<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="24/05/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,151,958,1497" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Sun May 24 2026 00:11:04 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260524T000000+5.30" edition.name="MDU" edition.area="MDU" position.section="24052026-MDU-03" position.sequence="03" ex-ref="24052026-MDU-03.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="81">தமிழ்நாட்டை இருளில் மூழ்கடித்த த.வெ.க. அரசு!</lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="TAUN_Kurinji" fontStyle="Regular" size="30">மாநிலம் முழுவதும் மக்கள் கொந்தளிப்பு – போராட்டம்!</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="33">பெரம்பூர் தொகு­தி­யில் 2 நாளாக மின்­வெட்டு!</lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="33">முதி­ய­வர்­கள், கர்ப்­பி­ணி­கள் தவிப்பு!</lang>
	</hl4>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="Powercut1_03_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="2" source="aaaaCopy_03_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">சென்னை, மே 24 –</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">தலை­ந­க­ரான சென்னை, திரு­வள்­ளூர் மற்­றும் காஞ்­சி­பு­ரம் மாவட்­டத்­தில் கடந்த 3 நாட்­க­ளாக பல மணி நேரம் மின்­வெட்டு உரு­வா­கி­யுள்­ளது. இத­னால், ஆங்­காங்கே மக்­கள் போராட்­டம் நடத்தி வரு­கின்­ற­னர். ஆனால் பிரச்­சி­னையை தீர்க்­காத மின்­சா­ரத்­துறை அமைச்­சர் மற்­றும் அதி­கா­ரி­கள் அலட்­சி­ய­மாக இருப்­ப­தாக பொது­மக்­கள் பகி­ரங்­க­மாக குற்­றம் சாட்­டி­யுள்­ள­னர். சென்னை மற்­றும் அதன் புற­ந­கர் பகு­தி­க­ளில் கடந்த சில நாட்­க­ளாக கடு­மை­யான மின்­வெட்டு பிரச்னை ஏற்­பட்­டுள்­ளது. இத­னால், பொது­மக்­க­ளின் இயல்பு வாழ்க்கை முற்­றி­லு­மாக முடங்­கி­யுள்­ளது. கோடைக்­கால வெயி­லின் தாக்­கம் நாளுக்கு நாள் அதி­க­ரித்து வரும் வேளை­யில், அறி­விக்­கப்­ப­டாத இந்த மின்­தடை பொது­மக்­களை பெரும் துய­ரத்­திற்கு உள்­ளாக்­கி­யுள்­ளது.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">குறிப்­பாக நள்­ளி­ரவு நேரங்­க­ளில் ஏற்­ப­டும் தொடர் மின்­வெட்டு கார­ண­மாக குழந்­தை­கள், முதி­ய­வர்­கள் மற்­றும் நோயா­ளி­கள் தூக்­க­மின்றி தவித்து வரு­கின்­ற­னர். மின்­சா­ரம் எப்­போது வரும், எப்­போது போகும் என்று தெரி­யாத நிலை நீடிப்­ப­தால், மறு­நாள் வேலைக்­குச் செல்­வோர் கடு­மை­யான மன உளைச்­ச­லுக்கு ஆளா­கி­யுள்­ள­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இது ஒரு­பு­ற­மி­ருக்க, சிறு குறு தொழில்­கள், வணிக நிறு­வ­னங்­கள் மற்­றும் கணினி சார்ந்த அலு­வ­ல­கங்­கள் மின்­சா­ர­மின்றி முடங்­கி­ யுள்­ள­தால் பெரும் பொரு­ளா­தார இழப்பு ஏற்­பட்­டுள்­ளது. கோடைக் காலத்­தில் மின்­சா­ரத் தேவை வழக்­கத்தை விட அதி­க­ரிக்­கும் என்­பதை நன்கு அறிந்­தி­ருந்­தும், முதல்­வர் தலை­மை­யி­லான அர­சும் - மின்­வா­ரி­ய­மும் உரிய முன்­னெச்­ச­ ரிக்கை நட­வ­டிக்­கை­களை எடுக்க தவ­றி­விட்­ட­தா­கப் பொது­மக்­கள் குற்­றம் சாட்­டு­கின்­ற­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13.5">இருள் சூழ்ந்த சென்னை –</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13.5">சுற்­று­வட்ட மாவட்­டங்­கள்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">மின்­தடை குறித்­துப் பொது­மக்­கள் மின்­­வாரிய அலு­வ­ல­கங்­களை தொடர்பு கொண்டு புகார் அளிக்க முயன்­றால், முறை­யான பதில்­கள் அதி­கா­ரி­க­ளி­டம் இருந்து கிடைப்­ப­தில்லை என்­றும், தொலை­பேசி இணைப்­பு­கள் 
துண்­டிக்­கப்­ப­டு­வ­தா­க­வும் மக்­கள் வேதனை தெரி­விக்­கின்­ற­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">அதே­போல், தமி­ழக அர­சின் அதி­கா­ரப்­பூர்வ தொலை­பேசி மைய­மான மின்­ன­கத்­தில் புகார் அளித்­தா­லும் எந்­த­வித நட­வ­டிக்­கை­யும் எடுக்­கப்­ப­ட­வில்லை என குற்­றம்­சாட்­டி­யுள்­ள­னர். அதி­கா­ரி­கள் இப்­படி இருக்க மின்­சா­ரத்­துறை அமைச்­சர் நிர்­மல்­கு­மார் மின்­வெட்­டுக்கு கார­ணம் பரா­ம­ரிப்பு பணி தான் என சிம்­பி­ளாக பதில் கூறி­விட்டு கிளம்­பி­வி­டு­கி­றார். சென்னை மட்­டு­மின்றி திரு­வள்­ளூர், காஞ்­சி­பு­ரம் மாவட்­டங்­க­ளில் மின்­வெட்டு கார­ண­மாக இருள் சூழ்ந்­தன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இந்த சந்­தர்ப்­பத்தை பயன்­ப­டுத்தி கொலை மற்­றும் கொள்ளை கூட நிக­ழும் என அச்­சத்­தில் இருந்­து­வ­ரு­வ­தாக மக்­கள் குற்­றம ­சாட்­டு­கின்­ற­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13.5">மக்­கள் மறி­ய­லால்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13.5">ஸ்தம்­பித்த கொளத்­தூர்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">சென்னை கொளத்­தூர் சட்­ட­மன்ற தொகு­திக்கு உட்­பட்ட தாதா­குப்­பம் பகு­தி­யில் நள்­ளி­ர­வில் ஏற்­பட்ட மின்­த­டை­யால் பொது­மக்­கள் பாபா நகர் மூன்­றா­வது மெயின் ரோட்­டில் உள்ள மின்­வா­ரிய துணை மின் நிலை­யத்தை முற்­று­கை­யிட்டு கடும் வாக்­கு­வா­தத்­தில் ஈடு­பட்­ட­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இந்த நிலை­யில், மீண்­டும் கொளத்­தூ­ரில் கடு­மை­யான மின்­தடை ஏற்­பட்­டது. கொளத்­தூர் ராஜ­மங்­க­லம் காவல்­நி­லை­யத்­துக்கு உட்­பட்ட 200 அடி சாலை­யில் புழல் கடப்பா பகுதி மற்­றும் ரேவதி நகர் பகு­தி­யில் இரவு எட்டு மணி முதல் அடிக்­கடி மின்­சா­ரம் துண்­டிக்­கப்­பட்­டது. தொடர்ந்து மின்­சா­ரம் வழங்­கப்­ப­டா­த­தால் 
நள்­ளி­ரவு 2 மணிக்கு அப்­ப­குதி மக்­கள் செந்­தில்­ந­கர் போலீஸ் பூத் அருகே சாலை மறி­ய­லில் ஈடு­பட்­ட­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இதன் கார­ண­மாக சுமார் ஒரு கிலோ மீட்­டர் தூரத்­திற்கு வாக­னங்­கள் செல்­ல­மு­டி­யா­மல் போக்­கு­வ­ரத்து முற்­றி­லும் தடை­பட்­டது. இது­பற்றி தக­வல் கிடைத்­த­தும் ராஜ­மங்­க­லம் போலீ­சார் வந்து பொது­மக்­களை சமா­தா­னம் செய்ய முயற்சி செய்­த­னர். ஆனால் பொது­மக்­கள் மின்­வா­ரிய ஊழி­யர்­கள் வந்து பிரச்­சி­னையை சரி செய்­தால் மட்­டுமே இங்­கி­ருந்து செல்­வோம் என்று கூறி­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">‘‘தின­மும் வேலைக்கு சென்­று­விட்டு வீட்­டிற்கு வந்து நிம்­ம­தி­யாக தூங்க முடி­வ­தில்லை. தின­மும் குறைந்­த­பட்­சம் இரண்டு மணி நேர­மா­வது மின்­தடை ஏற்­ப­டு­கி­றது. இத­னால் மறி­யல் செய்­ய­வேண்­டிய நிலைமை ஏற்­பட்­டது’’ என்று மக்­கள் தெரி­வித்­த­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">திரு­வொற்­றி­யூர் விம்கோ நகர், பாரத் நகர், பார­தி­யார் நகர், அம்­பேத்­கர் நகர், ரங்­கம் நகர் உள்­ளிட்ட பகு­தி­க­ளில் நேற்று காலை முதலே பகல் வேளை­க­ளில் மின்­வெட்டு ஏற்­பட்­டது. நேற்று இரவு சுமார் 3 மணி நேரத்­திற்கு மேலாக மின் துண்­டிப்பு ஏற்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இத­னால் ஆத்­தி­ரம் அடைந்த பொது­மக்­கள், திரு­வொற்­றி­யூர் அஜாக்ஸ் பேருந்து நிலை­யம் அருகே உள்ள மின்­சார வாரிய அலு­வ­ல­கத்தை முற்­று­கை­யிட்டு ஊழி­யர்­க­ளி­டம் வாக்­கு­வா­தம் செய்­த­னர். ஆனால் மின்­வா­ரிய ஊழி­யர்­கள் முறை­யான பதில் அளிக்­கா­த­தால் சாலை மறி­யல் ஈடு­பட்­ட­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13.5">பவர் கட்­டால் பரி­த­வித்த</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13.5">தண்­டை­யார்­பேட்டை மக்­கள்:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">ஏழு­கி­ணறு போர்ச்­சுக்­கல் தெரு­வில் இரவு மின்­சா­ரம் தடை­பட்­டது. அதை தொடர்ந்து மக்­கள் மின்­சா­ரம் வர­வில்லை என்று மின்­வா­ரிய அதி­கா­ரி­க­ளுக்­கும் ஊழி­யர்­க­ளுக்­கும் தக­வல் கொடுத்­த­னர். இதே­போல் ராய­பு­ரம், காசி­மேடு, வண்­ணா­ரப்­பேட்டை, ஆர்கே நகர், புது வண்­ணா­ரப்­பேட்டை, தண்­டை­யார்­பேட்டை, கொருக்­குப்­பேட்டை உள்­ளிட்ட பகு­தி­க­ளில் ஆங்­காங்கே மின்­சா­ரம் இரவு நேரங்­க­ளில் தடை ஏற்­பட்­டது. பொது­மக்­க­ளின் எதிர்ப்­புக்கு பிறகு மின்­சா­ரம் ஒரு சில பகு­தி­ க­ளில் வழங்­கப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13.5">திருத்­தணி:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">ஆர்கே.பேட்டை ஒன்­றி­யத்­தில் 20க்கும் மேற்­பட்ட கிரா­மங்­க­ளில் இரவு முழு­வ­தும் மின்­தடை ஏற்­பட்­ட­தால் கிராம மக்­கள் சிறு­வர்­கள் முதி­யோர் தூக்­கம் இன்றி 
கடு­மை­யாக பாதிக்­கப்­பட்­ட­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">திருத்­தணி ஒன்­றி­யத்­துக்கு உட்­பட்ட பல கிரா­மங்­க­ளில் மின்­த­டை­யால் பொது­மக்­கள் கடும் பாதிப்­ப­டைந்­த­னர். பள்­ளிப்­பட்டு ஒன்­றி­யத்­தில் பொதட்­டூர்­பேட்டை பள்­ளிப்­பட்டு அத்­தி­மாஞ்­சே­ரி­பேட்டை, சொரக்­காய் பேட்டை உள்­ளிட்ட பல்­வேறு பகு­தி­க­ளில் மின்­தடை ஏற்­பட்டு நெச­வுத்­தொ­ழில் முடங்கி இரவு முழு­வ­தும் பொது­மக்­கள் தூக்­க­மின்றி அவதி அடைந்­த­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">திரு­வா­லங்­காடு ஒன்­றி­யத்­தில் நெடு­ம­ரம் கிரா­மத்­தில் மின் கம்­பங்­கள் சாய்ந்­த­தால் மாலை முதல் மின்­தடை ஏற்­பட்­டுள்­ள­தால் குடி­நீர் உள்ள அத்­தி­யா­வ­சிய சேவை­க­ளுக்­காக பொது­மக்­கள் கடு­மை­யாக பாதிக்­கப்­பட்­ட­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">சூறைக்­காற்­றால் திருத்­தணி பகு­தி­யில் மின்­தடை ஏற்­பட்­டதை தொடர்ந்து திருத்­தணி ஒன்­றி­யம், திரு­வ­லாங்­காடு ஒன்­றிய கிரா­மங்­க­ளில் 20 மணி நேரம் கடந்­தும் மின் விநி­யோ­கம் தொடங்­கா­த­தால் மக்­கள் கடும் பாதிப்­ப­டைந்­த­துள்­ள­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13.5">வாலா­ஜா­பாத்:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">காஞ்­சி­பு­ரம் மாவட்­டம், வாலா­ஜா­பாத் மின் பகிர்­மான மையத்­தின் கீழ் 50க்கும் மேற்­பட்ட கிரா­மங்­க­ளில் மாலைமுதல் நள்­ளி­ரவு வரை திடீ­ரென ஏற்­பட்ட மின்­வெட்­டால் மக்­கள் கடும் அவ­திக்­குள்­ளா­கி­னர். நீண்ட நேரம் மின் விநி­யோ­கம் செய்­யப்­ப­டா­த­தால் நூற்­றுக்­க­ணக்­கான மக்­கள் அந்­தந்த பகு­தி­யில் உள்ள மின்­வா­ரிய அலு­வ­ல­கத்தை முற்­று­கை­யிட்டு, பின்­னர் வாலா­ஜா­பாத்- தாம்­ப­ரம் சாலை­யில் அமர்ந்து மறி­யல் போராட்­டத்­தில் ஈடு­பட்டு, மின்­வெட்­டுக் ­கான சரி­யான கார­ணம்கூட தெரி­விக்­கப்­ப­ட­வில்லை என்று அவர்­கள் குற்­றம்­சாட்­டி­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">முறை­யாக மின் பரா­ம­ரிப்பு பணி­களை செய்து இருந்­தால் இது­போன்ற பேரி­டர் காலங்­க­ளில் அறி­விக்­கப்­ப­டாத நீண்ட நேரம் மின்­வெட்டு ஏற்­ப­டாது என தெரி­வித்­த­னர். தக­வல் அறிந்து வந்த வாலா­ஜா­பாத் போலீ­சார், மறி­ய­லில் ஈடு­பட்ட பொது­மக்­க­ளி­டம் சம­ரச பேச்­சு­வார்த்தை நடத்­தி­ய­தை­ய­டுத்து கலைந்து 
சென்­ற­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13.5">பொன்­னேரி :</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">வெயி­லின் தாக்­கம் அதி­க­ரித்து வரும் 
நிலை­யில், மீஞ்­சூர், பொன்­னேரி, பழ­வேற்­காடு மற்­றும் சுற்­றுப்­புற பகு­தி­க­ளில் கடந்த சில நாட்­­களாக மின்­வெட்டு அதி­க­ரித்­துள்­ளது. இந்த பகு­தி­யில் தின­மும் 10 முறைக்­கு­மேல் மின்­தடை செய்­யப்­ப­டு­கி­றது. இத­னால் பெரி­தும் அந்த பகுதி மக்­கள் சிர­ம­ம­டைந்து வரு­கின்­ற­னர். மின்­வெட்­டுக்கு தி.மு.க., விடு­த­லைச்­சி­றுத்­தை­கள், கம்­யூ­னிஸ்ட் கட்­சி­யி­னர் கண்­ட­னம் தெரி­வித்­துள்­ள­னர். அடிக்­கடி குறைந்த மின்­ன­ழுத்­தம் ஏற்­ப­டு­வ­தால் குளிர்­சா­தன பெட்­டி­கள், வாஷிங் மெஷின் செயல்­ப­டா­மல் பழு­தா­கி­வி­டு­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13.5">திரு­வள்­ளூர்:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">திரு­வள்­ளூர் அடுத்த கடம்­பத்­தூர் ஊராட்சி முழு­வ­தும் கடந்த 2 நாட்­க­ளாக இரவு நேரங்­­களில் மின்­சா­ரம் பல மணி நேரம் துண்­டிக்­கப்­பட்­ட­தால் அப்­ப­குதி மக்­கள் கடும் சிர­மத்­திற்கு ஆளாகி உள்­ள­னர். இந்­நி­லை­யில், நேற்­றும் திடீ­ரென இரவு நேரத்­தில் பல மணி­நே­ரம் மின்­சா­ரம் துண்­டிக்­கப்­பட்­ட­தால் ஆத்­தி­ரம் அடைந்த பொது­மக்­கள் 200க்கும் மேற்­பட்­ட­வர்­கள் கடம்­பத்­தூர் மேம்­பா­லம் அருகே திரு­வள்­ளூர் - சுங்­கு­வார்­சத்­தி­ரம் நெடுஞ்­சா­லை­யில் அமர்ந்து சாலை மறி­யல் ஆர்ப்­பாட்­டத்­தில் ஈடு­பட்­ட­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13.5">மது­ராந்­த­கம்:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">மது­ராந்­த­கம் பகு­தி­யில் இரவு நேரங்­க­ளில் மின்­தடை நீடிப்­ப­தால் குழந்­தை­கள் முதல் முதி­ய­வர்­கள் வரை சிர­மப்­பட்டு வரு­கின்­ற­னர். நோயா­ளி­கள் மிகுந்த சிர­மத்­திற்கு உள்­ளா­கின்­ற­னர். குறைந்த மின்­ன­ழுத்­தம் கார­ண­மாக மோட்­டார் பம்­பு­கள் இயங்­கா­த­தால் குடி­நீர் 
விநி­யோ­கத்­தி­லும் பாதிப்பு ஏற்­பட்­டுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13.5">மது­ர­வா­யல்:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">மது­ர­வா­ய­லில் இரவு நேரங்­க­ளில் அடிக்­கடி மின்­வெட்டு ஏற்­ப­டு­வ­தாக பொது­மக்­கள் கடும் அவ­திக்­குள்­ளாகி வரு­கின்­ற­னர். மது­ர­வா­யல் எம்.எம்.டி.ஏ.காலனி நான்கு மற்­றும் ஐந்­தா­வது பிளாக், அபி­ராமி நகர், கந்­த­சாமி நகர் உள்­ளிட்ட பல்­வேறு பகு­தி­க­ளில் இரவு 9.30 மணிக்கு மேல் மின்­வெட்டு ஏற்­பட்­ட­தால் 2000 மேற்­பட்ட மின் நுகர்­வோர்­கள் கடும் சிர­மத்­திற்கு 
ஆளா­கி­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13.5">முதல்­வரே முடிவு எடுக்க வேண்­டும்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இது தொடர்­பாக புகார் அளிக்க மின்­வா­ரிய அலு­வ­ல­கத்தை தொடர்பு கொள்ள பல முறை முயற்­சித்த போதும் அழைப்பை ஏற்­க­வில்லை. மின் வெட்­டால் அவ­தி­யுற்று ஆத்­தி­ர­ம­டைந்த நிலை­யில் திரண்டு வந்த பொது­மக்­கள் மது­ர­வா­யல் மின்­வா­ரிய அலு­வ­ல­கத்தை முற்­று­கை­யிட்டு அதி­கா­ரி­க­ளு­டன் கடும் வாக்­கு­வா­தத்­தில் ஈடு­பட்­ட­னர். இது தொடர்­பாக பணி­யில் இருந்த 
அதி­காரி ஒரு­வரை கேட்­ட­போது பல்­வேறு பகு­தி­யில் பழு­தாகி மின்­வெட்டு ஏற்­ப­டு­வ­தாக கூறி­னார். அழைப்பை ஏன் ஏற்­ப­தில்லை, சென்னை அருகே மிகப்­பெ­ரிய பகு­தி­யில் இரண்டு ஊழி­யர்­களை வைத்து என்ன செய்ய முடி­யும் என பொது­மக்­க­ளின் கேள்­விக்கு அதற்கு முதல்­வர்­தான் முடிவு செய்ய வேண்­டும் என அதி­காரி அலட்­சி­ய­மாக பதில் கூறி­ய­தால் பொது­மக்­கள் அதிர்ச்சி அடைந்­த­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">தேர்­த­லின் போது மட்­டும் எப்­படி மின்­வெட்டு இல்­லா­மல் விநி­யோ­கம் செய்ய முடிந்­தது. செல்­போ­னில் தொடர்பு கொண்­டால் அழைப்பை ஏற்று அப்­போது உட­ன­டி­யாக புகாரை நிவர்த்தி செய்­தீர்­கள் என கடும் வாக்­கு­வா­தம் செய்­த­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13.5">புழல்:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">புழல் அருகே புத்­தா­க­ரம், லட்­சு­மி­பு­ரம், இந்­திரா நகர், சாரதி நகர், திரு­வள்­ளூர் சாலை, பார­தி­யார் தெரு உள்­பட 20க்கும் மேற்­பட்ட பகு­தி­க­ளில் நேற்று 7 மணி நேரம் தொடர் மின்­வெட்டு கார­ண­மாக ஏரா­ள­மான முதி­ய­வர்­கள், குழந்­தை­கள் உள்­பட பல்­வேறு தரப்­பி­னர் பெரி­தும் அவ­திக்கு உள்­ளா­கி­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இது­கு­றித்து சம்­பந்­தப்­பட்ட மின்­வா­ரிய அலு­வ­ல­கத்­தில் புகார் தெரி­விக்க தொடர்பு கொண்­ட­போ­தும் ஊழி­யர்­கள் போனை எடுக்­க­வில்லை. எனவே, புழல் பகு­தியை சேர்ந்த 100க்கும் மேற்­பட்ட மக்­கள் இரவு கடப்பா சாலை­யில் உள்ள மின்­வா­ரிய அலு­வ­ல­கத்தை முற்­று­கை­யிட்டு, அறி­விக்­கப்­ப­டாத தொடர் 7 மணி நேர மின்­வெட்டை கண்­டித்து சாலை மறி­யல் போராட்­டத்­தில் ஈடு­பட்­ட­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13.5">மாத­வ­ரம்:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">மாத­வ­ரம் தொகு­திக்கு உட்­பட்ட செங்­குன்­றம் சுற்­று­வட்­டார பகு­தி­க­ளான செங்­குன்­றம், புழல் ஒன்­றி­யம், சோழ­வ­ரம் ஒன்­றி­யம், 
பாடி­ய­நல்­லூர், தீர்த்­தக்­க­ரை­யாம்­பட்டு, விளாங்­கா­டு­பாக்­கம், கிராண்ட்­லைன், வட­கரை, அழிஞ்­சி­வாக்­கம், நல்­லூர், சோழ­வ­ரம், புழல், காவாங்­கரை பகு­தி­க­ளில் கடந்த சில நாட்­க­ளாக தொடர் மின்­தடை கார­ண­மாக அப்­ப­குதி மக்­கள் 
பெரி­தும் அவ­திப்­பட்டு வரு­கின்­ற­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13.5">துரைப்­பாக்­கம்:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">சோழிங்­க­நல்­லூர் 15வது மண்­ட­லம் 193வது வார்­டுக்கு துரைப்­பாக்­கம் போஸ்ட் ஆபீஸ் தெரு,வேம்­புலி அம்­மன் கோயில் தெரு, பிள்­ளை­யார் கோயில் தெரு, தேரடி தெரு ஆகிய பகு­தி­க­ளில் சில தினங்­க­ளாக அடிக்­கடி மின்­வெட்டு ஏற்­ப­டு­வ­தால் பொது­மக்­கள் பெரி­தும் 
அவ­திக்­குள்­ளாகி வரு­கின்­ற­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">பெருங்­குடி, சீவ­ரம் பகு­தி­க­ளி­லும் மின்­வெட்டு ஏற்­பட்டு வரு­கி­றது. இந்­நி­லை­யில் நேற்று இரவு 10 மணி அள­வில் மின்­வெட்டு ஏற்­பட்­டது. இத­னை­ய­டுத்து அப்­ப­குதி மக்­கள் மின்­வா­ரிய அலு­வ­ல­கத்­திற்கு தொலை­பேசி மூலம் தொடர்பு கொண்டு புகார் தெரி­வித்­த­னர். மேலும், 
கொடுங்­கை­யூர், ராய­பு­ரம், எழும்­பூர், 
துறை­மு­கம், வில்­லி­வாக்­கம், புழு­தி­வாக்­கம், 
திரு­வான்­மி­யூர், முட்­டுக்­காடு, பட்­டா­பி­ராம், வேளச்­சேரி, ஆலந்­தூர், மடிப்­பாக்­கம், நந்­தம்­பாக்­கம், செம்­மஞ்­சேரி, பம்­மல், மூவ­ர­சன்­ பேட்டை, ராஜ­கீழ்­பாக்­கம், கடம்­பத்­தூர், 
வெண்­ம­ணம்­பு­தூர், ஊத்­துக்­காடு, அவ­லூர் போன்ற இடங்­க­ளில் தொடர் மின்­வெட்டு பிரச்­சினை இருந்து வரு­வது குறிப்­பி­டத்­தக்­கது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13.5">ஆலந்­தூர்:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">ஆலந்­தூர், நங்­க­நல்­லூர், முக­லி­வாக்­கம் போன்ற பகு­தி­க­ளில் பகல், இரவு என தொடர்ந்து மின்­தடை ஏற்­பட்­ட­தால் பொது­மக்­கள் கடும் அவதி அடைந்­த­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">ஆலந்­தூர் ஏகாம்­பர டபே­தார் தெரு, தர்­ம­ராஜா கோயில் தெரு, சவுரி தெரு, அப்­பாவு தெரு, மு முக்­தம்ஜி தெரு, ஜிலானி தெரு, இப்­ரா­கிம் தெரு, காஜி தெரு, ஆசர் கானா தெரு, லஸ்­கர் தெரு போன்ற பகு­தி­க­ளில் தொடர்ந்து 5, 6 முறை மின்­வெட்டு ஏற்­பட்­டது. இது­கு­றித்து புகார் அளிக்க மின்­வா­ரிய அதி­கா­ரி­களை தொடர்பு கொண்­டால் யாரும் போனை எடுத்து பேசு­ வ­தில்லை. அந்த வார்டு தி.மு.க. பெண் கவுன்­சி­லர் பிருந்தா ஸ்ரீ முரளி கிருஷ்­ணர் நேர­டி­யாக மின்­சார அலு­வ­ல­கம் சென்று அதி­கா­ரியை 
சந்­தித்து அடிக்­கடி மின்­வெட்டு ஏற்­ப­டு­வதை தவிர்க்க உட­ன­டி­யாக புதிய டிரான்ஸ்­பார்­மர் அமைக்­கு­மாறு மனு அளித்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">அதே­போல் நங்­க­நல்­லூர் லட்­சுமி நகர் 4 ஸ்டேஜ் மற்­றும் வோல்­டாஸ் காலனி 5வது தெரு போன்ற பகு­தி­க­ளில் 3 முறை மின்­சா­ரம் தடை­பட்­டது. நங்­க­நல்­லூர் தெற்கு பக்­த­வச்­சல நகர், 3வது குறுக்கு தெரு பகு­தி­யில் நேற்று காலை­யில் ஒரு மணி நேரம் மின்­சார தடை­பட்­டது. மேலும் பகு­தி­க­ளி­லும் மின்­சா­ரம் தடை­பட்­டது. இப்­ப­கு­தி­களை சேர்ந்த நலச்­சங்க நிர்­வா­கி­கள் கவுன்­சி­லர்­கள் துர்­கா­தேவி நட­ரா­ஜன், செல்­வேந்­தி­ரன் ஆகி­யோரை தொடர்­பு­கொண்டு மின் துறை அதி­கா­ரி­கள் நட­வ­டிக்கை எடுக்­கா­த­தால் மின்­த­டையை சரி­செய்ய உத­வி­டு­மாறு கேட்­டுக்­கொண்­ட­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13.5">ஆவடி, அம்­பத்­தூர்:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">பட்­டா­பி­ராம் மேற்கு கோபா­ல­பு­ரம், வ.உ.சி., தெரு­வில் உள்ள மின்­மாற்­றி­யில் பழுது ஏற்­பட்­டது. இத­னால், வ.உ.சி., 6 மற்­றும் 7வது தெருக்­க­ளில் உள்ள 100க்கும் மேற்­பட்ட வீடு­க­ளில் மின் வெட்டு ஏற்­பட்­டது. சுமார் 17 மணி நேரம் மின் விநி­யோ­கம் இல்­லா­த­தால் பொது­மக்­கள் கடும் சிர­மத்­திற்கு ஆளா­கி­னர். கோபா­ல­பு­ரம் பகு­தியை பொறுத்­த­வரை தின­மும் அடிக்­கடி மின்­வெட்டு ஏற்­ப­டு­வ­தாக பொது­மக்­கள் குற்­றஞ்­சாட்­டு­கின்­ற­னர். அதே­போல் அம்­பத்­தூர், கள்­ளிக்­குப்­பம், மூகாம்­பிகை நகர், காந்தி நகர், முத்­த­மிழ் நகர் கிழக்கு, பாலாஜி நகர், கங்கை நகர் போன்ற பகு­தி­க­ளில் இரவு 11 மணி­ய­ள­வில் மின்­வெட்டு ஏற்­பட்­ட­தால் பொது­மக்­கள் புழுக்­கத்­தில் தூக்­க­மின்றி தவித்­த­னர். கடந்த சில நாட்­க­ளாக இரவு நேரங்­க­ளில் தொடர்ந்து மின்­வெட்டு ஏற்­ப­டு­வ­தாக பொது­மக்­கள் வேதனை தெரி­விக்­கின்­ற­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">மேலும், ஆவடி, அம்­பத்­தூர், கள்­ளிக்­குப்­பம், மூகாம்­பிகை நகர், காந்தி நகர், முத்­த­மிழ் நகர் கிழக்கு, பாலாஜி நகர், கங்கை நகர், பட்­டா­பி­ராம், அணைக்­கட்டு சேரி, சோராஞ்­சேரி, அமு­தூர் மேடு, ஜெ.ஜெ., நகர் உள்­ளிட்ட பகு­தி­க­ளி­லும் தொடர் மின்­வெட்டு ஏற்­ப­டு­வ­தாக பொது­மக்­கள் குற்­றம்­சாட்­டு­கின்­ற­னர். அடிக்­கடி, மின்­வெட்டு ஏற்­ப­டு­வ­தால் வீட்டு உப­யோக பொருட்­கள் பழு­தா­வ­தாக புகார் தெரி­விக்­கின்­ற­னர். எனவே, அடிக்­கடி ஏற்­ப­டும் மின்­வெட்டு பிரச்­சி­னைக்கு அரசு உட­ன­டி­யாக நட­வ­டிக்கை மேற்­கொண்டு தீர்வு காண வேண்­டும், என்று பொது­மக்­கள் கோரிக்கை விடுக்­கின்­ற­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">வாலா­ஜா­பாத் சுற்­று­வட்­டார கிரா­மப்­புற பகு­தி­க­ளில் நீண்ட நேர அறி­விக்­கப்­ப­டாத மின்­வெட்­டால் ஒரு சில வீடு­க­ளில் பயன்­ப­டுத்­தப்­ப­டும் இன்­வெர்ட்­டர்­க­ளும் பயன்­பாடு இன்றி போன­தால் வீட்­டில் உள்ள குழந்­தை­கள், முதி­ய­வர்­கள் கடும் சிர­மப்­பட்­ட­னர். வாலா­ஜா­பாத் சுற்­று­வட்­டார பகு­தி­யில் நேற்று இரவு அறி­விக்­கப்­ப­டாத மின்­வெட்­டால் வீட்­டின் மாடி­யில் குழந்­தை­கள், முதி­ய­வர்­கள், கர்ப்­பிணி பெண்­கள் கொசுக்­க­டி­யால் நள்­ளி­ரவு வரை தூக்­க­மின்றி தவித்­த­னர். இத­னால் பெரும்­பா­லா­னோர் வேலைக்கு செல்­லா­மல் விடுப்பு எடுத்­த­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">சரா­ச­ரி­யாக நகர்ப்­பு­றம் மற்­றும் கிரா­மப்­பு­றங்­க­ளில் உள்ள பெரும்­பா­லான வீடு­க­ளில் குளிர்­சா­தன பொருட்­க­ளான ஏசி, பிரிட்ஜ், பேன் உள்­ளிட்ட அத்­தி­யா­வ­சிய பொருட்­கள் பயன்­பாட்­டில் உள்­ளன. மின்­வி­நி­யோ­கம் சரி­வர இல்­லா­த­தால் மின்­ன­ழுத்த குறை­பா­டு­கள், மின்­வெட்டு ஏற்­ப­டு­வ­தாக அதி­கா­ரி­கள் கூறு­கின்­ற­னர். தமி­ழ­கத்­தில் புதிய அரசு பொறுப்பு ஏற்று உள்ள நிலை­யில் மாவட்­டம் தோறும் உள்ள மின்­வா­ரிய பகிர்­மா­னங்­க­ளுக்கு உரிய மின்­வி­நி­யோ­கம் செய்­யப்­பட வேண்­டும் என்­பதே சமூக ஆர்­வ­லர்­க­ளின் கோரிக்­கை­யாக உள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">பெரம்­பூர் சட்­ட­மன்ற தொகு­திக்கு உட்­பட்ட மகா­கவி பார­தி­ந­கர், சாஸ்­திரி நகர், சர்மா நகர், புது நகர், காந்தி நகர், எருக்­கஞ்­சேரி உள்­ளிட்ட இடங்­க­ளில் கடந்த இரண்டு நாட்­க­ளாக இரவு நேரங்­க­ளில் தொடர் மின்­வெட்டு பிரச்­சினை ஏற்­பட்­டது. இது­கு­றித்து அப்­ப­குதி மக்­கள் மின்­வா­ரிய ஊழி­யர்­களை தொடர்பு கொண்டு புகார் தெரி­வித்­த­னர். ஆனால், மின்­வா­ரிய அதி­கா­ரி­கள் எவ்­வித நட­வ­டிக்­கை­யும் எடுக்­க­வில்லை என்று கூறப்­ப­டு­கி­றது. இந்­நி­லை­யில், நேற்று இரவு 11.30 மணி­ய­ள­வில் மேற்­கண்ட இடங்­­களில் மீண்­டும் மின்­தடை ஏற்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இத­னால் ஆத்­தி­ர­ம­டைந்து சுமார் 50க்கும் மேற்­பட்ட பொது­மக்­கள் சர்மா நகர் - எருக்­கஞ்­சேரி நெடுஞ்­சா­லை­யில் திடீ­ரென சாலை மறி­ய­லில் ஈடு­பட்­ட­னர். இத­னால் அப்­ப­கு­தி­யில் சுமார் அரை மணி நேரம் போக்­கு­வ­ரத்து பாதித்­தது.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>