்­டங்­களை நடத்தி ஆட்­சிக்கு ஆத­ரவு என முடி­வெ­டுத்­தி­ருப்­ப­தும்  பிரச்­சினை இல்லை. மாறாக ஒரு கட்­சியை இரண்­டாக உடைத்­தி­ருப்­பது பேரத்­தின் அடிப்­ப­டை­யில் தானே? இன்­னொரு கட்சி எம்.எல்.ஏ.வைத்  தூக்கி இருப்­ப­தும் பேர­மா­கத் தான் இருக்­கும் என்று சந்­தே­கம் எழு­வது இயல்பு தானே?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13.5">‘முத­ல­மைச்­ச­ரைச் சந்­திக்க முகத்தை மூடிக் கொண்டு சென்­றது யார்?’ என்று சட்­ட­மன்­றத்­தில் முத­ல­மைச்­சர் விஜய்க்கு நேரா­கக் கேள்வி கேட்­டார் தே.மு.தி.க. பொதுச்­செ­ய­லா­ளர் பிரே­ம­லதா விஜ­ய­காந்த். சபை­யில் உட்­கார்ந்து இருந்த முத­ல­மைச்­சர் விஜ­யால் பதில் சொல்ல முடி­ய­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13.5">“முகத்தை மூடிக்­கொண்டு சென்­ற­வர் யார் என்­பதை முத­ல­மைச்­சர் விஜய் வெளிப்­ப­டை­யாக அறி­விக்க வேண்­டும். தமிழ்­நாடு அர­சில் எந்­த­வித குதி­ரைப்­பேர அர­சி­ய­லும்  நடை­பெற வில்லை என்­பதை முத­ல­மைச்­சர் விஜய் தெளி­வு­ப­டுத்த வேண்­டும். மதச்­சார்­பற்ற முற்­போக்கு கூட்­ட­ணி­யைச்  சேர்ந்­த­வர்­கள் நிபந்­தனை இல்­லாத வெளிப்­ப­டை­யான ஆத­ர­வைத் தெரி­வித்­த­னர். அதே போல் அதி­மு­க­வில் இருந்து பிரிந்து வந்­த­வர்­க­ளும் தங்­க­ளது ஆத­ரவை எந்­த­வித நிபந்­த­னை­யும் இல்­லா­மல் வெளிப்­ப­டை­யாக அறி­விக்க வேண்­டும்,. அப்­படி அறி­வித்­தால் மட்­டுமே குதிரை பேரம் நடை­பெ­ற­வில்லை என்­பதை மக்­கள் நம்­பு­வார்­கள்”</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13.5">என்று சொல்லி இருக்­கி­றார் பிரே­ம­லதா விஜ­ய­காந்த். விஜய் கட்­சி­யில் இருந்து இந்த அறிக்­கைக்கு இது­வரை பதில் வர­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13.5">அ.தி.மு.க. பொதுச்­செ­ய­லா­ளர் எடப்­பாடி பழ­னி­சாமி தனது கட்­சி­யைச் சேர்ந்த 47 உறுப்­பி­னர்­க­ளும் இந்த ஆட்­சிக்கு எதி­ராக வாக்­க­ளிப்­பார்­கள் என்று சொன்ன பிற­கும் 25 பேர் ஆத­ரித்து வாக்­க­ளித்­துள்­ளார்­கள்.இந்த 25 பேரை­யும் தகுதி நீக்­கம் செய்ய வேண்­டும் என்று எடப்­பாடி பழ­னி­சாமி கோரிக்கை வைத்­துள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13.5">எடப்­பாடி பழ­னி­சா­மி­யின் உத்­த­ர­வுக்கு மாறாக வாக்­க­ளித்த அதி­மு­க­வி­ன­ருக்கு அமைச்­சர் பதவி அளித்­தால் குதிரை பேரம் நடந்­துள்­ளது என்­பது உறுதி ஆகி­வி­டும். எட்டு பேர் அமைச்­சர் ஆகி­றார்­கள், ஏழு கேட்­கி­றார்­கள், ஆறு தரப்­போ­கி­றார்­கள் என்று வரும் செய்தி அனைத்­தும் பேரத்தை வெளிச்­சம் போட்­டுக் காட்­டு­கி­றது. ‘அமைச்­சர் பதவி தரு­கி­றோம், வாரி­யத் தலை­வர் பதவி தரு­கி­றோம் என்று ஆசை வார்த்தை காட்­டப்­ப­டு­வ­தாக’ சட்­ட­மன்­றத்­தி­லேயே எடப்­பாடி பழ­னி­சாமி குற்­றம் சாட்டி இருக்­கி­றார். இது அவைக் குறிப்­பில் பதி­வாகி இருக்­கி­றது.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13.5"> 
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13.5">குதிரை பேரம் நடந்­தி­ருப்­ப­தாக தக­வல் வரு­கி­றது என்று எடப்­பாடி பழ­னி­சாமி பேட்டி அளித்­துள்­ளார். குதிரை பேரம் நடத்­தி­ய­தாக டி.டி.வி. தின­க­ர­னும் சொல்லி இருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13.5">மே 10 ஆம் தேதி அன்று முத­ல­மைச்­ச­ராக விஜய் உள்­பட 10 பேர் அமைச்­சர்­க­ளாக பொறுப்­பேற்­றுக் கொண்­டார்­கள். அமைச்­சர்­கள் பொறுப்­பேற்ற ஒரு மணி நேரத்­தில் துறை­கள் ஒதுக்­கீடு செய்­யப்­ப­டும். ஆனால் இந்த 10 பேருக்­கு­மான துறை­கள் 16 ஆம் தேதி தான் வந்­துள்­ளது. இன்­னும் 20 –23 பேரை அமைச்­சர்­கள் ஆக்­க­லாம். ஒரு வார­மாக மற்ற அமைச்­சர்­கள் யார் என்­பது அறி­விக்­கப்­ப­ட­வில்லை. என்ன கார­ணம்? பெரும்­பான்மை இருந்­தி­ருந்­தால் சொந்­தக் கட்­சி­யைச் சேர்ந்­த­வர்­களை அமைச்­சர்­க­ளாக அறி­விக்­க­லாம். ஆனால் பேரத்­தின் அடிப்­ப­டை­யில் சேர்க்­கப்­பட்­ட­வர்­களை அமைச்­சர்­கள் ஆக்க வேண்­டும் என்­ப­தால் இழு­பறி தொடர்­கி­றது. பேரம் படி­யா­மல் இருக்­கி­றது என்­ப­தற்கு இதுவே சாட்சி ஆகும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13.5">‘’குதிரை பேர விவ­கா­ரத்­தில் தகுந்த ஆதா­ரங்­கள் இருந்­தால் முத­ல­மைச்­சர் விஜய் மீது வழக்­குப் பதிவு செய்­யப்­ப­ட­லாம்’’ என்று முன்­னாள் சபா­நா­ய­கர் அப்­பாவு சொல்லி இருக்­கி­றார். ‘’நாடா­ளு­மன்­றத்­தில் 1993 ஆம் ஆண்டு நடை­பெற்ற நம்­பிக்கை வாக்­கெ­டுப்­பில் வெற்றி பெற குதிரை பேரம் மூலம் ஜார்க்­கண்ட் முக்தி மோர்ச்சா எம்.பி.க்களின் ஆத­ரவை குறுக்கு வழி­யில் பெற்­ற­னர். அன்­றைய பிர­த­மர் நர­சிம்­ம­ராவ், பூட்­டா­சிங் ஆகி­யோர் மீது சி.பி.ஐ. வழக்­குப் பதிவு செய்­த­தைப் போல இன்­றைய முத­ல­மைச்­சர் விஜய் மீது வழக்­குப் பதி­யப்­ப­ட­லாம்” என்று அ.தி.மு.க. எம்.பி.யான இன்­ப­துரை சொல்லி இருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13.5">பணம், பதவி, சலு­கை­கள் கொடுத்து தங்­கள் பக்­கம் இழுக்­கும் சட்­ட­வி­ரோத நட­வ­டிக்­கை­யைத் தான் குதிரை பேரம் என்­கி­றோம். விஜய் தனது ஆட்­சி­யைக் காப்­பாற்­றிக் கொள்ள இது போன்ற அஸ்­தி­ரங்­களை ஏவி இருக்­கி­றார் என்­பதை பல்­வேறு தரப்­பி­ன­ரும் குற்­றச்­சாட்­டாக வைத்து வரு­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13.5">குதிரை பேரம் குறித்து முத­ல­மைச்­சர் விஜயோ, த.வெ.க.வோ உட­ன­டி­யாக முறை­யான விளக்­கத்தை வெளி­யிட வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="Wingdings" fontStyle="Regular" size="11">•</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>