<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="24/05/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="501,68,958,810" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="3"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Sun May 24 2026 03:38:34 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260524T000000+5.30" edition.name="CHN" edition.area="CHN" position.section="24052026-CHN-05" position.sequence="05" ex-ref="24052026-CHN-05.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="22">ஆய்வு நடத்தியும், அதிகாரிகளுக்கு அட்வைஸ் செய்தும் அத்துமீறும் த.வெ.க.வினர்!</lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="52"> கேலிக்கூத்தாக மாறி வரும் அரசு நிர்வாகங்கள்!</lang>
	</hl2>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     
     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.5">சென்னை, மே 24–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.5">த.வெ.க. ஆட்சி அமைந்த நிலை­யில் அரசு அலு­வ­ல­கங்­க­ளுக்­குள் புகுந்து த.வெ.க. வினர் ஆய்வு நடத்­தி­யும், அதி­கா­ரி­க­ளுக்கு அட்­வைஸ் செய்­தும் அத்­து­மீறி வரும் செயல் பொது­மக்­கள் மத்­தி­யில் கடும் அதி­ருப்­தியை ஏற்­ப­டுத்தி உள்ள நிலை­யில் அரசு நிர்­வா­கங்­கள் கேலிக்­கூத்­தாக மாறி உள்­ள­தாக விமர்­ச­னங்­கள் எழுந்­துள்­ளது. தமி­ழக சட்­ட­மன்­றத் தேர்­த­லில் தமி­ழக வெற்­றிக் கழ­கம் வென்று ஆட்­சி­யைப் பிடித்­துள்­ளது. அக்­கட்சி தலை­வர் விஜய் முதல்­வ­ராக பொறுப்­பேற்­றுள்­ளார். அவ­ரு­டன் சேர்த்து இது­வரை 35 பேர் அமைச்­சர்­க­ளாக பதவி ஏற்­றுள்­ள­னர். ஆட்சி அமைத்த நிலை­யில், த.வெ.­க.­வினர் தமிழ்­நாட்­டில் நடத்­தும் அலப்­ப­றை­கள் எல்லை மீறி சென்று கொண்­டி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.5">முழி பிதுங்கி நிற்­கும் தமிழ்­நாடு!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">த.வெ.­க.­வினர் என்ற ஒன்றை வைத்­துக் கொண்டு மக்­கள் பிர­தி­நி­தி­கள் செய்ய வேண்­டிய வேலை­களை இவர்­களே செய்ய தொடங்­கி­யி­ருப்­பது கேலிக் கூத்­தாக உள்­ளது. எம்.எல்.ஏ.க்கள் செய்ய வேண்­டிய பணி­களை த.வெ.­க.­வி­னர் என்ற பெய­ரில் அரசு அலு­வ­ல­கங்­க­ளில் புகுந்து ஆய்வு நடத்த வந்­துள்­ளோம் என்று வாக்­கு­வா­தம் செய்­வதை பார்த்­தால் சிரிப்­பதா அல்­லது அவர்­களை கண்­டிப்­பதா என தெரி­யா­மல் தமிழ்­நாடே தற்­போது விழி­ பிதுங்கி நிற்­கி­றது. த.வெ.­க.­ வி­ன­ரின் சமீ­பத்­திய நிகழ்­வு­களை பார்த்­தால், ‘குழந்­தை­களை காரில் அமர வைத்­தால் ஸ்டீரி­யங்கை திருப்பி விளை­யா­டு­வது’ போன்று இவர்­க­ளின் செயல்­கள் உள்­ள­தாக விமர்­சிக்­கப்­ப­டு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">குறிப்­பாக, அரசு அலு­வ­ல­கங்­கள் மற்­றும் மருத்­து­வ­ம­னை­க­ளில் ஆய்வு என்ற பெய­ரில் தவெ­க­வி­னர் அத்­து­மீறி வரு­வ­தாக புகார்­கள் எழுந்த வண்­ணம் உள்­ளது. ஓரி­டத்­தில் பிரச்­சினை என்­றால் சம்­பந்­தப்­பட்ட மாவட்ட எம்.எல்.ஏ., அமைச்­சர்­கள், மேயர், ஆட்­சி­யர், அரசு அதி­கா­ரி­கள் என ஆய்வு மேற்­கொள்ள இத்­தனை பேர் உள்­ள­னர். ஆனால் நாங்­க­ளும் அந்த பணி­களை செய்­வோம் என்று ஒவ்­வொரு மாவட்­டத்­தி­லும் த.வெ.­க­.வி­னர் கிளம்பி இருப்­பதை பார்க்­கும் போது தமிழ்­நாடு அர­சையே கேலிக் கூத்­தாக்­கி­யுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.5">வரம்பு மீறும் த.வெ.க.வினர்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">குறிப்­பாக, தென்­காசி மாவட்­டத்­தில் அரசு மருத்­து­வ­ம­னை­யில் த.வெ.க. மருத்­து­வ­ரணி என்ற பெய­ரில் டாக்­டர்­களுக்­கான கோட்டை போட்­டுக்­கொண்டு சிலர் ஆய்வு செய்­த­தும், கன்­னி­யா­கு­ம­ரி­யில் பேரூ­ராட்சி அலு­வ­ல­கத்­தில் சென்று த.வெ.­க.­வி­னர் அத்­து­மீறி ஆவ­ணங்­களை எடுத்­த­தும் காவல் நிலை­யம் வரை புகார் சென்­றுள்­ளது. அடுத்­த­தாக, அணைக்­கட்டு அரசு மருத்­து­வ­ம­னைக்­குள் த.வெ.க. மாவட்டச் செய­லா­ளர் மற்­றும் அவ­ரது ஆத­ர­வா­ளர்­கள் கும்­ப­லாக அத்­து­மீறி நுழைந்து, “நான் அமைச்­சர் அதி­கா­ரத்­திற்கு உரி­ய­வன்” என கூறி அதி­கா­ரி­களை மிரட்­டி­ய­தாக சர்ச்­சை­கள் எழுந்­தன. அதே­போன்று, கிருஷ்­ண­கிரி மற்­றும் பிற பகு­தி­க­ளில் நடந்த த.வெ.க. கொடி­யேற்று விழாக்­கள் மற்­றும் பொது நிகழ்ச்­சி­க­ளில் தொண்­டர்­கள் சிலர் வரம்பு மீறி நடந்து கொண்ட காட்­சி­கள் இணை­யத்­தில் பெரும் விவா­தத்தை ஏற்­ப­டுத்­தின.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">மேலும், பாரம்­ப­ரிய திரு­வி­ழாக்­க­ளில் த.வெ.­க.­வி­னர் கொடியை வைத்­துக்­கொண்டு செய்த அலப்­ப­றை­கள் தொடர்­பான வீடி­யோக்­க­ளும் ஊட­கங்­க­ளில் பர­வ­லா­கப் பேசப்­பட்­டன. அதோடு விட­ வில்லை, துணை சபா­நா­ய­க­ராக தேர்வு செய்­யப்­பட்ட ரவி­சங்­கர் தான் பதவி ஏற்ற பின்பு தலைமைச் செய­ல­கத்­தில் உள்ள தனது அறைக்கு சென்­றார். அப்­போது அவ­ரது நண்­பர்­கள், துணை சபா­நா­ய­க­ரின் இருக்கை எவ்­வ­ளவு பாரம்­ப­ரி­ய­மிக்­கது என்­பதை கூட அறி­யா­த­வர்­க­ளாக அதன் மீது உட்­கார்ந்து ரீல்ஸ் எடுத்து வெளி­யிட்­ட­தும் கடும் கண்ட ­னத்­துக்­குள்­ளா­கி­யது. இவ்­வாறு த.வெ.க. நிர்­வா­கி­கள் சிலர் கட்­சி­யின் பெய­ரை­யும், தங்­க­ளின் புதிய பத­வி­க­ளை­யும் தவ­றா­கப் பயன்­படுத்தி அரசு அதி­கா­ரி­களை மிரட்­டு­வ­தும், பொது­மக்­க­ளுக்கு இடை­யூறு செய்­வ­தும் விமர்­ச­னத்­திற்­குள் ­ளாகி வரு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.5">விரை­வில் முற்­றுப்­புள்ளி!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">ஆட்­சிக்கு வந்து சில வாரங்­கள் 
மட்­டுமே நிறை­வ­டைந்த நிலை­யில் தொண்­டர்­க­ளின் அடா­வ­டிக்கு முதல்­வர் விஜய் முற்­றுப் புள்ளி வைக்க வேண்­டும் என்ற விமர்­ச­னங்­கள் சமூக வலை­த­ளங்­க­ளில் கொடி­கட்டி பறக்க தொடங்­கி­யுள்­ளது. இதன் எதி­ரொ­லி­யாக, தமி­ழக வெற்றி கழக (த.வெ.க.) தொண்­டர்­கள் மற்­றும் நிர்­வா­கி­கள் எல்லை மீறி நடந்து கொள்­ளும் சில சம்­ப­வங்­கள் சமூக வலைத்­த­ளங்­க­ளில் ‘அலப்­பறை’ என விமர்­சிக்­கப்­பட்டு வைர­லாகி வரு­கின்­றன. இந்­நி­லை­யில், அரசு விவ­கா­ரங்­ க­ளில் த.வெ.­க.­வி­னர் தலை­யி­டக்­கூ­டாது என்றுஅக்­கட்சியின் பொதுச் செய­லா­ளர் புஸ்ஸி ஆனந்த் அதி­ரடி உத்­த­ரவு பிறப்­பித்­தார். ஆனால் அவ­ரது அறி­வு­ரை­களை எந்த ஒரு த.வெ.­க.­வி­ன­ரும் 
கண்­டு­கொள்­ள­வில்லை என்­பதை இன்­னொரு சம்­ப­வ­மும் உறு­தி­ப­டுத்­தி­யுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">அதா­வது, சென்னை மாந­க­ராட்சி சோழிங்­க­நல்­லூர் 15வது மண்­ட­லக்­குழு அலு­வ­ல­கத்­தில் நேற்று முன்­தி­னம் மாதாந்­திர கூட்­டம் நடை­பெற்­றது. இது­போன்ற மாதாந்­திர கூட்­டத்­தில் மண்­ட­லக்­குழு தலை­வர், மாமன்ற உறுப்­பி­னர்­கள் மற்­றும் துறை சார்ந்த சென்னை மாந­க­ராட்சி அதி­கா­ரி­கள் கலந்­து­கொள்­வது வழக்­கம். எந்த ஒரு அர­சி­யல் கட்­சி­யி­ன­ரும் கூட்­டத்­தில் கலந்­து­ கொள்­வ­தற்கு அனு­மதி இல்­லாத நிலை­யில், இந்த கூட்­டத்­தில் சோழிங்­க­நல்­லூர் எம்.எல்.ஏ. பி.சர­வ­ண­மூர்த்தி கலந்து கொண்­டார். அவ­ரு­டன் சேர்ந்து த.வெ.க. கட்­சி­யி­னர், கூட்­டம் நடை­பெ­றும் அரங்­கிற்­குள் உள்ளே புகுந்து ரீல்ஸ் எடுக்­கும் பணி­யில் ஈடு­பட்­ட­னர். அதே­போல் த.வெ.­க.­ கட்­சியைச் சேர்ந்த ஒரு­வர் மைக்­கில் சோழிங்­க­நல்­லூர் தொகுதி முழு­வ­தும் உள்ள சென்னை மாந­க­ராட்சி அதி­கா­ரி­களுக்கு அறி­வுரை வழங்­கி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.5">ரீல்ஸ்­ஸில் த.வெ.க. ஆட்சி!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">அரசு அதி­கா­ரி­கள், மாமன்ற உறுப்­பி­னர்­க­ளுக்­குள் நடை­பெ­றும் கூட்­டத்­தில் த.வெ.­க.­வினர் சுமார் 20க்கும் மேற்­பட்­டோர் அனு­ம­தி­யின்றி உள்ளே புகுந்து நாற்­கா­லி­யில் அமர்ந்து கொண்டு அதி­கா­ரி­கள் போன்று அதி­கா­ரம் செய்­த­னர். எம்.எல்.ஏ. ஒரு­வர் மண்­ட­லக்­குழுக் கூட்­டத்­திற்­குள் தனது ஆத­ர­வா­ளர்­களை அழைத்து சென்­ற­தும், அதி­கா­ரி­கள் நாற்­கா­லி­யில் அமர்ந்து கொண்டு அதி­கா­ரம் செய்­த­தும் சென்னை மாந­க­ராட்சி அதி­கா­ரி­கள் மற்­றும் மாமன்ற உறுப்­பி­னர்­கள் மத்­தி­யில் முகம் சுளிப்பை ஏற்­ப­டுத்­தி­யது. அரசு நிர்­வா­கத்­தில் த.வெ.­க.­ கட்­சி­யி­ன­ரின் இந்த தலை­யீடு மற்­றும் அத்­து­மீ­றல்­கள் பொது­மக்­கள் மத்­தி­யில் கடும் அதி­ருப்­தியை ஏற்­ப­டுத்தி வரு­வது குறிப்­பி­டத் ­தக்­கது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">தற்­போது த.வெ.­க.­வி­னர் தங்­களை எம்.எல்.ஏ.க்­க­ளா­கவே நினைத்­துக் கொண்டு ஆய்­வில் இறங்­கி­யுள்­ள­னர். இன்­னும் முதல்­வ­ரின் பணி­க­ளை­யும் அடுத்த சில நாட்­க­ளில் செய்­வ­தற்கு த.வெ.­க.­வி­னர் தயங்க மாட்­டார்­கள் என்ற கேலி கிண்­டல் இணை­தள மீம்ஸ்­கள் வைர­லாகி வரு­கி­றது. ஆட்­சிக்கு வந்து ஒரு சில வாரம் மட்­டுமே நிறை­வடைந்த நிலை­யில் தொண்­டர்­க­ளின் அடா­வ­டிக்கு முதல்­வர் விஜய் முற்­றுப் ­புள்ளி வைக்க வேண்­டும் என்­பதே பல­ரின் எதிர்­பார்ப்­பாக உள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.5">காற்­றில் பறந்த புஸ்ஸி உத்­த­ரவு!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">த.வெ.­க.­­வி­ன­ரின் அத்­து­மீ­றல்­களுக்கு முடிவு கட்­டும் வகை­யில், அரசு விவ­கா­ரங்­க­ளில் தவெ­க­வி­னர் தலை­யி­டக் கூடாது என்­றும், த.வெ.­க.­வி­னர் தங்­க­ளு­டைய எல்லை என்ன என்­பதை அறிந்து செயல்­பட வேண்­டும் என்­றும் மக்­கள் பிர­தி­நி­தி­கள் அல்­லா­தோர் அரசு சார்ந்த விவ­கா­ரங்­க­ளில் தலை­யி­டவோ, ஆய்­வு­களை மேற்­கொள்­ளவோ கூடாது என த.வெ.­க.­ பொதுச்­செ­ய­லா­ள­ரும், அமைச்­ச­ரு­மான புஸ்ஸி ஆனந்த் உத்­த­ர­விட்­டார். இவ்­வ­ளவு களே­ப­ரத்­துக்கு இடை­யில் அவர் உத்­த­ரவு போட்ட அடுத்த சில நிமி­டங்­க­ளில் அந்த உத்­த­ரவை மீறி கோவை பகு­தி­யில் த.வெ.­க.­ எம்.எல்.ஏ. ஒரு­வர் அதி­கா­ரி­களை தனது வீட்­டிற்கு வர­வ­ழைத்து ஆலோ­சனைக் கூட்­டம் நடத்­தி­யது பெரும் சர்ச்­சையை ஏற்­ப­டுத்­தி ­யுள்­ளது.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>