<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="20/05/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,33,958,1011" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="6"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Tue May 19 2026 14:32:22 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260520T000000+5.30" edition.name="CBE" edition.area="CBE" position.section="20052026-CBE-07" position.sequence="07" ex-ref="20052026-CBE-07.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="20">கோவை </lang>
	<lang class="3" style="Headline2"  font="Arial" fontStyle="Bold"  size="20">20.05.2026</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="34">ஒருபோதும் மறையாது: மறுபடியும் உதிக்கும்</lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="99">சூரியன் ஒளியில் தமிழ்நாடு மீண்டும் செழிக்கும்!</lang>
	</hl4>
<hl5 id="Headline1" class="1" style="Headline5">
		<lang class="3" style="Headline5"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="30">பூண்டி கலைவாணன் இல்ல மணவிழாவில்</lang>
	</hl5>
<hl6 id="Headline1" class="1" style="Headline6">
		<lang class="3" style="Headline6"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="34">எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் உரை!</lang>
	</hl6>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup649905_07_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup615630_07_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="3" source="UdhayasirSpee_07_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">தஞ்­சா­வூர்,மே 20 –</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">பூண்டி கலை­வா­ணன் இல்ல மண­வி­ழா­வில் கழக இளை­ஞ­ர­ணிச் செய­லா­ளர் – சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உத­ய­நிதி ஸ்டாலின் அவர்­கள் பங்­கேற்று வாழ்த்­துரை வழங்­கு­கை­யில், சூரி­யன் ஒரு­போ­தும் மறை­யாது; மறு­ப­டி­யும் உதிக்­கும்; அந்த சூரி­ய­னின் ஒளி­யில் தமிழ்­நாடு மீண்­டும் செழிக்­கும் என்று குறிப்­பிட்­டார்.
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">திரு­வா­ரூர் மாவட்­டக் கழ­கத் தூணாக விளங்கி, கழ­கத்­தி­னர் நெஞ்­சங்­க­ளில் என்­றும் வாழ்ந்­து­கொண்­டி­ருக்­கும் பூண்டி கே.கலைச்­செல்­வம் – மல்­லிகா ஆகி­யோ­ரின் மகள் மருத்­து­வர் க.கலை­ய­ழகி – மருத்­து­வர் ந.ராம் பாலாஜி இணை­யேற்பு விழா தஞ்­சா­வூ­ரில் கழ­கத் தலை­வர் அவர்­க­ளின் தலை­மை­யில் நடை­பெற்­றது. அதில் கழக இளை­ஞர் அணிச் செய­லா­ள­ரும் சட்டமன்ற எதிர்க்­கட்­சித் தலை­வ­ரு­மான உத­ய­நிதி ஸ்டா லின் பங்­கேற்று வாழ்த்­துரை வழங்­கி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">அவர் ஆற்­றிய வாழ்த்­து­ரை­ 
வரு­மாறு:</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">இன்­றைக்கு நம் கழ­கத் தலை­வ­ரின் தலை­மை­யில், திரு­வா­ரூர் மாவட்ட திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தின் முக­மாக இருக்­கக்­கூ­டிய நம் அண்­ணன் பூண்டி கலை­வா­ணன் அவ­ரு­டைய இல்­லத் திரு­மண விழா­வில், உங்­க­ளோடு கலந்­து­கொண்டு மண­மக்­களை வாழ்த்­து­கின்ற வாய்ப்பை நான் பெற்­றி­ருக்­கி­றேன். அதற்கு மிகுந்த மகிழ்ச்­சி­ய­டை­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">தேர்­தல் முடி­வு­கள் எல்­லாம் வந்த பிறகு, நம் தலை­வர் அவர்­கள் கலந்­து­கொள்­கின்ற முதல் பொது நிகழ்ச்சி, இந்த நிகழ்ச்சி.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">மாவீ­ரர், மறைந்த அண்­ணன்  பூண்டி கலைச்­செல்­வன் அவர்­க­ளின் அன்பு மகள், மருத்­து­வர் கலை­ய­ழகி – மருத்­து­வர் ராம் பாலாஜி இணை­ய­ரின் இந்­தத் திரு­மண நிகழ்ச்சி, இன்­றைக்கு ஒரு சாதா­ரண திரு­மண நிகழ்ச்­சி­யாக மட்­டு­மல்­லா­மல், நம் கழ­கத்­தின் நிகழ்ச்­சி­யாக மிகுந்த எழுச்­சி­யோடு நடை­பெற்­றுக் கொண்­டி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">மண­ம­கள் திரு­வா­ரூர் மாவட்­டம், மண­ம­கன் திருச்சி மாவட்­டம், திரு­ம­ணம் நடை­பெ­று­கின்ற இந்த இடம் தஞ்­சா­வூர் மாவட்­டம். மொத்­தத்­தில் ஒட்­டு­மொத்த டெல்டா மாவட்­ட­மும் சேர்ந்து ஒரு கூட்­டணி அமைத்து, இந்த நிகழ்ச்­சியை நடத்­திக் கொண்­டி­ருக்­கி­றது. யார் எந்­தப் பக்­கம் போனா­லும், எந்த மாவட்­டம் எந்த முடிவு எடுத்­தா­லும், டெல்டா எப்­போ­துமே திரா­விட முன்­னேற்­றக் கழ­கம் பக்­கம்­தான் என்­பதை நிரூ­பித்­துக் காட்­டிய உங்­கள் அத்­த­னை­பே­ருக்­கும் முத­லில் என் நன்­றி­யைத் தெரி­வித்­துக்­கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="15">முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">திரு­வா­ரூர் மாவட்­டத்­தில், நம் திரா­விட முன்­னேற்­றக் கழ­கம் வளர்­வ­தற்கு உறு­தி­யான அடித்­த­ளத்­தைப் போட்­ட­வர் நம் முத்­த­மி­ழ­றி­ஞர் டாக்­டர் கலை­ஞர் அவர்­கள்­தான். அவரை நீங்­கள் என்­றைக்­கும் விட்­டுக் கொடுக்­க­மாட்­டீர்­கள். திரு­வா­ரூர் மாவட்­டம் மட்­டும் இல்லை, ஒட்­டு­மொத்த டெல்­டா­வுமே என்­றைக்­குமே கழ­கத்­தின் கோட்­டை­யா­கத்­தான் விளங்­கிக் கொண்­டி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">கழ­கத்­தின் வர­லாற்­றில், அது­வும் குறிப்­பாக இந்த டெல்டா பகு­தி­யின் அர­சி­யல் வர­லாற்­றில்,  பூண்டி கலைச்­செல்­வம் அவர்­க­ளின் பெயர் என்­றைக்­குமே நிலைத்து நிற்­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">இன்­றைக்கு  அண்­ணன் கலைச்­செல்­வம் அவர்­க­ளின் வழி­யில், அவ­ரு­டைய தம்பி, நம் அண்­ணன் கலை­வா­ணன் அவர்­க­ளும், அவ­ரு­டைய மகன், தம்பி கலை­வேந்­த­னும், அவர்­க­ளின் ஒட்­டு­மொத்­தக் குடும்­ப­மும் இன்­றைக்கு கழ­கத்­திற்­கா­கக் களத்­தில் இறங்கி உழைத்­துக் கொண்­டி­ருக்­கி­றார்­கள். அப்­ப­டிப்­பட்ட சிறப்பு வாய்ந்த இந்­தக் குடும்ப நிகழ்ச்­சிக்கு வருகை தந்­தி­ருப்­ப­தில், எனக்கு மிகுந்த பெருமை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="15">கழ­கம் மீண்­டும் வெற்றி!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">தமிழ்­நாடு முழு­வ­தும், இது மாதி­ரி­யான லட்­சக்­க­ணக்­கான கழ­கக் குடும்­பங்­கள் இருப்­ப­த­னால்­தான் கழ­கம் எவ்­வ­ளவு பெரிய புய­லைச் சந்­தித்­தா­லும், நாம் திரும்­பத் திரும்ப மீண்­டும் எழுந்து வந்­து­கொண்­டி­ருக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">இந்­தத் திரு­ம­ணத்­தில் இருக்­கக்­கூ­டிய எழுச்­சி­யை­யும், உங்­க­ளின் மகிழ்ச்­சி­யை­யும், உற்­சா­கத்­தை­யும் பார்க்­கும்­போது நிச்­ச­யம் நம் தலை­வர், நிச்­ச­யம் நம் திரா­விட முன்­னேற்­றக் கழ­கம் மீண்­டும் வெற்­றி­வாகை சூடும் என்­ப­தில், எனக்கு எந்­த­வி­த­மான சந்­தே­க­மும் கிடை­யாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் அவர்­கள் சொன்­ன­மா­திரி, திரா­விட முன்­னேற்­றக் கழ­கம் வெறும் அர­சி­யல்­இ­யக்­கம் கிடை­யாது, வெறும் ஒரு கட்சி கிடை­யாது. அது ஒரு சமு­தா­ய­இ­யக்­கம். தேர்­த­லில் வெற்றி, தோல்வி என்­ப­தெல்­லாம் சக­ஜம். மற்­றக் கட்­சி­க­ளைத்­தான் அவை­யெல்­லாம் பாதிக்­கும். சமு­தா­ய­இ­யக்­க­மான நம் திரா­விட முன்­னேற்­றக் கழ­கம் எப்­போ­தும் போல மக்­கள் பணி­க­ளைத் தொடர்ந்து செய்­து­கொண்­டு­தான் இருக்­கும், நாமும் அப்­ப­டித்­தான் இருப்­போம். நம் தலை­வ­ரு­டைய வழி­காட்­டு­த­லின்­படி, அதை நாங்­கள் தொடர்ந்து செய்­வோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="15">களப்­பணி – மக்­கள் பணி</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">ஒரே வரி­யில் சொல்ல வேண்­டும் என்­றால், தேர்­தல் அர­சி­ய­லில்­தான் நாம் தோற்­றி­ருக்­கி­றோமே தவிர, வெற்­றி­வாய்ப்பை இழந்­தி­ருக்­கி­றோமே தவிர, கொள்­கை­அ­ர­சி­ய­லில் திரா­விட முன்­னேற்­றக் கழ­கம் என்­றைக்­கும் தோற்­றது கிடை­யாது, தோற்­க­வும் மாட்­டோம். எனவே, கழக உடன்­பி­றப்­பு­கள், நாம் மீண்­டும் எப்­போ­தும் போல நம் களப்­ப­ணியை, மக்­கள் பணி­யைத் தொடர்­வோம். நம் தலை­வர் எப்­போ­தும் சொல்­வது போல, ஆளுங்­கட்­சி­யாக இருந்­த­போது மட்­டும் அல்­லா­மல், எதிர்க்­கட்­சி­யாக இருக்­கும்­போ­தும், நமக்கு வாக்­க­ளித்த மக்­க­ளுக்கு மட்­டும் அல்­லா­மல், வாக்­க­ளிக்­கா­மல் போன மக்­க­ளுக்­கும் சேர்த்தே நாம் உழைப்­போம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">நாம் தமிழ்­நாட்­டுக்கு வரு­கின்ற ஆபத்­து­களை எல்­லாம் நிச்­ச­யம் தடுத்து நிறுத்­து­வோம். மாநில உரி­மை­களை நிச்­ச­யம் காப்­போம். இப்­பொ­ழுதே… இந்த 10 நாட்­க­ளி­லேயே… மக்­கள், பல பெண்­கள், இளை­ஞர்­கள், இன்­றைய தலை­மு­றை­யி­னர் (ஜென்ஸி கிட்ஸ்), இந்த ஆட்­சி­யின் உண்­மை­யான முகத்தை உணர ஆரம்­பித்­து­விட்­டார்­கள். நாளாக நாளாக நிச்­ச­யம் இந்த ஆட்­சி­யா­ளர்­கள், தாங்­க­ளா­கவே நிறைய வெளிப்­ப­டு­வார்­கள் (எக்ஸ்­போஸ் ஆவார்­கள்). போகப் போக இன்­னும் பல­ருக்­குப் பல உண்­மை­கள் தெரிய வரும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="15">நிரந்­த­ர­மாக இருந்­து­வி­டாது!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் அவர்­கள் சொன்ன ஒரு உதா­ர­ணத்தை, இங்கே நான் குறிப்­பிட விரும்­பு­கி­றேன். தாயின் பாது­காப்­பில் இருக்­கக்­கூ­டிய ஒரு குழந்தை கிலுகிலுப்பை ஆட்டி விளை­யாட்டு காட்­டு­கின்ற ஒரு ஆளைப் பார்த்து நிச்­ச­யம் மயங்­கும், மகிழ்ச்­சி­ய­டை­யும். தாயி­டம் இருந்து தாவி, அந்­தக் கிலுகிலுப்பு ஆட்­டு­ப­வ­னி­டம் சென்று கொஞ்ச நேரம் அமர்ந்­து­கொள்­ளும். ஆனால், அந்த குழந்தை கிலு­கி­லுப்பை காட்­டு­ப­வ­னி­டம் நிரந்­த­ர­மாக இருந்­து­வி­டாது. கொஞ்ச நேரத்­துக்­குப் பிறகு அதற்கு உண்­மை­யான பாசம் என்­றால், என்­ன­வென்று தெரி­யும். தாயின் முகத்தை நிச்­ச­யம் தேடிப் பார்க்­கும். தாயி­டம்­தான் மீண்­டும் திரும்பி வரும். அது மாதிரி இப்­போது கவர்ச்சி மாயா­ஜா­லத்­தைக் காட்டி மக்­க­ளைச் சிலர் ஈர்த்து இருக்­கி­றார்­கள். இந்த கவர்ச்சி, மக்­க­ளின் கஷ்­டத்­தைப் போக்­காது. அடிப்­ப­டைப் பணி­களை நிறை­வேற்­றாது. எந்­தப் பிரச்­சி­னைக்­கும் அது தீர்வு காணாது. எனவே, தாயின் அன்­புக்கு ஈடாக எது­வும் இல்லை என்­பதை, அந்­தக் குழந்தை மீண்­டும் உணர்ந்து தமிழ்­நாட்­டுக்­குத் தாயாக இருக்­கக்­கூ­டிய நம் கழ­கத்தை, நம் தலை­வரை நோக்கி, நிச்­ச­யம் அந்­தக் குழந்தை விரை­வில் வரும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">நம் தலை­வர் அவர்­கள் சொன்­னது போல, ``சூரி­யன் ஒரு­போ­தும் மறை­யாது, அது மறு­ப­டி­யும் உதிக்­கும், அதன் ஒளி­யில் தமிழ்­நாடு மீண்­டும் செழிக்­கும்’’ என்று சொல்லி, மண­மக்­க­ளுக்கு மீண்­டும் என்­னு­டைய மன­மார்ந்த வாழ்த்­து­க­ளைத் தெரி­வித்து விடை­பெ­று­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">இவ்­வாறு கழக இளை­ஞர் அணிச் செய­லா­ள­ரும், சட்டமன்ற எதிர்க்­கட்­சித் தலை­வ­ரு­மான உத­ய­நிதி ஸ்டாலின் வாழ்த்­திப் பேசி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="15">பங்­கேற்­ற­வர்­கள்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">கழ­கப் பொரு­ளா­ளர் டி.ஆர்.பாலு, முதன்­மைச் செய­லா­ளர்   கே.என்.நேரு,  முத்­த­ர­சன்,  பழ­னிச்­சாமி, கழ­கத் துணைப் பொதுச் செய­லா­ளர்­கள்  ஆ.ராசா, பொன்­முடி, எஸ்.டி.பி.ஐ–யின் மாநி­லத் தலை­வர் முபா­ரக், மாவட்­டக் கழ­கச் செய­லா­ளர்­கள் எம்.ஆர்.கே.பன்­னீர்­செல்­வம், ரகு­பதி, துரை.சந்­தி­ர­சே­க­ரன்,  சா.சி.சிவ­சங்­கர், அன்­பில் மகேஷ் பொய்­யா­மொழி,  சாக்­கோட்டை அன்­ப­ழ­கன்,  பழ­னி­வேல், நிவேதா முரு­கன், லட்­சு­ம­ணன், முன்­னாள் அமைச்­சர்­கள்  பழ­னி­மா­ணிக்­கம், வைத்­தி­லிங்­கம், மதி­வா­ணன், கோவி.செழி­யன், மெய்­ய­நா­தன், டி.ஆர்.பி.ராஜா, நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள்  எஸ்.கே., முர­சொலி,  செல்­வ­ராஜ், கவி­ஞர் சல்மா, அருண் நேரு, மாந­க­ரச் செய­லா­ளர்­கள் சண்.ராம­நா­தன்,  அன்­ப­ழ­கன்,  தமி­ழ­ழ­கன், டி.கே.ஜி.நீல­மே­கம், அண்­ணா­துரை, அசோக்­கு­மார், மாரி­முத்து, முத்­து­ராஜா, இளை­ஞர் அணி மாநில துணைச் செய­லா­ளர் இளை­ய­ராஜா, இளை­ஞர் அணி அமைப்­பா­ளர்­கள் பனங்­குடி குமார், முகில்­வேந்­தன், ஜி.கே.எம்.ராஜா, வாசிம் ராஜா, மரு­த­முத்து, ஒன்­றி­யச் செய­லா­ளர் பாலச்­சந்­தர், மாவட்­டக் கழ­கச் செய­லா­ள­ரும் சட்­ட­மன்ற உறுப்­பி­ன­ரு­மான   பூண்டி கலை­வா­ணன், மல்­லிகா, கலை­வேந்­தன் உள்­பட கழக முன்­ன­ணி­யி­னர் பல­ரும் கலந்­து­கொண்­ட­னர்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>