<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="25/05/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,179,957,1496" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Mon May 25 2026 03:41:04 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260525T000000+5.30" edition.name="MDU" edition.area="MDU" position.section="25052026-MDU-03" position.sequence="03" ex-ref="25052026-MDU-03.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
<lang class="3" style="Headline1"  font="Arial"  size="15">                                                  </lang>
</hl1>
       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup666859_03_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup666858_03_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">உறுப்­பி­னர்­க­ளெல்­லாம் சென்­னைக்கு வரு­வ­தற்கு பய­ணச்­சீட்டு முன்­ப­திவு செய்து கொண்டு இருந்­தார்­கள். தொடர்­வண்­டி­யிலோ, பேருந்­திலோ, வானூர்­தி­யிலோ, இதற்­கான பய­ணச்­சீட்­டெல்­லாம் முன்­ப­திவு செய்து கொண்டு இருந்­தார்­கள். ஆனால், இன்று இருக்­கக்­கூ­டிய ஆளுங்­கட்­சி­யும், பிற சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­க­ளும் தங்­க­ளு­டைய சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்­குத் திருட்­டுத்­த­ன­மா­கப் போய் தங்­கு­வ­தற்கு விடு­தி­க­ளில் (ரிசார்ட்­டில்) அறை முன்­ப­திவு செய்­து­கொண்டு இருந்­தார்­கள். இது­தான் தி.மு.க.வுக்­கும், மற்ற கட்­சி­க­ளுக்­கு­மான வித்­தி­யா­சம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Maragadam" fontStyle="Regular" size="12.5">‘ரிசார்ட் பாலி­டிக்ஸ்’</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">அந்த அள­வுக்கு அவர்­க­ளு­டைய சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­கள் மேல் அவர்­க­ளு­டைய தலை­மைக்கு நம்­பிக்கை. அவர்­க­ளு­டைய தலைமை மீது அவர்­க­ளு­டைய சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கு நம்­பிக்கை. இதை ஏன் நான் பெரு­மை­யோடு சொல்­கி­றேன் என்­றால், தமிழ்­நாட்­டில் என்­றைக்­குமே, எப்­பொ­ழு­துமே, `ரிசார்ட் பாலி­டிக்ஸ்’ செய்­யாத ஒரே இயக்­கம், நம்­மு­டைய திரா­விட முன்­னேற்­றக் கழ­கம், என்­கிற பெருமை நமக்கு மட்­டும்­தான் இருக்­கி­றது. அதற்கு என்ன கார­ணம்? தலைமை மீது தொண்­டர்­க­ளுக்­கும், தொண்­டர்­கள் மீது நம் தலை­வர் அவர்­க­ளுக்­கும் இருக்­கக்­கூ­டிய அந்­தப் பாண்­டிங், அந்த நம்­பிக்கை. அந்த நம்­பிக்கை இருக்­கிற வரைக்­கும், நம்­மு­டைய தலை­வ­ரையோ, நம்­மு­டைய திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தையோ யாரும் தொட்­டுக்­கூட பார்க்க முடி­யாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">சட்­ட­மன்ற உறுப்­பி­னர், நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர், அமைச்­சர் என எத்­த­னையோ பத­வி­கள் வரும், போகும். ஆனால், தி.மு.க–வில் நான் ஒரு உறுப்­பி­னர், கலை­ஞ­ரு­டைய உடன்­பி­றப்பு, நம் தலை­வ­ரு­டைய தொண்­டன், இளை­ஞர் அணி­யில் நான் ஒரு உறுப்­பி­னர், இளை­ஞர் அணி­யில் நான் ஒரு நிர்­வாகி, என்­கிற அந்­தப் பெரு­மை­யும் கெத்­தும் நமக்கு மட்­டும்­தான் என்­றைக்­குமே இருக்­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Maragadam" fontStyle="Regular" size="12.5">பெரு­மை­யா­கச் சொல்­ல­லாம்</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">நான் பல­முறை சொல்­லி­யி­ருக்­கி­றேன். நாம் வெறும் தேர்­த­லுக்­கா­கப் பணி­யாற்­றக்­கூ­டிய அர­சி­யல்­வா­தி­கள் கிடை­யாது. பிற­விப் போரா­ளி­கள், வாரி­யர்ஸ், கலை­ஞ­ரு­டைய உடன்­பி­றப்­பு­கள், நம்­மு­டைய தலை­வ­ரு­டைய தொண்­டர்­கள். நம்­மு­டைய இளை­ஞர் அணி­யைப் பொறுத்­த­வ­ரைக்­கும், தலை­வ­ரின் வழி­காட்­டு­த­லின்­படி, நாடா­ளு­மன்­றத் தேர்­த­லுக்­குப் பிறகு, கடந்த மூன்று வரு­டங்­க­ளா­கவே களத்­தில் இறங்கி பல்­வேறு பணி­களை செய்­தி­ருக்­கி­றோம் என்­பதை நாம் பெரு­மை­யா­கச் சொல்­ல­லாம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">சட்­ட­மன்­றத் தேர்­த­லுக்கு, நீங்­கள் அத்­தனை பேரும் கடு­மை­யாக உழைத்­தீர்­கள். நம் கழ­கக் கூட்­டணி வேட்­பா­ளர்­க­ளுக்கு ஆத­ர­வாக, ஒவ்­வொரு தெரு­வி­லும், ஒவ்­வொரு வீட்­டி­லும் போய் வாக்கு சேக­ரித்­தீர்­கள். ராத்­திரி பகல் என்று பார்க்­கா­மல், நீங்­கள் அத்­தனை பேரும் உழைத்­தி­ருக்­கி­ றீர்­கள். அதற்கு முத­லில் உங்­க­ளின் சகோ­த­ர­னாக உங்­க­ளுக்கு முத­லில் என் நன்­றி­யை­யும், வாழ்த்­து­க­ளை­யும் தெரி­வித்­துக்­கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">குறிப்­பாக, நம்­மு­டைய மாநி­லத் துணைச் செய­லா­ளர்­கள், அனைத்து இளை­ஞர் அணி நிர்­வா­கி­கள் தங்­க­ளு­டைய வீட்­டை­விட்டு, குடும்­பத்தை விட்டு, ஒரு மாதத்­துக்­கும் மேலாக தங்­க­ளுக்­காக ஒதுக்­கப்­பட்ட சட்­ட­மன்­றத் தொகு­தி­க­ளில் தங்கி, தேர்­தல் வேலை­க­ளை­யெல்­லாம் பம்­ப­ர­மா­கச் சுழன்று செய்­தார்­கள். அதற்­கும் இந்த நேரத்­தில் என் பாராட்­டுக்­கள், வாழ்த்­து­களை நான் தெரி­வித்­துக் கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Maragadam" fontStyle="Regular" size="12.5">17 இலட்­சம்­தான் வித்­தி­யா­சம்</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">இவ்­வ­ளவு உழைப்­பை­யும் மீறி, நம் தலை­வ­ரு­டைய, நம்­மு­டைய திரா­விட மாடல் அர­சி­னு­டைய திட்­டங்­க­ளை­யெல்­லாம் மீறி, நாம் எதிர்­பார்க்­காத ஒரு முடிவை இன்று தமிழ்­நாட்டு மக்­கள் கொடுத்­தி­ருக்­கி­றார்­கள். சட்­ட­மன்­றத் தேர்­தல் முடி­வு­க­ளைப் பற்றி ஏற்­கெ­னவே நம்­மு­டைய தலை­வர் அவர்­கள் மிகத் தெளி­வா­கச் சொல்­லி­விட்­டார்­கள். வெறும் 17 இலட்­சம் வாக்­கு­கள் வித்­தி­யா­சத்­தில்­தான் நாம் இன்று வெற்­றி­வாய்ப்பை இழந்­தி­ருக்­கி­றோம். இப்­பொ­ழுது ஆட்சி அமைத்­தி­ருக்­கக்­கூ­டிய கட்­சிக்கு, மெஜா­ரிட்­டி­யும் கிடைக்­கா­மல், நம் கூட்­ட­ணி­யில் இருக்­கக்­கூ­டிய கட்­சி­க­ளு­டைய ஆத­ர­வால்­தான் இன்று இந்த ஆட்சி அமைந்­தி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">நம் கூட்­ட­ணி­யில் இருந்த சில கட்­சி­கள், நம் தலை­வ­ரி­டம் வந்து, தலை­வ­ரின் உத்­த­ரவு பெற்று, அனு­ம­தி­யைப் பெற்று ஆளுங்­கட்­சிக்கு ஆத­ரவு கொடுத்­தார்­கள். ஆனால், 20 வரு­டத்­துக்கு மேல் நம் முது­கின் மேல் ஏறி நின்று, நம் மேல் சவாரி செய்த காங்­கி­ரஸ் கட்சி, இன்று நம் முது­கில் குத்­தி­விட்­டுப் போயி­ருக்­கி­றது. இதை யாரும் மறந்­து­வி­டா­தீர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">இந்­தி­யா­வில், பா.ஜ.க–வின் தொடர் வெற்­றிக்கு நான் கூட மோடி­யும், அமித்­ஷா­வும்­தான் கார­ணம் என்று நினைத்­துக்­ கொண்டு இருந்­தேன். ஆனால், காங்­கி­ரஸ் கட்­சி­தான் பா.ஜ.க–வின் வெற்­றிக்­குக் கார­ணம் என்­பது இப்­பொ­ழுது தெரி­கி­றது. அப்­ப­டிப்­பட்­ட­காங்­கி­ரஸை கடந்த நாடா­ளு­மன்­றத் தேர்­த­லி­லும், சட்­ட­மன்­றத் தேர்­த­லி­லும் சுமந்­து­கொண்டு இருந்­தோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Maragadam" fontStyle="Regular" size="12.5">தி.மு.க.காரன்­தான் கார­ணம்</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5"> 
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">மதச்­சார்­பின்­மை­யைப் பாது­காக்க வேண்­டும், பா.ஜ.க–வைத் தமிழ்­நாட்­டுக்­குள் விட்­டு­வி­டக் கூடாது என்று நம் தொண்­டர்­கள், நாம் இரத்­தத்­தை­யும், வேர்­வை­யை­யும் சிந்தி, காங்­கி­ரஸ் வேட்­பா­ளர்­களை வெற்­றி­பெற வைத்­துக்­கொண்டு இருந்­தோம். இந்­தத் தேர்­த­லி­லும் அதைத்­தான் செய்­தோம். களத்­தி­லேயே இல்­லாத காங்­கி­ரஸ் கட்சி, இன்று ஐந்து இடத்­தில் ஜெயிக்க நம் உடன்­பி­றப்­பு­கள், நம் தலை­வ­ரின் தொண்­டர்­கள், தி.மு.க.காரன்­தான் கார­ணம். இன்று நம் தலை­வர் அவர்­கள் முத­ல­மைச்­ச­ராக வேண்­டும் என்று மக்­கள் போட்ட ஓட்­டில் ஜெயித்­து­விட்டு, பத­விக்­கா­கச் சொல்­லா­மல் கொள்­ளா­மல் ஓடிப்­போய்­விட்­டார்­கள். குறைந்­த­பட்­சம் ஒரு நன்­றியோ, நாக­ரி­கமோ இல்­லாத காங்­கி­ரஸை, இனி எந்­தக் காலத்­தி­லும் நாம் நம்­பக்­கூ­டாது. எந்­தக் காலத்­தி­லும் நாம் அவர்­களை கிட்டே சேர்க்­கக் கூடாது. அவர்­க­ளுக்­குச் சரி­யான பாடத்தை, நாம் கற்­றுக் கொடுக்­கி­றோமோ இல்­லையோ தமிழ்­நாட்டு மக்­கள் நிச்­ச­யம் வெகு விரை­வில் கற்­றுக் கொடுப்­பார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">இந்­தச் சூழ­லில் இளை­ஞர் அணி தம்­பி­மார்­கள், சகோ­த­ரர்­கள் உங்­க­ளி­ட­மெல்­லாம் நான் கேட்­டுக்­கொள்­வ­தெல்­லாம், நாம் ஏற்­க­னவே செய்த பணி­களை இன்­னும் வேக­மா­கச் செய்­வோம். அந்த நம்­பிக்கை எனக்கு இருக்­கி­றது. இவ்­வ­ளவு நாட்­க­ளாக உழைப்பை அள்­ளிக் கொடுத்த உங்­களை நம் கழ­கத் தலை­வர் அவர்­கள் நிச்­ச­யம் கைவிட மாட்­டார். நானும் எப்­போ­துமே உங்­க­ளு­டன்­தான் இருப்­பேன். உங்­க­ளோடு தோளோடு தோள் நிற்­பேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Maragadam" fontStyle="Regular" size="12.5">கலை­ஞ­ரின் பிறந்த நாள்</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">வரு­கிற ஜூன் 3–ஆம் தேதி முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞ­ரின் பிறந்த நாள். அதை மிகச் சிறப்­பாக நாம் கொண்­டாட வேண்­டும். நலத்­திட்ட உதவி நிகழ்ச்­சி­களை நடத்­துங்­கள். பிரம்­மாண்­ட­மாக இல்­லா­மல், அவ­ர­வர் வசதி வாய்ப்­பிற்கு ஏற்­ற­மா­திரி நலத்­திட்ட உதவி நிகழ்ச்­சி­களை நடத்­துங்­கள். நீங்­கள் நடத்­து­கிற நிகழ்ச்­சி­யில் யார் கலந்­து­கொள்­கி­றார்­களோ இல்­லையோ, உங்­கள் குடும்­பத்­தில் இருக்­கி­ற­வர்­க­ளைத் தய­வு­செய்து கலந்­து­கொள்­ளச் சொல்­லுங்­கள். உங்­க­ளின் மனைவி, சகோ­த­ரர்­கள், மகன்­கள், மகள்­கள் ஆகி­ய­வர்­கள் தய­வு­செய்து அந்த நிகழ்ச்­சி­யில் கலந்­து­கொள்ள வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">இன்று நாம் ஆட்­சி­யை­விட்டு வந்­தி­ருக்­க­லாம். ஆனால், இன்­றைக்­கும் நம் ஆட்­சி­யின் சாத­னை­கள்­தான் தொடர்ந்து கொண்­டி­ருக்­கின்­றன. நம் தலை­வ­ரு­டைய ஆட்­சி­ யின் சாத­னை­க­ளுக்கு, இன்று இந்த `சோபா மாடல் அரசு’ ஸ்டிக்­கர் ஒட்­டிக்­கொண்டு இருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">நான் சட்­ட­மன்­றத்­தில் பேசி­னேன், நீங்­கள் அத்­த­னை­பே­ரும் பார்த்­தி­ருப்­பீர்­கள், `இது வெறும் இன்ஸ்­டா­கி­ரா­மில் ரீல்ஸ் போடு­கிற ஆட்­சி­யாக இல்­லா­மல், ஒரு ரியல் ஆட்­சி­யைத் கொடுங்­கள்’ என்று நான் சொன்­னேன். ஆனால், இன்று தலை­மைச்­செ­ய­ல­கத்­தில் முத­ல­மைச்­ச­ரின் அறை­யி­லேயே ரீல்ஸ் எடுத்­துப் போட்­டுக்­கொண்டு இருக்­கி­றார்­கள். அது­தான் இந்த ஆட்­சி­யின் இலட்­ச­ணம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">இந்த ஆட்சி அமைந்து கொஞ்ச நாளி­லேயே இன்று தமிழ்­நாட்­டில் ஏரா­ள­மான குற்­றச்­சம்­ப­வங்­கள் தினம் தினம் நடந்து கொண்­டி­ருக்­கின்­றன. இந்­தச் செய்­தி­களை எல்­லாம் மறைக்க ஆளுங்­கட்­சி­யின் `ஆன்­லைன் மாஃபியா குரூப்’ தின­மும் பொய்ச் செய்­தி­க­ளைப் பரப்­பிக்­கொண்டு இருக்­கி­றார்­கள். இதை­யெல்­லாம் நாம் மட்­டும் இல்லை, இன்று பொது­மக்­க­ளும் பார்க்க ஆரம்­பித்­து­விட்­டார்­கள், விரை­வில் கேள்வி கேட்க ஆரம்­பிப்­பார்­கள். இந்த ஆட்­சி­யின் உண்மை முகம் முழு­மை­யா­கத் தெரிந்­த­வு­டன் தமிழ்­நாட்டு மக்­கள் நிச்­ச­யம் நம் தலை­வ­ரி­டம் வந்து நிற்­பார்­கள், நம் தலை­வ­ரைத் தேடி வரு­வார்­கள். அந்த நாள் வெகு தூரத்­தில் இல்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">தேர்­தல் முடி­வுக்கு நாம் ஒரு­வர் மேல் ஒரு­வர் யாரும் பழி போடக்­கூ­டாது, பழி­போட வேண்­டாம். ஆனால், ஒன்று முக்­கி­யம், இந்த முடி­வு­க­ளில் இருந்து என்ன பாடத்தை நாம் கற்­றுக்­கொண்­டி­ருக்­கி­றோம், எந்த இடத்­தில் நாம் விட்­டு­விட்­டோம், எந்த இடத்­தில் நாம் தவ­ற­விட்­டு­விட்­டோம், சறுக்­கி­விட்­டோம் என்­பதை நாம் தெரிந்­து­கொள்ள வேண்­டும். அதை­யெல்­லாம் யோசித்து, சரி­பார்த்து `கோர்ஸ் கரெ­க்ஷன்’ செய்து அடுத்­த­டுத்த பணி­களை நாம் வகுத்­துக்­கொள்ள வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Maragadam" fontStyle="Regular" size="12.5">இப்­பொ­ழு­தும் பேரி­டர்­தான்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">கொரோனா, புயல், மழை, வெள்­ளம் மாதி­ரி­யான பேரி­டர் நேரத்­தில் நாம், மக்­க­ளோடு மக்­க­ளா­கத்­தான் எப்­போ­துமே நின்று இருக்­கி­றோம். இப்­பொ­ழு­தும் தமிழ்­நாட்­டில் ஒரு பேரி­டர்­தான் நடந்து இருக்­கி­றது. இதி­லி­ருந்து தமிழ்­நாட்டை மீட்க வேண்­டிய பொறுப்பு யாாரி­டம் இருக்­கி­றதோ இல்­லையோ, இளை­ஞர் அணி தம்­பி­மார்­கள் உங்­க­ளி­டம் இருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">இந்­தத் தேர்­த­லில சோசி­யல் மீடியா ஒரு முக்­கி­ய­மான பங்கு வகித்­தி­ருக்­கி­றது, நாம் அங்­கே­தான் தவ­ற­விட்­டு­விட்­டோம் என்­பது என் எண்­ணம். ஆனால் அதே நேரத்­தில் வெறும் சோசி­யல் மீடியா மீது பழி போட்­டு­விட்டு அதைக் கார­ண­மா­கச் சொல்­லி­விட்டு, நாம் ஒதுங்­கி­வி­டக் கூடாது. ஏனென்­றால், தேர்­த­லில் நாம் வெளியே எல்­லா­ரி­ட­மும் ஓட்­டுக் கேட்­டோம். ஆனால், வீட்­டிற்­குள் கேட்­கா­மல் விட்­டு­விட்­டோமோ என்­கிற சந்­தே­கம் எனக்கு வந்­தி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">நீங்­கள் வெளி­யில் உள்­ள­வர்­களை எல்­லாம் சந்­தித்து அர­சி­யல்­ம­யப்­ப­டுத்­து­வ­தற்கு முன் உங்­கள் வீட்­டில், உங்­கள் குடும்­பத்­தில் உள்­ள­வர்­களை, உற­வி­னர்­களை நீங்­கள் முத­லில் அர­சி­யல்­ம­யப்­ப­டுத்­துங்­கள். தின­மும் அவர்­க­ளி­டம் அர­சி­யல் பேசுங்­கள். ஆனால்,அவர்­க­ளுக்­குப் புரி­கிற மொழி­யில் பேசுங்­கள். குடும்­பத்­தில் இருக்­கக்­கூ­டிய இளைய தலை­மு­றையை, அடுத்த தலை­மு­றையை அர­சி­யல் படுத்த வேண்­டி­யது நம்­மு­டைய பொறுப்பு. குறிப்­பாக, ஜென்–ஸி (Gen–Z) இளை­ஞர்­க­ளி­டம் உண்­மை­களை அவர்­க­ளுக்­குப் புரி­கிற மொழி­யில் எடுத்­துச் சொல்­லுங்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">‘</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="1_TAUN_Maragadam" fontStyle="Regular" size="12.5">சோபா மாடல் அரசு’</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">இன்று இருக்­கக்­கூ­டிய இளை­ஞர்­க­ளெல்­லாம் ரொம்ப வேக­மா­ன­வர்­கள். ஒரு விஷ­யத்தை எவ்­வ­ளவு சுருக்­க­மா­கச் சொல்­கி­றோமோ, அதை அவர்­கள் அவ்­வ­ளவு கூர்­மை­யா­கப் புரிந்­து­கொள்­கி­றார்­கள். ஆகவே, நம் வர­லாறு, நம்­மு­டைய சாத­னை­கள், தியா­கத்தை அவர்­க­ளுக்­கெல்­லாம் புரி­கிற மொழி­யில் அவர்­க­ளி­டம் சொல்­லிக்­கொண்டே இருப்­போம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">சமூக ஊட­கங்­க­ளில் நீங்­கள் எல்­லா­ரும் வேகத்­து­டன் இருக்க வேண்­டும். ஏதோ பெய­ருக்­குச் சமூக ஊட­கங்­க­ளில் இருக்­கி­றோம், கணக்கு வைத்­தி­ருக்­கி­றோம் என்று இல்­லா­மல், நீங்­களே கன்­டென்டை 
உரு­வாக்­குங்­கள். இந்த ‘சோபா மாடல்’ அர­சின் குறை­களை, நாம் செய்த சாத­னை­களை எல்­லாம் புள்­ளி­வி­வ­ரத்­தோடு 
எளி­மை­யா­கப் பதி­வி­டுங்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">இன்ஃப்­ளூ­யன்­சர்ஸ் மட்­டும்­தான் அதைச் செய்ய முடி­யும் என்று நினைக்­கா­மல் நாம் ஒவ்­வொ­ரு­வ­ரும் இன்ஃப்­ளூ­யன்­சர்­க­ளாக மாற வேண்­டும். இந்த அர­சின் பொய் கதை­யா­டல்,பொய் பிரச்­சா­ரங்­களை அம்­ப­லப்­ப­டுத்­து­வோம். சமூக வலைத்­த­ளங்­க­ளுக்கு நிய­மிக்­கப்­பட்ட துணை அமைப்­பா­ளர்­கள் அவர்­க­ளுக்கு ஒதுக்­கப்­பட்ட பணி­களை ஒருங்­கி­ணைந்து செய்ய வேண்­டி­யது மிக மிக முக்­கி­யம். இன்­னும் சில மாவட்­டங்­க­ளில் அந்­தப் பணி நடை­பெ­றா­மல் இருக்­கி­றது. நாளை முதல் மீண்­டும் அந்­தப் பணி­க­ளைத் தொடங்க இருக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Maragadam" fontStyle="Regular" size="12.5">கொள்கை உறு­தி­யுள்ள இளை­ஞர்­கள்</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">இன்று தேர்­தல் அர­சி­ய­லில்கழ­கம் வெற்­றி­வாய்ப்பை இழந்­தி­ருக்­க­லாம், ஆனால், கொள்கை அர­சி­ய­லில் நாம் ஒரு­போ­தும் தோற்­றதே இல்லை, தோற்­கவே மாட்­டோம். இது­தான் கழ­கத்­தின் பலம். தமிழ்­நாட்­டின் அர­சி­யல் எதிர்­கா­லம் அறி­வுத் தெளி­வுள்ள, கொள்கை உறு­தி­யுள்ள இளை­ஞர்­களை நம்பி இருக்­கி­றது. அவர்­களை நாம்­தான் தயார் செய்ய வேண்­டும். இந்­தத் தேர்­த­லின் முடிவு, இதோடு கழ­கம் முடிந்துபோய்­விட்­டது என்­றெல்­லாம் கிடை­யாது, நமக்கு இனி­மேல் புதுப்­பு­துக் களங்­கள் காத்­தி­ருக்­கின்­றன. அதற்கு நாம் தயா­ரா­வோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">நம்­மு­டைய தலை­வர் வழி­யில், நாம் நிச்­ச­யம் சிறப்­பா­கச் செயல்­ப­டு­வோம். தலை­வர் அவர்­கள் இங்கு பல்­வேறு ஆலோ­ச­னை­களை வழங்க இருக்­கி­றார்­கள். எனவே, வந்­தி­ருந்த உங்­கள் அத்­தனை பேருக்­கும் மீண்­டும் என் நன்­றி­யைக் கூறி, தலை­வ­ரின் சொல் கேட்டு, அவ­ரின் கரங்­களை நாம் அனை­வ­ரும் பலப்­ப­டுத்­து­வோம் எனக் கூறிக்­கொண்டு, இந்­தச் சிறப்­பான வாய்ப்­பைக் கொடுத்த தலை­வ­ருக்­கும் அனைத்து அமைப்­பா­ளர்­க­ளுக்­கும், துணை அமைப்­பா­ளர்­க­ளுக்­கும் நன்றி.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">இவ்­வாறு கழக இளை­ஞர் அணிச் செய­லா­ள­ரும் எதிர்க்­கட்­சித் தலை­வ­ரு­மான 
உத­ய­நிதி ஸ்டாலின் அவர்­கள் எழுச்­சி­மிக்க உரை­யாற்­றி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Maragadam" fontStyle="Regular" size="12.5">பங்­கேற்­ற­வர்­கள்</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">துணைப் பொதுச் செய­லா­ளர், நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் ஆ.ராசா, இளை­ஞர் அணி துணைச் செய­லா­ளர்­கள், எஸ்.ஜோயல், இன்பா ரகு, இளை­ய­ராஜா, அப்­துல் மாலிக், நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் கே.இ.பிர­காஷ், பிரபு கஜேந்­தி­ரன், சட்­ட­மன்ற உறுப்­பி­னர் சீனி­வா­சன், ஜி.பி.ராஜா, சட்­ட­மன்ற உறுப்­பி­ன­ரும், மாவட்ட அமைப்­பா­ள­ரு­மான ஜெயக்­கு­மார், மாவட்ட அமைப்­பா­ளர்­கள் ராம­ஜெ­யம், எவ­ரெஸ்ட் நரேஷ் குமார், மணி­ரா­ஜன், வழக்­க­றி­ஞர் பிர­காஷ், ஈஸ்­வ­ரப்­பன் அன்­ப­கம் செந்­தில் உள்­பட கழக இளை­ஞர் அணி நிர்­வா­கி­கள் பல­ரும்கலந்­து­கொண்­ட­னர்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>