<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="23/05/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="386,499,957,1499" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Sat May 23 2026 03:30:56 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260523T000000+5.30" edition.name="CBE" edition.area="CBE" position.section="23052026-CBE-02" position.sequence="02" ex-ref="23052026-CBE-02.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="28">கண்டு கொள்ளாத த.வெ.க. ஆட்சி!</lang>
	</hl4>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="24">‘ராயல் என்பீல்டு’ நிறுவனம் ரூ.2500 கோடியில் ஆந்திராவில் முதலீடு!</lang>
	<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="24"> </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="61">தமிழகத்தில் தொடர்ந்து பறிபோகும் தொழில் முதலீடுகள்!</lang>
	</hl3>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="Maruthuphoto_02_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="2" source="maruthu_02_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">சென்னை, மே 23 –</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">ஏற்­க­னவே ரூ.1500 கோடி மதிப்­பி­லான போர் விமான உற்­பத்தி திட்­டம் ஆந்­திரா சென்ற நிலை­யில், தற்­போது மேலும் ரூ.2500 கோடி­யி­லான ராயல் என்­பீல்டு நிறு­வ­ன­மும் ஆந்­திரா சென்­றி­ருப்­பது தமி­ழ­கத்­துக்கு பெரும் பின்­ன­டை­வாக பார்க்­கப்­ப­டு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">மேலும் அர­சு­டன் முதற்­கட்ட பேச்­சு­வார்த்தை நடத்­தக் கூட தொழில் நிறு­வ­னங்­கள் தயக்­கம் காட்­டு­வ­தாக தக­வல் வெளி­யா­கி­யுள்­ளது. தமி­ழ­கத்­தில் புதிய ஆட்சி மாற்­றம் ஏற்­பட்டு, தமி­ழக வெற்­றிக் கழ­கம் ஆட்­சிப் பொறுப்­பேற்­றுள்ள தற்­போ­தைய சூழல், புதிய முத­லீட்­டா­ளர்­கள் மத்­தி­யில் சில கேள்­வி­களை எழுப்­பி­யுள்­ள­தா­கப் பேச்­சுக்­கள் எழு­கின்­றன. தற்­போ­தைய தொழில்­துறை அமைச்­ச­ராக கீர்த்­தனா இருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">தி.மு.க. ஆட்­சி­யில் புதிய நிறு­வ­னங்­கள் தொழில் தொடங்க வேண்­டும் என்­றால் இந்­தி­யா­வி­லேயே முத­லில் தேர்ந்­தெ­டுக்­கும் மாநி­ல­மா­கத் தமி­ழ­கம் இருந்­தது. ஆனால் தற்­போது ‘முத­லீட்­டா­ளர்­க­ளின் நம்­பிக்கை மாநி­லம்’ என்ற முக­வ­ரிக்கு சவால்­கள் எழத் தொடங்­கி­யுள்­ளன. த.வெ.க. அரசு பதவி ஏற்ற நேரத்­தில் ஓசூ­ரில் தொடங்­கு­வ­தற்கு திட்­ட­மி­டப்­பட்டு அனைத்­துப் பணி­கள் முடிந்­த ­நி­லை­யில், ரூ.1500 கோடி மதிப்­பி­லான போர் விமான உற்­பத்தி திட்­டம் ஆந்­தி­ரா­வுக்கு சென்­றது. இத­னால் 10 ஆயி­ரத்­துக்­கும் மேற்­பட்­ட­வர்­க­ளின் வேலை­வாய்ப்பு பறி­போ­னது. இது குறித்து புதிய த.வெ.க. அரசு கண்­டு­கொள்­ள­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">இது ஒரு­பு­றம் இருக்க தற்­போது2வது பெரிய தொழிற்­சாலை திட்­ட­மும் ஆந்­தி­ரா­வுக்கு சென்று விட்­டது. இரு­சக்­கர வாகன உற்­பத்­தி­யில் உல­க­ள­வில் தனித்த அடை­யா­ளம் பெற்­றுள்ள ராயல் என்­பீல்டு நிறு­வ­னம் தனது அடுத்த கட்ட பெரிய முத­லீட்டை தமிழ்­நாட்­டி­லி­ருந்து ஆந்­தி­ரப் பிர­தே­சத்­திற்கு மாற்­றி­யி­ருப்­பது, அர­சி­யல் மற்­றும் தொழில்­துறை வட்­டா­ரங்­க­ளில் தீவிர விவா­தத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. ஆந்­தி­ரப் பிர­தே­சத் ­தின் திருப்­பதி அரு­கி­லுள்ள தாடா பகு­தி­யில் புதிய கிரீன்­பீல்டு உற்­பத்தி ஆலையை அமைக்க ராயல் என்­பீல்டு நிறு­வ­னம் திட்­ட­மிட்­டுள்­ளது. சுமார் ரூ.2500 கோடி மதிப்­பி­லான இந்த முத­லீடு பல கட்­டங்­க­ளாக செயல்­ப­டுத்­தப்­பட உள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">நிறு­வ­னத்­தின் எதிர்­கால சந்­தைத் தேவை­கள் மற்­றும் உற்­பத்தி விரி­வாக்­கத் திட்­டங்­க­ளின் அடிப்­ப­டை­யில் இந்த முடிவு எடுக்­கப்­பட்­டுள்­ள­தாக தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன. இதற்கு முன்பு, கடந்த பிப்­ர­வரி மாதத்­தில் தமிழ்­நாட்­டின் திரு­வண்­ணா­மலை மாவட்­டம் செய்­யாறு பகு­தி­யில் இயங்கி வரும் ராயல் என்­பீல்டு ஆலையை விரி­வு­ப­டுத்த ரூ.958 கோடி முத­லீடு செய்­யப்­ப­டும் என்று அறி­விக்­கப்­பட்­டி­ருந்­தது. அந்த விரி­வாக்­கம் நிறை­வேற்­றப்­பட்­டால், நிறு­வ­னத்­தின் மொத்த ஆண்டு உற்­பத்­தித் திறன் 20 லட்­சம் இரு­சக்­கர வாக­னங்­க­ளாக உய­ரு­மென எதிர்­பார்க்­கப்­பட்­டது. தற்­போது உள்ள உற்­பத்­தித் திறன் 14.6 லட்­சம் யூனிட்­க­ளாக இருந்து, அது முழு பயன்­பாட்டை எட்­டி­யி­ருப்­ப­தாக கூறப்­ப­டு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">ஆனால், தற்­போது 2வது நிறு­வ­ன­மான சுமார் ரூ.2500 கோடி­யி­லான பெரிய முத­லீடு தமிழ்­நாட்­டிற்கு வரா­மல் ஆந்­தி­ரா­விற்கு சென்­றுள்­ளது. ‘தொழில்­துறை வளர்ச்­சி­யில் முன்­னணி மாநி­லம்’ என்ற தமிழ்­நாட்­டின் நிலை தற்­போது பாதிக்­கப்­ப­டு­கி­றதா என்ற கேள்­வி­யும் எழுந்­துள்­ளது. தமி­ழ­கத்­தில் புதிய ஆட்சி அமைந்த பின்­னர், முத­லீட்­டா­ளர்­க­ளி­டையே ஒரு வகை­யான காத்­தி­ருப்பு மன­நிலைஉரு­வா­கி­யுள்­ள­தாக தொழில்­துறை வட்­டா­ரங்­கள் கூறு­ கின்­றன. குறிப்­பாக, கொள்­கைத் தெளிவு, நிர்­வா­கத் தொடர்ச்சி, அனு­மதி நடை­மு­றை­கள் மற்­றும் முத­லீட்­டா­ளர்­க­ளு­டன் நேரடி தொடர்பு போன்ற அம்­சங்­க­ளில் தி.மு.க. ஆட்சி காலத்­தில் இருந்த உறுதி தற்­போது குறைந்­துள்­ள­தாக சில பொரு­ளா­தார நிபு­ணர்­கள் கருத்து தெரி­விக்­கின்­ற­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">தி.மு.க. ஆட்­சிக் காலத்­தில், கொரோனா போன்ற கடி­ன­மான சூழ்­நி­லை­யி­லும் தமி­ழ­கத்தை தொழில் முத­லீட்­டிற்கு ஏற்ற மாநி­ல­மாக முன்­னி­றுத்த பல உல­க­ளா­விய முத­லீட்டு மாநா­டு­கள், துரித அனு­மதி திட்­டங்­கள் மற்­றும் வெளி­நாட்டு முத­லீட்­டா­ளர்­க­ளு­டன் நேரடி பேச்­சு­வார்த்­தை­கள் நடை­பெற்­றன. அதன் விளை­வாக மின்­சார வாக­னங்­கள், மின்­னணு உற்­பத்தி, ஏற்­று­மதி சார்ந்த தொழில்­கள் உள்­ளிட்ட பல துறை­க­ளில் தமி­ழ­கம் முன்­னிலை பெற்­றது. ஆனால் தற்­போது, புதிய அர­சி­யல் மாற்­றங்­க­ளுக்­குப் பிறகு, புதிய நிர்­வா­கத்­தின் செயல்­தி­றன் எப்­படி இருக்­கும் என்ற கேள்வி முத­லீட்­டா­ளர்­க­ளி­டையே எழுந்­துள்­ள­தாக கூறப்­ப­டு­கி­றது. இத­னால் சில நிறு­வ­னங்­கள் தமி­ழக அர­சு­டன் முதற்­கட்ட பேச்­சு­வார்த்­தைக்­குக் கூட முன்­வ­ரா­மல் இருப்­ப­தாக தக­வல்­கள் பரவி வரு­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">ராயல் என்­பீல்­டின் புதிய ஆந்­திரா திட்­டம் மூலம் சுமார் 15,000 நேரடி மற்­றும் மறை­முக வேலை­வாய்ப்­பு­கள் உரு­வா­கும் என மதிப்­பி­டப்­ப­டு­கி­றது. அந்த வாய்ப்பு தமிழ்­நாட்­டி­லி­ருந்து நழு­விச் சென்­றுள்­ளது. இதற்­கி­டையே கடந்த இரு தினங்­க­ளுக்கு முன்­பும், சுமார் ரூ.1500 கோடி மதிப்­பி­லான போர் விமான உற்­பத்தி தொடர்­பான திட்­டம் ஓசூ­ரி­லி­ருந்து ஆந்­தி­ரா­விற்கு மாற்­றப்­பட்­டது குறிப்­பி­டத்­ தக்­கது. தமி­ழக வெற்­றிக் கழ­கத்­தின் தலை­மை­யி­லான புதிய அரசு மாற்­றம் என்ற கோஷத்­து­டன் ஆட்­சிக்கு வந்த நிலை­யில், தற்­போது தொழில்­துறை முத­லீ­டு­கள் வெளி­யே­று­கின்­றன என்ற குற்­றச்­சாட்­டு­கள் எழு­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">குறிப்­பாக இளை­ஞர்­க­ளுக்­கான வேலை­வாய்ப்பு, தொழில்­துறை விரி­வாக்­கம்மற்­றும் வெளி­நாட்டு முத­லீடு போன்ற முக்­கிய அம்­சங்­க­ளில் அரசு தெளி­வான திட்­டங்­களை அறி­விக்க வேண்­டிய அவ­சி­யம் ஏற்­பட்­டுள்­ளது. வரி­சை­யாக தொழில் நிறு­வ­னங்­கள் ஆந்­திரா செல்­வதை தடுப்­ப­தற்­கான வழி­களை தொழில்­துறை அமைச்­சர் கீர்த்­தனா எடுக்­கா­மல் கண்­டு­கொள்­ளா­மல் இருப்­ப­தாக விமர்­ச­ னங்­கள் எழுந்­துள்­ளன. புதிய முத­லீ­டு­களை ஈர்க்க அரசு எந்த அள­வுக்கு தீவி­ர­மாக செயல்­ப­டு­கி­றது என்ற கேள்­வி­கள் எழு­கின்­றன.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>