<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="23/05/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="501,346,958,1064" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="4"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Sat May 23 2026 03:50:37 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260523T000000+5.30" edition.name="VLR" edition.area="VLR" position.section="23052026-VLR-03" position.sequence="03" ex-ref="23052026-VLR-03.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular" size="21">சென்னை மற்­றும் புற­ந­கர்ப் பகு­தி­க­ளில்  </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="35">அறி­விக்­கப்­ப­டாத மின்­வெட்­டால் மக்­கள் அவதி:  </lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="25">த.வெ.க. எம்.எல்.ஏ.க்களை முற்­று­கை­யிட்டு போராட்­டம்!</lang>
	</hl4>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     
     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">சென்னை, மே 23–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">சென்னை மற்­றும் புற­ந­கர் பகு­தி­க­ளில் அறி­விக்­கப்­ப­டாத மின்­வெட்­டால் மக்­கள் அவ­தி­யுற்ற நிலை­யில் த.வெ.க. எம்.எல்.ஏ.க்களை முற்­று­கை­யிட்டு போராட்­டம் நடத்­தி­ய­தால் பர­ப­ரப்பு ஏற்­பட்­டது. தமிழ்­நாட்­டின் தலை­ந­க­ரான சென்­னை­யில் கோடை வெயி­லின் தாக்­கம் நாளுக்கு நாள் அதி­க­ரித்து வரும் நிலை­யில், சென்னை மற்­றும் அதன் புற­ந­கர் பகு­தி­க­ளில் அறி­விக்­கப்­ப­டாத தொடர் மின்­வெட்டு மற்­றும் நள்­ளி­ரவு நேர மின்­த­டை­க­ளால் பொது­மக்­கள் நரக வேத­னையை அனு­ப­வித்து வரு­கின்­ற­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">மின்­சார வாரி­யத்­தின் முறை­யற்ற திட்­ட­மி­டல் மற்­றும் த.வெ.க. ஆட்­சி­யின் அலட்­சிய போக்கே இந்த நிலைக்கு கார­ணம் என பொது­மக்­கள் மத்­தி­யில் கடும் கொந்­த­ளிப்பு ஏற்­பட்­டுள்­ளது. சென்­னை­யில் கடந்த சில வாரங்­க­ளா­கவே வெயி­லின் தாக்­கம் உச்­சத்­தில் உள்­ளது. பகல் நேரத்­தில் சுட்­டெ­ரிக்­கும் வெயி­லால் மக்­கள் வீடு­க­ளுக்­குள் முடங்­கி­யி­ருக்­கும் நிலை­யில், பல மணி நேரம் மின்­தடை ஏற்­ப­டுத்­தப்­ப­டு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">“பரா­ம­ரிப்­புப் பணி­கள்” என்ற பெய­ரில் பகல் முழு­தும் மின்­சா­ரத்தை நிறுத்­தும் வாரி­யம், இரவு நேரங்­க­ளி­லும் திடீர் திடீ­ரென 4 முதல் 5 மணி நேரம் மின்­வி­நி­யோ­கத்தை துண்­டித்து வரு­கி­றது. இத­னால், பகல் முழு­வ­தும் உழைத்­து­விட்டு இர­வில் நிம்­ம­தி­யாக தூங்­க­லாம் என்று நினைக்­கும் நடுத்­தர மற்­றும் அடித்­தட்டு மக்­கள், நள்­ளி­ர­வில் மின்­சா­ர­மின்றி, புழுக்­கத்­தில் தூக்­கத்­தைத் தொலைத்து தவித்து வரு­கின்­ற­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">குறிப்­பாக, குழந்­தை­கள், கர்ப்­பி­ணி­கள் மற்­றும் முதி­ய­வர்­கள் இந்த அவ­சர கால சூழ­லில் பெரும் அவ­திக்­குள்­ளாகி வரு­கின்­ற­னர். குறிப்­பாக, கடந்த இரண்டுநாட்­க­ளாக திரு­வொற்­றி­யூர், தண்­டை­யார்­பேட்டை, ராய­பு­ரம், எண்­ணூர், வேளச்­சேரி, மது­ர­வா­யல், போரூர், அய்­யப்­பன்­தாங்­கல் உள்­ளிட்ட பகு­தி­க­ளில் இரவு நேரங்­க­ளில் தொடர் மின்­வெட்டு ஏற்­பட்­டன. மின்­வா­ரிய அதி­கா­ரி­களை தொடர்பு கொண்­டால் பேச மறுப்­ப­தாக மக்­கள் குற்­றச்­சாட்டை முன்­வைத்­த­னர். இதில் திரு­வொற்­றி­யூர் பகு­தி­யில் பொது­மக்­கள் நேர­டி­யாக மின்­வா­ரிய நிலை­யத்­திற்கு சென்று முற்­று­கை­யிட்டு போராட்­டம் நடத்­தி­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இதை­ய­றிந்ததிரு­வொற்­றி­யூர் த.வெ.க. எம்.எல்.ஏ செந்­தில் குமார் நேரில் வந்­தும் ஒரு பய­னும் இல்லை. எம்.எல்.ஏ போன் செய்­தும் மின்­வா­ரிய உயர் அதி­கா­ரி­கள் யாரும் அழைப்பை எடுக்­கா­மல் இருக்க கொதித்­தெ­ழுந்த மக்­கள் அவரை வார்த்­தை­க­ளால் ஷாக் அடைய வைத்­த­னர். இது ஒரு­பு­றம் நடக்க ராய­பு­ரத்­தில் சாலை­யில் போராட்­டத்­தில் இறங்­கிய மக்­களை சமா­தா­னப்­ப­டுத்த வந்த எம்.எல்.ஏ ராமு­வி­டம் இதற்கு தான் த.வெ.க.விற்கு ஓட்டு கேட்­டீங்­களா.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">ஆட்­சிக்கு வந்த 10 நாட்­கள் கூட ஆகல 5 நாள் கரண்ட் கட் பண்­ணீட்­டாங்க என கேள்வி கணை­கள் அவர் மீது மக்­கள் தொடுத்­த­னர். பொது­வாக ஒவ்­வொரு ஆண்­டும் கோடை­கா­லத்­தில் மின்­சார தேவை அதி­க­ரிக்­கும் என்­பது அர­சுக்­கும் மின்­சார வாரி­யத்­திற்­கும் அப்­பட்­ட­மாக தெரிந்த விஷ­யமே. தற்­போது ஏசி மற்­றும் மின்­வி­சி­றி­க­ளின் பயன்­பாடு அதி­க­ரித்­துள்­ள­தால் மின்­சுமை தாங்­கா­மல் மின்­மாற்­றி­கள் வெடிப்­ப­தும், கேபிள்­கள் பழு­த­டை­வ­தும் தொடர்­க­தை­யாகி உள்­ளது. இது அர­சின் கவ­னக்­கு­றைவு என­வும், மின் தேவையை கணிப்­ப­தில் அரசு தவ­றி­
விட்­ட­தா­க­வும் விமர்­ச­னம் எழுந்­துள்­ளன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இந்த தொடர் மின்­வெட்டு கார­ண­மாக சிறு, குறு தொழில்­கள், கடை­கள் மற்­றும் வணிக வளா­கங்­கள் கடு­மை­யா­கப் பாதிக்­கப்­பட்­டுள்­ளன. மின்­சா­ரத்தை மட்­டுமே நம்­பி­யி­ருக்­கும் தையல் கடை­கள், மாவு மில்­கள், கணினி மையங்­கள் போன்­ற­வற்­றின் அன்­றாட வரு­மா­னம் முடங்­கி­ 
யுள்­ளது. வணி­கர்­கள் தங்­க­ளின் வாழ்­வா­தா­ரத்தை இழந்து தவித்து வரு­கின்­ற­னர். தலை­ந­க­ரி­லேயே இந்த அவல நிலை என்­றால், மற்ற மாவட்­டங்­க­ளின் நிலை­மை­யைச் சொல்­லவே வேண்­டி­ய­தில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">ஆட்­சிக்கு வந்­த­வு­டன் 200 யூனிட் இல­வ­சம் என அறி­வித்த விஜய். முத­லில் மின்­சா­ரத்தை பயன்­ப­டுத்­தி­னால் தானே சலுகை கூட பெற­மு­டி­யும் அந்த மின்­சா­ரத்தை நுகர்­வோ­ருக்கு கொடுக்­க­மல் இருப்­பது எந்த வகை­யில் நியா­யம் என சமூ­க­வ­லை­த­ளத்­தில் கேள்­வி­கள் எழுப்­பப்­பட்டு வரு­கின்­றன. ரீல்ஸ் மோகத்­தில் மூழ்கி கிடக்­கும் இந்த ஆட்சி அதில் கொடுக்­கும் முக்­கி­யத்­து­வத்தை, மக்­க­ளின் அடிப்­படை தேவை­யான தடை­யில்லா மின்­சா­ரம் வழங்­கு­வ­தில் அரசு காட்ட வேண்­டும் என்­பதே ஒட்­டு­மொத்த சென்னை மக்­க­ளின் கோரிக்­கை­யா­க­வும், கண்­ட­ன­மா­க­வும் 
உள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11"> </lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">மின்­வெட்டை கண்­டித்து 
மக்­கள் முற்­றுகை:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">வண்­ணா­ரப்­பேட்டை காளிங்­க­ரா­யன் தெரு­வில் நேற்று முன்­தி­னம் பகல் முழு­வ­தும் மின்­சா­ரம் இல்­லா­மல் பொமக்­கள் கடும் அவ­திக்­குள்­ளா­யி­னர். இரவு நேரம் மின்­சா­ரம் வந்­து­வி­டும் என்று எதிர்­பார்த்த பொது­மக்­கள் ஏமாற்­றம் அடைந்­த­னர். இத­னால் ஆத்­தி­ர­ம­டைந்த 100க்கும் மேற்­பட்ட பொது­மக்­கள் சிமெட்ரி சாலை­யில் அமர்ந்து போராட்­டத்­தில் ஈடு­பட்­ட­னர். இத­னால் அப்­ப­கு­தி­யில் போக்­கு­வ­ரத்து பாதிப்பு ஏற்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இது­கு­றித்து தக­வல் அறிந்த வண்­ணா­ரப்­பேட்டை காவல் நிலைய போலீ­சார் சம்­பவ இடத்­திற்கு சென்று பொது­மக்­க­ளி­டம் சம­ர­சம் பேசி­னர். சம்­பவ இடத்­திற்கு வந்த ராய­பு­ரம் எம்­எல்ஏ தாமுவைபொது­மக்­கள் சூழ்ந்து கொண்டு உட­ன­டி­யாக மின்­சா­ரம் வழங்க வேண்­டும் என்று கோஷங்­கள் எழுப்­பி­னர். இத­னால் அங்கு பெரும் பர­ப­ரப்பு ஏற்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11"> </lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">மேட­வாக்­கத்­தில் 16 மணி ­நே­ரம் மின்­சா­ரம் துண்­டிப்பு</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">மேட­வாக்­கம் ஊராட்­சிக்­குட்­பட்ட, பெல் நக­ரில் ஐந்து தெருக்­கள் உள்­ளன. இதில் ஆயி­ரத்­துக்­கும் மேற்­பட்ட வீடு­க­ளில் 5 ஆயி­ரத்­திற்­கும் மேற்­பட்­டோர் வசித்து வரு­கின்­ற­னர். இங்கு கடந்த இரண்டு நாட்­க­ளாக மின் தடை ஏற்­பட்­டுள்­ளது. இத­னால் இப்­ப­குதி மக்­கள் காற்­றோட்­டம் இல்­லா­மல் தூங்கமுடி­யா­மல் அவ­திக்­குள்­ளாகி இருப்­ப­தாக கூறு­கின்­ற­னர். இது­
கு­றித்து அப்­ப­கு­தி­வா­சி­கள் கூறி­ய­தா­வது: மின்­வா­ரிய அலு­வ­ல­கத்­திற்கு போன் செய்­தால் அவர்­கள் போன் எடுத்து பதில் சொல்­வ­தில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">கடந்த 16 மணி நேரத்­திற்கு மேலாக மின்­சா­ரம் இல்­லா­மல் அவ­திப்­பட்டு வரு­கி­றோம். கோடை காலம் என்­ப­தால் தற்­போது மின்­சா­ரம் இல்­லா­மல் இருப்­பது மிக­வும் சிர­மமாக உள்­ளது. குறிப்­பாக குழந்­தை­கள் மற்­றும் முதி­ய­ 
வர்­கள் பெரி­ய­ள­வில் பாதிக்­கப்­பட்­ட­னர். இது மாதிரி அலட்­சிய போக்கை கைவிட்டு பொது­மக்­கள் நலன் கருதி மின்­வா­ரிய ஊழி­யர்­கள் செயல்­பட வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இவ்­வாறு அவர்கள் கூறி­னர்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>