<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="22/05/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="502,71,957,1040" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="2"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Fri May 22 2026 03:43:15 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260522T000000+5.30" edition.name="MDU" edition.area="MDU" position.section="22052026-MDU-03" position.sequence="03" ex-ref="22052026-MDU-03.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#000000" boxBorderWeight="2">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="27">காட்டுத் தீக்கான காரணங்கள் அறியப்படாமல் இருக்கலாம்; ஆனால்</lang>
	<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular"  size="27"> </lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="1_TAUN_Vairam" fontStyle="Regular" size="30">காட்டுத்தீ இயல்பாகவே அணைந்துவிடும் அல்லது அணைக்கப்படும்!</lang>
	</hl2>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup656244_03_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bramma" fontStyle="Regular" size="14.5">தி</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ராவிட முன்னேற்றக் கழகம் 1949–ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 17ஆம் நாள் திராவிட கழகத்திலிருந்து பிரிந்து பேரறிஞர் அண்ணாவால் உருவாக்கப்பட்டது என்பது வரலாறு. திராவிட முன்னேற்றக் கழகம் ஒரு இயக்கமாக என்றைக்கும் இயங்கிக் கொண்டிருக்க வேண்டும் என்ற தொலைநோக்குச் சிந்தனையில்தான், பேரறிஞர் அண்ணா அவர்கள் கழகக் கட்டமைப்பைப் பொருத்த மாக உருவாக்கினார். பேரறிஞர் அண்ணாவின் மறைவிற்குப் பின்னர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் கழகக்கோட்டையை வலுப்படுத்தினார்–பாதுகாத்தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">கழகம் தொடங்கி 18 ஆண்டுகால நிறைமுடிவில் தமிழ்நாட்டின் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று பேரறிஞர் அண்ணா அவர்கள் தலைமையில் தி.மு.க. ஆட்சி அமைந்தது. பேரறிஞர் அண்ணாவின் குறுகியகால ஆட்சியில் மூன்று முக்கிய சமுதாய – அரசியல் மாற்றங்களைப் பிரதிபலிக்கும் சட்டங்களை உருவாக்கினார்கள். சுயமரியாதை திருமண அங்கீகாரத்திற்கான சட்டம், தமிழ்–ஆங்கிலம் என்ற இருமொழிக் கொள்கைக்கான சட்டம், சென்னை மாகாணம் என்பதை மாற்றி “தமிழ்நாடு” என்று பெயர் சூட்டிய சட்டம். இந்த மூன்று சட்டங்கள் என்றும் மறக்க முடியாத–மறைக்க முடியாத வரலாற்றுப் பதிவுகளாகும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">பேரறிஞர் அண்ணாவின் மறைவிற்குப் பின்னர் முதலமைச்சர் பொறுப்பேற்று ஆட்சி அமைத்த முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் பட்டியலின–பிற்படுத்தப்பட்ட சமூகங்க ளின் கல்வி – வேலை வாய்ப்புகளில் ஒதுக்கீடு கள், விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் “சமத்துவ புரங்கள்”, மாநில சுயாட்சிக் கான குழுவமைத்து, அவர்களது அறிக்கையினை ஆவணப்படுத்தி, மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என்ற கோட்பாட்டை இந்திய ஒன்றியத்தில் அடங்கிய அனைத்து மாநிலங்களிலும் விழிப்புணர்ச்சியை உருவாக்கினார். ஜனநாய கத்தைப் பாதுகாக்கும் வகையில், இந்திரா காந்தியின் அவசரகால நிலைமைப் பிரகடனத்தை எதிர்த்து முறியடித்தார். இப்படி எழுதிக்கொண்டே போகலாம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">முத்தமிழறிஞர் கலைஞரின் மறைவிற்குப் பின்னர், முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் கழகத்தை வளர்த்ததோடு கால மாற்றங்களை எதிர்கொள்ளும் வகையில் “திராவிட மாடல்” ஆட்சி முறையை திட்டமிட்டு “எல்லோருக்கும் எல்லாம்” என்ற சமூகநீதிக் கோட்பாட்டின் அடிப்படை யில், கல்வி–சுகாதாரம்–பெண்ணுரிமை ஆகிய உரிமைகள், வாய்ப்புகள், வசதிகள் ஆகியவை அடித்தட்டு மக்களுக்கும் எளிதில் கிடைக்கும் வகையில், சட்டங்களையும், திட்டங்களையும் உருவாக்கி வரலாற்றுச் சாதனை படைத்தார்கள். இந்திய ஒன்றியமே வியப்புற்று வியந்து பாராட்டும் அளவிற்கு இந்திய அரசியல் அரங்கத்தில் உயர்ந்து நின்றார் – இனியும் நிற்பார் என்பதில் கிஞ்சிற்றும் ஐயமில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">கடந்த காலங்களில் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி, அதிகாரங்களைப் பெற்ற நிலையில், தமிழ்நாட்டு மக்களுக்கு சாதித்துக் காட்டிய சாதனைகள் என்பது அளப்பரியது. இந்த சாதனைகளையும் கடந்து, உலகிலேயே மிகப்பெரிய “ஜனநாயக நாடு” எனக் கருதப்படும் இந்திய ஒன்றியத்தில், ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய அளவில் சோதனை உருவாக்கப்பட்ட காலகட்டத்தில் இந்திய அளவில் மிகப்பெரிய போராட்டக் களங்களை அமைத்து இந்திய ஜனநாயகத்தைக் காப்பாற்றிய பேரியக்கம் திராவிட முன்னேற்றக் கழகம் என்பது இந்திய வரலாற்றில் விரிவாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ஆங்கிலேயரிட மிருந்து விடுதலைப் பெற்ற இந்திய ஒன்றியப் பகுதியிலுள்ள மாநிலங்கள் தன்னாட்சி பெற்ற மாநிலங்களாகவும், மத்தியில் கூட்டாட்சியாகவும் அமைந்து செயல்பட உரிய அரசியல் அதிகாரப் பகிர்வு வேண்டும் என்கின்ற அனைத்து மாநிலங்களுக்கான போராட்டத்தை முன்னெடுத்து தொடர்ந்து அந்தப் போராட்டத்திற்கு நாடு முழுவதும் வலிமை சேர்த்துக் கொண்டிருக்கும் இயக்கம்தான் திராவிட முன்னேற்றக் கழகம் என்பதை யாராலும் எளிதில் மறந்துவிட முடியாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இந்திய ஒன்றியத்தில் சமூக அவலங்களை அடியோடு ஒழிக்க வேண்டும். தமிழ்நாட்டில் ஏற்றத்தாழ்வற்ற சமத்துவ சமுதாயம் உருவாக்கப்பட வேண்டும் என்பதன் தொடக்கமாக அனைத்து சமூக பிரிவினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டத்தை நிறைவேற்றி அமல்படுத்திய சமூகப் புரட்சியாளர்கள் இயக்கம் தான் தி.மு.க.!!  இங்குள்ள தமிழர்களுக்கு மட்டுமல்லாமல் உலகளாவிய தமிழர்களுக்கும் குறிப்பாக, இலங்கை வாழ் தமிழர்களின் அனைத்து கோரிக்கைகளுக்கும் துணை நின்றதோடு அதற்கான களத்தை தமிழ்நாட்டில் அமைத்துக் கொடுத்து அதற்கு விலையாக திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சியையே பறி கொடுத்தது என்பதோடு, இந்திய நாட்டின் ஜனநாயகத்தைக் காப்பதற்காகவும் திராவிட முன்னேற்றக் கழகம் தன் ஆட்சியை விலையாகக் கொடுத்தது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னணித் தலைவர்க ளும், தொண்டர்களும் பல்லா யிரக்கணக்கில் பலமுறை சிறை சென்று தமிழ் மக்களின் உரிமைகளைக் காத்த இயக்கம் என்பதை தமிழ்ப் பெருங்குடி மக்கள் இனியாவது எண்ணிப் பார்க்க வேண்டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">நம் தாய்த்தமிழ் மொழி காக்க இந்தித்திணிப்பை எதிர்த்து, தங்கள் தேக்குமர தேகங்களில் தீயிட்டுக் கொண்டு மாண்ட வரலாற்றை உலகம் வியக்க உருவாக்கியவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தீரர்கள் என்பதை இன்றைய இளைஞர்களுக்கு நினைவுபடுத்துவது ஒவ்வொருவரது தலையாயக் கடமையாகும். இப்படி குருதி தோய்ந்த தியாக வரலாறு உலக வரலாற்றில் சில இயக்கங்களுக்குத்தான் உண்டு என்பதையும் இந்த கட்டுரையின் மூலம் தெரிவிக்க விரும்புகிறேன். இங்கு நான் தெரிவித்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் சாதனைகளின் பெருவெள்ளத்தின் சிறுதுளிகள் மட்டும்தான் என்பதை நினைவுபடுத்த விரும்புகிறேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">எனவே திராவிட முன்னேற்றக் கழகம் எத்தகைய அரசியல் சூழ்நிலைகள் உருவானாலும் அதனை எதிர்கொண்டு சந்திக்கும், சமாளிக்கும், வெற்றி கொள்ளும் என்பது மட்டும் உறுதி. காட்டில் உருவான பெரும்நெருப்பிற்கு காரணங்கள் அறியப்படாமல் இருக்கலாம். ஆனால், அந்த காட்டுத்தீ இயல்பாகவே அணைந்துவிடும் அல்லது அணைக்கப்படும் என்பது மட்டும் உறுதி.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இந்த உணர்வோடும் உணர்ச்சியோடும் நமது இயக்க வழித்தடத்தில் குறுக்கிடும் நச்சுக்கொடிகள் அடையாளம் கண்டு அப்புறப்படுத்திவிட்டு திராவிட இயக்கத்தின் வழித்தோன்றல் வழிகாட்டும் தலைவர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தலைமையில் புதிய உணர்வோடும், உத்வேகத்தோடும் அணி வகுப்போம்! வெற்றி காண்போம் வாரீர்!!</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>