<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="23/05/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,596,493,1240" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="4"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Fri May 22 2026 14:21:57 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260523T000000+5.30" edition.name="CBE" edition.area="CBE" position.section="23052026-CBE-03" position.sequence="03" ex-ref="23052026-CBE-03.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="21">ஆட்சி மாற்­றத்­தால் காட்­சி­கள் மாறும் அபா­யம்! 20 ஆண்­டு­கால காத்­தி­ருப்பு வீண்!</lang>
	<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="21"> </lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="35">திருப்­பூ­ரில் 95% பணி­கள் முடிந்­தும் – முடங்­கும் மேம்­பாலப் பணி­கள்! </lang>
	</hl2>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     
     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">திருப்­பூர், மே 23–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">ஆட்சி மாற்­றத்­தால் காட்­சி­கள் மாறும் அபாய நிலை ஏற்­பட்­டுள்­ளது. 20 ஆண்­டு­கால காத்­தி­ருப்பு வீண், திருப்­பூ­ரில் 95% மேம்­பால பணி­கள் முடிந்­தும் முடங்­கும் நிலை­யில் உள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">திருப்­பூர் மாந­க­ரில் நாளுக்கு நாள் அதி­க­ரித்து வரும் போக்­கு­வ­ரத்து நெரி­ச­லுக்கு தீர்வு காணும் வகை­யில் கடந்த 2006ம் ஆண்டு நடை­பெற்ற திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தின் தலை­மை­யி­லான முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் அவர்­க­ளின் ஆட்­சி­யில் மங்­க­லம் சாலை­யி­லி­ருந்து அணைப்­பா­ளை­யம், கல்­லூரி சாலை வழி­யாக சிறு­பூ­லு­வ­பட்டி பகு­தியை இணைக்­கும் வகை­யில் நொய்­யல் ஆற்­றின் குறுக்கே உயர்­மட்ட பாலம், ரயில் தண்­ட­வா­ளத்­தின் குறுக்கே மேம்­பா­லம் கட்ட திட்­ட­மி­டப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இந்த திட்­டத்­திற்­காக ரூ.6.50 கோடி மதிப்­பீடு செய்­யப்­பட்­டது. நிலம் கைய­கப்­ப­டுத்­து­வ­தில் ஏற்­பட்ட பல்­வேறு சட்ட போராட்­டங்­கள் மற்­றும் நீதி­மன்ற வழக்­கு­கள் கார­ண­மாக இந்த திட்­டம் நீண்ட காலம் கிடப்­பில் போடப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இத­னைத்­தொ­டர்ந்து கடந்த 2017ம் ஆண்டு நடை­பெற்ற அ.தி.மு.க. ஆட்­சி­யில் திட்ட மதிப்­பீடு ரூ.19.29 கோடி­யாக உயர்த்­தப்­பட்டு, மீண்­டும் கட்­டு­மான பணி­கள் விறு­வி­றுப்­பாக தொடங்­கின. அதன் படி, நொய்­யல் ஆற்­றின் குறுக்கேஉயர்­மட்ட பால­மும், ரயில் வழித்­த­டத்­தின் குறுக்கே மேம்­பா­ல­மும் கட்டி முடிக்­கப்­பட்­டா­லும், இந்த மூன்­றை­யும் இணைக்­கும் இறுதி கட்ட இணைப்­புச்­சாலை பணி­கள் மட்­டும் தொடர்ந்து இழு­ப­றி­யா­கவே நீடித்து வந்­தன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">கழ­கத் தலை­வர், முத்­து­வேல் கரு­ணா­நிதி ஸ்டாலின் அவர்­க­ளின் தலை­மை­யி­லான திரா­விட முன்­னேற்­றக் கழக அரசு ஆட்சி அமைந்த உடன் மேற்­கொள்­ளப்­பட்ட தொடர் நட­வ­டிக்­கை­கள் கார­ண­மாக 2024ம் ஆண்டு பாலம் கட்­டு­மான பணிக்­கான நிலம் எடுப்பு தொடர்­பான அனைத்து வழக்­கு­க­ளை­யும் நீதி­மன்­றம் தள்­ளு­படி செய்து நெடுஞ்­சாலை துறைக்கு சாத­க­மாக தீர்ப்பு</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">வழங்­கி­யது. இத­னைத் தொடர்ந்து விடு­பட்ட பணி­களை விரைந்து நிறைவு செய்ய கூடு­த­லாக ரூ.22 கோடி நிதி ஒதுக்­கீடு செய்­யப்­பட்டு, கடந்த சில மாதங்­க­ளாக பணி­கள் நடை­பெற்று வந்­தன. நொய்­யல் ஆற்­றின் மேலே உயர்­மட்ட மேம்­பா­லம், ரயில் தண்­ட­வா­ளத்­தின் மேல் கட்­டப்­பட்ட மேம்­பா­லத்­து­டன் இணைப்பு சாலை­கள் இணைக்­கப்­பட்டு சிறு­பூ­லு­வப்­பட்­டியை இணைக்­கக்­கூ­டிய பகு­தி­யில் மட்­டும் சில பணி­கள் கிடப்­பில் உள்­ளது. 95 சத­வீத பணி­கள் முழுமை அடைந்­துள்­ளது. கல்­லூ­ரி­சாலை ஏறத்­தாழ 95 சத­வீத பணி­கள் முடிந்து விரை­வில் பொது­மக்­க­ளின் பயன்­பாட்­டிற்­கு­வ­ரும் என்று எதிர்­பார்க்­கப்­பட்ட நிலை­யில், தற்­போ­தைய ஆட்­சி­மாற்­றம் கார­ண­மாக மீத­முள்ள 5 சத­வீத பணி­கள் எவ்­வித முன்­னேற்­ற­மும் இன்றி திடீ­ரென கிடப்­பில் போடப்­பட்­டுள்­ள­தாக கூறப்­ப­டு­ 
கி­றது. இத­னால் 20 ஆண்­டு­கால காத்­தி­ருப்பு வீணா­குமோ? என்ற அச்­சம் நில­வு­கி­றது. உட­ன­டி­யாக முடித்து பயன்­பாட்­டிற்கு கொண்டு வரும் பட்­சத்­தில் ஏற்­க­னவே முத்­து­வேல் கரு­ணா­நிதி ஸ்டாலின் அவர்­க­ளின் தலை­மை­யில் இருந்த திரா­விட மாடல் அர­சுக்கு பெயர் கிடைத்­து­வி­டும் என்ற நோக்­கத்­திற்­காக காலம் தாழ்த்­தப்­ப­டு­வ­தாக அர­சி­யல் கட்­சி­யி­னர் குற்­றம் சாட்­டு­கின்­ற­னர். இத­னால், மாந­க­ரின் போக்­கு­வ­ரத்து நெரி­சலை குறைக்க கொண்­டு­வ­ரப்­பட்ட திட்­டம் இறு­திக்­கட்­டத்தை எட்­டி­யும் மக்­கள் பயன்­பாட்­டிற்கு வரா­மல் முடங்கி கிடப்­பது திருப்­பூர் மக்­க­ளி­டையே பெரும் ஏமாற்­றத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">பருவ மழைக்கு முன் திறக்­கப்­ப­டுமா? முன்­னெச்­ச­ரிக்கை அவ­சி­யம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">அணைப்­பா­ளை­யம் நொய்­யல் ஆற்­றின் தரைப்­பா­லத்­திற்கு பதி­லாக உயர்­மட்ட மேம்­பா­லம் கட்டி முடிக்­கப்­பட்டு இருந்­தா­லும், ரயில்வே மேம்­பா­லத்­து­டன் இணைப்­ப­தற்­கான சில பணி­கள் முடி­வ­டை­யா­மல் இருப்­ப­தால் உயர்­மட்ட பால­மும் பயன்­ப­டுத்­தப்­பட முடி­யா­மல் உள்­ளது. தென்­மேற்கு பருவ மழை தொடங்கி மழைப்­பொ­ழிவு அதி­க­ரித்­தால் நொய்­யல் ஆற்­றில் வெள்­ளப்­பெ­ருக்கு ஏற்­ப­டும்­போது அணைப்­பா­ளை­யம் தரைப்­பா­லம் மூழ்கி போக்­கு­வ­ரத்து பாதிக்­கக்­கூ­டிய சூழல் உள்­ளது. எனவே, அதற்கு முன்­ன­தாக உயர்­மட்ட பாலத்தை பொது­மக்­கள் பயன்­பாட்­டிற்கு கொண்­டு­வர வேண்­டும் என­வும் வலி­யு­றுத்­து­கின்­ற­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">திருப்­பூர் மாந­க­ரில் புதி­தாக தேர்ந்­தெ­டுக்­கப்­பட்­டுள்ள சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­கள் மக்­கள் அதி­கம் கூடும் பொது இடங்­க­ளுக்கு சென்று. வெறும் விளம்­பர நோக்­கோடு ஆய்வு செய்­வது போல ரீல்ஸ் வீடி­யோக்­கள் எடுத்து சமூக வலை­த­ளங்­க­ளில் பதி­வி­டு­வ­தி­ லேயே அதிக ஆர்­வம் காட்டி வரு­கின்­ற­னர். அத்­த­கைய விளம்­பர மோகத்தை கைவிட்டு, கடந்த கால திரா­விட மாடல் ஆட்சி காலத்­தில் மக்­க­ளின் நல­னுக்­கா­க­வும், போக்­கு­வ­ரத்து சிர­மங்­களை போக்­கு­வ­தற்­காக கொண்டு வரப்­பட்ட முக்­கிய திட்­டங்­களை விரைந்து முடித்து, பொது­மக்­க­ளின் பயன்­பாட்­டிற்கு கொண்டு வரு­வ­தில் மக்­கள் பிர­தி­நி­தி ­கள் உண்­மை­யான அக்­க­றை­யு­ட­னும் கவ­னத்­து­ட­னும் செயல்­பட வேண்­டும். குறிப்­பாக அணை­பா­ளை­யம் மேம்­பால பணி­களை ஆய்வு செய்து உட­ன­டி­யாக முடித்து பயன்­பாட்­டிற்கு கொண்­டு­வர சம்­பந்­தப்­பட்­ட­து­றை­யி­ன­ரு­டன் ஆய்வு கூட்­டங்­களை நடத்த வேண்­டும் என கோரிக்கை விடுத்­துள்­ள­னர்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>