<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="22/05/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,39,490,1494" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="2"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Thu May 21 2026 12:25:02 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260522T000000+5.30" edition.name="CBE" edition.area="CBE" position.section="22052026-CBE-05" position.sequence="05" ex-ref="22052026-CBE-05.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#000000" boxBorderWeight="2">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="20">கோவை </lang>
	<lang class="3" style="Headline2"  font="Arial" fontStyle="Bold"  size="20">22.05.2026</lang>
	</hl2>
<hl1 id="Headline1" class="1" style="Headline1">
<lang class="3" style="Headline1"  font="Arial"  size="15">                                                  </lang>
</hl1>
       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup656456_05_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup656603_05_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="3" source="thalaivarnewf_05_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bramma" fontStyle="Regular" size="10.3">ஒ</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.3">ரு நாட்டில்  தனிநபர் கடன் தனியார்துறை கடன், ஒன்றிய அரசு கடன், மாநில அரசுகள் கடன் என பல வகையான கடன்கள் உண்டு. அதே போன்று வரி வருவாய், வரிசாரா வருவாய் தொடர்ந்து அரசுகளுக்கு வந்து கொண்டே இருக்கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.3">ஒரு வங்கியில் எந்த தனி நபரும் எவ்வித வருமானமும் இன்றி  கடன் வாங்க முடியாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.3">ஒரு வங்கி பல்வேறு வகை  கடன்களை பல்வேறு நபர்களுக்கு வழங்கும் போது கடன் வாங்குபவர்களின் சொத்து மதிப்பு, ஊதியம் வழியாக வரும் வருமானம் வணிகத்தின் வழியாக வரும் வருமானம் திருப்பி அளிக்கும் திறன் ஆகிய கூறுகளை ஆய்வு செய்யும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.3">இத்தகைய ஆவணங்களை சரி  பார்த்து பின்பு தான் கடன்களை வங்கிகள் வழங்குகின்றன.  கஜானாவில் எவ்வித வருவாய் இன்றி பொதுக்கடன்களை  அரசுகள் எழுப்ப முடியாது. கடன்களைப் பற்றி வரலாற்றில் பல அதிர்ச்சியான, சுவையான தகவல்கள் பரந்து கிடக்கின்றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.3">இத்தகவல்கள் அரசுகள் வாங்கிய கடன்களைப் பற்றி  அறிந்து கொள்வதற்கு ஏதுவாக உள்ளன. குறிப்பாக,   18ஆம் நூற்றாண்டிற்கு பிறகு தான் பல நாடுகளில் அரசுகள் கடன் வாங்கி பொது செலவினை மேற்கொண்டன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.3">பிரித்தானிய அரசு  இந்தியாவை ஆட்சி செய்த போது உருவாக்கியது தான் முதல்  அரசு கடனாகும். அதை தான் பொதுக் கடன் என்று இன்று குறிப்பிடுகிறோம். போர்கள் தான் பல நாடுகளில் பொதுக் கடன் பெருகுவதற்கு காரணமாக அமைந்தன. இன்றும் அதே  நிலை தான் தொடர்கின்றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.3">ஐரோப்பாவில் நடந்த போர்களுக்கும், இந்தியத் துணைக்கண்டத்தில் ஏகாதிபத்திய நாடுகள் நடத்திய போர்களுக்கும் செய்த  செலவினை இந்தியப் பொதுக்கடனாக மாற்றி பிரித்தானிய ஆட்சி இந்திய மக்களின் மீது வரிச்சுமையை ஏற்றியது .இன்றைய கடன் நாளைய வரி என்று பொது நிதியியல் நூல்களில் குறிப்பிடுவதுண்டு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.3">சான்றாக,  1765ஆம் ஆண்டு வங்கத்தில் காலூன்றி ஆதிக்கம் செலுத்திய  கிழக்கிந்தியக் குழுமம், இந்திய துணைக் 
கண்டத்தில் பிரெஞ்சுப் படையினருக்கும் இங்கிலாந்து படை யினருக்கும் நடந்த போர்  செலவினை அன்றைய வங்காள அரசு ஏற்கும்படி செய்தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.3">இப்படிப்பட்ட சுரண்டல் ஆதிக்க நிகழ்வை வங்காளத்தைச் சேர்ந்த பொருளாதார அறிஞர் ஆர்.சி.டட், “இந்தியா தனக்கான நிர்வாகச் செலவினையும் ஏற்றுக்கொண்டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.3">அடிக்கடி நடக்கும் போர்களுக்கும் இந்தியப் பகுதிகளைக் கைப்பற்றுவதற்கும் இந்தியத் துணைக்கண்டத்தின் வருவாயி லிருந்து எடுத்துதான் செலவு செய்யப்பட்டது” (India paid for her own administration; paid also for the frequent wars of conquest and annexation in India by R.C.Dutt, Economic History of India) என்று தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.3">1834இல் இந்தியாவின் கடன் அன்றைய பண மதிப்பில் 36.9 கோடி ரூபாயாகும். மேலும், ஆப்கானிஸ்தான், சிந்து, குவாலியர், இரண்டாம் பர்மா போர், இரண்டு முறை சீக்கியர்களுடன் நடைபெற்ற போர்கள் ஆகிவற்றுக்கான செலவினை அரசுக்  கடனாக மாற்றி இந்திய மக்களின்  மீது கடன் சுமையை பிரித்தானிய ஆட்சி ஏற்றியது.   1857இல் தொடங்கிய படைவீரர் புரட்சி (Mutiny)  காலத்தில் ஏற்பட்ட போர் செலவையும் சேர்த்ததனால் இக்கடன் தொகை ரூ.60 கோடியாக உயர்ந்தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.3">1861ஆம் ஆண்டில் இக்கடன் தொகை  ரூ.693 கோடியாக உயர்ந்தது.1947ஆம் ஆண்டில் இந்தியா விடுதலை அடைந்த போது, பாகிஸ்தான் பிரிந்த போது,  பிரித்தானிய கஜானாவில் நிதியும் கடனும் இருந்தது.  இவற்றை இரண்டு நாடுகளுக்கும் பங்கிடுவதற்கு ஒரு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.3">பிரிந்த பாகிஸ்தானுக்கு அன்றைய ரூபாய் மதிப்பில் 75 கோடியை கொடுக்க இந்தியா ஒப்புக்கொண்டது. சில மாதங்களுக்கு பிறகு காஷ்மீர் பகுதியில் பாகிஸ்தான் இந்திய போர் தொடங்கியது. அந்நேரத்தில்இந்தியா  இறுதி தவணையாக கொடுக்கவேண்டிய ரூபாய் 55 கோடியை உள் துறை அமைச்சர் படேல் தர மறுத்தார்.உத்தமர் காந்தி வகுப்பு கலவரத்தை தடுப்பதற்கு உண்ணாநிலை போராட்டத்தை தொடங்கினார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.3">அப்போது பாகிஸ்தானுக்கு கொடுக்க வேண்டிய மீதி தொகையை அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். நடுவண் அரசும் மீதி தொகையை பாகிஸ்தானுக்கு அளித்துவிட்டது. இது ஆர்.எஸ்.எஸ். கும்பலுக்கு கடும் கோபத்தை உண்டாக்கியது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.3">உத்தமர் காந்தியை ஏன் சுட்டேன் என்று ஆர்.எஸ்.எஸ். கொலைகாரன் கோட்சே பல காரணங்களை குறிப்பிட்டான். அதில் ஒன்று காந்தியார் பாகிஸ்தானுக்கு மீதி தொகையை காந்தி வலியுறுத்தியதும் ஒரு காரணம் என்று கோட்சே குறிப்பிட்டுள்ளான்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.3">இன்று வரை இந்தியா–பாகிஸ்தான் கஜானா நிதி கடன் பிரச்சினை தீரவில்லை. ஒன்றிய அரசின் 2023 ஆம் ஆண்டின் பொருளாதார ஆய்வு அறிக்கையில் கோட்சே பாணியில் பாகிஸ்தான் ரூபாய் 6300 கோடி  பழைய கடனை திருப்பி தர வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது. அதற்கு பாகிஸ்தான் இன்னும் இந்தியா கொடுக்க வேண்டிய பல ஆயிரம் கோடி ரூபாய் அளிக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.3">இவ்வாறு, அரசுக் கடனைப் பற்றியும், அரசு கஜானாவைப் பற்றியும் பல நிகழ்வுகளும் உண்டு. அவற்றிற்கு பல பரிமாணங்களும் உண்டு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.3">இன்றைய நரேந்திர மோடி ஆட்சியில் ஒன்றிய அரசு ஆண்டு தோறும் வாங்கி வருகிற கடன்கள் பல்மடங்காக பெருகிக் கொண்டே வருகிறது. குறிப்பாக, பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில்  அமைந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியை விட்டு விலகிய 2014ஆம் ஆண்டில் இந்தியாவின் மொத்த கடன் தொகை ரூபாய் 55 இலட்சம் கோடியாகும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.3">கடந்த 12 ஆண்டு காலமாக நரேந்திர மோடி தலைமையி லான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் தற்போது ரூபாய் 181.74 இலட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.3">இந்தியாவின் இந்த கடன் தொகையை கணக்கிடும் போது இந்தியாவினுடைய ரூபாய் மதிப்பையும் கணக்கிட வேண்டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.3">இந்தியா வெளிநாடுகளில் இருந்து பலவகைப் பொருட்களை இறக்குமதி செய்யும் போது அமெரிக்க டாலர் மதிப்பில்தான் வர்த்தகம் நடைபெறுகிறது. இச்சூழலில் ரூபாயின் மதிப்பு அமெரிக்காவின் ஒரு டாலருக்கு நிகராக 2013இல் ரூபாய் 54ஆக இருந்து 2026 மே 16 அன்று 96 ரூபாயாக வீழ்ச்சிய டைந்துள்ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.3">இதனால் நரேந்திர மோடி ஆட்சி இந்தியப் பொருளாதாரத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்நியச் செலாவணி இருப்பில் ஏற்பட்டு வரும் இழப்பைச் சரி செய்வதற்குதான் ஐந்து மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல்கள் முடிந்தவுடன் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையேற்றத்தை ஒன்றிய அரசு மேற்கொண்டுள்ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.3">இது போன்ற பல பொருளாதார சரிவுகள் தொடரும் நிலையில்  ஒன்றிய அரசின் நிதி அளவு சரிந்து,  கடன் அளவும் மேலும் உயர்வதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. இது போன்ற கடனை பற்றிய பல்வித விவாதங்கள் பல நாடுகளில் தொடர்கின்றன. சான்றாக  அமெரிக்காவின் (ஒன்றிய அரசு) கூட்டரசின் கடன் தொகை 2025 ஆம் ஆண்டில் நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தியில் 123 விழுக்காடு அளவு உயர்ந்து விட்டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.3">2023 ஆண்டின் புள்ளிவிவரங்கள் படி சீனா பல நாடுகளுக்கு கடனை அளித்துள்ளது. பல நாடுகளில் உள்ள அரசு, தனியார்களுக்கு 140 பில்லியன் டாலர் மதிப்பிற்கு கடன் அளித்துள்ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.3">இந்த மொத்த கடன் தொகையில் அமெரிக்கா தான் சீனாவிடமிருந்து அதிக கடனை வாங்கி உள்ள நாடாகும். இந்த மே திங்களில் 13ஆம் தேதி அன்று அமெரிக்க டிரம்ப் சீனா சென்றார். அமெரிக்கா கஜானா காலியாகி வருகிறது. எனவே நான் டிரம்பிடம் வர்த்தகம் தொடர்பாக  பேச மாட்டேன் என்று சீனத் தலைவர் ஜி பிங் கூறவில்லை. ஜப்பான் கடன் அளவு நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தி அளவைவிட 200 விழுக்காட்டிற்கு மேல் உயர்ந்து வருகிறது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.3">மற்ற நாடுகளுக்கு கடன் அளிக்கும் சீனாவின் கடன் அளவு நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தி அளவை விட 300 விழுக்காடு அளவிற்கு உள்ளது.  குழுமங்கள் வாங்கிய கடன் (Corporate Sector Debt) குடும்பங்களின் கடன் அளவு (Household Sector Debt) இதில் அடங்கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.3">இந்தியாவில் உள்ள மாநிலங்கள் வாங்கிய கடன் 2015–16இல் ரூபாய் 27 இலட்சம் கோடியாகும், 2023–24இல் ரூபாய் 84 இலட்சம் கோடியாக உயர்ந்தது. தமிழ்நாட்டின் கடன் அளவு 2026இல் ரூபாய் பத்து இலட்சம் கோடியாக உள்ளது. இந்த கடன் சுமை மாநிலத்தின் ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் 26.1 விழுக்காடு அளவே உள்ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.3">பா.ஜ.க. ஆளும்  உத்திரப் பிரதேசத்தின் கடன் அளவு 31 விழுக்காடாக உள்ளது. ஆந்திரப் பிரதேசத்தில் 37 விழுக்காடாக வும், பீகார் மாநிலத்தில் 35 விழுக்காடாகவும் உள்ளன.  ஆனால் இந்த மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு அளிக்கும் நிதிப்பகிர்வு தொடர்ந்து உயர்ந்துகொண்டே செல்கிறது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.3">சான்றாக, ஐந்து தென்னக மாநிலங்கள் இணைந்து ஒன்றிய அரசிடமிருந்து ஒட்டுமொத்தமாக 17 விழுக்காடு அளவிற்கு தான் ஒன்றிய அரசின் நிதிப் பகிர்வினைப் பெறுகின்றன. ஆனால், இந்த ஐந்து மாநிலங்களின் மொத்த கூட்டுத்தொகையான 17 விழுக்காட்டினை உத்திரப் பிரதேசம் மட்டுமே பெறுகிறது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.3">தமிழ்நாடு கடந்த ஐந்தாண்டு கால திமுக (2021–2026) ஆட்சியில் சிறந்த முறையில் நிதி மேலாண்மையை மேற்கொண்டு, பொருளாதார வளர்ச்சியை ஊக்குவித்ததால் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி 2024–25இல் 11.19 விழுக்காடாகவும், 2025–26ஆம் ஆண்டில் 10.83 விழுக்காடாகவும்  இருந்தது.  இந்த உயர் வளர்ச்சி சாதனையை எந்த இந்திய மாநிலமும் படைக்கவில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.3">மேலும், இந்திய அரசமைப்புச் சட்டத்தில் மாநிலங்கள் ஒன்றிய அரசு விதித்த வரம்பு எல்லையை மீறி கடன் பெறவே முடியாது. பிரித்தானிய ஆட்சியில் இந்தியர்கள் வளர்ந்துவிடக் கூடாது என்றும் தங்கள் கட்டுப்பாட்டிலேயே மாகாண அரசுகள் இருக்க வேண்டும் என்று ஆதிக்க மனப்பான்மையோடு மாநிலங்க ளுக்கு வரி, நிதி உரிமை களை 1919, 1935ஆம் அண்டுகளின் அரசமைப்புச் சட்டங்களில் போதிய அளவிற்கு வழங்கவில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.3">மேலும், 1935ஆம் ஆண்டு அரசமைப்புச் சட்டத்தில் மாகாண அரசுகள் கடனைப் பெற்று அதை வளர்ச்சிக்கான திட்டங்களில் முதலீடு செய்து  வளர்ந்துவிடக் கூடாது என்ற தீய நோக்கில் அரசமைப்புச் சட்ட விதிகளை பிரித்தானிய அரசு வகுத்தது. அதே பிரிவுகள்தான் இந்திய அரசமைப்புச் சட்டத்திலும் (1950) அப்படியே இணைக்கப்பட்டன.  இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 292, ஒன்றிய அரசு எவ்வித கட்டுப்பாடுமின்றி, தடையின்றி அதிக அளவில் கடன்களை எழுப்ப முடியும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.3">ஆனால், அரசமைப்புச் சட்டப்பிரிவுகள் பிரிவுகள் 293(3), 293(4)படி மாநில அரசுகள் ஒன்றிய அரசின் விதிகளுக்கு உட்பட்டே கடன்களை பெற முடியும். நிதிக்குழுக்கள் விதிக்கின்ற வரையறைகளை மீறி மாநிலங்கள் கடன்களின் அளவை உயர்த்த முடியாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.3">இந்திய நிதிப் பொறுப்புடைமை மற்றும் வரவு–செலவு மேலாண்மைச் சட்டத்தின்படி (Fiscal Responsibility and Budget Management (FRBM) Act, 2003) மாநிலங்கள் குறிப்பிட்ட அளவை மீறி கடன்களைப் பெற முடியாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.3">அதே நேரத்தில் பாஜக ஒன்றிய அரசு கடந்த 12 ஆண்டுகளில் பெரு முதலாளிகள் நடத்தும் நிறுவனங்களுக்கு 16 இலட்சம் கோடி அளவிற்கு  பொதுத் துறை வங்கிகளில் இருந்து வாங்கிய கடனை தள்ளுபடி செய்துள்ளது.  மேலும், மாநில அரசுகள் தங்களது நிதிப்பத்திரங்களை அளித்து வங்கிகளில் இருந்து உரிய கடன் பெறும் வாய்ப்பினை மாநில அரசுகளுக்கு தராமல், ஒன்றிய அரசு கடந்த 12 ஆண்டுகளாக தனியார் பெரு முதலாளித்துவ நிறுவனங்களுக்கு எவ்வித கட்டுபாடுகளையும் கடுமையான முறையில் பின்பற்றாமல் கடன் அளித்து நாட்டிற்கு பெரும் இழப்பினை ஏற்படுத்தி வருகிறது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.3">மேலும் இந்த தனியார் பெரு நிறுவனங்களுக்கு நேர்முக நிறுவன வருமான வரியை 2019இல் 30 விழுக்காட்டிலிந்து 22ஆக  குறைத்து பல இலட்சம் கோடி ரூபாய் ஒன்றிய அரசிற்கு வர வேண்டியவ வரி வருவாயை குறைத்துள்ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.3">இது போன்ற பல காரணங்களால்  தனது நிதி வருவாயை இழந்த  ஒன்றிய அரசு மாநிலங்களுக்கு  வழங்கும் நிதிப்பகிர்வையும் தொடர்ந்து குறைத்து கொண்டே வருகிறது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.3">ஆனால், திமுக ஆட்சி  அமையும் போதெல்லாம் சரியான பொருளாதார நிதியியல் காரணிகளை ஆய்ந்து சிறந்த வகையில் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவித்து, அத்திட்டங்களின் பயன்களை ஏழை, எளியோர் ஏற்றம் பெற வழிவகை செய்ததை நோபல் பரிசுப் பெற்ற அமெர்தியா சென் உட்பட  பல பொருளாதார அறிஞர்கள் பாராட்டியுள்ளனர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.3">இந்தியாவின் ஒட்டுமொத்த  பொருளாதார வளர்ச்சி 6 விழுக்காட்டினை ஒன்றிய அரசு எட்டுவதற்கே திணறிக் கொண்டிருந்த போது ,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.3">சிறந்த நிதி மேலாண்மையை கடந்த ஐந்தாண்டுகளாக  மேற்கொண்டு பொருளாதார வளர்ச்சியையும், புதுமையான சமூக நலத்திட்டங்கள் வழியாக ஏழை, எளியோர் வாழ்வில் ஏற்றம் பெற செய்த நமது தலைவர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தலைமையில் சிறப்பாக செயல்பட்ட திமுக அரசு எங்கே?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.3">பொருளாதார, நிதி அமைப்புகள் அரசமைப்புச் சட்ட விதிகள் அதன் நடைமுறைகள் போன்ற எவற்றையும் தெரிந்து கொள்ளாமல், புரிந்து கொள்ளாமல்,  குறை கூறும் நோக்கில் கஜானா காலி என்று எழுதிக்கொடுத்த சினிமா வசனத்தை முதல்வர்  ஜோசப் விஜய் பேசியது அறியாமையின் உச்சமா? இதுதான் தூய ஆட்சியின் தொடக்கமா?</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>