<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="20/05/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="38,69,957,1493" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="4"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Tue May 19 2026 22:06:41 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260520T000000+5.30" edition.name="VLR" edition.area="VLR" position.section="20052026-VLR-05" position.sequence="05" ex-ref="20052026-VLR-05.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#000000" boxBorderWeight="2">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="70">தி.மு.க. எதிர்ப்பின் வடிவங்கள்: புனிதவாத அயர்ன் டோம்களும், மூட நம்பிக்கை டிரோன்களும்!</lang>
	</hl1>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfFrame651070_05_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup651241_05_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="3" source="M1bw_05_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="4" source="m2bw_05_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="5" source="M3bw_05_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="15.5">தி</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">.மு.க தேர்­தல் தோல்­விக்­கான கார­ணங்­களை கண்­ட­றிய குழு அமைத்­துள்­ளது. அந்த கட்­சிக்கு ஆளு­மை­யிற் சிறந்த தலை­வர் ஸ்டாலின் இருக்­கி­றார். ஆற்­றல் மிக்க இளந்­த­லை­வர் உத­ய­நிதி இருக்­கி­றார். கட்­சி­யில் ஆழ்ந்த அனு­ப­வ­மிக்க மூத்­த­வர்­க­ளும், துடிப்­புள்ள இளம் தலை­மு­றை­யி­ன­ரும் இருக்­கி­றார்­கள். நிச்­ச­யம் அவர்­கள் விரி­வாக ஆராய்ந்து தக்­க­படி எதிர்­கால நட­வ­டிக்­கை­களை வகுப்­பார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ஒவ்­வொரு தேர்­த­லும் ஒரு தனித்­து­வ­மான சூழ்­நி­லை­யில் நடை­பெ­று­வது. பல்­வேறு உட­ன­டிக் கார­ணங்­க­ளால் வாக்­கு­கள் இடம் பெயர்ந்­து­வி­டும். எனவே அவற்­றைக் குறித்து ஆராய்ந்து அறி­ய­வேண்­டும். ஒவ்­வொ­ரு­வ­ரும் வெவ்­வேறு கோணத்­தில் பல கார­ணங்­க­ளைக் கூறு­வர். தாங்­கள் உரை­யா­டிய ஒரு சிலர் கூறி­ய­வற்றை வைத்து சில அம்­சங்­க­ளைக் கூறு­வார்­கள். யாரா­லும் ஐந்து கோடி பேர் எப்­படி சிந்­தித்து வாக்­க­ளிக்­கி­றார்­கள் என்று உறு­தி­ப­டக் கூற முடி­யாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">அதே சம­யம் வர­லாற்­றுப் பார்­வை­யில், மானு­ட­வி­யல் பார்­வை­யில் சில அம்­சங்­கள் தொடர்ச்­சி­யாக இருக்­கின்­றன. அது தி.மு.க பார்ப்­ப­னீய, ஜாதீய கருத்­தி­யல் மேலா­திக்­கத்தை எதிர்த்­துப் போடும் எதிர்­நீச்­சல். இது மேலோட்­ட­மான பார்­வை­யில் பார்த்­தால் புரி­யாது. சற்றே ஆழ­மா­கக் கவ­ன­மா­கப் பார்க்க வேண்­டும். ஏன் தி.மு.க-விற்கு எதி­ராக பரப்­பப்­ப­டும் வதந்­தி­கள் எளி­மை­யாக நம்­பப் படு­கின்­றன? அதன் மீதான குற்­றச்­சாட்­டு­கள் எத­னால் எளி­தில் ஏற்­கப்­ப­டு­கின்­றன? பகுத்­த­றிவு சார்ந்த அர­சி­யலை முன்­னெ­டுப்­ப­தில் எத்­த­கைய சவால்­களை சந்­திக்க வேண்­டி­யுள்­ளது என்­ப­தை­யெல்­லாம் கணக்­கில் கொள்ள வேண்­டி­யுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தலைப்­பில் கொடுக்­கப்­பட்­டுள்ள உரு­வ­கம் சம­கால போர் முறை­கள் சார்ந்­தது. இப்­போ­தெல்­லாம் தொலை­தூ­ரம் பாயும் ஏவு­க­ணை­களை நாடு­கள் ஒன்­றன்­மீது ஒன்று ஏவிக்­கொள்­கின்­றன. அந்த ஏவு­க­ணை­கள் வரு­வதை கண்­ட­றிந்து சுட்­டு­வீழ்த்­தும் ஆற்­றல் கொண்ட ரேடார்­க­ளும், தடுப்­புக் கணை­க­ளும் கொண்ட அமைப்­பு­களை ஒவ்­வொரு நாடும் நிறு­விக்­கொள்­கி­றது. இஸ்­ரேல் நாட்­டின் ஆற்­றல் மிகுந்த ஏவு­க­ணைத் தடுப்பு வலைப்­பின்­ன­லுக்கு இரும்பு விதா­னம், அயர்ன் டோம் என்று பெயர்.  இந்த அயர்ன் டோமின் கண்­கா­ணிப்­பு­க­ளுக்­குள் சிக்­கா­மல் டிரோன்­கள் மூலம் தாக்­கு­தல் நடத்த எதிரி நாடு­கள் முயல்­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">மானு­ட­வி­யல் கோணத்­தில் புனித மையங்­க­ளாக கட்­ட­மைக்­கப்­ப­டும் ஜாதீய உரு­வ­கங்­கள் உரு­வாக்­கும் புனி­த­வா­தம் என்­பது அயர்ன் டோம் போன்­றது. பகுத்­த­றி­வுக் கணை­கள் ‘புனித மையங்­களை’ தாக்­கா­மல் பார்த்­துக் கொள்­ளும் திறன் கொண்­டது. அதே சம­யம் மூட நம்­பிக்கை டிரோன்­கள் தொடர்ந்து பகுத்­த­றி­வுப் பரப்பை தாக்­கி­ய­வண்­ணம் இருக்­கும். இந்த பின்­ன­ணி­தான் தி.மு.க-வின் அர­சி­யல் பய­ணத்தை சவால் மிகுந்­த­தாக ஆக்­கு­கி­றது; அதே சம­யம் அதற்கு பெரும் வர­லாற்று ஆற்­ற­லை­யும் வழங்­கு­கி­றது. ஒவ்­வொரு முறை ஆட்­சிக்கு வரும்­போ­தும் தி.மு.க தமிழ்­நாட்­டின் வளர்ச்­சிக்கு பெரும் அடித்­த­ள­மி­டும்.  தேர்­த­லில் சரி­வைச் சந்­திக்­கும், ஆனா­லும் மீண்­டெ­ழும். இந்த இயங்­கி­யலை சற்றே விரி­வா­கப் புரிந்­து­கொள்ள வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">வதந்­தி­கள் என்­னும் சமூக உள­வி­யல் பரப்பு!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தேர்­த­லில் வாக்­க­ளிக்க இந்த முறை டில்­லி­யி­ 
லி­ருந்து வந்­த­போது டில்லி விமான நிலை­யத்­தில் ஒரு­வர் என்­னி­டம் உரை­யா­டி­னார். நெற்­றி­யில் பொட்டு வைத்­தி­ருந்­தார். பொது­வான சில விஷ­யங்­களை பேசி­ய­பி­றகு எந்த தொகு­தி­யில் வாக்­க­ளிக்­கப் போகி­றேன் என்று கேட்­டார். நான் சொன்­ன­வு­டன் அங்கே யார் வெற்றி பெறு­வார்­கள் என்று கேட்­டார். நான் பட்­டும் படா­மல் பெரும்­பா­லும் அ.இ.அ.தி.மு.க-தான் அந்த தொகு­தி­யில் வெற்றி பெறு­கின்­றது என்று கூறி­னேன். அவர் உடனே “கோயில்­களை இடிப்­ப­வர்­கள் வெற்றி பெறா­மல் இருக்க வேண்­டும்” என்­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">நான் அப்­பா­வி­யான தொனி­யில் “அ.இ.அ.தி.மு.க கோயில்­களை இடிக்­கி­றதா?” என்று கேட்­டேன். அவர் பத­றிப்­போய்­விட்­டார். காத­ருகே வந்து கிசு, கிசு குர­லில் “தி.மு.க சார்” என்று கூறி­னார். நான் விட­வில்லை. அதே அப்­பா­விக் குர­லில் “அப்­ப­டியா? எந்த ஊரில் கோயிலை இடித்­தார்­கள்?” என்று கேட்­டேன். அவர் நிறைய கோயில்­கள் என்­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">நான் சட்­டென்று கறா­ரான குர­லில் “ஒரு ஊர், ஒரு இடத்­தை­யா­வது சொல்­லுங்­கள். நான் தின­மும் டிவி பார்க்­கி­றேன். செய்­தித்­தாள் படிக்­கி­றேன். அப்­படி எது­வும் கேள்­விப் பட­வில்­லையே” என்­றேன். அவர் உடனே, “இல்ல சார், வாட்ஸ்-­அப்­பில் நிறைய வருது. அதைத்­தான் சொன்­னேன்” என்று கூறி­னார். நான் “ஏன் சார், கோயிலை இடித்­தால் டிவி­யில் செய்தி வராதா? வாட்ஸ் அப்­பில் மட்­டும் வருமா?” என்று கேட்­டேன். ஒரு மாதிரி அசட்டு சிரிப்­பு­டன் எழுந்து சென்­று­விட்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இப்­படி ஒரு நப­ரு­டன் பேசி­யதை மட்­டும் வைத்­துக்­கொண்டு நாம் தேர்­தல் முடி­வு­க­ளுக்­கான கார­ணங்­களை யூகிக்க முடி­யாது. ஆனால் ஒரு அம்­சத்தை சிந்­திக்க முடி­யும். கடந்த ஐந்­தாண்­டு­கால 
தி.மு.க ஆட்­சி­யில் அமைச்­சர் சேகர் பாபு அற­நி­லை­யத் துறைக்கு கணி­ச­மாக வலுச்­சேர்த்­தார். ஆக்­கி­ர­மிக்­கப்­பட்ட கோயில் நிலங்­களை மீட்­டார். ஏரா­ள­மான கோயி­க­ளுக்கு திருப்­பணி செய்­தார். சன் நியூ­ஸில் எப்­போது பார்த்­தா­லும் ஏதா­வது ஒரு ஊரில் கோயில் குட­மு­ழுக்கு, கும்­பா­பி­ஷே­கம் என்று செய்தி லைவாக போட்­டுக்­கொண்டே இருப்­பார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அது போதாது என்று அற­நி­லை­யத்­துறை அமைச்­சர் முரு­கன் மாநா­டெல்­லாம் நடத்­தி­னார். இந்து முன்­னணி அர்­ஜுன் சம்­பத்­தையே மாநாட்­டிற்கு அழைத்­தார். பகுத்­த­றி­வா­ளர்­கள் விமர்­ச­னத்­தைச் சந்­தித்­தார். மற்­றொ­ரு­பு­றம் முத­ல­மைச்­ச­ரின் இணை­யர் துர்கா ஸ்டாலின் அம்­மை­யாரே இறை நம்­பிக்கை மிகுந்­த­வர். அவர் கோயில்­க­ளுக்கு செல்­லும் காட்­சி­க­ளும் ஊட­கங்­க­ளில் பர­வ­லாக வெளி­வந்­துள்­ளன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இவ்­வ­ள­விற்கு பிற­கும், தி.மு.க கோயில்­களை இடிக்­கும் கட்சி என்று எப்­படி வதந்தி பரப்ப முடி­கி­றது? அதை ஏன் மக்­கள் நம்­பு­கி­றார்­கள்? இப்­போ­து­தான் வாட்ஸ்-­அப், டிவிட்­டர் எல்­லாம். அதெல்­லாம் இல்­லாத எழு­ப­து­க­ளி­லி­ருந்தே இந்த வதந்­தி­கள் சுற்­றிக் கொண்­டு­தான் இருக்­கின்­றன. பகுத்­த­றி­வுப் பக­ல­வன் தந்தை பெரி­யார் ஏன் கட­வுள் மறுப்பு பேசி­னார், அண்­ணா­வும், கலை­ஞ­ரும் அதனை எப்­படி மூட நம்­பிக்கை எதிர்ப்­பாக, ஜாதி­யா­திக்க எதிர்ப்­பாக தக­வ­மைத்­தார்­கள் என்ற கருத்­தி­யல் வர­லாற்றை முழு­மை­யாக உள்­வாங்­கி­னால்­தான் இந்த டிரோன் தாக்­கு­தல்­களை சமா­ளிக்க முடி­யும். அதற்கு மானு­ட­வி­யல் பார்வை உத­வும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">சமூ­கங்­க­ளின் புனித மையங்­கள்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">பல ஆதி­வாசி இனக்­குழு சமூ­கங்­க­ளில் ஒரு புனி­தச் சின்­னம், பிம்­பம், விலங்கு, ஏதோ­வொரு மரம், பாறை என்று ஒன்று இருக்­கும். அதை தங்­களை வழி­நட த்தும் சக்­தி­யா­கக் கரு­து­வார்­கள். அதற்­கான சடங்­கு­களை, வழி­பா­டு­க­ளைச் செய்­யும் பூசா­ரி­கள் இருப்­பார்­கள். அந்த பூசா­ரி­களே குழு­வின் தலை­வனை அங்­கீ­க­ரிப்­பார்­கள். ஒரு சமூக ஒழுங்கை நிலை­நாட்­டிக்­கொள்ள இப்­ப­டி­யான ஏற்­பா­டு­கள் தேவைப்­பட்­டன என்­ப­து­தான் மானு­ட­வி­யல் பார்வை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">விவ­சா­யம், வர்த்­த­கம் எல்­லாம் தோன்றி, சமூக அமைப்பு விரி­வ­டைந்­த­போது கோயில்­க­ளும், தெய்­வங்­க­ளும், புரா­ணங்­க­ளும். பூசாரி வர்க்­க­மும் விரி­வ­டைந்­தன. புனித நூல்­கள், மத அமைப்­பு­கள் உரு­வா­யின. அர­சர்­கள், பேர­ர­சர்­கள் எல்­லாம் மத குரு­மார்­கள் துணை­யு­டன் ஆட்சி செய்­தார்­கள். ‘அர­சன் அன்று கொல்­வான், தெய்­வம் நின்று கொல்­லும்” என்­பன போன்ற கூற்­றுக்­கள் எப்­படி சமூக நெறி­களை பாது­காக்க தெய்­வம் என்ற கருத்­தாக்­கம் தேவைப்­பட்­டது என்­ப­தைக் காட்­டு­வது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இன்­று­வரை தெய்­வம் தண்­டிக்­கும் என்ற அச்­சமே மக்­களை குற்­றம் செய்­யா­மல் தடுக்­கி­றது என்று பல­ரும் நினைக்­கி­றார்­கள். குழந்­தை­க­ளி­டம் தப்பு செய்­தால் சாமி கண்ணை குத்­தும் என்று சொல்லி வளர்க்­கி­றார்­கள். ஆங்­கில ஹிண்டு நாளி­த­ழில் வரும் திரு­ம­ணத் ­திற்கு இணை தேடும் விளம்­ப­ரங்­க­ளில் இணை­யர் கட­வுள் பயம் (God Fearing) உள்­ள­வ­ராக இருக்க வேண்­டும் என்று குறிப்­பி­டப் பட்­டி­ருக்­கும். கட­வுள் பயம் இருந்­தால் தவறு செய்­ய­மாட்­டார் என்­பது கரு­து­கோள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ஆனால் நடை­மு­றை­யில் பார்த்­தால் கட­வுள் பக்தி உள்­ள­வர்­கள் பல மோச­டி­க­ளைச் செய்­வார்­கள். ஒழுக்­க­மின்றி இருப்­பார்­கள். அதற்­கெல்­லாம் சேர்த்து கோயில்­க­ளுக்கு நிதி அளிப்­பார்­கள். பல சாமி­யார்­கள் மோச­மான குற்­றச்­சாட்­டு­க­ளில் கைதா­வார்­கள். அப்­போ­தும் கூட அவர்­க­ளு­டைய பக்­தர்­கள் அவர்­களை வழி­ப­டு­வதை நிறுத்த மாட்­டார்­கள். பிரே­மா­னந்தா என்ற சாமி­யா­ரின் பக்­தர்­கள் அவரை சிறை­யி­லேயே சென்று வழி­பட்­டார்­கள். சங்­க­ராச்­சா­ரி­யார் கைது செய்­யப்­பட்ட போது அவ­ரது சில ஆசா­ர­மான பழக்­கங்­க­ளுக்கு சிறை­யில் வசதி செய்து கொடுக்­கப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ஆனால் புனித மையங்­களை எதிர்ப்­ப­வர்­கள் பல சிக்­கல்­களை சந்­திப்­பார்­கள். அவர்­கள் மாற்று புனித மையங்­களை உரு­வாக்­கி­னால் தப்­பிக்­க­லாம். புனித மையங்­கள் என்ற கருத்­தையே எதிர்த்­தால் அது சமூக அங்­கீ­கா­ரம் பெறு­வது பெரும் சவால்­தான். ஏனென்­றால் நடை­முறை வாழ்க்­கை­யில் பல நெருக்­க­டி­களை சந்­திக்­கும் எளிய மக்­க­ளுக்கு கட­வுள்­க­ளும், கோயில்­க­ளும். புனித மையங்­க­ளும் தேவை என்­ப­து­தான். “மதம் ஒடுக்­கப்­பட்­ட­வர்­க­ளின் பெரு­மூச்சு; இத­ய­மற்ற உல­கின் இத­யம்; ஆன்ம வறட்­சி­யுற்ற நிலை­யின் ஆன்மா” என்று கார்ல் மார்க்ஸ் கூறி­ய­து­போல, வெகு­ஜன உள­வி­ய­லில் கட­வு­ளுக்­கான தேவையை முற்­றி­லும் அகற்­று­வது சாத்­தி­ய­மல்ல.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">பெரி­யா­ரின் பகுத்­த­றிவு இயக்­கம் ஏன்?</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">  
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இந்­தி­யா­வில் புனி­த­வா­தம் மிக விரி­வான சமூக அமைப்பை, நால்­வர்ண படி­நி­லையை உரு­வாக்­கி­ய­தும், அவர்­ணர்­க­ளாக ஒரு பிரிவை ஒதுக்­கி­ய­தும்­தான் முக்­கி­ய­மான பிரச்­சினை. சமஸ்­கி­ருத மொழியை உரு­வாக்­கிய ஆரிய இனத்­த­வர்­கள் கால்­நடை மேய்ப்­புக் குழுக்­க­ளாக இருந்­தார்­கள். அவர்­கள் யாகங்­கள் செய்து அதில் மாடு­களை, குதி­ரை­களை பலி­யி­டும் வழக்­கம் கொண்­டி­ருந்­தார்­கள். அவர்­கள் வழி­பாட்டு பாடல்­க­ளாக வேதங்­களை உரு­வாக்­கி­னார்­கள். இவர்­க­ளது யாகம் போன்ற நம்­பிக்­கை­களை மறுத்து புத்­தம், சம­ணம், அஜீ­வ­கம் உள்­ளிட்ட சிர­மண மதங்­கள் தோன்­றின.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">சிர­மண மதங்­களை எதிர்­கொண்ட ஆரி­யர்­கள் யாகங்­களை கைவிட்டு தங்­களை மறு­த­க­வ­மைப்பு செய்­து­கொண்­டார்­கள். வேதங்­க­ளில் மையப்­ப­டுத்­தப்­பட்ட கட­வுள்­களை மாற்றி, பிரம்மா, விஷ்ணு, சிவன் என்ற மும்­மூர்த்­தி­களை மையப்­ப­டுத்­திய புரா­ணங் ­களை எழு­தி­னார்­கள். ராமா­யண, மகா­பா­ரத இதி­கா­சங்­களை உரு­வாக்­கி­னார்­கள். வர்­ணாஸ்­ரம தர்­மங்­களை வகுத்த தர்ம சாஸ்­தி­ரங்­களை எழு­தி­னார்­கள். இவற்­றுள் முக்­கி­ய­மா­னது மனு தர்ம சாஸ்­தி­ரம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">வர்ண தர்ம கோட்­பாட்­டில் பிரா­ம­ணர்­களே உயர்ந்­த­வர்­கள். சத்­தி­ரி­யர்­கள் இரண்­டாம் நிலை; வைசி­யர்­கள் மூன்­றாம் நிலை. இவர்­க­ளுக்­கெல்­லாம் சேவை செய்­ப­வர்­கள் சூத்­தி­ரர்­கள் என்ற நான்­காம் வர்­ணத்­தி­னர். இந்த நால்­வர்­ணத்­திற்கு வெளி­யே­தான் விலக்­கப்­பட்ட அவர்­ணர்­கள். இந்த கோட்­பாட்டை நிலை­நி­றுத்த மறு­பி­ற­விக் கோட்­பாட்டை உரு­வாக்­கி­னார்­கள். ஒரு­வர் செய்த பாவ, புண்­ணி­யம்­தான் அவ­ரு­டைய அடுத்த பிற­வியை தீர்­மா­னிக்­கும். பாவம் செய்­த­வர்­க­ளுக்கு தண்­ட­னை­தான் அவர்­கள் சூத்­தி­ரர்­க­ளாக, அவர்­ணர்­க­ளாக பிறப்­பது என்று ஒரு மிகப்­பெ­ரிய மூட­நம்­பிக்­கையை உரு­வாக்­கிப் பரப்­பி­னார்­கள். பல்­வேறு வர­லாற்­றுக் கார­ணங்­க­ளால் வெற்­றி­யும் பெற்­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இப்­போ­தும் நீங்­கள் மக்­கள் பேச்­சில் “போன ஜென்­மத்­தில் என்ன புண்­ணி­யம் செய்­தேனோ உங்­க ­ளுக்கு மக­னா­கப் பிறந்­தேன்” “முற்­பி­ற­வி­யில் என்ன பாவம் செய்­தேனோ உங்­க­ளுக்கு மக­ளா­கப் பிறந்­தேன்” என்­றெல்­லாம் கூறு­வ­தைக் கேட்­க­லாம். மக்­கள் மன­தில் இறை நம்­பிக்கை, மறு­ஜென்­மக் கோட்­பாடு, நால்­வர்­ணக் கோட்­பாடு எல்­லாம் ஒன்­றோ­ டொன்று கலந்­து­விட்­டன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">பெரி­யார் முத­லில் இறை­நம்­பிக்­கையை மறுக்க வேண்­டும் என்று நினைக்­க­வில்லை. அவர் வர்ண தர்ம பிரி­வி­னையை, ஏற்­றத்­தாழ்வை நீக்க வேண்­டும் என்­று­தான் நினைத்­தார். பல சீர்­தி­ருத்­த­வா­தி­க­ளும் நினைத்­தார்­கள். வைக்­கம் போராட்­டம், சேரன்­மா­தேவி குரு­குல பிரச்­சினை ஆகி­ய­வற்­றில் பெரி­யார் எப்­படி பார்ப்­ப­னர்­கள் தங்­கள் மூட நம்­பிக்­கை­யில், வர்ண தர்ம கோட்­பாட்­டில் தீவி­ர­மாக இருக்­கி­றார்­கள் என்­ப­தைக் கண்­டார். சனா­தன தர்­மம் என்று இந்த மூட நம்­பிக்­கை­க­ளுக்கு பெயர் வைத்து அத­னைக் காப்­ப­தற்­காக பல சங்­கங்­க­ளைக் கூட பார்ப்­ப­னர்­கள் உரு­வாக்­கி­னார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இத­னால்­தான் பெரி­யார் இறை நம்­பிக்­கை­யி­லி­ருந்து அனைத்­தை­யும் கேள்வி கேட்க வேண்­டும் என்று முடிவு செய்­தார். பகுத்­த­றிவு என்­பது எதை­யும் கேள்வி கேட்­கா­மல் ஏற்­கக் கூடாது என்­ப­து­தான். உல­கம் முழு­வ­துமே நவீன காலத்­தில் மனி­தர்­கள் எதை­யும் சிந்­த­னைக்கு உட்­ப­டுத்­தா­மல் ஏற்­கக் கூடாது என்ற பகுத்­த­றிவு நோக்கு பர­வி­யது. பெரி­யார் இந்­தி­யா­வில் யாரும் செய்­யத் துணி­யாத அளவு எல்லா புனி­த­வாத உரு­வ­கங்­க­ளை­யும் கேள்வி கேட்­டார். மக்­க­ளை­யும் கேட்­கச் சொன்­னார். அவர் 1929-ஆம் ஆண்டு திருச்­சி­யில் நிகழ்த்­திய சொற்­பொ­ழிவு, திரா­வி­டன் தின­ச­ரி­யில் பிர­சு­ர­மா­னது, ஆனை­முத்து அவர்­கள் தொகுத்த பெரி­யார் சிந்­த­னை­க­ளில் இடம் பெற்­றுள்­ளது. அதில் அவர் கூறு­வது தெளி­வைத் தரும்:</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">சாதி வித்­தி­யா­சத்தை ஒழிக்க முற்­ப­டு­கை­யில், மத­மென்­பது ஒழிந்து போகு­மே­யா­னால் அந்த மதம் நமக்கு வேண்­டாம். அது இப்­போதே அழிந்து போகட்­டும். மதத்தை பொசுக்­கும்­போது வேத­மும் பொசுங்­கிப் போவ­தாக இருந்­தால், அந்த வேதம் என்­பது இப்­போதே வெந்து போகட்­டும். வேதத்தை ஓட்­டும்­போது கட­வு­ளும் ஓடி­வி­டு­வா­ரென்­றால் அந்த கட­வு­ளும் இப்­போதே ஓடி­வி­டட்­டும். அப்­பேர்ப்­பட்ட கட­வுள் நமக்கு வேண்­டவே வேண்­டாம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">சாதி வித்­தி­யா­சத்தை ஒழிப்­ப­து­தான் அவ­ருக்­கும், பகுத்­த­றி­விற்­கும் முக்­கி­யம். அதற்கு இடை­யூ­றாக புனி­த­வாத மையங்­க­ளும், மூட நம்­பிக்­கை­க­ளும் வரு­வ­தால்­தான் அவற்­றை­யும் கேள்­விக்கு உள்­ளாக்க வேண்­டிய அவ­சி­யம் வரு­கி­றது. இந்த அடிப்­படை புரி­தலை அவர் பல­முறை விளக்­கி­யுள்­ளார். கட­வுள் மறுப்­பு­தான் முக்­கி­ய­மென்­றால் அனைத்து ஜாதி­யி­ன­ரும் அர்ச்­ச­க­ரா­க­லாம் என்ற கோரிக்­கையை வைக்க வேண்­டி­ய­தில்­லையே. எனவே பெரி­யா­ரின் கட­வுள் மறுப்­பென்­பது மூட நம்­பிக்கை டிரோன்­களை வெளிப்­ப­டுத்­தும் புனித வாத அயர்ன் டோம்­க­ளையே தாக்­கு­வ­து­தான். மூட நம்­பிக்கை டிரோன்­கள் பகுத்­த­றிவை நோக்கி வர­வில்­லை­யென்­றால் அயர்ன் டோமை தாக்க வேண்­டிய அவ­சி­ய­மில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">தி.மு.க வெளிப்­ப­டுத்­திய புரி­தல்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ஒரு பகுத்­த­றிவு இயக்­க­மாக பெரி­யார் மக்­க­ளின் சுதந்­திர சிந்­த­னையை தூண்­டு­வ­தற்­காக கட­வுள் மறுப்பை முன்­வைத்­தார். வெகு­ஜன கட்­சி­யாக மக்­கள் ஆத­ரவை திரட்ட முற்­பட்ட தி.மு.க,  தேர்­தல் களத்­தி­லும் ஈடு­பட்­ட­போது, மக்­க­ளி­டம் வேரூன்­றி­யுள்ள கட­வுள் நம்­பிக்­கையை, புனி­த­வாத மையங்­களை முற்­றி­லும் நிரா­க­ரிப்­பது சாத்­தி­ய­மில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அத­னால் அண்ணா ஜாதி மறுப்பு பகுத்­த­றி­விற்கு, மூட நம்­பிக்கை எதிர்ப்­பிற்கு உகந்த வகை­யில், திரு­மூ­ல­ரின் வாக்­கி­ய­மான “ஓன்றே குலம், ஒரு­வனே தேவன்” என்ற கூற்றை கட்­சி­யின் பார்­வை­யா­கக் கூறி­னார். மனித குலம் என்­பது சாராம்­சத்­தில் ஒன்­று­தான் என்­ப­தும், அத்­த­கைய மனித குலத்­தின் மூல சக்தி என்­ப­தும் எத்­தனை வடி­வங்­க­ளில் வழி­பட்­டா­லும், வழி­ப­டா­விட்­டா­லும் ஒன்­றா­கத்­தான் இருக்க முடி­யும் என்­ப­தும் பொருள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">கலை­ஞர் இன்­ன­மும் எளி­மை­யாக பரா­சக்தி வச­னத்­தில் “கோயில்­கள் கூடாது என்­ப­தல்ல; கோயில்­கள் கொடி­ய­வர்­க­ளின் கூடா­ர­மாக இருக்­கக் கூடாது” என்று எழு­தி­னார். தி.மு.க மதச்­சார்­பின்மை, மத நல்­லி­ணக்­கம் ஆகி­ய­வற்­றையே வலி­யு­றுத்­தி­யது.அதே சம­யம் மதத்­தின் பெய­ரால் மூட நம்­பிக்­கை­களை பின்­பற்­று­வ­தை­யும் விமர்­சித்­தது. ஜாதீ­யம், பெண்­ண­டி­மைத்­த­னம் என பல சனா­தன பார்ப்­ப­னீய புனி­த­வாத சிந்­த­னை­களை முற்­றி­லும் நிரா­க­ரித்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">மேலும் ஆரிய புராண, இதி­கா­சக் கற்­ப­னை­க­ளில்  அரக்­கர்­கள் என்று வர்­ணிக்­கப்­பட்­ட­வர்­கள் ஆரி­யர்­க­ளு­டன் முரண்­பட்டு மோதிய இந்­தி­யா­வின் பூர்­வ­ கு­டி­கள் என்­பது பல ஆய்­வா­ளர்­கள் ஏற்­றுக்­கொண்ட கருத்து. அத­னால் புராண இதி­கா­சங்­க­ளின் அடிப்­ப­டை­யில் இன்று பொதுப் பண்­டி­கை­க­ளாக அரக்­கர்­கள் கொல்­லப்­பட்­டதை கொண்­டா­டு­வ­தாக அமைந்­த­வற்றை தி.மு.க தலை­வர்­கள் அங்­கீ­க­ரிப்­ப­தில்லை. குறிப்­பாக தீபா­வளி தமிழ் பண்­டிகை அல்ல என்­பது அவர்­க­ளது கொள்கை சார்ந்த நோக்கு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அதே சம­யம் தமிழ்­நாட்­டில் தழைத்த சைவம், வைண­வம் ஆகி­ய­வற்­றின் முற்­போக்­கான கூறு­களை தி.மு.க அங்­கீ­க­ரிக்­கும். உதா­ர­ண­மாக ஜாதி வேற்­று­மையை எதிர்த்த வைணவ இறை­யா­ளர் ராமா­னு­ஜர்குறித்து கலை­ஞரே தொலைக்­காட்சி தொடர் ஒன்­றினை எழுதி, அதனை கலை­ஞர் தொலைக்­காட்­சி­யில் வெளி­யிட்­டார். ராமா­னு­ஜர் மதத்­தில் புரட்சி செய்த மகான் என்று குறிப்­பிட்­டார். அதற்­காக திருப்­பதி கோயில் தேவஸ்­தா­னத்­தி­லி­ருந்து ஒரு குழு வந்து அவ­ருக்கு மரி­யாதை செய்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இந்­திய வெகு­ஜன அர­சி­ய­லில் பார்ப்­ப­னீய, ஜாதீய உள­வி­யல் இந்­திய பெருந்­தே­சிய சொல்­லா­ட­லு­டன் பிணைந்­துள்­ளது. அவை­யெல்­லாம் புனி­த­வாத அயர்ன் டோமாக உள்­ளன. அதனை எதிர்த்து அர­சி­யல் செய்­யும் தி.மு.க, அதுவே தமிழ்­நாட்­டில் திரா­வி­ட-­த­மி­ழர் என்ற தன்­னு­ணர்­வின் வர­லாற்று விசை­யாக இருந்­தா­லும் எல்லா காலங்­க­ளி­லும் எதிர்­நீச்­சல் போடும் தேவை ஏற்­ப­டு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">புனி­த­வாத மூட­நம்­பிக்­கை­க­ளின் மதச்­சார்­பற்ற மாற்­றாக கதா­நா­யக நட்­சத்­திர வழி­பாடு அமை­கி­றது. நட்ச த்திர நடி­கர்­க­ளின் கட்-­அ­வுட்­டிற்கு பால­ாபி­ஷே­கம் செய்­யப்­ப­டு­கி­றது. அத­னால் திரை நடிக பிம்ப அர­சி­யல் எப்­போ­தும் புனி­த­வாத மையங்­க­ளு­டன் தன்னை இணைத்­துக்­கொள்­வ­தை­யும் காண­லாம். புனி­தச் சடங்­கு­கள் அர­சி­ய­லாக மாறு­கின்­றன. அத­னை­யும் சேர்த்­தே­தான் தி.மு.க-. வின் பகுத்­த­றிவு அர­சி­யல்  எதிர்­கொள்ள வேண்­டும்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>